Wednesday, October 04, 2006

ஒத்தக்கால் குதிரை கவிதை

சமீபத்தில் மறைந்த மலையாள கவிஞர் அய்யப்ப பணிக்கரின் .ஒத்தக்கால் குதிரை என்ற கவிதையை உயிர்மை இதழில் படிக்க நேர்ந்தது.கவிதைகளில் எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாவிடினும் இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.நீங்களும் படியுங்களேன்.


குதிரை நடனம்
*****************

நான்கு பெரும் குதிரைகள்

அலங்கரித்து வந்தன

ஒன்று வெள்ளை, ஒன்று சிவப்பு

ஒன்று கருமை, ஒன்றுக்கு தவிட்டு நிறம்

ஒன்றுக்கு நான்கு கால்

இரண்டாவதிற்கு மூன்று கால்

மூன்றாவதிற்கு இரண்டு கால்

நாலாவது ஒற்றைக்கால்

ஒற்றைக்கால் குதிரை சொன்னது

மற்றவர்களிடம்

நடனத்திற்கு நேரமாகிவிட்டது நண்பர்களே

நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோமாக!

நடனம் தொடங்கியது

நான்குகால் குதிரை நடுங்கி விழுந்தது

மூன்றுகால் குதிரை மூர்ச்சையானது

இரண்டுகால் குதிரை நொண்டித் தவித்தது

ஒற்றைக்கால் குதிரை மட்டும்

ஆடிக்கொண்டே இருந்தது

**********

கவிதைகளுக்கு அருஞ்சொற்பொருள் கொடுத்து விளக்கம் கொடுக்கமுடியாது என்று கவிஞர்கள் கூறுவது ஏன் என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது. இந்த கவிதை தரும் சிந்தனைகளை விளக்கமுடியுமா? நம் வலைப்பூ நவீனகவிதை தீவிரவாதி மணிகண்டனை பிடித்து சில கவிதை புத்தகங்களை கேட்டு வாங்கி படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கும் கவிதைகளுக்கும் தொடர்பு விட்டுப்போனது ஏன் என்று யோசித்து பார்க்கிறேன்.கீழே உள்ள கவிதையை படியுங்கள்.சொல்கிறேன்.

காதலி
*******
அன்பே

நீ ராணி

நான் பேமானி

நீ செவப்பு

நானோ உந்தன் செருப்பு


சிறுவயதில் இது போன்ற கவிதைகளை பத்திரி்க்கைகளில் படித்து பேஜாராகியதால் கவிதைகளை படிக்காமல் இருந்திருக்கிறேன் போல.

8 comments:

கதிர் said...

//காதலி
*******
அன்பே

நீ ராணி

நான் பேமானி

நீ செவப்பு

நானோ உந்தன் செருப்பு //

அடங்குடா பருப்பு... :-)


இதே மலையாளக் கவிதையை ஆசிப்ஜியும் பதிவிலிட்டுருக்கிறார் அங்கயும் புரியலை, இங்கயும் புரியலை.
அவருக்கு புரிஞ்சத சொல்லவில்லை, நீங்களாவது சொல்லுங்க.

வினையூக்கி said...

பலவீனத்தை பலமாக்கி கொள்வதில்தான் வெற்றி உள்ளது

Muthu said...

வருகைக்கு நன்றி நண்பர்களே...

தம்பி,

புரிஞ்சிருந்தா நானே சொல்லியிருக்க மாட்டேனா?:)))) ஆசிப் பதிவை பார்க்கலியே..இப்ப பார்க்கிறேன்..

நிர்மல்,

ஏப்பு, நல்லா இருக்கறது புடிக்கலையா? :))

மு.கார்த்திகேயன் said...

//நீ ராணி

நான் பேமானி
//

ROTFL muthu..

பொன்ஸ்~~Poorna said...

கவிதை - முத்து(தமிழினி)
என்ற சொற்கள் அருகருகில் இருந்த அதிசயத்தைப் பார்த்து ஓடோடி வந்தேன்..

//
அன்பே
நீ ராணி
நான் பேமானி
நீ செவப்பு
நானோ உந்தன் செருப்பு //

உண்மையச் சொல்லுங்க, இந்தக் கவுஜய எழுதியது யாரு? ;)

//நவீனகவிதை தீவிரவாதி மணிகண்டனை// - இப்படி எழுதி இருக்கிறது மணியண்ணனுக்குத் தெரியுமா? ;)

ஒற்றைக் கால் குதிரை கவிதையை நானும் வேறெங்கோ படித்தேன்.. ஆட்ட விதிகள் பற்றிய உங்கள் பதிவு நினைவுக்கு வந்தது..

ரவி said...

கவிதையில் பின் நவீனத்துவம் முன் நவீனத்துவம் அப்படீன்னு ஏதாவது இருக்கா ? அது எப்படி எனக்கு எந்த கவிஜயும் புரியமாட்டிங்குது ?

இதை படிங்க, நான் ஏழாப்புல படிச்ச முதல் கவிஜ..குமுதத்துல வந்தது..

ஜொள்ளொழுகி ஜோக்கடிச்சான் மூர்த்தி..
பல்நாலை தட்டினாள் பாப்பாத்தி..
அவளுக்கு தெரியும் ஜூடோ கராத்தி..

டிஸ்கி : எனக்கு ஒன்னும் தெரியாது, குமுதத்துல பத்து வருடம் முன்னாடி வந்தது.

Unknown said...

நான் கல்லூரியில் படிக்கும்போது எங்கள் தமிழ் வாத்தியார் மிகவும் சிலாகித்து சொன்ன சில கவிதைகள்

ஆகஸ்ட் 15

இரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை

(அதுக்காக அடுத்த ஜெய்ஹிந்த் பதிவில் இதை பயன்படுத்தக்கூடாது..ஆமா:-))

உடன்கட்டை

என் அன்பான
கணவனே
நான்
உடன்கட்டை ஏற
ஆசைப்படுகிறேன்

நீ

எப்போது
சாவாய்?

இது தினமலர் வாரமலரில் வந்து 1989ல் கருணாநிதி ஆட்சிகாலத்தில் ஒரு அரசியல் பரபரப்பையே கிளப்பியது.அது என்னன்னு யாராவது சொல்றாங்களா பார்க்கலாம்.

ஷாக்

கரண்டை தொட்டதால் அல்ல
கரண்ட் பில்லை தொட்டதால்

அருண்மொழி said...

கவிஞர் அய்யப்ப பணிக்கரின் ??

தல, இதுல எதுவும் உள்குத்து இருக்கா?