Thursday, July 13, 2006

தோழி உஷாவுக்கு - 2

நான் மதிக்கும் மணியன் சார் கூறிய

//நம் நேர்மைக்கு நம் மனசாட்சியே அத்தாட்சி. பொது இடத்தில் நான்குபேர் நான்குவிதமாகத்தான் சொல்வார்கள், டேக் இட் ஈஸி, மேம்!//

இதை நான் வழிமொழிகிறேன்.

உங்களுக்கு யார் மீதாவதோ அல்லது பதிவு மீதாவதோ ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் தமிழ்மண நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்திருக்கலாம்.தனிப்பதிவு போட்டிருக்க தேவையில்லை. அவசர அவசரமாக என்னையும் விசாரிக்காமல் என்னை பற்றியும் நீங்கள் எழுதினீர்கள். அதையும் தவிர்த்திருக்கலாம். என்னை தவறானவனாக பார்க்க விரும்பியதாலும் அப்படி மற்றவர்களுக்கு காட்ட விரும்பியதாலும் இதை அவசர அவசரமாக செய்தீர்கள் என்று நான் நினைக்கலாமே? (நான் அப்படி உடனடியாக யாரைப்பற்றியும் முடிவுக்கு வருவதில்லை.மேலே மணியன் சார் சொன்ன நடைமுறை யைத்தான் கடைபிடிக்கிறேன்).பிறகு தவறை ஒத்து கொண்டீர்கள். ஆகவே அதை விடுங்கள்.

உங்களின் இந்த செயல் மூலம் தமிழ்மணத்தின் பெயரை கெடுக்க முயன்றீர்கள் என்று பலரும் நினைக்க இடம் உள்ளது.( நான் அப்படி நினைக்கவில்லை என்பது வேறு விஷயம்). இன்று செல்வராஜ் இதைப்பற்றி குறிப்பிடாமல் ஆனால் நிர்வாகி பதவியை விட்டு விலகியது வருத்தத்திற்குரியது.( இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறினாலும் சண்டைகளினால் அவருக்கும் சலிப்பு ஏற்பட்டிருப்பது கண்கூடு.(சேர்க்கப்பட்டது-15.07.2006)

சென்சிட்டிவ்வான பிரச்சினைகள் எழுதினால் இங்கு காரசாரமாக நிறைய பேச்சு வரும்.எழுதுபவர்கள் எல்லாரும் நாம் நினைப்பது போல் எழுதமாட்டார்கள். தரந் தாழ்ந்து எழுதுவதும் தவறுதான்.அந்த வம்பிற்கு பயந்து பலர் சென்சிட்டிவ் ஆன விஷயங்களை பேசுவதில்லை. இது போன்ற விஷயங்களை ஒதுக்குவது என்ற அவர்களின் முடிவு கூட நல்ல முடிவுதான்.

பிரச்சினைகளுக்கு இக்னோர் செய்வது/ஒதுங்கி போவது சரியான முறை. இதை நான் சொல்லப்போய் என்னை திட்டியவர்கள் இன்று இதையே செய்யும்போது நான் கூறியது சரிதான் என்ற எண்ணம் எனக்கு வலுபெறுகிறது.Time Tested strategy.

அனானி பின்னூட்டங்களை ஒழிப்பதுப் பற்றி திரட்டியாளர்கள் ஒன்றும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. அப்பாவியாக இருப்பது அல்லது விவரமாக இருப்பது.இதில் ஏதாவது ஒன்றாகத்தான் நாம் பொது இடத்தில் இருக்க முடியும்.நீங்கள் இரண்டாகவும் ஒரே சமயத்தில் இருக்க முயல்வதால் தான் பிரச்சினை என்று எனக்கு தோன்றுகிறது.உங்களைப்பற்றி உங்களுக்கு இருக்கும் கருத்தே மற்றவர்களுக்கும் உங்கள் மேல் இருக்கும் என்று சொல்லமுடியாது இல்லையா?

படித்தவர்கள் இடையே இப்படி எல்லாம் பிரச்சினை வரக்கூடாது என்றும் என்றும் அதை நிறுத்தலாம் என்றும் நான் ஒரு முயற்சி செய்தேன்.அதையே கேவலமாக பேசியவர்கள் பலபேர்.இதைப்பற்றி எல்லாரிடமும் சொல்லி பதிவே போட்டபின்பும் இன்னும் அதை நோண்டி இன்பம் அடைபவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நான் என்ன பண்ணுவது? இங்கு ஈகோ தான் பிரச்சினை. கருத்துக்கள் அல்ல என்பதை கடைசியாகத்தான் உணர்ந்து கொண்டேன்.

