சென்னை மீதான என் காதலைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சென்னையில் குடியேற ஒரு துவக்கம் ஏற்படுத்தும் முகமாக வலையுலக நண்பர்கள் ஏழெட்டு பேர் உள்பட பல நண்பர்கள் மூலமாக மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளை பற்றி விசாரித்து கொண்டிருந்தேன். ஒரு சனி,ஞாயிறு அன்று "உள்நடக்கும்" (வாக்-இன் இண்டர்வ்யூக்கு அதுதானே தமிழ்) நேர்முகத்தேர்வு ஏதாவது இருந்தால் பங்கு பெறலாம் என்ற எண்ணத்தில்தான் ஆகஸ்ட் பயணத்தை முடிவு செய்திருந்தேன்.அது ஒரு அசட்டு முயற்சியாகத்தான் முடிந்திருக்கும் என்பது இப்போதுதான் தெரிகிறது.
அந்த குறிப்பிட்ட சீசனில் பலரும் வலைப்பதிவில் வேலைவாய்ப்பு செய்திகளை கொடுத்து கொண்டிருந்தனர். ஒரு கலவரம், கொலைவெறி சமாச்சாரமாக நண்பர் செந்தழல் ரவியுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது என் சென்னை பயணத்தின் நோக்கத்தை சொன்னேன். புரொபைல் அனுப்புங்க என்பதோடு முடித்துக்கொண்டு அனானி பின்னூட்டம் இட சென்றுவிட்டார்.
ஒரிரு வாரம் கழிந்திருக்கும். ரவி ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதிர்ஷ்வசமாக ஒரு நல்ல கம்பெனியில் ஆட்கள் தேவைப்படுவதாகவும் நான் அனுப்பிய புரொபைலை தான் முன்மொழிவதாகவும் கூறினார்.நேர்முகத்தேர்வு நன்றாக செய்தால் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.அதற்குப்பிறகு நடந்தது எல்லாம் மாயம்தான். ரவி தன் அனுபவத்தை வைத்து சில உபயோகமான டிப்ஸ்களையும் கொடுத்தார்.சில நாட்களில் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடந்தது. காரியமும் ஜெயமானது.
இந்த மிகப்பெரிய உதவியை செய்த செந்தழல் ரவியை இன்று வரை நான் நேரில் பார்த்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல நண்பர்களை நேரில் பார்க்காமலே ஆண்டாண்டு காலம் பழகிய உணர்வை தருவது இணையத்தின் சிறப்புதான். எனக்காக முயற்சிகளை எடுத்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்(செந்தழலாருக்கு ஸ்பெஷல் என்பதை சொல்லவும் வேண்டுமா) என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் ஒருநாள் ரவியின் சகோதரரை சந்திக்க நான்,லக்கி,வரவணையான் ஆகியோர் சென்றிருந்தோம்.அன்று தான் வலையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திராவிட ஃபிகர் பைக்கில் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. வேளச்சேரி ரோட்டில் கால் டாக்சியை அழைத்துவிட்டு காத்திருந்த நேரத்தில் நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம்.
சென்னை மென்பொருள் துறையில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துவிட்டது. கால்சென்டர்கள் ஏராளமாக வந்துவிட்டது என்றேன் நான். ஆனால் பப் கலாச்சாரம், பார்ட்டி கலாச்சாரம் என்று நாட்டின் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார் லக்கி.அப்போது ஒரு மாநிறமான பெண்ணை ( ஜீன்ஸ்,டீசர்ட் அணிந்திருந்தார்) பைக்கில் அமர்த்திக்கொண்டு ஒரு சிவப்பான இளைஞன் எங்களை கடக்க ஜாலிக்காக "திராவிட ஃபிகரை தள்ளிகிட்டு போறான்யா" என்றேன் நான். திராவிட இயக்கத்தின் உண்மை வாரிசான லக்கியாருக்கு நரம்புகள் துடித்தன.கழுத்தில் இருந்து ஒரு நரம்பு அப்படியே ரட்சகன் ஸ்டைலில் துடித்து மேலேறியது.அவர் பாய்ந்து செல்வதற்கு முன் ஒரு வெளிநாட்டு கார் வந்து எங்கள் அருகில் நின்றது.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார். காரில் ஏறி சென்றுவிடுவாரோ என்று நாங்கள் பயந்திருக்க நல்லவேளை லக்கி அவ்வாறெல்லாம் செய்யவில்லை.
