Friday, December 16, 2005

அது மற்றும் இது பற்றி பேசி எதை நோக்கி போகிறோம்?

நண்பர்களே...திரு.சோ பற்றி ஒரு தொடர் பதிவை போட்டாலும் போட்டேன். தமிழ்மணம் பற்றியெறிகிறது. நான் அப்படி ஒன்றும் திரு.சோ பற்றி புதிதாக எதுவும் கூறிவிடவில்லை.ஏற்கனவே பலர் பல்வேறு சர்தர்ப்பங்களில் அவர் மேல் கூறியுள்ள அவர் பதில் சொல்லாத சொல்ல தவிர்க்கும் விஷயங்கள் தான் அதில் பேசப்பட்டுள்ளன.

நான் தமிழ்மணத்திற்கு மிக்ப்புதியவன்.எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தனிப்பட்ட மின்னஞ்சல் கூட ஓரிருவருக்கு ஒற்றை வரியில் தான் அனுப்பியுள்ளேன்.யார் எந்த சாதி என்பதெல்லாம் நான் யோசித்ததில்லை.(ஆனால் என்னுடைய சில பதிவுகளில் ஒரு அனானிமஸ் இங்கே யார் யார் எந்த சாதி என்று பிட்டுபிட்டு வைத்துள்ளார். ஆடிப்போனேன் நான்.எப்படி...எப்படிய்யா இப்படியெல்லாம் முடியுது...)நான் இந்த மூன்று மாதங்களில் ஏறககுறைய முப்பது பதிவுகள் போட்டுள்ளேன்.அதில் சிறந்த பதிவுகள் என்று நான் கருதிய சில பதிவுகளுக்கு நான் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.(உதாரணம்:கம்யூனிஸ்ட் கோபால்). ஆனால் "சோ" வை பற்றிய பதிவுகளுக்கு உள்ள வரவேற்பு திக்குமுக்காட வைக்கிறது. முதன்முதலாக பின்னூட்ட எண்ணிக்கை ஐம்பதை தாண்டியுள்ளது. இது தற்செயலானது அல்ல.ஐம்பதாவது பின்னூட்டத்தை கொடுத்த அருட்பெருட்கோவிற்கு நன்றி..
ஆனால் இங்கு வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இதில் ஒரு பி்ன்னூட்டத்தில் கூட அவர்மீதான என் விமர்சனத்திற்கு பதில் இல்லை.திரு.டோண்டு கூட நான் அவரின் பல பதிவுகளில் இருந்து நான் டோண்டுவை பற்றி INFER செய்து எழுதிய ஒரு கருத்தைத்தான் மறுத்தாரே ஒழிய 'சோ' பற்றிய கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
ஆனால் பலருக்கும் இங்கே பிராமணர்களுக்கு எதிராக ஒரு போர் நடப்பது போல் ஒரு எண்ணம்.இது எப்படி உருவானது என்று எனக்கு புரியவில்லை.நானும் என் பதிவுகளை திரும்ப திரும்ப படித்துப்பார்த்தேன். அப்படி எதுவும் நான் எழுதியதாக தெரியவில்லை. நான் எழுதிய சில ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு கூட எந்த பதிலும் இல்லை.
என்னுடைய பதிவின் பின்னூட்டங்களிலும் அருண் வைத்தியநாதன் பின்னூட்டங்களிலும் சிலர் அவ்வாறு எழுதி இருக்கலாம்.பேசி இருக்கலாம். அருண் வருத்தப்படுவதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் திரு.சோ வை பற்றி பேசும்போது சோவே ஏற்று ஒழுகும் இந்த ஐடென்டிடி பற்றி பேசாமல் அவரை விமர்சித்துவிட முடியாது. இதுதான் நடந்தது.

மற்றபடி பொதுவாக இழிபிறவிகளும் நடமாடும் இந்த தமிழ்மணத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாத பலர் அனானிமஸ்ஸாக திரிகின்றனர்.அவர்களை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடிய வேலை.
பொதுவாக அமைதியாக எல்லாரையும் "அன்பின்" "அன்பின்" என்றே போட்டு எழுதும் திரு.மூர்த்தி நேற்று பொங்கி எழும்படி நிலைமை ஏன் உருவானது?.நாம் எல்லாரும் சிந்திக்கவேண்டும்.ராகவன் மிகவும் வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.மூர்த்தியே வருத்தப்பட்டார் என்றுதான் நினைக்கிறேன்.ஏன் இது நடந்தது?

