Friday, February 17, 2006

நாடி ஜோதிடம் - மாயமா? மோசடியா?

நாடி ஜோதிடம் என்ற ஒரு சமாச்சாரம் நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டு வருகிறது. நான் முதல்முதலில் நாடி ஜோதிடம் பார்க்க சென்ற கதையை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுமுறையில் பவானி கூடுதுறையில் ஒரு புகழ்பெற்ற நாடி ஜோதிடம் இருப்பதாகவும் அவன் நம் வாழ்க்கையை புட்டு புட்டு வைப்பதாகவும் என் நண்பன் கூறினான்.
எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த சமாச்சாரத்தின் மேல் ஒரு கவர்ச்சி உண்டு.

எப்படி ஒரு ரேகையை வைத்து நம்முடைய சுவடியை எடுப்பது?

அப்படி என்றால் அத்தனை சுவடிகள் அந்த காலத்திலேயே எழுதி வைக்கப்பட்டுள்ளதா?

ஃபாரின் காரர்களுக்கும் ரேகை கொடுத்தால் சுவடி கிடைக்குமா?

என்றெல்லாம் பல கேள்விகள் என் மனதில்.சரி.என்னதான் என்று பார்த்துவிடுவது என்று தீர்மானித்து கிளம்பினேன்.கோவிலுக்கு சென்றுவிட்டு (சுத்தபத்தமாய் இருக்க வேண்டுமாம்) கோவிலுக்கு அருகிலேயே உள்ள அந்த வீட்டை அடைந்தோம்.ஒரு ஆள் என்னுடைய விரல் ரேகையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

அரைமணி நேரம் கழித்து வந்த அந்த ஆள் கையில் சில சுவடிகளை வைத்து இருந்தான்.என்னுடைய ரேகையுடன் பொருந்தி உள்ள சுவடிகளை கொண்டு வந்துள்ளதாக கூறிய அவன்

"சார், நான் இப்ப சில கேள்விகள் கேட்பேன்..அதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க, உங்க சுவடியை எடுத்துறலாம்" , என்றான்

" ம்..கேளுங்க"

"நீங்க பிறந்தது 1974 சரியா"

"இல்லை"

உடனே அடுத்த சுவடியை புரட்டிக்கொண்டே அவன் கேட்ட கேள்வி.
"உங்க பெயர் எழு எழுத்தா? எட்டு எழுத்தா?

ஏழு என்றேன் நான்.

"நீங்கள பிறந்த தேதி கூட்டுத்தொகை மூன்று சரியா?"

"இல்லை"

உடனே அடுத்த சுவடியை எடுத்துவிட்டான்.மீண்டும் கேள்விகள்.

"உங்கள் பெயர் க,ச,த, வரிசையில் வருமா?"
"வரும்"

"உங்கள் பிறந்த தேதி கூட்டுத்தொகை ஏழு அல்லது எட்டு சரியா?

"ஏழு" என்றேன் நான்.

"உங்கள் கூடபிறந்தவர் மூன்று பேர் சரியா"

"இல்லை"

உடனே அந்த சுவடியை வைத்துவி்ட்டு அடுத்த சுவடியை எடுத்தான்.

மீண்டும் கேள்விகள்.கேள்விகள்.

இவ்வாறு எல்லா தகவல்களையும் என் வாயிலிருந்தே பிடுங்கினான் அவன்.நடுநடுவே உள்ளே சென்று புதிய ஓலைச்சுவடிகளை எடுத்து வருவது போல ஒரு பில்ட் அப் வேறு.எனக்கு புரிந்துவிட்டது அவன் டெக்னிக்.

நன்றாக கவனியுங்கள்.உங்கள் பிறந்த நாள் .நட்சத்திரம் போன்ற சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொண்டால் உங்கள் ஜாதகத்தை யாரும் எழுதிவிட முடியும்.

மற்றபடி உங்கள் குடும்ப விஷயங்களை எல்லாம் அவன் கூறுவது உட்டாலக்கடி வேலைதான். நம் வாயில் இருந்தே தகவல்களை பிடுங்கி நமக்கே கேஸட்டில் பதித்து கொடுப்பான்.

அகஸ்தியர் நாடி ஜோதிடம் என்ற பெயரில் உலகம் முழுவதும் இந்த குழு கலக்கிக் கொண்டு உள்ளது. ஒரு ஆளுக்கு 150 ரூபாய் பொதுகாண்டம்.பிறகு தனித்தனி காண்டத்திற்கு தலா 150 ரூபாய்.இது அப்போதைய விலை.நான் பொதுகாண்டத்திற்கு பிறகு துணியவில்லை.

நடந்த விஷயங்களை புட்டு புட்டு வைக்கும் இவர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் தவறுகிறார்கள் என்பதில் இருந்தே நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும்.

இப்படி எல்லாம் இல்லாமல் வெறும் ரேகை மட்டும் வைத்து கேள்விகள் இல்லாமல் நாடி ஜோதிடம் சொல்பவர்கள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.

42 comments:

G.Ragavan said...

இதெல்லாம் எதுக்கு. கடவுளுக்குத் தெரியும் நம்ம எதிர்காலம். அவருடைய கையில் நமது எதிர்காலம் இருப்பதுதான் நமக்கு நல்லது. ரேகையாவது. சோகையாவது.

நாமக்கல் சிபி said...

நீங்கள் சொன்ன அதே பவானி குடுதுறையில் சமீபத்தில் நானும் பார்த்தேன். ஒரே வீட்டில் 4 பிரிவுகளாக திரைச்சீலைகள் மூலம் பிரித்து நாடி ஜோதிடம் பார்க்கின்றனர். அங்குதானே சொல்கிறீர்? எனகு ஓலை வாசித்தவர் பெயர் சிட்டி பாபு.

