Wednesday, July 05, 2006

அன்புமணியும் வேணுகோபாலும்-பாகம் 2

நான் முதல் பாகம் என்று போட்டது பலருக்கு அப்போது ஆச்சரியமாக இருந்திருக்கலாம்.ஆனால் நானும் இப்போதெல்லாம் பின்னால் நடப்பதை முன்னமே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.இன்று நடந்த உயர்மட்ட கமிட்டி
கூட்டத்தில் வேணுகோபாலை டிஸ்மிஸ் செய்து அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான மல்ஹோத்ரா இதை எதிர்த்துள்ளார்.இது எதிர்ப்பார்க்கக்கூடியதே.ஆச்சர்யம் இல்லை.பதினேழு பேர் அடங்கிய குழுவில் மூன்று பேர் மட்டும் இந்த முடிவை எதிர்த்துள்ளனர்.

கொஞ்சம் எச்சரித்து விட்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன்.(ஆமா, உன் நினைப்பா அங்கு முக்கியம் என்று யாரோ முனகுவது கேட்கிறது).ஆனால் வேணுகோபால் ரொம்ப ஆட்டம் போடுகிறார் என்று மந்திரி உள்பட மற்ற நிர்வாகிகள் நினைத்திருக்கிறார்கள்.எப்படியோ இந்த பிரச்சினை பிரதமர் தலையிட்டு ஒரு முகம் காக்கும் (face saving(?)) ஃபார்முலா கொண்டுவந்து வேணுகோபால் காப்பாற்றப்படலாம் என்பது என் எதிர்ப்பார்ப்பு. மாறாக ஆப்பும் வைக்கப்படலாம்.

மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் ஆரம்பி்த்து விட்டார்களாம்.இது எத்தனை நாள் என்று பார்க்கவேண்டும். என் கணக்கின்படி இந்த வேலைநிறுத்தம் பிசுபிசுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.உண்மை நிலவரம் தெரிய ஓரிரண்டு நாட்கள் ஆகலாம்.பின்னூட்டத்தில் அப்டேட் பார்க்கலாம்.

இங்கு மீண்டும் ஆங்கில மீடியாக்களில் ஒன்றான என்.டி.டி.வி சில்லறைத் தனம் வெளிப்பட்டது. மூன்று உறுப்பினர்கள் இந்த டிஸ்மிஸ் முடிவை ஏற்கவில்லை என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொன்னார்களே ஒழிய மீதம் பதினாலு பேர் இதை ஆதரித்தார்கள் என்பதை சொல்லவில்லை.

இந்த வேலைநிறுத்தத்திற்கும் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் அன்புமணிதான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் என்.டி.டி.வியில் கூறினார்கள்.அப்படியானால் இடஒதுக்கீட்டை எதிர்த்து இவர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது பாதிக்கப்பட்ட நோயாளிகள் பொறுப்பை யார் எடுத்துக்கொண்டது? உயிர்காக்கும் சேவை செய்யும் ஆட்கள் சுயநலவாதிகளாக மாறி வேலைநிறுத்தம் செய்வதும் இல்லாமல் நாக்கூசாமல் அதை நியாயப்படுத்துவதும் நடக்கிறது.அன்று நோயாளிகளின் அவல நிலையினை கண்டுக்கொள்ளாத மீடியா இன்று அவர்கள் அவல நிலையை கண்டு கண்ணீர் வடிக்கிறது. ஆனால் கொடுமை என்றால் இருமுறையும் வேலைநிறுத்தம் செய்வதும் அவர்கள்தான்.காரணமும் சுயநலமாக காரணம்தான்.

இதனுடன் தொடர்புடைய இன்னொரு செய்தி:சுப்ரீம் கோர்ட் ஒரு முக்கிய கருத்தை கூறியுள்ளது. அதாவது இடஒதுக்கீடு பிரச்சினைக்காக டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது அவர்கள் சம்பளத்தை கொடுக்காமல் இருந்தது தவறு என்றும் அரசாங்கம் நியாயமான முதலாளியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளது.ஏனோ தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது சுப்ரீம்கோர்ட் கூறிய கருத்துக்கள் ஞாபகம் வருகிறது.அன்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஆதரித்தவர்கள் இன்றும் ஆதரிப்பார்களா என்று தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

40 comments:

Anonymous said...

