Tuesday, October 10, 2006

தமிழ் தீவிரவாதியாகிறார் செல்வன்

கேள்வி:ஈழம் பெறுவது உங்களுக்கு உடன்பாடா என்று மட்டும் சொலலுங்கள் செல்வன்.மற்றதை பிறகு பார்ப்போம்.

பதில்: ஈழம் அமைந்து ஈழத்தமிழர் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. முத்தையா முரளிதரன் தலைமையிலான தமிழீழம் கிரிக்கட் அணியை திராவிட் தலைமையில் உள்ள கிரிக்கட் அணி யாழ்ப்பாணத்தில் மோதி ஜெயிக்க வேண்டும். அதை நான் கண்குளிர பார்க்க வேண்டும்:-)

நண்பர் செல்வனின் பதிலை மேலே பார்க்கிறீர்கள். இப்போது நண்பர் செல்வனுக்கு சில கேள்விகளை கேட்க கடமைப்பட்டவன் ஆகிறேன்.

1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?

2.ஈழ தமிழர்கள் நேற்று முடிவு செய்து இன்று சண்டை ஆரம்பிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?எந்தவிதமான அடக்குமுறைகளை (அரசியல்ரீதியாக,மொழிரீதியாக, பண்பாட்டுரீதியாக)அவர்கள் எதிர்க் கொண்டார்கள் என்பதைப்பற்றி தெரியுமா?விடுதலைப்புலிகள் என்ற சக்தி அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சினையில் தமிழர் குரல் எடுபட்டிருக்குமா?இன்னும் தெளிவாக போடுவோம்.ஆயுதம் சார்ந்த வன்முறையினால்தான் தமிழரின் குரல் இந்த அளவாவது எடுபடுகிறது என்பதை கவனித்துள்ளீர்களா?பிரேமதாசாவை கொன்றதாக கூறப்படுகிற இன்னும் பல கொலைகளை செய்த விடுதலைபுலிகளுடன் அரசாங்கம் ஏன் பேச்சுவார்த்தை நடத்துகிறது?இந்திய முதலி்ல் அனைத்து வகையிலும் ஆதரித்ததாக சொல்கிறார்களே? கேள்விப்பட்டுள்ளீர்களா?

3.ஈழம் அமைவது தான் உங்கள் ஆசையாக இருக்கும் பட்சத்தில் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

உடன்போக்கு அரசியலை விட்டு விலகி கருத்துக்களை ஆணித்தரமாக வைக்க வேண்டுறேன்.இலங்கை ராணுவம் வென்றால் இலங்கை இறையாண்மை காப்பாற்றப்பட்டது என்று சந்தோஷப்பட்டும் ஈழம் கிடைத்தால் தமிழனுக்கு வெற்றி என்றும் கூறி சந்தோஷப்படுவதும் அறிவார்ந்த நாணயம் ஆகாது என்பது என் தாழ்மையான கருத்து.நன்றி.
LTTE TAMIL EELAM INDIA NATIONALISM

31 comments:

வேடிக்கை பார்ப்பவன் said...

எங்கே செல்வன்?

செல்வன் said...

தலைப்பை பார்த்ததும் பகீரென்றது. என்னை தீவிரவாதி என்பதெல்லாம் நியாயமா?:-)

ஏதோ பெரிய பொறி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கு:)

//1.பொதுவாக தேசியவாதிகளின் ஜல்லி இலங்கை அரசியல் சட்டத்திற்குட்பட்டு இலங்கை தமிழர் பிரச்சினை தீரவேண்டும் என்பதாக இருக்கும்.நீங்கள் ஈழம அமையவேண்டும் என்று ஆசைப்பட்டால் நீங்கள் தமிழ் தீவிரவாதியா?//

"பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து. எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். சரி அதை விடுங்கள்....

தமிழீழம் அமையவேண்டும் என ஆசைப்பட்டால் எப்படி தீவிரவாதி ஆவேன்?ஆயுதம் ஏந்தி அப்பாவிகளை கொன்றால் தான் தீவிரவாதி ஆவேன். ஆக முதல் கேள்வி தப்பு

2.இரண்டாம் கேள்விக்கு பதில் அவ்வளவு விவரமாக ஈழம் பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது, ஏன் புலிகள் ஆயுதம் தூக்கினர் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இலங்கை ஏன் புலிகளுடன் பேசுகிறது என கேட்டால் அதுவும் தெரியாது. சமாதானம் ஏற்பட பேசுவதாகவோ அல்லது நார்வே நிர்பந்தத்தில் பேசுவதாகவோ இருக்கலாம்.

