Tuesday, October 10, 2006

தெரியாது..தெரியாது..தெரியாது

நண்பர் செல்வனுக்கு என் கேள்விகள் என்ற பதிவில் நண்பரின் எதிர்வினைக்குஎன் பதில்கள்.சுவாரசியமானது.படிக்காமல் இருந்துவிடாதீர்கள். நன்றி.

//தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)//

கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).
அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....

//ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)//

பொறி அங்கேயே வெச்சாச்சு. எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))


//"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....//

காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.

//தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு//

அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)

//.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது,//

//ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. //

//இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது//

//சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.//

தெரியாது.

தெரியாது.

தெரியாது.

தெரியாது.

என்னதான் தெரியும்? :)))
ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?

என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))

//இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?//

அப்படி போடுங்க ...இதுதான் உலகத்தின் புதிய கடவுளின் கருத்துக்களா? பேஷ்,..பேஷ்..

//இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்//

புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு, தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க...
ஹிஹி....

88 comments:

லக்கிலுக் said...

இன்னைக்கு செல்வன் மாட்டினாரா?

பேசாமல் அப்சலை தூக்கில் போட வேண்டுமா என்ற கேள்விக்கும் நண்பர் செல்வன் "தெரியாது" என்ற வழக்கமான பதிலை வைத்திருந்தால் பிரச்சினையே இல்லை :-)))))

Unknown said...

தலை

என் இரண்டு பின்னூட்டத்துக்கும் இரண்டு பதிவுகளை போட்டு தமிழ்மணத்தின் மிகப்பெரும் செல்வாக்கு உடைய கட்சியின் தலைவர் என்னை பெரிய ஆளாக்குவதற்கு மிக்க நன்றி:))

நானெல்லாம் சாதாரண ஆளுங்க.என்னை எல்லாம் வளர்த்து பெரிய ஆளாக்காதீர்கள்:)சொன்னா கேளுங்க:))

Muthu said...

ஓய் செல்வன்,

ஃபீலிங்சா சொல்லிகினுக்கீறென்...:))

நமக்குள்ள GIVE AND TAKE தானுங்களே....:))

Anonymous said...

ஒண்ணும் இல்ல வோய்.....
மங்களூர்ல ஊரடங்கு இன்னும் அமுலில் இருப்பதால் தலக்கி பொழுது போகமாட்டேங்கு.
அதான் உன்ன கலாய்ச்சிகினு கீறாரு.

Unknown said...

ஓய் செல்வன்,

ஃபீலிங்சா சொல்லிகினுக்கீறென்...:))

நமக்குள்ள GIVE AND TAKE தானுங்களே....:)) ///

இல்லைன்னு சொல்லலீங்க. நம் நட்பு என்றும் தொடரும். இன்னும் ஆயிரம் பதிவு போட்டாலும் நீங்களும் என்னை பற்றி எதுவும் மோசமாக எழுதபோவதில்லை. நானும் உங்களை பற்றி எதுவும் தனிப்பட்ட முறையில் எழுதபோவதில்லை.

நான் சொல்வது என்னவென்றால் எந்த கட்சியிலும் இல்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்தும் என்னை தமிழ்மணத்தின் மிகப்பெரும் கட்சியின் தலைவரும், செயல் தலைவரும் எதிர்த்து என் பின்னூட்டத்துக்கேலாம் பதிவு போட்டு பெரிய ஆளாக்குவது நியாயமா என்றுதான்:)

சரி..விடுங்க..ஆட்டம்னு வந்துடுச்சு..ஆடிட வேண்டியதுதான்:)))

குழலி / Kuzhali said...

//நானெல்லாம் சாதாரண ஆளுங்க.என்னை எல்லாம் வளர்த்து பெரிய ஆளாக்காதீர்கள்:)
//
என்ன இப்படி சொல்றிங்க, முகமூடி உங்களை விடிவெள்ளி ரேஞ்சுக்கு பேசுறார் நீங்க என்னடானா சாதாரண என்கிறீர்.

உங்கள் பதிவிலேயே நடந்தது //நடவாதது,அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாது,பிறந்தது பிறவாதது,என அனைத்தையும் யாம் அறிவோம்.எல்லாம் எமக்கு தெரியும்.//
அப்படினு போட்டிருக்கிங்க... என்னமோ போங்க...

:-))))))))))

Unknown said...

கண்டிப்பாக நியாயமில்லை. அல்-கொய்தாவின் படத்தை போட்டு நீங்கள் ஒருவரை எழுதும்போது இது உங்களுக்கு சாதாரணமாகத்தானே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் போட்டேன்:))).
அந்த வார்த்தை சொன்னா அப்படி வலிக்குதா செல்வன்? இதே தான் அனைவருக்கும்.சொல்வதற்கு முன் யோசிக்கணும்.....//

ஏனுங்க...நான் யாரை தீவிரவாதின்னு சொன்னேன்?அல்கொய்தா படம் போட்டேன்.சரி. அந்த பதிவிலோ வேறு எந்த பதிவிலோ யாரையாவது தீவிரவாதி என்று சொன்னேனா?

நான் வலிக்குது என்று எங்கேயும் சொல்லலை. கூட ஒரு ஸ்மைலி போட்டிருந்தேனே பாக்கலையா?


//எப்போது தமிழ் ஈழம் அமைவதை ஆதரிக்கறேன்னு நீங்க சொன்னீங்களோ அங்கேயே சிக்கியாச்சு.( மசால் வடை எலி ஞாபகம் வருதா:))//

ஏனுங்க...இம்மாம் பெரிய பொறிய வெச்சு யானையை பிடிக்கலாம்.சிங்கத்தை பிடிக்கலாம்.குட்டி முயலை பிடிக்கலாமா?வள்ளுவரே சொல்லிருக்கார்.யானைக்கு குறிவெச்சு அது தப்பிச்சாலும் பெருமை.முயலை குறிவெச்சு அது கிடைத்தாலும் பெருமை இல்லைன்னு.

சரி..என்னவோ பொறி வெச்சீங்க..உள்ளே விழுந்தாச்சு...மசால்வடையாவது கிடைக்குதான்னு பாக்க வேண்டியதுதான்:))

//காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.//

என் ஒவ்வொரு வார்த்தைக்கும் நிருபணம் கேட்டா எங்கே போறது?:))பொறி பயங்கரமான பொறியா இருக்கு. காமராஜர் கக்கன் பத்தி எல்லாம் நான் ஸ்கூலில் படிச்சப்ப ஸ்கூல் புஸ்தகத்தில் அப்படித்தாங்க போட்டிருந்துச்சு.அதை எல்லாம் ஸ்கேன் செஞ்சா போட முடியும்?இதேல்லாம் நியாயமான பொறியா சொல்லுங்க:))

லக்கிலுக் said...