The govt gave an undertaking to SC that no action would be taken against the striking doctors.Then the govt wanted the strike to end and it was on knees as the Court put it.Did the Tamil Nadu give such an undertaking to the Court.
Andumani has acted like Jayalalitha, no show cause notice,
no inquiry, just dismissal.

நாகை சிவா said...

//கொஞ்சம் எச்சரித்து விட்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன்//
நானும் இதை தான் எதிர்பார்த்தேன்.

//இது எத்தனை நாள் என்று பார்க்கவேண்டும். என் கணக்கின்படி இந்த வேலைநிறுத்தம் பிசுபிசுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.//
மீடியாவுக்கு கொண்டாட்டம் தான்.

என்னை பொறுத்தவரை இது எல்லாம் தேவை இல்லாத பிரச்சனை.

நாகை சிவா said...

//நானும் இப்போதெல்லாம் பின்னால் நடப்பதை முன்னமே யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்//
நீங்க தான் இப்ப ஆத்திக திராவிடர் ஆயிட்டீங்கள...
கலைஞர் கனவு மாதிரி இருக்கு, நீங்க சொல்லுரதும்....

Sivabalan said...

// மூன்று உறுப்பினர்கள் இந்த டிஸ்மிஸ் முடிவை ஏற்கவில்லை என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொன்னார்களே ஒழிய மீதம் பதினாலு பேர் இதை ஆதரித்தார்கள் என்பதை சொல்லவில்லை. //

இதையேதான் நானும் கேட்கிறேன்.


எனக்கென்னமோ அன்புமணிக்கு விரிச்ச வலையில் அவரே போய் மாட்டிக்கொண்டார் என தோன்றுகிறது.

Anonymous said...

நீங்க வேற, வேணுகோபால் போட்ட ஆட்டத்துக்கு நீங்களோ நானோ இருந்திருந்தால் insubordination என்று கூறி அப்போதே டிஸ்மிஸ் செய்து இருப்பார்கள். இப்போது மன்மோகன் புண்ணியத்தால் கொஞ்சம் ஆறப் போட்டு செய்வதற்கே விடாமல் பூதாகரப் படுத்துகிறார்கள்.

ஆனானப்பட்ட சுப்ரீம் கோர்ட்டே என்ன சொல்லியிருக்கிறது பார்த்தீங்கல்ல? (இதுக்குதான் Resrvation in the Judiciary அவசியமாகிறது). பார்ப்போம் மன்மோகன் நீங்க வேற, வேணுகோபால் போட்ட ஆட்டத்துக்கு நீங்களோ நானோ இருந்திருந்தால் இன்ச் என்று கூறி அப்போதே டிஸ்மிஸ் செய்து இருப்பார்கள். இப்போது மன்மோகன் புண்ணியத்தால் கொஞ்சம் ஆறப் போட்டு செய்வதற்கே விடாமல் பூதாகரப் படுத்துகிறார்கள். ஆனானப்பட்ட சுப்ரீம் கோர்ட்டே என்ன சொல்லியிருக்கிறது பார்த்தீங்கல்ல? (இதுக்குதான் Reservation in Judiciary அவசியமாகிறது). பார்ப்போம் மன்மோகன் எப்படி டீல் பன்னுகிறார் என்று.

siva gnanamji(#18100882083107547329) said...

தலைவலி தனக்கு வந்தாதான் தெரியும்

பாலசந்தர் கணேசன். said...

