Monday, July 10, 2006

வஜ்ராவின் திராவிட கூத்து

ஆரிய திராவிட வரலாற்றைப்பற்றிய உங்கள் மயிர் கூச்செறியும் பதிவை பார்த்தேன்.யார் யார் திராவிட அடிவருடிகள்,மூளையுள்ள/இல்லாத திராவிட தமிழர்கள் யார், பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்தவர்கள் யார் என்றும் புரிந்தது. நன்றி. பல அறிவாளிகளும் புரட்டுக்காரர்களும் இட்ட பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்தன. (வழக்கம்போல் அறிவாளிகள்: நீங்கள், புரட்டுகாரர்கள்:திராவிடர்கள்)

கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதப்பட்டது.அதில் எப்படி ஒரு சாராரை தாக்கி இருக்கும்?அது கூட தெரியாமல் பண்டைய இலக்கியத்தில் ஆரியர்களை யாரும் தாக்கவில்லை என்று ராமாயணத்தை வைத்து உளறுவது நகைப்பிற்குரியது.

மேலும் பண்டைய இலக்கியங்கள் பலவும் நமக்கு கிடைக்கவில்லை என்பது முக்கிய கருத்து. அவை அழிக்கப்பட்டன என்றும அன்றைய ஆதிக்க சக்திகள் தங்களுக்கு உகந்தவைகளை வைத்து மற்றையவைகளை அழித்ததாக வரலாறு கூறுகின்றது.உ.வே.சா மீதுக்கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?இருக்கும் நூல்கள் மட்டும் அல்ல.அழிக்கப்பட்ட நூல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.அதையும் கணக்கில் எடுத்துத்தான் இதைப்பற்றி தீர்ப்பு எழுதவேண்டும்.

அந்த காலத்திற்கும் இந்த காலததிற்கும் உள்ள முக்கிய வித்தியாசமே தாங்கள் உண்மையிலே பிராமணர்களை விட மட்டம் தான் என்று எண்ணி அன்று வாழ்ந்த மக்கள் இன்று இதெலலாம் புரட்டு என்று உணர்ந்து வாழ்கின்றனர்.இந்த வாக்கியத்தில் பல பதில்கள் உள்ளன. நேர்மையாக சிந்தித்தால் பதில் கிடைக்கும்.

சதயத்தின் கேள்விகளில் அர்ததம் உள்ளது.அசுரர் என்று புராணங்களில் வருணிக்கப்பட்டவர்கள் யார் என்பதற்கு நேர்மையான நேரடியான பதில் இல்லையே உங்களிடம்?

அறிவியலுக்கு நீங்கள் போட்ட புதிய பதிவு உள்பட அனைத்துக்கும் எதிராக பார்வைகளை கொண்ட எத்தனையோ சுட்டிகளை தரமுடியும்.மாங்கு மாங்கென்று எழுதியுள்ள சன்னாசி அவர்களின் பின்னூட்டத்தை உங்களால் நேர்மையாக எதிர்க்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே சொன்னதையே அடிவயிற்றை எக்கி மீண்டும் கத்துகிறீர்கள்.ஐந்து வருடம் பி.ஜே.பி ஆட்சியிலேயே இவ்வளவு கூத்து என்றால் இரண்டாயிரம் வருடமாக என்னவெல்லாம் நடந்திருக்கும்? கழுவிலேற்றப் பட்டவர்கள் வந்து சாட்சி சொல்வார்களா? பண்டைய இலக்கிய ஆதாரம் வேண்டுமாம்.நல்ல காமெடி.

புராணங்கள் தரும் கலாச்சாரமும் இங்கு வாழும் பெரும்பான்மை மக்களின் கலாச்சாரமும் வேறு வேறு என்பது காமன் சென்ஸ் உள்ளவர்களுக்கே புரியும். இப்படித்தான் காசி யாத்திரை போகிற இந்துக்கள் யார் என்று ஒரு பதிவில் நான் கேட்டேன்.பிராமணர்கள் தவிர நகரத்தார் என்று ஒரு சாதி பெயர் மட்டுமே மக்களால் சொல்லமுடிந்தது.இதற்கு என்ன பதில்?


முத்திரை குத்துகிறார்கள் என்று புலம்பும் ஆட்கள் திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆட்களை எந்த உரிமையில் பிரிவினை பேசுகிறார்கள் என்று முத்திரை குத்துகிறார்கள்? அதே உரிமையில்தான் நாங்கள் சாதி இல்லை என்று கூறிக்கொண்டே சாதி பேசுபவர்களையும்(நாங்கள் எல்லர்ம ஒன்று என்று கூறினாலே இதுதான் அர்த்தம்) , இடஒதுக்கீடு என்றாலே எரிந்துவிழுபவர்களையும் சம்ஸ்கிருதத்திற்கு காவடி தூக்குபவர்களையும், கடவுள் மறுப்பும் ஒரு மரபு என்பதையும் உணராமல் நம்பிக்கை புண்படுகிறது என்றெல்லாம் புலம்புபவர்களையும் எதிர்க்கிறோம்.(கருத்துரீதயாகத்தான்)

ஆதிக்க சக்திகள் எப்போதும் எங்களுக்குள் வித்தியாசம் இல்லை என்றே முழங்கும்.நீங்கள் பேசுவது ஒரு சிறிய சமுதாயத்தின் சார்பாக.படித்து வாழ்க்கையில் முன்னேறிய ஒரு சிறிய சமூகம்தான் நீங்கள் பார்த்த உங்கள் உலகம். வாழ்முறையை பாருங்கள்.யதார்த்தத்தை பாருங்கள். வந்தேறி இனம் என்று ஒன்று இல்லை என்றால் முதலில் சந்தோஷப்படுவதும் பரம்பரை பரம்பரையாக பாதிக்கப்பட்ட திராவிடர்களாகத் தான் இருக்க முடியும்.திராவிடம் என்பது நீங்கள் கூறியது போல் விந்திய மலைக்கு இந்தப்புறம் இருப்பவர்களாகவே இருக்கட்டுமே.என்ன குடி முழுகிவிட்டது?


இன்றும் இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூவுவது யார் திராவிடர்களா?

தாய்மொழியை விட்டு வேறு மொழிக்கு காவடி தூக்குவது யார் திராவிடர்களா?

மற்ற மதத்தினர் மீது புழுதி வாறி தூற்றுவது திராவிடர்களா?

பத்து சதவீத பேருடைய கலாச்சாரத்தை,மொழியை தொண்ணூறு சதவீதம் பேர் மேல் சுமத்த இவர்கள் முயல்வார்களாம்.நாம் நமக்குள் வித்தியாசம் இல்லை என்று கூறிக்கொண்டு பல்லை இளிக்கணுமாம். என்னய்யா கொடுமை இது?

போங்க சார்....

எது எப்படியோ இத்தனை நாட்களாக தம்மை உயர்த்தி பேசியும் தாங்கள் தான் அறிவுக்கே மொத்த குத்தகைதாரர்கள் என்றெல்லாம் உயர்த்தி சொல்லிக் கொண்டவர்கள் தங்களை மற்றவர்களுடன் வைத்து அடையாளப் படுத்திக்கொள்ள முன்வந்ததே வரவேற்கத்தக்கது.இன்னும் கொஞ்சம் கிழிறங்கி வரவேண்டி உள்ளது.வரும்.வந்துதான் ஆகவேண்டும்.

ஆயிரம் தான் இருந்தாலும் தமிழ்நாட்டின் கடந்த முப்பது வருட தலையெழுத்து திராவிடர்களால் எழுதப்பட்டது. தமிழ்நாடு நன்றாகவே முன்னேறி இருப்பதாகத் தான் எனக்கு படுகிறது.திராவிட கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு பதிவு எழுதும் எண்ணம் உள்ளது.போகிறவர் வருகிறவர் எல்லாம் தாக்கும் அளவிற்கு திராவிடம் இன்னும் நீர்க்கவில்லை. பிராமணர் என்பதற்காக மட்டுமே ஒருவரை வெறுத்தால் தான் அது பிராமண வெறுப்பு என்பதை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.

பிராமண எதிர்ப்பையும் பிராமணீய எதிர்ப்பையும் வேறுப்படுத்தி பார்க்க தெரியாத ஆட்களுக்கு சில பாயிண்ட்டுகள்.

பிராமணீயத்தின் சில கூறுகள்

1.பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களின் முக்கிய கருத்தாக்கமான வேதம், சம்ஸ்கிருத மரபு ஆகியவற்றை தூக்கிபிடிப்பது....

2.மற்ற மதத்துக்காரர்களிடம் பாசம் காட்டி இருப்பது போல் நடித்துவிட்டு வாய்ப்பு கிடைக்கும்போது போட்டு பார்ப்பது....(இந்த கூறுகள் நேர் பேச்சில்தான் வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது)

3.தமிழ், மொழிப்பற்று என்றெல்லாம் பேசுபவர்களை கிண்டல் செய்துவிட்டு இந்திக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் காவடி தூக்குவது...