3.இலங்கையின் இறையாண்மை எக்கேடு கெட்டால் எனக்கென்ன?இந்திய ஒருமைப்பாடு பற்றி தான் கவலைப்பட முடியுமே அன்றி இலங்கை, ஜப்பான், கொரியா இறையாண்மை குறித்தேல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது.தமிழன் வாழவேண்டும், இந்தியன் உயரவேண்டும் அவ்வளவுதான்.

லக்கிலுக் said...

தமிழ் ஈழம் மலரவேண்டும். ஆனால் அதற்கு முன்னால் பிரபாகரனை ராஜீவ் கொலைவழக்குக்காக பிடித்து தூக்கில் போட வேண்டும் என்று சில தேசியவியாதிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நண்பர் செல்வனும் அந்தவகை போலிருக்கிறது....

செல்வன் அளித்த பதில் ஒன்றுக்கு விழுந்து விழுந்து சிரித்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்று இருக்கிறது

//எனக்கு தெரிந்த தேசியவாதிகள் காமராஜர், கக்கன், எம்ஜிஆர் மாதிரி பெரியவர்கள் தான். //

காமராஜர், கக்கன் ஓக்கே.... அது என்ன இடையில் எம்.ஜி.ஆர்?

எம்.ஜி.ஆர் எந்த வகையில் தேசியவாதி என்பதை நண்பர் செல்வன் கொஞ்சம் விளக்கினால் தேவலை.... ஒருவேளை "அனைத்திந்திய" என்று தன் கட்சியின் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டதால் தேசியவாதி ஆகிவிட்டாரா?

ஷேக்ஸ்பியரை அய்யர் ஆக்கிய கணக்காக ஒரு கூட்டம் எம்.ஜி.ஆரை இன்று தேசியவாதி என்கிறது.... நாளை ஜெயலலிதாவையும் தேசியவாதி, உலகவாதி ஆக்கி மகிழ்வார்கள்.....

மொழி, இனம் பற்றி பெருமிதம் கொண்டவர்களையெல்லாம் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று சொல்லி தீவிரவாதிகள் மாதிரி சித்தரிக்கும் போக்கினை பார்ப்பனீய ஆதிக்க சக்திகள் இன்று நேற்றாக செய்துவரவில்லை... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த கூத்து தான் நடக்கிறது....

மொழி, இனம் மீது பெருமை கொண்டவர்களாக நாங்கள் இருந்தாலும் அறிஞர் அன்ணா சொன்ன "சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது" என்ற கூற்றுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம்....

இப்போது நடக்கும் கூத்துகளைப் பார்த்தால்... சே..... இன்னும் ஒரு 50 ஆண்டுகள் பெரியார் இருந்திருக்கக் கூடாதா என தோன்றுகிறது.....

செல்வன் said...

//தமிழ் ஈழம் மலரவேண்டும். ஆனால் அதற்கு முன்னால் பிரபாகரனை ராஜீவ் கொலைவழக்குக்காக பிடித்து தூக்கில் போட வேண்டும் என்று சில தேசியவியாதிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். நண்பர் செல்வனும் அந்தவகை போலிருக்கிறது....//

நான் முதலிலேயே சொன்னது தான்.

பொதுவாக தேசியவாதிகள்" என்பதெல்லாம் எனக்கு தெரியாது. அது உங்கள் பார்வை, உங்கள் கருத்து.

//எம்.ஜி.ஆர் எந்த வகையில் தேசியவாதி என்பதை நண்பர் செல்வன் கொஞ்சம் விளக்கினால் தேவலை.... ஒருவேளை "அனைத்திந்திய" என்று தன் கட்சியின் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டதால் தேசியவாதி ஆகிவிட்டாரா?//

அதுவும் ஒரு முக்கிய காரணம் தான்.