யோசித்து பார்க்கும்போது பிரகாஷ் என்பவர் ஒரு பதிவில் கூறியிருந்தபடி ஒரு டெம்பிளேட் மனோபாவம் நம்மிடையே இருக்கிறது.ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ ஒரு அமைப்பை பற்றியோ விமர்சிக்கும்போது அந்த நபரின் நிறைகுறைகளை அல்லது கருத்துக்களை மட்டும் விமர்சிப்பதற்கு பதிலாக நம் சாதியையும் இனத்தையும் அதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறோம்.
சோ பற்றி பேசினாரா..பிராமணரை தாக்கிவிட்டார்.அவரை போட்டு தாக்கு....
கருணாநதியை பற்றி பேசிவிட்டாரா...தமிழ் சமுதாயத்தையே தாக்கிவிட்டார்..தமிழ் துரோகி...அவனை பேசவிடாதே....
இஸ்லாமிய தீவிரவாதத்தை மற்றும் இஸ்ரேலிய தீவிரவாதம் பற்றி பேசும்போதும் இந்த மனோபாவம் நம்மிடையே தோன்றுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். தவறை யார் செய்தாலும் அது தவறுதான் என்று சுட்டிக்காட்டும் பழக்கம் ஏன் நம்மிடையே இல்லை...ஒரு தனிப்பட்டவரின் மீது அல்லது ஒரு தனிப்பட்ட அமைப்பின் மீது (நான் இதில் மதத்தையும் சேர்த்துக்கொள்வேன்)சந்தேகமற்ற அல்லது விமர்சனமற்ற பற்று, சிந்தனை வளர்ச்சியை தடுக்கும் என்பது தமிழ்மண நண்பர்களுக்கு நான் கூறி தெரியவேண்டியது இல்லை..

உஷா கூறினார்..குருபீடங்களை மனதில் வைத்து ஆராதித்தால் பிரச்சனை இல்லை என்று.சரியான கருத்து.

குருபீடங்களை எழுப்ப ஆசைப்பட்டால் ரவுண்ட் த கிளாக் காவல் இருக்க முடியுமா?.

சிலர் குருவை சுண்டிப்பார்ப்பார்கள்.(நான் செய்ததுமாதிரி).

சிலர் ரசனை அலாதியானது.பீடத்தை மட்டும் சுரண்டி பார்ப்பார்கள்.(நைட் வந்து (-) குத்து போடுவார்கள்).

காக்கா வந்து தலையில் "கக்கா" போகும்.(அனானிகள் சிலரின் பின்னூட்டங்கள்).சிலைகளின் தலையில் காக்கா இடும் "கக்கா" வை என்ன பண்ண முடியும்.காக்காக்களை சுட்டு வீழ்த்த முடியுமா? சிலையை கழுவி விடுவது தான் வழி.(என்னா உதாரணம்..கலக்கறே சந்துரு)

இதற்கெல்லாம் வருத்தப்பட்டால் குருவை பீடத்தில் ஏற்றவே கூடாது. நான் குருவை பீடத்தில் ஏற்றி விடிய விடிய காவல் இருப்பேன் என்றால் இருங்கள்.இல்லாவிட்டால் இன்னொரு வழி உள்ளது.குருவை சபையில் ஏற்றுங்கள். பேசுவோம். முடிவில் குருவை பீடத்தில் ஏற்றுவீர்களோ முச்சந்தியில் எறிவீர்களோ அது உங்கள் இஷ்டம்.இது எல்லா குருபீடங்களுக்கும் பொருந்தும்.

ஒரு அனானிமஸ் நான் கூறிய சாதிப்பற்று விஷயம் பா.ம.க விற்கும் பொருந்துமா என்றார்.இதில் என்ன சந்தேகம்..கண்டிப்பாக பொருந்தும் என்றே கூறினேன்.

பின்லேடனை எதிர்க்க பி.ஜே.பி யில் உறுப்பினர் கார்டு வைத்திருக்க வேண்டுமா? ரஜினியை கண்டிக்க பா.ம.க கட்சியை சேர்ந்தவருக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா என்ன? இதுவெல்லாம் நாமே போட்டுக்கொள்ளும் மாய வேலி.

