Monday, February 06, 2006

வேலைநிறுத்தம் கொலைகுற்றமா?

எங்காவது ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் நமது மீடியாக்களும் (அனைத்து ஆங்கில மீடியா மற்றும் பிராந்திய வலதுசாரிகளும்) வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களையும் கம்யூனிஸ்ட்டுகளையும் கொலைகாரர்கள் ரேஞ்சுக்கு சித்தரிக்க ஆரம்பித்து விடுகிறது.


சமீபத்தில் விமானநிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளை எதிர்த்து விமானநிலைய ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தமும் இவ்விதமான சித்தரிப்புக்கு ஆளானது.


இந்த விவகாரத்தில் இனிமேல் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு முத்தரப்பு குழு அமைத்து பரிசீலிப்பதாகவும், இப்போதுள்ள ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதாகவும் அரசு உறுதி கூறியுள்ளது. இந்த சாதாரண உறுதிமொழியை அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்காக வேலைநிறுத்தம் தேவைப்பட்டிருக்கிறது என்றால் அரசாங்கத்தின் நிலையை என்ன என்று சொல்வது?


அரசு துறைநிறுவனங்கள் என்றாலே அவர்களால் எதுவும் சாதிக்கமுடியாதா? ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தால் விமானநிலையங்களை நவீனப்படுத்த முடியாதா?இதை தனியாரிடம் விட்டால்தான் செயய்முடியுமா?ஸ்டேட் பேங்க், ஓ.என்.ஜி.சி போன்றவையும் அரசு நிறுவனங்கள்தானே. அவைகளால் சாதிக்க முடியும்போது மற்ற நிறுவனங்களால் முடியாதா? நியாயத்தை கேட்கும் ஊழியர்களின் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்கம் நசுக்குவது என்பது சர்வாதிகார நிலைமைக்கு நாட்டை கொண்டுப்போய்விடும்.


வேலைநிறுத்தம் செய்வது குற்றம் என்றால் அவர்களை அந்த நிலைமைக்கு கொண்டு விடுவது அரசாங்கத்தின் அலட்சியம்தானே?நாற்பதோ ஐம்பதோ சதவீத வருமானத்தை அரசாங்கத்திற்கு தனியார் கம்பெனிகள் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதால் இதை வரவேற்கிறார்களாம். ஏன் நிலவுக்கு ராக்கெட் விடும் இந்தியாவால் செய்யமுடியாத நவீனப்படுத்துதலை யார் வந்து செய்யவேண்டும்? ஏன் முழு நூறு சதவீத வருமானத்தையும் நாமே எடுத்துக்கொள்ளக்கூடாது? இந்தியாவில் வான்வழி போக்குவரத்து வரும் காலங்களில் அபரிமிதமாக வளர வாய்ப்பு உள்ளது என்பதையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும்.


ஸ்ட்ரைக் பண்றாங்க என்று குற்றம் சாட்டுபவர்கள் ஊழியர்கள் தங்கள் நிலையை எப்படி அரசாங்கத்திற்கு வேறுவகையில் உணர்த்துவது, தெரியப்படுத்துவது என்று கூறமுடியுமா? தற்கொலை பண்ணிக்கொண்டு சாவுங்கடா,மக்கள் தொகையாவது குறையும் என்பது தான் நிலைப்பாடா?எத்தனையோ சாலை பணியாளர்கள் தற்கொலை செய்துக்கொண்டதை எண்ணிப் பாருங்கள்.படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் அவர்களுக்கு பேச மீடியாக்கள் முன்வரவில்லை.நமது மீடியாக்கள் முதலாளிகளின் செல்லபிள்ளைகள் ஆகி பல காலம் ஆகிறது.


தனிமார்மயம், முன்னேற்றம் என்ற பேச்செல்லாம் பேச நன்றாகத்தான் உள்ளது.ஏழைகளின் வயிற்றில் அடிக்காமலும் இதையெல்லாம் நிறைவேற்றலாம். மக்கள் தொகை அதிகம் இல்லாத ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தை ஈயடிச்சான் காப்பி அடிப்பதும் அதை ஆதரித்து எழுதுவதும் நியாயமா?


இந்தியாவில் உள்ள மென்பொருளாளர்களின் எண்ணிக்கை உலகில் உள்ள மொத்த மென்பொருளாளர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு. சந்தோஷம்.ஆனால் அந்த அளவிற்கு மென்பொருள் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து உள்ளதா என்று கேட்டால் அதற்கு பதில் நேரடியாக இருக்காது. இருக்கட்டும்.ஏற்றுமதி அதிகரித்தால் சந்தோஷம்தான்.ஆனால் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் உலகில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். மென்பொருளாளர் மட்டும் என்றில்லை. பொதுவாக இந்த தொழில்மயப்போக்கு ஏழை பணக்காரர் வித்தியாசத்தை அதிகப்படுத்தி வருகிறது.இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து இந்த சிறிய அளவிலான மக்களை சந்தோஷப்படுத்தத்தான் அரசாங்கம் முயல்கிறது என்பதுதான்.மீடியாக்கள் தொழிலதிபர்களின் குரலில் பேசுகின்றன்.


வாய்கிழிய தொழிலாளர்களை எதி்ர்த்து தனியார்மயத்தையும் வெளிநாட்டு முதலீட்டையும் ஆதரிக்கும் மீடியாக்கள் பத்திரிக்கை துறையில் வெளிநாட்டு முதலீடு என்ற விஷயத்தில் தங்கள் நிலை என்ன என்பதை சொல்வார்களா?வாய் கிழிய கத்துவார்கள்.அய்யோ தேசப்பாதுகாப்பு என்னாவது என்றெல்லாம் வாய்ஸ் தூள் பறக்கும்.அப்படியானால் தொலைதொடர்பு துறையில் அன்னியர்களை அனுமதித்தால் அங்கு தேசபாதுகாப்பு பல்லிளிக்குமா? விமானநிலையத்தின் பொறுப்பை தனியார் ஏற்றுக்கொண்டால் அங்கு தேசப்பாதுகாப்பு என்னாகும்?



சீனாவை பார் என்பவர்களுக்காக ஒரு விவரம்.ஏழை, பணக்காரன் வித்தியாசம் பெருத்துக்கொண்டே போனால் சமுதாயத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதை சீன அரசாங்கம் உணர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 74000 முறை இதன் காரணமாக சீனாவின் கிராமப்புறங்களில் குற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன்.சீனாவை விடவும் ஊழல்வாதிகள் நிறைந்த இந்தியாவில், சாதி கொடுமைகள் நிறைந்த இந்தியாவில் இதை போன்ற ஒரு சமுதாய கொந்தளிப்பு ஏற்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

எத்தனையோ சாலை பணியாளர்கள் தற்கொலை செய்துக்கொண்டதை எண்ணிப் பாருங்கள்.படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதால் அவர்களுக்கு பேச மீடியாக்கள் முன்வரவில்லை.நமது மீடியாக்கள் முதலாளிகளின் செல்ல பிள்ளைகள் ஆகி பல காலம் ஆகிறது.


அரசுத்துறை வங்கிகளுக்கு அட்டானாமி பாக்கேஜ் என்று ஒன்றை அரசாங்கம் அறிவித்தது.ஊழியர்களை பணியில் அமர்த்துவது, அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் முதலானவைகளை அந்தந்த வங்கிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பது உள்பட பல விஷயங்கள் இந்த பாக்கேஜீல் அடங்கும். சில வங்கிகள் இதை நடைமுறைப்படுத்த முற்பட்டப்போது மீண்டும் அரசாங்கத்திடம் இருந்து ஒரு உத்தரவு இதையெல்லாம் நிறுத்தி வைக்கச்சொல்லி.

.ஐ.சி.ஐ முதலான தனியார் வங்கிகள் பொதுமக்களை உதைத்து கடன்களை வசூல் செய்து வருகின்றன்.ஆனால் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறை வங்கிகள் தங்களின் வரையறைக்குள் செயல்பட்டு லாபம் ஈட்டி வருகின்றன் என்பதையும் கவனிக்கவேண்டும்.

