Wednesday, October 11, 2006

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

தீபாவளி சமயத்தில் மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்று நினைத்துள்ளோம். வழக்கமான வலைப்பதிவு சந்திப்புகளின் போது அறிமுகம் மற்றும் அரட்டை என்ற நிகழ்ச்சிகள் தான் இருக்கும்.இதை தாண்டி கவிதை,கட்டுரை என்று அமைத்து இந்த நிகழ்வை ஒரு மறக்கவியலா நிகழ்வாக ஆக்க எண்ணியுள்ளோம்.கண்டிப்பாக கவிதை நான் எழுத போவதில்லை.யாரும் பதட்டப்பட தேவையில்லை.

பேராசிரியர் தருமி, லிவிங் ஸ்மைல் வித்யா, வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, கவிஞர் சுகுணா திவாகர்,நண்பர்கள் வரவணையான்,ராம்,எம்.எஸ்.வி முத்து மற்றும் நான் கண்டிப்பாக கலந்துக்கொள்வோம் என்று நினைக்கிறேன்.அய்யா ஞானவெட்டியான் அருகில் திண்டுக்கல்லில் இருப்பதால் அவரும் வருவார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

இந்த மாதம் 20 லிருந்து 24 வரை இருக்கபோகின்ற விடுமுறை காலங்களில் மதுரையில் இருக்கும் நண்பர்கள் மற்றும் மற்ற ஊர்களில் இருந்தும் வர இயலும் நண்பர்களும் அன்பர்களும் மதுரை சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.வர விரும்பும் நண்பர்கள் பேராசிரியர் தருமியை தொடர்பு கொள்ளவும்.DHARUMI2@GMAIL.COM.சரியான நாளும் நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

வலையுலகில் முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு சந்திப்பை கேமராவில் பதிவு செய்து வலையேற்ற எண்ணியுள்ளோம்.நன்றி.
bloggers meeting in temple city madurai

32 comments:

Anonymous said...

//DHARUMI2@GMAIL.COM.//

DHARUMI@GMAIL.COM என்பதே சரி என நினைக்கிறேன்

அன்புடன்
சிங்கை நாதன்.

அருண்மொழி said...

இது கொஞ்சம் கூட நாயமில்லபா. சென்னை மேட்டரே முழுசா எழுதல. இப்ப மதுரயா?

பொன்ஸ்~~Poorna said...

dharumi2 சரி தான்..

//வலையுலகில் முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு சந்திப்பை கேமராவில் பதிவு செய்து வலையேற்ற எண்ணியுள்ளோம்.//
சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் இதை எல்லாம் செய்யாததை வன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறோம்..

தருமி said...

dharumi2@gmail.com என்பதே சரி.

கைத்தொலை பேசி எண்: 94438 31320

தீபாவளிக்கு (21.10.'06)முந்திய நாளான 20-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஒன்று சேர்வோமா? இடம் - அனேகமாக அமெரிக்கன் கல்லூரியில்.

தருமி said...

அருண்மொழி, பொன்ஸ்,
plug your ears, pl.
ஒரேயடியா புகையா வருது... :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நான் ஈரோடு இருப்பினும் கலந்து கொள்பவர்களின் பட்டியலைப் பார்க்கும் பொழுது இதற்காக ஒரு எட்டு மதுரை வருவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது(அப்படியே வேறு சில நண்பர்களையும் பார்க்க வாய்ப்பாக இருக்கும்)எனவே முடிந்த வரை இந்த சந்திப்பில் கலந்து கொள்ள முயற்சி செய்கிறேன். தருமி ஐயா அவர்களுக்கும் ஒரு மெயில் தட்டி விடுகிறேன்.

வெற்றி said...

முத்து,
ஒன்றுகூடல் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய வாழ்த்துக்கள். வீடியோவைப் பார்க்க ஆவலாக உள்ளேன்.

முத்துகுமரன் said...

நான் அங்கு இல்லாவிட்டாலும் என் ஆவி அங்குதான் உலவிக்கொண்டிருக்கும் என தெரியப்படுத்துகிறேன்.

Anonymous said...

//என் ஆவி அங்குதான் உலவிக்கொண்டிருக்கும்//
அப்போ ஆவி வந்த சந்திப்பா? பயம்ம்மாருக்கே!

