Sunday, June 11, 2006

2011ல் விஜயகாந்த் முதல்வர்?

நேற்றைய தமிழ்முரசு நாளிதழை பார்க்க நேர்ந்தது.அதில் கட்டம் கட்டி போடப்பட்டிருந்த ஒரு செய்தி கருத்தை கவருவதாக அமைந்திருந்தது.

*******************

முதலில் செய்தி:

கடலூரில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த விஜயகாந்திடம் உங்கள் கட்சி சட்டசபை தேர்தலில் செலவு செய்த தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு முதலில் இதை அதிமுகவிடமும் திமுகவிடமும் கேளுங்கள் என்றாராம்.கடலூர் மாவட்டத்தில் தங்கள் கட்சியி்ல் இருக்கும் உட்பூசல் எல்லா கட்சியிலும் இருப்பது போலத்தான் என்று கூறியுள்ளார்.

1.ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

2.இடஒதுக்கீடு பற்றிய உங்கள் கருத்து என்ன?

3.10 ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டது பற்றி உங்கள் கருத்து என்ன?

போன்ற கேள்விகளை கேட்ட தமிழ்முரசு(?) நிருபரிடம் இந்த கேள்விக்கு எல்லாம் பதில் கூறமுடியாது.இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் எங்கிட்ட கேட்காதீங்க என்றாராம்.

நீங்கள்தான் எங்களை கூப்பீட்டீர்கள்.அதனால் கேள்வி கேட்கிறோம் என்று அந்த நிருபரும் தன் கடமையை( வேறென்ன குட்டையை குழப்பறதுதான்) செவ்வனே செய்ய

"என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்.நான் கேள்வி கேட்டால், உங்களால் பதில் சொல்ல முடியாது" என்றாராம் கேப்டன்.

விஜயகாந்தின் ஆவேசத்தால் அதிர்ச்சியடைந்த நிருபர்களை பண்ருட்டி ராமச்சந்திரன் சமாதானப் படுத்தினாராம்.

*****************

நான் ஏற்கனவே சிலமுறை கூறியிருந்தபடி முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து என்ன என்றே கூறாமல் கள்ள அரசியல் நடத்தி வருகிறார் விஜயகாந்த் என்பது தான் இந்த செய்தியின் சாராம்சம்.

விஜயகாந்தின் தர்மசங்கடத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்து வெளியே தெரிந்தால் தமக்கு ஆதரவு கொடுத்து வரும் சிலர் தொடர்ந்து ஆதரவு தரமாட்டார்கள் என்று நினைக்கிறார் அவர்.

தமிளன், தமில்மொலி என்றெல்லாம் அடிக்கடி முழங்கியவர்தான் அவர். தம் மகனுக்கு பிரபாகரன்(விடுதலைப்புலி தலைவர் நினைவாக) என்று பெயர் வைத்துள்ளவர்தான் அவர்.

ஆனர்ல இதை இன்று உரத்து கூறினால் அவருக்கு சப்போர்ட் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட லாபி ஆதரவை வாபஸ் வாங்கலாம்.( தினமலர் வகையறாக்கள்). இதுதான் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இதனால் தான் கள்ள மெளனம் அனுசரிக்கிறார் அவர்.

ஆனால் இவ்வகையாக முக்கிய பிரச்சினைகளில் தன் கருத்தை வெளியே சொல்லாமலே அரசியல் நடத்துவது நியாயமா என்ற கேள்வி முக்கியமானது. ஓட்டு போடும் மக்களுக்கு சில முக்கிய விஷயங்களி்ல் இவர் கருத்து என்ன என்று தெரிவிப்பது மிகவும் அவசியம். அரசியல் தெளிவு உள்ள ஒரு சமுதாயத்தில் இப்படி எல்லாம் இவர் பம்மாத்து செய்யமுடியாது.(தமிழகத்தில செய்யலாம். டிவி பெட்டிக்கும் சைக்கிளுக்கும் ஓட்டு போடறவன்தானே தமிழன்).

இந்த கள்ள மெளன டெக்னிக்கை இவருக்கு கூறியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் மிக புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். இங்கிருந்து விஜயகாந்தை முன்னிலைப் படுத்தி வரும் புனித பிம்பங்களும் சரி. விஜயகாந்தும் சரி.மிகவும் ஜாக்கிரதையாக தங்கள் காய்களை நகர்த்துவார்கள்.

இவரை முன்னிலைப்படுத்தி வரும் ஆட்கள் தங்களின் எண்ணத்திற்கேற்ப இவரை வளைக்க முயற்சிப்பார்கள். அவர்களின் வலையில் விஜயகாந்த் விழுந்துவிட்டார் என்று வெளியே தெரிந்தால் கண்டிப்பாக பெரும்பான்மை மக்களின் ஆதரவை விஜயகாந்த் இழப்பது உறுதி.