இப்படி சகட்டுமேனிக்கு எல்லாரையும் நாம் எப்படி எதிர்க்கமுடியும்? யாரையாவது சப்போர்ட் செய்தால்தானே நம் சப்போர்ட்டுக்கு யாராவது வருவார்கள் என்று மென்டாலிட்டி உள்ளவர்கள் அடுத்தவரை விமர்சனம் செய்யும் தார்மீக உரிமையை இழக்கிறார்கள் என்றே கூறுவேன்.
மனிதன் முரண்பாடுகளால் பின்னப்பட்டவன். எல்லோருக்கும் நல்ல பிள்ளை கலியுகத்தில் சாத்தியம் இல்லை.பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட சுயநலத்தினாலும்,சில சமயம் நேர்மையான காரணங்களுக்காகவும் சமரசம் செய்துக்கொள்ளும் பிரபலங்களை கண்மூடித்தனமாக DEFEND செய்வதை பற்றி நாம் மறுபரிசீலனை செய்யவேண்டுகிறேன்.

( இந்த பதிவிற்கு பிறகு நடுநிலைவாதிகளின் நாற்பது குணாதிசயங்கள்,ஆடு ஓநாய், எலி,எள், எலிபிளக்கை என்ற தலைப்புகளில் பதிவுகள் வந்தால் நான் பொறுப்பல்ல.)

19 comments:

ramachandranusha said...

மன்னிக்கவும் முத்து, உங்கள் பதிவில் வரும் அனைத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு. பிறரையும் பிறர் வீட்டு பெண்களை ஆபாசமாய் எழுதிய ம்றுமொழி என் பதிவிற்க்கு வந்தால், நான் எழுதவில்லை என்று சொல்லிவிட்டு பேசாமல் இருந்தால் சரியா?
முதலில் கமெண்ட் மாடரேஷன் போடுங்க, அனைத்து தலைவலியும் தீரும்.

முத்து(தமிழினி) said...

நான் எந்த பொறுப்பையும் தட்டி கழிக்க முயலவில்லை என்று மட்டும் இப்போதைக்கு கூறி வைக்கிறேன். இந்த பதிவும் இந்த பிரச்சனையை பற்றி அல்ல...

முத்து(தமிழினி) said...

you have taken the meaning upside down...iam not talking about my blog...

மூர்த்தி said...

அன்பின் முத்து,

ஓராண்டுக்கு முன்பெல்லாம் வலையுலகம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன்பின்னர் வந்த ஏகாதிபத்திய சக்திகள் குழுக்களாகப் பிரிந்தன. அவை தன் ஜாதியினைப் பார்த்தும் இனங்களைப் பார்த்தும் ஓட்டு, பின்னூட்டம், வலை இணைப்பு போன்றவை செய்தன.

அவற்றின் எழுத்துக்கள் யாவும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை ஆதரித்தும் இன்ன பிரவற்றை எதிர்த்துமே இருந்தன. அவற்றினை தார்மீக அடிப்படையில் சுட்டிக் காட்டப்போய் கெட்ட பேர் எனக்கு. இதற்கெல்லாம் பயந்தால் கதையாகுமா? என் கடைசி மூச்சு உள்ளவரைக்கும் வீணர்களை எதிர்ப்பதென்ற முடிவோடுதான் இருக்கிறேன்.

நான் எந்த ஜாதிக்கும் அல்லது மதத்திற்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதியதில்லை! அதுதான் இவர்களுக்கு என் மீது கோபம்!

மதி கந்தசாமி (Mathy) said...

//யோசித்து பார்க்கும்போது பிரகாஷ் என்பவர் ஒரு பதிவில் கூறியிருந்தபடி ஒரு டெம்பிளேட் மனோபாவம் நம்மிடையே இருக்கிறது.ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ ஒரு அமைப்பை பற்றியோ விமர்சிக்கும்போது அந்த நபரின் நிறைகுறைகளை அல்லது கருத்துக்களை மட்டும் விமர்சிப்பதற்கு பதிலாக நம் சாதியையும் இனத்தையும் அதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறோம்.//

I second this Muththu.

EVERYBODY is doing this.

Even Arun talked about ' female Brahmin talking abt LTTE', when all of us were talking in HIS OWN blog abt something that is of concern to ALL THE BLOGGERS. Why do you think he did that? It's because he knew my background.

After that comment from him, i realised that his intention was not to talk abt 'spam'.

Good post on Cho btw. I too read Thuklak once in a while, just to remind me about the 'Thulkak style of journalism'. Thankyou for your series.

-Mathy

Senthil said...