முத்து ,

கோர்ட்டின் தீர்ப்பு எனபதும், கருத்து என்பதும் வேறு வேறு. டான்ஸி வழக்கில் ஜெயலலிதா பரிகாரம் செய்ய வேண்டும் என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். அதற்காக என்ன பரிகாரம் செய்தார் என்று ஜெயலலிதாவை கேட்க முடியாது. ஆனால் நிலத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். அதை செய்து தான் ஆக வேண்டும். இல்லா விட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடலாம். நீதிபதிகளின் தனிப்பட்ட ஆலோசனைகளை, கருத்துக்களை , தீர்ப்போடு ஒப்பிட முடியாது. ராஜ்குமார் கடத்த பட்ட நேரம், தடா கைதிகளை விடுவிப்பது பற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்த போது, தமிழக ,கர்நாடாக அரசுகளினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாவிட்டால், அவர்கள் ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும் என்று கோர்ட் கருத்து தெரிவித்தது உங்களுக்கு கண்டிப்பாக நினைவிருக்கும்.

Anonymous said...

all consipiracies created only by brahmins.

karuppu, kuzhali, start writing
don't stop !
in india what ever happens
even torrential rain in mumbai,
iyappan issue,
petrol hike, all, all because of **** brahmins.

VSK said...

எச்சிலைதனிலே எறியும் சோற்றுக்கு
பிச்சைக்காரர் கும்பல் ரோட்டிலே
இனச்சண்டை, பணச்சண்டை
மதச்சண்டை, சாதிச்சண்டை
எத்தனையோ சண்டை நாட்டிலே
பட்சி சாதி நீங்க -- இந்தப்
"பகுத்தறிவாளரைப்" பார்க்காதீங்க
பட்சமாய் இருங்க
பகிர்ந்துண்ணு வாழுங்க
பழக்கத்தை மாத்தாதீங்க

எங்கே பாடுங்க
கா...கா...கா"

நிர்வாகத்தில் அரசியல் தலையீடு என்பது
பொதுநலத்துக்கன்றி
சுயநலத்துக்கென
காமராஜர் காலத்துக்குப் பின் மாறியது...
இப்போது உச்சகட்டத்தில்
ஆணவப்பேய் தலை விரித்தாடுகிறது!

நாற்பது சீட்டுகளை.... ஓட்டுகளை
நம்பி அரசு செய்யும் சிங்கோ, சோனியாவோ
சுண்டு விரலைக் கூட அசைக்கப் போவதில்லை.

நாடு ஒரு நல்ல நிர்வாகியை இழக்கப் போவது நிச்சயம்!

அதனாலென்ன!
பாரதம் செத்துவிடாது!

இதுதானே, அன்றிலிருந்து இன்று வரை,
சாமிக்கும், சாத்தானுக்கும் நடக்கும் போட்டி!

"பேய்கள் அரசு செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்!"

"ஒவ்வொரு முறை தர்மம் அழியும் நேரத்தில்
நிச்சயம் நான் வருவேன்!"

வருவான்!

Pot"tea" kadai said...

வேணு என்ன தேசப்பிதாவா...அவனவன் அடிக்கற கூத்தைப் பாத்தாக்கா...தாங்கலடா சாமியோவ்...தேசப்பிதான்னு கூப்படற காந்தியையே இன்னமும் அவனவன் ரிவிட் அடிச்சிக்கினு இருக்கறான்...

ஒரு சிலர் ஆதாரம் தரக்கூடிய பதவியை பயன்படுத்தி அன்புமணி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

சுகாதார ஊழியர்களை அவர்கள் பணியை சரி வர செய்ய விடாதவர். தன் சொந்த நலனுக்காக/விருப்பு வெறுப்பிற்காக அரசாங்க கட்டிடத்தைப் பயன்படுத்தி வந்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தயவால் தலைவர் பதவியை அனுபவித்து வந்தவர். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பொழுதே வேணுவை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் இப்பிரச்சினையை ஒரு வருடத்திற்கு முன்னர் எழுப்பிய பொழுதும் வாஜ்பாயின் தலையீட்டினாலேயே வேணுவின் தலை தப்பியது.