4.கம்யூனிசத்தை கண்மூடித்தனமாக எதிர்ப்பது(இதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்டவர்கள், அடிமைப்படுத்தப்பட்டவர் என்று சகல தரப்பினர் நியாயத்தையும் குழிதோண்டி புதைப்பது)

5.இடஒதுக்கீடு என்றால் எரிந்துவிழுவது....

இதையெல்லாம் செய்யாத பிராமணர்களும் உண்டு. பிராமணர்களில் கம்யூனிஸ்டுகள் உண்டு,பிராமணர்களில் சிந்தனையாளர்கள் உண்டு. இன்னொரு புறம் சோ போன்ற ஆசாமிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் ஆட்களும் உண்டு.

இந்த கொடுமைகளை எல்லாம் தட்டிகேட்பவன் தான் திராவிடன்.அவனுக்கு பெயர் முக்கியமல்ல.உணர்வு முக்கியம்.நியாயம் முக்கியம்.

70 comments:

மு.மயூரன் said...

உணர்வு பூர்வமான பதிவு முத்து.
வஜ்ரா போன்றவர்கள், சுயனலாஅதிகளின் கருத்துக்களால் மிக அதிகமாக பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். தனிப்பட அவர்களை சுயநலவாதிகள் என்று முடிவுசெய்யவேண்டியதில்லை.

திராவிடம் பேசுவது என்பது அவர்களைப்போல விவாதம் செய்வதற்காக அல்ல, எம்முடைய உரிமைகளுக்காக, இருப்புக்காக என்ற சாதாரண மனிதரின் அடிப்படை போர்க்குணம் அவர்களுக்கு புரியாது.

பெரியார் ஆரிய எதிர்ப்பை தூக்கிப்பிடித்தால், அதன் புரட்சிகர அம்சம் என்ன, அதன் ரத்தமும் சதையுமான புரட்சிகர பாத்திரம் என்ன என்பதெல்லாம் அவர்கள் மினக்கட்டு புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

எதை எவர் நிரூபிக்க நின்றாலும், உலகம் ஒன்றைமட்டும் திரும்ப திரும்ப நிரூபிக்கிறது. அதிகாரங்கள் மீது வன்முறையை பிரயோகிக்காமல், ஒடுக்கப்படுவோருக்கு மீட்சி இல்லை. உயிர்வாழும் உரிமையும் இல்லை.

வஜ்ரா நிற்கும் கருத்தியல் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாது. புரிந்ததுபோல் காட்டிக்கொள்ளாது.

கால்கரி சிவா said...

//ஆயிரம் தான் இருந்தாலும் தமிழ்நாட்டின் கடந்த முப்பது வருட தலையெழுத்து திராவிடர்களால் எழுதப்பட்டது. தமிழ்நாடு நன்றாகவே முன்னேறி இருப்பதாகத் தான் எனக்கு படுகிறது.//

தவறு

ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத் இவைகளை விட தமிழ்நாடு பின் தங்கிதான் உள்ளது.

ஆனால் ஆந்திரா, கர்நாடக மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளின் முன்னேற்றத்தில் உழைத்தவர்களில் தமிழர்கள் கணிசமானவர் என்பதுதான் உண்மை.

வேல்பாண்டி said...

//ஆனால் ஆந்திரா, கர்நாடக மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளின் முன்னேற்றத்தில் உழைத்தவர்களில் தமிழர்கள் கணிசமானவர் என்பதுதான் உண்மை.
//

மஹாராஷ்ட்ரா முன்னேறியதற்க்கு பல காரணங்கள் உண்டு. ஆந்திரா, கர்நாடகா முன்னேறியதாக எதை வைத்து சொல்லுகிறீர்கள். நகரங்களின் வாழ்கைத்தரத்தை வைத்தா? அந்த மாநிலங்களின் கிராம மக்களின் அவல நிலை உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டு கிராம மக்களை விட மிகவும் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். மேலும் நக்சலைட்களின் இம்சை வேறு.

தயவு செய்து பின்னூட்டமிடும்போது தவறான தகவல்களை தாறாதீர்கள்.

-வேல்-

Parama Pitha said...

இணையத்து தம்பி,

// மேலும் பண்டைய இலக்கியங்கள் பலவும் நமக்கு கிடைக்கவில்லை என்பது முக்கிய கருத்து. அவை அழிக்கப்பட்டன என்றும அன்றைய ஆதிக்க சக்திகள் தங்களுக்கு உகந்தவைகளை வைத்து மற்றையவைகளை அழித்ததாக வரலாறு கூறுகின்றது. //


இதை நீங்களே கூறுகின்றீர்களா, இல்லை 'வரலாறு கூறுவதாக' கூந்தல் பின்னிவிட்டீர்களா?
ஆதாரம் (பணிக்கர் போன்ற ஒரு சார்புடையவர்கள் அன்றி) தரமுடியமா?

இணையத்து அம்பி

Sivabalan said...

முத்து,

நல்லதொரு பதிவு.

என்னத்த சொல்ல...

திராவிடன் யார்? இப்படி ஒருத்தர் கேட்கறாரு...

ஏன் ஆரியார்கள் என சொல்லப்படுகிறவர்கள், நம்ம எல்லாம் மாடு மேக்கவைத்தாங்களே, அதைப் பற்றி ஏதாவது யாரவது கேட்கிறார்களா?

ஒரு 20 வருசம் கொஞ்சமாக முன்னேறி வந்திட்டு இருக்கோம்..

உடனே இட ஒதுக்கீடு வேணுமா? அதா இதா? ஓரே கேள்வியாக மயமாக உள்ளது.

அய்யா திராவிடம் இருக்கா இல்லையா? அதைப் பற்றி இப்ப பேசி, மக்களை திசை திருப்பி, மக்களை அழிக்கும் முயற்சி இது. மீன்டும் மாடு மேய்க்க வைப்பதில் அப்படி என்னயா உங்களுக்கு ஆனந்த்ம்.

நீங்க இந்து மதத்தை சொல்லி எம்மக்களை முட்டாளக்கி அழித்து கொண்டு இருக்கிரீங்க.. அதைப் பற்றி யாராவது கேட்கிறார்களா.

நானும் கொஞ்சம் நடுநிலைமையா சிந்திக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால் நீங்க எல்லாம் விடமாட்டீங்க போல..

நானும் புதியதா அவதாரம் எடுக்கலாம் என்று தோன்றுகிறது...

முத்து(தமிழினி) said...

நண்பர்களே,

கட்டுரையில் சில கருத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


இணைய அம்பி,

அடிக்கடி வந்து காமெடியன் இல்லாத குறையை தீர்த்து வைக்கவும்.

முத்து(தமிழினி) said...

சிவபாலன்,

//நானும் புதியதா அவதாரம் எடுக்கலாம் என்று தோன்றுகிறது... //

வேண்டாம்.நேர் வழி தனிவழி நல்ல வழி. அடிவருடிகள் வழி நமக்கு வேண்டாம்.

Anonymous said...

//கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதப்பட்டது.அதில் எப்படி ஒரு சாராரை தாக்கி இருக்கும்?அது கூட தெரியாமல் பண்டைய இலக்கியத்தில் ஆரியர்களை யாரும் தாக்கவில்லை என்று ராமாயணத்தை வைத்து உளறுவது நகைப்பிற்குரியது.
//

பண்டைத் தமிழ் இலக்கியம் என்பது உங்களைப் பொறுத்தவரை கம்பராமாயணம் மட்டும் தானா? மற்ற இலக்கியங்கள் எல்லாம் பண்டைத் தமிழ் இலக்கியம் இல்லையா? குரங்குகள் என்று வருவது இராமாயணத்தில் மட்டும் தான். அதனை வைத்து கம்பராமாயணத்தில் 'ஹனுமானை திராவிடன் என்று கம்பராமாயணம் சொல்கிறதா' என்று வஜ்ரா கேட்டார். பின்னர் ஒருவர் பழந்தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்று சொன்னார். இரண்டினையும் ஒரே கருத்தாக எடுத்து ஜல்லியடிக்கிறீர்களே. உங்களுக்கே வெட்கமா இல்லை?

//மேலும் பண்டைய இலக்கியங்கள் பலவும் நமக்கு கிடைக்கவில்லை என்பது முக்கிய கருத்து. அவை அழிக்கப்பட்டன என்றும அன்றைய ஆதிக்க சக்திகள் தங்களுக்கு உகந்தவைகளை வைத்து மற்றையவைகளை அழித்ததாக வரலாறு கூறுகின்றது.உ.வே.சா மீதுக்கூட குற்றச்சாட்டு உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?இருக்கும் நூல்கள் மட்டும் அல்ல.அழிக்கப்பட்ட நூல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள்.அதையும் கணக்கில் எடுத்துத்தான் இதைப்பற்றி தீர்ப்பு எழுதவேண்டும்.
//

தெரியுமே உடனே இப்படி மாங்கா புளிச்சதா வாய் புளிச்சதான்னு எழுதுவீங்கன்னு. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம். உய்வில்லை செய்ந்நன்றி கொன்றமகற்கு - ஐயன் வள்ளுவன் சொன்னதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அடுத்த முறை உ.வே.சா. போன்றவர்கள் மீது அவதூறு சொல்லும் போது.