//நடந்த விஷயங்களை புட்டு புட்டு வைக்கும் இவர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் தவறுகிறார்கள் //

இந்த கருத்தில் நானும் உடன் படுகிறேன்.

தருமி said...

என்னய்யா ஒங்களோட ஒரு 'இதுவா' போச்சு...என் ஜோஸ்யக் கட்டுரைத் தொகுப்பில் இதுதான் அடுத்த சப்ஜெக்ட். முந்தியே உடச்சிட்டீங்க..சரி..சரி..எனக்கு சில பதில்கள் தேவையாயிருந்தது. கொடுத்து விட்டீர்கள். நன்றி. அதோடு உங்க இந்தப் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்திர்ரேன்.

ஏஜண்ட் NJ said...

//...நாடி ஜோதிடம் சொல்பவர்கள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.//


எதுக்குக் கேக்குறீங்கன்னு நாஞ்சொல்லவா...

அடுத்த பதிவு போட்டா அது "அடித்து நொறுக்கப்படுமா" அப்டீனு தெரிஞ்சுக்கத்தானே!

:-))


Anonymous said...

regayai mattum vaithu nadi josiam sollakkudiavanga enaku therinthu yaarumae illai. athu errukattum evargalukkellam intha oolaigal engirunthu kidaikkarathu?

Anonymous said...

indhiyavil mana noyaligal adhigam.
adhanaldhan kovil , josiyam idhellam vyabaram agudhu.

குழலி / Kuzhali said...

இதையும் படியுங்களேன் ஆவிகளின் புரிதல் (அ) ஷியங்

Muthu said...

jsri,

சுட்டியை பார்த்தேன்..ஆனால் அதில் என் சந்தேகங்களுக்கு விளக்கம் இல்லை. ஒரு வேளை முழு புத்தகமும் படிக்க வேண்டுமோ என்னமோ...

ராகவன்,

நீங்கள் சொல்வது ஆழ்நிலை.அது பெரும்பாலும் பலர் கண்டுகொள்வதில்லை. திருமணம் போன்ற பெரிய விஷயங்களை கூட மாப்பிள்ளையை பற்றி விசாரிக்காமல் வெறும் ஜாதகத்தை பார்த்து மட்டுமே செய்கிறார்கள்..இவர்கள என்ன சொல்ல?

சிபி,

அதே இடம் தான் என்று நினைக்கிறென். 97-98 ஆகையால் தெளிவாக நினைவு இல்லை...கான்செப்ட் நான் சொன்னது தானே...

Muthu said...

தருமி,

மதுரை காரங்களுக்குள்ள போட்டி...:))))

அய்யா..நம்பளுக்குள்ளெ என்ன?

நான் சொன்னது என் சொந்த அனுபவம் என்றாலும் நீங்களே கூறியுள்ளபடி சில குழப்பங்களுக்கு விடை சொல்லி உள்ளேன்.
ஆனால் நீங்களும் நானும் நாடி சொல்லமுடியாது...இதை செய்யமுடியாது. அனுபவம் வேண்டும.அதான் கேட்டேன்..எந்த கேள்வியும் கேட்காமல் அல்லது மினிமம் கேள்வி கேட்டு உங்களை பற்றி எல்லாம் யாராவது கூறி உள்ளார்களா ?.

இப்போதெல்லாம் பலரும் இதை நம்புவதில்லை..இருந்தாலும்
பாதுகாப்பின்மை உணர்வு அதிகரிக்க அதிகரிக்க இவை எல்லாம் அதிகமாகின்றன்.....


ஏஜெண்ட் 881336 ஞான்ஸ்,

(வடிவேலு மாதிரி படிக்கவும்.)..

வேணாம் வலிக்குது..அழுதுருவேன்......
ஆமாம் அது என்னய்யா பெயர் உமக்கு? ஏதாவது விசேஷ காரணம் உண்டா?

அனானி,

வெளிநாட்டிலும் சோதிடம் உண்டு என்று நினைக்கிறேன்.மன நோயாளி என்பதெல்லாம் பெரிய வார்த்தை.....

சிவனடியார்,

உண்மைதான்...நான் என்ன என்று பார்க்கத்தான் போனேன்...12 வயதிலே எல்லாவற்றையும் விட்டாயிற்று...தண்ணீர் தெளித்து விடப்பட்டாயிற்று...
இப்போதும் டிவியில் வரும் கூத்துக்களை பார்ப்பேன்.. இன்ட்ரெஸ்டிங்காக இருக்கும்

Thangamani said...

நண்பர்கள் ஒருமுறை ஒரு போலியான பயோடேட்டா (தாய் தந்தை, பிறந்த தேதி, ஊர் பெயர் எல்லாம்) தயாரித்துக்கொண்டு அதை நன்கு மனனம் செய்து போயினர். அதே பயோடேட்டாவை நாடிசோதிடர் சொல்லிவிட்டார், இப்படி மறைமுகமான கேள்விகள் கேட்டு அறிந்துகொண்டு.

Muthu said...

அய்யய்யோ ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் எல்லாம் இல்லை.

எல்லாமே அவங்கவங்க கருத்து என்ற நிலையில் தான் நான் பார்ப்பேன்.
நான் எதுவும் நடந்து பார்த்ததில்லைஅதற்குத்தான் ஏதாவது நல்ல ஆள் இருந்தா யாராவது சொல்லுங்க என்றேன்....

நம்பறவங்க எல்லாம் முட்டாள்..நம்பாதவங்க எல்லாம் புத்திசாலி என்பது எல்லாம் என் நிலையும் அல்ல......என் வீட்டில் எல்லாம் நம்பறவங்க.....