காலம் கடந்த செயல் என்றாலும் அவசியம் தேவையான செயல். வேணுவை விட வேறு ஒரு சிறந்த தலைமை கிடைக்காதா என்ன?...அல்ல வேணு ஒருவர் தான் அறிவாய்ந்த மருத்துவரா?...

தங்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அரசாங்க சட்டத்திற்காக வேலை நிறுத்தம் செய்தனார் இந்த AIIMS ஏன் இன்னமும் வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்? வேலையை இராஜினாமா செய்து விட்டு அரசாங்கத்தை மிரட்டுவது தானே? அதை எப்படி செய்வார்கள். அரசாங்கத்தின் எலும்புத் துண்டு அவர்களுக்குத் தேவை. இன்று ஒரு உயிரை பலியாக்கிவிட்டு அன்புமணியின் மேல் பழியை போடும் வகையறாக்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

//நாடு ஒரு நல்ல நிர்வாகியை இழக்கப் போவது நிச்சயம்!//

அன்புமணியை சொல்கிறீரோ? அவர் இதற்கெல்லாம் அசர மாட்டார். AIIMS மருத்துவர்கள் வேண்டுமானால் கூண்டோடு அழியப் போவது நிச்சயம்.

இந்தக் கூத்தைப் பார்க்கும் பொழுது அரசின் 69% இட ஒதுக்கீட்டின் அவசியம் புரிகின்றது.

இந்தியாவில் வேணுவை விட சிறப்பான நிர்வாகிகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.

//"ஒவ்வொரு முறை தர்மம் அழியும் நேரத்தில்
நிச்சயம் நான் வருவேன்!"

வருவான்!//

விஜய்காந்த் பிரதமர் பதவிக்கும் போட்டியிடப் போகிறாரா என்ன? இன்னும் 2 வருடங்கள் பொறுமையாக இருக்கவும். :-))

Anonymous said...

//மூன்று உறுப்பினர்கள் இந்த டிஸ்மிஸ் முடிவை ஏற்கவில்லை என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொன்னார்களே ஒழிய மீதம் பதினாலு பேர் இதை ஆதரித்தார்கள் என்பதை சொல்லவில்லை.//

திராவிட ராஸ்கோலா இருந்து கொண்டு 3 தான் பாரதத்தில் பெரியது என்று தெரியாமல் இருக்கேளே.

நன்னா யோசியுங்கோ.

- பெயரா முக்கியம்

அருண்மொழி said...

வேணுகோபால் தகுதி, திறமை உள்ள ஒரு சாமி. அந்த சாமிக்கு சட்ட விதிகளுக்கு அப்பால் பதவி உயர்வும்/நீடிப்பும் வேறு சில சாமிகளால் "வரமாக" அளிக்கப்படும். இதையெல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் ஒரு சாத்தான்.

வேணுகோபால் தகுதி, திறமை உள்ள ஒரு சாமி. அந்த சாமி AIIMSல் போராட்டம் நடத்திய 3rd & 4th grade சாத்தான்களை என்ன செய்தது?. இதையெல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் ஒரு சாத்தான்.

வேணுகோபால் தகுதி, திறமை உள்ள ஒரு சாமி. அந்த சாமி இரண்டாம் விடுதலைப்போரில் பங்காற்றிவரும் சில சாமிகளுக்கு தன் பதவி அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா உதவியும் செய்தது. இதையெல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் ஒரு சாத்தான்.

வேணுகோபால் தகுதி, திறமை உள்ள ஒரு சாமி. அந்த சாமி தனக்கு வேண்டிய வேறு சில சாமிகளுக்கு பதவி உயர்வும், வேண்டாத சாத்தான்களுக்கு எதுவும் அளிக்காமலும் இருக்கும். இதையெல்லாம் கேள்வி கேட்டால் நீங்கள் ஒரு சாத்தான்.

சாத்தான்களே ஒன்று சேருங்கள். இந்த சாமிகளை வேலையை விட்டு அல்ல, நமது பாரதத்தை விட்டே விரட்டுவோம்.

குழலி / Kuzhali said...

நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, தமிழக அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளத்திலும் ஓய்வூதியத்திலும் கைவைத்ததை எதிர்த்து போராடியதற்கு பணிநீக்கம் செய்ததற்கும் அதற்கு சம்பளம் கொடுக்காமல்(அந்த போராட்ட நாட்களை ஊழியர்களின் விடுப்பு நாளாக எடுத்துகொண்டது) இருந்த போதும் வழக்கின் போதும் அரசாங்கத்தை ஆதரித்து ஏகப்பட்ட வியாக்கியானம் பேசிய நீதிமன்றங்கள் தற்போது அவர்களின் வேலைக்கும் தொழிலுக்கும் எந்தவித தொடர்புமில்லாத ஒரு விடயத்தில் ஆதிக்க சாதிவெறி ஏறி நடத்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என உறுதி மொழியளித்த பிறகே நீதிமன்றம் மருத்துவர்களை வேலைக்கு செல்ல பணிக்கின்றது, தற்போது வேலை நிறுத்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படாததற்கு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டுமென்றும், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என கூறிவிட்டு சம்பளம் தராமல் விட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றது, சம்பளம் தராதது நடவடிக்க அல்ல, வேலை செய்யாததற்கு சம்பளம் தரவில்லை, நடவடிக்கை என்றால் மேல் விசாரனை, பணி இடை நீக்கம், பணி நீக்கம் இவைகளே தவிர நிச்சயமாக வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் தராதது நடவடிக்கை அல்ல....

நீதிமன்றங்கள் ஆளுக்கொரு(சாதிக்கொரு) நீதியோடு செயல்படுகின்றன, இதை எழுதியதால் ரவிஸ்ரீனிவாஸ் போன்றோர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள், நீதிமன்றம் மதிப்போடு நடக்கவில்லை என்பதே நிதர்சனம்.

அருண்மொழி said...

வழிப்போக்கரே,

//ஆனானப்பட்ட சுப்ரீம் கோர்ட்டே என்ன சொல்லியிருக்கிறது பார்த்தீங்கல்ல? (இதுக்குதான் Resrvation in the Judiciary அவசியமாகிறது).//

தனக்கு ஊதியம், படி போதவில்லை என்று போராடினால் அது சட்ட விரோதம். ஆனால் இரண்டாம் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தியாகிகள் அப்படியா?.

ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று தெரியாமலா சொன்னார்கள்.

Anonymous said...

RSP leader and Rajya Sabha MP Abani Roy was more forthcoming and harsh when he alleged that Ramadoss was all out to promote his own parivar(clan). ''It is all the more unfortunate that while the Prime Minister is so indifferent and bearing with such a minister, who is so bluntly promoting his family's interests. He did the same while appointing the Chairman of the Medical Examination Board and while setting up an AIIMS-like institute in Pondicherry,'' he said

http://www.ibnlive.com/news/left-condemns-venugopals-sacking/14689-3.html

Anonymous said...

NEW DELHI: A day before his 64th birthday, the director of India's premier medical institute AIIMS, Dr P Venugopal, was handed an unusual gift by health minister Dr A Ramadoss — a termination letter. This marked the end of a 47-year-long relationship between the renowned cardiac surgeon and the institute.

It also marked the beginning of another angry agitation as doctors went on a flash strike at AIIMS in protest, and there are indications that it might spread to other medical colleges by Thursday.

The demand for Venugopal's reinstatement and requests for the Prime Minister's intervention poured in from various medical associations.

The drama leading to Venugopal's sack began on Wednesday morning when the AIIMS governing body met. Venugopal was member-secretary body and he too had come for the meeting.

Ramadoss, however, asked him to wait outside — which he did for over an hour — while his fate was decided. Eventually, he was called in and handed out his termination letter.

It wasn't a unanimous decision, though. At least three members — Delhi University's vice chancellor Deepak Pental, BJP leader V K Malhotra and Central Drug Research Institute chief S S Agarwal — opposed Venugopal's removal, while some of the 15 members who attended the fateful meeting admitted later that although they hadn't liked the way Ramadoss had rammed through the resolution against Venugopal, they had not spoken up.