//ஆனால் பலருக்கும் இங்கே பிராமணர்களுக்கு எதிராக ஒரு போர் நடப்பது போல் ஒரு எண்ணம்.//

Reson is very clear. most of 'them' are blindly against Tamil & insulting tamil feeling in sake of 'Dravidan' phophia.

So regardless casts and religon all are againt 'them'.

Satheesh said...

Ellam sari muthu sir... athe en Anonymous pinnotathe edukka maatenreengo?. Ippadi delete panrothode.. moderation le potta, easy illiya?

Think please

-Satheesh

முத்து(தமிழினி) said...

வாங்க சதீஷ்

தீடிர்னு வர்றீங்க..சும்மா பாக்க வந்தேன்னீங்க நேத்து...இன்னைக்கு சிந்திக்க சொல்றீங்க..சரி சரி தப்பில்லை..அதில பாருங்க சதீஷ்..உண்மையை சொல்ல போனா எனக்கு இந்த அழிக்கிறதிலேயே நம்பிக்கையில்லை..

உங்கள் பதிவில் மற்ற அனானிமஸ்கள் விரும்பத்தகாத பின்னூட்டங்கள் இட்டால் அதில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டால் நான் என்ன சொல்வது?

உஷா நீங்கள் தான் பொறுப்பு என்கிறார்...பொறுப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை....எனக்கு அழிக்கிற தொழிலெல்லாம் வராது என்றுதான் இதுவரைக்கும் நினைத்திருந்தேன். ...வந்திருச்சு

ஒரு குட் நீயூஸ் என்னன்னா இன்னைக்கு தான் இந்த வேலையை ஆரம்பிச்சுருக்கேன்.
சில சாதாரண கருத்துக்களை அனானிமஸ்கள் போடும்போது அதை நீக்க தேவையில்லை என்றே நினைக்கிறேன். மற்றபடி கேவலமாக இருக்கும் பின்னூட்டங்களை நானே பார்த்து நீக்கிவிடுவேன்.பார்ப்பவர்களும் சொல்லலாம்.

மாடரேஷன்ல எனக்கு சில பிராக்டிகல் பிராப்ளம் உண்டு.

முத்து(தமிழினி) said...

சதீஷ்

என்னை பொறுத்தவரை அனானிகள் தீண்டத்தகாதவர்கள் கிடையாது. அடுத்தவரை கேவலமாக விமர்சிக்காத அனானிகளும் உண்டு. உதாரணம் இங்கே பார்க்கவும்.
_____________________________
Anonymous said...
//ஒரு நடிகர், அவரின் பாஸிடிவ் பங்களிப்பு என்னன்னு யாருக்கும் தெரியாது. நெகடிவ் பங்களிப்பு என்ன என்று மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவரின் பிறந்தநாளுக்கு தலைவா தலைவா என்று கூச்சல்.கும்மாளம்.//

Really some of yesterday's blok posts upset me lot.

where we are going? how you educated people doing such nonsense things? really very sad.

_____________________________________

இந்த அனானி என்ன பாவம் பண்ணினார்?எதோ காரணத்தால் அனானியாக வருகிறார்.வரட்டுமே...மத்தபடி படுகேவலமாக எழுதினால் கழுவி விடுவேன்.அனானியாக இல்லையென்றால் பிளாக்கர் அக்கவுண்ட் ஓபன் பண்ணி வருவாங்க.

இங்கே மாயவரத்தான் பெயரில் (பிளாக்கர் அக்கவுண்டில்) ஒரு பின்னூட்டம் வந்தது.யார் அந்த மாயவரத்தான் யார் என்றே எனக்கு தெரியாது.இப்போது நான் அதை வைத்திருக்க வேண்டுமா வேண்டாமா? இதெல்லாம் சிக்கல்.பார்ப்போம்.நிலைமை சிக்கலாச்சுன்னா மாடரேஷன் பண்ணுவோம்.(மதியம் ஒரு இரண்டு மணிநேரம் மாடரேஷன் அமுலில் இருந்தது).


தமிழர்கள் கம்ப்யூட்டர் துறையில் விற்பன்னர்கள் என்று கூறப்படுகிறது. யாரையாவது கையும் களவுமாக பிடித்தால் ஏன் ஆதாரத்தை சபையில் சொல்லுவதில்லை?

மாயவரத்தான்... said...

