Wednesday, October 25, 2006

திமுகவை வீழ்த்த கேப்டனுக்கு யோசனை

விஜயகாந்த் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிவிட்டதாக சில விமர்சனங்கள் பார்த்தேன்.தன்னை பார்த்து குடிகாரர்,குடித்துவிட்டு உளறுபவர் என்று ஒருவர் விமர்சித்தால் அதை மறுத்து இவர் எனக்கு ஊற்றி தந்தாரா என்று கேட்க அவருக்கு உரிமை உள்ளது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.பேச்சுக்கு பேச்சு சில நேரம் தேவைதான். குடிகாரன் என்று திட்டுவதை எல்லாம் கேட்டுக்கிட்டு இளிச்சிகிட்டு இருக்க முடியுமா என்ன?

கள்ளுக்கடை விவகாரத்தில் விஜயகாந்தை ஆதரிப்பது என் தார்மீக கடமை.(பழைய பதிவை பார்க்கவும்)

இப்போதைக்கு நான் முதலிலேயே கூறியது போல் விஜயகாந்த் வளர்ச்சி அதிமுக வாக்குவங்கிக்கு தான் ஆப்பு விழுந்துள்ளது. ஏனெனில் கவர்ச்சி அரசியல் கவர்ச்சி அரசியலைத்தான் பாதிக்கமுடியும். ஒரு புனித பிம்பம் இன்னொரு புனித பிம்பத்தைத்தான் அமுக்க முடியும்.ரொம்ப சுலபமாக கணக்கு இது.ஆயினும் நான் எதிர்ப்பார்த்த அளவு (விரும்பினேனா என்று சொல்ல முடியாது) வெற்றி விஜயகாந்திற்கு கிடைக்கவில்லை என்றுதான் நான் சொல்லுவேன். சட்டமன்ற தேர்தலை வைத்து பார்க்கும்போது அவர் உள்ளாட்சி தேர்தலில் இன்னும் கொஞ்சம் ஓட்டு வாங்குவார் என்று நினைத்தேன்.

சினிமா நெருங்காத பல மக்களுக்கு கருணாநிதியும் ஜெயலலிதாவும் தெரியும்.திமுகவும் பிடிக்காமல் அதிமுகவும் பிடிக்காமல் உள்ளவர்கள் என்று ஏதோ பலகோடி இருப்பதாக நினைப்பதும் அவர்களை பிடித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பதும் கனவுதான். எனக்கு தெரிந்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை.அப்படி இருந்திருந்தால் காங்கிரஸ் இன்னேரம் வென்றிருக்க வேண்டும்.வளர்ந்திருக்க வேண்டும்.எப்போதும் ஒரு இருபது சதவீதம் பேர் ஓட்டு போடுவதில்லை.ஏதாவது சட்ட திருத்தம் வந்து, தொழில்நுட்பம் வளர்ந்து நூறு சதவீத ஓட்டுப்பதிவு வரும்போது அதை பார்க்கலாம்.

ஜோ கூறிய கலைஞர் எதிர்ப்பு ஓட்டு வங்கி என்று ஒன்று உள்ளது. எம்.ஜீ.ஆரின் கவர்ச்சி அரசியலினால் வளர்க்கப்பட்ட இந்த வாக்குவங்கியின் இருப்பே கலைஞரின் வாக்கு வங்கி என்று ஒன்று இருப்பதை காட்டுகிறது.அதை அசைத்து திமுக ஓட்டு வங்கியை அசைக்க விஜயகாந்திற்கு ஒரு வழி சொல்லுகிறேன். சுலபமான வழி. புனித பிம்பங்களை விட்டு விலகினால் போதும்.வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளை மட்டும் நம்பாமல் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள படித்த, இன உணர்வுள்ள இளைஞர்களை நிறைய கட்சிக்கு கொண்டு வந்து களப்பணியாற்ற வைக்க வேண்டும்.(இது கொஞ்சம் ஓவரான எதிர்ப்பார்ப்பு தான் என்று தெரிகிறது.என்ன செய்ய?)

இடஒதுக்கீடு, இலங்கை பிரச்சினை, மொழி உணர்வு ஆகியவற்றில் தன்னுடைய கருத்து என்ன என்பதை கொஞ்சம் தெளிவாக எடுத்து வைத்து உள்கட்சி ஜனநாயகத்தை வளர்ப்பது, கட்சி அதிகாரத்தில மற்றவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்றெல்லாம் செய்தால் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி கூட விஜயகாந்தை ஆதரிக்கலாம்.யார் கண்டது?

இந்தியை எல்லாரும் படிக்கணும்னு வாந்தி எடுத்தாராம் ஒரு முறை.இது மூலம் அவருக்கு எத்தனை ஓட்டு கூடுதலாக கிடைத்தது என்று பார்க்கவேண்டும் அவர். இன்று இந்தியை நம்பினால் தான் வாழமுடியும் என்ற தேவை நம் நாட்டில் சுத்தமாக ஒழிந்தே விட்டது. விஜயகாந்த் இங்கு திருந்தவேண்டும்.

ஊருக்கு ஊர் ஊழல் ஒழிப்பு இயக்கம் என்று ஒன்றினை ஏன் விஜயகாந்த் ஆரம்பிக்கக் கூடாது? தனது கட்சியினரை வைத்து தாலூக்கா ஆபிஸ், ஆர்.டி.ஓ ஆபிஸ் முதற் கொண்டு எல்லா இடங்களிலும் ஊழலை ஒழிகக நடவடிக்கை எடுக்கலாமே?பெட்டிசன்போடுவது,உண்ணாவிரதம் இருப்பது, மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்பது போல் இந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும்.