//நான் சொல்வது என்னவென்றால் எந்த கட்சியிலும் இல்லாமல் தனி ஆவர்த்தனம் நடத்தும் என்னை//

ஆடுறதுக்குன்னு வந்தாச்சி திடீருன்னு இதுமாதிரி எல்லாம் "டொக்கு" வெக்கலாமா? அடிச்சி ஆடுங்க செல்வன் சார் :-))))

Unknown said...

//என்ன இப்படி சொல்றிங்க, முகமூடி உங்களை விடிவெள்ளி ரேஞ்சுக்கு பேசுறார் நீங்க என்னடானா சாதாரண என்கிறீர்.//

அதாங்க நானும் கேக்கறேன்.

அவர் எல்லாம் மிகப்பெரும் அனுபவம் உள்ள பதிவர். அவர் அப்படி சொல்லி வளர்த்து விடுறார்.நீங்க எல்லாம் எதிர்த்து வளர்த்து விடறீங்க.

என்னவோ போங்க.

நான் வளர்கிறேனே மம்மி:)))

Unknown said...

//ஆடுறதுக்குன்னு வந்தாச்சி திடீருன்னு இதுமாதிரி எல்லாம் "டொக்கு" வெக்கலாமா? அடிச்சி ஆடுங்க செல்வன் சார் :-)))) //

டொக்கு வெக்காம எல்லா பந்துக்கும் அடிச்சு ஆடினா அவுட் ஆயிடுவோம்ங்க. பந்துக்கு பந்து கவனிச்சு ஆடணும்:))

முத்துகுமரன் said...

//படிச்சப்ப ஸ்கூல் புஸ்தகத்தில் அப்படித்தாங்க போட்டிருந்துச்சு//

ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி செல்வன். :-))

Unknown said...

//அப்படியா? எனக்கு இது தெரியவே தெரியாது. இலங்கை ராணுவத்திலும் போலீசிலும் அப்பாவிகளே கிடையாதா செல்வன்?(கேட்க குரூரமாக இருந்தாலும் இதுதான் இங்கே கேள்வியே)//

நல்ல கேள்விங்க.

நான் இலங்கை ராணுவத்தை பற்றியும், போலிசை பற்றியும் எதாவது சொன்னேனா? அப்புறம் ஏன் அதில் அப்பாவிகள் இருக்காங்களா, இல்லையான்னு கேள்வி?

ஈழம் கிடைக்கணும்னு சொன்னேன்.அப்பாவிகள் சாகணும்னு சொன்னேனா?நான் சொன்னதை வெச்சு கேள்வி கேளுங்க. சொல்லாததை வெச்சு கேகாதீங்க:))

///தெரியாது.
தெரியாது.
தெரியாது.
தெரியாது.
என்னதான் தெரியும்? :))) ஏற்கனவே இடஒதுக்கீடு பற்றிய உங்கள் ஜல்லி கருத்து ஒன்றில் இடஒதுக்கீடு பற்றி எல்லாம் எனக்கு தெரியாது என்று சொன்னீர்களே? ஞாபகம் உள்ளதா?
என்னது? அதுவும் தெரியாதா? சரி சரி.....:)))///

வேணும்னா என் ஜாதி சர்ட்டிபிகேட்டை உங்களுக்கு மட்டும் ஸ்கேன் செஞ்சு அனுப்பறேனுங்க. அதில் இந்து பிற்படுத்தப்பட்டவர்னு போட்டு இருக்கும்ங்க.அதுக்கும் மேல ப்ரூப் வேணும்னா என்ன பண்ணனும்னு சொல்லுங்க.கேட்டுக்கறேனுங்க.

ஏன் சொல்றேன்னா எது, எதையோ கொண்டு வந்து, எது எதிலோ இழுத்து எதை எதையோ கேட்டு....நல்ல பொறி வெக்கறீங்க போங்க.

Anonymous said...

போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது.

பந்தயம் கட்ட விரும்புவோர் anony_bet@yahoo.com என்ற முகவரிக்கு தனி மடலிடவும்.

லக்கிலுக் said...

//டொக்கு வெக்காம எல்லா பந்துக்கும் அடிச்சு ஆடினா அவுட் ஆயிடுவோம்ங்க. பந்துக்கு பந்து கவனிச்சு ஆடணும்:)) //

அதுக்குன்னு சிக்ஸர் அடிக்க வேண்டிய பாலுக்கு கூடவா டொக்கு வெப்பீங்க? Required Rate கூடிக்கிட்டே போகுது பாருங்க :-))))


//ஏனுங்க...நான் யாரை தீவிரவாதின்னு சொன்னேன்?அல்கொய்தா படம் போட்டேன்.சரி. அந்த பதிவிலோ வேறு எந்த பதிவிலோ யாரையாவது தீவிரவாதி என்று சொன்னேனா?//

குழலி சார் நீங்க தீவிரவாதி இல்லையாம்.... செல்வன் ஒத்துக்கிட்டார்....

லக்கிலுக் said...

பொறி பொறி இன்றாங்களே அது ஆயுத பூஜைக்கு கொடுக்கற அவல் பொரியா?

Anonymous said...

//சந்துல சிந்துபாடி said...
போட்டி விறுவிறுப்பாகச் செல்கிறது.//

செந்தழலுல சிந்துபாடி தானே?

Unknown said...

//ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி செல்வன். :-)) //

அய்யா வாங்கய்யா.நீங்க மட்டும் தானா?வேற யாரும் வரலையா?:))

தலைவர், செயல் தலைவர், நீங்க, லக்கிலூக்..எல்லா பெருந்தலைகளும் வந்தாச்சா? இன்னும் மற்றவர்களும் வருவார்கள்.

ஓக்கே.....ஆட்டம் களைகட்டுது:))

Anonymous said...

செல்வனை விட்டுடுங்க. இல்லேன்னா செகப்பு பதிவு போட்டுடுவார்.

Unknown said...

//அதுக்குன்னு சிக்ஸர் அடிக்க வேண்டிய பாலுக்கு கூடவா டொக்கு வெப்பீங்க? றெஃஉஇரெட் றடெ கூடிக்கிட்டே போகுது பாருங்க :-))))//

போகட்டுங்க...

உங்க கூட எல்லாம் ஆடி தோத்தாலே பெருமை தான்.எம்மாம் பெரிய டீம்? அத்தனை பெரிய டீம் கூட அவர்களின் ஹோம் கிரவுண்டில் ஒத்தை ஆளா அடி தோத்தா அதுவே பெருமை தானுங்க.