மகேஸ் said...

தீபாவளிக்கு அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை வைத்துக் கொள்ள முடியுமா? ஏனென்றால் மதுரைக்குச் சுற்று வட்டாரத்தில் ராமநாதபுரம்,விருதுநகர்,சிவகாசி போன்ற ஊர்களில் இருந்து வருபவர்களுக்கு தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் சொந்த வேலைகள் அதிகம் இருக்கலாம். எனவே தீபாவளிக்கு அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை நாள் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிகழ்சி ஒருங்கினைப்பாளர்கள் கவனத்திற்கு, அமெரிக்கன் கல்லூரி தவிர மதுரை ஈகோ பார்க்கும் சரியான இடமாக இருக்கும் என நினைக்கிறேன்.

rajavanaj said...

நல்ல முயற்சி. நிச்சயம் வர முயற்சி செய்கிறேன்.

நன்றி

பூனைக்குட்டி said...

Once you decided the place and the time please let me know it. Already sent a mail to Dharumi.

mohandoss.i @ gmail.com

Anonymous said...

முத்து, கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.

தருமி, அமெரிக்கன் கல்லூரி நல்ல இடம். அது போல் வண்டியூர் தெப்பக்குள மைய மண்டபத்தையும் நினைவில் கொள்ளுங்கள். ( ஹிஹீ.... 9வது படிக்கும்போது ஸ்கூல கட் அடிச்சிட்டு உக்காந்தது, அதுக்கப்புறம் அங்க போவே இல்ல)

புகையும் அன்பர்களுக்கு ;) அந்த மண்டபம் "மதுர மரிக்கொழுந்து வாசம்" பாட்டில் வரும்.

அப்புறம் ஒரு முக்கிய விடயம் தீபாவளிக்கு முதல் நாள் மதுரை பிதுங்கி வழியும். வெளியூர் அன்பர்கள் சிரமப்படுவார்கள். தருமி அய்யா க்கும் இது தெரியும்.

அதுவும் இல்லாமல் எனக்கும் தீபாவளிக்கு முதல்நாள் பாரில் கூட்டம் அதிகம் இருப்பதால் நிர்வகிக்கும் வேலை இருக்கிறது( போன வருடம் ஒருத்தனை மண்டைய உடைச்ச கேசே ஒரு மாசத்துக்கு முன்னாலதான் முடிச்சேன்)

ஆகவே மருதை வாழ் பெரியோர்கள் வசதியான தேதி முடிவு செய்ய வேண்டுகிறேன்.

எனது எண் : 98426-04739

பின் குறிப்பு : எனக்கு சொந்தமாக பார் உண்டு , மற்றபடி எந்த பாரிலும் டென்டராக வேலை செய்யவில்லை ;)

மெளலி (மதுரையம்பதி) said...

அமெரிக்கன் கல்லூரியில் மாலை வேளையில் (6 மணிக்கு மேல்) உள்ளே இருக்க விட மாட்டார்கள்....பார்த்து முடிவு செய்யவும். தெப்பக்குளம் நல்ல சாய்ஸ்...

மகேஸ் சொல்வது போல், மதுரை பிதுங்கி வழியும் எனவே தீபாவளிக்கு மறுநாள் நல்லது.

அமானுஷ்ய ஆவியின் துணையுடன் ஆவி வடிவில் நானும் அங்கு இருக்க முடியுமா என்று பார்த்து முடிவு செய்கிறேன்....

குமரன் (Kumaran) said...

கூடல் நகரில் ஒரு கூடல்ன்னு தலைப்பு போட்டிருக்கலாம். :-)

எங்க ஊருல நடக்குற சந்திப்புல கலந்துக்க முடியலை. பரவாயில்லை. சந்திப்பு நல்லா நடக்கட்டும். என் வாழ்த்துகள்.

Anonymous said...