சர்வீஸ் டேக்ஸ் கட்டு, இன்கம்டாக்ஸ் கட்டு , தலைநிமிர்ந்து நட என்பதெல்லாம் அரசாங்கம் அனைத்து டிவியிலும் போட்டு மக்களை சிலிர்க்க வைக்கிறது. சரிதான்.ஆனால் அரசியல்வாதிகளின் சொத்து விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது அரசாங்கம்?நம்முடைய அரசியல்வாதிகள் சிங்கிள் பீடியும் கட் சாயாவும் குடித்துக்கொண்டா மக்கள் தொண்டாற்றி வருகின்றனர்?ஒரு பக்கம் நம் நாட்டின் பணத்தை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக ஓடுகிறார் குவாட்ரோச்சி.அவர்களை பாதுகாக்கும் ஆட்கள் நமது மீடியாவுக்கு தியாகிகள். இதெல்லாம் ஒரு பிழைப்பா?

33 comments:

Amar said...

/ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தால் விமானநிலையங்களை நவீனப்படுத்த முடியாதா?இதை தனியாரிடம் விட்டால்தான் செயய்முடியுமா//

தமிழினி,

நிச்சயமாக தனியாரிடம் விட்டால் தான் முடியும்.

இதுவரை இந்திய விமானநிலையங்கள் இந்தியாவின் வெட்க கேடாக தான் இருந்து வந்துள்ளன.வேண்டுமானால் இந்திய விமான பயனிகளை கேட்டு பாருங்கள்.

எந்த மேல் அதிகாரியும் வேலை வாங்க முடியாதவாறு யூனியன் அமைத்து அரசை மிரட்டி வருகின்றனர் AAI 'தொழர்கள்'.

உதாரனமாக இப்போது நடந்த வேலை நிறுத்ததில் ஒரு பயனி விமானநிலையத்தை சுத்தம் செய்தால் இவர்களுக்கு என்ன? என் அவரை மிரட்ட வேண்டும் ? சில "தோழர்கள்" வேண்டும் என்றே தன்னிர் சப்பளைகளையும் துண்டித்துவிட்டனர்.இது கொலை குற்றம் அல்லவா?

இப்படி செய்ய கூடாது என்று எந்த கம்யூனிஸ்ட தலைவரும் ஏன் சொல்லவில்லை ? மாறாக கோர்ட் உத்தரவை மதிக்க மாட்டோம் என்று தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகடனம் செய்து வந்தனர்?

இது தவறூ அல்லவா?

மேலும் தனியார்மயமாக்கல் சம்பந்தமாக எந்த நடவெடுக்கை எடுக்கும் முன்னரே அரசு AAI ஊழியர்கள் யாரும் விட்டுக்கு அனுப்பபட மாட்டார்கள் என்று உறுதி அளித்துவிட்டது.

டெண்டர் கோரும் போதே ஊழியர்களில் 40-60% சதவீதம் ஊழியர்களை அவர்கள் வேலையில் அமர்த்திகொள்ள வேண்டும் எனபது தானே Condition?

மீதம் உள்ள ஊழியர்களை AAI absorb செய்து கொண்டு விடும் என்றும் அப்போதே அறிவிக்கபட்டது.

அதை உங்களுக்கு எந்த கம்யூனிஸ்ட்டும் காட்டுவதில்லை.

அரசு பட்டையை கிளப்ப தயார் என்று தெரிந்தவுடன் கம்யூனிஸ்ட்கள் பல்டி அடித்து என்னவோ இப்போது புதிதாக போராடி அரசிடம் உத்திரவாதம் பெற்றது போல நடிக்கின்றனர்.

உன்மை என்ன?

இவர்கள் போராடும் முன்பே அமைச்சர் பட்டேல் NDTV பேட்டியின் போது கூட சொன்னார்.அதை நானும் பார்த்தேன்.60% ஊழியர்களை தனியார் வேலையில் அமர்த்தி கொண்டு விடுவர்.
மிதம் உள்ளவர்களில் 10% ஊழியர்கள் ஓய்வு பெற்று விடுவர்.மிதம் உள்ள ஊழியர்கள் AAI absorb செய்து கொள்ளும்.

இப்போது போராடி என்ன கிழித்துவிட்டனர்? (இந்திய நாட்டின் மானத்தை கப்பல் ஏற்றியதை தவிர?)

//ஸ்ட்ரைக் பண்றாங்க என்று குற்றம் சாட்டுபவர்கள் ஊழியர்கள் தங்கள் நிலையை எப்படி அரசாங்கத்திற்கு வேறுவகையில் உணர்த்துவது, தெரியப்படுத்துவது என்று கூறமுடியுமா?//

உன்னாவிரதம் இருங்கள், மனு கொடுங்கள், கோர்ட்க்கு போங்கள், சாலை ஓரத்தில் ஆர்பாட்டம் செய்யுங்கள்.

மொத்தமாக பயனிகளுக்கு எந்த இடையூறும் செய்யாமல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்!

இப்போது நடந்த போராடத்தில் பயனிகளுக்கு இடையூறு செயததை தவிற வேறு ஒன்றுமே செய்யவில்லை.

இப்போது இவர்கள் செயதது ஒரு கேவலமான Blackmail.

அதுவும் பல இடங்களில் பயனிகளுக்கு trolleyகள், தன்னிர், கழிவறை ஆகியவற்றை தனியார் செய்து கொடுக்க முயன்ற போது அவர்களை அடித்துவிரட்டி உள்ளனர் கம்யூனிஸ்ட்கள்.

இதை blackmail என்று தான் சொல்ல முடியுமே தவிர போராட்டம் என்று ஏற்றுகொள்ள முடியாது.

//வயிற்றில் அடிக்காமலும் இதையெல்லாம் நிறைவேற்றலாம். //

தனியார்மயத்தால் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதே தவிற குறையவில்லை தமிழினி.

Statistical data எடுத்து பாருங்கள்.
சும்மா வாய்பேச்சு வேலை வேண்டாம்.

அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

உன்மையை statistical data மட்டுமே காட்டும்.

அதை காட்டி தனியார்மயமாக்கல் நாட்டில் வேலைவாய்ப்பை குறைத்து உள்ளது என்று உங்களால் நிருபிக்க முடியுமா?

அராயந்து பாருங்கள்.

குழலி / Kuzhali said...

//உன்னாவிரதம் இருங்கள், மனு கொடுங்கள், கோர்ட்க்கு போங்கள், சாலை ஓரத்தில் ஆர்பாட்டம் செய்யுங்கள்.
//
நம்ம நாட்டில் உண்ணாவிரதத்திற்கும் மனு கொடுப்பதற்கும் மதிப்பு வந்ததும் இப்படி மனு கொடுத்தால் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தும் என்பதும் எனக்கு இதை படித்த பிறகு தான் தெரியவந்தது....அய்யோ... அய்யோ.... நாண்தேன் ஒலகம் தெரியாத புள்ளாண்டானா இருந்திருக்கேன்...

Muthu said...

//நிச்சயமாக தனியாரிடம் விட்டால் தான் முடியும்//
இந்த தீர்ப்புக்கு என்னிடம் பதில் இல்லை...நான் தான் கூறி இருந்தேனே..ஸ்டேட் பாங்க், ஓ.என்.ஜீ.சி எல்லாம் தனியார் நிறுவனங்களா? எத்தனையோ அரசுத்துறைகள் ஒழுங்காக நடக்கவில்லையா?
ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.அது போல் தான் இருக்கிறது நீங்கள் சொல்லும் யூனியன் அமைத்து அரசை மிரட்டும் கதை....நிர்வாகத்தின் திறமையைத்தான் இது காட்டுகிறது.....