Anonymous said...

//அசுரர் என்று புராணங்களில் வருணிக்கப்பட்டவர்கள் யார் என்பதற்கு நேர்மையான நேரடியான பதில் இல்லையே உங்களிடம்?
//

நேர்மையான நேரடியான பதில் இதோ: தேவர் என்று புராணங்களில் வருணிக்கப்பட்டவர்கள் தேவர்களே. அசுரர்கள் என்று புராணங்களில் வருணிக்கப்பட்டவர்கள் தேவர்களின் மாற்றாந்தாய் பிள்ளைகளான அசுரர்களே. தேவர்கள், அசுரர்கள் இருவருக்கும் புராணங்களின் படி காசிப முனிவரே தந்தை. தேவர்கள் தெய்வ சக்திகள். அசுரர்கள் அழிவு சக்திகள். இதுவே நேர்மையான பதில்.

நீங்களே மேலைநாட்டவர்கள் சொன்னார்கள் என்பதால் தேவர்கள் என்பவர்கள் வந்தேறிகளான ஆரியர்கள் என்றும் அசுரர்கள், குரங்குகள் என்பவர்கள் பூர்வகுடிகளான திராவிடர்கள் என்றும் கற்பனை செய்து கொண்டு அதனையே மற்றவர்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும்; அப்போது தான் அது நேர்மையான நேரடியான பதில் என்றால் அது உங்கள் அறியாமை என்று தான் சொல்லவேண்டும்.

முத்து(தமிழினி) said...

அனானி,

கருத்துக்கு நன்றி.

வாயிலும் வயிற்றிலும் அடித்து்க்கொண்டு கத்துவதற்கு முன் படிக்கவும்.(முதலில் பெயர் போட்டு எழுதவும்)

முத்து(தமிழினி) said...

அனானி,

பாரதியாரை கடவுளாக்கீனீங்க..இப்ப உ.வே.சா வையா?

மனிதனை மனிதனா பாருங்கய்யா..ஒண்ணா தெய்வமாக பார்ப்பது இல்லை மாடாக பார்ப்பது...இதுதான் உங்கள் ஸ்டைலா?

Anonymous said...

பெயர் போட்டு எழுத வேண்டும் என்றால் எதற்கு அனானிமஸ் ஆப்சனை இன்னும் வைத்திருக்கிறீர்கள்? எடுத்துவிட வேண்டியது தானே? சாட்டையடியாய் கேள்விகள் வந்தவுடன் பெயர் போட்டு எழுதுங்கள் என்ற அறிவுரையா? உங்களைப் பாராட்டி அனானிமஸ் வந்தால் எடுத்துப் போட்டுக் கொள்ளத் தான் அனானிமஸ் ஆப்சனை விட்டு வைத்திருக்கிறீர்களா?

முத்து(தமிழினி) said...

அனானி,

குழந்தை மாதிரி பேசாதீங்க.வரலாறை வரலாற்று பூர்வமாக படியுங்கள். நடுநடுவே மூளையை உபயோகப்படுத்த மறக்காதீங்க.


ஒரு யோசனை

அனானி ஆப்சனில் வந்து உங்களை போல் குழந்தைதனமாகவோ அல்லது அவதூறாகவோ பேசியவர்கள் தான் அதிகம்.அந்த தமாசுக்காகத்தான் அதை வைத்துள்ளென்.

பாராட்டி பேசுபவன் பெயர் போட்டுத்தான் எழுதுவான்..(தங்கள் முதுகை தாங்களே தட்டுவதற்கு முன் யோசித்து செய்யவும்.கை சுளுக்கிக்கொள்ள போகிறது):)))

Anonymous said...

யப்பா அறிவாளி. புராணத்தை பொய்க்கதைன்னு ஒரு தடவை சொல்லுவீங்க. அதனை நம்புறவன் முட்டாள்; காட்டுமிராண்டின்னு சொல்லுவீங்க. உங்களுக்கு வசதியா இருக்குன்னா அது வரலாறு ஆயிடுமா? புராணம் ஒன்று பொய்க்கதையாக இருக்க வேண்டும்; இல்லை வரலாறாக இருக்க வேண்டும். உங்கள் சௌகரியப்படி இரண்டுமாக மாறி மாறி ஆகாது. புராணப்படி தேவர்கள் தேவர்கள் தான்; அசுரர்கள் அசுரர்கள் தான்; இருவருமே ஒரே தந்தையின் பிள்ளைகள். உங்கள் திரிப்பின் படி தேவர்கள் ஆரியர்களாகவும் அசுரர்கள் திராவிடர்களாகவும் அப்போது புராணங்கள் வரலாறாகவும் தெரியலாம்; ஆனால் நம்புபவர்களுக்கு புராணங்கள் சொல்லும் தேவர்கள் தெய்வ சக்திகள்; ஆரியர்கள் இல்லை. அசுரர்கள் தீய சக்திகள். திராவிடர்கள் இல்லை. அப்படி சொல்வதெல்லாம் உங்கள் கட்டுக் கதைகள்.

முத்து(தமிழினி) said...

//உ.வே.சா. தமிழுக்கு செய்த நன்றியை மறந்து இப்படி அவதூறு பேசாதீர்கள் என்று சொன்னால் அதற்கு நேரடியான நேர்மையான பதில் உங்களிடம் இல்லை. உடனே தெய்வம், மாடு என்று திசைதிருப்புகிறீர்கள்.//

அவர்களை எல்லாம் விமர்சிக்கவே கூடாது என்று சொன்னது நானா?

அறியாமையை தொடர்ந்து வெளிக்காட்டுவதற்கு நன்றி.

உ.வே.சா பற்றிய புத்தகங்களை படிக்கவும்.

தம்பி,

இத்தனை பலவீனங்களுடன் எனக்கு உ.வே.சாவிற்கும் பாரதிக்கும் உரிய மரியாதையையும் தர தெரியும்.நன்றி.

முத்து(தமிழினி) said...

வாங்க அறிவாளி,

எழுதி வைத்த கதைதான்.எழுதியவன் யார்? ஏன் எழுதினான்?

என்று வரலாற்று பூர்வமாக சிந்திக்கவும்.

அது எப்படி?தீர்ப்பு எழுதிவிட்டு பஞ்சாயத்து பண்ணுவது தானே நமது ஸ்டைல்.

தி.ராஸ்கோலு said...

வக்கிர பஞ்சர் அடிக்கிற கூத்துக்கு அளவில்லாமலே போஒய் விட்டது. இருந்தாலும் வலைப்பூக்களில் காமெடி வேண்டும் இல்லையா? மேலே ஒருத்தர் கனடாவில ஒக்காந்துகிட்டு ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்ட்ரா எல்லாம் தமிழ்நாட்டைவிட முன்னேறுனதுக்குக் காரணம் திராவிட ஆட்சி தான்னு அரிய கண்டுபிடிப்பு செய்திருக்கிறார்.

இவர்கள் நல்லா வயிறு எரியட்டும். சமூக நீதி அடையும் வரை திராவிடர்கள் ஓயப்போவதில்லை. இந்த நாட்டில் பெரும்பான்மை திராவிடர்கள் தான், அதை மறக்க வேண்டாம். குய்யோ முறையோ என்று கூப்பாடு வேண்டாம்.

நீங்கள் மதச்சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதம் உங்களை நோக்கித் திரும்ப ரொம்ப நேரம் ஆகாது.

Sivabalan said...

முத்து,

//வேண்டாம்.நேர் வழி தனிவழி நல்ல வழி. அடிவருடிகள் வழி நமக்கு வேண்டாம். //

நீங்க சொல்லுவது சரிதான்..

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்...

இது அடிவருடிகளின் வழியே....

நமக்கு வேண்டாம்.

முத்துகுமரன் said...

**
ஒரு சிறிய தகவல்.

அன்று வ.உ.சா செய்ததைத்தான் இன்று வேணுகோபால் செய்கிறார்.
**

வ.உ.சா வின் தமிழ்த் தொண்டை எவரும் மறுதலித்து பேசமுடியாது.
அதற்காக அவர் என்றும் நன்றீயுடன் நினைவு கூறப்பட வேண்டியவர். அதற்காக அவர் குருகுலத்தில் நடநத்திய கூத்துகளை பற்றி வாய் திறக்ககூடாது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை.

சாமி கண்ணைக் குத்திடும்னு பூச்சாண்டி காட்டிய காலம் மலையேறிப்போச்சு....

Anonymous said...

ஒரு சிறிய தகவல்.

