Saturday, July 22, 2006

தீர்ப்பை மாத்தி சொல்லு....

ஒரு வாரமாக அதிகாரபூர்வ ஏட்டுக்கு ஒரு நல்ல கட்டுரை எழுத எண்ணி செயல் தலைவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தாலும் சில நச்சு சொம்புகள் குழுமத்தில் குழப்பம் என்று விஷத்தை பரப்புவதால் செயல் தலைவர் தலையை காட்ட வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.மேலும் என்னைப்பற்றிய ஒரு அரிய தகவலையும் ஒரு தளததில் பார்க்க நேரிட்டது. கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்க விரும்பாததால் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்க நேரிட்டு விட்டது.


இந்த பதிவு எழுதப்பட்ட நேரத்தில் நான் இணைய அரசியலில் கழுத்தளவு முழுகியிருந்ததால் எப்படியும் அந்த பரிட்சை ஊத்திக்கொள்ளும் என்று பல நண்பர்கள் வருத்தப்பட்டார்கள்.எனக்கும் பயம் இருந்தது. தனி மெயிலில் என்னை தொடர்புக்கொண்டு உனக்கு இதெல்லாம் தேவையா என்று கடிந்தரைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

கெலிச்சாச்சுப்பா..ஹிஹி ஒரு இங்கிரிமெண்ட் உண்டுபா...

நண்பர் ஒருவர் எழுதிய புத்தகங்கள் குரியரில் நேற்று வந்து சேர்ந்தன. ஒரு புத்தகத்தை ஒரே மூச்சில் உட்கார்ந்து படித்தும் விட்டேன்.அதைப்பற்றிய ஒரு திறனாய்வு(?) கட்டுரை எழுதலாம் என்று எண்ணம் உண்டு. அவருடைய இன்னொரு புத்தகத்தையும் படித்துவிட்டு திங்கள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அதற்குமுன்னர் இன்று ஒரு காமெடி சீரியல் ஜோசப் சார் பாணியில் துவக்கலாம் என்று உள்ளேன். வலைப்பதிவாளர்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்து பிளாக்கர் தடையை நீக்கிய அரசுக்கு நன்றி.

24 comments:

Krishna said...

படிச்சு பாஸ் பண்றது பலரது நிலை. படிக்காமலேயே கில்லி அடிப்பார் எங்க செயல் தலை...

இப்பவாவது வீட்டம்மாவுக்கும், செல்லக் குட்டிக்கும் ட்ரீட் உண்டா?

Pot"tea" kadai said...

கெலிச்சதுக்கு வாய் நிறைய வாய்(ழ்)த்துக்கள்...

குழுமத்தில் ஒரு ஆர்க்கிடெக்டை வெச்சுகினு சொம்பு கிட்ட போய் கொத்தனாரையும் சுண்ணாம்பையும் கேட்டதை மென்மையாக கண்டிக்கிறேன். இது மாதிரி சப்பை மேட்டர் தான் எல்லாத்தையும் கண்டமேனிக்கு எய்த வெக்கிது. :-))

இளவஞ்சி said...

// அதற்குமுன்னர் இன்று ஒரு காமெடி சீரியல் ஜோசப் சார் பாணியில் துவக்கலாம் என்று உள்ளேன்.//

ஆஹா! வரணும்! நீங்க பழைய முத்துவா திரும்ப வரணும்!! ( நம்ப கப்தானுக்கு திலகன் சொன்ன ஸ்டைல்ல படிங்க.. :) )

Sivabalan said...

முத்து

வாழ்த்துக்கள் !!

மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.

நன்மனம் said...

//கெலிச்சாச்சுப்பா..//

வாழ்த்துக்கள் முத்து.

tbr.joseph said...

அதற்குமுன்னர் இன்று ஒரு காமெடி சீரியல் ஜோசப் சார் பாணியில் துவக்கலாம் என்று உள்ளேன்//

அதென்ன ஜோசப் சார் பாணி?

ஒங்க பாணியிலயே எழுதி கலக்குங்க..

என்ன முத்து சிஏஐஐபி பாஸ் பண்ணிட்டீங்களா?

அத படிச்சுட்டு சொல்றேன்.

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,

நன்றி சார்.

சி.ஏ.ஐ.ஐ.பி இரண்டாம் பாகம் தான்.ரொம்ப நாளா பெண்டிங் கிடந்தது. முடிச்சாச்சு.(இப்ப மல்டிபிள் சாய்ஸ்)


என் பாணியிலேயே போடலாம்.ஆனால் கவுண்டமணி வடிவேல் எல்லாம் உங்க கிட்டதான இருக்காங்க:))

சந்திப்பு said...

முத்து வாழ்த்துக்கள்...

தாங்கள் படித்த புத்தகம் குறித்த விமர்சனத்தை வழங்கினால், அதுவே இணையவாசிகளுக்கு டிரீட்டாக அமையும்..

Dharumi said...

வாழ்த்துக்கள் தல!
அப்புறமா, அந்த அரிய மேட்டர் அறிய ஆசை.

அருண்மொழி said...

வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றிகளை சுவைக்க வாழ்த்தும்

அருண்மொழி

G.Ragavan said...

இங்கிரிமெண்ட்டா..........அப்ப டிரீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு?

காமெடி கலக்கலா....காத்திருக்கிறோம். பூந்தமல்லியும் புன்னாகவராளியும்னு எழுதப் போறீங்களா?