//குழலி சார் நீங்க தீவிரவாதி இல்லையாம்.... செல்வன் ஒத்துக்கிட்டார்.... //

நான் அவரை எப்பவும் தீவிரவாதின்னு சொன்னதில்லைங்க. அவர் என் மதிப்பிற்குரிய நண்பர். அவர் மேல் எனக்கு நல்ல மதிப்பும், மரியாதையும், பிரமிப்பும் உண்டு

Unknown said...

///புல்லரிக்குதுங்க...பொதுவாக எல்லா வினைக்கும் தனிப்பதிவு போட்டு கலாய்ப்பீங்க.அதுதான் நானும் போட்டுட்டேன்:))))) படிச்சுட்டு, தெரிஞ்சுகிட்டு எழுதுங்கதல..நம்பஆளுங்க கைதட்டரானுங்களேன்னு மட்டும்எழுதிடாதீங்க... மேசமான பய புள்ளைங்க.. கவுத்துருவானுங்க... ஹிஹி.... //

இதுக்கு என்னன்னுங்க பதில் போடறது?:))))

புல்லரிச்சதுக்கு நன்றி. கேள்வி ஏதுனா இருந்தா கேளுங்க. பதில் சொல்றேன்:))

Anonymous said...

ஆவ்.... தூங்கப் போகணும்பா.
காலைல பாக்கலாம்.

குழலி / Kuzhali said...

தல செல்வன் ஏகப்பட்ட தெரியாது போட்டிருக்கிங்க போல :-) பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விமர்சித்து அசுரன் பதிவிட்ட போது ஒரு எதிர்வினை பதிவு போட்டிங்களே, உங்களுக்கு தேவரை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைத்தேன், திடீரென எனக்கு தேவரை பற்றி எதுவும் தெரியாதுனு சொல்லிடாதிங்க தல மண்டை காய்ஞ்சி போயிடும் எனக்கு :-)))

லக்கிலுக் said...

//உங்களுக்கு தேவரை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைத்தேன், திடீரென எனக்கு தேவரை பற்றி எதுவும் தெரியாதுனு சொல்லிடாதிங்க//

தேவரைப் பற்றி பாடப் புத்தகத்தில் என்னவெல்லாம் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக தலைக்குத் தெரியும் குழலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

குழலி / Kuzhali said...

தல செல்வன் (அதான் வளர்ந்துட்டிங்களே அப்புறம் என்ன தயக்கம் இருக்கு தலனு சொல்ல) ஏற்கனவே ஒரு தடவ முத்து(தமிழினி) பதிவிலயோ பின்னூட்டத்திலியோ எழுதியிருந்தாரே உங்களை பற்றி, பொருள் முதல்வாதம்னா என்னனு தெரியாது ஆனா கம்யூனிசம் மோசம், இடஒதுக்கீடுனா என்ன கட்-ஆப்னா என்னனு தெரியாது, பெரியார் பற்றி தெரியாது ஆனா அவர் நல்லவர் மாதிரி தெரியுது, இப்படி போட்டு சாத்தியிருப்பார் அப்பவே புரிஞ்சிக்கிட்டு பொறியில மாட்டாம இருந்திருக்கலாமே :-))))) என்னமோ போங்க தல எங்கயோ போயிட்டிங்க அதனால என்ன உங்களுக்கு ஆதரவு தர்ரவங்க எப்போதும் தருவாங்க, என் ஆதரவும் உங்களுக்கு உண்டு.

செல்வம் தல கண்டுக்கிங்க நம்மளையும் அப்பப்ப :-)))

Unknown said...

//தல செல்வன் ஏகப்பட்ட தெரியாது போட்டிருக்கிங்க போல :-) பசும்பொன் முத்துராமலிங்க தேவரை விமர்சித்து அசுரன் பதிவிட்ட போது ஒரு எதிர்வினை பதிவு போட்டிங்களே, உங்களுக்கு தேவரை பற்றி நிறைய தெரிந்திருக்கும் என நினைத்தேன், திடீரென எனக்கு தேவரை பற்றி எதுவும் தெரியாதுனு சொல்லிடாதிங்க தல மண்டை காய்ஞ்சி போயிடும் எனக்கு :-)))//

ஆமாங்க...தெரியாத விஷயத்தை கேட்டா தெரியாதுன்னு தானே சொல்ல முடியும்?உலகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துகொண்டா வர முடியும்?

ஒரு வேளை என் பதிவில் "அனைத்தும் எமக்கு தெரியும்னு" எழுதினதை வெச்சு இப்படி கேக்கறீங்களா?:))

இப்ப தேவர் இங்க எதுக்குங்க வர்ராரு?அப்சலை பத்தி எழுதினா அங்கே திடீர்ன்னு இலங்கை வருது, எம்ஜிஆர் வர்ரார், பசும்பொன் தேவர் வர்ரார்..பெரியார் வர்ரார்..நீங்க, முத்து, ஜோ,லக்கிலூக் ந்னூ எல்லா பெரிய மனுஷங்களும் வர்ரிங்க.:))

குழலி / Kuzhali said...

//தேவரைப் பற்றி பாடப் புத்தகத்தில் என்னவெல்லாம் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக தலைக்குத் தெரியும் குழலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
//
யோவ் லக்கி உம்ம யாரு குறுக்கால பேச சொல்றது தல செல்வன் சொல்லட்டும்யா நான் கேட்டுக்கிறேன் :-)))

Unknown said...

//தேவரைப் பற்றி பாடப் புத்தகத்தில் என்னவெல்லாம் போட்டிருக்கிறதோ அதெல்லாம் கண்டிப்பாக தலைக்குத் தெரியும் குழலி. நீங்கள் கவலைப்பட வேண்டாம். //

கண்டிப்பா தெரியும்ங்க...படிச்சா தானே வாழ்க்கை? அடிப்படையே ஸ்டாராங்கா இருந்தா தானே முன்னெற முடியும்? என்ன நான் சொல்றது?

குழலி / Kuzhali said...

//ஆமாங்க...தெரியாத விஷயத்தை கேட்டா தெரியாதுன்னு தானே சொல்ல முடியும்?உலகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துகொண்டா வர முடியும்?
//
ஆகா செல்வன் தல இப்படி சொன்னா என்ன ஆறது?

//ஒரு வேளை என் பதிவில் "அனைத்தும் எமக்கு தெரியும்னு" எழுதினதை வெச்சு இப்படி கேக்கறீங்களா?:))
//
அய்யய்யோ அப்போ உங்களுக்கு தெரியாத விசயம் கூட ஏதேனும் இருக்கா? சே... நான் தான் அப்போ இதை படிச்சி ஏமாந்துட்டனா?

லக்கிலுக் said...

//அப்சலை பத்தி எழுதினா அங்கே திடீர்ன்னு இலங்கை வருது, எம்ஜிஆர் வர்ரார், பசும்பொன் தேவர் வர்ரார்..பெரியார் வர்ரார்..நீங்க, முத்து, ஜோ,லக்கிலூக் ந்னூ எல்லா பெரிய மனுஷங்களும் வர்ரிங்க.:))//

எல்லாம் ஒரு Co-incidence தான்...

