Friday, July 28, 2006

மு.க -1

எழுத்தாளர் : ரஜினி ராம்கி

பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்

இங்கே கிடைக்கும்

நண்பர் ராம்கியின் இந்த புத்தகத்தை கடந்த வாரம் பெற்றேன்.ஒரே மூச்சில் படித்தும் ஆகிவிட்டது. கூடவே இதற்குமுன் இதே ஆசிரியர் எழுதிய இன்னொரு புத்தகமான ரஜினி சப்தமா சகாப்தமா என்ற புத்தகத் தையும் பெற்றதினால் இரண்டையும் படித்துவிட்டு அதன்மீதான நம் கருத்துக்களை எழுதலாம் என்று எண்ணி இரண்டையும் இந்த வாரத்தில் படித்து முடித்தேன்.

ரஜினி ராம்கியின் ரஜினி மீதான பற்று நாம் அறிந்தது தான். ரஜினிகாந்தைப் பற்றி ஒரு விமர்சனம் எங்காவது இருந்தால் கண்டிப்பாக அங்கு ராம்கியின் ஒரு பின்னூட்டம் கண்டிப்பாக இருக்கும்.சில பின்னூட்டங்கள் காட்டமாக.சில பின்னூட்டங்கள் விளக்கம் கேட்கும் தொனியில்.ஒரு ரசிகராகத்தான் அவர் ரஜினியை அணுகுகிறார் என்பது தெளிவு.அவருடைய முதல் புத்தகத்தின் பலவீனம் என்று இந்த விஷயத்தையே குறிப்பிடலாம்.

ரஜினிகாந்தின் செயல்பாடுகளை (முக்கியமாக அரசியல் முடிவுகளில் அவர் எடுத்த மதில்மேல் நிலைப்பாடுகளை) நியாயப்படுத்தும் முயற்சி பல தளங்களில் வெளிப்படுகிறது. ரஜினிகாந்தின் மீதான பல கடுமையான விமர்சனங்களை இந்த புத்தகம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. இதைப்பற்றி விளக்கமாக பிறகு பார்ப்போம்.

ஆனால் மு.க வைப்பற்றி ராம்கி எழுதும்போது இந்த தடுமாற்றங்கள் எதுவுமே இல்லாமல் எழுதியுள்ளார்.ரஜினி பற்றியான புத்தகத்தை போல் இல்லாமல் இந்த புத்தகத்தில் ஆசிரியர் கருத்தாக நிறைய விமர்சனங்கள் இல்லை. ஒரு அமைதியான ஆற்றுநீர் ஓடுவது போன்ற இயல்பான நடையில் சுவாரசியமாக கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். காலவரிசையும் தெளிவாக இருக்கிறது.

கடும் உழைப்பை செலுத்தினால்தான் இந்த மாதிரியான ஒரு வரலாற்றினை எழுத முடியும்.கலைஞரின் வரலாறு என்பது தமிழகத்தின் அறுபதாண்டு கால வாழ்க்கை வரலாறு என்று ராம்கி கூறியுள்ளது மிகவும் சரி என்றே தோன்றுகிறது.கலைஞரின் வரலாறு என்பது தமிழகத்தில் திராவிடத்தின் வரலாறு.திராவிடம் வளர்ந்த வரலாறு. திராவிடம் நீர்த்த வரலாறும் அதுவே.

மு.கவை பற்றி எழுதினால் இரண்டு விதமாக விமர்சனம் வரும்.ஒன்று ஜால்ரா அடிக்கிறாங்க என்பது.இன்னொன்று அம்மாகிட்ட பெட்டி வாங்கிட்டு தாக்கி எழுதறாங்க என்று.இதை இரண்டையும் தாண்டி விருப்பு வெறுப்பின்றி எழுதப்பட்டது என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சரி என்றே தோன்றுகிறது. எந்த விதமான கடுமையான விமர்சனங்களும் இல்லாமல் புகழாரங்களும் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்த நூல் இளைய தலைமுறை யினரிடம் கலைஞரை கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல ஆவணம் எனலாம்.

வெறும் வாழ்க்கை வரலாறு அல்ல ஸ்கேன் ரிப்போர்ட் என்று எடுத்துக் கொண்டதினால் கலைஞர் கொள்கை என்று கூறிக்கொள்ளும் சமாச்சாரங்களை விளக்க ஆசிரியர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வில்லை.செய்திகளை மட்டுமே சொல்லிசெல்லும் உணர்வு பல இடங்களில் தென்படுகிறது.கலைஞரின் வெற்றியின் ரகசியம், தமிழ் மக்களின் உளவியல் ஆகிய விஷயங்களைப்பற்றி ஆசிரியர் கூற்றாக சில விஷயங்களை எழுதியிருக்கலாம்.

(தொடரும்)

7 comments:

Sivabalan said...

முத்து,

திரு.ரஜினி.ராம்கி எழுதிய "மு..க" பத்த்கத்தைப் பற்றி ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிர்கள்..

நிச்சயம் படிக்க வேண்டும்..

அடுத்த பதிவையும் போடுங்கள். படித்துவிடுவோம்.

நாமக்கல் சிபி said...

ஐயா! நான் படிச்சிட்டு எழுதலாம்ணு இருந்தேன்! நீங்களும் எழுதி விட்டீர்களா?

VSK said...

//கலைஞரின் வரலாறு என்பது தமிழகத்தில் திராவிடத்தின் வரலாறு.திராவிடம் வளர்ந்த வரலாறு. திராவிடம் நீர்த்த வரலாறும் அதுவே.//

மிகவும் உண்மையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

//கலைஞர் கொள்கை என்று கூறிக்கொள்ளும் சமாச்சாரங்களை விளக்க ஆசிரியர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வில்லை.//

அவரோட கொள்கை என்னவென நீங்களாவது ஒரு பதிவு போடுங்களேன்.

