Saturday, July 08, 2006

வேணுகோபாலை வாழ்த்துகிறேன்-3

வேணுகோபால் மிக திறமைசாலி. அவர் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். நேற்று அவர் செய்த சாதனை அவருடைய எதிர்கால சாதனை களுக்கு கட்டியம் கூறுவது போல் அமைந்துள்ளது.என்னடா இது ஓவர் நைட்ல டகால்டி(நன்றி:காமெடியன் அப்பாவி தமிழன்) விடறானேன்னு பார்க்கிறீர்களா? நான் சொல்வது வேணுகோபால் ராவ்.கிரிக்கெட் வீரர்.நேற்று ஆஸ்திரேலிய-ஏ அணியுடனான ஆட்டத்தில் நன்றாக விளையாடி 55 ரன் எடுத்து இந்தியா வெல்ல வழிவகை செய்துள்ளார்.

இன்று பதவியேற்ற உடன் முதல் வேலையாக எய்ம்ஸ் பதிவாளரை வேலையை விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் வேணுகோபால். சம்பளம் விவகாரத்தில் அவர்தான் தவறு செய்ததாக புது கரடி கிளம்பி உள்ளது.ஆனால் மிகவும் சுவாரசியமான பல தகவல்கள் எதிர்ப்பார்க்கப் படுகின்றன.

ஆனால் என் சிறுமூளைக்கு எட்டிய சில விஷயங்களை நான் இங்கு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.இந்த பிரச்சினைக்கு முன்பே வேணுகோபாலுக்கு எதிராக பல கும்பல்கள் எய்ம்ஸில் இருந்திருக்கின்றன. அவர்கள் வேணுகோபாலை தூக்க சொல்லி அமைச்சருக்கு கொடுத்த பெட்டிசன் கிடைத்துள்ளது.volte face என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.அது இந்த விஷயத்தில் மீடியாக்களுக்கு பொருந்தலாம்.

ஒரு சுவாரசியமான தகவல்.அந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏதோ அனைத்து மருத்துவர்களும் போராட்டம் செய்ததாக இவர்கள் செய்த பில்ட் அப்பும் இப்போது இவர்களாலேயே நெறுக்கப் பட்டுள்ளது.சுமார் 400 டாக்டர்களும் மாணவர்களும் போராட்டம் தவறானது என்று எழுதிக் கொடுத்த மகஜர் கிடைத்துள்ளது.ஆனால் வேணு கோஷ்டியோ அல்லது வேறு கோஷ்டியோ இவர்களை மிரட்டி அடிபணிய வைத்ததாகவும் தகவல்.

மேலும் புனித பிம்பங்களுக்கு இடையே முதலிலேயே பிரச்சினை இருந்துள்ளது.இருந்தாலும் இந்த இடஒதுக்கீடு விஷயத்தில் வேணுகோபால் புகுந்து விளையாடிய உடன் அவர்கள் ஒரு அடிப்படையில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். அது என்ன காரணம் என்பதை கூறாமல் தவிர்க்கிறேன்.எப்படி சொல்கிறேன் என்பதை கூறுகிறேன்.

நேற்று என்.டி.டி.வியில் ஒரு டாக்டரின் பேட்டி ஒளிப்பரப்பபட்டது. அவர் டாக்டர் யூனியனில் ஏதோ பொறுப்பில் இருக்கிறார்.ஏற்கனவே அவர்களுக்கு வேணுகோபாலிடம் பிரச்சினை இருந்தாலும் எய்ம்சின் தன்னாட்சி அதிகாரத்தை காக்கவேண்டி தாங்கள் அவருக்கு ஆதரவு தருவதாக பேட்டியில் கூறினார் அந்த டாக்டர்.இந்த குறிப்பிட்ட டாக்டரை நான் நியூஸ் டுடே சானலின் இடஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்தில் பார்த்துள்ளேன். இடஒதுக்கீட்டுக்கு எதிராக இவர் பேசினார் என்பதை சொல்லவும் வேண்டுமா?பூனைகுட்டி லேசாக வெளியே எட்டிப்பார்த்த கதை இது.

ஆனால் தலைவர் வேணு இதற்கும் கோட்டா அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்று இன்னொரு டகால்டி அடித்துள்ளார். டேமேஜ் கண்ட்ரோல் நன்றாகவே செய்கிறார் வேணு. அவரை விடுதலை போராட்ட வீரர் ரேஞ்சுக்கு உயர்த்திய மீடியாக்களும் நம் சக நண்பர்களும் இப்போது என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்

ஒரு அருமையான திரில்லர் திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது.என்ன நடந்திருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது வேறு.என்ன நடக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவது வேறு.ஆனால் யதார்த்தம் என்பது வேறு .ஆனால் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

13 comments:

Sivabalan said...