மருத்துவத்தையும் இதையும் கம்பெர் செய்வது? சாரி எனக்கு புரியவில்லை....

நானும் நீங்கள கொடுத்த சுட்டியை டிஸ்கரேஜ் செய்யும் நோக்கத்தில் எதுவும் சொல்லவில்லை....அந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத்தான் சொல்லி இருந்தேன்.

Thangamani said...

JSRI, சித்தமருத்துவம் ஒரு மருத்துவ முறை. அது மிகத்தெளிவான நோயறிதல் முறை, அதன் மூலத்தைப் பற்றிய புரிதல், மருந்துகளைப்பற்றிய அறிவு, மருந்துக்கட்டுப்பாடு என்று மிகவும் ஒழுங்கு செய்யப்பட்ட துறை. டாக்டர் கண்ணன் (நான் நினைக்கிறவராக இருந்தால்) ஒரு தேர்ந்த சித்தமருத்துவர். எனவே நோய்க்கூறுகளை சரியாக இனங்கண்டு கொள்ள முடிந்தால் சரியான மருந்து நிச்சயம். இதை இங்கு சொல்வதற்குக் காரணம், இது போன்ற நம்பிக்கைகளுடன்(ஜோதிடம், ஆவி, கடவுள்)சித்தமருத்துவத்தை ஒப்பிடமுடியாது. அதுதவறான புரிதலைக் கொடுக்கும். என்னுடைய இரண்டு தாத்தாக்கள் பெயர் பெற்ற சித்தமருத்துவர்கள், ஆனால் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்; விதி சோதிடம் எதிலும் நம்பிக்கையற்றவர்கள். ஆனால் மருந்து செடிகளை, மருந்துகளைக் கையாளுவதில் ஆழ்ந்த உள்ளுணர்வையும், இயற்கையின் பல்வேறுசக்திகளை இயைந்து செயல்படவேண்டும் என்றும் சொல்லுபவர்கள்.

எனவே இது வேறு அது வேறு என்று நான் நினைக்கிறேன்.

Amar said...

எனக்கு இந்த அனுபவம் உண்டு.

எல்லாம் permutation,combination முறையில் தெளிவாக நமது வாயில் இருந்தே வரவழைக்கும் சமாச்சாரம் தான்.

அனாலும் கொடுத்த காசுக்கு அந்த ஜோசிய சிகாமனியை நன்றாக வேலை வாங்கிவிட்டேன்.

அவனால் எனது தந்தையின் தொழிலை மட்டும் எனது வாயில் இருந்து வரவழைக்க முடியவில்லை.

ரொம்ப நொந்துவிட்டான் பாவம்.

அனால் நல்ல வேத ஜோதிடம் (ஒன்பது கட்டம் போட்டு, எந்த கிரகம் எங்கு உள்ளது என்று பார்த்து)தெரிந்த ஒருவரால் உங்களின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ளமுடியும்.

டிகிரி சுத்தமாக கனிக்க வேண்டும்....மிகவும் கடினமான கலை.

Muthu said...

இனிய நண்பரே சமுத்ரா,

நாம் ஒத்துப்போகும் புள்ளிகள் கூட உலகத்தில் உள்ளதா? :)))))ஆண்டவனுக்கு நன்றி..
இது ச்சும்மா தமாசுதான்...

( ரொம்ப வாட்டியிருப்பீங்க அந்த அகத்தியரை என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.)

சீரியஸாக சொல்லப்போனால் அந்த டிகிரி சுத்த கணக்கில்கூட எனக்கு சந்தேகங்கள் உள்ளன.நீங்கள் குமுதம் ஏ.எம்.ராஜகோபாலனை தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.சரியா?

Muthu said...

///பிற வைத்தியங்கள் எல்லாம் தவறு என்று ஒரு sweeping statement விட்டுவிடலாமா? தவறு எங்கே ? ////

jsri,
என்னுடைய கருத்தும் கிட்டத்தட்ட இதுவேதான். எந்தத் துறைக்கும், அத்துறையைக் கையாளுபவருக்கும் வரம்புகள் உண்டு. சோதிடம், ஆவி, கடவுள் விஷயத்தில் அடுத்தவரின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு உதவாது. வேண்டியவர்கள் நேரடியாக இறங்கிப் பார்க்க வேண்டும், நிறைய மெனக்கெட வேண்டும், ஆனாலும் தெளிவு கிடைக்கும் என்ற உத்திரவாதம் இல்லை. ஆவி பற்றி நேரடி அனுபவம் உள்ள பாஸ்டன் பாலா, காஞ்சி பிலிம்ஸ் (இப்போது இவர் வேறு பெயரில் இருக்கிறாரோ? ;-) ) போன்றவர்களிடம் பேசிப்பார்க்கலாம். ஆனால் அவை நமக்குக்கு எந்த விதத்திலும் உதவாது, நாமே நேரடியாய் இறங்கிப் பார்க்காதவரை. கடவுள் பற்றி சாமியார்களிடம் கேட்பதும் இதுபோலவேதான், இலக்கியம் பற்றி இலக்கியவாதிகள் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிபவர்களிடம் கேட்பவர்களின் கதையும் இதே போல்தான். :-)).

அறிவியல் மூலம் ஆவி, சோதிடம், கடவுள் போன்றவற்றை ஆராய அறிவியல் இன்னும் பல பரிமாணங்களைப் பெற்றாக வேண்டும். மக்கள் பலர் இவற்றை ஆய்வுப்பூர்வமாய் ஆராய மனதளவில்கூட இன்னும் தயாராக வில்லை. நுனிப்புல் முயற்சிகள் யானையைக் கண்ட பார்வையற்ற நால்வரின் அனுபவம் போல்தான் இருக்கும்.

