Tuesday, December 13, 2005

சொக்க தங்கம் "சோ" வை உரசிப்பார்ப்போம் -பாகம் -2

முதல் பாகத்தை பார்க்க

அப்துல்கலாம் பற்றி எல்லோரும் பேசினார்களாம்.உடனே இவர் தைரியமாக கிண்டல் செய்தாராம்.ஆகா என்ன அரிய தொண்டு. அப்துல்கலாம் பற்றி மக்கள் நிறைய பேசினால் என்னய்யா தப்பு? ஒரு நடிகர், அவரின் பாஸிடிவ் பங்களிப்பு என்னன்னு யாருக்கும் தெரியாது. நெகடிவ் பங்களிப்பு என்ன என்று மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவரின் பிறந்தநாளுக்கு தலைவா தலைவா என்று கூச்சல்.கும்மாளம். இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்று கூறும் அப்துல்கலாம் பத்தி பேசினால் நக்கல் பண்ணுவாராம். என்னய்யா தமாசு இது? இதே அப்துல்கலாமிற்கு பதில் ஆர்.வெங்கட்ராமன் என்றால் என்ன சொல்லி இருப்பார்?

இன்றைய அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு கிண்டல், கேலி எல்லாம் யார் வேணாலும் பண்ணலாம். உலகம் கெட்டு போச்சு என்று ஈஸி சேர்ல உட்கார்ந்துகிட்டு சொல்றது சுலபம். பாஸிடிவ்வாக நீங்க என்ன பண்ணீங்க என்று கேட்டால் பதில் இல்லை. வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார் என்ற ஒரு காரணத்தினாலேயே அவரை மனதார வெறுத்தவர் சோ.

புத்திகூர்மை உண்டு . இல்லையென்று மறுக்கமுடியாது. உள்ள சுத்தியோடு கூடிய நேர்மையான புத்திக்கூர்மையை தலைவணங்கலாம்.ஆனால்
இவர் ? இதையும் படிக்கவும். இன்றைய இந்தியாவை பிடித்து ஆட்டுகிற வினையாக இந்த மாதிரி புத்திசாலித்தனங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.


பெண்களை பற்றி இவரின் கருத்துக்களை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.எப்போதோ அவர் மனதில் உருவாக்கி வைத்துள்ள கருத்துக்களை இன்றும் பிடிவாதமாக மாற்றிக்கொள்ளாமல் வைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவது , அதையும் சிலர் புகழுவது( ironically பெண்களுக்கு நிறைய உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்பவர்களும் இவர்கள்தான்) காலக்கொடுமைதான்.

தீவிரவாதிகளை அவர் கண்டிப்பதை யாரும் தவறு சொல்லவில்லை. ஆனால் யார் கண்டிக்கப்படவேண்டிய தீவிரவாதி என்ற அவர் கருத்தைத்தான் எதிர்க்கவேண்டி இருக்கிறது. இவரின் கருத்துப்படி சுபாஷ் சந்திர போஸ் கூட தண்டிக்கப்படவேண்டிய தீவிரவாதிதான். விடுதலைப்புலிகளை இவர் கண்மூடித்தனமாக எதிர்க்க ஒரே காரணம் தமிழ் என்ற வார்த்தை அவர்கள் பெயரில் இருப்பது தான் என்று நினைக்க வேண்டி உள்ளது.( LIBERATION TIGERS OF TAMIL EELAM).

சுனாமி வந்தப்போது இவர் கூறியது புகழ்பெற்றது. ஏன் சுனாமி வருகிறது என்று யாரும் கூற இயலாதாம். பூகம்பம் வந்ததால் சுனாமி வந்தது என்றால் ஏன் பூகம்பம் வந்தது என்கிறார். பூமிக்கு அடியில் தகடுகள் நகர்ந்ததால் பூகம்பம் வந்தது என்றால் ஏன் பூமிக்கு அடியில் தகடுகள் நகர்ந்தது என்று கேட்கிறார்.இதற்கெல்லாம பதில் யாராலும் கூறமுடியாது என்றெல்லாம் கூறி செல்கிறார். அதாவது அறிவியலின் எல்லையை இவர் தொட்டு பார்க்கிறாராம். அப்போது யாரையோ பிடித்து உள்ளே போட்டதினால் தான் பூகம்பம் வந்தது என்றால் ஒத்துக்கொள்வாரா?


தொடரும்

5 comments:

Anonymous said...

//ஒரு நடிகர், அவரின் பாஸிடிவ் பங்களிப்பு என்னன்னு யாருக்கும் தெரியாது. நெகடிவ் பங்களிப்பு என்ன என்று மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவரின் பிறந்தநாளுக்கு தலைவா தலைவா என்று கூச்சல்.கும்மாளம்.//

Really some of yesterday's blok posts upset me lot.

where we are going? how you educated people doing such nonsense things? really very sad.

முத்து(தமிழினி) said...

Dear Anony,

what i can say?

hehe

Mahalingam said...

/**விடுதலைப்புலிகளை இவர் கண்மூடித்தனமாக எதிர்க்க ஒரே காரணம் தமிழ் என்ற வார்த்தை அவர்கள் பெயரில் இருப்பது தான் என்று நினைக்க வேண்டி உள்ளது.( LIBERATION TIGERS OF TAMIL EELAM).**/

Excellent Muthu, long time this was in my mind, you simply super. Nice post. Keep write.

BABU said...

உங்கள் கருத்து சரியே.
தன்னுடைய விருப்பு வெறுப்பை புத்திசாலித்தனமாக வியாபாரமாக்கிக்கொள்ளத் தெரிந்த ஒரு நேர்மையில்லாத புத்திசாலி தான் சோ.
'சங்க'த்தவர்களின் 'பேனா'நண்பர் இராக் விவகாரத்தில் அமெரிக்காவை ஆதரித்தாராம். 'சங்க'த்தலை சொன்னப்படி.

PRABHU RAJADURAI said...

"வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார் என்ற ஒரு காரணத்தினாலேயே அவரை மனதார வெறுத்தவர் சோ"

இது சரியாக இருக்க முடியாது. விபி சிங் பிரதமராக பதவியேறுகும் தருவாயில் மண்டல் கமிஷன் அறிக்கையினை அவர் அமுல்படுத்த முனையக்கூடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஜனதா தளம் வென்ற உடனேயே, விபி சிங் அவர்கள் பிரதமராக கூடாது என்று சந்திரசேகர் அவர்களுக்காக ஆவேசத்துடன் எழுதினார் சோ அவர்கள்.

பல மும்பை நிறுவனங்கள் விபி சிங் பிரதமராக வருவதை சந்திரசேகரை முன்னிலைப்படுத்தி தடுக்க முயன்றதாக கூறுவார்கள்...

தமிழ்வெளியை பார்த்தீங்களா?