முத்து,

இட ஒதுகீட்டுக்கு எதிரானவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளனர். நீதி துறையும் சேர்த்து சொல்கிறேன்.

நமது பிரதமருகும் இதில் உடன்பாடா என்று சரியாக தெரியவில்லை.

ஆனால் இட் ஒதுக்கீடு அருத்த வருடம் ஜீலை வரை தள்ளிப் போட்டு அதை ஒட்டு மொத்தமாக அளித்துவிடுவதற்காக இந்த பு.பி. செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றிபெற்று வருவதாகவே நான் கருதுகிறேன்.

மிக மிக வருத்தமாக உள்ளது. இந்த பு.பி (ஊடகம், நீதிதுறை உட்பட) அயோக்கித்தனத்தை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்?

33% பெண்கள் ஒதுக்கீடு போல் இந்த இட ஓதுக்கீட்டையும் செய்து விடுவார்கள் என பயமாகவும் உள்ளது.

Anonymous said...

இன்று பதவியேற்ற உடன் முதல் வேலையாக எய்ம்ஸ் பதிவாளரை வேலையை விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

No, read the news carefully.

Anonymous said...

33% பெண்கள் ஒதுக்கீடு போல் இந்த இட ஓதுக்கீட்டையும் செய்து விடுவார்கள் என பயமாகவும் உள்ளது.

OBC parties like RJD,Samajwadi Party,DMK,PMK etc stalled that
bill on the pretext of caste based
quota within 33%. If that can be
stalled why not this 27%.It should
be stalled.

தருமி said...

மனச திடப்படுத்துக்குங்க சிவ பாலன். உங்க பயம் நிச்சயமாக நடைமுறைப் படுத்தப்படத்தான் போகிறது. இங்கே யுத்தம் யாருக்கும், யாருக்கும் நடக்கிறதென்பதைப் பார்த்தாலே முடிவு தெரிந்ததுதானே. இன்னும் முழுசாக ஒரு ஆண்டு...சாப்பிட்டு செரித்து விடுவார்கள்...

தருமி said...

OBC parties like RJD,Samajwadi Party,DMK,PMK etc stalled that
bill on the pretext of caste based
quota within 33%.//
BUT BJP WENT AHEAD AND DID EVERYTHING DURING ITS RULE!

Anonymous said...

ஏற்கெனவே AIIMS இலிருந்து சிறந்த மருத்துவர்கள் வேலையை விட்டுவிட்டு
தனியார் மருத்துவமனைகளுக்கு போன கதையும் நடந்திருக்கு

Anonymous said...

//OBC parties like RJD,Samajwadi Party,DMK,PMK etc stalled that
bill on the pretext of caste based
quota within 33%. If that can be
stalled why not this 27%.It should
be stalled //

அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மக்களாட்சியில்
பாராளுமன்றம் போட்ட சட்டத்தை சிலர் sidetrack பண்ணுவது
ஜனநாயகத்துக்கு கேவலம். இது இந்திய மக்களை
அவமானப்படுத்தும் நிகழ்வு

Sivabalan said...

அனானி. நீங்கள் முகமூடி இல்லாமல் வந்திருந்தால் உங்களுடைய பதிவுகளை வைத்து தங்களுடைய கருத்துக்களை சற்று சரியாக புரிந்திருக்க முடியும்.

ஆனால்...

// If that can be
stalled why not this 27%.It should
be stalled. //

நீங்களும் அந்த அயோக்கியர்களுடன் சேர்ந்த கடைந்தெடுத்த அயோக்கியரே.. வேறு என்ன சொல்ல...

Anonymous said...

ஒரு வேணுகோபால் காரணமாக இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றை நிறைவேற்ற இயலவில்லையென்றால், இது மக்களாட்சி தத்துவத்திற்கே இழுக்கு.

Muthu said...

//நேற்று பு.பி. இன்று காமெடியன், நாளை என்னவோ...?
anyway, பட்டங்களுக்கு நன்றி திரு. 'டகால்டி' முத்து :-)//


:)))

வேல்பாண்டி said...

முத்து,

இப்படி ஒவ்வொரு துறையிலும் ஓரிரண்டு வேணு இருப்பார்கள். அப்படி இருக்கும் போது இட ஒதுக்கீட்டால் என்ன பயன்? இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது எப்படி சாத்தியம்?

-வேல்-

Anonymous said...

நீங்களும் அந்த அயோக்கியர்களுடன் சேர்ந்த கடைந்தெடுத்த அயோக்கியரே.. வேறு என்ன சொல்ல...

Those who stalled that are the ones who want 27% for OBCs.You
dont understand this.

Anonymous said...

First of all no act or order has been passed giving 27% reservation for OBCs in IITs etc.Even if such a bill or order is passed it is subject to scrutiny by the Supreme Court.Just because UPA
has majority it cannot do everything it wants.