Thursday, December 01, 2005

ஒரு செய்தியும் சில பின்னூட்டங்களும்

தினமலர் 01.01 .2006
தேசிய தமிழ் நாளிதழ்

திருப்பம்

தமிழக அரசியலில் ஒரு திடீர் திருப்பமாக டாக்டர் இராமதாஸ் நேற்று தி.மு.க கூட்டணியில் இருந்து விலகினார்.அன்பு சகோதரியின் ஆட்சி நிலைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் தி.மு.க தலைவர் கலைஞர் கடந்த தேர்தலில் தனது கோவணத்தை உருவியதைப்போல் இந்த தேர்தலி்ல் அன்புமணி கோவணத்தையும் சேர்த்து உருவ சதி செய்வதாகவும் அதனாலேயே தான் கனத்த மனத்துடன் விலகுவதாகவும் கூறிய டாக்டர் மத்திய அரசில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார். மத்தியில் தேர்தலுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதும் அன்புமணி பதவியில் இருப்பதும்தான் இதற்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததுடன் பின்னால் அமர்ந்திருந்த காடுவெட்டி குருவை அர்த்தபூஷ்டியுடன் திரும்பி பார்த்ததால் குறிப்பிட்ட கேள்வியை கேட்ட நிருபர் தலைமறைவாக வேண்டி இருந்தது.சித்தியின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக டாக்டர் அன்புமணி கவித்துவமாக கூறியது ரசிக்கும்படியாக இருந்தது.

இதுப்பற்றி கருத்து தெரிவித்த கலைஞர் அம்மையார் விரித்திட்ட வலையில் இராமதாஸ் விழுந்திட்டார் எனவும் தனக்கு இதுப்பற்றி முன்பே தகவல் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுப்பற்றி கருத்துக்கேட்க திரு.வை.கோ வை தொடர்புக்கொள்ள முடியவில்லை.இலங்கையில் மீண்டும் சண்டை வரலாம் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் வைகோ காணாமல் போயிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.தினமலர் வாசகர் கடிதம் பகுதி


புளுகனூரில் இருந்து செட்டப்பு செல்லப்பா எழுதுகிறார்


எதிர்பார்த்தது போலவே அண்ணன் கலைஞர் இராமதாஸ் மற்றும் அன்புமணியின் கோவணத்தை உருவ முயன்றதினால் இராமதாஸ் மனம் கனத்து விலகுகிறார்.கருணாநிதி 1967 ல் இருந்து இதுப்போல பலரின் கோவணங்களை உருவி இருக்கிறார்.இதற்கு சர்க்காரியா கமிஷனில் சாட்சி உள்ளது. இப்படி உருவிய கோவணங்களைத்தான் மஞ்சள் சாயம் போட்டு துண்டுகளாக உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பதற்கு சாட்சிகள் உள்ளன்.கருணாநிதி உருவிய பல கோடிகள் எண்ணிக்கையிலான கோவணங்களை பற்றிய விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் .ஜெயேந்திரர் மீது அபாண்டமாக பழி சுமத்தி விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கும் அரசாங்கம் உடனடியாக அந்த வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்(இதை முன்பே செய்திருந்தால் சுனாமியை தவிர்த்திருக்கலாம்.இப்போதாவது இதை செய்து, தற்போதைய புயல்,மழை சேதம் ஆகியவைகளை தவிர்க்கலாம்).தமிழக அரசு ஆவன செய்யுமா?
இனி சில தமிழ்மண பின்னூட்டங்கள்

முதுகுமூடி

எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை.ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நான் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் பஸ்ஸை எரிக்கும்போது பஸ்ஸின் சீட்டுக்கடியில் ஒளிந்திருந்தேன்.அப்போது பா.ம.க.வினர் தொடர்ந்து இரு தேர்தல்களில் ஒரே கூட்டணியில் இருப்பது தன் தலைவருக்கு பிடிக்காது என்று பேசியதை என் காதால் கேட்டேன்.மற்றபடி டாக்டர் இராமதாஸ் கைவசம் நிறைய கோவணங்கள் உள்ளன.கலைஞருக்கு சில கோவணங்களை கொடுப்பதின் மூலம் ஒன்றும பெரிய நஷ்டம் வந்துவிடாது.