//டெண்டர் கோரும் போதே ஊழியர்களில் 40-60% சதவீதம் ஊழியர்களை அவர்கள் வேலையில் அமர்த்திகொள்ள வேண்டும் எனபது தானே Condition?//

எத்தனை நாட்களுக்கு என்று நீங்கள் சொல்லவில்லை?
60 சதவீதம் போக மீதம் உள்ளவர் சாகலாமா? அல்லது தனியார் கம்பெனியில் போட்டால் அவர்களுக்கு பணிபாதுகாப்புதான் உண்டா?

//உன்னாவிரதம் இருங்கள், மனு கொடுங்கள், கோர்ட்க்கு போங்கள், சாலை ஓரத்தில் ஆர்பாட்டம் செய்யுங்கள்.//

ஆமாய்யா..நாங்கள் ரோட்டு ஓரத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம்.நீங்கள் நாட்டை வித்துட்டு ஏ.ஸி கார்ல போங்க....

//தனியார்மயத்தால் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதே தவிர குறையவில்லை தமிழினி.//

இதை பற்றி நான் எங்கே சொல்லி இருக்கிறேன் அய்யா..திரிக்காதீங்க சாமி.."அலுப்பா இருக்கு"... நான் என்ன சொல்லி உள்ளேன் என்பதை மீண்டும் படிக்கவும். கம்யூனிஸ்ட் என்பதும் நீங்களாக அவர்கள் கருத்தை உருவாக்க வேண்டாமே...நான் கொடுத்த சில Statistical data என்னாச்சு? (குறிப்பாக சீனா பற்றி)


ஆனால் பொதுவாக..

நீங்க சொல்றது எந்து துறையில் அய்யா? ஒரு மில்லியன் பேர் கணிணி தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார்கள்....ஆனால் 40 மில்லியன் வேலையில்லாத ஆட்களும் இங்குதான் உள்ளனர்.அவங்களை எல்லாம் நாடு கடத்தி விடலாமா?

Amar said...

//ஸ்டேட் பாங்க், ஓ.என்.ஜீ.சி எல்லாம் தனியார் நிறுவனங்களா? எத்தனையோ அரசுத்துறைகள் ஒழுங்காக நடக்கவில்லையா? //

பின்னர் எதறக்கு ஓ.என்.ஜீ.சி மிட்டல் என்ற தனியார் நிறுவனத்துடன் இனைந்து செயல்படுகிறது?

இவர்கள ஒரு monopoly போல செயல்படும் போது லாபம் ஈட்டுவது பெரிய அதிசயம் அல்ல.

இப்போது சில ஆண்டுகளாக தான் இந்த monopoly அழிக்கபட்டுள்ளது.

அதற்க்குல் ICICI வங்கி SBIஐ விட பெரிய வங்கியாக உருவெடுத்துவிட்டது.

ஸ்டெட் பாங்க தனியார் வசம் இருந்தால் இன்னும் அதிக வளர்ச்சியை கண்டு இருக்கும் என்ற உன்மையை இப்படியும் மறைக்க முடியுமா தமிழினி?


//எத்தனை நாட்களுக்கு என்று நீங்கள் சொல்லவில்லை?
60 சதவீதம் போக மீதம் உள்ளவர் சாகலாமா? அல்லது தனியார் கம்பெனியில் போட்டால் அவர்களுக்கு பணிபாதுகாப்புதான் உண்டா?//

நிரந்தர பனி தான்.

60 சதவீதம் போக மிதம் உள்ளவர்கள் AAIயில் வேலையை தொடரலாம் என்றும் இரண்டு முறை எழுதிவிட்டேனே!

அதை தான் இந்திய அரசும் சொல்லி கொண்டு இருக்கிறது.

இது மட்டும் கம்யூனிஸ்டகளின் கன்களுக்குபடாதது எனோ?

//ஆமாய்யா..நாங்கள் ரோட்டு ஓரத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம்.நீங்கள் நாட்டை வித்துட்டு ஏ.ஸி கார்ல போங்க....//

சம்பாரிக்க திறமை உள்ளவன் ஏ.ஸி காரில் சென்றால் உங்களுக்கு என்ன வந்தது?(அவர் சட்டவிரோதமாக சம்பாரிக்கவில்லை என்றவரை)

உங்கள் உரிமைகள் சுத்தம் செய்யும் பொதுமக்களை தாக்கி விரட்டுது அல்ல! தன்னிர் சப்பளையை நிறுத்துவது அல்ல!

இவை ரவுடிகள் செய்யும் வேலைகள்.
(பொதுவாக தோழர்கள் அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்)

//நீங்க சொல்றது எந்து துறையில் அய்யா//

அனைத்து துறைகளிலும் தான்

//ஆனால் 40 மில்லியன் வேலையில்லாத ஆட்களும் இங்குதான் உள்ளனர்.அவங்களை எல்லாம் நாடு கடத்தி விடலாமா? //

அவர்களுக்கும் தனியார் மயமாக்கல் மூலமாக தான் வேலை கிடைக்கும்.கிடைக்கிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு தனியார் தான் காரனம்.

அவர்களால் தான் இன்று நன்றாக படித்துவிட்டு வரும் மானவர்களுக்கு வேலை கிடைக்கிறது - அனைத்து துறைகளிலும்.

தனியார்மயமாக்கலுக்கு முன்பு வரை வேலைவாய்ப்பு ஆபீஸில் பதிவு செய்து விட்டு எப்போது அரசு வேலை கிடைக்கும் என்று வறுமையில் வாடிக்கொண்டு இருந்த இந்திய வாலிபர்களுக்கு இப்போது விடிவுகாலம்!

Amar said...

//ஒரு மில்லியன் பேர் கணிணி தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார்கள்....ஆனால் 40 மில்லியன் வேலையில்லாத ஆட்களும் இங்குதான் உள்ளனர்//

தமிழினி,

மறைமுக வேலைவாய்ப்பு என்று எதையாவது கேள்விபட்டு உள்ளிர்களா தழிழினி?

அதாவது கனினி தொழில்நுட்பத்துறையில் வேலை செய்வோர் அவர்கள் வாங்கும் சம்பளத்தை வீடு வாங்குவார்கள் - இதனால் வீடுகட்டும் தொழிளாலிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

துனி வாங்கினால் - Tailor முதல் துனி தைக்க ஊசி செய்யும் ஊழியர்கள் வரை வேலை கிடைக்கிறது.

வாகனம் வாங்கினால் - உள்ளூரில் இருக்கும் மெக்கானிக் முதல ஆயில் விற்பனை செய்யும் கடைகாரனுக்கு buisness!

அவனும் காசை என்ன மன்னில் புதைத்து வெய்பது இல்லை...அவன் செலவு செய்வான்.

இப்படி இது ஒரு Cycle.
இப்படி தான் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.அதை தான் சீனாவிலும் செய்து வருகிறார்கள்.(அங்கே இருக்கும் கொத்துஅடிமைகளை பற்றி மறந்து போவதும் இந்திய கம்யூனிஸ்டகளின் featureகளில் ஒன்று)

இந்த Cycle அனைத்தும் அரசுடமையாக இருந்தால் நடக்காது.அதை தான் சோவியத் யூனியன் நமக்கு பாடமாக கற்றுதந்தது.

சந்திப்பு said...

வேறு யாரும் எழுதுவதற்கு துணியாத ஒரு பொருளில் எழுதியுள்ளீர்கள். வேலை நிறுத்தம் என்றாலே ஏதோ தொழிலாளிகள் தாங்களாகவே திட்டமிட்டு ஏற்படுத்துவதாகத்தான் சில அதிமேதாவிகள் கருதுகிறார்கள். உண்மை என்ன? எந்த வொரு நிறுவனத்திலும் வேலை நிறுத்தம் என்று போவதற்கு முன்னால் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் என தொடர்ச்சியான இயக்கங்களை மேற்கொண்டு பின்னர் நிர்வாகம் எதற்கும் பிடிகொடுக்காமல் தொழிலாளிகளை பழிவாங்க நினைக்கும்போதுதான் வேலை நிறுத்தம் என்ற முடிவுக்கே தொழிலாளிகள் செல்கிறார்கள்.