தமிழ்மணத்தை ஒழித்து இந்த பிரச்சினையை ஒழிக்க முடியாது. எலியை பிடிக்க வீட்டை எரிப்பது போல் இது. நாளை தேன்கூட்டிலும் இந்த பிரச்சினை வரலாம். பிராக்டிக்கலாக அணுகுவதுதான் புத்திசாலித்தனம். தேன்கூட்டில் இன்று வரை எந்த பதிவையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையாக எழுதிய கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட பலரின் பதிவுகள் அங்கு உள்ளன.இதை ஒரு செய்தியாக கூறுகிறேன்.

முகத்தை மறைத்து எழுதுவது கூட சரிதான் என்று பலபேர் சொல்கிறார்கள்.
( மதிப்பிற்குரிய குமரன் கூட இது சரிதான் என்கிறார்.ஆகவே அதுவும் தவறு இல்லை என்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல் இது சரியாகவும் இருக்கலாம்.).சில பேர் அவ்வாறு பெயரை மறைத்தும் எழுதுகிறார்கள்.(பெயரை மறைப்பது என்பது புனைப்பெயர் வைப்பது மட்டும் அல்ல.யார்,எங்கிருந்து எழுதுகிறார்கள் என்றெல்லாம் தெரியாமல் எழுதுவது தான்) அதுவும் தவறு என்று நாம் கூறிவிட முடியாது. நேரடியாக கேவலமாக எழுதுவதும் குற்றம்தான். பூடகமாக கேவலப் படுத்துவதும் குற்றம்தான் என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.(முக்கோணம்). அதையும் நீங்கள் செய்யலாம் / செய்திருக்கலாம். யாரிடமும் நம்மைப்பற்றி நாமே சொல்லி எதையும் நிரூபிக்கமுடியாது. அவரவர்கள் அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்து மற்றவர்களைப்பற்றிய கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.இதுதான் நிதர்சனம்.

பெண்களைப்பற்றி தொடர்ந்து சினிமா பாட்டு எழுதி கிண்டல் செய்த பதிவே இங்கு இருந்தது.விஷயம் தெரிந்தோ தெரியாமலோ அந்த பதிவுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த மதிப்பிற்குரிய ஆட்கள் இங்கு உண்டு. இது தான் உலகம்.அதற்காக அவர்களை நாம் என்ன சொல்லமுடியும்? பூடகமாக கேவலப்படுத்துவது என்பது அதுதான்.


அதற்காக இதெல்லாம் சரிதான் என்று சொல்லவில்லை. சகஜம் என்றும் சொல்லவில்லை. ஆனால் உங்கள் முறை தவறு என்பது மட்டும்தான் என் கருத்து. மற்றபடி உங்கள் கருத்துக்களுக்கு என் ஆதரவு உண்டு. எந்த கோஷ்டியிலும் இல்லாத நீங்கள் இதை சரியான முறையில் எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

14 comments:

லக்கிலுக் said...

மிக மிக நடுநிலையாக கவனமாக கையாளப்பட்டிருக்கும் பதிவு.... இதே கவனம் சகோதரியிடமும் இருந்திருந்தால் பிரச்சினை இல்லை... அவரது கருத்து நடுநிலையாக இல்லை என்று நான் கருதினேன்.... அதை தைரியமாகவும் சொன்னேன்.... அதற்கு மட்டும் அவர் விளக்கம் கொடுத்திருக்கலாம்.... தேவையில்லாமல் விவகாரம் நீட்டி முழக்கப்படுகிறது..... "முடியலை" (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

VSK said...

மிகச் சிறப்பாகவும், பொறுமையாகவும் சொல்லியிருக்கிறீர்கள், மு. தமிழினி,
ஆனால், இன்னும் ஒன்றையும் சேர்த்துச் சொல்லியிருந்தால் நேர்மையானதாகவும் இருந்திருக்கும்.

"நானும் உங்களுக்குத் தனிமடல் அனுப்பி இப்பிரச்சினையை விளக்கியிருக்கலாம், நண்பர் [தோழி]என்ற முறையில்" என்பதையும் சொல்லியிருந்தால், மற்றவர்கள் பாய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்காமலும், இதனைப் பெரிதாக்காமலும் போயிருக்கலாமோ?