வணக்கம் முத்து. நான் தாண் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் மாயவரத்தான். ஆனால் மேலே என்னுடைய பெயாரில் வெளியாகியிருக்கும் பின்னூட்டம் நான் இட்டதல்ல. எந்த பொறம்போக்கோ என்னுடைய இந்தப் பெயரை பயன்படுத்தி கேவலமான வேலையை செய்து கொண்டிருப்பது இங்கு அனைவரும் அறிந்ததே. பொதுவாக இது நான் இட்ட பின்னூட்டமில்லை என்று எங்கும் நானாக போய் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் என்னை யாரென்று நீங்கள் தெரியாது என்று சொன்னதால் இந்த விளக்கம். நேரம் கிடைக்கும் போது என் வலைப்பூவின் பக்கமும் வந்து செல்லலாம். :)

கையும் களவுமாக பிடித்தாலும் அந்த ஜந்துவின் சாக்கடை புத்தி காரணமாக யாரும் தம்மீது சாக்கடை வீசுவதை சகித்துக் கொள்ள தயாராக இல்லை என்பதே உண்மை. ஆனாலும் பசு வேடம் போடும் அந்த பன்னியின் (பன்னிகளின்?!) வேடம் கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிய பிடிபடப்போவது வெகு தொலைவில் இல்லை.

Muthu said...

நண்பரொருவர் எனக்கு இந்தப் பதிவில் என் பெயரில் (எனது பிளாகர் அக்கவுண்ட் எண் தெரிவது போல) பின்னூட்டம் வந்திருப்பதாக தெரிவித்தார்.

வந்து பார்த்தேன். கீழ்தரமான செயல்களில் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு இறங்குவது என அந்த ஜந்து முடிவெடுத்திருப்பது தெரிந்து கொண்டேன். உங்கள் பின்னூட்ட வசதியில் எந்த பெயரில் வேண்டுமானாலும் அந்த பிளாகர் அக்கவுண்ட் நோக்கி செல்லுமாறும் பின்னூட்டமிடமுடியும். மன்னிக்கவும். அதற்காக உங்கள் பெயரில் இந்த பின்னூட்டம் இட்டுள்ளேன் முத்து. எனவே, உங்கள் பின்னூட்ட வசதியில் அநாநிமஸ்கள் பின்னூட்டம் இடமுடியாத வகையில் மாற்றவும்.

- மாயவரத்தான்...

முத்து(தமிழினி) said...

மாயவரத்தான்,

கலக்கறீங்க அப்பு கலக்கறீங்க..இந்த டெக்னிக் எல்லாம் எப்படிங்க? எனக்கு சந்தேகம் இருந்தது.அதான் நீங்க சொல்றதுக்கு வெயிட் பண்ணாம டெலிட் பண்ணிட்டேன்.
ஆனால் நீங்க குறிப்பிட்ட ஒருவரை குறி வைப்பது எனக்கு புரியவில்லை(புடிக்கலை).என்ன ஆதாரம்?

நான் இங்க கொஞ்ச நாளாத்தான் இருக்கேன். அவரு என்னை பொருத்தவரை நல்லவராத்தான் தெரியறாரு....கண்டிப்பா ஒரு கடங்காரன் இருக்கான்..ஆனா அவன் யாரு என்பதில் தான் எனக்கு சந்தேகம்.............

Arun Vaidyanathan said...

Mathy,
We talked about that comment in my blog and I told it was sarcasm talking about today's blog world. We talked about it again and came to a conclusion. You repeating that here is not warranted. Anyway, I definitely didnt intend that comment towards you and I still think that combo is the candidate for more abuses!

Muthu, I agree with intention of this post. I also argued about 'Cho'thanamaana uththi only...Please go thru the discussions there!
Thanks!

Arun Vaidyanathan said...

Dear Muthu,
Let me make somethings clear. I didnt support CHO because he is a Brahmin or anything. There was a discussion in RoZa's blog in which Thangamani has clearly said Some Characteristis of Journalism and termed it as 'Cho uththi'. I wanted to question why it is termed as CHO uththi and explained about 'Why I like Cho and Why I differ from that term'. I seriously have no problems with anybody writing 'Why they dont like CHO. I will question their reasonings and will allow them to question my reasonings too, considering it should be decent and it should not be twisted. (Personally, I liked Thangamani writings many times and aprreciated then and there. I still think, he will allow and appreciate other views nicely and decently although I differ from him in various issues ) I confidently think World is compromised of all kinds of views, obody's view is final and there is a room for discussion anywhere and everywhere! But Please revisit all blogs and see the discussions...how the views take a different direction, condemned!