அண்டை நாட்டில் வாழும் என்னைப் போன்றவர்கள் கலந்து கொள்வதென்பது முயற்கொம்பைத் தேடுவதற்கு ஒப்பாகும், இருப்பினும் இந்நிகழ்வு செவ்வனே நடந்தேற எந்தன் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும், வீடியோப் பதிவினால் எம்மைப் போன்றோர்கள் நிச்சயம் திருப்தியடைவார்கள் என்று நினைக்கின்றேன், முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

PRABHU RAJADURAI said...

please count me in...i prefer it be rather informal with a tinge of malice:-)

PRABHU RAJADURAI said...

don't know many of the blogger...but i invite everyone to my home for a few minutes, subject to their convenience..

Muthu said...

TENTATIVE DECIDED SUNDAY 22ND
AFTERNOON 2.00 PM

இராம்/Raam said...

//TENTATIVE DECIDED SUNDAY 22ND
AFTERNOON 2.00 PM //

அனேகமா இது எல்லாருக்கும் சரியானதா இருக்குமின்னு நினைக்கிறேன்.

Muthu said...

தருமி,

ஞாயிறு சரியாக இருக்குமா என்று சொல்லுங்கள்.

துளசி கோபால் said...

கலந்துக்க முடியாத நிலமை.

கூடல் நல்லபடி நடக்க வாழ்த்து(க்)கள்.

தருமி said...

நான் உள்ளூர்வாசி. எந்த நாளும் எந்த நேரமும் எனக்கு சம்மதமே.

வல்லிசிம்ஹன் said...

வலைப் பதிவாளர்கள் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்ய முடியுமா.:-)
கலந்து கொண்ட அனைவரும் தனித்தனி பதிவு போட வேண்டும்.

Muse (# 01429798200730556938) said...

முத்து அவர்களே,

அருமையான ஐடியாக்கள். உருப்படியான ஒன்றாக இந்தச் சந்திப்பு விளங்கும் என்று தோன்றுகின்றது.

சந்திப்பவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரு ஐந்து நிமிடம் தங்களின் கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பளித்தால், அதன் பின்னால் நடக்கும் உரையாடல் மிகவும் உபயோகமான தகவல்களைக் கொண்டதாக விளங்கும்.

இந்தச் சந்திப்பை வலைப்பதிவர் யாரேனும், ஒரு டிஜிட்டல் கேமரா உதவியுடன் வீடியோ செய்தால், கலந்துகொள்ள முடியாத என்னைப்போன்றவர்களும் சந்திப்பின் பலனை அனுபவிப்பர்.

அஃது இயலாதபோது குறைந்தது ஐபோடாகவாவது அந்த உரையாடல்களைப் பதிவு செய்து தரவும்.

தங்களுடைய இந்தச் சந்திப்பு வெற்றிகரமானதாக அமையவும், உபயோகமான மேலும் பல சந்திப்புக்களுக்கு வழிகோலவும் வேண்டும் என்று விரும்புகின்றேன்.

வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

பொண்டா உண்டா என்பதை தயவு செய்து conform செய்யவும்..

ரவி said...

ஸ்மைல் அது பொண்டா இல்லை..போண்டா...

அமானுஷ்யமாக மெகா சைஸ் போண்டா ஒன்றை பெங்களூரில் இருந்து பார்சல் அனுப்பலாம் என்று உள்ளேன்...

என்ன சொல்றீங்க ?

Anonymous said...

// லிவிங் ஸ்மைல் சைட்...
பொண்டா உண்டா என்பதை தயவு செய்து cஒன்fஒர்ம் செய்யவும்..//


கண்டிப்பாக சைட் டிஷ் போண்டாதான்.

அதுக்காக மெயின் டிஷ் என்ன என்று சின்ன பிள்ளைத்தனமாக கேட்கக்கூடாது. :))))))))

தருமி said...

FRIENDS,

MADURAI BLOGGERS' MEETING WILL BE ON

22.10.'06 SUNDAY

AT

3 P.M.

IN

THE AMERICAN COLLEGE, MADURAI- STONE BENCHES IN FRONT OF CANTEEN



for further info,
contact me: 94438 31320

or
MUTHU(THAMIZINI) 09845983065

Muthu said...

dear friends,

tomorrow we are meeting at american college,madurai

time:3.00 Pm

contact

09845983065-muthu(tamizhini)
9443831320-dharumi

யாத்ரீகன் said...

aha.. i'm seeing this post just now.. and i'm already back in chennai..

have a nice time ppl..

Muthu said...

see the new post in my blog and also in dharumi abt the meeting