அன்று வ.உ.சா செய்ததைத்தான் இன்று வேணுகோபால் செய்கிறார்.
**

வ.உ.சா வின் தமிழ்த் தொண்டை எவரும் மறுதலித்து பேசமுடியாது.
அதற்காக அவர் என்றும் நன்றீயுடன் நினைவு கூறப்பட வேண்டியவர். அதற்காக அவர் குருகுலத்தில் நடநத்திய கூத்துகளை பற்றி வாய் திறக்ககூடாது என்பவர்களுக்கு ஒரு வார்த்தை.

சாமி கண்ணைக் குத்திடும்னு பூச்சாண்டி காட்டிய காலம் மலையேறிப்போச்சு


Somebody does not know difference between U.Ve.Swaminatha Iyer and
Va.V.Subramania Iyer.Nor Muthu seems to know the difference.
Ignorance is bliss is the motto
of Dravida Tamils.

Vaa.Manikandan said...

//மனிதனை மனிதனா பாருங்கய்யா..ஒண்ணா தெய்வமாக பார்ப்பது இல்லை மாடாக பார்ப்பது...இதுதான் உங்கள் ஸ்டைலா?//

:)

No commentS!!!!

முத்து(தமிழினி) said...

//Nor Muthu seems to know the difference.//

இது என்ன உள்குத்தா? பின்னூட்டத்தையும் சோதித்தா போட முடியும்?

பின்னூட்டம் இட்டவங்க பார்த்து திருத்திக்கட்டும்.நான் வெளியிடுகிறேன்.

முத்துகுமரன் said...

அனானி.

சுட்டிகாட்டலுக்கு நன்றி. தெளிவு படுத்தியமைக்கும் நன்றி. என் தகவல் பிழைக்கு வருந்துகிறேன்..

Anonymous said...

//இன்றும் இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூவுவது யார் திராவிடர்களா?

தாய்மொழியை விட்டு வேறு மொழிக்கு காவடி தூக்குவது யார் திராவிடர்களா?

மற்ற மதத்தினர் மீது புழுதி வாறி தூற்றுவது திராவிடர்களா//

This is the punch here!

முத்து(தமிழினி) said...

//This is the punch here! //

ஹிஹி உள்குத்து புரியுது அனானி..
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ...நன்றி

போதுமா?

முத்து(தமிழினி) said...

//திராவிடம் பேசுவது என்பது அவர்களைப்போல விவாதம் செய்வதற்காக அல்ல, எம்முடைய உரிமைகளுக்காக, இருப்புக்காக என்ற சாதாரண மனிதரின் அடிப்படை போர்க்குணம் அவர்களுக்கு புரியாது.//

//அதன் புரட்சிகர அம்சம் என்ன, அதன் ரத்தமும் சதையுமான புரட்சிகர பாத்திரம் என்ன என்பதெல்லாம் அவர்கள் மினக்கட்டு புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது//

//எதை எவர் நிரூபிக்க நின்றாலும், உலகம் ஒன்றைமட்டும் திரும்ப திரும்ப நிரூபிக்கிறது. அதிகாரங்கள் மீது வன்முறையை பிரயோகிக்காமல், ஒடுக்கப்படுவோருக்கு மீட்சி இல்லை. உயிர்வாழும் உரிமையும் இல்லை.//


நன்றி மயூரன்,

நான் எழுதியதை நச்சென்று சுருக்கிவிட்டீர்கள்.

முத்து(தமிழினி) said...

//தவறு

ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத் இவைகளை விட தமிழ்நாடு பின் தங்கிதான் உள்ளது. //

கால்கரி,

தனிப்பதிவு வருகிறது.சிறிது காலம் பொறுத்திருக்கவும்.

லக்கிலுக் said...

முத்து!

ஒரு சில திராவிட தமிழர்களே லேட்டஸ்டாக புனிதபிம்பங்களாக மாறிப் போகும் இந்த காலக்கட்டத்தில் ஆரியர்கள் மீது நாம் பாய்ந்து எந்த பிரயோசனமும் இருக்கப் போவதில்லை.... நாம் முதலில் சரிசெய்ய வேண்டியது புதிதாய் பிறந்த புனிதப் பிம்பங்களைத் தான்.....

முதலில் இவர்கள் மறந்துப்போன திராவிடத்தை இவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்....

முத்து(தமிழினி) said...

லக்கி,

நான் யார் மீதும் பாயவில்லை..ஒரு கட்டுரைக்கு என் எதிர்வினை இது.

//நாம் முதலில் சரிசெய்ய வேண்டியது புதிதாய் பிறந்த புனிதப் பிம்பங்களைத் தான்//

யாரை சொல்கிறீர்கள்? தெளிவாக சொல்லமுடியுமா?

Anonymous said...

பிராமண எதிர்ப்பையும் பிராமணீய எதிர்ப்பையும் வேறுப்படுத்தி பார்க்க தெரியாத ஆட்களுக்கு சில பாயிண்ட்டுகள்.


Why link that with a caste .Why cant you call it in a name that is
common to all (e.g.capitalism).You can call it castesism or by some other name.If you agree that there are progressives and conservatives
in every caste/religion/group how can you identify progressive by the name dravida.

முத்து(தமிழினி) said...

//If you agree that there are progressives and conservatives
in every caste/religion/group how can you identify progressive by the name dravida.//


சரியான கேள்வியை கேட்டதற்கு நன்றி.

//யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு போலி தேசியம் பேசுவது நியாயமா?//

வலைபதிவுலகிற்கு வந்த புதிதில் இங்கு இருக்கும் உள் அரசியல் புரியாமல் நான் அப்பாவியாக கேட்ட கேள்வி இது. இன்னும் இளமையாக பதிலளிக்கப்படாமல் இருக்கிறது.

யார் பதிலளிப்பது?

முத்து(தமிழினி) said...

//in every caste/religion/group how can you identify progressive by the name dravida.
//

மற்ற சாதிகளிலும் இந்த பிராமணீய/புனித பிம்ப கருத்துக்களை பேசும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.நன்றி.

லக்கிலுக் said...

////யாரை சொல்கிறீர்கள்? தெளிவாக சொல்லமுடியுமா?////

சில பேர் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்து விட்டதால் புனிதப் பிம்பங்கள் ஆகி விட்டார்கள்....

இவர்கள் கீழே இன்னமும் மாடு மேய்த்துக்கொண்டு, வரட்டி தட்டிக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் இருப்பதை மறந்து விட்டார்கள்....

இவர்கள் Settle ஆகி விட்டதால் எல்லாமே சமமாகி விட்டது.... சரி ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்....

சமூகத்தை பீடித்த நோய் இது.... முதலில் இந்த Categoryகளில் இருப்பவர்களுக்கு திராவிடத்தை புரிய வைக்க வேண்டும்.... பெரியார் பற்றிய புரிதல் தர வேண்டும்....

எதிர்தரப்பு நாம் என்ன சொன்னாலும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை... அது அவர்கள் குணம்..... ஆனால் போன தலைமுறை வரை ஒடுக்கப்பட்டு இருந்தவர்களே புதிதாய் புனிதப்பிம்ப அவதாரம் எடுத்து வேதாந்தம் பேசுவது அருவறுப்பாக இருக்கிறது.....

G.Ragavan said...

முத்து, பதிவு பற்றிய பொதுவான பின்னூட்டத்தைத் தனிநபர் மையம் என்பதால் தவிர்க்கிறேன்.

ஆனால் உ.வே.சுவாமிநாதய்யரைப் பற்றிய உங்கள் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழுக்காக அவர் இழந்தது எக்கச்சக்கம். எத்தனையோ கோயில்களிலும் மடங்களிலும் சண்டை போட்டு திட்டும் உதையும் வாங்கித் தமிழ் நூல்களைக் காத்தவர் அவர். அவரைப் பற்றித் தமிழறிந்தவர் அனைவரும் அறிவர். தமிழறிந்தவர் என்று நான் சொல்வது பேச்சுத்தமிழை அல்ல. பின்னூட்டமிடவும் கருத்துச் சொல்லவும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

முத்து(தமிழினி) said...

அன்பின் ராகவன்,

நான் கூறியது அவர் மேல் கூட குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்பதுதான்.

யாரையும் கடவுளாக்கவம் வேண்டாம்.அவருக்கு உரிய மரியாதையும் உண்டு.ஆனால் விமர்சனம் இருந்தால் அதையும் செய்துதானே ஆகவேண்டும்.தகவல் தேடி தருகிறேன்.

நானும் உங்களைப்போல் அதிர்ச்சி அடைந்தவன்தான்.ஏகப்பட்ட சைவ மடங்களின் எதிர்ப்பை சம்பாதித்து சமண புத்த காப்பியங்களை காத்தவர் என்று நிறைய வலைப்பதிவுகளிலேயெ படித்துள்ளோம்.குற்றச்சாட்டு இருக்கிறதே என்று கூறினால் அது கொடிய பாவம் அல்ல.அதை திரிப்பவர்கள் அவரை கடவுளாக்க முயற்சி செய்வதாக எனக்கு தோன்றுகிறது.காந்தியையே விமர்சிக்கிறார்கள்.உடனெ உனக்கு என்ன யொக்கியதை என்று யாராவது கேட்பார்கள்.அவர்களுக்கு என் நன்றியை இப்போதே தெரிவிக்கிறேன்.