மேலும் புரட்சித்தலைவி குஷ்புவை அபாண்டமாக கலாய்த்த டாக்டரிடம் முதல்வர் மன்னிப்பு கடிதம் வாங்க வேண்டும்.


காண்டு

போலி் காண்டு என்ற இழிபிறவி பின்னூட்டம் இடுவதற்கு முன் நான் பின்னூட்டம் இடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நான் இரவெல்லாம் விழித்திருந்து பின்னூட்டம் இட்டு வருகிறேன்.இரண்டு பிளாக்குகளில் மீண்டும் மீண்டும் ஒரே பின்னூட்டம் இட்டு பார்த்தால் தான் தெரியும் என் கஷ்டம்.மற்றபடி நண்பர் முதுகுமூடி சொல்வதை நான் ஆதரிக்கிறேன்.

(இதற்கு பிறகு நண்பர் முதுகுமூடியை ஆதரித்து (வழக்கம்போல எனன சொல்கிறார் என்று படிக்காமலே) சில பின்னூட்டங்கள் விழுகின்றன)

மழலி

யாரோடும் சண்டை போடுவது என் நோக்கம் அல்ல. ஆனால் கருத்துக்களின் மூலம் வன்முறை பரப்பப்படும்போது நான் அதை மறுக்கவேண்டி உள்ளது. நண்பர் முதுகுமூடி பஸ் எரிந்த அன்று சற்று பின்னால் திரும்பி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் ஒகேனக்கல் சுற்றுலா வந்திருந்த இந்த கடலூர்காரன் பின்சீட்டில் தான் ஒளிந்திருந்தான் என்பது.ஜெயிக்கிற கூட்டணியில்தான் இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்குடிதாங்கியின் லட்சியம் என்று பா.ம.க காரர்கள் பேசினார்களே தவிர முதுகுமூடி கூறுவது போல அல்ல .இது உண்மையை திரிக்கிற செயல். டாக்டர் அய்யாவிடம் நிறைய கோவணத்துணிகள் உள்ளன என்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்கு எதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா?

முதுகுமூடி

டாக்டர் இராமதாஸ மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோர் நிறைய கோவணம் வைத்துள்ளனர் என்பது சிலுக்குவார்ப்பட்டியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடுமே.இதற்கு ஆதாரம் தேவையா?


ரமணி சீனிவாஸ்

டாக்டர் இராமதாஸ் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது சீட்டோபோபியா என்ற வியாதியினால்தான். இந்த வியாதி வந்த உகாண்டா நாட்டு அமைச்சர் அண்டாகுண்டா பற்றி என் பதிவில் ஏறகனவே நான் எழுதியுள்ளது நண்பர்கள் அறிந்திருக்கலாம். இந்த வியாதியின் ஆரம்ப அறிகுறிதான் இது. இந்த வியாதி தீவிரமாகும்போது தினமும் ஒரு கூட்டணி மாறுவார்.ஒருவேளை தமிழ்நாட்டில் தேர்தல் இல்லை என்றால் அண்டைமாநில தேர்தல்களிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு தேர்தல்களிலும் பங்கு பெற்று கட்சி மாறுவார் என்பது திண்ணம்.மற்றபடி கோவணம் பற்றி டாக்டர் கூறுவது ஒரு குறியீடுதான்.


தமிழ்கிறுக்கன்

தமிழர்களை பற்றி கேவலமான முறையில் பிராக்ஸிகளை வைத்து எழுதி புனிதச்சுடர் போல் காட்டிக்கொள்ளும் தினமலர் ஏடு தன்னுடைய வாரமலர் இதழில் நடிகைகளை பற்றி படுகேவலமாக எழுதுவது எந்த விதத்தில் நியாயம்?