இந்தியாவில் பல பேருக்கு வேலை நிறுத்தம் என்றாலே அது ஏதோ தொழிலாளிகளின் சதி என்ற நினைப்பே வருகிறது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தற்போது இந்தியாவின் நிலைமையே மாறி விட்டது. முன்பெல்லாம் வேலை நிறுத்தம் என்றால் சிறு தொழிற்சாலைகளிலும், பெரும் தொழிற்சாலைகளிலும்தான் நடக்கும் மத்தியதர ஊழியர்கள் பணிபுரியக்கூடிய வங்கி, இன்சூரன்°, விமானத்துறை போன்றவற்றில் வேலை நிறுத்தம் என்பது மிக அபூர்வம். ஆனால் ராஜிவ்காந்தி காலத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் புதிய பொருளாதார கொள்கையால், அதுவும் குறிப்பாக சேவைத்துறைகளை முழுக்க அந்நியருக்கும், தனியாருக்கும் தத்துக்கொடுக்கும் நிலை ஏற்பட்டதால் நாடு முழுவதும் வங்கித்துறையிலும், இன்சூரன்° துறையிலும், டெலிகாம், தபால், இரயில்வே... என பல துறைகளில் உள்ள இலட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழலில்தான் இவர்களே ரோட்டுக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் உயரத்தில் பறந்து கொண்டிருந்தவர்கள் விமான நிலைய ஊழியர்கள். இன்று அவர்களே தரையில் நடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

வேலை நிறுத்தத்திற்கு வக்காலத்து வாங்கும் அதி மேதாவிகளுக்கு பணம் பறந்து செல்வதில் மட்டும்தான் குறியாக இருக்குமே தவிர தொழிலாளிகள் பறக்கடிக்கப்படுவதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு என்ன கவலை?

சமுத்ராவின் பதிவை பார்த்தீர்களா? அதற்கு என்னுடைய தளத்தில் நேரடியாகவே பதில் கொடுத்து விட்டேன். அவர் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கிறார். மனசாட்சி இருக்கிறதா என்று சூடாக கேட்கத் தோன்றுகிறது. அவரை புண்படுத்த அல்ல. சமூகத்தின் மீதான அவர்களது பார்வை மங்கி வருவதை கண்டு.

சந்திப்பு said...

சமுத்ரா! உங்களது பதிவில் நீங்கள் பா.ஜ.க.வின் ஆதரவாளர் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் ஆதரிக்கும் அநேகமாக நீங்கள் பா.ஜ.க.வின் ஆதரவாளர் என்பதை விட சங்பரிவாரின் அங்கம் என்றுதான் நினைக்கிறேன். சரியா?

1. உங்களுடைய பா.ஜ.க. ஏன் -பாரதீய மசுத்தூர் யூனியன்- என்று தொழிலாளர் அமைப்பை வைத்துள்ளதே எதற்காக? முதலாளிகளுக்கு எடுபிடி வேலை செய்யவா?

2. தனியாரால்தான் வேலைவாய்ப்பும், வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக புளகாங்கிதம் அடைகிறீர்களே! இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் (சாரி! அதில் உங்களுக்கு எந்த பங்கும் இல்லை. வாஜ்பாய் காட்டிக்கொடுத்தவர், சவர்க்கார் மன்னிப்பு கடிதம் கொடுத்தவர்...) இங்கே இருந்த முதலாளிகள் டாட்டாவும், பிர்லாவும் ஏன் சொந்தமாக இரும்பு உருக்காலைகளையும், பெரிய தொழிற்சாலைகளையும் ஆரம்பிக்கவில்லை.

ஒரே பதில்தான்! அப்போது அவர்களிடம் காசு இல்லை. இந்திய அரசு மறைமுகமாக பொதுத்துறை என்று ஏற்படுத்தி மறைமுகமாக அவர்களுக்கு வக்காலத்து வாங்கியது. தற்போது கொழுப்பேறிய பன்றியாக மாறிவிட்டபின்னர் டாட்டாவும், பிர்லாவும், இன்னும் பலரும் இப்போது போட்டி போடுவது மேலும் கொள்ளையடிக்கத்தான் உங்களைப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை இந்தியா ஏழைகள் - ஏமாளிகளாகவும் - செத்த பிணமாகவும் இருக்க வேண்டியதுதான் உங்களது கல்வி அறிவின் பயன்? யாருக்கு சேவை செய்கிறது என தூங்குவதற்கு முன் சற்று யோசியுங்கள்...

Muthu said...

/பின்னர் எதறக்கு ஓ.என்.ஜீ.சி மிட்டல் என்ற தனியார் நிறுவனத்துடன் இனைந்து செயல்படுகிறது?//

அப்ப ஓ.என்.ஜீ.சி லாபம் ஈட்டுவதற்கு காரணம் மி்ட்டல் நிறுவனம் என்கிறீர்களா?

//இவர்கள ஒரு monopoly போல செயல்படும் போது லாபம் ஈட்டுவது பெரிய அதிசயம் அல்ல.இப்போது சில ஆண்டுகளாக தான் இந்த monopoly அழிக்கபட்டுள்ளது.அதற்க்குல் ICICI வங்கி SBIஐ விட பெரிய வங்கியாக உருவெடுத்துவிட்டது.ஸ்டெட் பாங்க தனியார் வசம் இருந்தால் இன்னும் அதிக வளர்ச்சியை கண்டு இருக்கும் என்ற உன்மையை இப்படியும் மறைக்க முடியுமா தமிழினி?//

ஸ்டேட் வங்கி இந்தியாவின் பெரிய வங்கி என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தது தவறா? சரிங்க சார்...

ஐ.சி.ஐ.சி.ஐ பொதுமக்களை உதைத்து பணம் வசூல் செய்வதை பற்றி ஏதாவது எழுதுங்கள்...

திடீர் திடீர் என்று தனியார் வங்கிகள் திவாலாகி விடுவதை பார்த்து இருக்கிறீர்களா சமுத்திரா? பணம் போட்ட போண்டிகளை பற்றி என்னைக்காவது கவலைப்பட்டு உள்ளீர்களா?

என்ரான் கம்பெனி பற்றி உங்கள் மேலான கருத்து என்ன?

//சம்பாரிக்க திறமை உள்ளவன் ஏ.ஸி காரில் சென்றால் உங்களுக்கு என்ன வந்தது?(அவர் சட்டவிரோதமாக சம்பாரிக்கவில்லை என்றவரை)//

இந்த பதில் திரிக்கப்பட்டது இல்லையா? நான் கேட்டதுக்கும் இதுக்கும் என்ன சாமி சம்பந்தம்? சம்பாதிக்க திறமை உள்ளவனை நாங்க எதுவுமே சொல்லல சாமி...சட்டவிரோதம் எதுன்னு எப்படி சொல்வீங்க சார்.....இப்ப இருக்கிற ட்டங்கள்படியா?....குவாட்ரோச்சியை கேக்கலாமா?

//மறைமுக வேலைவாய்ப்பு என்று எதையாவது கேள்விபட்டு உள்ளிர்களா தழிழினி?//

இல்லீங்க...நீங்க சொன்னீங்கன்ன நாங்க கேட்டுக்கறோம்.

//அதாவது கனினி தொழில்நுட்பத்துறையில் வேலை செய்வோர் அவர்கள் வாங்கும் சம்பளத்தை வீடு வாங்குவார்கள் - இதனால் வீடுகட்டும் தொழிளாலிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்//

அப்படியா

//துனி வாங்கினால் - Tailor முதல் துனி தைக்க ஊசி செய்யும் ஊழியர்கள் வரை வேலை கிடைக்கிறது..//

ம்..அப்புறம்...

