யார் சொன்னது நமது இந்திய மென்பொருள் நிபுணர்கள் சொந்த தொழில் செய்யமாட்டார்கள் என்று...மும்பயை சேர்நத இரண்டு மென்பொருள் நிபுணர்கள் வெறும் இருபதாயிரம் முதலீட்டில் மூன்று லட்சம் ரூபாய்களை சம்பாதித்து உள்ளனர்.
மும்பயை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜேக்கப்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இரண்டாம் வருடம் தொழிற்கல்வி பயின்று வருகிறார். அவர் தன் நண்பர் பிரகாஷின் உதவியோடு அமெரிக்காவில் இருந்து ஒரு கருவியை இறக்குமதி செய்கிறார். கருவியின் விலை பதினெட்டாயிரம் (இந்திய மதிப்பில்).அதன் மேல் ஒரு கிரெடிட் கார்டை உரசினால் அந்த கார்டில் உள்ள அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்ளும். அது போல பனிரென்டு கார்டுகளின் தகவல்களை அதில் சேமிக்கலாம் என்பது உபரி செய்தி.
இருவரும் மும்பய் ஜுகுவில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு சர்வர்(வெயிட்டர்) ஒருவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள். யாராவது கிரெடிட் கார்டை உபயோகித்து பணம் செலுத்தினால் அந்த கார்டை கையடக்கமான அந்த கருவியில் உரசிக்கொள்கிறார் அந்த வெயிட்டர்.(ஆறு இன்ஞ் நீளம் மட்டுமேயுள்ள அந்த கருவியை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாமாம்)
பிறகு நமது கணிப்பொறி வல்லுனர் அந்த கருவியில் இருந்து தகவல்களை கம்ப்யூட்டரில் இறக்கி கள்ள மார்கெட்டில் கிடைக்கும் பழைய கார்டுகளில் ஏற்றுகிறார்.
அப்புறமென்ன அந்த காட்டுகளை எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். படுத்தினார்கள்.பணத்தை இழந்த அனைத்து வாடிக்கையாளர்களும் அந்த குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றதை வைத்து காவல்துறை அந்த வெயிட்டரை அமுக்கி பிறகு நமது மென்பொருள் நிபுணர்களை பிடித்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதில் ஒருவர் அமெரிக்காவில் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலை கிடைத்து இன்னும் சிறிது நாட்களில் பிளைட் ஏற இருந்தாராம். அதற்குள் மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.
அடுத்த முறை கார்டு உபயோகப்படுத்துமுன் உஷாராக இருக்கலாமே.
தகவல் நன்றி:TIMES NEWS NETWORK
Tuesday, December 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//இந்திய மென்பொருள் நிபுணர்களின் சாதனை//
இந்த தலைப்பை ஒரு இந்திய மென்பொருள் நிபுணன் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.
சிறப்பான திறமை உள்ள இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், அவர்களது மூளை சாத்தானாக வேலை செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சிறப்பான திறமை உள்ள இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், அவர்களது மூளை சாத்தானாக வேலை செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சிறப்பான திறமை உள்ள இளைஞர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், அவர்களது மூளை சாத்தானாக வேலை செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
மோகன் ,
கண்டனம் தெரிவிப்பது உங்கள் உரிமை...
ஆனால் மென்பொருளாளர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
பி.கு: நானும் மென்பொருள் சம்பந்தப்பட்டவன்தான்.
சந்திப்பு,
இது என்ன? மென்பொருள் துறையில் வாய்ப்பு இல்லையா என்ன?
திறமையை நல்லவைகளுக்குப் பயன் படுத்தினால் நல்லாயிருக்கலாம் தீயவைகளுக்குப் பயன் படுத்தினால் ஜெயில்தான்.
முத்து மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு இல்லையா? என்று தாங்கள் ஆச்சரியப்படுவது புரிகிறது.
ஆனால், இன்றைக்கும் அமெரிக்காவில் இருக்கும் பல பேர் திறமையானவர்கள் அல்ல; ஏதோ ஒரு வகையில் உறவினர்கள், ரெக்கமென்டேஷன் போன்று பல வழிகளில் புகுந்துக் கொண்டவர்கள்தான். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், அங்கும் தமிழ்மணத்தில் இருப்பதுபோலவே ஜாதிய - ஏற்றத்தாழ்வுகள்தான் ஒருவரின் தகுதியை தீர்மானிக்கும் கருவியாக இருக்கிறது.