அதற்கு முன்னர் ரவியின் சகோதரரை சந்தித்தோம். அவருடன் சென்று சிஃபி ஹைவேயில் இணையத்தில் சில மெயில்கள் அனுப்ப சென்றிருந்தோம். நான் அவருடன் பேசிக்கொண்டிருக்க வரவணையானும்,லக்கியும் ஒரு மெஷனில் அமர்ந்து இலங்கை பிரச்சினையில் மயிர் பிளக்கும் வாதம் செய்துக்கொண்டிருந்தனர். யாழ் களத்தை ஓப்பன் பண்ணு, பொங்குதமிழை திற, திரிகோணமலை,வன்னி,சந்திரிகா என்று இவர்கள் பேசுவதை பார்த்த ரவியின் அண்ணன் தியாகு இவர்கள் தற்கொலை படை தீவிரவாதிகளோ என்று சிறிது ஆடிப்போனார். நீங்களெல்லாம் ரவிக்கு எப்படி தெரியும் என்று மட்டும் ஒரு வார்த்தை என்னிடம் கேட்டார்.
இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வைகோவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தனர். ஓரளவு எங்களைப்பற்றிய ஒரு முடிவுக்கு ரவியின் அண்ணன் வ்நதிருப்பார் என்று எனக்கு தோன்றியது. எங்கள் வேலை முடிந்ததும் சாப்பிடபோகலாம் என்று நாங்கள் அழைக்க எங்களுடன் இருந்தால் புலிகள்,நக்சலைட் சம்பந்தப்பட்ட பிரச்சினை வரும் என்று அஞ்சி உஷாராக நழுவினார் அவர்.ரவிக்கு மண்டகப்படி கிடைத்ததாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வரவணையான் பதிவில் குறிப்பிட்ட எக்மோர் பாரில் குறிப்பிடும்படி எந்த விஷயத்தையும் நாங்கள் பேசவில்லை. வரவணையான் கூறியபடி பொதுவான சில விஷயங்களைத்தான் பேசிக்கொண்டிருந்தோம். வலைப்பதிவர் சீனு என் நெருங்கிய நண்பனுக்கு நண்பர் என்று தெரியவந்தது. சில பழைய செய்திகளை பகிர்ந்துகொண்டோம்.மற்றபடி இரவு பாட்டில் சந்திப்புகள் நடத்த சென்னை பார்கள் உகந்த இடம் அல்ல என்று தெரிந்துக்கொண்டேன்.
32 comments:
//இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்///
Nice One
///சில நாட்களில் தொலைபேசி வாயிலாக நேர்முகத்தேர்வு நடந்தது. காரியமும் ஜெயமானது.
///
Congrats
அப்போ சீக்கிரம் சிங்காரச் சென்னைவாசியா?
முத்து,
வாழ்த்துக்கள்..
மங்களூருக்கு ஜூட்டா?
புதிய வேலைக்கு வாழ்த்துக்கள். எப்போது சென்னைக்கு குடியேற்றம்?
ஆகா..வேலை எனக்கில்லைங்க..
நான் மங்களூரிலிருந்து மாற இன்னும் ஆறு மாசம் ஆகும்.