//இப்படி இது ஒரு Cycle.//

ஓகே...சந்தோஷம்...எங்களுக்கு அது தெரியாது...
.
நாங்க இதைப்பத்தி இங்க பேசலை என்பதை மட்டும் இங்கு சொல்லி வைக்கிறேன்.(இவர் வீடு கட்டுவாராம்.நாம் அங்க வந்து கல் சுமக்கணுமாம்..என்னவோ போங்க...)

சமுத்ரா,
நானும் சின்ன வயசில இப்படித்தான் பேசிட்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா மற்ற விஷயங்களும் புரியும்போது இந்த ஒன் டைமன்சனல் வியூ உங்களுக்கு மாறும்..அதுவரை ரெடிமேட் சொல்யூசன்ஸ் உடன் சந்தோஷமாக இருக்கவும்.....
ஏழை பணக்காரன் வித்தியாசம் அதிகரிக்கும்போது சமுதாய சமநிலை பாதிக்கப்படும் என்று சொல்லியிருந்தேனே..அதைப்பற்றி சேறு வாறி இறைக்க எதுவுமில்லையா?

குழலி / Kuzhali said...

//நானும் சின்ன வயசில இப்படித்தான் பேசிட்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா மற்ற விஷயங்களும் புரியும்போது இந்த ஒன் டைமன்சனல் வியூ உங்களுக்கு மாறும்..
//
நானும் தான்.... சில மொக்கைத் தனமான கருத்துகள் மாறியது மக்களை பார்த்தபின் தான்.... அது வரை நானும் என் குடும்பமும் மட்டுமே உலகமாக எண்ணியிருந்தேன்....

Muthu said...

வருகைக்கு நன்றி குழலி...(ரொம்ப நாளா காணோமே)...

நியோ / neo said...

>> உங்கள் உரிமைகள் சுத்தம் செய்யும் பொதுமக்களை தாக்கி விரட்டுது அல்ல! தன்னிர் சப்பளையை நிறுத்துவது அல்ல!

இவை ரவுடிகள் செய்யும் வேலைகள்.
(பொதுவாக தோழர்கள் அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்) >>

இந்த சமுத்ரா 21 வயதுப் பையனா? பாவம்! 'ஷாகா'வில் மூளையைக் குழப்பி விட்டிருக்கிறார்கள் போல!

அது கிடக்கட்டும்! இது போன்ற 'வசனங்களை' சில தோழர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதும், தேவையற்ற இடங்களில் 'தோழர்' பெருமை பேச வருவதும் ஒரே புதிராய் உள்ளதே!

Amar said...

ஒரு தனிமனிதனின் கருத்துக்களை எதிர்த்து எழுதுவதைவிட்டு அந்த மனிதனை தாக்குவதில் சிலருக்கு என்னதான் ஆனந்தமோ!

//பணம் போட்ட போண்டிகளை பற்றி என்னைக்காவது கவலைப்பட்டு உள்ளீர்களா?//

தமிழினி அவர்களே, தனியார் வங்கிகளில் யாரும் பனத்தை போட்டு போண்டியாகவில்லை.

கடைசியாக Global Trust Bank விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா?

//நானும் சின்ன வயசில இப்படித்தான் பேசிட்டிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமா மற்ற விஷயங்களும் புரியும்போது இந்த ஒன் டைமன்சனல் வியூ உங்களுக்கு //

நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை வெய்த்து நான் இப்படி, இதனால் தான் பேசிகிறேன் என்று எப்படி கூற முடியும் ?

அல்லது நான் இப்படி தான் வளர்ந்தேன் என்று நீங்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு எழுதுகின்றீர்களா?

உங்களை என்னையும் ஏன் compare செய்யவேண்டும் ?

எனது கருத்தகளை மட்டும் எதிர்கொள்ளவும்.

ஒருவர் 20 வருடம் என்னைவிட மூத்தவர் என்பதால் மட்டும் யாரும் அறிவாளியாகிவிட முடியுமா?

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரவுடிதனம் செய்தால் banking ombudsman என்ற சமாச்சாரம் உள்ளதே?

இதுவரை கூட்டுறவு வங்கிகள் திவாலாகவில்லையா?

உன்னாவிரதம் இருப்பதையும், ஆர்பாட்டம் செய்வதையும் கேலி செய்யும் நீங்கள் கிட்டதட்ட கம்யூனிஸ்டகள் இந்த வேலைநிறுத்ததின் போது செய்த ரவுடித்தனமான செயல்களை நியாயபடுத்துவது போல இருக்கின்றது.

பயனிகளை அடிக்க வருவது தான் வேலைநிறுத்த உரிமையா என்ன?

தன்னீர் சப்பளையை நிறுத்துவதும் வேலைநிறுத்த உரிமையா ?

Muthu said...

//ஒரு தனிமனிதனின் கருத்துக்களை எதிர்த்து எழுதுவதைவிட்டு அந்த மனிதனை தாக்குவதில் சிலருக்கு என்னதான் ஆனந்தமோ!//

தனி மனிதனை தாக்குவது தவறுதான்.ஆனால் அதை இங்கு ஏன் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.இதை அடிக்கடி கூறுகிறீர்கள்.ஏன்?

//கடைசியாக Global Trust Bank விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா?//

தெரியும், இன்னொரு அரசு வங்கிதான் உதவிக்கு வந்ததாக ஞாபகம்.

//உங்களை என்னையும் ஏன் compare செய்யவேண்டும் ?
எனது கருத்தகளை மட்டும் எதிர்கொள்ளவும்.
ஒருவர் 20 வருடம் என்னைவிட மூத்தவர் என்பதால் மட்டும் யாரும் அறிவாளியாகிவிட முடியுமா?//

நல்லது..இதைத்தான் (கம்பெர் செய்ததை) தனிமனித தாக்குதல் என்றீர்களா? நான் என்னமோ என்று நினைத்தேன். grow up.

//உன்னாவிரதம் இருப்பதையும், ஆர்பாட்டம் செய்வதையும் கேலி செய்யும் நீங்கள் கிட்டதட்ட கம்யூனிஸ்டகள் இந்த வேலைநிறுத்ததின் போது செய்த ரவுடித்தனமான செயல்களை நியாயபடுத்துவது போல இருக்கின்றது.
பயனிகளை அடிக்க வருவது தான் வேலைநிறுத்த உரிமையா என்ன?
தன்னீர் சப்பளையை நிறுத்துவதும் வேலைநிறுத்த உரிமையா ? //

இந்த பத்தியில் பொருட்குற்றம் உள்ளது. மேலும் இதையெல்லாம் நான் எங்கே ஆதரித்தேன்?

சமுத்ரா, நீங்கள் அடிக்கடி தனிமனித தாக்குதல் அது இது என்று புலம்புகிறீர்கள். எங்கே தாக்குதல் என்ன என்று விளக்கமாக கூறவும்.அனுதாப ஓட்டு கேட்க வேண்டாம்.இங்கு எல்லோரும் வளர்ந்தவர்கள் தான்.
இன்றுவரை நான் திராவிட ராஸ்கல் என்று நீங்கள் கூறியதை எதுவும் கேட்கவில்லை.உண்மையில் அதுதான் தனிமனித தாக்குதல்.ஓ.கே வா.

Amar said...

//தனி மனிதனை தாக்குவது தவறுதான்.ஆனால் அதை இங்கு ஏன் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை.இதை அடிக்கடி கூறுகிறீர்கள்.ஏன்?//

தமிழினி அவர்களே, எனது கடைசி பின்னூட்ட்திற்க்கு முன்னர் ஒருவர் எழுதியுள்ளாரே....

ஷாகாவில் சுதேசி கொள்கை தான் பேசுவார்கள்.என்னை போல தனியார்மயமாக்கலுக்கு அதரவு தெரிவிக்கமாட்டார்கள்.