நல்ல விமரிசனம்.

அடுத்ததையும் படிக்க ஆவலாயுள்ளேன்.

Muthu said...

2nd and final part will be published today night/tomorrow morning

Darren said...

///மு.கவை பற்றி எழுதினால் இரண்டு விதமாக விமர்சனம் வரும்.ஒன்று ஜால்ரா அடிக்கிறாங்க என்பது.இன்னொன்று அம்மாகிட்ட பெட்டி வாங்கிட்டு தாக்கி எழுதறாங்க/////

இதை நீங்க சொல்லாமல் இருந்திருந்தால் பெங்களுரிலிருந்து ஒரு அறிவுபிம்பம் வந்துசொல்லியிருக்கும்...

அட போங்க.... அவருக்கு உங்கள் பதிவில் comment போடும் வாய்ப்பை கெடுத்துவிட்டீர்கள்...

தமிழ்நாடு தமிழன்(பிறப்பால்) ஆட்சியில் இருந்த போதேல்லாம் முன்னேறியது என்பது வரலாற்று உண்மை... மறுப்பவர்கள் மாறப்போவது இல்லை.

PRABHU RAJADURAI said...

“இவை போன்ற செய்திகளெல்லாம் மீடியாவில் புரெஜக்ட் செய்யப்படுவது போல எம்.ஜி.ஆர் Invincible அல்ல என்பதையே உணர்த்துகிறது.”

எனது கணிப்பில் இது உண்மைதான். எம்ஜிஆர் மக்கள் ஆதரவு பெருமளவில் பெற்ற தலைவர் என்பதில் சந்தேகமில்லை. ஆளும் கட்சியினை எதிர்த்து திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஜெயித்தது அவரது சாதனையே. பின்னர் நடந்த பொதுத்தேர்தலில் கடந்த திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு உள்ள ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள எம்ஜிஆர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஆனால் பின்னர் ஜனதா ஆட்சி கவிழ்ந்து நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி பெறுமளவில் வென்று அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் ஏறக்குறைய அரசியலுக்கே முழுக்கு போட முடிவெடுத்த நேரம் ஆட்சிக்கலைப்பின் அனுதாபமும், காங்கிரஸ் திமுகவும் ஒருவரையொருவர் காலை வாரி விட்டதும் மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தார். அதற்கு பின்னர் தமிழகமெங்கும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் இனி அவ்வளவுதான் என்று கருதப்பட்ட திமுக தமிழகம் முழுவது பெருவாரியாக வெற்றி பெற்று பல நகராட்சிகளை கைப்பற்றியது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக எம்ஜிஆர் நோயில் விழ, இந்திரா சாக கருணாநிதியின் தமிழக மக்களை கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஆக தமிழகம் தழுவி நடத்தப்பட்ட உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மக்கள் எம்ஜிஆர் காலத்திலேயே மாற்றி மாற்றித்தான் ஓட்டு போட்டிருக்கிறார்கள். திமுகவின் பிரச்னை அது எப்போதுமே ‘wrong side at the right time’

மேலும் கூறப்போனால் அதிமுகவுக்கு சாதகமாக பல சமயங்களில் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களே காரணமாக இருந்திருக்கின்றன! எம்ஜிஆர் ஆட்சி கலைப்பு, எம்ஜிஆர் நோவு, இந்திரா சாவு, ராஜீவ் மரணம், கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு என!

எனவே திமுகவின் செல்வாக்கு எம்ஜிஆரின் செல்வாக்குக்கு சற்றும் குறைந்ததல்ல. கூறப்போனால், ஜெயலலிதா தேர்தலில் தோற்றாலும் திமுகவின் கோட்டையான சென்னையை சமீபத்திய தேர்தலில் உடைக்க முடிந்தது. எம்ஜிஆரால் திமுக மோசமாக தோற்ற பொழுது கூட அதனை சாதிக்க முடியவில்லை. ஜெயலலிதா ஆளும் கட்சியாக இருக்கையில் இடைத்தேர்தலில் தோற்றதில்லை. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நாலு தொகுதிகளூக்கு நடைபெற்ற ஒரு இடைத்தேர்தலில் திமுக இரண்டில் ஜெயித்து தான் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தி என்று நிரூபித்து தனது தொண்டர்களுக்கு புது நம்பிக்கையினை அளித்தது. அந்த இடைத்தேர்தல் வெற்றிக்கு கட்சியில் புதிதாக இணைந்த டி.ராஜேந்தரின் அதிரடி பிரச்சாரம் ஒரு காரணம்.

எம்ஜிஆரின் பெரிய வோட்டு வங்கி அடித்தட்டு தலித் மக்கள். இன்று தலித்துகள் இந்தியா முழுவதும் தங்களது அரசியல் வலிமையினை புரிந்து கொண்டுள்ளார்கள். தமிழகத்தில் அவர்கள் தலித் தலைவர்களான திருமா, கிருஷ்ணசாமி போன்றவர்களில் பின் சென்ற நிலையில் எம்ஜிஆர் இன்றுள்ள நிலையில் அதே அளவு வலிமையான மக்கள் தலைவராக இருப்பாரா என்பது சந்தேகமே!

எது எவ்வாறு இருப்பினும், வேறு பல காரணங்களைக் கூற முடியும் எனினும், கருணாநிதி தனது நீடித்த ஆயுளின் மூலமும், தமிழக வரலாற்றில் எம்ஜிஆரை கூட வைத்து ஒப்பிட இயலாத ஒரு இடத்தினை பிடித்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

Muthu said...

நன்றி ராஜதுரை அவர்களே