எம்ஜிஆர் திராவிடம் தாண்டி இந்தியா பற்றி சிந்தித்த ஒரு மாபெரும் மக்கள் தலைவர்.அவரது படங்கள் பலவற்றில் இந்திய பற்று மிளிர்ந்திருக்கிறது.மற்றபடி இது விவாதத்தை திசைதிருப்பும் கேள்வி என்பதால் சம்பந்தமில்லாத இந்த கேள்வியை தவிர்க்கிறேன். என் இதயதெய்வத்தின் பிறந்தநாளன்று அவரை பற்றி எழுதுகிறேன், என்ன சந்தேகமிருந்தாலும் அங்கே வந்து கேட்டு கொள்ளுங்கள்.

//இப்போது நடக்கும் கூத்துகளைப் பார்த்தால்... சே..... இன்னும் ஒரு 50 ஆண்டுகள் பெரியார் இருந்திருக்கக் கூடாதா என தோன்றுகிறது..... //

எனக்கு கூடவே அண்ணாதுரையும் ,கர்மவீரரும், எம்ஜிஆரும் இருந்திருக்க கூடாதா என இருக்கிறது.

bala said...

//இப்போது நடக்கும் கூத்துகளைப் பார்த்தால்... சே..... இன்னும் ஒரு 50 ஆண்டுகள் பெரியார் இருந்திருக்கக் கூடாதா என தோன்றுகிறது//

ஏங்க லக்கி,நம்ம கலைஞருக்கு அப்பப்போ கனவிலெ வந்து பெரியார் வழி காட்றாரே அது போதாதா?

அப்புறம் அதே வழியிலே மருத்துவர் அய்யாவும்,இரட்டை குழல் துப்பாக்கியின் இரண்டாவது குழலாக சிங்கம் வீரமணி இவங்களெல்லாம் பாடு படறாங்களே..அது உங்க கண்ணுக்கு தெரியலயா..

பாலா

லக்கிலுக் said...

//எம்ஜிஆர் திராவிடம் தாண்டி இந்தியா பற்றி சிந்தித்த ஒரு மாபெரும் மக்கள் தலைவர்.அவரது படங்கள் பலவற்றில் இந்திய பற்று மிளிர்ந்திருக்கிறது.//

எம்ஜிஆர் திராவிடம் பற்றியே சிந்தித்தது கிடையாது. அவர் தேசத்தைப் பற்றி என்னென்ன சிந்தித்தார் என்று சொல்லுங்களேன். தெரிந்து கொள்கிறோம்.

அவரது படங்களில் இந்தியப் பற்று என்பது புதிதாக இருக்கிறது. அதுவுமில்லாமல் அவரது படங்களில் வந்த வசனங்களை எம்.ஜி.ஆரா எழுதினார்? அவையெல்லாம் எம்.ஜி.ஆரின் கருத்துக்கள் என்று படித்த நீங்களே நம்புவது ஆச்சரியம் தான்.....

//எனக்கு கூடவே அண்ணாதுரையும் ,கர்மவீரரும், எம்ஜிஆரும் இருந்திருக்க கூடாதா என இருக்கிறது. //

இதைத்தான் குழப்படி வேலை என்கிறோம்.... அண்ணாதுரை, காமராஜர் மாதிரி தலைவர்களின் வரிசையில் எம்.ஜி.ஆரை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்? ஜெயலலிதாவை இந்த வரிசையில் சேர்க்கப் போவதற்கான முன்னோட்டம் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை :-))))

லக்கிலுக் said...

//ஏங்க லக்கி,நம்ம கலைஞருக்கு அப்பப்போ கனவிலெ வந்து பெரியார் வழி காட்றாரே அது போதாதா?

அப்புறம் அதே வழியிலே மருத்துவர் அய்யாவும்,இரட்டை குழல் துப்பாக்கியின் இரண்டாவது குழலாக சிங்கம் வீரமணி இவங்களெல்லாம் பாடு படறாங்களே..அது உங்க கண்ணுக்கு தெரியலயா..//

பாலா!

சமூக விடுதலைப் போராளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணர முடியாதா உங்களால்?

அப்படி உணர முடியவில்லையென்றால் கொஞ்சம் ஓரமாக உட்கார்ந்து வாணவேடிக்கையை வேடிக்கைப் பாருங்கள்.....