தவிற நான் எழுதியுள்ள விஷயத்தில் எதாவது தவறு இருந்தால் சுட்டிகாட்டலாம், அதைவிடுத்து நான் ஷாகாவுக்கு போகிறேன் என்று சொல்வதால் இங்கு என்ன நடந்துவிடும் ?

நான் ஷாகாவுக்கு போவதை இவர் வந்து பார்த்தாரா என்ன?
இது ஒரு தெவையில்லாத வேலை தானே?

எதற்க்காக இப்படி எழுதவேன்டும் ?

Whats the intention behind such a comment other than slander?


//தெரியும், இன்னொரு அரசு வங்கிதான் உதவிக்கு வந்ததாக ஞாபகம்.//

சரியாக வங்கியை நடத்தாவிட்டால் ரிசர்வு வங்கி அப்படி தான் செய்யும்.
(யு.டி.ஐ யிலும் ஒரு மோசடி நடந்தே)

//நல்லது..இதைத்தான் (கம்பெர் செய்ததை) தனிமனித தாக்குதல் என்றீர்களா? நான் என்னமோ என்று நினைத்தேன். க்ரொந் உப்.//

நான் அங்கே உங்களை சொல்லவில்லையே தமிழினி.

//இந்த பத்தியில் பொருட்குற்றம் உள்ளது. மேலும் இதையெல்லாம் நான் எங்கே ஆதரித்தேன்?

சமுத்ரா, நீங்கள் அடிக்கடி தனிமனித தாக்குதல் அது இது என்று புலம்புகிறீர்கள். எங்கே தாக்குதல் என்ன என்று விளக்கமாக கூறவும்.அனுதாப ஓட்டு கேட்க வேண்டாம்.இங்கு எல்லோரும் வளர்ந்தவர்கள் தான்.
இன்றுவரை நான் திராவிட ராஸ்கல் என்று நீங்கள் கூறியதை எதுவும் கேட்கவில்லை.உண்மையில் அதுதான் தனிமனித தாக்குதல்.ஓ.கே வா.//

நியோவின் கமென்டைபற்றி தான் நான் பேசியது.
உங்களை பற்றி பேசியதாக தவறாக நினைக்க வேன்டாம்.

தமிழ்மனத்தில் உள்ளவர்களின் அனுதாப ஓட்டுக்களை வாங்கி நான் செய்யமுடியும் ?

சந்திப்பு said...

---ஷாகாவில் சுதேசி கொள்கை தான் பேசுவார்கள்.என்னை போல தனியார்மயமாக்கலுக்கு அதரவு தெரிவிக்கமாட்டார்கள்.---

ஓ...ஹோ... அப்படியா சங்கதி! படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் சரிங்களா சாமி.

முகமூடி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் நல்ல இலாபத்தில் ஓடிக் கொண்டிருந்த பால்கோ என்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்த்தார்! வாஜ்பாய் முகமூடி அணிந்திருப்பதால் அவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன் சரியா!

2006-ல நல்ல ஜோக் “சங்பாரிவாரின் சுதேசி”!

நியோ / neo said...

>> இன்றுவரை நான் திராவிட ராஸ்கல் என்று நீங்கள் கூறியதை எதுவும் கேட்கவில்லை.உண்மையில் அதுதான் தனிமனித தாக்குதல்.ஓ.கே வா.// >>

அது போன்ற நாலாந்தரமான 'கமெண்ட்' அடித்தத்தே இந்த சமுத்ராதான்! அதைச் சுட்டிக் காட்டினால் 'தனிமனித தாக்குதலாம்' நல்ல ஜோக்! :)

இவர் 'ஷாகா'வுக்குப் போயிருக்கிறேன் என்கிறாரா அல்லது போகவில்லை என்கிறாரா?!

அல்லது 'ஷாகா'வுக்குப் போனவர்கள் பற்றி ஒன்றும் சொல்லக்கூடாது என்று ஆணையிருக்கிறதா?!

வருணாஸ்ரம வெறியூட்டி வளர்க்கப்படுகிற ஒரு கும்பலின் கைப்பிள்ளை உளறுவதை முதலில் நிறுத்தட்டும்.

- இப்படிக்கு "அரக்கர் தளபதி"

நியோ :))

Muthu said...

//நான் ஷாகாவுக்கு போவதை இவர் வந்து பார்த்தாரா என்ன?
இது ஒரு தெவையில்லாத வேலை தானே?
எதற்க்காக இப்படி எழுதவேன்டும் ?
Whats the intention behind such a comment other than slander?//

ஷாகாவிற்கு போவது அவ்வளவு அவமானகரமான விஷயமா என்ன?
அதை தனிமனித தாக்குதல் என்று கூறிவிட்டீர்களே?

பல்வேறு இடங்களில் உங்களின் கருத்துக்களை தொகுத்து அவர் நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர், பி.ஜே.பி அனுதாபி என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.அதை ஏன் தனிமனித தாக்குதல் என்று பெரிதுபடுத்துகிறீர்கள்.

நான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பியில் இல்லை என்று சொல்லிவிடுங்கள். முடிந்தது விஷயம்.பிரச்சினை என்று வரும்போது வாஜ்பாயியே மன்னிப்பு கடிதம் கொடுத்து நழுவினாராம். நம்ப எல்லாம் சுண்டைக்காய்.என்ன சொல்றீங்க?

Neo,

வலதுசாரி பார்வையும் நாட்டுக்கு அவசியமே..ஆகவே சற்று கடுமையை குறையுங்கள் ஐயா...

சமுத்ரா இளைஞர்..

சற்று வேகமாக இருந்தாலும் நாம் தான் பொறுத்து போகவேண்டும்...

Amar said...

//2006-ல நல்ல ஜோக் “சங்பாரிவாரின் சுதேசி”!//

சந்திப்பு,

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.
சங்கத்தவர் இன்னும் சுதேசி கொள்கைகள் கொன்டவர்கள் தான்.

இந்திய அரசியலில் வி.பி.சிங் போன்ற சில நறிகளை தவிற இது வரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் அவர்களுக்கு முன்னர் நாட்டை ஆன்ட அரசுகளின் கொள்கைகளை பெரும்பாலும் பின்பற்றுவர்.

தனியார்மயமாக்களும் அதே போல தான்.

Is it hard for a educated man to realise that policy decisions of the Government of India are seldom changed to suit paltry party politics ?

Please note that the word 'education'would refer to the things taught in schools and colleges and not what they teach in communist bastions/shakas/madrassas.

Amar said...

//இவர் 'ஷாகா'வுக்குப் போயிருக்கிறேன் என்கிறாரா அல்லது போகவில்லை என்கிறாரா?! //

அதை ரோட்டில் போகும் சிலரின் சில்லறை வாதங்களுக்காக நான் வெளியிட தேவையில்லை.

//வருணாஸ்ரம வெறியூட்டி வளர்க்கப்படுகிற ஒரு கும்பலின் கைப்பிள்ளை உளறுவதை முதலில் நிறுத்தட்டும்.//

திராவிட வெறியர்களுக்கு கீதையின் மகத்துவம் தெரியாமல் இருப்பது நியாயமே!

சரி, ரோஷம் இருந்தால் முதலில் "திராவிடர்கள்" தமிழில் அவர்களுக்கு ஒரு பெயரை தேடிகன்டுபிடிக்கட்டும்.

ஏன் வெட்கம் இல்லாமல் சம்ஸ்கிரத பெயரை வெள்ளைதோலுடன் ஒரு பிஷப் சொன்னவுடன் எற்றுகொன்டு இதுவரை சிந்திக்க திரானியில்லாமல் பூம்-பூம் மாடுகளை போல தலையாட்ட வேன்டும்?

//- இப்படிக்கு "அரக்கர் தளபதி"//

உங்களுக்கு நிங்களே இப்படி "பட்டம்" கொடுத்துகொன்டால் தான் உன்டு.

Muthu said...