Muthu said...

ஜெர்மன் முத்து,

ஒன்று உண்டு என்று நீங்கள் நினைத்துகொண்டு அதை பார்த்தால் அது இருப்பது போல் தெரியும். இல்லை என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இல்லாதது போல் தெரியும்.ஆனால் உண்மை என்று ஒன்று இருந்தாகனுமில்லையா?

அதைத்தான் அறிவியல் சொல்கிறது..காலைல இருந்து தூங்க போறவரைக்கும் அறிவியலை நம்பற நாம் இந்த மாதிரி விஷயங்களில் ஏன் தயங்கவேண்டும்?

சந்திப்பு said...

நான் போகும் பாதை இது நாம் விரும்பி பார்த்த படங்களில் ஒன்று. கதாநாயகன் புதுமுகம் - அவரே இயக்குனரும் கூட. (பெயர் கேட்க வேண்டாம்) அவருடைய காதலியின் நச்சரிப்பால் ஜோசியம் பார்க்க ஒப்புக் கொள்வான். அது நாடி ஜோதிடம் இல்லை. கிளி ஜோசியம்.


ஜோசியர் கிளியை விட்டு ஒரு சீட்டு எடுப்பார். அந்த சீட்டை பிரிக்காமலே கதாநாயகனிடம் கூறுவார் : நீங்க என்ன நினைத்தாலும் அது நடக்கும் என்று கூறிவிட்டு, நீங்க என்ன நினைச்சீங்க என்று கேட்க...


கதாநாயகன் : நான் இந்திய நாட்டுக்கு ஜனாதிபதியா ஆவனும்னு நினச்சேன்... என்பார்

ஜோசியருக்கு தர்ம சங்கடமாக போய்விடும். இதே போல அடுத்த கேள்வியை கேட்பார் : நீங்க காதலிக்கிற பொண்ணு உங்களுக்கு கைகூடும் என்று கூறி விட்டு : நீங்க யாரங்க காதலிக்கிறீங்கன்னு கதாநாயகனைப் பார்த்துக் கேட்க,

அதற்கு கதாநாயகன் : நான் °டெபி கிராபியை காதலிக்கிறேன்னு சொன்னதும் கிளியைப் போல துண்டக்காணோம், துணியைக் காணோம் என்று பறந்து போயிடுவார்...

அது போல இருக்கு உங்க நாடி ஜோதிட அனுபவம்.... வித்யாசமான முயற்சி... தொடரட்டும்.

Vaa.Manikandan said...

annaa kiLi jooshyam?

Amar said...

//( ரொம்ப வாட்டியிருப்பீங்க அந்த அகத்தியரை என்று புரிந்துக்கொள்ள முடிகிறது.)//

சரியாக முப்பது நிமிடங்கள் தேவைபட்டது அவனுக்கு ஒரு கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க.

அதற்க்கு பழி வாங்குகிறேன் என்று எனக்கு 26 வயதில் காதல் தோல்வி ஏற்படும்...பின்னர் கட்டாய திருமனம் நடக்கும் என்று "ஆருடம்" சொன்னான்.

//சீரியஸாக சொல்லப்போனால் அந்த டிகிரி சுத்த கணக்கில்கூட எனக்கு சந்தேகங்கள் உள்ளன.நீங்கள் குமுதம் ஏ.எம்.ராஜகோபாலனை தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.சரியா?
//

யார் ஏ.எம்.ஆர்?

பொதுவாக இந்த வகை ஜோதிடத்தில் "relative positions of the planets"களை சரியாக பார்த்து தான் கனிக்கமுடியும்.

அதனால் அதிக தவறு ஏற்படவாய்ப்பு உள்ளது.

Muthu said...

/////ஜெர்மன் முத்து,

ஒன்று உண்டு என்று நீங்கள் நினைத்துகொண்டு அதை பார்த்தால் அது இருப்பது போல் தெரியும். இல்லை என்று நினைத்துக்கொண்டு பார்த்தால் இல்லாதது போல் தெரியும்.ஆனால் உண்மை என்று ஒன்று இருந்தாகனுமில்லையா?

அதைத்தான் அறிவியல் சொல்கிறது..காலைல இருந்து தூங்க போறவரைக்கும் அறிவியலை நம்பற நாம் இந்த மாதிரி விஷயங்களில் ஏன் தயங்கவேண்டும்?////

முத்து,
பொதுவாய் எனக்கு இதுபற்றி விவாதம் செய்வதில் அவ்வளவு ஆர்வமில்லை. நான் சொல்ல வந்தது, இன்றைய அறிவியல் நாம் நினைக்கும் அளவுக்கு முழுமையான ஒன்றில்லை. ஒரு அறிவியல் அறிஞரின் பொன்மொழி நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது. "... அறிவியல் என்பது இருட்டில் இருந்து இருட்டை நோக்கி ஒளியின் வழியாகச் செல்லும் அம்பு..." அதன் தொடக்கமும், முடிவும் நமக்குத் தெரியாது. இடையில் கணநேரத்தில் பார்த்ததை வைத்து மொத்தமே அவ்வளவுதான் என்று நாமே நினைத்துக்கொள்கிறோம்.