ஜோ / Joe said...

////எம்.ஜி.ஆர் எந்த வகையில் தேசியவாதி என்பதை நண்பர் செல்வன் கொஞ்சம் விளக்கினால் தேவலை.... ஒருவேளை "அனைத்திந்திய" என்று தன் கட்சியின் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டதால் தேசியவாதி ஆகிவிட்டாரா?//

அதுவும் ஒரு முக்கிய காரணம் தான்.
//

எம்.ஜி.ஆர் தன் கட்சியை ஆரம்பிக்கும் போது 'அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்' என்று தான் தொடங்கினார் .ஒரு காலத்தில் அன்னை இந்திரா மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்று பிலிம் காட்ட ,எம்.ஜி.ஆர் அலறியடித்துக்கொண்டு 'அனைத்திந்திய' என்று சேர்த்துக்கொண்டார் என்று இதய தெய்வத்தின் இனிய பக்தர் செல்வனுக்கு தெரியுமா?

bala said...

//இதைத்தான் குழப்படி வேலை என்கிறோம்.... அண்ணாதுரை, காமராஜர் மாதிரி தலைவர்களின் வரிசையில் எம்.ஜி.ஆரை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்//

லக்கி,
இதே தவறை கலைஞர் செய்து
தி மு க வை இரண்டாக உடைத்தாரே..எம்.ஜீ.ஆர் பலரால் under estimate செய்யப்பட்டார்.
ஆனால் கருணநிதியை விட மக்கள் மனதில் இடம் பெற்றவர் எம். ஜீ.ஆர் என்பதில் சந்தேகமில்லை.

இதே போல் ஜெயலலிதாவையும் under estimate செய்கிறீர்கள்.

பாலா

லக்கிலுக் said...

//எம்.ஜி.ஆர் தன் கட்சியை ஆரம்பிக்கும் போது 'அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்' என்று தான் தொடங்கினார் .ஒரு காலத்தில் அன்னை இந்திரா மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்று பிலிம் காட்ட ,எம்.ஜி.ஆர் அலறியடித்துக்கொண்டு 'அனைத்திந்திய' என்று சேர்த்துக்கொண்டார் என்று இதய தெய்வத்தின் இனிய பக்தர் செல்வனுக்கு தெரியுமா?//

தெரியாது.... தெரியாது.... தெரியாது....

லக்கிலுக் said...

//லக்கி,
இதே தவறை கலைஞர் செய்து
தி மு க வை இரண்டாக உடைத்தாரே..எம்.ஜீ.ஆர் பலரால் under estimate செய்யப்பட்டார்.
ஆனால் கருணநிதியை விட மக்கள் மனதில் இடம் பெற்றவர் எம். ஜீ.ஆர் என்பதில் சந்தேகமில்லை.

இதே போல் ஜெயலலிதாவையும் under estimate செய்கிறீர்கள்.//

பாலா!

திரும்ப திரும்ப குழப்ப வேண்டாம்.... நான் சொன்னது எம்.ஜி.ஆர். தேசியத் தலைவர் அல்ல என்பதையே....

அதுபோல நான் எங்கேயும் கலைஞர் தேசியத் தலைவர் என்றும் சொன்னதில்லை.... அவரும் சொல்லிக் கொண்டதில்லை....

ஜெயலலிதாவை தலைவர் என்று சோவும், உங்களைப் போன்றவர்களும் தான் சொல்கிறார்கள்.... ஜெயலலிதாவின் இப்போதைய ஊதுகுழலான க. சுப்பு கூட "ஹிட்லர்" - அதாவது சர்வாதிகாரி என்று தான் சொல்லியிருக்கிறார்....

நாங்கள் Under Estimate போடுபவர்களல்ல.... Under ground வேலைகளை வெட்ட வெளிச்சமாக்குபவர்கள்....

எம்.ஜி.ஆரையும் பின்னர் ஜெயலலிதாவையும் அதன் பின்னர் வைகோவையும் இப்போது விஜயகாந்தையும் முன்னிறுத்தி கொம்பு சீவி விடுவது பார்ப்பனீய ஊடகங்களே.