Anyway, the deed was done. The will of Ramadoss, who has had a running feud with the AIIMS director, prevailed. Venugopal was held 'guilty' of violating rule 9 of the conduct rules that prohibits a government servant from criticising the government in the media.

Venugopal had, indeed, accused the ministry on June 15 of "continuous meddling with the day-to-day running of the institute" after it had unilaterally removed some key aides of Venugopal from their post.

Anonymous said...

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தயவால் தலைவர் பதவியை அனுபவித்து வந்தவர்.

If so he would have become a
Director in 1998.In fact he refused to become a director
when the Post was offered to him.
Only years later he accepted it
and that was in 2003.
--------------------------------
http://www.ibnlive.com/news/patient-refused-treatment-by-aiims-docs-dies/14719-3-2.html
Years ago, Dr Venugopal became the first doctor in India to conduct a heart transplant.

The patients who benefited from it still sing his praises.


Devi Ram is one of them. His heart muscles were constricted and his blood pressure would never be more than 70.


But that was till Dr Venugopal came to his rescue and Devi Ram became the first patient in India to undergo heart transplant.


"I went from one hospital to the other with no hope till I came to AIIMS. Dr Venugopal told me it was a tough case yet he helped me survive,” Devi Ram says.

The same technology later came to Preeti Uthale's rescue. Her heart had started malfunctioning after a viral infection.





After she underwent a heart transplant conducted by Dr Venugopal, she got a fresh lease of life.


She has now registered herself in an organ bank to support heart patients in any way she can.


"He gave me my life. Without him, I would not have been standing here speaking to you. May be I wouldn’t even have survived,” she says.
----------------------------------
What did this dad-son duo (Ramadoss
and Anbumani) do to medical profession or medical science.What are their reputations as doctors.

Anonymous said...

Anonymous,

You were crowing about "Devi Ram". Then what about "sarvesh kumar" who lost his life yesterday because of the strike.

Anonymous said...

//If so he would have become a
Director in 1998.In fact he refused to become a director
when the Post was offered to him.
Only years later he accepted it
and that was in 2003.//

Why did he accepted the post in 2003?

Unknown said...

அட நம்ம குவாட்டர் கோவிந்தன் சொன்னது உண்மைதான் அனானியா இங்கிலீசு பின்னூட்டம் எத்தன வருது பாருங்க
http://paarima.blogspot.com/2006/06/blog-post_27.html

அருண்மொழி said...

நம்ம தகுதி,திறமை சாமி கோர்ட் கதவை தட்டுகிறார் (அப்புறம் ஏன் சாமி வேலய உட்டு போகப்போறேன்னு பிலிம் காட்டுனீங்க).

அது என்னா சொல்லப்போது? மரம்வெட்டி செய்தது தப்பு, உடனே சாமிய வேலைக்கு திருப்பி எடுன்னு சொல்லும். Thats all. Matter over.

Anonymous said...

Quarter Govindan's Golden words !!

பா.ம.க வ ஆதரிச்சு இல்ல திமுகவ ஆதரிச்சு இல்ல திராவிடத்த ஆதரிச்சு எழுதுனா நிறயா அனானிமசூ பின்னூட்டம் வரும். பாதி இங்லீசுலேயே இருக்கும். குறிப்பா இடஒதிக்கீட்ட ஆதரிச்சு எழுதாத, எல்லாரும் வெளிநாட்டு அனானிமசு உள்ளூரு சோமாதிரி ஆட்கள் தொடர்ந்து பின்னூட்டம் போடுவாங்க ஆனா எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்க கத்துக்கோ.

Anonymous said...