சரி விடுங்கள் சமுத்திரா,

எனக்கு ஒரு சந்தேகம்தான்..வி.பி.சிங் எப்படி நரி ஆனார் என்று எனக்கு விளக்க முடியுமா? எனக்கு தெரிந்து அவர் கைசுத்தமான ஒரு மனிதர்.ராஜீவ் காந்தி அடித்த கூத்துக்களை எல்லாம் தட்டி கேட்டவர்..

மண்டல் கமிஷன் அவரின் சாதனையில் ஒரு மகுடம்.எதை வைத்து அவரை நரி என்கிறீர்கள்?

சந்திப்பு said...

ஆமா சமுத்ரா எங்களுக்கு அரசின் கொள்கை முடிவு பற்றியெல்லாம் தெரியாது! ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. அது 13 நாள் ஆட்சியா இருந்தாலும் 13 மாத ஆட்சியாக இருந்தாலும் இந்தியாவை விக்கிறதுல மட்டும் சங் சுதேசிகளுக்கு பேரானந்தம்.

என்ரானை அரபிக் கடலில் தூக்கி எறிவோம்னு சொன்னவங்க நீங்க.... வாஜ்பாய் 13 ஆட்சியிலேயே முதல்ல கையெழுத்து போட்டதே என்ரானை கொண்டாரத்தான். இதுதான் சங் சுதேசி!

தெகல்கா இராணுவ ஒப்பந்தத்திலேயே கை வைத்த சுதேசிகளை நாடு கண்டு விட்டது. அதனாலத்தான் இப்போ தாமரையை சீண்டக்கூட ஆளில்லாம இருக்காங்க... ஏதோ சங் வேற பா.ஜ.க. வேற-ன்றா மாதிரியான முகமூடி வேலைகளுக்கெல்லாம் தமிழ்மணத்தினர் மசிய மாட்டார்கள்.

Amar said...

//பல்வேறு இடங்களில் உங்களின் கருத்துக்களை தொகுத்து அவர் நீங்கள் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர், பி.ஜே.பி அனுதாபி என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.அதை ஏன் தனிமனித தாக்குதல் என்று பெரிதுபடுத்துகிறீர்கள். //

சரி, அடுத்து நீங்கள் ஒரு பதிவு எழுதும் போது "பாவம்.....கம்யூனிஸ்ட்கள் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்கள்.அது தான் இப்படி பேசிவிட்டார்" என்று ஒரு பின்னூட்டம் வரும்.

அதற்க்கும் நீங்கள் எழுத போகும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
அதனால் உங்களுக்கோ உங்கள் பதிவுகளை படிப்பவர்களுக்கோ எந்த பயனும் இருக்காது.

நானும் உங்களின் கருத்துக்களை படித்துவிட்டு உங்களை மூலைச்சலவை செய்துவிட்டார்கள் என்று முடிவுகட்டி விடுகின்றேன்.

எழுதுபவரின் எழுத்தை தவிற மற்ற அனைத்தையும் விமர்சனம் செய்ய வேன்டும்.இப்படி செய்வதால் தான் மிக நல்ல "விவாதம்" நடைபெறும் என்று முடிவுகட்டியாகிவிட்ட பின்னர் நான் சும்மா இருந்தால் நன்றாக இருக்காது.

இதையும் அடுத்த முறை நீங்கள் "தமிழ்மனத்தில் காலம் தள்ளுவது எப்படி" என்று எதாவது பதிவு போட்டால் சேர்த்து விடுங்கள்.

Amar said...

//சரி விடுங்கள் சமுத்திரா,

எனக்கு ஒரு சந்தேகம்தான்..வி.பி.சிங் எப்படி நரி ஆனார் என்று எனக்கு விளக்க முடியுமா? எனக்கு தெரிந்து அவர் கைசுத்தமான ஒரு மனிதர்.ராஜீவ் காந்தி அடித்த கூத்துக்களை எல்லாம் தட்டி கேட்டவர்..

மண்டல் கமிஷன் அவரின் சாதனையில் ஒரு மகுடம்.எதை வைத்து அவரை நரி என்கிறீர்கள்? //

Europe-based industralist Hinduja brothers today claimed that former Prime Minister V P Singh had attempted to extract a statement from them against Rajiv Gandhi in the Bofors case.

Former Prime Minister V P Singh was one of the signatories to the letter of intent (LoI) issued to the Swedish Bofors company for supply of four hundred 155 mm Howitzer guns in his capacity as finance minister during the regime of late prime minister Rajiv Gandhi.

at no point of time did I make the charge that Rajiv personally took money in the Bofors affair.

முத்துகுமரன் said...

முத்து

ஆண்டைகளை பின்பற்றாதவர் அவர் கண்ணிற்கு நரியாக தெரிவது தவறாகாது.

சங்கத்தவரின் சுதேச கொள்கைகள்தான் ஊரறிந்ததே. அடகு வைத்தலை முன்னேற்றம் என்று சொல்லி பீற்றிக் கொள்வது வெட்கங்கெட்ட அவர்களால் மட்டுமே முடியும்.....

சமுத்ரா பற்றிய உங்கள் நம்பிக்கைக்கு என் வாழ்த்துக்கள். உண்மையிலே உங்களுக்கு மிகப் பெரிய மனசுதான்

Muthu said...

என்னை பற்றி எழுதியுள்ளது பிரசுரிக்கப்பட்டுள்ளது...

இன்னொருவரை பற்றி எழுதப்பட்டுள்ளது மிகவும் சூடாக இருப்பதால் மிகவும் கொதிப்பான சூழ்நிலையில் மாடரேட் செய்யப்பட்டுள்ளது.....

சற்று ஆறியவுடன் அது பப்ளிஷ் செய்யப்படலாம் அல்லது செய்யப்படாமலே போகலாம்.......
அல்லது சில வார்த்தைகள் மட்டுறுத்தப்பட்டு பப்ளிஷ் செய்யப்படலாம்...சற்று நேரம் பிடிக்கும்....பொறுமைக்கு நன்றி

Muthu said...

//சரி, அடுத்து நீங்கள் ஒரு பதிவு எழுதும் போது "பாவம்.....கம்யூனிஸ்ட்கள் இவரை மூளைச்சலவை செய்து விட்டார்கள்.அது தான் இப்படி பேசிவிட்டார்" என்று ஒரு பின்னூட்டம் வரும்.
அதற்க்கும் நீங்கள் எழுத போகும் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.
அதனால் உங்களுக்கோ உங்கள் பதிவுகளை படிப்பவர்களுக்கோ எந்த பயனும் இருக்காது.//

அப்படி ஒரு விமர்சனம் வந்தால் நான் அதை நேர்மையாக ஏற்றுக்கொள்வேன். படிப்பவர்களுக்கு நான் யாரால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளேன் என்று புரிந்துக்கொள்ள உரிமை உண்டு.
என்னுடைய கருத்துக்கள் எதனால் எந்த அடிப்படையில் என்னிடம் இருந்து எழுகின்றன என்று சிந்திக்க யாருக்கும் உரிமை உண்டு.நான் கம்யூனிஸ்ட்டுகளை கண்மூடித்தனமாக ஆதரித்தால் என்னுடைய அனைத்து கம்யூனிசம் தொடர்பான கருத்துக்களை பற்றி பேச அனைவருக்கும் உரிமை உண்டு. சரியென்றால் சரி என்பேன். இல்லையென்றால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்றும் ஏன் இல்லை என்றும் கூறுவேன்.அதைவிட்டுவிட்டு டென்சன் ஆக மாட்டேன்.
ரோட்டில் போறவன் வர்றவன் என்றெல்லாம் எழுத வேண்டாம் ஐயா.

Muthu said...

அப்படி போடுங்க அரிவாளை,

உங்க கூற்றுப்படி ஹிந்துஜா சொக்க தங்கம்.....

ராஜீவ் காந்திக்கும் இதைப்பற்றி ஏதும் தெரியாது.....

வி.பி.சிங் தான் ஊழல் செய்தார்....
.
இதுதான் உங்கள் நிலை என்றால் இங்கு வாதமே இல்லை...
.
நன்றி....