இன்னைக்கு யாருக்கும் வேலை, வெட்டி இல்லே போல.... நீங்க மாட்டிக்கிட்டீங்க :-)))))

Anonymous said...

//காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கூகிளில் பார்த்து எடுத்து போடவும். நானும் தெரிந்துக்கொள்கிறேன்.//

மரங்களை வெட்டி, மரங்கள் இல்லாவிட்டாலும் டார்சான் போல தாவி சர்க்கஸ் பண்ணும் தலைவரின் ் அல்லக்கைகள் "வால்க"

லக்கிலுக் said...

"தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்தை ஒன்றை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்....

குழலி / Kuzhali said...

//கண்டிப்பா தெரியும்ங்க...படிச்சா தானே வாழ்க்கை?
//
யோவ் லக்கி தெரிஞ்சிக்கோ தல செல்வன் பாடப்புத்தகமெல்லாம் படிச்சி தான் தெரிஞ்சிக்கிட்டிருக்காரு, ஆமாம் லக்கி நீ என்ன படிச்சிருக்க, நான் BE படிச்சிருக்கேன், அனேகமா ஆமா பாடபுத்தகம்லாம் படிச்சிருக்கியா லக்கிலுக்கு :-)))

Unknown said...

//தல செல்வன் (அதான் வளர்ந்துட்டிங்களே அப்புறம் என்ன தயக்கம் இருக்கு தலனு சொல்ல) //

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்குங்க;)

இன்னைக்கு ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்ச நாள்.ஆளுங்கட்சி, எதிர்கட்சின்னு ரெண்டு கட்சி தலைவர்களும் ஒண்ணு சேர்ந்து நான் வளர்ந்துட்டேன்னு சொல்லிட்டிங்க:)

யார் தருவார் இந்த அரியாசனம்?:))

ஆனா நமக்கெல்லாம் இந்த வளர்ச்சி வேணாம்ங்க...நான் உண்டு..என் ரசிகர்மன்றம் உண்டுன்னு அமைதியா தானுங்க இருப்பேன்

//ஏற்கனவே ஒரு தடவ முத்து(தமிழினி) பதிவிலயோ பின்னூட்டத்திலியோ எழுதியிருந்தாரே உங்களை பற்றி, பொருள் முதல்வாதம்னா என்னனு தெரியாது ஆனா கம்யூனிசம் மோசம், இடஒதுக்கீடுனா என்ன கட்-ஆப்னா என்னனு தெரியாது, பெரியார் பற்றி தெரியாது ஆனா அவர் நல்லவர் மாதிரி தெரியுது, இப்படி போட்டு சாத்தியிருப்பார் அப்பவே புரிஞ்சிக்கிட்டு பொறியில மாட்டாம இருந்திருக்கலாமே :-))))) ///

பொருள்முதல்வாதம் என்ற தமிழ்சொல்லுக்கு அர்த்தம் தெரியாதுன்னு தான் சொன்னேன். அது மெடீரியலிசம் என்று சந்திப்பு சொன்னதும் புரிஞ்சுகிட்டேன்.கம்யூனிசம் பத்தி நல்லாவே தெரியும். அடுத்து அதுபற்றியும் கேப்பிங்களோ என்னவோ?:))

//என்னமோ போங்க தல எங்கயோ போயிட்டிங்க அதனால என்ன உங்களுக்கு ஆதரவு தர்ரவங்க எப்போதும் தருவாங்க, என் ஆதரவும் உங்களுக்கு உண்டு.//

உங்க ஆதரவு இருந்தா அதுக்கு மேல வேறென்னங்க வேணும்?:))

Unknown said...

//அய்யய்யோ அப்போ உங்களுக்கு தெரியாத விசயம் கூட ஏதேனும் இருக்கா? சே... நான் தான் அப்போ இதை படிச்சி ஏமாந்துட்டனா? //

நாந்தான் ஸ்கூல் புக்கை படிச்சு மோசம் போனேன்னா நீங்க அதுக்கு மேல இருக்கிங்க போல?பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:))

Unknown said...

"தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்தை ஒன்றை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்.... //

தெரியாது:)

குழலி / Kuzhali said...

//இப்ப தேவர் இங்க எதுக்குங்க வர்ராரு?//
என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல :-))))))

அருண்மொழி said...

இன்னாபா நடக்குது இங்க?

இதுவரைக்கும் பா.க.ச இருந்தது. இப்போது செ.க.ச உருவாகிறதா?

Unknown said...

//யோவ் லக்கி தெரிஞ்சிக்கோ தல செல்வன் பாடப்புத்தகமெல்லாம் படிச்சி தான் தெரிஞ்சிக்கிட்டிருக்காரு, ஆமாம் லக்கி நீ என்ன படிச்சிருக்க, நான் Bஏ படிச்சிருக்கேன், அனேகமா ஆமா பாடபுத்தகம்லாம் படிச்சிருக்கியா லக்கிலுக்கு :-))) //

எஞ்சினியர் மேல எனக்கு பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. என்ன இருந்தாலும் நான் ஆர்ட்ஸ்க்ரூப். நீங்க சயின்ஸ் க்ரூப். நிஜமாவே பெரிய ஆளுதாங்க நீங்க:)

குழலி / Kuzhali said...

//செ.க.ச உருவாகிறதா?
//
செ.க.ச.னா யின்னாபா?

Unknown said...

//என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல :-)))))) //

வரும்ங்க..ஏன்னா காஷ்மீரில் அல்கொய்தா இருப்பதா அமெரிக்க அரசும், இந்திய அரசும் சொல்லிருக்குங்க.

அப்படி இருக்கறப்ப காஷ்மீர் பத்தி எழுதினா அல்கொய்தா வருமா, வராதா?:))

ஆதாரம் இதோங்க.இது ஸ்கூல் புக் இல்லைங்க.:))

Aljazeera.Net - Al Qaeda enters Kashmir conflictThe leader of the new group 'Al Qaeda Jammu and Kashmir' said that Muslims ... The self-proclaimed spokesman for Al-Qaeda in Jammu and Kashmir said that its ...

english.aljazeera.net/NR/exeres/F39C5514-6F8A-4CDA-9311-F194A36363BA.htm - 69k - Cached - Similar pages

குழலி / Kuzhali said...

//எஞ்சினியர் மேல எனக்கு பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு.
//
அய்யயோ மோசம் போயிட்டிங்களே, அனேகமா என்னை பார்த்துக்கு அப்புறம் இந்நேரம் மாத்திக்கிட்டிருப்பிங்க :-)))

Anonymous said...