Quarter Govindan's Golden words

பா.ம.க வ ஆதரிச்சு இல்ல திமுகவ ஆதரிச்சு இல்ல திராவிடத்த ஆதரிச்சு எழுதுனா நிறயா அனானிமசூ பின்னூட்டம் வரும். பாதி இங்லீசுலேயே இருக்கும். குறிப்பா இடஒதிக்கீட்ட ஆதரிச்சு எழுதாத, எல்லாரும் வெளிநாட்டு அனானிமசு உள்ளூரு சோமாதிரி ஆட்கள் தொடர்ந்து பின்னூட்டம் போடுவாங்க ஆனா எல்லா பால்லயும் சிக்ஸர் அடிக்க கத்துக்கோ.

Pot"tea" kadai said...

இந்தாளும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தானாம்.
திறமை இருக்கும் வேணு என்கிற மலிவான அரசியல் செய்யாமல் டாக்டர் செரியனை போல சேவை செய்யலாமே!

அந்த முடியாது. காரணம் அரசாங்க செலவில் சொகுசு வாழ்க்கையும் மேலும் பல சோம்பேறி அரசாங்கத்தின் பணத்தில் வாழவும் வைக்க முடியாதே!

Unknown said...

அன்புமணிகளை குறிவைக்கும் ஆரியர்களுக்கு எதிராக எனது பதிவு இங்கே
http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_06.html

Muthu said...

//The govt gave an undertaking to SC that no action would be taken against the striking doctors.Then the govt wanted the strike //

அனானி நல்ல ஜோக் இது...நடவடிக்கை என்றால் சம்பளம் இல்லை சாமி..விசாரணை, சஸ்பெண்ட்..அதுதான்...

இது வேலைக்கு சம்பளம் சமாச்சாரம்..படிங்க நல்லா

Muthu said...

நாகை சிவா,

உண்மைதான் நீங்க சொல்வது..வேணுகோபால் ரொம்ப ஆடியிருப்பார் என்று நினைக்கிறேன்.

மீடியாவுக்கு கொண்டாட்டம் :))

உண்மை உண்மை

Muthu said...

//நீங்க தான் இப்ப ஆத்திக திராவிடர் ஆயிட்டீங்கள...
கலைஞர் கனவு மாதிரி இருக்கு, நீங்க சொல்லுரதும்//

ஹிஹி தமாசு தமாசு...

Muthu said...

சிவபாலன்,

நீங்கள் கூறுவது உண்மை. புனித பிம்பங்கள் பாணியே இதுதான். சம்பந்தம் இல்லாத பிரச்சினையை கிளப்புவார்கள்.சாதி அபிமானத்தை மனதோடு வைத்துகொண்டிருந்தால் இந்த பிரச்சினை இல்லை.அதை வேலை செய்யும் இடத்திலும் காண்பித்தார்.அதுதான் சிக்கல்.

Muthu said...

வழிப்போக்கன்,

நன்றி. ..பார்ப்போம்..மன்மோகன்சிங்குக்கு எல்லா பக்கமும் இடி.

சிவாஜீ,

எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள் என்று புரியவில்லை.இருந்தாலும் தத்துவம் தத்துவம்தான்.நன்றி.


பாலு,

நீங்கள் சொன்னது உண்மைதான்.இதைப்பற்றி பேசலாம்.எழுத முடியாது.

Muthu said...

எஸ்.கே,

சாத்தான் யாரு, சாமி யாருங்கறதுதான் பிரச்சினை.

உங்க கவிதைகள்(?) நல்லா இருக்கு.ஆனா அது யாருக்கு பொறுந்தும்கறதுதான் பிரச்சினைக்குரியது :))

டிபிஆர்.ஜோசப் said...

//நாடு ஒரு நல்ல நிர்வாகியை இழக்கப் போவது நிச்சயம்!//

அன்புமணியை சொல்கிறீரோ? அவர் இதற்கெல்லாம் அசர மாட்டார். //

நீங்க வேறங்க.. (ஒங்க பேர எழுதறதுக்குள்ள விரல் சுளுக்கிரும்.. அதனால விட்டுட்டேன்..கோச்சிக்காதீங்க 'கடை')அவர் வேணுகோபாலை சொல்றார்..

