மக்களே, நான் இந்த மேட்ச் கழுதையெல்லாம் முழுசா உட்கார்ந்து பாக்கறதில்லை. நானெல்லாம் எப்பவும் இந்த பாவத்துக்கு ஆளாகவே மாட்டேன்.வேற வழியில்லாம சில நேரம் ஹிஹி...
மொகாலியில் மேட்ச்.சாதாரணமாகவே அது வேகபந்துக்கு சாதகமான பிட்ச். இந்த தொடரின் பெரும்பாலான ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது என்ற போதே எனக்கு தெரிந்துவிட்டது நமக்கு ஆப்பு தான் என்று.
ஆசிய அணிகள் எதுவும் அரைஇறுதிக்கு தகுதி பெறவில்லை என்பது தற்செயலா? இல்லை.மற்ற அணிகள் ஆடுகளத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள சிறிது அவகாசமே எடுத்துக்கொள்கின்றன.நம் ஆட்களுக்கு அதெல்லாம் இல்லை. எப்பவாவது ஜெயசூர்யா பவுலிங் பிட்ச்சில் ரன் எடுத்திருக்கிறாரா? நம் ஆட்களுக்கு மட்டையாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் வேண்டும்.குறிப்பாக பந்து முட்டிக்கு மேல் எழும்பக்கூடாது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கவே கூடாது.
இந்த டிவி,மீடியா,முன்னாள் வீரர்களின் கூத்து சகிக்க முடியாத அளவு வளர்ந்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க எவனாவது சட்டம் போடக்கூடாதா?
நேத்து பாருங்க மெக்ராத் எப்பவும் போல் நூல் பிடித்தது போல் பந்து வீச ஆரம்பிச்சாரு.. சச்சின் தடுமாறினாலும் நம்ப காமெண்ட்ரி ஆளுங்களை பார்க்கணுமே.இதோ வெளுக்க போறாரு.வெட்ட போறாரு. கிழிக்க போறாருன்னு ஓரே கூச்சல்.கடைசியில் மெக்ராத் தான் சிரிச்சாரு. அதே ஸ்டைலில் இன்னும் எத்தனை முறை சச்சின் கீப்பர் கேட்ச் தருவாரோ?
சேவாக்குக்கு ரெண்டு பால் பீட் ஆகி கீப்பர் கிட்டே .போகுது. அடுத்த பால்ல தடுமாறி ஒரு காமா சோமா ஷாட் அடிச்சி பவுண்டரி கிடைக்குது.சரியான பிளேஸ்மெண்ட் இல்லை. ஆனா உடனே ஒரு ஆள் சொல்றாரு."அதுதாங்க சேவாக்.கவலையே படமாட்டாரு" இந்த பில்ட் அப் தேவையா? எக்ஸ்டரா கவர்ல ஆள் இருந்திருந்தா அப்பவே டவுசர் கிழிஞ்சிருக்கும்.
எப்பவுமே காயப்பட்டு இருக்கிற அகர்கர், டீமை விட்டு தூக்கற நிலைமை வந்தா மட்டும் ஒன்றிரண்டு அரை சதம் அடிச்சி இடத்தை தக்க வைக்கற யுவராஜ் இவங்க இல்லாட்டி டீமே இல்லையா?டிவி போட்டா எல்லா சேனலிலும் இதுதான் பேச்சு.
விளம்பரம் எல்லாம் ஊ ஆ இந்தியான்னு ஓரே கூச்சல். நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு.
மொத்தத்துல பவுலிங்கில் பதானும் பேட்டிங்கில் திராவிட்டும் ஜொலிக்க வில்லை என்றால் நம்ம மேட்டர் காலி. என்னது உலக கோப்பையா? ஹிஹி...என்னங்க குறும்பு பண்றீங்க? அது வெஸ்ட் இண்டிஸ்ல நடக்க போகுதுங்க..... கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.......:))
Monday, October 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
வாஸ்தவமான அங்கலாய்ப்புதான்!
நம்மளால வேறென்ன செய்ய முடியும்?
//நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு//
நல்லா பாருங்க! முதல்ல நான்தான் கங்குலின்னு ஞாபகப் படுத்துவாரு!
:)
50 ஓவரும் விளையாடுறதே பெரிசு! இதுல ஜெயிக்கணுமாம்ல!