//இப்போது செ.க.ச உருவாகிறதா? //
செ.க.ச ஏற்கனவே இருக்கே அருண்மொழி.. அதத் தான் தல ரசிகர் மன்றம்னு சொல்லிகிட்டாரே!

//நான் உண்டு..என் ரசிகர்மன்றம் உண்டுன்னு //

குழலி / Kuzhali said...

அய்யய்யோ செல்வன் ஆரம்பிச்சிட்டிங்களா? அல்கொய்தாவுக்கு தான் நானும் நீங்களும் ஏகப்பட்ட பதிவு போட்டிருக்கோமே? அங்க பேசிக்கலாம், இந்த பதிவு மேட்டரே வேற.... :-))))))

Anonymous said...

ஏம்ப்பா, ஸ்டாக் வெச்சிருந்த ஸ்மைலியெல்லாம் தீர்ந்து போச்சே.

யாராவது சீக்கிரம் சப்ளை பண்ணுங்கப்பா.

:((((((
:((((((
:((((((

Unknown said...

//அய்யய்யோ செல்வன் ஆரம்பிச்சிட்டிங்களா? அல்கொய்தாவுக்கு தான் நானும் நீங்களும் ஏகப்பட்ட பதிவு போட்டிருக்கோமே? அங்க பேசிக்கலாம், இந்த பதிவு மேட்டரே வேற.... :-))))))//

உத்தரவுங்க:))

நீங்க //என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல //ன்னு கேட்டதால தான் பதில் சொன்னேனுங்க.இங்க வேணாம்னா வேணாம்ங்க..

Unknown said...

//அய்யயோ மோசம் போயிட்டிங்களே, அனேகமா என்னை பார்த்துக்கு அப்புறம் இந்நேரம் மாத்திக்கிட்டிருப்பிங்க :-))) //

இல்லைங்க.ஜாஸ்திதான் ஆயிருக்கு.

ஜோ/Joe said...

இந்த முத்து இருக்காரே! விவகாரமா ஒரு 2 பதிவைப் போட்டுட்டு மத்தவங்கள மோத விட்டுட்டு மாத்தி மாத்தி பின்னூட்டம் அப்ரூவ் பண்ணிட்டு ஜாலியா உக்காந்திருக்காரு .படா கில்லாடிப்பா!

Anonymous said...

//நான் BE படிச்சிருக்கேன்//

எப்படி தல நம்ம அன்புமணி MBBS படிச்ச மாதிரியா?..

குழலி / Kuzhali said...

//பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:))
//
சரி தல இனி ஒன்னு செய்யுங்க, இனி பதிவு பின்னூட்டமெல்லாம் எழுதும்போது தெளிவா சொல்லிடுங்க, இது லுலுலாயிக்கு எழுதனது, இது தெரிந்து எழுதினது, இது தெரியாம எழுதினது, இது தெரிஞ்சிக்க எழுதினது, இது புரிஞ்சிக்க எழுதினதுனு, இது காமெடிக்கு எழுதினது, இது சீரியசா எழுதினது, இது சும்மா எழுதி பார்த்ததுனு.... இல்ல படிக்கிற நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது பாருங்க கேட்டா பின்னால பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) , பதிவில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) னு நீங்க ஸ்மைலி போட்டா நான் நேரா ஆசுபத்திரிக்கு தான் போவனும் என்ன தல ஓகே யா? :-))))

Unknown said...

////நான் உண்டு..என் ரசிகர்மன்றம் உண்டுன்னு //

அது என்னோட ரசிகர் மன்றம் இல்லை.அந்த அளவுக்கு பெரிய ஆளா நான்?அது நான் ஆரம்பிச்ச ரசிகர் மன்றம்.அ.கு.மு.கன்னு பேரு.(அண்ணன் குமரன் முன்னேற்ற கழகம்)அந்த வரலாற்றை எல்லாம் சொன்னால் பெரும் கதை

தமிழ்மணத்தில் 8 மாசத்துக்கு முந்தி ஆரம்பிச்ச ரசிகர் மன்றம். கல்கி பத்திரிக்கையில் எல்லாம் பேர் வந்த மன்றம்:))

Anonymous said...

//காமராஜர்,கக்கன்,எம்.ஜீ.ஆர் எல்லாம் தேசியத்தை பற்றி என்ன சொன்னார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?//

அதுலாம் இருக்கட்டும் நம்ம அன்பு மணி தொழுநோயை தொற்றுவியாதினு சொன்னாரே அதுதான் தேசியத்தபற்றி சொன்னதோ?..

Unknown said...

//சரி தல இனி ஒன்னு செய்யுங்க, இனி பதிவு பின்னூட்டமெல்லாம் எழுதும்போது தெளிவா சொல்லிடுங்க, இது லுலுலாயிக்கு எழுதனது, இது தெரிந்து எழுதினது, இது தெரியாம எழுதினது, இது தெரிஞ்சிக்க எழுதினது, இது புரிஞ்சிக்க எழுதினதுனு, இது காமெடிக்கு எழுதினது, இது சீரியசா எழுதினது, இது சும்மா எழுதி பார்த்ததுனு.... இல்ல படிக்கிற நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது பாருங்க கேட்டா பின்னால பதிவின் தலைப்பில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) , பதிவில் எழுதியதை வெச்செல்லாம் ஏமாரறீங்க:)) னு நீங்க ஸ்மைலி போட்டா நான் நேரா ஆசுபத்திரிக்கு தான் போவனும் என்ன தல ஓகே யா? :-)))) ///


நீங்க தான் இம்மாம் பெரிய எஞ்சினியராச்சே? எது, எது நிஜம் , எது எது லுலுலாயின்னிக்கு எழுதினதுன்னு பகுத்தறிஞ்சு கண்டுபிடிக்க உங்களால் முடியாதா என்ன?:))

Anonymous said...

//இப்ப தேவர் இங்க எதுக்குங்க வர்ராரு?//
என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல :-))))))//

மரம்னா வன்னியனு இருக்குல அதுமாதிதான் செல்வன் எல்லாம் ஒரு பினைப்பு.

Unknown said...

//இந்த முத்து இருக்காரே! விவகாரமா ஒரு 2 பதிவைப் போட்டுட்டு மத்தவங்கள மோத விட்டுட்டு மாத்தி மாத்தி பின்னூட்டம் அப்ரூவ் பண்ணிட்டு ஜாலியா உக்காந்திருக்காரு .படா கில்லாடிப்பா! //

அட ஆமாம்...