ஒருவேளை இவர்களை அனுசரித்து விஜயகாந்த் ஆட்சியை பிடித்தவுடன் விடுதலைபுலிகளை ஆதரித்தோ, தமி்ழ், தமிழ்மொழி என்று பேச ஆரம்பித்தால் புனிதபிம்பங்களின் ஆதரவை இழந்துவிடுவார். அவர் அப்படி பேசக் கூடியவர் தான் என்பது என் சொந்த கருத்து.ஆனால் ஆட்சியை பிடித்தவுடன் புனித பிம்பங்களின் ஆதரவு அவருக்கு தேவைஇல்லை என்றும் ஆகிவிடலாம். ஆனால் ஆட்சியை பிடிப்பதுவரை விஜயகாந்த் கள்ளமெளனம் அனுசரித்து சமாளிக்கமுடியுமா என்பது முக்கிய கேள்வி.

முதலில் இப்போது வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல்கள் அவருக்கு ஒரு சவால். விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலில் வாங்கியுள்ள ஓட்டுக்கள், சட்டமன்ற தேர்தலில் அவர் வாங்கிய ஓட்டுக்களினால் கவரப்பட்டு அவரை ஆதரிக்க தயாராக இருப்போரின ஓட்டுக்கள்,இவை இரண்டும் சேர்ந்தால் ஓரளவு சீட்டுக்களை அவர் வெல்லமுடியும் என்று தோன்றுகிறது.

இங்கு ஒரு சிக்கல் உள்ளது. விஜயகாந்த் புதியவர்தான்.ஆனால் அவர் கட்சியில் உள்ள அனைவரும் அரசியலுக்கு புதியவர்கள் அல்ல.பல கட்சிகளிலும் இருந்து அரசியல் எதிர்காலத்தை தேடி அவர் கட்சியில் இணைந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் சுத்தமானவர்கள் என்று கூறமுடியாது.உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் ஜெயித்துவந்தால் ஊழல் செய்யாமல் இருக்கச்செய்ய விஜயகாந்தால் முடியுமா? அப்படி முடியாத பட்சத்தில் பொதுமக்கள் மத்தியில் இவர் இமேஜ் பாதிக்கப்படலாம்.
அதிமுக எம்.ஜீ.ஆர் காலத்தில் இருந்தே பொதுவாக உள்ளாட்சி அமைப்புகளை முடக்கி போடுவதற்கு காரணம் இதுதான் என்பார்கள்.சில அதிகாரங்களை கையில் வைத்துக்கொண்டு இந்த தலைவர்கள் செய்யும் சிறுசிறு ஊழல்கள் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் பெயரை கெடுக்கும்.ஆனால் திமுக இத்தேர்தல்களை நடத்துவதும் உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்தை கொடுப்பதும் பல வளர்ச்சி பணிகள் நடக்க துணை புரிந்தாலும் கட்சி ஆட்களும் தலைவர்களும் பணத்தை சுருட்டுவதும் நடக்கும்.அது பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயரை பெற்றுத்தரும்.
அதிகாரத்தில் இருக்கும்போது ஒரு தலைவர் எப்படி நடந்துகொள்கிறார் அல்லது கட்சி எப்படி நடந்துகொள்கிறது என்பது ஒரு முக்கிய அம்சம்.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை தொடர்ந்து விஜயகாந்தின் செயல்பாடுகளை பொருத்தே 2011ல் தேர்தலில் விஜயகாந்த கனவு பலிக்குமா என்று தெரியவரும்.மற்றபடி ஒரு தலைவராக விஜயகாந்த் முக்கிய பிரச்சினைகளில் கள்ள மெளனம் அனுஷ்டிப்பது நான் முன்னிலைப் படுத்தும் அரசியலின் பிரகாரம் தவறு என்பேன் நான்.

17 comments:

வழிப்போக்கன் said...

ஆமாம், விஜயகாந்த் "புனித பிம்பங்களுக்கு" வேட்டியில் விட்ட ஓணானாய் இருக்கப்போவது உறுதி என்றுதான் நானும் நினைக்கிறேன்.

Kuppusamy Chellamuthu said...

முத்து..கலக்கறீங்க. விஜயகாந்த் இருக்கட்டும்.

தமிழினத் தலைவர், முத்தமிழ் அறிஞர் இருக்கிறாரன்றோ, ஈழத்தமிழர் மற்றும் விடுதலைப் புலிகள் குறித்தான அவரது நிலைப்பாடு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?

manasu said...

