Sunday, February 19, 2006

கம்யூனிஸ்ட் கமலஹாசனும் வலதுசாரி நண்பர்களும்

கமலை ரசிக்கிறார்களா அல்லது படத்தை ரசிக்கிறார்களா என்ற குழப்பம் எனக்கு எப்போதும் உண்டு. ஏற்கனவே ஞாயிற்றுகிழமை என்றும் பார்க்காமல் அன்பே சிவம் படம் பற்றி இதுவரை தருமி, பினாத்தல் சுரேஷ், டோண்டு ராகவன், ஐகாரஸ் பிரகாஷ், அருணா, வசந்தன் ஆகியோர் எழுதி உள்ளனர்.
இவர்கள் அனைவரின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதை விட தனியாக ஒரு பதிவு போட்டுவிடலாம் என்று எண்ணி போட்டதே இப்பதிவு.


நான் தமிழ்சினிமாவில் சரக்கு உள்ளவர்களாக மதிப்பது மிகச்சிலரைத்தான். நடிகர் கமலஹாசன், நடிகர் நாசர்,இயக்குநர் பாலா,இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

சனிக்கிழமை ஆபிஸில் இரவு எட்டுமணி வரை ஹெல்ப் டெஸ்க்கில் ஓட்டும் நான் சிறப்பு அனுமதி பெற்று ஐந்து மணிக்கு வீட்டுக்கு விரைந்தேன். இத்தனைக்கும் இந்த படத்தை நான் பார்ப்பது இரண்டாவது முறை.

கமலின் ரசிகர்களில் இருவகை உண்டு. கமலையே ரசிப்பவர்கள் மற்றும் அவர் படங்களை ரசிப்பவர்கள்.கமல் படம் என்றாலே நன்றாகத்தான் இருக்கும் என்ற அடிப்படையில் அவரின் அனைத்து படங்களையும் புரிகிறதோ இல்லையோ புகழ்ந்து வைப்பது ஒரு டெக்னிக்.

அவரின் குணா எனக்கு பிடிபடவில்லை.அவரின் ஹேராம் மற்றும் கடவுள் பாதி மிருகம் பாதி (படம் பெயர் நினைவில்லை) படம் எனக்கு பிடிக்கவில்லை.அந்த சமயத்தில் என்னுடைய முதிர்ச்சி லெவல் குறைவாக இருந்திருக்கலாம்.குருதிபுனல்,மகாநதி எனக்கு பிடித்திருந்தது.

வழக்கமான படங்களில் இருந்து இது எப்படி மாறி இருக்கிறது என்று பினாத்தலார் பல பாயிண்ட்டுக்களை அடுக்கியிருந்தார்.அருமையான அனைத்து வசனங்களையும் அவரே சுட்டிக்காட்டி விட்டார்.அத்துடன் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கமலை காதலித்து பிரிந்த கிரண் மீண்டும் மாதவனை காதலிப்பது.. இரண்டாவது காதல் வாழ்க்கையில் உண்டு..அது மிக இயற்கையானது என்று காட்டியிருப்பது...

சிறுவன் இறந்தப்பின் அந்த பிணத்தை அவன் வீட்டிற்கு கொண்டு வரும்போது அவன் பெற்றோர் காலில் விழுந்து நன்றி சொல்லி கதறி அழும் காட்சி......(இது நிஜ வாழ்வில் என் நண்பன் ஒருவன் விபத்தில் இறந்தபோது நான் அனுபவித்த நிஜம்.மனதை உலுக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது)


காசோலையை மாதவன் தொழிற்சங்க அலுவலகத்தில் தரும்போது அவருக்கு நன்றி சொல்லும் சில வயதானவர்கள்......

இதுப்போன்று பல காட்சிகள்.மேலும் கமல் ஏற்றிருப்பது ஏற்றிருப்பது கம்யூனிஸ்ட் பாத்திரம்.

கடவுள் என்பது என்ன?

ஏன் நல்லவர்கள் இந்த உலகத்தில் பாதிக்கப்படுகிறார்கள்?

ஏன் கொடியவர்கள் என்று நாம் நினைக்கிற ஆட்கள் கடவுளால் தண்டிக்கப்படாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள்?

இதுப்போன்ற பல விஷயங்களில் யதார்த்தமான (குறைந்தபட்சம் நான் சரி என்று நினைக்கிற கருத்துக்களை) அணுகுமுறையை காட்டியுள்ளார்.


கமல் மற்றும் மாதவன் நடிப்பு அருமை.கூடவே நாசர்.இந்த ஆள் நடிப்பை பார்க்கும்போதெல்லாம் நான் நினைப்பது இதுதான்.இந்த மனுஷன் சில காட்சிகளில் கமலையே தூக்கி சாப்பிடறான்யா.(மாயத்தேவர் கதாபாத்திரத்தை நினைத்துப்பாருங்கள்)

கடைசியில் வழக்கம்போல் நம்முடைய குடைசல் குண்டக்க மண்டக்க கேள்விகள்.வலதுசாரி நண்பர்களும் இந்த இடதுசாரி படத்தை ரசிப்பது எதனால்?