விருத்தாசலத்தை ஒரு மாதிரி தொகுதியாக ஆக்கிக்காட்ட வேண்டும்.இது சுலபமாக வேலைதான்.

அதிமுகவிலும் திமுகவிலும் சம்பாதிக்க முடியாதவர்கள் இன்று தேமுதிகவில் சேருகிறார்கள் என்ற அவபெயரை நீக்கவேண்டும்.

//தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). ஆனால் ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். //

செய்வாரா விஜயகாந்த்?

16 comments:

Sivabalan said...

//திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முன்னணி கூட விஜயகாந்தை ஆதரிக்கலாம்.யார் கண்டது? //

Ha Ha Ha...

போட்டு தாக்குங்க..

குழலி / Kuzhali said...

இப்படியெல்லாம் செய்தால் நானே விஜயகாந்த் கட்சிக்கு போயிடுவேன்

Anonymous said...

//இப்படியெல்லாம் செய்தால் நானே விஜயகாந்த் கட்சிக்கு போயிடுவேன்//

இது காமெடி..!!!!

Then யாரு PMK வுக்கு vote போடுறது ?

VSK said...

தமிழர் பால் கொண்டுள்ள தெளிவான அக்கறையில் எழுதப்பட்ட ஒரு பதிவு.
பாராட்டுகிறேன்!

//இப்படியெல்லாம் செய்தால் நானே விஜயகாந்த் கட்சிக்கு போயிடுவேன்//

அங்கே சொன்னேன்!
இங்கு நடக்கிறது!

:))

Anonymous said...

//பாட்டாளி இளைஞர் அணி said...//

இளைஞர் அணி தலைவரே,

அவங்க ஓட்டை அவங்க பார்த்துக்குவாங்க..பஜார்ல உஜாரா இல்லாட்டி நிஜாரை உருவிடுவாங்க..உங்க பெல்ட்ட பார்த்துக்குங்க...

Muthu said...

எஸ்.கே மாதிரி துணிவாக பதிவை பற்றி கருத்து சொல்லுபவர்களை வரவேற்கிறேன்.

நன்றி எஸ்.கே அவர்களே

Anonymous said...

யாம் இன்றும் அர்னாக்கயிறு தான்..

(முன்பதில்:அது என்ன அர்னால்டு கட்டுன கயிறா ?)

கோவி.கண்ணன் [GK] said...

//முத்து(தமிழினி) said...
எஸ்.கே மாதிரி துணிவாக பதிவை பற்றி கருத்து சொல்லுபவர்களை வரவேற்கிறேன்.
//

முத்து ...!

எஸ்கே வை வைத்து காமடி கீமடி பண்ணவில்லையே ?
:)

வினையூக்கி said...

முத்து(தமிழினி),
திரு.விஜயகாந்த் இரண்டு கம்யூனிஸ்ட்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டால் இரு கழகங்களையும் வீழ்த்த அதிக வாய்ப்புகள் உண்டு.

குழலி / Kuzhali said...

பதிவை விட பின்னூட்டங்கள் சில பயங்கர காமெடிப்பா :-)

bala said...

முத்து(தமிழினி) அய்யா,

நம்ம மருத்துவர் அய்யா, கேப்டனோட கூட்டணி வைத்தால்,
ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதா?
உங்கள் கருத்து என்ன?

பாலா

லக்கிலுக் said...

விஜயகாந்தின் வளர்ச்சி பாராட்டத்தக்க ஒன்று தான். அதே நேரத்தில் அவரது வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என கருதுகிறேன்.

பா.ம.க., ம.தி.மு.க. மாதிரி ஒரு அளவுக்கு மேல் அவரது வளர்ச்சி நின்றுவிடும் என்றே தோன்றுகிறது.

அ.தி.மு.க. வலுவான இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க வேண்டியதின் அவசியம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நன்கு புலப்பட்டிருக்கிறது.

Anonymous said...

அரசியல் என்றாலே இப்படித்தானோ?

Apart from bringing along a party that has potential in the future, Vijaykanth has not done much. This happens when you aren't the brain behind every move you make. Too bad, Padma madam can't go into assembly:-)

I would certainly be glad if the 70million Tamils, especially those living in backward and socially substandard living had someone to bring up their living standards. But when the actual goal of politicians is merely power, what is there in hoping?

Not just now, but even before, VK had the power to do more constructive help. Why wait till you are at retirement age for one industry and entry age for another?

-Kajan

Muthu said...

வினையூக்கி,

என்ன இது?:))

Anonymous said...

//இப்படியெல்லாம் செய்தால் நானே விஜயகாந்த் கட்சிக்கு போயிடுவேன்//

முத்து,

சொல்லுதல் யாருக்கும் எளிய...

ஹிஹிஹி...

நீங்களும் கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மாதிரி ஆகிட்டீங்களே!.

Muthu said...

//முத்து,

சொல்லுதல் யாருக்கும் எளிய...//


உண்மை.என் பார்வையில் திமுக ஓட்டை பிடிக்க அவருக்கு வழியை சொன்னென்..இதுல என்ன எளிய?


//நீங்களும் கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மாதிரி ஆகிட்டீங்களே//


எனக்கு சாஸ்திரி பிடிக்கும்தான்..ஆனால் எப்படி சொல்றீங்க நீங்க?