சோதிடத்தில் கோள்களின் நிலையைக் கணிப்பதுவரை அது அக்மார்க் முத்திரை பெற்ற இன்றைக்கு வரையறுக்கப்பட்ட விஞ்ஞானம்தான், அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமுமில்லை. அக்கோள்களின் நிலை எவ்வாறு பூமியையும், பூமியின் உயிர்களையும் பாதிக்கிறது என்பதுதான் இன்றைய வரையறுக்கப்பட்ட அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஒன்றை இங்கே குறிப்பிட்டாகவேண்டும், கோள்களின் நிலையை எவ்வாறு கணிப்பது என்பதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த அதே விஞ்ஞானிகள்தான் அக்கோள்கள் எப்படி, பூமியையும், மனிதர்களின் வாழ்வையும் தாக்கம் செய்கின்றன என்பதையும் கூறிச்சென்றிருக்கிறார்கள். தொழில் முறைச் சோதிடர்களை விடுங்கள். சோதிடத்தின் அடிப்படையைத் தெளிவாய்க் கற்ற எவரும் சோதிடம் பித்தலாட்டம் என்று கூறமாட்டார்கள். பட்டம் பல பெற்ற பலஆய்வாளர்களும்கூடச் சோதிடத்தை மதிப்பதும், அதைக் கற்றுவருவதும் இதனால்தான். நாமே உண்டு பார்க்காதவரை அது இனிப்பா, கசப்பா என்று தெரியப்போவதில்லை.

இதுபற்றிக் கிட்டத்தட்ட ஒருவருடத்துக்கு முன்னால் நான் பதிந்த பதிவு இங்கே, நேரம் கிடைக்கும்போது வாசித்துப் பாருங்கள்.
http://muthukmuthu.blogspot.com/2005/04/blog-post.html

Amar said...

//அக்கோள்கள் எப்படி, பூமியையும், மனிதர்களின் வாழ்வையும் தாக்கம் செய்கின்றன என்பதையும் கூறிச்சென்றிருக்கிறார்கள்//

அனால் எதனால் அந்த தாக்கங்கள் ஏற்படுகின்றன என்று சொல்லாமல்விட்டுவிட்டார்களே!

பள்ளியில் cosmic raysகளை படித்த ஞாபகம்....cosmic rays நம்மை பாதிக்குமோ?

Muthu said...

குழலி,

படித்தேன்..மற்ற பகுதிகள் எங்கே?

தங்கமணி,
நன்றி..நீங்கள் கூறுவது சரி....பலர் பல சம்பவங்கள் கூறுகிறார்கள்.ஆனால் எல்லாம் எனக்கு தெரிந்தவர் எனக்கு சொந்தகாரர் என்கிறார்கள்.ஆனால் நமக்கு எதும் நடக்க மாட்டேன் என்கிறது.
நன்றி சந்திப்பு

நன்றி மணிகண்டன்
செகண்ட் பார்ட்டில் கிளி சோதிடத்தை டீல் செய்வோம்

Muthu said...

சமுத்ரா,

26 வயது இன்னும் ஆகவில்லையே உங்களுக்கு?பார்ப்போம்.உங்கள் திருமண அழைப்பு எங்களுக்கு உண்டில்லையா?
மற்ற பின்னூட்டங்களி்ல் உங்களுக்கு சில பதில்கள் உள்ளன சமுத்ரா.



jsri,

நீங்கள் தங்கமணி சொன்னதை புரிந்து கொள்ளவில்லை.அவர் சோதிடத்தையும் சித்த மருத்துவத்தையும் கம்பெர் செய்ததற்காக அதை கூறினார்.அலோபதியும் பல இடத்தில் உபயோகப்படுகிறது எனபது உபரி தகவல்.
கோள்களின் மூவ்மெண்ட் ஓ.கே.அது உங்கள் வாழ்வை அசைக்கிறதை பற்றித்தான் பேச்சு.(இங்கே பிரைமரி நாடி சோதிடம்தான் பேசப்படுகிறது என்றாலும்)
ஆவி கடவுள் ஆகிய கருத்துக்களை சோதிடமோ சோதிடர்களோ உபயோகப்படுத்துவதில்லையா?

ஒரு நல்ல நாடி சோதிடரை சஜஸ்ட பண்ண சொல்லித்தான் நானும் கேட்டுள்ளேன்.

//மேலும் நமக்கு நம்பிக்கை இல்லை என்பது வேறு; அதன் இருப்பே பொய் என்பது வேறு. எனக்கு வேறு மதங்களில் நம்பிக்கை இல்லை எனபதால் அந்த மதங்கள் பொய்யாகிவிடாதல்லவா அது மாதிரிதான் //

இந்த வரிகளில் முரண்பாடு உள்ளது.

//இதுவும். ஆவி சமாசாரங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் நான் பார்த்ததில்லை. [கருணாநிதி என்ற பகுத்தறிவுவாதி 'தமிழர்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது, பூசாரி வரவேண்டும்' என்று சொல்கிறாரே என்று காலையிலிருந்து கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. :))//

இது காமெடி ட்ராக்.அவர் சொல்லுவது வேறு அர்த்தத்தில்.நீங்க பார்க்காததினால் ஆவி நம்பிக்கை இல்லை என்றால் நான் நல்ல சோதிடனை பார்க்கவில்லை .அதனால் சோதிட நம்பிக்கை எனக்கு இல்லை என்று சொல்லலாமில்லையா? (இது வாதத்திற்குத்தான்)

// ஆனால் அறிவியல்துறை சம்பந்தப்பட்டது என்று இருக்குமானால் ஜோசியம் சரியாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது என்றுதான் சொல்கிறேன். //

இருக்கலாம்.ஃப்ரூப் வேண்டும் அல்லவா.

Muthu said...

ஜெர்மன் முத்து,

நானும் வாதம் பண்ண ஆர்வமாக எல்லாம் இல்லை.அறிவியல் பற்றி நீங்கள் கூறுவது சரி.ஆனால் இந்த கருத்தை எதற்கு போட்டு பார்ப்பது என்று உண்டல்லவா?