நைட்டு ஒரு மணிஆச்சு. தூங்க போகணும்.டெஸ்ட் மேட்சை நாளை தொடரலாம்.சரியா?:))

புது பந்து வீச்சாளர்கள் யாராவது நாளைக்கு வாங்கப்பா. பேட்ஸ்மேன் ஸ்கோர் 50 நாட் அவுட்டுன்னு போயிக்கிட்டிருக்கு:)))

பெருந்தலைகள் பந்துவீசியும் ஒண்ணும் நடக்கலை.பிரெண்ட்லி மேச்சா போச்சு போல:))

குழலி / Kuzhali said...

//நீங்க தான் இம்மாம் பெரிய எஞ்சினியராச்சே? //
நான் எங்கய்யா சொன்னே பெரிய எஞ்சினியர்னு ஆரம்பிச்சாட்டங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க, தல இதுல கூடவா தல உங்க அளவுக்கு என்னால முடியலை....

//பகுத்தறிஞ்சு கண்டுபிடிக்க உங்களால் முடியாதா என்ன?:)) //
உங்க பதிவுல முடியலையே

குழலி / Kuzhali said...

//டெஸ்ட் மேட்சை நாளை தொடரலாம்.சரியா?:))
//
அய்யய்யோ நாளைக்கு உங்க புது பாதுகாப்பு படை வந்துடுச்சினா துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்...

ரவி said...

///செந்தழலுல சிந்துபாடி தானே?///

நான் ஏதோ செவனேன்னு கீறேன்...என்னை இன்னாபா கூப்டு கலாய்க்கிறீங்க...

அப்பாவியா நான் ஒரு கேள்வி கேக்குறேன்..

நம்ம செல்வென் $ போட்டிருந்தாரே..(முருகன் டாலரா ? ) அத்தே இப்போ கானோமே, இன்னா பிரச்சினை ?

Anonymous said...

இவருதாம்பா வேலைவெட்டியிலாம கொத்தனாரோட சேந்து 500 அடிச்சது. இனிமே இங்கேயும் கும்மிஅடிப்பார் போல.

Anonymous said...

//அய்யய்யோ நாளைக்கு உங்க புது பாதுகாப்பு படை வந்துடுச்சினா துண்டை காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்...//

ஓ தனியா வந்தாத்தான் 4பேர் சேர்ந்து வீரத்த காமிப்பீங்களோ?..

Anonymous said...

விடுங்க குழலி, அதான் அவருக்கு தெரிந்ததெல்லாம் "ஸ்கூல்புக்", இல்ல "தெரியாது"னு சொல்றாரே.

மேலும் அவர் எழுதியிருப்பதப் பார்த்து ஏமார வேண்டாம் என்றெல்லாம் சொல்கிறார். பிறகென்ன பேச்சு?

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு அல் கொய்தா தொடர்பு இருப்பது தெரியும். அதுவும் அல் ஜசீராவிலிருந்தே (இது ஸ்கூல்புக் அல்ல) மேற்கோள் காட்ட முடியும். ஆனால் அவரது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தேசியத்தைப் பற்றிய நிலை தெரியாது. தெரிந்துகொள்ள ஸ்கூல்புத்தகத்தைத்தான் நாடவேண்டும் என்று சாதிக்கிறார். பிறகென்ன வேண்டும் உங்களுக்கு?

Muthu said...

நண்பர்களே,

சந்தடி சாக்கில் போலியார் ஒரு பின்னூட்டம் இட்டு விட்டார்.அதுவும் அது சம்பந்தப்பட்ட மற்ற பின்னூட்டங்களும் நீக்கப்பட்டன.

சுடடி காட்டிய நண்பர்களுக்கு நன்றி.

Vaa.Manikandan said...

எனக்கு ஒரு டவுட்டுங்க!

பசங்க சொல்லுவாங்க...ரவுண்டு கட்டறது..ரவுண்டு கட்டறதுன்னு..

அப்படீன்னா என்னங்க? ;)

லக்கிலுக் said...

//சந்தடி சாக்கில் போலியார் ஒரு பின்னூட்டம் இட்டு விட்டார்.அதுவும் அது சம்பந்தப்பட்ட மற்ற பின்னூட்டங்களும் நீக்கப்பட்டன.//

அதை எனக்கு தனிமடலில் அனுப்ப முடியுமா?

எந்த விஷயத்தையுமே மறைத்தால் தான் பார்த்தே ஆகவேண்டும் என வெறி வருகிறது :-)

Anonymous said...

//ஆனால் அவரது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தேசியத்தைப் பற்றிய நிலை தெரியாது. தெரிந்துகொள்ள ஸ்கூல்புத்தகத்தைத்தான் நாடவேண்டும் என்று சாதிக்கிறார். பிறகென்ன வேண்டும் உங்களுக்கு?//

குரங்கின் தேசியத்தைப் பற்றி சாலையோர மரங்கள் கூட கூறும்.

Muthu said...

என்ன இன்னொரு பதிவு போடட்டுமா?
செல்வன் என்ன சொல்றார்னு கேளு

குழலி / Kuzhali said...

//என்ன இன்னொரு பதிவு போடட்டுமா?
செல்வன் என்ன சொல்றார்னு கேளு
//
ஏதோ இன்னைக்கு அவர் மட்டும் தனியா வந்துட்டாரு, அவரோட புது பாதுகாப்பு படை தூங்கிடுச்சி போல, இனி பதிவு போட்டா புது பாதுகாப்பு படை வந்தா தாங்காது சாமி.... :-))))

நாமக்கல் சிபி said...

//"தெரியாது" - உலகத்துலேயே இதை விட Safe ஆன வார்த்தை ஒன்றை யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்....//

Lucky,

I Dont Know....!

நாமக்கல் சிபி said...

இங்கே என்ன நடக்குது?

சீரியஸா கலாய்க்கறீங்களா? இல்லை கலாய்த்தலுக்காக கலாய்க்கறீங்களா?

பூங்குழலி said...

வண்மையாகக் கண்டிக்கிறேன்...

bala said...

ஏங்க புரட்சி நடிகர் மேலே இவ்வளவு பேர் கோபமா இருக்கீங்க..அவர் கூட அண்ணா,பெரியார் காட்டிய வழியிலே தானுங்க ஆட்சி செஞ்சாரு..

எது உங்களுக்கு ரொம்ப கோபத்தை ஏற்படுத்துகிறது?

தி மு க வை பிளந்ததா?

நம்ம புரட்சித் தலைவிக்கு நடிப்புத் தொழிலிலிருந்து ரிடயர் ஆனதும் வேலை போட்டு கொடுத்ததற்க்கா?

பாலா

அசுரன் said...

//தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் //

அப்போ தமிழ்ன் உயரக்கூடாது, இந்தியன் வாழ்க்கூடாதா? இதிலெயும் இன்னும் கொஞ்சம் டீப்பா போயி கேள்வி கெட்டாக்க 'எந்த தமிழன்னு சொல்லலேல்ல' என்று கேட்பார்.

