Thursday, February 16, 2006

தோழர்களுக்கு ஆப்படிக்கப்படுமா?

பல சர்ச்சைகள் சமீப காலமாக நமது தமிழ்மணத்தில்,அதாவது ஆபாச பின்னூட்டங்கள் மற்றும் கடிதங்கள் அனுப்புவது, தமிழ் மணத்தில் வைரஸ் நுழைந்திருப்பதாக கூறப்பட்டது, இவருக்கு கேள்வி,அவருக்கு வினா, அதோ அங்கே இருப்பவருக்கு சவால் என்றெல்லாம் பல கலாட்டாக்கள்.நடுவில் சில நாட்களாக பாலச்சந்தர் கணேசனை வேறு காணோம்.:))))

ஆகவே எனதருமை நண்பர்களே,தலைப்பை பார்த்து இதுவும் அதில் ஒன்று என்று இங்கு வந்திருந்தால் ஏமாந்து விடுவீர்கள்.இது அது அல்ல. தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் கிழக்கே மேற்கு வங்காளம் என்ற மாநிலம் உள்ளது.அங்கே பல நூற்றாண்டுகளாக(?) ஒரே கட்சி ஆட்சி செய்து வருகிறது.சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்று.

கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி இப்போது அங்கே அசைத்து பார்க்கப்படும் என்று ஒரு சாரார் நம்புகின்றனர்.அதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.
எந்த ஆண்டும் இல்லாத அளவு சுமார் பத்து லட்சம் தவறான மற்றும் போலி வாக்காளர்களை தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.தோழர்கள் கள்ள ஓட்டு நிறைய ஓட்டு போடுவார்கள் என்பது எதிர்கட்சிகளின் புகார்.எதிர்கட்சிகளின் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலை தோழர்களுக்கு
அக்னி பரி்ட்சை எனலாம். ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி இதை எதிர்த்து முணுமுணுத்து இருக்கிறது என்கிறார்கள்.பங்களாதேஷ் அகதிகளின் பெயர்கள் அனைத்தும் நீக்கப்படுவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால் எதிர்கட்சிகளின் நிலைமையும் சொல்லிக்கொள்கிறபடி இல்லை.
மம்தா பானர்ஜீ பல ஆண்டுகளாக போராடினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மெர்குரியல் டெம்ப்பர் கொண்ட பானர்ஜீ ஸ்டைல் நகரங்களில் ஓரளவு செல்லுபடியாகிறது.கிராமபகுதிகளில் அவரால் ஏதும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பும் அவருக்கு இல்லை என்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க தற்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாசார்யா
(செல்லமாக புத்து) நன்றாக ஆட்சி செய்வதாக பரவலான அபிப்பிரயாயம் உள்ளது. வெளிநாட்டு முதலீடு போன்ற சமாசாரங்களில் அவர் சில சமரசங்களை செய்து படித்த நடுத்தர மக்களை கவர்ந்து வருகிறார். கிராமப்புறங்களில் கம்யூனிஸ்ட்டுகள் செய்த நிலசீர்திருத்தங்கள்,
பொதுவாக விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது,லஞ்ச ஊழல் ஏதும் செய்யாமல் இருப்பது ஆகியவை அவர்களுக்கு பாஸிடிவ் விஷயங்கள்.


பார்ப்போம்.

நமக்குத்தான் எல்லாம் வேடிக்கையாச்சே.

3 comments:

b said...

ம்ம்ம்... ஒரு காலத்தில் ஜோதிபாசுவின் கோட்டையாக இருந்தது.

Thangamani said...

//நமக்குத்தான் எல்லாம் வேடிக்கையாச்சே//

இது!!

:))

சந்திப்பு said...

மேற்குவங்க தேர்தலில் தோழர்களுக்கு ஆப்படிக்கப்படுமா? என்ற கேள்வி பலருக்கு கிளு கிளுப்பூட்டலாம்! நீங்கள் கூறியிருப்பதுபோல் மேற்குவங்க மக்கள் புத்தா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். அங்கே உள்ள இடதுமுன்னணி அரசு மக்கள் அரசு! சமீபத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்ட முடிவில் ஜோதிபாசு பேசும் போது குறிப்பிட்டதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். மேற்குவங்கத்தில் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் இடதுமுன்னணி வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே இந்த தேர்தலில் மேற்குவங்க சட்டமன்றத்திற்கு இடது முன்னணி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என கூறியுள்ளார். இது உண்மையில் ஒரு கின்ன° சாதனை! உலகிலேயே ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்று 30 ஆண்டுகாலம் இடதுமுன்னணி ஆட்சி செய்கிறது என்று சொன்னால் அதன் பலம் பிரம்மிக்க வைக்கிறது. தமிழகத்தில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை யார், யாரோடு இருப்பார்கள் என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. அதுவும் 30 ஆண்டுகளாக கூட்டணி ஆட்சிதான்! தமிழக பெருந்தலைகள் இதை உணருமா? யாருக்கு ஆப்பு என்பதை நாம் பொருத்திருந்து பார்ப்போம்!...