எல்லாத்தையும் சாதி சாயம் பூசி பாக்கற ஆளுங்கள கண்டதும் சுடணும்னு ஒரு ஆர்டர் போட்டா என்னன்னு தோனுது.. கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப்பட்டுட்டேனோ.. இந்த NDTV நியூச கேட்டதும் அப்படித்தான் தோனுச்சி..

முத்துகுமரன் said...

//சாதி சாயம் பூசி //

நான் இதை வழிமொழிகிறேன்.:-)

பூசிப்பாக்குறவனுக்கே இதுனா பூசியவனை என்ன பண்ணலாமுனு சொல்லங்களேன் ஜோசப் சார்

Anonymous said...

இது வேலைக்கு சம்பளம் சமாச்சாரம்..படிங்க நல்லா

You read the news first.Try to
understand the questions posed
by the Judges.When the government
gives an undertaking before the
Court they have to abide by that.
If the government had the guts it should have announced at that time
that no work no pay principle would
be followed.The government is in
soup because it is learnt that a written undertaken was given on behalf of the government.That said
nothing about this no work no pay
concept.You cannot fool all the
people all the time.Dravida Tamils
may be clever by half, but not everyone is.

Muthu said...

one anonymous comment has been moderated.since it is a allegation i want the know the name of the person who has posted that....

this the basic concept of my criticism about our society.. pushing personal agenda in the name is decency is highly condemnable

also i would like to tell i have moderated several comments as per my judgement before posting

இங்கு பிரச்சினை சென்சிட்டிவ் ஆனது. மரம்வெட்டி என்று திட்டுவது எப்படி சாதாரண வார்த்தை ஆகியது.அதற்காக யாராவது வருத்தப்டுகிறார்களா?






thank you

Muthu said...

//இது வேலைக்கு சம்பளம் சமாச்சாரம்..படிங்க நல்லா //

இதில் வரட்டு வாதம் செய்ய என்ன இருக்கு? தெளிவாக இருக்கிறது.அவரவர் மனசாட்சி விட்ட வழிதான் அய்யா

Anonymous said...

மனு நீதி 43234:
பிற்படுத்தப்பட்டோர் சொந்த வேலையில் pfக்காக
போராடினால் கூண்டோடு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்.

பெரிய குலத்தவர்கள் தங்கள் வேலைக்கு சம்மந்தம்
இல்லாத விஷயத்துக்கு போராடினாலும் சம்பளம்
அளிக்க வேண்டும்.

வாழ்க இந்து தர்மம்.

அருண்மொழி said...

உயிர்களை காப்பதை மட்டுமே செய்து வந்த தகுதி,திறமை உள்ள சாமி இப்படி ஒரு வழக்கை போட்டு இருக்கிறது.

http://www.hindu.com/2006/07/07/stories
/2006070719891500.htm

சாத்தான் செய்தால் personal vendetta (அ) anti-reservation போராட்டத்தின் விளைவு என்பர். இந்த சாமி செய்ததற்கு சாபம் விடும் (ஆ)சாமிகள் என்ன சொல்ல போகின்றன?.

Pot"tea" kadai said...

என்ன கொடுமை சரவணன் இது...

Babble நீங்கள் சொல்வது TJ செரியன். மாடியில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து போனார்.

நான் இங்கே குறிப்பிட்டது, CM செரியன் போன வாரம் கூட புதுவைக்கு வருகை தந்ததாக அறிந்தேன்.

இரு செரியன் களும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் தான்.

கூகுல் பண்ணும் பொழுது கொஞ்சம் உஷாரா பண்ணவும்...:-))

Muthu said...

கடைசி செய்தி:

டெல்லி உச்சநீதிமன்றம் வேணுகோபால் நீக்கத்திற்கு இடைக்கால தடை.

சந்தோஷமடைந்த வேணுகோபால் மீண்டும் பதவியேற்றவுடன் எய்ம்சின் தனித்துவத்தை நிலைநாட்ட பாடுபடுவேன் என்றார்.

அன்புமணி அரசு மேல் நடவடிக்கை எடுக்கும் என்றார்.