செல்வன் குட்டி முதலாளித்துவ பரவசவாதி. எதையும் முழுதாக படிக்க மாட்டார். விறு விறு வென்று வாசித்து ஒரு மேம்போக்கான புரிதலுக்கு வந்து அதன் அடிப்படையிலேயே குருட்டு தைரியத்தில் உள்ளிறங்கி அப்புறம் சொ.செ.சூ தான்.

எல்லாம் தெரியும் என்று காமிக்கும் அவசரத்தில் நமது பதிவுகளுக்கு எதிர்வினை போடும் போது கூட அரைகுறையாக படித்து பதில் போடும் அளவு, குட்டி முதலாளித்துவ பரவசம் முழுமையாக் ஆட்கொள்ளப்பட்டவர்.

முத்து தமிழினியின் இந்த பதிவு $சல்வனை எல்லாரும் பொதுமாத்து போடுவதற்க்கு போட்ட பதிவுதானே?.....

ஏதோ என் பங்குக்கு முடிந்த ரெண்டு குத்து....

சும்மாவா சொன்னாய்ங்க... முத்து அண்ணாச்சி குத்து சண்ட வீரருன்னு....

அசுரன்

bala said...

//செல்வன் குட்டி முதலாளித்துவ பரவசவாதி//

அசுரன் அண்ணா,

நீங்க என்ன சொல்றீங்க?
செல்வனை, செல்லமா, "குட்டி" ன்னு சொல்றீங்களா இல்லை அவர் ஒரு குட்டி capitalistic pleasure seeker அப்படீன்னு சொல்ல வரீங்களா?

அவர் ஒரு பார்ப்பனீய ஏகதிபத்ய முதலாளித்துவ அடிவருடின்னு சொல்லுவீங்கன்னு பாத்தா நீங்க வேறே என்னமோ சொல்றீங்களே..

சமுதாயத்திலே ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே ஒலிக்கும் குரலாகவே உங்க குரலை கேட்டு பரவசப் பட்ட எனக்கு நீங்க இப்படி பேசறதைக் கேட்டா வருத்தமா இருக்கு..

பாலா

Muthu said...

பெயர் போட்டு எழுதும் செல்வனுக்கு பெயர் போட்டு எழுதும் என்னுடைய கேள்விகள்.எங்களின் விவாதங்கள்.நன்றாக போனது.

கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

செல்வனுக்கு ஸ்பெசல் நன்றி. கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு.

உள்காயம் வாங்கி தனியாக அழுபவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.i pity u

Amar said...

//அப்போ தமிழ்ன் உயரக்கூடாது, இந்தியன் வாழ்க்கூடாதா? இதிலெயும் இன்னும் கொஞ்சம் டீப்பா போயி கேள்வி கெட்டாக்க 'எந்த தமிழன்னு சொல்லலேல்ல' என்று கேட்பார்.//

கூட்டம் சேர்ந்து கும்மியடிக்கும் விஷயங்களில் சேர கூடாது என்று தான் பேசாமல் இருந்தேன் ஆனா இந்த பின்னூட்டத்தை பார்த்தவுடன் தாங்க முடியவில்லை சாமி!

அசுரா, நின் அறிவை கண்டு மெய்சிலிரித்தோம் அய்யா!

Muthu said...

//
பூங்குழலி said...
வண்மையாகக் கண்டிக்கிறேன்... //

எதற்கு கண்டனங்கள்?

பூங்குழலி said...

//எதற்கு கண்டனங்கள்? //

தெரியாது..
:))

rajavanaj said...

முத்து,

அப்ப இஸ்கூலு படிப்பு தான் ஒலக அறிவுக்கு ஒரே சோர்ஸா?

இனி வேற வழியே இல்ல அட்டாலி மேல இருந்து பழைய இஸ்கூலு புக்கெல்லாம் எறக்கீற வேண்டியது தானா..

Muthu said...

கனகசபாபதி முத்துசாமி
இது என்ன ராணுவ ரகசியமா? அடபாவிகளா
திருந்தவே மாட்டீங்களாடா...
என் ஈமேயில்லயெ இருக்கேடா

குலம் அது இதுன்னு பேசுறது எதாவது சட்ட பிரிவில வருமாண்ணே?:))

Muthu said...

:))

Machi said...

முத்து, செல்வன்
'பெரியோர்', 'சைவம்', 'அசைவம்', 'இடது', வலது', கவிஞர்', 'எழுத்தாளர்', 'அறிவியல்', 'பொது' எந்தப் பிரிவில் வருகிறார்.

செல்வனுக்குனே பதிவு போட்டு எக்கச்சக்கமா பின்னூட்டம் வாங்கிட்டு அவர ஒரு பிரிவில் சேர்க்கலைன்னா நல்லா இருக்காதே.

Anonymous said...

