Saturday, December 31, 2005

கேப்டனுக்கு புத்தாண்டில் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்

புதிதாக அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த புதிதி்ல் "என்ன செய்வீர்கள் பெரிதாக...இன்கம்டாக்ஸ் ரெய்டு செய்து தொந்தரவு செய்வீர்கள்..அவ்வளவுதானே" என்று வூடு கட்டினார். அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். உண்மையிலேயே அவர் கட்டிய வீட்டை இடிக்க முயற்சி நடைபெறும் என்று. LINK கண்கள் சிவக்க மத்திய அரசு அதிகாரிகளை பார்த்து விஜயகாந்த பேசும் வீர வசனங்களை தமிழக மக்கள் எதிர்பார்க்கலாம்.

தனித்து போட்டியிட தயாரா என்றெல்லாம் வூடு கட்டினாலும் தேர்தல் நேரத்தில் அம்மா அழைத்து நாலு சீட் கொடுத்தால் அம்மாவுடன் சேர்ந்து கொள்வார் என்றே தோன்றுகிறது.( நாலு சீட்: இவர்: மனைவி:மச்சினர்:ரசிகர் மன்ற தலைவர்)


காமெடி


இது ஒருபுறமிருக்க எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா விஜயகாந்த அரசியலுக்கு வருவதற்காக கூறிய காரணத்தை கிண்டல் செய்திருந்ததை படிக்க நேர்ந்தது. எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் விஜயகாந்த?

" எனக்கு எப்போதுமே ஏழைகளுக்கு உதவுவது பிடிக்கும். நான் ரொம்ப நாளாக அயர்ன் பாக்ஸ்,மூணு சக்கர வண்டி,வேட்டி சேலை என்று ஏழைகளுக்கு வழங்குகிறேன். அதன் தொடர்ச்சியாக ஏழைகளுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன்"

இதுதான் விஜயகாந்த் பேச்சின் சாராம்சம். இதில் சாரு நிவேதிதா கிண்டல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியலுக்கு வருவதற்கு ஒருவர் பாலஸ்தீன பிரச்சினைக்கோ அல்லது ஈராக் பிரச்சினைக்கோ தீர்வு சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏன் சாரு அவ்வாறு கூறினார் என்று யாராவது விளக்கமுடியுமா?

5 comments:

Muthu said...

பெருமாள்,

கட்சியை பதிவு பண்றது எல்லாம் டெக்னிகல் பிரச்சினை இல்லையா? அவர் என்ன பண்ணுவாரு? எல்லா பவரும் அவருக்கு என்று சொல்வதிலும் அர்த்தம் உள்ளது..இப்ப அ.தி.மு.க வை எடுத்துக்குங்க...ஏதாவது உள்கட்சி பிரச்சினை உள்ளதா?
மத்தபடி ஒரு குடும்ப கட்சிக்கு இதுதான் சரியான முறையும் கூட.

ENNAR said...

இந்த நாட்டின் குடிமகன் இந்த நாட்டில் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக் கூடாது இதனால் யாருக்கு நட்டம் ஏன் எல்லோரும் லபோ துபோன்னு கத்தனும். இங்குள்ளவர்களை நான் கூறவில்லை அப்படிச் சொல்பவர்களைத்தான் சொல்கிறேன்

Pot"tea" kadai said...

http://thatstamil.indiainfo.com/news/2005/12/29/demolish.html

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் முத்து!

Pot"tea" kadai said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

நன்றி என்னார்,

விஜயகாந்த கட்சி ஆரம்பித்தது அவர் உரிமை.அதை நான் குற்றம் சொல்லவில்லை.அதை குற்றம் சொல்கிறவர்களைத்தான் நானும் குற்றம் சொல்கிறேன்.ஆனால் அவரின் மற்ற நடவடிக்கைகளை விமரிசனம் செய்ய
அனைவருக்கும் உரிமை உள்ளது என்று ஒத்துக்கொளவீர்கள் என்று நம்புகிறேன்.


thanks pottea kadai.thank you for the link