உடனே உணர்ச்சிவசப்பட்டு பொது மன்னிப்பு என்றெல்லாம் சொன்னவுடன் மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள் என நினைக்கிறேன்.

அப்பதிவின் முக்கிய நோக்கம் உங்களைக் குறைத்து மதிப்பிடுவதில்லையே!

தவறாகப் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

ரவி said...

நன்றாக அனலைஸ் செய்து பதிவிட்டு இருக்கீங்க முத்து...

பொறுமையா அமர்ந்து ஒரு நிமிடம் யோசித்தாலே உஷா அவர்கள் மனம் அமைதியாகும் என்பது என் எண்ணம்...

ramachandranusha(உஷா) said...

//செல்வராஜ், செய்யும் செயல்கள் அனைத்திலும் நன்மையும் தீமையும் இணைந்துவரும் என்பதை நேற்றைய என் பதிவின் எதிரொலியாய் இதைப் பார்க்கிறேன். நீங்கள் இல்லை என்று சொன்னாலும், உங்களின் இந்த முடிவில் என் பங்கு சில சதவீதங்கள் உண்டு என்று நினைக்கும் பொழுது வருத்தமாய்தான் இருக்கிறது. //

முத்து, காலையில் செல்வராஜ் அவர்களின் பதிவைப் பார்த்ததும் நான் இட்ட பின்னுட்டம் இது. இன்னும் மட்டுறுத்தலுக்கு காத்திருக்கிறது.
இதுநாள்வரை, ஒன்று தவறு என்றால் அதை என் சொந்த பெயரில் எடுத்து சொல்வதை வழக்க்கமாய் வைத்துள்ளேன். இணைய குசும்பன் பதிவை எடுக்க சொன்னப்பொழுதுகூட, மனதில் ஒரு நிமிடம் பயம் வந்தது. யார் என்று தெரியாதவருக்கு செய்யும்
அட்வைஸ், நாளை அதே போல என்னையும் சொல்லலாம் இல்லையா என்று!
ஒட்டு மொத்த சமூகத்தை ஆபாசமாய் சொல்வதை என்னைப் பொறுத்துப்போக முடியவில்லை. அதை ஏன் நிர்வாகிகள் கேட்க கூடாது என்றுக் கேட்டேன். பொதுவில் கேட்பதால் வரும் பின் விளைவுகளைக் குறித்த பயம் இருந்தாலும், சிலசமயம்
தனிமடல் சமாச்சாரங்களே, பொதுவில் வெளியிப்படும் பிரச்ச்னை ஏற்படுவதையும் பார்த்திருக்கிறேன்.உங்கள் பதிவில் இருந்த லிங்க் பற்றி தெரியாமல், போட்டுவிட்டேன் என்பதை பிளாக் செய்து சொல்லிவிட்டேன்.
நான் செய்தது தவறு என்றோ குற்றம் என்றோ எனக்கு இன்னும் தோன்றவில்லை. மற்றப்படி இமேஜ் என்பதெல்லாம் நாமே
உருவாக்கிக்கொள்ளும் அபத்தம்.இதை தலைக்கனம் என்றோ, பிடிவாதம் என்றோ நினைக்காதீர்கள். அறச்சீற்றம் என்று அழகாய் பெயர் கொடுங்கள்.
என்னால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு வருந்துகிறேன் என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை.

Muthu said...

//நானும் உங்களுக்குத் தனிமடல் அனுப்பி இப்பிரச்சினையை விளக்கியிருக்கலாம், நண்பர் [தோழி]என்ற முறையில்" என்பதையும் சொல்லியிருந்தால், மற்றவர்கள் பாய்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்காமலும், இதனைப் பெரிதாக்காமலும் போயிருக்கலாமோ?//


காமெடி பண்ணாதீங்க டாக்டா..நெற்று நான் உஸாவிற்கு கொடுத்த முதல் பின்னூட்டத்தை பாருங்கள்

என்னை பற்றி ஒரு முடிவெடுத்துவிட்டு வந்து எழுதினால் அது சரியாக இருக்காது.

இதுதான் ஒரு பக்கம் திருப்புகழ் மறுபக்கம் விஷம் என்கிறேன்.:))

சீனு said...

//அந்த வம்பிற்கு பயந்து பலர் சென்சிட்டிவ் ஆன விஷயங்களை பேசுவதில்லை. //

ஆமாங்க. நானும் அதனால் தான் சென்சிட்டிவ் ஆன விஷயங்களை பேசுவதில்லை.