திறமையை விட, ஜாதியே அடிப்படை தகுதி! இதுதான் இன்றைய நவீன மனுதர்மம்.
ஒரு இந்திய மென்பொருள் நிபுணன் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.
யார் தவறு செய்கிறார்களோ அவர்களுக்கு அதற்குரிய தண்டனை அளிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அவர்களுடையா தொழிலையோ அல்லது ஜாதியையோ குறை கூறவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது என்பது என் கருத்து.
நன்றி என்னார்,
சந்திப்பு,
இந்த மென்பொருள் துறையை பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடும் எண்ணம் உள்ளது..மக்கள் மனம் புண்படாவண்ணம் போடவேண்டும் என்று தான் தாமதப்படுத்திக்கொண்டு உள்ளேன்.
அனானி,
for this u need not come as anony..
மேலே திரு.மோகன்தாஸிற்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்..மேலும் நீங்கள்
ஏதோ திரிப்பது போல் தெரிகிறது...சாதி பற்றி இந்த பதிவில் ஏதாவது சொல்லி இருக்கிறதா?
அனானிம° அவர்களுக்கு
தங்களுக்கு ஏன் இவ்வளவு பிரஷர் என்று புரியவில்லை. தனிப்பட்ட முறையிலோ அல்லது தனிப்பட்ட ஜாதியையே குறை சொல்வது அல்ல என் நோக்கம். நீங்கள் வேண்டும் என்றால் அங்கே உள்ள நிலைமைகளை சோதித்துப் பார்த்தால் புரியும். இது இன்றைய எதார்த்தம்.
எதார்த்தத்தை கண்டு கொள்ளமல் போனால் குருடனாய் திரிவது போல் ஆகி விடும். எனவே, எதார்த்தம் எதுவோ அதை பதிவது இன்றைய காலத்தின் கட்டாயம். மற்றபடி அனானிமஸின் மனது புண்பட்டிருந்தால் நானும் வருந்துகிறேன்....
முத்து,
"இந்திய மென்பொருள் நிபுணர்களின் சாதனை" என்று தலைப்பிட்டு எழுதியது எந்த நோக்கத்தில்?
ஒரு கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் மாணவன் செய்த குற்றத்தை ஏன் மென்பொருள் பொறியாளர்கள் மீது ஏற்றுகிறீர்கள்?
நீங்கள், உங்களை ஒரு வங்கிப் பணியாளராகவே அடையாளம் காட்டி வருவது, தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் படிப்போர்க்கு வெளிப்படை.
மென்பொருள் சேவை நிறுவனத்தில் பணிபுரியும் நான் என்னுடைய கண்டணத்தை தெரிவிக்கிறேன்.
தலைப்பு மாற்றப்பட்டுள்ளது...
//ஒரு கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் மாணவன் செய்த குற்றத்தை ஏன் மென்பொருள் பொறியாளர்கள் மீது ஏற்றுகிறீர்கள்? //
கண்டனம் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது...ஆனால் அதில் ஒருவர் அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்து போக இருந்தார் என்றும் எழுதி இருந்தேன்.அதை நீங்கள் கண்டுக்கொள்ளவில்லை...புனித பிம்பம் எதையும் எந்த துறைக்கும் ஏற்ற வேண்டாம்...(வங்கி துறை உட்பட)
வங்கி பணியில் கணிணி இல்லை என்று யார் சொன்னது? வங்கி பணியாளர்களில் கணிணி தொழில்நுட்பம் தெரிந்தவர் யாரும் இல்லை என்று நினைப்பது தவறு. கணிணி வல்லுனர் என்பது தான் என் டெஸிக்னேஷன் என்பது உங்களுக்கு தெரியுமா பெத்த ராயுடு?
இதுவா பிரமாதம் தாய், கொரியா,
முதுபிலிப் பைன்நா டுகளில் -பொதுவாய்
இதுவே குடிசைத் தொழில்.
:-)
நன்றி
பூங்குழலி
நன்றிங்க முத்து. தலைப்பை மாற்றியதற்கு.
முத்து,
தலைப்பை மாற்றியதற்கு நன்றி.
Post a Comment