பாரதியை பற்றிய மீள்விமர்சனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரியாரைப்பற்றிய மீள் விமர்சனங்களும் இப்போது நிறைய உள்ளது.


//அவரைப் பற்றித் தமிழறிந்தவர் அனைவரும் அறிவர். தமிழறிந்தவர் என்று நான் சொல்வது பேச்சுத்தமிழை அல்ல.//

:))


//பின்னூட்டமிடவும் கருத்துச் சொல்லவும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.//

ஹிஹி இது என்ன புதுசா(?) ஒரு வாக்கியம் வந்துருக்கு.

மற்றவர்களுக்கு:

இந்த உ.வே.சா சமாச்சாரம் பதிவின் நோக்கத்தை திசை திருப்புகிறது. பதிவின் அடிப்படை திராவிட கூத்தைப்பற்றியது.திராவிடர்களுக்கு தேவையான பொலிடிக்கல் ஸ்பேசை பற்றியது.நன்றி.

Anonymous said...

There is no need to deify U.Ve.Sa or anyone.Nor is there a need to
demonise any caste or group.For Dravida Tamils accepting first is
easy but the second is difficult.
Muthu has not understood the points raised by Shankar or the
response by Sannasi.

Anonymous said...

இந்த கொடுமைகளை எல்லாம் தட்டிகேட்பவன் தான் திராவிடன்.அவனுக்கு பெயர் முக்கியமல்ல.உணர்வு முக்கியம்.நியாயம் முக்கியம்.

If one goes by that defintion M.Karunanidhi is not a Dravida.
DMK was part and parcel of the
NDA government which refused to
take action against Modi and
even justified such inaction.
DMK did not protest when Joshi
was trying to saffornise education.
These are equally applicable to
PMK,MDMK and ADMK.So what is the
logical conclusion.

முத்து(தமிழினி) said...

அனானி,

அரசியல்வாதிகளின் பலவீனங்களை வைத்து திராவிட உணர்வுகளை விவாதிக்க முடியுமா?

முத்து(தமிழினி) said...

//There is no need to deify U.Ve.Sa or anyone.Nor is there a need to demonise any caste or group.//

இதில் நாம் ஒத்துப்போகிறோம்.உங்களின் இரண்டாவது வாக்கியத்தில் சொற்குற்றம் உள்ளது.

முத்து(தமிழினி) said...

//Muthu has not understood the points raised by Shankar or the
response by Sannasi.//

கண்டிப்பாக இதற்கு காரணம் நான் இடஒதுக்கீட்டில் படித்ததும் வேலை வாங்கியதும் தான் இல்லையா? :))

மீள்பதிவு ஐடியாவுக்கு நன்றி.

bonapert said...

முத்து,

தற்பொழுது என்னால் நிதானமாக தங்களது பதிவு மற்றும் தேசதுரோக கும்பலின் பதிவுகளை படித்து கருத்து /எதிர்வினை சொல்லும் அவகாசமில்லை.

ஆனால் கருத்து கந்தசாமி, பினாமிக்கு சுனாமியாக தூக்கு தூக்கிய அஞ்சா நெஞ்சர் கால்கரி சிவா ஒரு நகைச்சுவை முத்து ஒன்று போட்டுச் சென்றுள்ளார்.


அய்யா, கல்கரி அவர்களே தங்களது புரிதலில் முன்னேற்றம் என்பது என்ன?

முதலாளித்துவ வளர்ச்சியில் இந்தியாவிலேயே பரவலான வளர்ச்சி பெற்றுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்(இதற்க்கு அடுத்துதான் மகாராஸ்டிரா வருகிறது. நன்பர்களே 'பரவலாக' என்ற வரிகளை அழுத்தம் கொடுத்து படிக்கவும்).

இந்த வளர்ச்சியில் முதலாளித்துவ கட்சிகளான திராவிட கட்சிகளின் பங்களிப்பையும்/மாநிலக் கட்சிகளின் கையில் ஆட்சி இருந்ததன் சாதகமான விளைவையும் எந்த கொம்பனாலும் மறுக்க முடியாது.

அவர்களின்(திராவிட கட்சிகளின்) வரலாற்றுக் கடமையை ஓரளவு நிறைவேற்றியதை மறுக்க முடியாது.

ஒரு நாலைந்து நாட்களாக வலையில் வாய் வைக்க முடியாமல் இருந்த கேப்பில் இத்தனை ஆட்டம் அந்த தேசத் துரோக கும்பல் போட்டதை என்னால் கவனிக்க இயலாமல் போய்விட்டது.

நானும் கோதாவில் குதிக்கிறேன்.


நன்றி,
அசுரன்

(சில வார்த்தைகள் எடிட் செய்துள்ளேன்)

இரா.சுகுமாரன் said...

ஆடுமாடு ஓட்டிகிட்டு பொழைக்க வந்த!- அப்படியே

ஆத்தங்கரை ஓரத்தில டெண்டடிச்ச!
வேத இதிகாசமின்னு சரடு விட்ட!
எங்கள வேசிப்பய புள்ளங்கன்னு எழுதிபுட்ட!

போரதெல்லாம் போகட்டுன்னு பொருத்துகிட்டா!.........
நீதான் பூர்வ குடி இங்கிரியேடா- புளுகு மூட்ட!

போதும் நிறுத்து,போதும் நிறுத்தடா!உன் வேசம் இப்போ கலஞ்சிபோச்சி
பேச்சை நிறுத்தடா!

என்ற ம.க.இ.க வின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

G.Ragavan said...

// முத்து(தமிழினி) said...
அன்பின் ராகவன்,

நான் கூறியது அவர் மேல் கூட குற்றச்சாட்டுக்கள் உள்ளது என்பதுதான்.

யாரையும் கடவுளாக்கவம் வேண்டாம்.அவருக்கு உரிய மரியாதையும் உண்டு.ஆனால் விமர்சனம் இருந்தால் அதையும் செய்துதானே ஆகவேண்டும்.தகவல் தேடி தருகிறேன்.

நானும் உங்களைப்போல் அதிர்ச்சி அடைந்தவன்தான்.ஏகப்பட்ட சைவ மடங்களின் எதிர்ப்பை சம்பாதித்து சமண புத்த காப்பியங்களை காத்தவர் என்று நிறைய வலைப்பதிவுகளிலேயெ படித்துள்ளோம்.குற்றச்சாட்டு இருக்கிறதே என்று கூறினால் அது கொடிய பாவம் அல்ல.அதை திரிப்பவர்கள் அவரை கடவுளாக்க முயற்சி செய்வதாக எனக்கு தோன்றுகிறது.காந்தியையே விமர்சிக்கிறார்கள்.உடனெ உனக்கு என்ன யொக்கியதை என்று யாராவது கேட்பார்கள்.அவர்களுக்கு என் நன்றியை இப்போதே தெரிவிக்கிறேன். //

குற்றம் சாட்டுவது எளிது. அதை முறையான வகையில் நிரூபிப்பது கடினம். உ.வே.சா கடவுள் என்று சொல்லவில்லை. அவர் செய்தது நிறைய. தவறுகளே செய்யாமல் இருக்க யாராலும் முடியாது. ஆனால் ஒரு தமிழராகவும் தமிழுணர்வாளராகவும் அவர் அவரைக் குறை சொல்ல முடியாது என் கருத்து. தகவல்கள் எதுவும் இருந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறேன். பாரதியின் பதிவும் பார்த்தேன். காந்தியைப் பற்றியும் கேள்விப்பட்டுள்ளேன். எங்கிருந்தாலும் நல்லவைகளை மட்டும் எடுப்பது என் வழக்கம். இவர்களிடம் இருந்து எதை நான் எடுத்திருந்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

// // பாரதியை பற்றிய மீள்விமர்சனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரியாரைப்பற்றிய மீள் விமர்சனங்களும் இப்போது நிறைய உள்ளது. //

யாரும் விமர்சனத்திற்கு தப்ப முடியாது. பெரியாரின் கருத்துகளில் எனக்கு ஒப்புதலும் மறுப்பும் உண்டு. மறுப்புள்ளவற்றை விலக்கி ஒப்புள்ளவற்றை ஏற்றுக்கொண்டுள்ளேன். அவ்வளவே.