(தமிழ் என்ற வார்த்தையை பார்த்தவுடன் கத்து, சோ ஆகியோர் (வழக்கம் போல என்ன என்று படிக்காமலே) ஆதரித்து சில பின்னூட்டங்கள் இட்டுள்ளனர்.ANONYMOUS

அதற்குத்தான் தினமலர் அடுத்தப்பக்கத்திலேயே கோவில்களை பற்றியும் பக்தியை பற்றியும் இரண்டு பக்கம் போட்டு பேலன்ஸ் பண்ணிடறாங்களே..அப்புறம் என்ன?(யோவ் உன்னுடைய பதிவை பத்தி தினமலரில் வராது .பரவாயில்லையா?)கடைசியாக
முத்து

தமிழ்மணம் நண்பர்களுக்கு ,
குஷ்பு விவகாரத்தால் சற்றே சூடாகிப்போன மனங்கள் ஆறுவதற்காக போடப்பட்ட பதிவு இது.இது யாருடைய மனத்தையும் புண்படுத்த இல்லை.சிரிப்பு வந்தா சிரிங்க.சீரியஸாய் எடுத்துக்காதீங்க.

(பரிந்துரைகள் மற்றும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.)

22 comments:

அன்பு said...

ஜோசப் சாருக்கு யாரோ பின்னூட்டமா விட்டா பொறி ரொம்ப நாளா வெலை செய்திர்ருக்கு முத்து. கலக்கல்...:):):)

முத்து(தமிழினி) said...

ன்பு

அது என்ன பொறி அய்யா? சொல்லுங்க....நானும் தெரிஞ்சுக்கறேன்.

tbr.joseph said...

என்ன பொறி அன்பு! நானும் மறந்துட்டேனே..

முத்து நல்ல கற்பனை.. நீங்களும் ஒரு காமெடி சீரியல் எழுதலாம்.

அன்பு said...

ஜோசப் சாருக்கு யாரோ பின்னூட்டமா விட்டா பொறி ரொம்ப நல்லா வேலை செய்திருக்கு - என்று குறிப்பிட்டது இந்த பின்னூட்டத்தை...

அத்தோடு இதற்குமுன்னர் நீங்கள் பிரகாஸின் காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும் படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இதையும் பாருங்கள்...

முத்து(தமிழினி) said...

அந்த பின்னூட்டத்தை இப்பத்தான் பார்த்தேன்.நான் முந்திக்கிட்டன்னு நினைக்கிறேன்.
என் தமிழ்மண அறிமுகமே இரண்டு மாதங்களுக்கு உள்ளாகத்தான்.யாரையும் நான்
முழுதாக படித்ததில்லை.ஆனால் இப்போதெல்லாம் சில நாட்களாக பழைய பதிவுகளை
படித்து வருகிறேன்.

mugamoodi said...

ரசித்து சிரித்தேன் முத்து ;-)) (போன பதிவு எழுதிய ஆளா இதையும் எழுதியது என்ற சந்தேகத்தோடு)

**

ஐகாரஸ் பதிவின் இணைப்புக்கு நன்றி அன்பு.. அது வெளிவந்த போது படிக்கவில்லை நான். இப்போதுதான் பார்த்தேன். நல்ல பகடி.

முத்து(தமிழினி) said...

திரு முகமூடி

(போன பதிவை போட்ட அதே ஆள்தான். அதில் என்ன அவ்வளவு சந்தேகம்?.
அப்பப்ப ட்ரெண்டை மாத்தணும் இல்லையா...

ச்சும்மா முயற்சி பண்ணினேன். பாராட்டிற்கு நன்றி.

ஜோ / Joe said...

முத்து,
அட்டகாசமான நகைச்சுவை..ரசித்துச் சிரித்தேன்.

போலி டோண்டு said...

முத்து பின்னிட்டீங்க. அருமையான நகைச்சுவை. அதிலும் முதுகுமுடி, கோண்டு போன்றவர்களின் பதிவுகள் கலக்கலோ கலக்கல். மாயமரத்தானை விட்டு விட்டீர்கள். அடுத்தமுறை சேர்த்துக் கொள்ளவும். மழலி சூப்பர். அருண்சொறியநாதன், சிரிகாந்த், மொர்ளி, கிச்சி என பல பார்ப்பனிய பதிவாளர்கள் உள்ளனர். அவர்களையும் சேர்த்துக் கொள்ளவும்.

சந்திப்பு said...

சிரிக்கவும், சிந்திக்கவும் வைச்சிட்டிங்க...

“சீட்டோ போபியா” தமிழுக்கு புது வரவு!
ராமதாஸின் தொண்டு, சாரி, நோய் தீர அன்புமணியை வைத்து ட்ரீட்மென்ட் கொடுக்கச் சொல்லுங்க.

