Thursday, December 22, 2005

வூடு கட்டுதல் தொடர்பாக -கடைசி பதிவு

இந்த பதிவில் சொல்லப்படும் அசடாகிய நான் எழுதுவது...

திரு.டோண்டு பதிவில் கூறப்படும் திரு.அருண் அவர்களின் பதிவை அடிப்படையாக கொண்டுத்தான் நான் சொக்க தங்கம் சீரிஸை எழுதினேன். அப்துல் கலாமை பற்றி நான் எழுதியுள்ள ஒரு பத்தியை ஊன்றி படித்தாலே இது புரியும்.

திரு.டோண்டுவின் பதிவு மற்றும் அருணின் பதிவு ஆகிய இரண்டிற்கும் ஆன பதில்கள் என்னுடைய மூன்று பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் உள்ளன.( குறிப்பாக மூன்றாவது பதிவின் பின்னூட்டங்கள்)

நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டபடி பின்னூட்டங்களை முன்னே கொண்டு வருகிறேன்.அப்போது தேவையில்லை என்று நினைத்தேன்.இப்போது தேவைப்படுகிறது என்று உணர்கிறேன்.திரு.டோண்டு அவர்கள் தர்க்க முறை பற்றியெல்லாம் எழுதுவதின் ரகசியம் என்ன என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.அவர்களின் நன்மையை முன்னிட்டு இது கிறிஸ்துமஸ் சிறப்பிதழாக மலர்கிறது.

கடைசியாக பேசுபவர் கூறுவதுதான் சரி என்பதாக மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம். இந்த பதிவிற்கு நான் பின்னூட்ட விளக்கமும் கொடுக்கபோவதில்லை.விருப்பப்பட்டவர்கள் வழக்கம்போல் தங்கள் பதிவுகளில்வூடு(காலி கிரவுண்டில் வாளை வீசுவது) கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.




OVER TO பின்னூட்டம்
_________________________________________________________________



//உங்களைச் சேலஞ்ச் செய்கிறேன். சோ பார்ப்பனர் என்பதால்தான் நான் அவரை ஆதரித்தேன் என்பதை என் எழுத்துக்களிலிருந்து காட்டுங்கள் //


அண்ணா விட மாட்டீங்க போல...உங்கள் எழுத்துக்களில் இருந்து நீங்கள் நடுநிலையாளர் என்று தெரிகிறது. உங்கள் சாதி மட்டுமல்ல நீங்கள் ஆணா பெண்ணா என்றே கண்டுக்கொள்ளமுடியவில்லை.. போட்டோவை வைத்துத்தான் கண்டுபிடித்தேன்.அந்தளவிற்கு நீங்கள் ஜெண்டிலாக எழுதியிருக்கிறீர்கள். பலரும் இங்கே அதே கருத்து கொண்டு இருக்கிறார்கள். இதை படிப்பவர் ஜட்ஜ்மெண்டுக்குத்தான் விடவேண்டும்.நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நீங்கள் மேலும் ஊடுகட்டிக்கொண்டே இருப்பதால் மற்றதையும் பார்க்கிறேன்.

ஒரு சின்ன கதை கூறுகிறேன். ஒருவர் (அருண்) கூறுகிறார் சோ சுத்தமானவர் என்று.

நான் கூறுகிறேன் இல்லை அவர் பல் கூட துலக்குவதில்லை, குளிப்பதில்லை என்று.
நீங்கள், நான் கூறியபல் துலக்குவதில்லை குளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள் அவர் ரொம்ப காலமாக செண்ட் உபயோகபடுத்துகிறார்( 1975 முதல்). எனக்கு அது நன்றாக தெரியும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்.

ஊடு கட்டுகிறீர்கள். இதை படிக்கிறவர்கள் எல்லாமே கோயிஞ்சாமிகளாக இருந்தால் உங்கள் வாதத்திற்கு கை தட்டுவார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்மணத்தில் கோயிஞ்சாமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.(பி.கு)அவர் செண்ட் போடுவதை பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.ஏன் குளிப்பதில்லை.பல் துலக்குவதில்லை என்பதுதான் என் கேள்வி.உடனே இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் உபயோகப்படுத்தும் பேஸ்ட், சோப் எல்லாம் போட்டோ பிடித்து காட்டி ஏதாவது சொல்லவேண்டாம்.(இது உங்களுடைய பிரஞ்சு டூரிஸ்ட் ஸ்டோரிக்கும் பொருந்தும்)



அண்ணா, அவரை அவரே விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு டெம்பிளேட்டை விலக்கிவிட்டு யாரும் அவரை விமரிசித்துவிட முடியாது. ராவணன் கூட சிறந்த சிவபக்தனாம்.அதுக்காக ராமன் சீதையை அவன்கிட்டேயா விட்டுட்டான்.எல்லார்கிட்டயும் சில நல்ல குணங்கள் இருக்கும்.அதை பத்தி நான் எதுவும் சொல்லவில்லை.விஷ விதைகளை தூவுகிறாரே அதைப்பற்றி தான் சொல்கிறேன்.

என் பதிவுகளை படிக்கவே இல்லையா?

சோ என்ற வார்த்தையை பார்த்துவுடன் வரிந்துக்கட்டி வீட்டீர்களா?

75 மற்றும 76 எல்லாம் நான் பிறக்கவேயில்லை என்பது ஒருபுறமிறுக்க அவர் ஏதாவது உருப்படியாக செய்திருந்தாலும் அதையும் எதிர்த்து ஆகவேண்டும் என்பது என் தலையெழுத்து இல்லை.எல்லாம் ஆரம்பத்தில் நல்லாதான் இருப்பாங்க..அப்புறம் தான் வரவர மாமியார் கதை ஆயிடுது.......