//இந்த கள்ள மெளன டெக்னிக்கை இவருக்கு கூறியவர் யார் என்று தெரியவில்லை.//

நரசிம்மா ராவ்????

G.Ragavan said...

முத்து, இந்தப் பதிவைப் படித்ததும் எனது மனதில் தோன்றி கேட்க நினைத்த கேள்வியை எனக்கு முன்னமே குப்புசாமி செல்லமுத்து அவர்கள் கேட்டு விட்டார்கள். அதற்கும் ஒரு பதிவு வருமா முத்து?

எல்லா அரசியல்வாதிகளும் தப்பு செய்கிறார்கள். விஜயகாந்த்தும் தப்பு செய்கிறார். இவர் மட்டும் நல்லது மட்டுமே செய்வார் என்ற நம்பிக்கை இருக்குமளவுக்கு நான் முட்டாள் இல்லை என்றே நினைக்கிறேன். அம்மணக்கார ஊரில் கோமணம் கெட்ட விஜயகாந்த் என்ன கோட்டிக்காரனா?

மூத்த அரசியல்வாதிகள் எவ்வழியோ.....அவ்வழியே மற்றவர்களும் என்று ஆகிப் போனதுதான் வருத்தத்திற்குரியது. ம்ம்ம்ம்ம்.

முத்து(தமிழினி) said...

குப்புசாமி ,

கருணாநிதியின் இலங்கை தமிழர் பிரச்சினையை பற்றிய கருத்துத்தான்
கலைஞரின் கைம்மாறு நிகழ்ச்சியில் ஜெ.புட்டு புட்டு வைத்தாரே? பார்க்கவில்லையா?

விஜயகாந்தைவிட கருணாநிதி இந்த விஷயத்தில் வெளிப்படையாக இருக்கிறார் என்றுதான் நான் சொல்வேன்...

(மற்றபடி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ரணமாக கெடக்கிறார் கலைஞர்)

G.Ragavan said...

// முத்து ( தமிழினி) said...
குப்புசாமி ,

கருணாநிதியின் இலங்கை தமிழர் பிரச்சினையை பற்றிய கருத்துத்தான்
கலைஞரின் கைம்மாறு நிகழ்ச்சியில் ஜெ.புட்டு புட்டு வைத்தாரே? பார்க்கவில்லையா?
//

முத்து, உங்களிடமிருந்து நான் இப்பிடி ஒரு பதிலை எதிர்ப்பார்க்கவில்லை.

முத்து(தமிழினி) said...

ராகவன்,

உங்கள் அதிர்ச்சி புரிந்துகொள்ளக் கூடியதே.அந்த பதில் ஒரு வஞ்சப்புகழ்ச்சி பதில்தான்.

புனித பிம்பங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.கலைஞருக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு கெட்ட பெயர்.(ஒரு முறை ஆட்சியே கலைக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமில்லையா).அதற்கு பயந்துதான் அவர் அடக்கி வாசிக்கிறார்.மற்றபடி இலங்கை தமிழர்க்கு ஆதரவானவர்தான்.

கைம்மாறு மேட்டர் எப்படி பார்த்தாலும் கலைஞர் இமேஜுக்கு பலம்தான்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

(ஜெயாடிவி பாருங்க .நையாண்டி கலக்கலாம் என்று உங்கள் பதிவில் எழுதிய உடன் உங்கள் காமெண்ட்:))
பாப்- அப் ஆகுது..

Anonymous said...

Did you read Dinamani.He has given answers to such questions.Btb what do you say about the silence of your great leader on the attrocities committed by SriLankan
army against Tamils.Why there is not even a murmur or a modicum of protest.

முத்து(தமிழினி) said...

//Did you read Dinamani.He has given answers to such questions.Btb what do you say about the silence of your great leader on the attrocities committed by SriLankan
army against Tamils.Why there is not even a murmur or a modicum of protest//

anony,

if he is expressing his views i too will be happy..can you put those things here...

btw i want to know who is my great leader...( we ourselves have our own party :)).we may get into alliance with Mr.vijaykanth also.who knows?

Anonymous said...

கலைஞருக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு கெட்ட பெயர்.(ஒரு முறை ஆட்சியே கலைக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமில்லையா).அதற்கு பயந்துதான் அவர் அடக்கி வாசிக்கிறார்.மற்றபடி இலங்கை தமிழர்க்கு ஆதரவானவர்தான்

அதற்கு பயந்துதான் அவர் அடக்கி வாசிக்கிறார்.
Come on man,this is not about
being pro or anti LTTE.It is
about the attrocities by SriLankan
army.Today congress will not dare to dismiss his govt.If he is silent
even then it means one thing only-
he is too indifferent to the plight
of the eelam tamils.