//சோதிடத்தில் கோள்களின் நிலையைக் கணிப்பதுவரை அது அக்மார்க் முத்திரை பெற்ற இன்றைக்கு வரையறுக்கப்பட்ட விஞ்ஞானம்தான், அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமுமில்லை. அக்கோள்களின் நிலை எவ்வாறு பூமியையும், பூமியின் உயிர்களையும் பாதிக்கிறது என்பதுதான்//

இது சரி .நான் ஒத்துக்கொள்கிறேன்.


//இன்றைய வரையறுக்கப்பட்ட அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஒன்றை இங்கே குறிப்பிட்டாகவேண்டும், கோள்களின் நிலையை எவ்வாறு கணிப்பது என்பதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த அதே விஞ்ஞானிகள்தான் அக்கோள்கள் எப்படி, பூமியையும், மனிதர்களின் வாழ்வையும் தாக்கம் செய்கின்றன என்பதையும் கூறிச்சென்றிருக்கிறார்கள்.//

இதற்குத்தான் ப்ரூப் இல்லை என்கிறேன் நான்.

மற்றபடி உங்கள் பதிவை படித்துச் சொல்கிறேன்.நன்றி.(ஜெர்மனில் என்ன பண்ணுகிறீர்கள்?)

Anonymous said...

அன்புள்ள முத்து
சோதிடர் - நாற்பது வயது வரை நாய் படாத பாடு
பட்டிறுப்பீர்கள்
நான் - ஆவலுடன் - அப்புறம் என்ன?
சோதிடர் - பழகிப் போய்விடும்
அறுவைக்கு மன்னிக்கவும்
சாம்

Amar said...

//உங்கள் திருமண அழைப்பு எங்களுக்கு உண்டில்லையா?
//

அந்த நாடி 'ஜோசியன்' சொல்லியபடி கண்டிப்பாக கட்டாய திருமனமாக இருக்காது.அதனால் நிச்சயமாக அழைப்பு உண்டு.

(அதற்க்கு முன்னர் இன்னும் அதிகம் சம்பாரிக்க வேண்டும்,படிக்க வேண்டும் etc etc என்ற நிறைய உள்ளன)

ஜோதிடக்கலை உன்மை/பொய் என்ற கேள்விகளை கடவுள் பற்றிய கேள்விகளை போல arbitary என்று தான் கருதமுடியும்.

100% சரி, இருக்கிறது என்றும் நிருபிக்கமுடியாது.

100% தவறு,ஜோதிடம் 420 வேலை என்றும் நிருபிக்கமுடியாது.

Its arbitary.

Muthu said...

மீண்டும் ஆரம்பத்திற்கே வந்துவிட்டோம் என்று நீங்கள் கூறிவிட்டபடியால் உங்களுடைய பின்னூட்டத்திற்கு என்னுடைய முதல் பதிலை
நீங்கள் படித்துக்கொள்ளலாம்.

நான் சொல்ல வந்தது

1. நாடி சோதிடத்தில் எப்படி அவ்வளவு துல்லியமாக உங்கள் விபரங்கள் வருகின்றன என்ற கேள்விக்கு விடை (என் அனுபவத்தில்)

2.மருத்துவ அறிவியலையும் சோதிடத்தையும் கம்பெர் செய்ய முடியுமா?

3.ஏதாவது அறிவியல் பூர்வமான நிரூபணம் உள்ளதா?

என்பதுதான். அல்லது குறைந்தபட்சம் எனக்கு எட்டவில்லை என்றாவது எடுத்துக்கொள்ளுங்களேன்.

எனிவே மீண்டும் நன்றி கருத்துக்களுக்கும் ..புத்தக தகவலுக்கும்....

Anonymous said...

jsri புரிந்து எழுதுகிறாரா அல்லது வாதத்திற்காக எழுதுகிறாரா?...அவர் எழுதியது எனக்கு படு அபத்தமாகப் படுகிறது...தவறுதலான உதாரணங்கள்...மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்.......

erode soms said...

சந்தேகமே வேணாம் இது மோசடிதான்

வவ்வால் said...

எப்பவோ போட்ட பதிவு இது இப்போ மீண்டும் தெரியுது தமிழ் மணத்தில் , என் கண்ணில் வேறப்பட்டு தொலைச்சு போச்சு!

நாடி ஜோதிடம் அறிவியலா என்று கேள்விக் கேட்பது போல கேட்டு இருந்தாலும் இருக்கலாம்னு விளக்கெண்ணை தடவினா போல வழுக்கிட்டு போறார் வலைபதிவர்,பின்னூட்டம் போடுறவங்களோ பாம்பும் சாக கூடாது கம்பும் உடையக்கூடாது என்பது போல சவ சவ பதிலா சொல்றாங்க.

இதுல வேற ஜேஸ்ரி நு ஒருத்தங்க உணர்ச்சி வசப்பட்டு ஏதோ தோ சொல்றாங்க ,பதில் சொல்றவங்களோ எங்கே அடிச்சு உண்மையா பேசிட்டா அடுத்த முறை வந்து பின்னூட்டம் போடாம போய்டுவாங்கலோனு உண்மைய சொல்லாம மழுப்பி வைத்து இருக்காங்க!

உலகத்தில் என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பதே அறியாமல் ,உலகத்தை விமர்சிப்போரின் எழுத்துகளை படிப்பது ஆயாசம் தருகின்றது.