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் செயல் தல....கலக்குங்க

//வாழ்த்துக்கள் தல!//
இயக்கத்தில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கும் பேராசிரியர் தருமி அவர்களுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.. முத்து தல அல்ல... செயல் தல.... அவர் செயல்படுகின்ற தல.... அப்போ தல யாருனு கேட்குறிங்களா? ஹி ஹி வெட்கமா இருக்கு எனக்கு விளம்பரம்லாம் புடிக்காதுங்க....

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் முத்து.

மனதின் ஓசை said...

வாழ்த்துக்கள் முத்து.

முத்து(தமிழினி) said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி...

கிருஷ்ணா சார்,

குடுத்தாச்சி...குடுத்தாச்சி...:))

****************************

பொட்டீக்கடை,

வூடு கட்டும்போது கண்டிப்பாக உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்று செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துவிட்டது.

****************************


இளவஞ்சி,

ஏன்? ( மணிரத்னம் ஸ்டைல்)

****************************

நன்றி சிவபாலன்,நன்மனம்,சந்திப்பு

சந்திப்பு,

அந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை விரைவில் எழுதுகிறேன்.நீங்கள் ரசிக்கமுடியாது என்பது உண்மை.

நாகை சிவா said...

//கெலிச்சாச்சுப்பா..ஹிஹி ஒரு இங்கிரிமெண்ட் உண்டுபா...//
இதானா மேட்டரு.

சம்பளம் எல்லாம் கூட்டிக் கொடுக்குறாங்க, இனிமேல் ஆச்சும் மாநகராட்சியில் குப்பையை ஒழுங்கா கொட்டுங்க.

நம்ம வாழ்த்துக்களையும் புடிச்சோங்க.

முத்து(தமிழினி) said...

//இனிமேல் ஆச்சும் மாநகராட்சியில் குப்பையை ஒழுங்கா கொட்டுங்க.//

இப்பல்லாம் குப்பை போடறதில்லை...கல்லூரி விடுதிகளில் குப்பை போடுவது என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமில்லையா? :))

நாகை சிவா said...

//கல்லூரி விடுதிகளில் குப்பை போடுவது என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமில்லையா? :)) //
தெரியலையே!

மாநகராட்சிக்கு " " போட மறந்துட்டேன். :)

Venkataramani said...

வாழ்த்துக்கள். பழைய முத்து எப்படி இருந்தார்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க ஆசை.

முத்து(தமிழினி) said...

வெங்கட்ரமணி,

பழைய முத்துவை பற்றி தெரிஞ்சுக்க அவரோட "சோ" வை பற்றிய பதிவை பாருங்க..

http://muthuvintamil.blogspot.com/2005/12/3.html

இப்பவும் அவர் அப்படியேத்தான் இருக்கார்.மத்தவங்க விரும்பறபடி இல்ல அப்படின்கறது அவரோட குற்றம் இல்லைங்கறதுல உறுதியா இருக்கார்...

Venkataramani said...

முத்து,

நான் சோ அபிமானி இல்லை.

நீங்க எப்பவும்போல இருக்கலாமே. உங்க கருத்துக்கு எதிரான கருத்தை சொல்வதால் மட்டும் சிலருக்கு உங்களைப் பிடிக்கலைன்னு அர்த்தம் இல்லை. குழலியின் கருத்துக்கள விதிமுறைகளின்படி கருத்துக்களை மட்டும் பரிமாறிக்கொள்வோம். ஆரோக்கியமாக...

செல்வன் said...

//பழைய முத்துவை பற்றி தெரிஞ்சுக்க அவரோட "சோ" வை பற்றிய பதிவை பாருங்க..இப்பவும் அவர் அப்படியேத்தான் இருக்கார்.மத்தவங்க விரும்பறபடி இல்ல அப்படின்கறது அவரோட குற்றம் இல்லைங்கறதுல உறுதியா இருக்கார்... //

சோவும் அதே உறுதியோட தான் இருக்கார்:-))

முத்து(தமிழினி) said...

ரமணி,

நீங்க சொல்றது வேற...
என் பதிவுகளில் ஒரு அளவுடன்தான் விமர்சனம் இருக்கும்.பல பின்னூட்டங்கள் மட்டுறுத்தவும் செய்யறன்..மற்றபடி யாரையும் சந்தோசப்படுத்தவோ வருத்தப் படவைக்கவோ இல்லை.அந்த பதிவை காட்டுனதுக்கு காரணம் வேற....


இளவஞ்சி சொல்றது என் நகைச்சுவை பதிவுகளை பத்தி....

செல்வன்,

ஹிஹி உண்மைதான். அவர் லட்சியப்படி அவர் வாழ்றார் என்பது உண்மைதான்.

dondu(#4800161) said...

"//பழைய முத்துவை பற்றி தெரிஞ்சுக்க அவரோட "சோ" வை பற்றிய பதிவை பாருங்க..இப்பவும் அவர் அப்படியேத்தான் இருக்கார்.மத்தவங்க விரும்பறபடி இல்ல அப்படின்கறது அவரோட குற்றம் இல்லைங்கறதுல உறுதியா இருக்கார்... //"

முத்துவோட நண்பர் டோண்டு ராகவனும் அப்படித்தான்.

நீங்கள் பாஸ் செய்ததுக்கு எல்லோருக்கும் ஸ்வீட்.

பாட்டு (அமிதாப் பச்சன் குரலில்): "பாஸ் ஆயிட்டான், முத்து பாஸ் ஆயிட்டான்"
எல்லோரும் எடுத்துகோ ஸ்வீட், காசு முத்து கொடுப்பான். :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ்வெளியை பார்த்தீங்களா?