15 comments:

தருமி said...

குணா ரொம்ப பிடித்த படம். ஒரு நீண்ட கட்டுரையாக (கமலின் முகவரி தெரியாத காரணத்தால்) ஆ.வி.க்கு - இதுமாதிரியான படங்கள் தோற்கக்கூடாதென்ற ஆதங்கத்தில் அப்போது எழுதினேன்.
ஒரு சிறு பதிவாவது அந்த படம் பற்றி எழுத நினைத்துக் கொண்டேஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

யோவ்,
நானெங்கே ஞாயிற்றுக்கிழமை பதிவு போட்டேன்?
நான் பதிவு போட்டது பதினைந்து மாதங்களுக்கு முன்பு.
நீங்கள் இப்போது (தான்) ஆடுகிறீர்கள்:-)

நீங்கள் சொன்னது போல எனது நடிகர்கள் பட்டியலில் பிரகாஷ்ராஜ் என்ற நடிகனும் வருவார்.

வசந்தன்(Vasanthan) said...

பிறகு,
வலதுசாரி நண்பர்கள், இடதுசாரிப்படம் என்பதெல்லாம் என்னவென்று எனக்குப்புரியவில்லை. இது படத்தின்மீதும் நண்பர்கள்மீதும் சுமத்தும் அதீத சுமை.
அதுசரி, நான் எந்த சாரி? (கவனமாய் வாசிக்கவும்.சாதியைக் கேட்கவில்லை)

Muthu said...

வசந்தன்,

நான் இன்று தான் பார்த்ததால் அப்படி வந்துவி்ட்டது. அப்புறம் அந்த வலதுசாரி இடதுசாரி கமெண்ட் குண்டக்க குடைசல் கேள்வி என்று சொல்லியுள்ளென். ஆகவே இது அன்பே சிவத்தை போற்றும் பதிவு மட்டுமே..

எந்த சாரி என்பதை தனியாக பேசிக்கொள்ளலாம்.

கொழுவி said...

நீங்கள் எந்த சாரி?
வலது சாரியா?
இடது சாரியா?

அறிய ஆவலாயுள்ளவர்கள் வந்து அறிந்து கொள்ளுங்கள்.
வலதுசாரி - இடதுசாரி ஒரு தத்துவ விளக்கம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//கூடவே நாசர்.இந்த ஆள் நடிப்பை பார்க்கும்போதெல்லாம் நான் நினைப்பது இதுதான்.இந்த மனுஷன் சில காட்சிகளில் கமலையே தூக்கி சாப்பிடறான்யா.(மாயத்தேவர் கதாபாத்திரத்தை நினைத்துப்பாருங்கள்)//

think kuruthippunal!

add prakash raj to your list Muthu.

-Mathy

Thekkikattan|தெகா said...

நானும் நேற்று "அன்பே சிவம்" இரண்டாவது முறையாக அனுபவித்து பார்த்தேன். கமல் போன்றவர்கள் நம்மிடையே மிக்க திறமைகள்லிருந்தும் சரிவர புரிந்துகொள்ளப்படாமல் சிரிதே அங்கீகரிக்ப்பட்டுள்ளார். காரணம் வெளிவேசம் போடத்தெரிந்தும் எதார்த்த வாழ்வோடு இருப்பதால்தானோ என எனக்குப் படுகிறது.

"ஆளவந்தான்" நம்மில் பல பெயருக்கு புரியாமல் போனதற்க்கு காரணம், அவர் அக்கதையில் வரும் சிறு வயது கமல் "physical-abuse"-க்கு ஆட்பட்டு போனதால் அதுவே ஒரு மன நோயாக பின்பு வளர்ந்து (dissociated identity disorder-DIS_போன்று) அவர் காணும் காட்சிகள்யாவும் மனத்திரையில் snap shots மற்றும் flash back, hallucinations_களாகவும் Animation உயிர்பெற்று விரிவடைவதாகவும் காட்டும்பொழுது புரிந்து கொள்வதில் சற்று சுனக்கம் ஏற்படக் காரணம் அது போன்ற விடயங்களை நாம் படித்தோ அல்லது கேள்விபட்டிருக்கவோ வாய்பில்லமால் போனதாக இருக்கலாம் (its a sheer lack of awareness in our side_I believe Kamal is always a bit advanced for our standard). அது கமலின் குறை கிடையாது, நம்மின் பின்தங்கிய அறிவு சார்பே.

அப்படத்தை இது போன்ற ஒரு DIS உள்ள ஒருவருடன் பார்க்க நேர்ந்தது படம் பார்த்துவிட்டு வெளிவரும் பொழுது அவர் கேட்ட முதல் கேள்வி இதெல்லாம் எப்படி கமலுக்கு தெரியும். பிறகு "கடவுள் பாதி" பாடலை அவர் கேட்க விரும்புவதில்லை ஏனெனில் அவருக்கு அது flooding flashbacks-களை கொணவர்தால். புரிகிறதா என்ன சொல்லவருகிறென் என்று.

