நண்பர்களே, ஸ்டார் தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை பற்றிய என் முந்தைய பதிவு (புலம்பல்) இங்கே.
கடந்த சனியன்று ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் கோயமுத்தூரை சேர்ந்த சென்ட்ரல் எக்ஸ்சைஸ் அதிகாரி திரு.பாலமுருகன் அருமையாக பதில் சொல்லி இருபத்திஐந்து லட்சத்தை வென்று தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிப்பரப்பபட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் கலந்துக்கொள்வதே அரிதாக இருந்தது. சேலத்தில் இருந்து கோயமுத்தூரில் இருந்து என்றெல்லாம் அறிவிப்பார்கள். ஆனால் பார்த்தால் சர்மா, சிங் என்று ஏதாவது வடநாட்டு ஆசாமிகள் அமர்ந்திருப்பார்கள். இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே ஹாட் சீட் வரை வந்திருந்தனர்.ஆனால் பெரிய தொகை ஏதும் வெல்லவில்லை.
அனைத்து வருத்தங்களையும் போக்கும் வகையில் திரு.பாலமுருகன் திறமையாக பதில் சொல்லி இருபத்தி ஐந்து லட்சங்களை வென்று தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். வழக்கம் போல அல்லாமல்,கடினமாக அமைந்த கேள்விகளையும் கண்டு மிரளாமல் சிரித்து முகத்தோடு அலசி அவர் பதில் கூறிய விதம் அருமையிலும் அருமை.அவருக்கு தமிழக வலைப்பதிவாளர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.
Monday, December 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
பாலமுருகன் அவர்கள் கோடிகளையும், கோடிக்கணக்கான தமிழர்களின் மனங்களையும் வெல்ல வாழ்த்துகள்.
பாலமுருகனுக்கு வாழ்த்துக்கள்
இந்த பாலமுருகன் நமக்கு மேலும் நெருங்கியவர் என்று அறியும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.பார்கக காசியின் பதிவு....
http://kasi.thamizmanam.com/?item=210
சாதனை காணும் சக பதிவருக்கு வாழ்த்துக்கள்.அவர் வெற்றியை எல்லோருக்கும் எடுத்துரைத்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
முத்துவோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
thank you manian,positive rama and sathish for conveying your support to balamurugan...
பாலமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
what makes you think the low-participation by tamils in what is basically a hindi programme is lamentable ?
what makes you think the low-participation by tamils in what is basically a hindi programme is lamentable ?
i request you to read my earlier post regarding the subject..u want to make money by dubbing in tamil...do u thinks tamilians do not know hindi or english?
or amitabh does not know english?
Post a Comment