எம்.ஜி.ஆரும், கலைஞரும் பிரியக்கூடிய சூழ்நிலையை யார் உருவாக்கினார்கள் எப்படி உருவானது என்பதைப் பற்றி எம்.ஜி.ஆரின் வலதுகை ஆர்.எம்.வீயே பலமுறை சொல்லியிருக்கிறார்... நான் என்னத்தைச் சொல்ல?

செல்வன் said...

எத்தனை கேள்வி ஐயா கேப்பிங்க?:))

எம்ஜிஆர் பத்தி ஏதோ சொன்னா ஆதாரம் கேட்டா எங்கே போக?அதுக்கும் இந்த பதிவுக்கும், பேசும் பொருளுக்கும் என்ன சம்பந்தம்னு சொல்லுங்க. மற்றபடி எத்தனை பதிவுகளில் எத்தனை பேருடன் சண்டை போடுவது? எல்லாரும் அந்த பதிவுக்கு வாங்க.ஒரே சமயத்தில் பல சப்ஜெக்டுகளில் கேள்வி கேட்டா ஒருத்தனே எத்தனை கேள்விக்கு பதில் போடறது?ஆதாரம் தேடறது?:))வேற வேலை இல்லையா?:)))

ஜோ / Joe said...

////எம்.ஜி.ஆர் தன் கட்சியை ஆரம்பிக்கும் போது 'அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்' என்று தான் தொடங்கினார் .ஒரு காலத்தில் அன்னை இந்திரா மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்று பிலிம் காட்ட ,எம்.ஜி.ஆர் அலறியடித்துக்கொண்டு 'அனைத்திந்திய' என்று சேர்த்துக்கொண்டார் என்று இதய தெய்வத்தின் இனிய பக்தர் செல்வனுக்கு தெரியுமா?//

தெரியாது.... தெரியாது.... தெரியாது....//

இதுக்கு நாம செல்வனை குற்றம் சொல்ல முடியாது .ஏன்னா இது பள்ளிகூட பாடத்துல இல்ல.

Anonymous said...

//செல்வன் அளித்த பதில் ஒன்றுக்கு விழுந்து விழுந்து சிரித்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்று இருக்கிறது//

தலைவா அடிகிடி எதுவும் படலையே விழுந்ததுல..

ஜோ / Joe said...

//எத்தனை கேள்வி ஐயா கேப்பிங்க?:))//
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை -இதய தெய்வம் பாட்டுப்பா!

செல்வன் said...

//ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை -இதய தெய்வம் பாட்டுப்பா!//

அதனாலதாம்பா நானும் கேட்கிரேன்.

"ஏன்" இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள்?:)))))

ஜோ / Joe said...

//"ஏன்" இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள்?:)))))//

"அனைத்திந்திய" என்று தன் கட்சியின் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டதால் " என்பதும் எம்.ஜி.ஆர் தேசிய வாதி என்பதற்கு முக்கியமான காரணம்-ன்னு நீங்க தானே சொன்னீங்க!

என்ன தலைவா! "நான் யார் ? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவன் யார் யார்?" -ன்னு வாத்தியார் பாடுற மாதிரி ஆயிட்டீங்க.

லக்கிலுக் said...

//எம்ஜிஆர் பத்தி ஏதோ சொன்னா ஆதாரம் கேட்டா எங்கே போக?//

வச்சிக்கிட்டா வஞ்சனை பண்ணப் போறீங்க? இருந்தாதானே கொடுக்கறதுக்கு :-)

ஜோ / Joe said...

செல்வன்,
லஞ்ச் பிரேக்-ல கொஞ்சம் நேரம் கிடைச்சது.செல்வன் மாதிரி பெரிய தலைக்கு நாமும் தெரிஞ்ச ஆளா இருக்கணுமே-ன்னு கேள்வி கேட்டுபுட்டேன் .நான் வாத்தியார் ரசிகன் இல்லைன்னாலும் வாத்தியார் பாட்டுக்கு தீவிர ரசிகன்.

லக்கிலுக் said...

ஆபிசுக்கு கீழே ஆட்டோவுல தலைவர் பாட்டை இப்போ அலற உட்டுக்கிட்டு இருக்காங்க...