இந்த சமுத்ரா தொல்லை தாங்கமுடியலைப்பா - ஈ.வெ.ரா பத்திச் சொல்லற இடத்துலகூட ஈ.வெ.ராமசாமி எங்காளுன்னு ஓசி பிரியாணி குடுப்பாரு சைடுல - ஏதோ ஈவெரா தமிழக நாயக்கர் குல திலகமா ஆக்டு விட்ட மாதிரி, ஆனா திராவிடக் கட்சிகளுன்னா பொத்துக்கினு வந்துரும். தான் ஒரு தெலுங்கர்னு சைடுல பட்டம் விடுவாரு, ஆனா திராவிடக் கட்சிகளில வைகோ முதக்கொண்டு நேத்து முளைச்ச, அணுகுண்டு/தூக்குலபோடு ஆத்திகர் திருப்புகழ் எஸ்.கே ஐயாவின் உள்ளம்கவர் கள்வன் விஜயகாந்த் முதற்கொண்டு, ஜி.டி.நாயுடு முதக்கொண்டு கோயம்புத்தூர் மில் ஓனர்கள் முதற்கொண்டு சுகமாய் வாழும் தெலுங்கர்களையோ மலையாளிகளையோ கன்னடிகர்களையோ திராவிடக் கட்சிகள் இன, பாரம்பரிய பேதம் பார்த்து என்னிக்காவது தாக்கியிருக்கா, சராசரி மனித வாழ்வில குறுக்கிட்டிருக்கான்னு யோசிச்சுப் பாத்தா மட்டும் முதுகுல சொறி வந்துரும். ஆந்திராவிலருந்து பஞ்சம் பொழைக்க வந்த அருந்ததியர்களுக்குக் குரல் கொடுக்கறது யாரு, சோ ராமசாமியும் சங்கராச்சாரியுமா? இல்லை இல.கணேசனா, ராமகோபாலனா? கூட்டத்தோட கும்மியடிக்கறதைப் பார்த்தா கோவம் வருதாமே? அரைவேக்காடு அங்கமுத்து மாதிரி மனுஸ்மிருதி பத்தி உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக்கிட்டது போதாதா? குமரன் மாதிரி பதிவர்கள் வந்து விளக்கம் கொடுத்தப்பிறகும் பஞ்சரான டயரை ஒட்டுப்போடக்காணோம், அதுக்குள்ள வந்துட்டாரு நைனா அடுத்த மோட்டார்சைக்கிள் மராத்தானுக்கு. இந்தமாதிரிக் கோமாளிகளுக்கு ஒரு தேசபக்தி அண்டர்வேர் வேற, அதை எல்லாரும் உருவறானுகன்னு ஒரு கூப்பாடு. தூத்தெறி, என்ன குத்தகையா போட்டிருக்கேங்கோ இந்தியா மேல? இங்கே எல்லாரும் என்ன இந்தியாவை ஒழிக்கணும்னா அலையறான்? இஸ்லாமியப் படையெடுப்புக்கு பயந்தும் பஞ்சம்பிழைக்கவும் தமிழ்நாடு வந்து வாழ்ந்து சமுதாயத்தில் இணைந்துகொண்ட தெலுங்கர்களை திராவிடக் கட்சிகள் என்ன செஞ்சது? நேரம் வரட்டுமின்னு காத்திருந்து கன்னடிகாக்கள் மாதிரிப் பின்னிப் பெடலெடுத்ததா இல்லேன்னா சிவசேனா மும்பையிலருந்து மல்லுக்களை அடிச்சுத் துரத்தினது மாதிரி அடிச்சுத் துரத்தினதா? மனவாடுக்கள் இந்தப்பக்கம் வராம வடக்கால போய் மஹராஷ்டிரபுத்திரர்கள்கிட்ட போய் பால் தாக்கரே ஒரு குய்யான் அப்படின்னு சொல்லியிருந்தா பின்னிப் பெடலும் எடுத்து சக்கரத்தைத் தலையில குல்லா மாதிரி அறைஞ்சு நிறுத்தியும் அனுப்பியிருப்பானுக; தமிழ்நாட்டுல அறுபது வருசமா ஆளற திராவிடக் கட்சிகள் இதையெல்லாமா செய்யுது? பாதிரியாரை எரிக்கறாங்களா இல்லை கொத்துக் கொத்தா கொலை பண்ணிட்டு நியூட்டனின் விதி குறிச்சுப் பேசறாங்களா? இல்லை டீக்கடை நாயர்களையும் தேவாங்கச் செட்டிகளையும் நாயக்கர் ரெட்டியார்களையும் ஒக்கலிகர்களையும் வீட்டில கன்னடமும் தெலுங்கும் பேசாதேன்னு நசுக்கிறானுகளா? குஷ்பு விவகாரத்தை உடனே தூக்கிட்டு வர்ற யோக்கியக்குஞ்சுகளெல்லாம் குஷ்பு தமிள்நாட்டுக் கலாச்சாரத்துக்கு எதிராப் பேசியிருக்கக்கூடாதுன்னு ஜெயாக்கா லலிதம்மா சொன்னதைமட்டும் சௌகரியமா மூளையில பின்னாடி தள்ளி பொட்டலம் கட்டி மூலையில போட்டுட்டு திருமாவளவனையும் ராமதாசையும் மட்டும் பப்பும் உப்பும் போட்டு வேகவைச்சு உள்குத்து மேல உள்குத்தா போட்டுக் கிழிப்பானுக. பின்னுங்க அரைவேக்காடுகளா பின்னுங்க, உங்க உளறலைப் பாக்கப் பாக்க எவ்வளவு ஆனந்தமா இருக்குன்னு சொல்லிப் புரியவெக்கமுடியாது.

தருமி said...

இரைச்சல் அதிகமாகி விட்டது. போதுமே..இது.

Muthu said...

// Dharumi said...
இரைச்சல் அதிகமாகி விட்டது. போதுமே..இது.//

தருமி சார்,

ஆனா பாருங்க இங்க நாராசம் இருக்காது.

இங்க யாரும் குலத்தை பத்தி பேசலை..ஏண்டா குலத்தகுதியை பேசறன்னு கேட்டா குலம்னா சாதி இல்லை.உங்கப்பா அம்மான்னு சொல்லலை.(இது இன்னும் மட்டமான பேச்சுன்னு யார் எடுத்து சொல்றது(?))..இதெல்லாம் இங்க இருக்காது..

பேசினதுக்கு பதில் இல்லாம மத்தபடி தாக்கறதையல்லாம் கண்டுக்கற நிலையை கடந்தாச்சு சார் :))

இதையெல்லாம் பேசற முதல் ஆளும் நாம இல்லை.கடைசி ஆளும் நாம இல்ல..:))

Muthu said...

// குறும்பன் said...
முத்து, செல்வன்
'பெரியோர்', 'சைவம்', 'அசைவம்', 'இடது', வலது', கவிஞர்', 'எழுத்தாளர்', 'அறிவியல்', 'பொது' எந்தப் பிரிவில் வருகிறார்//


குறும்பனின் கேள்வியில் உள்ள நியாயம் என் மனசாட்சியை உலுக்கிவிட்டது. இதோ டொட்டடாய்ங்..

இடதில் வலதில் பாருங்கள்

Pot"tea" kadai said...

எல்லாஞ்சரி, இங்க என்னா நடக்குது?

what's goin' on mate?

ஒரு சதமடிச்சிடலாமா? :))))

லக்கிலுக் said...

//கனகசபாபதி முத்துசாமி
இது என்ன ராணுவ ரகசியமா? அடபாவிகளா
திருந்தவே மாட்டீங்களாடா...//

ஏன் இந்த சின்னாபின்னம்? எதுக்கு இவ்வளவு கொந்தளிப்பு?

சதம் அடிக்க எண்ணமுண்டா? அ.மு.க தொண்டர்கள் என்னிடம் கேட்டு சொல்ல சொன்னார்கள்.....

அசுரன் said...

ஆப்பு செருகுவதை ஆழ யோசித்து சரியாக செருகினீர்கள்.

அப்சல் விசயத்தில் அதன் அரசியல் பிரச்சனையை அணுகியவர் நீங்கள் ஒருவர்தான் என்று நினைக்கிறேன். வேறு எல்லாரும் சும்மா தனக்கு தோண்றியதையெல்லாம் நாட்டுப் பற்று, மனிதாபிமான ரேப்பர்களில் சுற்றி விற்க்கவே முயற்சி செய்ததாக தோன்றுகிறது.

அசுரன்

Muthu said...

ஊரில் இல்லாததால் இந்த பதிவை கவனிக்க முடியவில்லை.

பொட்டிக்கடை, எங்கப்பா இருக்க