முத்து(தமிழினி) said...

anony,

உங்கள் கருத்து உங்களுக்கு.என் கருத்து எனக்கு.

இலங்கை ராணுவத்தை யார்தான் இங்கு கண்டிக்கவில்லை?

கலைஞர் என்ன செய்தாலும் அவரை தூக்கிபிடிக்க நான் தயாரில்லை.

G.Ragavan said...

// முத்து ( தமிழினி) said...
ராகவன்,

உங்கள் அதிர்ச்சி புரிந்துகொள்ளக் கூடியதே.அந்த பதில் ஒரு வஞ்சப்புகழ்ச்சி பதில்தான். //

ஓ! அது என்னோட மரமண்டைக்குப் புரியலையே!

// புனித பிம்பங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.கலைஞருக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு கெட்ட பெயர்.(ஒரு முறை ஆட்சியே கலைக்கப்பட்டது உங்களுக்கு தெரியுமில்லையா).அதற்கு பயந்துதான் அவர் அடக்கி வாசிக்கிறார்.மற்றபடி இலங்கை தமிழர்க்கு ஆதரவானவர்தான்.

கைம்மாறு மேட்டர் எப்படி பார்த்தாலும் கலைஞர் இமேஜுக்கு பலம்தான்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? //

ம்ம்ம்ம்..எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை.

//(ஜெயாடிவி பாருங்க .நையாண்டி கலக்கலாம் என்று உங்கள் பதிவில் எழுதிய உடன் உங்கள் காமெண்ட்:))
பாப்- அப் ஆகுது..//

ஜெயா டீவி பாக்கவா? ஏங்க? நான் நல்லாயிருக்கிறது ஒங்களுக்குப் பிடிக்கலையா? :-)))))))))

ஜெயா டீவீல நா ரெண்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து பாத்தேன். ராகமாலிகான்னு ஒன்னு. தேன்கிண்ணம்னு ஒன்னு. அதுவும் இப்ப டீவியே கொறச்சலாப் பாக்குறதால இந்த நிகழ்ச்சிகளும் கொறஞ்சு போச்சு.

ஆனால்..நீங்க சொல்ற மாதிரி அரசியல் நையாண்டிக்கு ஜெயா டீவி பாக்குறதும் உதவும்னு நினைக்கிறேன். இந்த வாட்டி கருணாநிதிய நையாண்டியாச்சு. அடுத்து ஜெயலலிதாதான்.

முத்து(தமிழினி) said...

ராகவன்,

கலைஞரின் கைம்மாறு என்ற பெயரில் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி வந்தது.அதைப்பற்றிய என் பழைய பதிவின் சுட்டி இங்கே..

http://therthal2006.blogspot.com/2006/05/blog-post.html

உங்க நையாண்டி பதிவுல எனக்கு புடிச்ச பகுதியைப்பத்தி அதில எழுதறன்

முத்து(தமிழினி) said...

நன்றி வழிபோக்கன்,குப்பு, மனசு

இரா.சுகுமாரன் said...

2011 ஆண்டை தமிழக முட்டாள் ஆண்டாக அறிவித்து இருக்கிறார்களா என்ன?.

இவ்வளவு சரியாக ஆண்டை குறிப்பிட்டுள்ளீர்கள்.

லக்கிலுக் said...

விஜயகாந்த் ஒரு வெட்டி.... புனித பிம்பங்களுக்கு அவர் எந்த வகையில் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறாரோ தெரியவில்லை.... இலங்கை பிரச்சினையைப் பொறுத்தவரை கலைஞர் எப்போதும் அவரது நிலைப்பாட்டை சரியாகவே சொல்லி இருக்கிறார்.... அவர் எப்போதும் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர் தான்.... அதற்காக அவர் துப்பாக்கி எல்லாம் தூக்கிக்கொண்டு சிங்கள ராணுவத்தை எதிர்க்க கிளம்ப வேண்டும் என்று புனித பிம்பங்கள் எதிர்பார்க்கக் கூடாது.... (அப்படி கிளம்பினால் சோ வகையறாக்கள் மூலமாக தங்கள் மனம் கவர்ந்த அம்மாவை மறுபடியும் உட்காரவைக்க முடியாதா என புனித பிம்பங்கள் எதிர்பார்க்கிறார்கள்)

அருண்மொழி said...

விஜய்காந்த் கப்பல் அனுப்ப சொல்லிவிட்டார். அவரின் பேச்சில் புலி வாடை அடிக்கிறது.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?