//நடுவில் இந்த கங்கூலி வேற. நீட்டா ட்ரஸ் பண்ணிகிட்டு உட்கார்ந்துகிட்டு குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டு என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கன்னு கேக்குறாரு.//
ஆமாங்க, ரொம்ப காமெடியா இருக்கு :-)))))
<<>>
// 50 ஓவரும் விளையாடுறதே பெரிசு! இதுல ஜெயிக்கணுமாம்ல! //
அப்படி போடுங்க சிபி :-))
பொழப்பு சிரியா சிரிச்சு போச்சு... கிரிக்கெட்டை சொல்லலங்க... அதையே பாத்து , பேசி நேரத்தை வீணாக்குன நம்ம பொழப்பை சொன்னேன்... :)
லொடுக்கு,
புரியுதுய்யா...உம்மோட கடைசி சில பதிவுகளை படிச்சேன் :)) :((
சிபி,
//50 ஓவரும் விளையாடுறதே பெரிசு! இதுல ஜெயிக்கணுமாம்ல!//
:))
ஹாஹா...
சோம்பேறிபையன்,
நன்றி...சோகத்தை பகிர்ந்தக்கொண்டதற்கு
இது திராவிட குஞ்சுகளின் சதி. திராவிட்டை captain பதவியில் இருந்து நீக்கினால்தான் இந்தியா கெலிக்கும் :-)
//லொடுக்கு,
புரியுதுய்யா...உம்மோட கடைசி சில பதிவுகளை படிச்சேன் :)) :((//
நீங்களும் அந்த புலம்பலை பாத்துட்டீங்களா??
//மொத்தத்துல பவுலிங்கில் பதானும் பேட்டிங்கில் திராவிட்டும் ஜொலிக்க வில்லை என்றால்//
திராவிட் சரி... பதான் நேற்றைக்கு ஜொலித்தாரா? நேற்று நான் ஆட்டத்தைப் பார்க்கவில்லை. ஆனால் ஸ்கோர் போர்ட்-ஐ பார்த்தால் ஹர்பஜனும், மோங்கியாவும்-தான் பந்துவீச்சில் ஜொலித்த மாதிரி தெரிகிறது.
சச்சின் ரசிகனான எனக்கு, அவரைப் பற்றிய விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை :-) ஆனால் ஒன்று கடந்த நான்கு வருடங்களாக் (2002-2006) வரை அவர் நன்றாகவே ஆடி வருகிறார். ஆனால் இந்தியா ஒரு அணியாக பெறும் வெற்றிகளில் அவர் பங்கு குறைவே ... :-(
இருக்கட்டுமைய்யா ... எல்லாம் இருக்குறதுதான், சண்டையில கிழியாத டவுசர் எங்க இருக்கு ...
ஆப்பிரிக்காவுக்கு போறாங்களாம். ஹும். என்ன அடி வாங்கப் போறாங்களோ...
சிலருக்கு, விடாம வாய்ப்பு தர்றதும், சிலருக்கு ரொம்பக் கொஞ்ச வாய்ப்பு தர்றதும்...
அந்த பொடியன் ரைனா பாவம். ஏற்கனவே பிரஷர். அவனுக்கு முன்னாடி, பதான அனுப்பியிருக்கலாமில்ல. அட, ஹர்பஜன அனுப்பி, ரெண்டு சுத்து சுத்துடான்னு சொல்லியிருக்கலாமில்ல...
என்னமோ போங்கப்பா..
(அடுத்த மாட்சு எப்பப்பா, டெலிகாட்ஸ் பண்றானா, என்னா டைமு, சாயங்காலம், ராத்திரின்னா பரவாயில்ல...)
கிரிக்கெட்டுன்னா என்னா? ஓ! விளம்பர மாடல்கள்ளாம் விளையாடுவாங்களே! அந்த விளையாட்டா?
முத்து,
நல்ல விமர்சனம்,அனாலிஸிஸ்!
கிரிக்கெட் பற்றி உங்களிடம் நான் எதிர்பார்க்காத ஒன்று :)
ஒரே வரி, நம்ம இந்தியன் அணியை கட்டி வச்சு உதைக்கணும், அப்டி பத்திகினு வருது ! அதனாலேயே பதிவு கூட போடலே !!!
இந்த லட்சணத்திலே, உலகக் கோப்பையை ஜெயிப்பாங்கன்னு பில்டப் வேற ! சச்சின் aggressive ஆ விளையாடலேன்னா, எதிரணிக்கு தெம்பு கூடி விடும் என்பது தான் அடிப்படை. சச்சின் 50 ஒவர்களும் இருக்கணும்னு அவசியமில்ல, அதுக்கு டிராவிட் இருக்கார் இல்லியா ?