தேர்தல் சமயத்தில் என்ன வேணாலும் நடக்கும் ன்று த. பாண்டியன் ‘ஜூனியர் விகடன்’ பேட்டியில் கூறியுள்ளார்.

அதை கவணிச்சிங்களா....

முத்து(தமிழினி) said...

திரு போலி அவர்களே,

இது ஒரு நகைச்சுவை பதிவு மட்டுமே..தவறாக எதுவும் பேசவேண்டாம். என்னை பொருத்தவரை கருத்து தளத்தில் முரண்பாடு இருந்தாலும் முரட்டுதனமாக தாக்குவது தவறு என்று கருதுபவன் நான்.

சம்பந்தப்பட்ட நண்பர்களே இதை காமெடியாக மட்டும் பார்க்கிறார்கள்.உங்கள் பதிவின்
மூலம் அவர்கள் புண்பட வாய்ப்பு உள்ளது.நீங்கள் கொடுத்த லிஸ்ட்டில் பாதி பேரை எனக்கு தெரியாது என்பதும் உண்மை.

ஒத்துழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி


முதுகுமூடி முகமூடி

காண்டு டோண்டு

மழலி குழலி

ரமணி சீனிவாஸ் ரவி சீனிவாஸ்

கத்து முத்து (நான்தான்)

சோ ஜோ
திரு ஜோ


பாராட்டிற்கு நன்றி

முத்து(தமிழினி) said...

செல்வம்,

இதில் சில விஷயம் உண்மையில் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பது உண்மைதான்.

மசிருவரத்தான் said...

எல்லாரும் சாப்பிடுவது பருப்பு. அதனால் அனைவரும் பருப்பு சாப்பிடுங்க பெருங்காயம் போடாமல்.

ரமணிவரான் said...

பீரபாகரன்,ராம்,சுண்டல்,ராமாயணம்,கண்டம்,பிரா,ப்ரோ,பிரோ

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

நல்ல நகைச்சுவை. பாராட்டுகள். ஆனால் இப்போது சிரித்துவிட்டு நாளை நீங்கள் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கையில் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். நடப்பதற்குச் சாத்தியக் கூறுகள் 99% இருக்கிறது! :(

Partha said...

என்ன முத்து,
தமில் எலக்கியம் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து, உங்க எலுத்து ஒரு மாறியாவே இருக்கே. ஏதோ, நல்லது நடந்தா சரி.

முத்து(தமிழினி) said...

பாராட்டிற்கு நன்றி சுந்தர்..

பார்தா... தமிள் எளக்கிய உளகத்துல ஒர்த்தன் நுளைஞ்சா இதெல்லாம் ஜகஜம்தானே...கண்டுக்காதீங்க....


மைனஸ் குத்து மகராசன்களுக்கு,

ஓவர்நைட்ல ரெண்டு மைனஸ் குத்து இருக்கீதுபா..பொருட்படுத்தக்கூடிய சக்தியா என்னையும் நெனக்கிற மகராசன்களுக்கு நன்றி.

ராம்கி said...

//சித்தியின் ஆட்சி

aiyyo... chithi ille.. athaai !

ethukku vambu... Aunt ! :-)

முத்து(தமிழினி) said...

ராம்கி,

எழுதும்போதே எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். அப்பாவுக்கு அன்பு சகோதரி (தங்கை)
மகனுக்கு என்னவாம்?
எனக்கு இந்த உறவுமுறையெல்லாம் தகராறுதான்.(மாமாவை சித்தப்பா என்றும் சித்தப்பாவை அண்ணன் என்று கூறி வாங்கி கட்டிக்கொண்டது உண்டு)

போலி டோண்டு said...

சும்மா சொல்லக்கூடாது.... காண்டு என்ற பெயரை சரியாகத் தான் வைத்துள்ளீர்கள் முத்து..... இதன் பொருள் மும்பையில் குடியிருந்த/குடியிருக்கும் அனைவருக்கும் தெரியும்...

Anonymous said...

test

neo said...

அன்பு முத்து அவர்களே!

சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. நீண்ட நாட்களுக்குப்பின் நல்ல 'குத்தலான' நகைச்சுவை! :)

தமிழ்வெளியை பார்த்தீங்களா?