சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இதுப்போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் பரிசு கிடைக்காத மற்ற எழுத்தாளர்கள் விருது வாங்கியவரை பொளந்து கட்டுவார்கள். தமிழிலேயே என்னுடைய நாவல்கள் மட்டும்தான் நாவல்கள் என்று கூறும் எழுத்தாளர்கள் முதல் பிரான்சில் நான் பிறந்திருந்தால் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வருடா வருடம் எனக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லும் எழுத்தாளர் வரை எல்லோரும் இந்த விஷயத்தில் கைக்கோர்த்துவிடுவார்கள்.
குறிப்பிட்ட அந்த பரிசுக்குரிய படைப்பை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துப்போட்டு தரிசனம் இல்லை என்ற குற்றச்சாட்டு முதற்கொண்டு பின்நவீனத்துவம், விளிம்புநிலை என்றெல்லாம் வார்த்தைகளை போட்டு விளையாடிவிடுவார்கள்.
இந்த முறை அவ்வாறு செய்யும்முன் பரிசு பெற்ற படைப்பாளி ஒரு போலீஸ் டி.ஜி.பி என்பதை மனதிற்கொண்டு புத்திசாலிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.
Saturday, December 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ஆனாலும் உனக்கு ரொம்ப குசும்பு தான்.
//I hope the reference to Thilagavathi being a Police officer and therefore critics will be cautious, was a joke//
Really this is a joke only.what makes you to think that this as a serious post?
இந்த முறை அவ்வாறு செய்யும்முன் பரிசு பெற்ற படைப்பாளி ஒரு போலீஸ் டி.ஜி.பி என்பதை மனதிற்கொண்டு புத்திசாலிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்//
:-)))))))))))))))))))))))))
//இந்த முறை அவ்வாறு செய்யும்முன் பரிசு பெற்ற படைப்பாளி ஒரு போலீஸ் டி.ஜி.பி என்பதை மனதிற்கொண்டு புத்திசாலிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்//
திலகவதி டி.ஜி.பி. அவர்களுக்கு வழங்கப்பட்ட விருதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
மேலும் தமிழ் வரலாற்றில் வந்த மிகச் சிறந்த படைப்பு அவருடையது என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன். :-)
பி.கு- லாக்கப் லிஸ்டில் என் தலை தப்பியது
இந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது திருமதி திகலவதிக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி! இது பெண் எழுத்தாளர்களை எதிர்காலத்தில் கிளர்ந்தெழச் செய்வதற்கு நிச்சயம் உதவும்.
நாவல் என்றாலே, டைம் பா° என்ற கலாச்சாரத்தை உருவாக்கி விட்டார்கள் மிட்டாய் கடைகளில் கலர், கலராய் காட்சியளிப்பதுபோல், பெட்டிக் கடைகளில் துப்பரியும் நாவல் என்ற பெயரால் நம் மக்களின் மூளையை துடைத்தெறிந்து வருகிறார்கள்.
விதி விலக்கு “இனியம் உதயம்”.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி
இந்த முறை அவ்வாறு செய்யும்முன் பரிசு பெற்ற படைப்பாளி ஒரு போலீஸ் டி.ஜி.பி என்பதை மனதிற்கொண்டு புத்திசாலிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்//
:-))
வெங்கட்
நீங்க சொன்னதை ஒத்துக்கிறேன். இது ஒரு நகைச்சுவை பதிவுதான்.
பாலபாரதி, உஷா,பட்டினத்து ராசா,முத்துகுமரன், சந்திப்பு ஆகியோருக்கு நன்றிகள்.
முத்துகுமரன்,
லாக்கப் லிஸ்ட் இருந்து நீங்க தப்பிக்க மேற்கொண்ட வழி அபாரமய்யா...
சந்திப்பு,
அதென்ன இனியம் உதயம்..ஏதாவது உரல் உள்ளதா?
முத்து இனிய உதயம் நக்கீரன் குழுமத்தை சேர்ந்த இலக்கிய இதழ். பிற மொழி நாவல்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு மாதம்தோறும் வருகிறது.
ஒரு சிறுகதை + ஒரு மொழிமாற்ற நாவல் + ஒரு இலக்கியவாதியின் பேட்டி என அமைந்திருக்கிறது இனிய உதயம்.
சுட்டி கீழே
http://www.nakkheeranbiweekly.com/Udhayam/index.html
எந்த அடிப்படையில் இந்தத் தேர்வுகள் நிகழ்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
காலச் சுவட்டில்(கடந்த இதழ்) சு.ரா எழுதி இருக்கிறார்.
வங்கி குறித்த பதிவுக்கான பின்னூட்டம்
அடுத்து, தாங்கள்
கந்து வட்டிக்காரரிடம் பணம் வாங்கும் மக்கள் அதை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தும் மக்கள் ஏன் வங்கி கடனை திரும்ப செலுத்த மாட்டேன் என்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
உண்மை இதுவல்ல - கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கும் மக்கள், கடனை அடைப்பதற்கு மேலும், மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இறுதியில் தற்கொலைப் பாதைக்கோ அல்லது ஊரை விட்டே காலி செய்தல் போன்ற நிலைக்கே ஆளாகிறார்கள்.
இன்றைக்கு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையில் ஒரு சதவீதம்கூட சாதாரண மக்களுடைய பங்கு இருக்காது என்பது என்னுடைய கருத்து. இவைகள் அனைத்தும் தொழில்சார்ந்த முதலாளிகளுடையதுதான். (ஊரை அடித்து உலையில் போடும் - சமூகத்தின் மரியாதைக்குரியவர்கள்தான் இத்தகைய கடன் பெற்று வங்கிகளுக்கு பட்டை நாமம் சாத்துபவர்கள்.)
மேலும், சாதாரண மக்களை பட்டை நாமம் சாத்துவது யார் என்றால், பல தனியார் பெரும் நிதி நிறுவனங்கள்தான். சென்னையில் சம்பாதித்து வைத்த பென்ஷனை இழந்தவர்கள், ரிடையர்மெண்ட் ஆன தொகையை இழந்தவர்கள், கல்யாணத்ற்கு போட்டு வைத்த முதலை இழந்தவர்களின் கதைகளையெல்லாம் நீங்களும் அறிந்திருப்பீர்கள். எனவே வங்கிகள் சாதாரண மக்களுக்கு ரூ. 5000 முதல் ரூ. 50,000 வரை கடன்கள் தருவற்கு முன்வரவேண்டும் என்பதே என்னுடைய ஆதங்கம்.
அடுத்து முக்கியமானது. பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் ‘வங்கிகளுக்கு ஆட்களை எடுக்கும்’ வங்கித் தேர்வாணையத்தை முகமூடி வாஜ்பாய் கலைத்ததையும் நினைவுபடுத்துகிறேன்.
மொத்தத்தில் தங்களது பதிவு மிக பயனுள்ளது. ஆவலோடு படித்துக் கொண்டிருக்கும்போது திடீரென்னு முடிந்து விட்டதுபோன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.
Post a Comment