கிசுகிசு பற்றி: நீங்களே தினமலரை பற்றி இவ்வளவு கேவலமாக எழுதினால் எங்களை மாதிரி ஆட்கள் எல்லாத்துக்கும் வாய்ப்பு ஆகிவிடாதா? நிற்க...துக்ளக் காப்பாற்றி வரும் தரம் என்ன என்பதே யாருக்கும் தெரியாது.என் பதிவுகளில் நான் கூறி உள்ள தயானந்த சரஸ்வதி கட்டுரை போன்றவை தான் தரம் என்றால் ஸாரி இதற்கு என்னிடம் பதில் இல்லை...


எம்பிக்கள் நிதி விஷயத்தை பற்றி ஒரு விமர்சனமும் இல்லை.பாராட்டுக்கள்.(கடமையை சரியாக செய்வதே சாதனை ஆயிடுச்சு என்பது துரதிஷ்டவசமானது சார்)


ஏதோ அவர் கூட்டம் நடத்துகிறார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். திண்டுக்கல் லியோனியும் கூட்டம் நடத்துகிறார். கூட்டம் பிய்த்துக்கொண்டு போகிறது. (எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் தான்.இதில் என்ன சந்தேகம்?) அவரும் பிரியாணி பொட்டலம் தருவதில்லை.இதெல்லாம் ஒரு பொழுதுப்போக்கு சார். எல்லோரும் வருவாங்க. சிரிப்பாங்க. சீரியஸா யாரும் எடுத்துக்கறதில்லை. நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அது உங்க தப்பு. அங்க என்ன நீங்க உலகத்தை மாத்தி அமைக்கிறீங்களா?(அவரை கடுமையா விமரிசிக்கறவங்களும் துக்ளக் படிப்பதை இங்கே நினைவுபடுத்தி கொள்ளவும்.)

அதே மாதிரி அவர் கூட்டத்தில எப்படி சார் பிரியாணி போடமுடியும்? தயிர்சாதம், புளிசாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவை தான்.எனிவே உங்கள் ஆதங்கத்தை அவருக்கு சொல்கிறேன்.அடுத்த முறை ஆவன செய்வார்.பி.ஜெ.பி பற்றிய அவர் விமர்சனங்கள் பற்றி எல்லாம் என் பதிவில் பதில் இருக்கிறது.(முதல் பதிவு).



தன்னைத்தானே கிண்டல் செய்வது எல்லாம் ஒரு சாதனையா? வலிக்கிற எடத்துல அடிக்கிறதுன்னு ஒண்ணு இருக்குதுங்க.அது எல்லோருக்கும் புரியாது. அடி வாங்கினாதான் புரியும்.அடிமட்டத்து ஆளுங்களுக்குதான் அது.மேட்டுகுடிக்கு புரியாது.... குழந்தைங்களுக்கு விளையாட்டு காட்டறதுக்காக நாம நம்மளை அடிச்சிக்குவம்ல.. அதெல்லாம் இதுல வராது அய்யா.....மற்றபடி தனிமனித தாக்குதல் என்பதெல்லாம் பற்றி பலர் கூறிவி்ட்டார்கள்.தனிமனித தாக்குதல் விஷயத்தை நீங்கள் எப்படி விளங்கி வைத்துள்ளீர்கள் என்று விளக்க முடியுமா?நான் சோ உத்தி என்றால் என்ன என்று என் சோ மூன்றாம் பாகத்தில் எழுதியுள்ளேன். அதை படித்து அப்டேட் ஆகவும்.



மெல்ல பதிவுகளை போடவும் நான் ஆன்லைன்லயே உங்களுக்காக வெயிட் பண்ணலை. முடிந்தவரை உடனே எழுத முயற்சி செய்கிறேன்.கவுண்ட் டவுன் எல்லாம் எண்ணிட்டு இருக்க வேண்டாம்.

END OF பின்னூட்டம்


முழு கதையும் இங்கே (see comments area)
_______________________________________________________________



மேற்கண்ட கடைசி பத்திக்கு பிறகு அவர் தனியாக வூடு கட்ட போய்விட்டார்.

4 comments:

ROSAVASANTH said...

சோ குறித்த உங்களின் பதிவுகளை (சற்று அவசரத்துடன்) இப்போதுதான் படித்தேன். பொறுமையுடன், நேரமியுடன் எழுதியுள்ள உங்கள் பதிவுகளுக்கு என் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் சொல்ல மட்டுமே இந்த பின்னூட்டம்.

Muthu said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.ரோசா

Anonymous said...

‘Cho’ telling about law abiding is most important than anything (poverty, human rights, what ever else).


But he himself not followed the amendments of ‘Tamil script’ in 1978 by Tamil Nadu Govt. He adamantly followed the old style of writing. (I don’t know still he is following that. But I am sure until 1993 he didn’t changed).


I believe only reason is the new amendment is calling ’Periyar script review’. Am I right??

Pot"tea" kadai said...

முத்து, வூடு கட்டனும்னு முடிவு பண்ணிட்டீங்க...அப்புறம் என்ன? ஜரூரா நடத்துங்க...
நானும் சைடுல வந்து ஜல்லி வாரி கொட்டிட்டுப் போறேன்.
உங்களுடைய "சொக்கத்தங்க(ம்)மா சோ" - பண்பான, நேர்மையான அலசல்! அதை "சோ" -வே "சோ"-தனமாக ஒத்துக் கொள்வார்! :-)