மணியன் said...

எனக்கும் என் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் முத்து அவர்களுக்கு நன்றி. நான் ஆர்வத்துடன் படிக்கும் பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று.
ஏற்கெனவே என்னுடைய ஒரு பின்னூட்டத்தினால் குழப்பம் ஏற்பட்டது. இந்த பின்னூட்டத்தினால் சுமுகம் ஏற்பட்டால் மகிழ்வேன்.

VSK said...

பொறுமையை இழக்காமலும், அடைமொழி, முத்திரை அளிக்காமலும் உங்களால் பதிலிறுக்க முடியாது என நன்கு தெரிந்தும் , மீண்டும், மீண்டும் உங்களுடன் உரையாடுவதும் ஒரு நம்பிக்கையின் பேரில்தான்!
ஒருநாள் வெல்லுவேன்!
நன்றி.

கொடுத்ததை அளவுக்கு மீறி உண்பவர்க்கு விஷம்!
சொன்னப்படியே அருந்துபவர்க்கு திருப்புகழ் அமிர்தம்!!

Muthu said...

//ஒருநாள் வெல்லுவேன்!//

கண்டிப்பாக..இன்று ஒன்ணும் நீங்கள் தோற்கவில்லையெ...

நான் என்றுமே தோற்பதற்கு அஞ்சியதில்லை..

படிப்பவர்களுக்கு தெரியலாம் சில விஷயங்கள்:))



உஷா,

நன்றி ,செல்வராஜ் விலகுவது எனக்கும் பெரு வருத்தம்தான்.

fhygfhghg said...

என் கருத்து

Boston Bala said...

51 வாக்கியங்களில் 6 ப்ராக்கெட்டுக்குள் 8 வாக்கியங்கள். டிஸ்க்ளெய்மர் கணக்குப் போட்டு பார்த்தேன்.

நீங்களே பிறருக்கு ஆலோசனை தாராளமாக வழங்குவதால், உங்களுக்கு ஒரு வேண்டுகோள்: அடைப்புக்குறிக்குள் (மாற்றுக் கருத்தை) எழுதுவது அயர்ச்சியாக இருக்கிறது (உங்களுக்கு நட்புடன் தான் இதை முன் வைக்கிறேன் என்பது வெள்ளிடை மலை. டிஸ்க்ளெய்மர் போட்டு அதை இங்கு அடைப்பது தேவையில்லை (என்பது என் தாழ்மையான அபிப்ராயம் (இது சம்ஸ்கிருத வார்த்தையோ (நான் தமிழ் பிரியன் தான்))))

குமரன் (Kumaran) said...

//நான் அப்படி உடனடியாக யாரைப்பற்றியும் முடிவுக்கு வருவதில்லை.மேலே மணியன் சார் சொன்ன நடைமுறை யைத்தான் கடைபிடிக்கிறேன்//

இது முழுக்க முழுக்க உண்மை தானா முத்து. அதற்குள்ளா மறந்துவிட்டீர்கள்? ஒரு வேளை நீங்கள் உடனடியா யாரைப் பத்தியும் ஒரு முடிவுக்கு வருவதில்லை; ஆனால் திரும்பத் திரும்பச் சொன்னதையே உங்களிடமே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு பின்னர் அந்த முடிவுக்கு வருவீங்களோ? :-)))

நான் பலமுறை ஒரு தவறான முடிவு ஒருவரைப் பற்றி எடுத்திருக்கிறேன் முத்து. பலமுறை அதனால் பட்டும் இருக்கிறேன். அவசர அவசரமாக ஒருவரைப் பற்றி முடிவு எடுப்பது நாம் அனைவரும் செய்வது தானே.

//உங்களின் இந்த செயல் மூலம் தமிழ்மணத்தின் பெயரை கெடுக்க முயன்றீர்கள் என்று பலரும் நினைக்க இடம் உள்ளது.( நான் அப்படி நினைக்கவில்லை என்பது வேறு விஷயம்). இன்று செல்வராஜ் இதைப்பற்றி குறிப்பிடாமல் ஆனால் நிர்வாகி பதவியை விட்டு விலகியது வருத்தத்திற்குரியது.
//