// //அவரைப் பற்றித் தமிழறிந்தவர் அனைவரும் அறிவர். தமிழறிந்தவர் என்று நான் சொல்வது பேச்சுத்தமிழை அல்ல.//

:)) //

என்னய்யா இது சிரிப்பு! நான் சொன்னது உண்மையய்யா! வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெரியுமா? அவரிடம்தான் உ.வே.சா அவர்கள் தமிழ் கற்றார்கள். தமிழ் முழுதுணர்ந்த பெரியோர் என்பார்களே. அதில் இவர்கள் இருவரும் உண்டு. நான் வாழ்ந்த காலத்தில் அப்படி ஒருவரைத்தான் நான் கண்டுள்ளேன். வாரியார் சுவாமிகளைத்தான் சொல்கிறேன். மற்றவர்களும் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.


// //பின்னூட்டமிடவும் கருத்துச் சொல்லவும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி.//

ஹிஹி இது என்ன புதுசா(?) ஒரு வாக்கியம் வந்துருக்கு. //

அத்தோட பின்னூட்டத்த முடிச்சிக்கலாம்னு நெனச்சுத்தான் அப்படிப் போட்டேன். ஆனா முடியலையே!!!!!!!! :-)))))

// மற்றவர்களுக்கு:

இந்த உ.வே.சா சமாச்சாரம் பதிவின் நோக்கத்தை திசை திருப்புகிறது. பதிவின் அடிப்படை திராவிட கூத்தைப்பற்றியது.திராவிடர்களுக்கு தேவையான பொலிடிக்கல் ஸ்பேசை பற்றியது.நன்றி. //

அப்ப வரிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றீருவோமா முத்து.

முத்து(தமிழினி) said...

அசுரன்,

புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் சில வார்த்தைகளை எடிட் செய்துவிட்டேன்...

வாருங்கள் எழுதுங்கள்..நண்பர் வஜ்ரா எழுதிய பதிவையும் பாருங்கள்.. அறிவியல் கேள்விகளுக்கு சன்னாசி என்பவர் பதில் எழுதி உள்ளார்.அந்த பின்னூட்டங்களையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.நண்பர் சுகுமாரனுக்கு,

ம.க.இ.க வின் இந்த கருத்தைத்தான் நண்பர் வஜ்ரா மறுத்துள்ளார்.அதை படிக்கவும்.நல்ல பதிவும் பின்னூட்டங்களும்.

செந்தில் குமரன் said...

முத்து தமிழினி அவர்களே வஜ்ரா ஷங்கர் அவர்கள் திராவிடம் என்பது கிடையாது என்று கூறவில்லை ஆரியம் என்பது இல்லை என்றுதான் கூறியிருக்கிறார். அதனை சரியான முறையில் விவாதம் செய்யாமல் உ.வே.சா பற்றி எல்லாம் சேற்றை வாரி இறைத்து சரியா இது? வஜ்ரா ஷங்கர் அவர்களுக்கு சொன்ன அதே கருத்தை உங்களிடமும் சொல்கிறேன். Conspiracy theory என்று யாரை வேண்டுமானாலும் திட்டி விடலாம் காந்தி மஹானில் இருந்து யேசு கிறிஸ்து அவர்கள் வரை. நீங்கள் உ.வே.சா பற்றி கூறியதும் ஒரு Conspiracy theoryதான்.

முத்து(தமிழினி) said...

அன்பின் ராகவன்,

உண்மை.நல்லவைகளை மட்டும் எடுப்பது நல்லதுதான்.அதனால் தான் பலவீனங்களையும் மீறி இவர்களை மதிக்கிறேன் என்றேன் நான்.
ஆனால் கடவுளாக அல்ல. பெரியாருக்கும் இது பொருந்தும்.

//பெரியாரின் கருத்துகளில் எனக்கு ஒப்புதலும் மறுப்பும் உண்டு. மறுப்புள்ளவற்றை விலக்கி ஒப்புள்ளவற்றை ஏற்றுக்கொண்டுள்ளேன்//

உண்மை. நூறு சதவீத சொக்க தங்கம் என்று யாரும் இல்லை என்பதுதான் என் கருத்தும்.

இராமசாமி நாயக்கன் சொல்றானேன்னு எதையும் நம்பாதேன்னுதான் சொன்னார்.அந்த அடிப்படையில்தான் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறியதை நான் பார்க்கிறேன்.நீங்கள் அவரை அவ்வாறு அணுகுவது என்னை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.


//நான் வாழ்ந்த காலத்தில் அப்படி ஒருவரைத்தான் நான் கண்டுள்ளேன். வாரியார் சுவாமிகளைத்தான் சொல்கிறேன். மற்றவர்களும் இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.//

நல்ல வேலை செஞ்சீங்க..நான் நினைத்தது வேறு :))

//அத்தோட பின்னூட்டத்த முடிச்சிக்கலாம்னு நெனச்சுத்தான் அப்படிப் போட்டேன்//

:))யார் விட்டா உங்களை?

//அப்ப வரிகளை இன்னும் கொஞ்சம் மெருகேற்றீருவோமா முத்து. //

:))

குற்றச்சாட்டு இருக்கிறது என்ற செய்தியை எடுக்கமுடியாது.ஆனால் உறுதிப்படுத்தப்படாதது என்று போட்டுவிடலாம்.சரியாக வரும்.

முத்து(தமிழினி) said...

குமரன் எண்ணம்,

//வஜ்ரா ஷங்கர் அவர்கள் திராவிடம் என்பது கிடையாது என்று கூறவில்லை ஆரியம் என்பது இல்லை என்றுதான் கூறியிருக்கிறார்//

ஆரியம் இல்லை என்பதால் திராவிடம் இல்லை என்பது அவர் முடிவு. அனைத்து பின்னூட்டங்களையும் படித்தீர்களா? நல்ல பதிவு அது.

தமிழ்தாத்தா விவகாரம் ராகவனுக்கு விளக்கமாக கூறி உள்ளேன். படிக்கவும்.விமர்சனம் எல்லாம் மீதும் இருக்கும். பெரியார் உள்பட.
நான் கூறியது குற்றச்சாட்டு உண்டு என்றுதான்.:)

சேறு வீசவது என்றால் என்ன அர்த்தம் உங்களைப்பொறுத்தவரை:))

(இனி யாரும் பதிவை திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.நன்றி)

முத்து(தமிழினி) said...

குமரன் எண்ணம்,

நீங்கள் பாரதி பற்றிய விமர்சனத்தை படித்தால் என்ன சொல்வீர்களோ எனக்கு தெரியாது.

கூகிளாண்டவரிடன் aryan invasion theory என்ற ஒரு வாக்கியத்தை போடுங்கள்.ஒரு மாதம் படிக்கலாம்:))

இரா.சுகுமாரன் said...

குமரன் எண்ணம் said...

//ஷங்கர் அவர்கள் திராவிடம் என்பது கிடையாது என்று கூறவில்லை ஆரியம் என்பது இல்லை என்றுதான் கூறியிருக்கிறார்.//

ஆரியம் இல்லை என்பது எப்படி?

ஆரியம் என்பது....

நான் உசந்தவன்....
நீ தாழ்ந்தவன்....
நான் பாப்பான்...
நீ பரையன்....

இப்படி மனிதனில் மேல் கீழ் என்று பிரிப்பது தான் ஆரியம்.

அது இல்லையா?...

சாதி இப்போது இல்லையா?...

இப்படி எல்லாத்திலேயும் உயர்வு தாழ்வு சொல்லி பிரித்தவர்கள் தான் ஆரியர்கள்.

"சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
(பாரதியார் பாடல்)

என்று வகுத்தார்கள் அல்லவா?

அதில் தான் ஆரியம் உள்ளது.

முத்து(தமிழினி) said...

நானும் கூகிளை தோண்டினேன்..இது கிடைத்தது.


http://www.chowk.com/show_article.cgi?aid=00000890&channel=university%20ave

இரா.சுகுமாரன் said...

//'சூத்திரற்கொரு நீதி,
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,
சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று; சதியென்று காண் '

என்றான் பாரதி. //

இது தான் ஆரியம்

முத்து(தமிழினி) said...

சுகுமாரன்,

சரிதான்.அப்புறம் ஏன் பாரதியை விமர்சிக்கிறாய்னு இன்னொரு ஆள் வருவார்.நல்ல வரல்லை இந்த விளையாட்டுக்கு.

நான் இந்த ஆரிய திராவிட சமாச்சாரத்தை இவர்கள் கருத்துக்களிலேயே பார்க்கிறேன்.கலாச்சாரத்தில் பார்க்கிறேன்.பதிவில் நான் கேட்ட முக்கிய கேள்விகளுக்கு பதில் இல்லை.ஆனால் அவங்கவங்க சல்லி யடிக்க எடுக்கும் மேட்டரை பாருங்களேன்.

இரா.சுகுமாரன் said...

தமிழினி...

//சரிதான்.அப்புறம் ஏன் பாரதியை விமர்சிக்கிறாய்னு இன்னொரு ஆள் வருவார்.நல்ல வரல்லை இந்த விளையாட்டுக்கு.//

பாரதியாராலேயே பொருத்துக்க முடியல..
அவரே சொல்லியிருக்கார் பாருங்கள் அப்படி சொல்லத்தானே தவிர..