ஒரு காலத்துலே, ரீடிஃப் மாதிரி வலைத்தளங்களுக்கு நெறய லெட்டர் எழுதுவேன் (கடுப்பில!).
கீழே, கிஷன் என்ற சவுரவ் மகா ரசிகருக்கு, நான் கொடுத்த (ரீடிஃப் பதிப்பிச்ச) பதிலடி :)
kishan's letter to Rediff: http://www.rediff.com/cricket/2002/dec/19back.htm
My response: http://www.rediff.com/cricket/2002/dec/28back.htm
நம்ம சமீபத்திய பதிவுகளை வாசித்தீர்களா ? அப்பப்ப அட்டென்டன்ஸ் குடுங்க ;-)
இப்ப தான் கவனித்தேன் ! நீங்க இடது புறம் கொடுத்துள்ள வலைப்பதிவு தொடுப்புகளுக்கான தலைப்புகளை (பெரியோர், சைவம், அசைவம், இடது, வலது ....) இருக்கிற எந்த தலைப்பின் கீழ் சேர்க்கறதுக்கும், நாம லாயக்கில்லைன்னு நீங்க நெனச்சாலும், நம்மள போன்ற ஆட்களுக்கான லிஸ்ட்க்கு ஒரு தலைப்பு குடுத்து, நம்மளுக்கும் லிங்க் தரலாமே :))))
எ.அ.பாலா
லொடுக்கு,
//நீங்களும் அந்த புலம்பலை பாத்துட்டீங்களா?? //
என் புலம்பலை நீங்களும் உங்க புலம்பலை நானும் படிக்கறது தானேப்பு வலைப்பதிவு???:))
அருண்மொழி,
திராவிட் திராவிடனா என்ற என் பழைய பதிவை படித்தீர்களா? அரசியலை விடுங்கப்பு...இது வெள்ளாட்டு :))
sridhar venkat,
நானும் சச்சின் எதிர்ப்பு கோஷ்டிதான்.சில மேட்ச்களில் அவர் ஆடிக்கொடுத்துள்ளார்.
மற்றபடி பம்பாய் மட்டையாளர்களின் வரலாற்றின்படி சொந்த சாதனைகளுக்கு கொஞ்சம் அதிக முக்கியத்துவம் தருவதாக தெரிகிறது.(ஆனால் பேசும்போது அமுக்கி)
இன்பா,
:)))
ஜோ,
அதே தான் ஜோ...நடுநடுவே இந்த மாதிரி மேட்ச் விளையாடுவாங்க அவங்க..
பாலா,
//நல்ல விமர்சனம்,அனாலிஸிஸ்!
கிரிக்கெட் பற்றி உங்களிடம் நான் எதிர்பார்க்காத ஒன்று :) //
அய்யோடா..நான் காலேஜ் டீமில் இருந்தேன்..பேப்பர்ல எல்லாம் பேர் வந்தது.ஹிஹி..ஓப்பனிங் பேட்ஸ்மென்...
//ஒரே வரி, நம்ம இந்தியன் அணியை கட்டி வச்சு உதைக்கணும், அப்டி பத்திகினு வருது ! அதனாலேயே பதிவு கூட போடலே !!!//
ஹாஹா..அதைத்தான் நான் ரீஜன்டா போட்டேன்...
//நம்ம சமீபத்திய பதிவுகளை வாசித்தீர்களா ? அப்பப்ப அட்டென்டன்ஸ் குடுங்க ;-)//
என் பிரச்சினை உங்களுக்கு தெரியும்..தலைப்பெல்லாம் பரபரப்பா இருக்கு..என்ன பண்றது? புரியுதுல்ல...உங்களுக்காக நான்தான் கம்பெனி மாறணும் போல..நீங்க உரல் மாத்த மாட்டீங்க..:))
//இப்ப தான் கவனித்தேன் ! நீங்க இடது புறம் கொடுத்துள்ள வலைப்பதிவு தொடுப்புகளுக்கான தலைப்புகளை //
நீங்க பெரியோர்ல வருவீங்க..இதே போடறேன்...
பாலா,
நீங்க சைவத்துல வருவீங்க...சாரி பார் தி சேஞ்ச்:))
//மற்ற அணிகள் ஆடுகளத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள சிறிது அவகாசமே எடுத்துக்கொள்கின்றன.நம் ஆட்களுக்கு அதெல்லாம் இல்லை. எப்பவாவது ஜெயசூர்யா பவுலிங் பிட்ச்சில் ரன் எடுத்திருக்கிறாரா//
eppadi eppadi eppadi muthu.. kalakalaana point muthu..
Post a Comment