இதுக்குப் பேர் தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறதுன்னு சொல்லுவாங்களோ முத்து? உஷா பதிவில் சொன்னது எதுவுமே தமிழ்மணத்தின் பெயரைக் கெடுக்க முயல்வதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படியே இருந்தாலும் அதற்காக செல்வராஜ் தமிழ்மண நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரியவில்லை. ஆனால் என்னை விட உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம். அதனை வைத்துக் கூறுகிறீர்களோ என்னவோ? தனிமடல்கள் தான் இருக்கின்றனவே இந்த மாதிரி செய்திகளைப் பரிமாறிக் கொள்ள? இல்லையா? :)

//அந்த வம்பிற்கு பயந்து பலர் சென்சிட்டிவ் ஆன விஷயங்களை பேசுவதில்லை. இது போன்ற விஷயங்களை ஒதுக்குவது என்ற அவர்களின் முடிவு கூட நல்ல முடிவுதான்.
//

உண்மை தான் முத்து. ஆனால் சில நேரம் ஒதுங்கிப் போவது முடிவதில்லை என்பதும் நம் இருவரின் அனுபவம் தானே.

//அனானி பின்னூட்டங்களை ஒழிப்பதுப் பற்றி திரட்டியாளர்கள் ஒன்றும் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது. //

உண்மை தான். ஆனால் ஒரு காலத்தில் போலிகளின் அசிங்கப் பின்னூட்டங்களுக்கும் இதே தான் சொல்லப்பட்டது. ஆனால் தமிழ்மணத்தில் ஒரு புதிய விதி சேர்க்கப்பட்டதும் அது மாறிவிடவில்லையா? அது போல் இதற்கும் ஒரு மாற்று வரலாம். (நான் இன்னும் அனானிமஸ் தேர்ந்தெடுத்தலை விட்டுவைத்திருக்கிறேன் என்றும் சொல்லிவிடுகிறேன்; அது தேவையில்லை என்றால் கூட).

//இங்கு ஈகோ தான் பிரச்சினை. கருத்துக்கள் அல்ல என்பதை கடைசியாகத்தான் உணர்ந்து கொண்டேன்.
//

மிக அருமையான கருத்து முத்து. இதற்காகவே நாம் என்றென்றும் நண்பர்களாக இருக்க வேண்டும்.

//மதிப்பிற்குரிய குமரன் கூட இது சரிதான் என்கிறார்//

ஐயா முத்து. நான் எங்கே ஐயா சரி என்று சொன்னேன்? நான் சொன்னது 'சொந்தப் பெயரில் எழுத விரும்பாதது அவர்கள் விருப்பம். ஆனால் அதனைக் கொண்டு கண்ட மாதிரி எழுதிக் கொண்டு இருக்கிறார்களே. அது சரியில்லை.' அவரவர் விருப்பம் என்று சொன்னதை நீங்கள் 'சரி' என்று சொன்னதாகப் புரிந்து கொண்டீர்கள். பிறர் 'அவரவர் விருப்பம்' என்பதை 'எனக்கு விருப்பமில்லை' என்று பொருள் கொண்டு 'சரியில்லை' என்று சொன்னதாகவும் புரிந்து கொள்ளலாமே? நான் சொன்னது 'அவரவர் விருப்பம்' என்பது மட்டும் தான். சரி என்றோ சரியில்லை என்றோ சொல்லவில்லை.

அது சரி எப்போதிலிருந்து நான் மதிப்பிற்குரிய ஆனேன்? ஒரு வேளை நீங்கள் 'குமரன் எண்ணம்' குமரனைச் சொல்கிறீர்களோ? நான் தான் தப்பாகப் புரிந்து கொள்கிறேனோ?

//நடவடிக்கை எடுக்க ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.(முக்கோணம்). அதையும் நீங்கள் செய்யலாம் / செய்திருக்கலாம். யாரிடமும் நம்மைப்பற்றி நாமே சொல்லி எதையும் நிரூபிக்கமுடியாது. அவரவர்கள் அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்து மற்றவர்களைப்பற்றிய கருத்துக்களை ஏற்படுத்திக் கொள்வார்கள்.இதுதான் நிதர்சனம்.
//

உண்மை. உண்மை. அப்பட்டமான உண்மை.

Anonymous said...

Time Tested strategy. ::::)))))
படித்தவர்கள் இடையே .... :::((((

Muthu said...

நண்பர்களெ,

அனைவருக்கும் நன்றி.

boston bala,

thanks..sensitive issues needs disclaimers..:))

kumaran,

:)) thanks for your views...neenga sonna sariyathan irukkum,,,