வேறெதற்கும் இல்லை.

வழிப்போக்கன் said...

முத்து,
அந்த சுட்டிக்கு நன்றி.

அப்புறம், இதெல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். படித்து சிரித்துவிட்டு போக வேன்டியதுதான். ஆனால், அதே சமயத்தில், என்னென்ன உத்திகள் எப்படி எப்படியெல்லாம் பயன் படுத்தப்படுகின்றன என்பதை அறிய, நம் போன்ற "வளரும் அரசியல் கலைஞர்களான" திராவிட தமிழர்களுக்கு, நல்ல முன்னோட்டங்கள் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? :-)

bonapert said...

ஆரிய இனமிருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரு கேள்வியாகவே எடுத்துக் கொள்வோமே என்ன கெட்டுவிட்டது(ஒரு வாதத்துக்கு).

இல்லை என்று கூறுவதன் மூலமாக அந்த கோஸ்டிகள் என்ன நிறுவ விரும்புகிறார்கள்....

நாம அனைவரும் ஒன்று என்பதையா?...

அதைத்தான் நிறுவ விரும்புகிறார்கள்... உண்மையில் நேர்மறையில் இதை செய்வதற்க்கான நேர்மையில்லாததால் இவர்கள் இந்த(வக்ரா பதிவு) குறுக்கு வழியை, அதாவது கருத்தியலில் உள்ள ஆரிய பன்பாட்டு அடக்குமுறையை மறைத்து முக்காடு போட வசதியாக மாற்றுக் கருத்தை உருவாக்கும், முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இப்படி வரலாற்றில் வடிகட்டி உபயோகிப்பதில் மிகச் சிறப்பான பரம்பரியம் உள்ளவர்களாயிற்றே. அதனடிப்படையிலேயே ஒரு அவசரமான முடிவுக்கும் வந்து, மடையடைக்கிறார்கள்.

இரண்டு விசயங்கள் தெரிகிறது இதன் மூலம்,
- ஒன்று மேற்சொன்ன அவர்களின் நேர்மையின்மை.
- இரண்டு ஏதோ ஆரிய படையெடுப்பு தியரிதான் பார்ப்பன/இந்து பயங்கரவாத எதிர்ப்பில் நமது அடிப்படை ஆணி வேர் என்பதான பிரமை.

திராவிட, ஆரிய பிரிவு என்பது கருத்தியல் ரீதியாக, சமூக ரிதியாக இருப்பதை மறுத்து அங்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

அதை அவர்களால் மறுக்க இயலாமல்தான் இந்த மரபியல் கண்டுபிடிப்பில் சரணாகதி அடைந்திருப்பதாக தெரிகிறது.

மரபியல் ரீதியாக பேசலாம் எனில் இன்று தெளிவான ஆரிய, திராவிட இனக்குழுவை கண்டுபிடிப்பது சாத்தியமா?

சாதிப் பிரிவினையில் இந்த இனக்கலப்பின்(இனம் என்பதை ஏற்றுக் கொண்டால்) பாத்திரமும் உள்ளது, அப்படியிருக்கையில் அவ்வாறு கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்று கருதுகிறேன்.

அப்படிக் கண்டுபிடித்து அவர்களின் கூற்றே நிருபணமானாலும் கூட ஆரிய அடக்குமுறை ஒன்றும் மாறப் போவதில்லை. அவர்களின் கட்டுரை ஒரு மொன்னை, காகித கத்தி போலத்தான் தோன்றுகிறது.

இந்த குழப்பத்தை சிரினிவாசனுக்கான பதிலில் வக்ரா அடிகோடிட்டு காட்டியிருப்பார்.

இன்னும் முழுமையாக படிக்கவில்லை......

எல்லோருமே இப்படி பெருசு பெருசா எழுதுனா இன்னா செய்றது....

நன்றி,
அசுரன்.

(முத்து, பார்ப்பன எதிர்ப்பில் தங்களது கொள்கைகளை சிறிது எனக்கு விளக்கிக் கூறினால் நான் அதைப் பொறுத்து முடிவெடுக்க வசதியாக இருக்கும். கால்கரி பற்றிய அந்த வரிகளில் என்ன தவறு என்று தனிமடல் அனுப்பவும் அல்லது எனது வலையில் பின்னூட்டமிடவும்(நான் பதிப்பிக்க மாட்டேன்))

முத்து(தமிழினி) said...

//- இரண்டு ஏதோ ஆரிய படையெடுப்பு தியரிதான் பார்ப்பன/இந்து பயங்கரவாத எதிர்ப்பில் நமது அடிப்படை ஆணி வேர் என்பதான பிரமை.//

ராசா,..அருமையான வார்த்தைகள் ஐயா..இதை சொல்ல நினைத்தேன். சரியான வார்த்தைகள் சிக்கவில்லை.
சூப்பர்.


//திராவிட, ஆரிய பிரிவு என்பது கருத்தியல் ரீதியாக, சமூக ரிதியாக இருப்பதை மறுத்து அங்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
அதை அவர்களால் மறுக்க இயலாமல்தான் இந்த மரபியல் கண்டுபிடிப்பில் சரணாகதி அடைந்திருப்பதாக தெரிகிறது.//

எப்படிய்யா இப்படி எல்லாம்?


//அப்படிக் கண்டுபிடித்து அவர்களின் கூற்றே நிருபணமானாலும் கூட ஆரிய அடக்குமுறை ஒன்றும் மாறப் போவதில்லை. அவர்களின் கட்டுரை ஒரு மொன்னை, காகித கத்தி போலத்தான் தோன்றுகிறது.இந்த குழப்பத்தை சிரினிவாசனுக்கான பதிலில் வக்ரா அடிகோடிட்டு காட்டியிருப்பார். //


ரொம்ப சரி.அவரை விடுங்கள். அவருடைய "அறிவியல் பார்வைக்குத்தான்" சன்னாசி எழுதி இருக்கிறாரே,..நான் நீங்கள் கூறும் அந்த உணர்வு,சமூக காரணியைத்தான் நினைக்கிறேன்.

முத்து(தமிழினி) said...

//பாரதியாராலேயே பொருத்துக்க முடியல..
அவரே சொல்லியிருக்கார் பாருங்கள் அப்படி சொல்லத்தானே தவிர//

தெரியும் சுகுமாரன்...இன்னொரு பின்னூட்டமும் கிடைத்தது.நன்றி.

bonapert said...

//யாராவது அனானி வந்து மக்கள் மனதை புண்படுத்தி விட்டாயே என்று புலம்புவார்கள்.ஆகவே தனிப்பட்ட ஆட்களை சாதிப்பெயரை வைத்து எழுதுவதை தவிர்க்க கூடுமானவரை முயற்சிக்கிறென்.அதுதான் காரணம். //

யாரையுமே தனிப்பட்ட சாதிப் பெயரால் இதுவரை திட்டியதில்லை. திட்டுவதெல்லாம அவர்களின் தத்துவ சார்பைத்தான்.

கால்கரி பற்றிய அந்த வரிகளைப் போட்டதில் ஒரு அரசியல் தத்துவ விமரிசனம் உள்ளது.

சமீபத்திய எனது பார்ப்பினிய எதிர்ப்பு பின்னூட்டங்களை கவனித்தால் அதில் அவர்களின் அவல நிலையை பய்ன்படுத்த விழையும் தந்திரம் குறித்து எச்சரித்திருப்பேன்(குறிப்பாக இடஒதுக்கீடு பிரச்சனை வரும்போதெல்லாம் இவ்வாறு பரிதாப வேடம் போடும்).

அதனை ஒட்டி கால்கரியும் ஒரு பதிவு போட்டிருந்தார். அதனால்தான் அந்த வரிகள். அவர் சாதி ரீதியாக யாராயிருந்தால் யாருக்கென்ன கவலை. அவர் தாங்கி நிற்க்கும் தத்துவம் அங்கே பார்ப்பினியம் என்பது தெரியவந்ததால் அந்த வரிகளை அவருக்கு அடைமொழிந்தேன்.

"அதிகாரவர்க்கம் தனது அவலத்தை விளம்பரப்படுத்தும் போது மிகவும் ஆபத்தான எதிரியாகி விடுகிறது."

அனானிகளின் பின்னூட்டங்கள் நம்மை நமது நிலைப்பாட்டை விளக்க கிடைக்கும் வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் விமர்சனங்களை நேரடியாக அதன் உண்மையான வடிவில் வைப்பதுதான் வளர்ச்சிக்கான முரன்பாட்டை உருவாக்கும்(இயங்கியல்).

நன்றி,
அசுரன்.

மு. சுந்தரமூர்த்தி said...