//முன்னதாக வரவணையான் பதிவில் குறிப்பிட்ட எக்மோர் பாரில் குறிப்பிடும்படி எந்த விஷயத்தையும் நாங்கள் பேசவில்லை.//
இல்லை. பாரில் நீங்கள் பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு லோக்கல் டாஸ்மாக் பாரில் இரு திராவிட ராஸ்கோலுகள் சந்தித்துக்கொண்ட மினி வலைப்பதிவாளர் சந்திப்பும் நடந்து கொண்டிருந்தது :-)
வரவனையான் குறிப்பிட்ட விஷயம் அந்த பாரில் தான் நடந்தது... வாந்தி மேட்டர் கூட அங்கே தான் நடந்திருக்கக் கூடும் என ராபின்ஹூட்டோ, இரவுக்கழுகாரோ, சாம்புவோ அல்லது வேறு யாரோ ஒரு துப்பறிவாளரோ துப்பறிந்திருக்கிறார்......
//கார் வந்து எங்கள் அருகில் நின்றது.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார்.//
தேவையா லக்கி உனக்கு இது தேவையா? :-(
அண்ணாத்தே சுஹாசினி சரத்குமாருக்கு அனுப்பிச்ச மாதிரி உங்களுக்கு SMS அனுப்பியது தப்பு தான்.... அதுக்காக இதுமாதிரி எல்லாம் "கும்மி" அடிப்பது நியாயமா?
நம்ம இமேஜ் என்னாத்துக்கு ஆகுறது? :-(
ஆனாலும் அட்ரஸ் கேட்ட ஆன்ட்டி ஆரிய ஆன்ட்டி என்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்....
ஒரு சிறிய திருத்தம்
கலர், மூக்கு மற்றும் இன்னபிற அடையாளங்களை வைத்து பார்க்கும்போது அட்ரஸ் கேட்ட ஆன்ட்டி ஆரிய ஆன்ட்டியாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
லக்கி சந்தோஷமா?
தலைப்பை பார்த்ததும் எங்கே கவுத்திட்டீங்களோ என்று பயந்தேன்...
கொல்லென சிரிக்கும்படி இருந்தது பதிவு..
சாவகாசமாக வந்து பிடித்த விஷயங்களை சொல்கிறேன், இப்போதைக்கு வேலை...
:))
////புரொபைல் அனுப்புங்க என்பதோடு முடித்துக்கொண்டு அனானி பின்னூட்டம் இட சென்றுவிட்டார்.////
என்னங்க, நான் என்னம்மோ புரொபஷனலா அனானி பின்னூட்டம் வைக்கிறமாதிரி சொல்லுறீங்களே...
ரசிக்கவைத்த பதிவு, சிறப்பாக எழுதும் திறமை உள்ளது உங்களுக்கு
/// நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம்.////
உண்மையை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனோபாவம் எத்தனை ஆரியர்களுக்கு இருக்கிறது..பச்சை திராவிடரான நீர் இவ்வாறு வெள்ளை மனதுடன் இருப்பது மனதை கொள்ளை கொள்கிறது அய்யன்மீர்.
வாழ்த்துகள் முத்து. தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையிலே வெண்ணெய் என இழக எனது வாழ்த்துகள். :-)
சரி..எப்ப சென்னைப் பயணம்? அழகான மெங்களூரு விட்டுச் சென்னைக்கு என்னைக்குக் கெளம்புறீங்க?
முத்துவிற்கு உதவிய செந்தழல் ரவிக்கு என்னுடைய சார்பிலும் ஒரு நன்றி.
உலகம் மிகச் சிறியது. அதில் நாம் மிக மிகச் சிறியவர்கள். இதில் ஒருவருக்கொருவர் முடிந்த வரையில் உதவிக் கொள்வது மிகவும் சிறப்பு.
///இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் இருவரும் சேர்ந்து வைகோவை துவைத்து காயப்போட்டு கொண்டிருந்தனர்.///
Excellent.
anony,
/// நாங்கள் வெட்டி ஞாயம் பேசிக்கொண்டு இருந்தோம்.////
//உண்மையை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனோபாவம் எத்தனை ஆரியர்களுக்கு இருக்கிறது..பச்சை திராவிடரான நீர் இவ்வாறு வெள்ளை மனதுடன் இருப்பது மனதை கொள்ளை கொள்கிறது அய்யன்மீர்//
உள்குத்து பொஸ்தகம் போட்டவிங்க நாங்கோ...எங்களுக்கோ அல்வா வா?
இதை படிங்க
http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_10.html
அட, அடித்து தூள் கிளப்பியுள்ளீர் அய்யா நீர்.
உமது எழுத்து ஸ்டைல் சூப்பர் முத்து. தொடர்ந்தும் இணைந்திருங்கள்..
முத்து,
back to form :)))))) நீங்க எப்போ சென்னைக்கு வர்றீங்க?
ஜி.ரா
// வெண்ணெய் என இழக//
இளக என்பதைத் தான் இப்படிச் சொல்றீங்களா?
வருகை தந்த நண்பர்களுக்கு நன்றி
செந்தழலார் - திராவிட பிகர் மேட்டர் அருமை.
வாங்க முத்து வாங்க போனதடவை ஆட்டோ அனுப்பினோம் இந்த முறை லாரி அனுப்பனும் போல!
தலை, உங்கள் உள்குத்து பொத்தகம் அருமை. இவ்வளவு நாள் படிக்காம இருந்துட்டனே?
//இலங்கை பிரச்சினையில் பிரபாகரனுக்கே தெரியாத சில உண்மைகளை வரவணையான் பகிர்ந்துகொள்ள லக்கி பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.//
தோடா ..... லக்கி கவனிச்சிங்களா
//.அதிலிருந்து ஒரு அழகிய ஆன்ட்டி ஏதோ அட்ரஸ் கேட்க லக்கி சிறிதே குளிர்ந்தார். காரில் ஏறி சென்றுவிடுவாரோ என்று நாங்கள் பயந்திருக்க நல்லவேளை லக்கி அவ்வாறெல்லாம் செய்யவில்லை. //
முத்து உங்களுக்கு வயசாய்டுச்சுல அதுனால ஆன்ட்டியைதான் பாத்திங்க.....
கார ஓட்டிட்டு வந்த பிகரு இன்னும் கண்ணுக்குள்ளையே நிக்குதப்பா, அப்ப நான ஒரு டயலாக்க உட்டேன் கவனிச்சிங்களா .
i miss chennai girls very much இதுதான் அந்த வயித்தெரிச்சல் டயலாக்
//வரவணையானும்,லக்கியும் ஒரு மெஷனில் அமர்ந்து இலங்கை பிரச்சினையில் மயிர் பிளக்கும் வாதம் செய்துக்கொண்டிருந்தனர்.//
நிச்சியம் அது "மயிர் பிளக்கும் வாதம் அல்ல"
:))))
// பொன்ஸ் said...
ஜி.ரா
// வெண்ணெய் என இழக//
இளக என்பதைத் தான் இப்படிச் சொல்றீங்களா? //
ஆமாம் பொன்சு...அதத்தான் சொன்னேன். தெரியாம எழுத்துப் பிழை வந்துருச்சுங்க....அதுக்கு எவ்வளவு கொறைக்கனுமோ...அவ்வளவு கொறைச்சுக்கோங்க.
இவ்வளவு எல்லாம் நடந்து இருக்கா. என்கிட்ட ஒன்னுமே சொல்லலியே முத்து :-(
////நிச்சியம் அது "மயிர் பிளக்கும் வாதம் அல்ல"////
மயிர் கூர்ச்செறியும் வாதமாக இருந்திருக்குமோ ?
வரவணை
//i miss chennai girls very much இதுதான் அந்த வயித்தெரிச்சல் டயலாக்//
அது அவிங்க அதிர்ஷ்டம்னு நானும் முனகினேனே...:))
அருமையான பதிவு :))))
யார்யா இந்த அனானிங்க?
Post a Comment