"அச்சம் என்பது மடமையடா....
அஞ்சாமை திராவிடர் உடமையடா...."

bala said...

//ஜெயலலிதாவை தலைவர் என்று சோவும், உங்களைப் போன்றவர்களும் தான் சொல்கிறார்கள்.... ஜெயலலிதாவின் இப்போதைய ஊதுகுழலான க. சுப்பு கூட "ஹிட்லர்" - அதாவது சர்வாதிகாரி என்று தான் சொல்லியிருக்கிறார்//

லக்கி,

ஜெயலைதாவைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் வேறே..அது முக்கியமில்லை இங்கு..
தமிழ் நாட்டு மக்கள் பலமுறை அவரை முதல்வராக ஆக்கியிருக்கிறார்கள்..அதனால் அவரும் தலைவி தான்..அண்ணா,கலைஞர்,எம் ஜீ ஆர் போன்ற தலைவர்களைப் போல் ;

என்னைப் பொருத்தவரை (அண்ணாவைத் தவிர)மேலே சொல்லப்பட்ட அனைவருமே ஒரே குட்டையில் ஊரின மட்டைகள் தான்..
நம்ம கர்ம வீரர் சொன்னது..

//நான் சொன்னது எம்.ஜி.ஆர். தேசியத் தலைவர் அல்ல என்பதையே....//

தேசியத் தலைவர்னு இப்ப யாருங்க இருக்காங்க.

அதெல்லாம் ஜவஹர்லால் நேரு வோட முடிஞ்சி போன சமாசாரம்.

உங்க வாண வேடிக்கை என்னவென்றால், உதார் உடறது,"சோ"த்தனம்,பாப்பான் கொம்பு சீவரான் இப்படி சொல்லி பூச்சாண்டி காட்றது .. செய்ங்க

பாத்துட்டு போறேனுங்கோ.

பாலா

செல்வன் said...

//அனைத்திந்திய" என்று தன் கட்சியின் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டதால் " என்பதும் எம்.ஜி.ஆர் தேசிய வாதி என்பதற்கு முக்கியமான காரணம்-ன்னு நீங்க தானே சொன்னீங்க!//

ஆமாம். சொன்னேன்.அதுக்கு நீங்க வேற காரனம் சொன்னீங்க.

இந்திரா அப்படி சட்டம் போட்டும் கலைஞர் அனைந்திந்திய திமுகன்னு ஏன் பேர் வெக்கலை?எம்ஜிஆர் மட்டும் வெச்சார்ன்னு கேட்டு, அதுக்கு நீங்க வேறொரு பதில் சொல்லி, அதுக்கு நானொரு பதில் சொல்லி விவாதம் போயிகிட்டே இருக்கும்.

//என்ன தலைவா! "நான் யார் ? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவன் யார் யார்?" -ன்னு வாத்தியார் பாடுற மாதிரி ஆயிட்டீங்க.//

வாத்தியார் பாட்டில் தத்துவம் கண்டிப்பா இருக்கும்.

செல்வன் said...

//செல்வன்,
லஞ்ச் பிரேக்-ல கொஞ்சம் நேரம் கிடைச்சது.செல்வன் மாதிரி பெரிய தலைக்கு நாமும் தெரிஞ்ச ஆளா இருக்கணுமே-ன்னு கேள்வி கேட்டுபுட்டேன் .நான் வாத்தியார் ரசிகன் இல்லைன்னாலும் வாத்தியார் பாட்டுக்கு தீவிர ரசிகன். //

உங்களை எனக்கு அன்புடனில் ஒரு வருஷத்துக்கு முந்தியே தெரியும்.பழைய நட்பை எல்லாம் நான் மறப்பவனில்லை

செல்வன் said...

//அய்யய்யோ செல்வன் ஆரம்பிச்சிட்டிங்களா? அல்கொய்தாவுக்கு தான் நானும் நீங்களும் ஏகப்பட்ட பதிவு போட்டிருக்கோமே? அங்க பேசிக்கலாம், இந்த பதிவு மேட்டரே வேற.... :-))))))//

உத்தரவுங்க:))

நீங்க //என்னங்க காஷ்மீர் பற்றி எழுதுனா அல்கொய்தா வருதே, உங்களுக்கு தெரியாததுனு இருக்கா என்ன தல //ன்னு கேட்டதால தான் பதில் சொன்னேனுங்க.இங்க வேணாம்னா வேணாம்ங்க..