//மாங்கு மாங்கென்று எழுதியுள்ள சன்னாசி அவர்களின் பின்னூட்டத்தை//

சன்னாசி,
உங்களுடைய விரிவான பின்னூட்டங்களைப் படித்தேன். இவற்றைத் தொகுத்து ஒரு செறிவான கட்டுரையாக்கி காலச்சுவடு, உயிர்மை போன்ற ஏதாவது அச்சிதழிலோ, அல்லது கீற்று.காம் போன்ற இணைய இதழிலோ பதிவு செய்வது மிகமிக அவசியம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு கட்டுரைகள் எழுதி பேர் வாங்கவேண்டுமென்பதில் ஆர்வமில்லை என்பதற்காக விட்டுவிடாதீர்கள். கட்டுரை எழுதிக் கொடுத்தால் என் பேரிலாவது அனுப்பிவிடுகிறேன் :-))

முத்து(தமிழினி) said...

போனபர்ட் அவர்களே,

பிராமண எதிர்ப்பு என்று ஒன்றும் இல்லை. ஆனால் பு.பி என்ற ஒரு லாஜிக் உள்ளது.அதை நான் எதிர்க்கிறேன்.அதைப்பற்றி இந்த பதிவுகளை பாருங்கள்.

http://muthuvintamil.blogspot.com/2006/04/2_20.html

http://muthuvintamil.blogspot.com/2006/04/1_19.html

http://muthuvintamil.blogspot.com/2006/04/blog-post_10.html

இது எப்பவுமே பொருந்தும் தத்துவங்கள்(?)


சிலர் விவாதம் என்று வருவார்கள். அப்புறம் மனம் புண்படுகிறது என்று கழண்டு கொள்வார்கள்.விவாதம் என்றால் அறிவியல்பூர்வமாக சில கேள்விகள் இருக்கத்தான் செய்யும்.அப்புறம் ஏன் விவாதத்திற்கு வந்தாய் என்றால் கோபித்துக் கொள்வார்கள்.ஆன்மீகம் பேசினால் அவர்களை மற்றவர்களை விட அதிகமாக மதிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் சிலருக்கு உள்ளது.

திரிபு வாதமும் நிறைய நடக்கும்.ஆகவே அதற்கு இடம் கொடாமல் நடப்பது நம் கடமையாகிறது. விஷயத்திற்கு சம்பந்தம் இல்லாமல் சிலவற்றை பேசுவார்கள்.இந்த பதிவிலேயே உதாரணம் உள்ளது.

திராவிடன் என்றால் என்ன வேண்டுமானாலும் கிண்டல் செய்து பேசலாம் என்பது சிலருக்கு நினைப்பு.அவர்களை ஏதாவது சொன்னால் வாயிலும் வயிற்றுலும் அடித்துக்கொள்வார்கள்.இது தெளிவாக தெரியும் டபுள் ஸ்டான்டர்டு.ஆனால் இதை சொல்லமுடியாது.மேற்சொன்ன புனித பிம்ப கான்செப்ட்டை திரும்பவும் படியுங்கள்.ஆன்மீக சமுக்காளத்தில் அனைத்தும் போர்த்தி மறைக்கப்படும்.

நீங்கள் கூறிய கருத்தியல் கருத்து சரிதான்.ஆனால் அந்த லெவலில் புரிந்துக்கொள்ள இங்கு ஆட்கள் இல்லை என்பது ஒரு சோக நிஜம்.

முத்து(தமிழினி) said...

//His ideas cut both ways.He does not have a political agenda.You
have a political agenda.He is
interested more in science and what scientific studies tell than
on defining the qualities of a
dravida. //

SO WHAT?

Anonymous said...

SO WHAT?
Nothing except that they can be
turned against you when necessary.

முத்து(தமிழினி) said...

//Nothing except that they can be
turned against you when necessary//

oh...it shows you have not followed any of the discussions properly...

thanks for views...

இரா.சுகுமாரன் said...

நண்பர் தமிழினிக்கு..

//கம்பராமாயணம் வால்மீகி ராமாயணத்தை தமிழில் மொழிப் பெயர்த்து எழுதப்பட்டது.அதில் எப்படி ஒரு சாராரை தாக்கி இருக்கும்?அது கூட தெரியாமல் பண்டைய இலக்கியத்தில் ஆரியர்களை யாரும் தாக்கவில்லை என்று ராமாயணத்தை வைத்து உளறுவது நகைப்பிற்குரியது.//

இராமாயணம் தமிழர்களுக்கு எதிரான காவியம்.

இராமாயணத்தின் உள்ள பெயர்களைப் பார்த்தாலே இது நமக்கு விளங்கும்.

இராமன்: அழகானவன்,
சீதை: குளிர்ச்சியானவள்,

இராவணன்: இரா+ வண்ணன் ( கருப்பன்),ராவணன் அரவம் = அரா=அர=ஒலி எப்போதும் ஒலி எழுப்புவன், அழுமூஞ்சி)

கும்பகர்ணன்: கும்பம்= குடம் = குடத்தை போன்ற வயிறுடையவன்,

சூர்ப்ப நகா= முறம் போன்ற நகத்தை போன்றவள்

இராமாயணத்தில் இராமனுக்கு மனிதர்கள் யாரும் உதவி செய்ததாக இல்லை.

குரங்குகள், அனில் ,பறவை போன்றவைகள் உதவியுள்ளன.

தென்னிந்தியர்களைத் தான் குரங்குகள் என்று இராமாயணத்தில் குறித்திருக்கிறார்கள்.

இதை பார்த்தாலே தெரியவில்லையா?
இராமாயணம் கூட தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்டது என்று.

அதில் ஆரியர்களுக்கு எதிராக எழுதப்பட வாய்ப்பில்லை.

வால்மிகியின் வரலாறே பொய்யானது.
இராமாயணம் எப்படி உண்மையாகும்.
எல்லாம் பொய் புனைச்சுருட்டு தான். எல்லாவற்றையும் தமிழனை கேவலப்படுத்த தான் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

Anonymous said...

Do you accept Vidathu Karuppu's views. You have given a link to his blog.If you disagree put a disclaimer that
you disagree with him or atleast openly write that you agree with him.

முத்து(தமிழினி) said...

anony,

i got it..if somebody gives link to your post it will show in the bottom..so donot read too much into it..

i cannot comment on others views..one thing he said is factually incorrect..i have not gone into the scientific details much ( just i read sannasi's reply and find it is quite ok.i may write a detailed analysis on that later)

செந்தழல் ரவி said...

நிறைய புரிதல் ஏற்ப்பட்டது...

நன்றி..

விடாதுகருப்பு said...

முத்து அவர்களே,

நான் நினைக்கிறேன்... கைபர்-போலன் கணவாய் வழியாக ஆடுமாடு மேய்த்தபடி இந்தியாவுக்குள் பிழைப்புக்காக வந்தது திராவிடர்கள்தான். இந்திய மொழிகள் தெரியாத காரணமாக ஆங்கிலேயர்கள்தான் வரலாற்றினை தவறாக எழுதி விட்டனர்! :))

இந்தியாவின் பூர்வகுடி மண்ணின் மைந்தர்கள் ஆரியர்களாக இருக்கலாம்.

திரு said...

முத்து, ஆரியர்கள் என்ற இனமில்லை என்ற "ஆரிய கண்டுபிடிப்பு" வஜ்ரா போன்றவர்களுக்கு ஆனந்தம். ஆரிய இனம் தான் இல்லையென்றாகிவிட்டதே, அதுக்கப்புறம் ஏண்டா கோவில் கருவறை, அக்கிரகாரம் முதல் உச்சநீதிமன்றம் வரை எல்லா இடமும் ஒரு இனத்தவர்களின் ஆதிக்கம்? ஆரியம் என்ற இனம் இல்லையென்றால் இராமன் எப்படி ஆரியக்கடவுளானான்? தலைசுத்துதே! வஜ்ரா குறிப்பிட்டுள்ளது ஒரே ஒரு ஆராய்ச்சியின் முடிவு மட்டுமே! பல்லாயிரம் ஆரய்ச்சிகள் ஆரிய வந்தேறிகள் பற்றி சரித்திர சான்றுகளுடன் விளக்கம் வைத்திருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்று இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துகிற ஆதிக்க இனம் இந்தியாவில் படையெடுத்து வந்தேறியதா? இல்லையா? என்ற கேள்விக்கு பதில் வரும்.

Anonymous said...

//...... குஜராத் இவைகளை விட தமிழ்நாடு பின் தங்கிதான் உள்ளது. -கால்கரி //

ஆஹா இல்லையா பின்னே....
தாயின் கருவில் இருந்த கருவை KFC மாதிரி, சூலத்தில் குத்தியெடுக்க, அரசு நாற்காலியிலிருந்து ஆணையிட் ஒரு கே(மோ)டியையாவது உருவாக்க இந்த திராவிட ராஸ்கோலுகள் அனுமதிக்கிறார்களா?....எப்படி குஜராத் மாதிரி முன்னேறும் தமிழகம் ???? கல்காரி குழுமத்தின் ஆதங்கம் ....

கதிரவன்...

தமிழ்வெளியை பார்த்தீங்களா?