ஜோதிடம் என்பது கலை விஞ்ஞானம் அல்ல என்பது பல காலம் முன்பே அறுதியிட்டு சொல்லப்பட்டது. விஞ்ஞானம் என சொல்லி விளம்பரம் செய்வது ஜோதிடர்களே , வேறு யாரும் சொல்ல மாட்டார்கள்.ராமர் பிள்ளை என்பவர் தயாரித்தது மூலிகை பெட்ரோல் என அவரே சொல்லிக்கொண்டார் போல் ஜோதிடர்கள் சொல்லிகொண்டு திரிகிறார்கள்.

ஜோதிடம் மூட நம்பிகை சார்ந்தது ,விஞ்ஞனம் அல்ல என்பதற்கு ஒரே உதாரணம் பி.ஜே.பி காலத்தில் முரளி மனோகர் ஜோஷி,முன்னாள் மனித வள மேம்பாடு துறை அமைச்சர் ஜோதிடத்தை பட்டய படிப்பாக பல்கலைக்கழங்களில் கொண்டு வந்தார் , அதனை பல பல்கலைகழங்களின் சின்டிகேட்டிலும் அறிவியல் பூர்வமில்லாத ஒன்றை பாடமாக படிக்க வைத்து மூட நம்பிக்கையை வளர்க்க கூடாது என கண்டித்தார்கள்,பின்னர் யுனிவர்சிட்டு கிராண்ட் கமிஷனும் அந்த பட்டய வகுப்பை அங்கிகரிக்காமல் எடுத்துவிட்டது.கல்வி என்பது மூட நம்பிகைகளை களைய தான் என சொன்னார்கள்.

இதில் வேறு ஜேஸ்ரி ஒரு நூலின் சுட்டி அளித்ததால் அது உன்மையாகி விடும் என்பது போல் ஆவேசமாக சொல்கிறார்கள் :-))


இன்னொருவர் கிரக நிலை வைத்து டிகிரி சுத்தமாக சொல்லலாம் என்கிறார் எதாவது தனியார் கல்லூரியில் போய் காசு கொடுத்து தான் டிகிரி வாங்கனும் கிரகம் எல்லாம்!

ராகுவும் கேதுவும் கற்பனை கிரகங்கள்,போதாகுறைக்கு சூரியன் ,சந்திரனை எல்லாம் கிரகங்களாக சேர்த்துக்கொண்டு ஜோதிடம் சொல்கிறார்கள் இதான் விஞ்ஞானமா?

இப்போது பத்தாவது கிரகம் ஒன்றும் கண்டுபிடித்துவிட்டார்கள் ஸேத்னா(sedna or 2003VB12) எனபெயரும் சூட்டி இருக்கிறார்கள். அப்படி எனில் ஜோதிடம் இனிமேல் ஒன்பது கட்டத்திற்கு பதில் 10 கட்டம் போட்டு சொல்வார்களா? எங்கோ இருக்கும் கிரகம் மனிதனின் மீது சக்தியை செலுத்தும் எனில் ,செல் ஃபோன் டவர் இல்லை என்று ஏன்யா சிக்னல் இல்லைனு புலம்பனும் ,ஜோதிட ரீதியாக சிக்னல் கிடைக்க வைக்கலாமே :-))

Muthu said...

வவ்வால்,

நான் தெளிவாகத்தான் எழுதி உள்ளேன். ஒரு சிலர் பாய்ந்து வரும்போது அவர் மனம் மகிழ நாம் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது.

என் கருத்துக்கள் மொத்தமும் பொதுவாக பதிவிலே முடிந்துவிடும்.

பின்னூட்டத்தில் நான் அவ்வளவு ஆர்வமாக பதில் எழுதுவதில்லை.கொஞ்சம் வழவழா கொழ கொழாவாக இருக்கும்.

Anonymous said...

i totally agree with u vavaal...i feel jsri is arguing for the sake of arguing...i hope she reads it n understands wat muthu was trying to say...jsri..when u comment try to be polite....

Muthu said...

ambigai,

இந்த பதிவோட எஃபக்ட் அங்கங்க பரவி என் உடம்பு ரணகளமாகிடுச்சு. விட்ருங்க.

ஹிஹி.

ஆதரவிற்கு நன்றி.பல நாள் கழிச்சி மனதுக்கு இதமா ஒரு பின்னூட்டம்.நன்றி.

அருள் குமார் said...

நாடிஜோதிடம் மிகப்பெரியப் பித்தலாட்டம் என்பதை, அதில் வேலை பார்த்த ஒருவர் சொல்லக்கேட்டேன்.
அவர் ஹிந்தியும் ஆங்கிலமும் நன்கு தெரிந்தவர் என்பதால், டெல்லியில் நாடிஜோதிட நிலையம் ஆரம்பிக்கப்போனவர்களால் அழைத்துச்செல்லப்பட்டார். இவரின் பெயரை மற்றி ஏதோ ஒரு 'ஜி' என்று வைத்துவிட்டார்களாம். நீங்கள் சொன்னமாதிரிதான். அவர்கள் வாயிலிருந்தே விஷயங்களைப் பிடுங்கி அவர்களுக்கே சொல்லி..! அதையேன் கேட்கிறீர்கள். ஜோதிடம் பார்க்க வந்தவர்கள் போன பிறகு அவர்கள் அடிக்கும் கூத்துகளைப்பற்றி ஒரு தொடர் பதிவே போடலாம்.

பெரும் பணக்காரர்கள், படித்தவர்கள் கூட இவர்கள் காலில் விழுவதையும், இவர்கள் சொல்வதே வேதம் என நம்புவதையும் கிண்டலடித்துச்சிரிப்பார்களாம். அங்கு வருகிற பெரும்பாலான கதைகள் தகாத உறவு கதைகள்தான் என்பதால், ரொம்ப சுவாரஸ்யமாய் கதை கேட்ப்பதும் அவர்கள் போன பின்பு அவர்களை கிண்டலடிப்பதும் அவர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு என்று சொல்வார்.