அன்பு,

தெகா.

சன்னாசி said...

//குணா ரொம்ப பிடித்த படம்.//

தருமி, இங்கேயும் அதே. அந்தவருட சிறந்த நடிகர் தேசிய விருது, 'அக்னீபாத்'திற்காக அமிதாப்பச்சனுக்குக் கொடுக்கப்பட்டபோது, அந்தப் படத்தையும் பார்த்துவிட்டிருந்த காரணத்தால், சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. "குயிலே, என் குருவியக் கொன்னுட்டாங்க குயிலே...." :-(

Muthu said...

கொழுவி,

நான் உங்கள பாணியிலும் இடதுசாரி தான்.சில நேரம் ரோட்டில் வலதுசாரியாகி ஃபைன் கட்டியுள்ளேன்.இந்தியாவில் இடதுசாரியாக இருப்பது தான் நியாயம். சட்டபூர்வமானது.இயற்கையானது.


மதி,

சரிதான். நாசர் பல படங்களில் கமலை தூக்கி சாப்பிட்டிருக்கிறார்.நீங்கள் சொன்னமாதிரி பிரகாஷ் ராஜும் ஒரு நல்ல கலைஞர்தான். கன்னட தங்கங்கள் என்ற பெயரில் கன்னட சாதனையாளர்களை பற்றி எழுதும்போது கண்டிப்பாக பிரகாஷ் பற்றியும் எழுத எண்ணியுள்ளேன்.

தருமி,

குணா பற்றி எழுதுங்கள். நான் இப்போது பார்த்தால் ரசிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

Muthu said...

தெகா,
நன்றாக புரிகிறது.இதுப்போன்ற படங்கள் பொதுஜனத்தை எட்டுவது மிக கடினம்.இந்த கான்செப்ட் ஒரு படத்தின் ஒரு உள்கூறாக அமைக்கப்படலாம். ஆனால் படத்தின் ஆணிவேறாக இது இருந்தால் மக்களை கவருவது கடினம்.அதற்கு நீங்கள் கூறிய காரணமும் சரிதான்.
ஓரளவு செல்வராகவன் இதை ஜனரஞ்சகமாக பயன்படுத்தினாரா?( காதல் கொண்டேன்).எனக்கு தெரியவில்லை.ஆனால் ஆளவந்தான் டெக்னிக்கலி
நல்ல படம் என்றார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.சன்னாசி

Amar said...

//கடைசியில் வழக்கம்போல் நம்முடைய குடைசல் குண்டக்க மண்டக்க கேள்விகள்.வலதுசாரி நண்பர்களும் இந்த இடதுசாரி படத்தை ரசிப்பது எதனால்?//

சினிமாவை ஒரு கலையாக கான்பதால்.

Muthu said...

ஒரு நண்பர் கமல் இப்போது யாரோடு வாழ்ந்து வருகிறார் என்ற அரிய தகவலை பின்னூட்டம் இட்டுள்ளார்.

நான் கமல் நிலையில் இருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று சட்டென்று கூறிவிட முடியாது.

தனிநபர் ஒழுக்கம் விஷயத்தில்(முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்) நாம் எப்படி இருக்கிறோம் என்பதும் எப்படி நம்மை உலகம் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறோம் என்பதிலும் வித்தியாசம் இருக்கும் என்று நினைக்கிறேன்.சிலருக்கு இதில் மாற்று கருத்து இருக்கலாம்.

ஆகவே கமலின் இந்த பக்கத்தை விமர்சிக்க என் பதிவில் இடம் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.(தனி மெயில் இட்டால் விவாதிக்கலாம்)

Muthu said...

சமுத்ரா,

இப்ப புரியுது விஜய் படங்கள் ஏன் இந்த ஓட்டம் ஓடுகிறது என்று? :)))))))

J S Gnanasekar said...

'குணா' படத்தைப் பார்த்தபிறகு, பல இடங்களில் தேடி அழைந்து 'அபிராமி அந்தாதி' வாங்கிப் படித்தேன். ஓரளவிற்குப் புரிந்தே எனக்குப் பிடித்த படங்களில் நான்காவது இடத்தில் வைத்துள்ளேன்.

லட்டு வாங்கும்போது, துண்டு பறந்து சூரியனை மறைக்கும் காட்சி. இதற்கு அர்த்தம் ஆறாவது முறை பார்க்கும்போதுதான் எனக்கு புரிந்தது.

-ஞானசேகர்

Anonymous said...

First sorry folks , am not much aware abt typing in tamil ... :(
J.S Gnanasekar,
What is the meaning of that scene? I would love to learn more abt that... Do u sport a review of Guna?
Please tell us abt it ...
Thanks,