Friday, July 28, 2006

பத்துக்குள்ள நம்பர் ஒண்ணு சொல்லு

புதிதாக ஏதாவது சோதிடம் பார்க்க ஆரம்பித்து விட்டானா என்று பார்க்க வேண்டாம். தேன்கூடு போட்டியில் பத்தாவது படைப்பாளியாக என்னையும் பனிரெண்டாவது படைப்பாக என் கதையையும் தேர்தெடுத்து உள்ளார்கள். பத்தொன்பது ஓட்டு எனக்கு விழுந்துள்ளது. (நல்லவேளை அங்க (-) குத்து இல்லை.:))

தேன்கூட்டில் என் கடவுசொல் மறந்துவிட்டதால் எனக்கு நான் ஓட்டு போடமுடியில்லை. பிரச்சினை ஆகக்கூடாது என்பதற்காக ஒரு ஓட்டையாவது எனக்கு போடச்சொல்லி ஒரு நண்பரிடம் சொல்லி இருந்தேன்.(ஒரு ஓட்டு கூட இல்லைன்னா நல்லாவாங்க இருக்கும். அதுக்குத்தான்). அவரும் ஏற்கனவே எனக்கு அந்த ஒரு ஓட்டை போட்டுவிட்டதாக கூறி வயிற்றில் பால் வார்த்தார்.

எல்லோரும் தேன்கூட்டிற்கு போட்டி நடத்துவதற்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்து விட்டதால் நானும் என் ஐடியாவை தருகிறேன். மக்கள் ஓட்டு போட்டு ஒரு பதினைந்து இருபது படைப்புகளை தேர்தெடுத்தவுடன் அந்த படைப்புகளை மட்டும் மூத்த படைப்பாளிகளை வைத்து மார்க் போட வைத்து தேர்தெடுக்கலாம்.ஆயினும் இந்த முறை பரிசு பெற்ற படைப்புகள் மிகவும் அருமை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

பரிசு பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களும் எனக்கு ஓட்டு போட்ட நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

7 comments:

VSK said...

வாழ்த்துகள்!

பொன்ஸ்~~Poorna said...

// தேன்கூடு போட்டியில் பத்தாவது படைப்பாளியாக என்னையும் //

உங்க போடாத ஒரு ஓட்டையும் சேர்த்துட்டீங்களா? அப்படி எண்ணினாத் தான் பத்தாவது வரும்.. ;)

//பரிசு பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களும் //
நன்றி..

// எனக்கு ஓட்டு போட்ட நண்பர்களுக்கு நன்றிகளையும் //
இதுக்கு என்ன சொல்லணும், வெல்கம்?! :)

Anonymous said...

http://vittudhusigappu.blogspot.com/2006/07/blog-post_28.html

சந்திப்பு said...

முத்து இதுஎன்ன தங்களுக்கு வெற்றி வருடமா? தொடருங்கள் உங்கள் வெற்றிகளை...

Muthu said...

சந்திப்பு,

பத்தாவது (அதுவும் தப்பாம் பதினொன்றாவது இடம்) என்கிறென்.அதுவும் வெற்றியா?

:))

நன்றி.

யாத்ரீகன் said...

வாழ்த்துக்கள் முத்து..
போட்டியின் படைப்புகளில் இருக்கும் எழுத்துப்பிழைகளுக்கு -வ் % இறுதியில் கொடுக்க வேண்டும்.... ஏகப்பட்ட படைப்புகளில் தமிழ் ததிங்கிணத்தோம் ஆடுகின்றது :-(
இது தேன்கூட்டிற்கான எனது வேண்டுகோள்...

மணியன் said...

வாழ்த்துக்கள்! அடுத்தமுறை முதல் மூன்றில் !