லக்கிலுக் said...

//தமிழ் நாட்டு மக்கள் பலமுறை அவரை முதல்வராக ஆக்கியிருக்கிறார்கள்..அதனால் அவரும் தலைவி தான்..//

அப்படியா பாலா? எனக்குத் தெரியவே தெரியாதே?

1929ல் ஜெர்மனியில் நடந்த தேர்தலில் ஹிட்லரை தேர்ந்தெடுத்ததும் மக்கள் தான்...

இந்தியாவின் ஹிட்லர் இந்திராவைத் தேர்ந்தெடுத்ததும் மக்கள் தான்... இதற்காக பிற்பாடு "கர்ம வீரர்" தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொண்டதை உணர்ந்தார் :-))))))

bala said...

//பார்ப்பனீய ஆதிக்க சக்திகள் இன்று நேற்றாக செய்துவரவில்லை... கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தமிழகத்தில் இந்த கூத்து தான் நடக்கிறது//

லக்கி,

யாருங்க இந்த பொல்லாத பார்ப்பனீய ஆதிக்க சக்திகள்?

40 ஆண்டுகளூக்கு முன் இந்த சக்திகள் இல்லையா?

நீங்க காவிரி தந்த கலைத்தாய், பராசக்தி,நம்ம புரட்சித் தலைவி அம்மாவையா சொல்றீங்க?

சஸ்பென்ஸ் தாங்க முடியல..

பாலா

பாலா

லக்கிலுக் said...

//யாருங்க இந்த பொல்லாத பார்ப்பனீய ஆதிக்க சக்திகள்?//

- வெங்கட்ராமணீயம் பேசுபவர்கள்

- தினமலர், துக்ளக் பத்திரிகை நடத்துபவர்கள்

- தங்களைத் தாங்களே தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்திக்கும், சமஸ்கிருதத்துக்கும் கொடிபிடிப்பவர்கள்

- இடஒதுக்கீடு என்றாலே ஒண்ணுக்கு போகிறவர்கள்

- திராவிடம் என்றாலே வாந்தி எடுப்பவர்கள்

இன்னும் நிறைய இருக்கு வாத்தியாரே... பசிக்குது.... சாப்பிட்டுட்டு வர்றேன்... உங்களுக்கு என்ன லஞ்ச்? தயிர்சாதம் வடுமாங்கா ஊறுகாயா? :-))))

bala said...

//தினமலர், துக்ளக் பத்திரிகை நடத்துபவர்கள்//

லக்கி,

The Hindu..அதுவும் இதில் அடங்குமா?

ஆமா, உலகத்திலேயே, நேர்மையான, சிறந்த, ஆதிக்க சக்தி இல்லாத பத்திரிகை எது?

முரசொலி?
நமது எம் ஜீ ஆர்?
விடுதலை?
தினத்தந்தி?

பாலா

Pot"tea" kadai said...

Often, post some "comedies" like these. "Comments" are more hilarious than the post.

:)))))

bala said...

'//உங்களுக்கு என்ன லஞ்ச்? தயிர்சாதம் வடுமாங்கா ஊறுகாயா? //

லக்கி,

வயத்தெரிச்சலை கிளப்பாதீர்கள். வடுவாவது மாங்காயாவது.நீங்க ஒண்ணு.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. இப்பொ நிறைய தமிழர்கள் தயிர்சாதம் சாப்பிடராங்களே .அந்த பழக்க்கம் ஆரியம் புகுத்தின இடைச்செருகலா..இல்லை ஒரிஜினல் திராவிட ஐடெம் தானா?
கொஞ்சம் தொல்காப்பியம் பாத்து சொல்லீங்கன்னா தெரிஞ்சுக்குவோம்.

பாலா

Anonymous said...

//கொஞ்சம் தொல்காப்பியம் பாத்து சொல்லீங்கன்னா தெரிஞ்சுக்குவோம்//

தொல்காப்பிய ஆராய்ச்சி மையம் இங்க இல்லை..வேற எடம்...

தமிழ்வெளியை பார்த்தீங்களா?