இன்று போய் பழைய பேப்பர்கள் (குறிப்பாக எக்ஸ்பிரஸ்) படிக்கவும்.

Amar said...

//வி.பி.சிங் தான் ஊழல் செய்தார்....
.
இதுதான் உங்கள் நிலை என்றால் இங்கு வாதமே இல்லை...
//

அதே தான் எனது நிலை.

~1000 பீரங்கிகள் வாங்கியிருக்க வேண்டும்.அனால் ஊழல குற்றசாட்டு எழுத்ததால் வாங்கபட்டது ~400 மட்டுமே.

பின்னர் அவர்களிடம் spares கூட வாங்கமுடியாமல் செய்யபட்டது.

கார்கில் போரின் போது ~100 இந்திய வீரர்கள் தலையில் குண்டு காயம் பட்டு செத்து போனார்கள்.இன்னும் அதிக பிரங்கிகள் நம்மிடம் இருந்து இருந்தால் எதிரி நிலைகளை saturate செய்து இருக்க முடியும்.

அனால் இன்னும் இந்த "ஊழல்" குற்றசாட்டுகள் நிருபிக்கபடவில்லை!

இதற்க்கு இந்திய இரானுவம் கொடுத்தவில்லை என்ன!?


ஜாதி,ஜாதி என்று ஜாதியை மட்டுமே பார்க்கும் குறுகிய கன்னோட்டம் தான் நாட்டைவிட்டு இத்துனை மக்களை அமெரிக்க தூதரக்தின் முன்னால் பிச்சை எடுத்து வெய்த்துள்ளது.

Muthu said...

//ரோட்டில் போகும் சிலரின் சில்லறை விவாதம்//

இதை வெளியிடுவதில் அவமானம் திட்டப்படுபவர்களுக்கில்லை என்பதால் இது பப்ளிஷ் செய்யப்படுகிறது....


//கீதையின் மகத்துவம் //

நோ கமெண்ட்ஸ்

//ரோஷம் இருந்தால் முதலில் "திராவிடர்கள்" தமிழில் அவர்களுக்கு ஒரு பெயரை தேடிகன்டுபிடிக்கட்டும்.//

அதான் அரக்கர் என்று வைத்தாயிற்றே..அப்புறம் என்ன கொண்டாடுங்கள்.....

Amar said...

//அப்படி போடுங்க அரிவாளை,

உங்க கூற்றுப்படி ஹிந்துஜா சொக்க தங்கம்.....

ராஜீவ் காந்திக்கும் இதைப்பற்றி ஏதும் தெரியாது.....

வி.பி.சிங் தான் ஊழல் செய்தார்....
.
இதுதான் உங்கள் நிலை என்றால் இங்கு வாதமே இல்லை...
.
நன்றி....

இன்று போய் பழைய பேப்பர்கள் (குறிப்பாக எக்ஸ்பிரஸ்) படிக்கவும்//

சரி, எந்த குற்றசாட்டு நிருபிக்கபட்டுள்ளது?

நிதிமன்றங்களில் குற்றம் நிருபிக்கபடாத வரையில் யாரும் குற்றவாளிகள் இல்லை.

(நிதிமன்றங்களை கிண்டலித்து ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டால் இதற்க்கு பரிகாரம் கிடைத்து விடும்)

Muthu said...

//1000 பீரங்கிகள் வாங்கியிருக்க வேண்டும்.அனால் ஊழல குற்றசாட்டு எழுத்ததால் வாங்கபட்டது ~400 மட்டுமே.//

ஆகவே இராணுவத்தில் ஊழல் செய்தால் கண்டுக்கொள்ளக்கூடாது என்கிறீர்களா?வேறு எங்காவது ஊழல் இல்லாமல் டாங்கி வாங்குவதை யாராவது தடுத்தார்களா?

//ஜாதி,ஜாதி என்று ஜாதியை மட்டுமே பார்க்கும் குறுகிய கன்னோட்டம் தான் நாட்டைவிட்டு இத்துனை மக்களை அமெரிக்க தூதரக்தின் முன்னால் பிச்சை எடுத்து வெய்த்துள்ளது.//

i simply could not understand the logic and context for this sentence....

சமுத்ரா,
ராஜீவ் காந்தி அப்பழுக்கற்றவர் என்றும் வி.பி.சிங் தான் குற்றவாளி என்றும் நீங்கள் ஆணித்தரமாக சொல்லிவிட்டதால் நான் வாயடைத்து போயுள்ளேன். வாழ்க இந்தியா.

Amar said...

//ஆகவே இராணுவத்தில் ஊழல் செய்தால் கண்டுக்கொள்ளக்கூடாது என்கிறீர்களா?வேறு எங்காவது ஊழல் இல்லாமல் டாங்கி வாங்குவதை யாராவது தடுத்தார்களா?//

ஒரு சுயநல அரசியல்வாதியினால் நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் மரனம் அடைந்தார்களே என்பது எனது வருத்தம்.

சொல்லபட்ட கூற்றசாட்டு எதாவது இது நாள் வரை நிருபிக்கபட்டுள்ளதா ? இல்லையே!

தயவு செய்து எதையாவது எழுதும் முன்னர் எதை பற்றி எழுதுகிறோம் என்று ஒரு முறை படித்துவிடுங்கள்.

பொபர்ஸ் டாங்கி அல்ல!
அது பீரங்கி!


(இதற்க்கும் "ஓஹோ" "அப்படியா" "அப்பறம்" என்று பதில் போடுவதால் புத்திசாலியாகிவிட முடியமா என்று தெரியவில்லை)

//வேறு எங்காவது ஊழல் இல்லாமல் டாங்கி வாங்குவதை யாராவது தடுத்தார்களா?
//

முதலில் ஊழல் நடக்கவில்லை.

GSQR என்றால் என்னவென்று தெரியுமா?

இரானுவ தள்வாடங்கள் வாங்கும் போது எத்தகைய நடைமுறைகள், எதிர்கால சிக்கல்கள் வருமா, இந்த நாட்டை நம்பி வாங்கினால் போர் காலத்தில் spare சப்பளை செய்யுமா என்பது போண்ற எத்தனை parameters உள்ளது என்றாவது தெரியுமா?


//நோ கமெண்ட்ஸ்//

விவாதம் செய்ய பயமா அல்லது அதை பற்றி எதுவும் தெரியாதா?

//அதான் அரக்கர் என்று வைத்தாயிற்றே..அப்புறம் என்ன கொண்டாடுங்கள்.....//

அப்படியா!

"அரக்கர் தளபதியே" முன்வந்து பட்டத்தை ஏற்று கொள்ளும்போது நான் என்ன செய்ய முடியும் ?

தாராளமாக சூட்டிகொள்ளுங்கள்.


//ராஜீவ் காந்தி அப்பழுக்கற்றவர் என்றும் வி.பி.சிங் தான் குற்றவாளி என்றும் நீங்கள் ஆணித்தரமாக சொல்லிவிட்டதால் நான் வாயடைத்து போயுள்ளேன். வாழ்க இந்தியா.
//

சும்மா வாய்பேச்சினால் எதுவும் நடந்துவிடாது.

ஊழல் நடந்து இருந்தால் அதை நீதிமன்றகங்களில் நிருபித்து இருக்க வேண்டும்.

அதுவரை ராஜீவ் "அப்பழுக்கற்றவர்" தான்.

// simply could not understand the logic and context for this sentence....//

What are the "accomplishments" of V.P.Singh?

நியோ / neo said...

முத்து :)

நீங்க இந்தக் கிள்ளையின் எல்லாப் 'பேச்சுக்களையும்' வெட்டு இல்லாமப் போடுங்க!

நமக்கு வேலை மிச்சம்!

இந்த ஆட்டு முகமூடி போட்ட ஓநாய்ப் பரிவாரங்கள் செய்யும் குசும்பு எல்லாருக்கும் தெரியட்டும்!