பொய் பொய் என ஒரு நாள் ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை பொய்கள் தான். என்னதான் இவர் மொழிபெயர்த்து மட்டுமே சொல்கிறார் என்றாலும், ஒரு நாளைக்கு இவ்வளவு பொய்கள் சொன்னால் தனக்கு நல்ல கதி கிடைக்காது என்று பயந்து, நல்ல சம்பளத்தைக்கூட விட்டு வந்துவிட்டேன் என்றார்.

வினையூக்கி said...

தனிப்பட்ட முறையில் நம் வாழ்க்கை முன்னமே எழுதப்பட்டது என்பது நம்பிக்கை. Everybody's Life is Pre-Programmed. We have got only choices. அந்த வகையில் நாடி ஜோதிடத்தில் நம் எதிர்காலத்தைக் கணிக்கலாம் என்பது என் எண்ணம். எல்லாம் ஒரு "கணக்குதான்". ஆனால் அதே சமயத்தில் "சமகால" நாடி ஜோதிடத்தில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை. "வியாபாரமாக்கப் பட்ட எந்த ஒரு விசயத்திலும்" உண்மையின் விகிதாசாரம் குறைந்தே காணப்படும்.
கடந்த காலங்களில் "கிளி" ஜோசியம் பார்ப்பதில் எனக்கு அலாதியான ஈடுபாடு உண்டு. ஆனால் வாழ்க்கையின் உண்மையான "திரில்" எதிர்பாராமல் நடக்கும் விசயங்களை எதிர் கொள்வதில் தான் உள்ளது. இப்போது எல்லாம் "ஜோசியத்துக்கு" ஒரு கும்பிடு.
எது என்னமோ போங்க ...."சிதம்பர ரகசியம்" சூரிய தொலைக்காட்சியில் சக்கைப் போடு போடுது.

Anonymous said...

ஏதோ;பாருங்க!
எந்தச் சோதிடராவது;உலகில் "பில் கேட்ஸ்" அளவு பணத்தையோ வசதியையோ;புறிணி மன்னர் போல் வாழ்வையோ, ஏன் தமக்குக் தெரிந்த மற்றவர்களை முன்னேற்றும் சோதிட வழிமுறைகளால் செய்ய முடியாமல், பலர் ஐந்துக்கும்;பத்துக்கும்;சிலர் ஆயிரங்களுக்கும்;ஆள்ப்பிடிக்கிறாங்களே!!. முந்நாள் முதல்வருக்கு ;நாள் குறிக்கும் சோதிடர்;சத்தத்தையே,காணலையே!!!!!;அடவிடுங்க!!!! நாம பஞ்சப்பரதேசிகள்; ஆனானப்பட்ட "சங்கராச்சாரியார்" களி சாப்பிடப் போகும் சங்கதி; இவங்க!! ஒருவனுக்குமே!! தெரியாமல் போய்விட்டது. ஆச்சரியமா???,இல்லையா,,,,;;;உலகுக்கே ஆசிவழங்கும்;அவருக்கே தெரியல!!!!. குமுதம் சோதிடர் பரிகாரங்கள்;99 விழுக்காடு;;;;இறை வழிபாடு;சம்பந்தமானதாகத் தான் இருக்கிறது.அது மனச்சஞ்சலத்தைத் தீர்க்கும்;ஆண்டவன் துணையுண்டு.என்பது;;;நம்பிக்கையை தரும்.
மிகுதி எல்லாம் இலகுவாக;காசு பார்க்க உள்ள வழி!!!!அவர்களுக்கு!!
யோகன் பாரிஸ்

Muthu said...

பாரிஸ்காரரே,

இதத்தான் நானும் சொன்னேன். கல்லெடுத்து அடிக்கிறாங்க..

Muthu said...

வினையூக்கி,

நம் வாழ்க்கை ப்ரி-புரோகிம்டு கிடையாது. நீங்க புரோகிராமர்தான்.உங்க சோர்ஸ் புரோகிராம் நீங்களே எழுதறீங்க..அவ்வளவுதான்.

Muthu said...

அருள்குமார்,

நல்ல காமெடி நீங்க சொன்னது.

உண்மைதான்.நம்மளை மாக்கான் ஆக்கிட்டு பணத்தையும் வாங்கிட்டு நக்கல் வேற

theevu said...

//மற்றபடி உங்கள் குடும்ப விஷயங்களை எல்லாம் அவன் கூறுவது உட்டாலக்கடி வேலைதான். நம் வாயில் இருந்தே தகவல்களை பிடுங்கி நமக்கே கேஸட்டில் பதித்து கொடுப்பான்.//
100 வீதம் சரி
இது பற்றி தனியாகவே பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.

ஜெசிறீ தங்கமணி கூறிய சித்த மருத்துவர் திருச்சி கண்ணன் இறந்துவிட்டார் என நினைக்கிறேன்.
எனது நண்பர் ஒருவருக்கும் (மேல் நாட்டில் வருடக்கணக்காக இழுத்து குணமாக்க முடியாததை )இதே போல் வைத்தியம் பார்த்து குணமாக்கியிருக்கிறார்.

Om Santhosh said...

இது அவரவர் எடுக்கும் முடிவை போன்றது. உங்கள் முடிவு மிகவும் உண்மை

Om Santhosh said...

உங்களை பற்றிய காரணகன்களை தெரிந்து கொண்டு நாடி ஜோதிட பார்பவர்களை நம்ப வேண்டாம்.