Thanks Muthu for this post!

Love,Arun Vaidyanathan

மாயவரத்தான்... said...

ஐயா..ஆதாரமில்லாம குற்றம் சொல்ல நாங்க என்ன மடயங்களா? பிராக்ஸி சர்வர் உபயோகப்படுத்தி அந்த கயவாளி எல்லாருக்கும் கண்டபடி பின்னூட்டமிட்டான். எனது வலைப்பூவில் ஒன்றுக்கு நான்கு ஐ.பி. கண்டுபிடிப்புகளை வைத்தேன். ஒரிஜனலாக எந்த ஐ.பி.யிலிருந்து வந்தது என்பதை ஒன்று சரியாக கண்டுபிடித்தது. அதை எடுத்து பல மாதங்களுக்கு முன்பு வெளியிட்டேன். அதை தொடர்ந்து தமிழ் வலைபூ உலகமே பத்திக்கிச்சு. அதில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதில் கடுப்பான அந்த கடங்காரன் இன்னும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறான். அனால் இப்போதெல்லாம் உங்களைப் போன்றோரின் பதிவுகளை பயன்படுத்திக் கொள்கிறான். பரவாயில்லை. இதே உத்தியை அவன் இங்கு மட்டுமில்லாமல் எங்கும் பயன் படுத்துவதாக செவி வழிச் செய்தி வந்தது. பல நாள் திருடன் வசமாக ஒருநாள் எல்லாரிடமும் மாட்டாமலா போய் விடுவான்? அன்னைக்கு இருக்குடீ..!!

முத்து(தமிழினி) said...

Dear Arun,

i do not have any intention to hurt anybody...i understand your feelings..let us argue in positive manner (which iam doing until now)

Anonymous said...

//கையும் களவுமாக பிடித்தாலும் அந்த ஜந்துவின் சாக்கடை புத்தி காரணமாக யாரும் தம்மீது சாக்கடை வீசுவதை சகித்துக் கொள்ள தயாராக இல்லை என்பதே உண்மை. ஆனாலும் பசு வேடம் போடும் அந்த பன்னியின் (பன்னிகளின்?!) வேடம் கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிய பிடிபடப்போவது வெகு தொலைவில் இல்லை.//

மாயவரத்தான், ஒருவர் மீது பழிபோடும்போது இன்னார்தான் என உறுதியாகத் தெரிந்ததும் நீங்கள் ஏன் காவல்துறையில் கம்ப்ளெய்ண்ட் செய்யக் கூடாது? அப்படியின்றி சக பார்ப்பனர்களை சேர்த்துக்கொண்டு ஒருவருடன் மல்லுக்கு நிற்பதும் அவர்தான் என குத்துமதிப்பாக கைகாட்டுவதும் படித்தவருக்கு அழகா? கொஞ்சம் சிந்திக்கவும். அவருக்கு ஜாதி பிடிக்கவில்லை. உங்களுக்கு மற்றும் உங்கள் நண்பர்களுக்கு ஜாதி பிடித்து இருக்கிறது? அதுதானே வித்தியாசம்?அதற்காக ஒருவரை சும்மாவேனும் குற்றம் சொல்லுவது சரியாகுமா?

-சுரேஷ்

Anonymous said...

பெரியாரைப் பற்றி இகழ்ந்து கருத்துகூற எனக்கு முழு உரிமையுண்டு. சோவைப் பற்றி பாராட்டிப் பேச எனக்கு முழு உரிமையுண்டு. ஏன் அப்படி என்று இங்கு உங்களிடத்தில் விளக்கிக்கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனது ஆழமான கருத்துகளை மரத்தடி, ராயர், நண்பர்கள் அருண், மாயவரத்தான், முகமூடி, டோண்டு, ஸ்ரீகாந்த் போன்றவர்களின் வலைப்பதிவினில் தொடர்ந்து எழுதுவேன். உங்களுக்கு தோன்றிவற்றினை உங்கள் வலைப்பதிவுகளில் எழுதிக் கொள்ளுங்கள்.

-Sa.Thirumalai

பொன்ஸ் said...

//ஒரு டெம்பிளேட் மனோபாவம் நம்மிடையே இருக்கிறது.ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ ஒரு அமைப்பை பற்றியோ விமர்சிக்கும்போது அந்த நபரின் நிறைகுறைகளை அல்லது கருத்துக்களை மட்டும் விமர்சிப்பதற்கு பதிலாக நம் சாதியையும் இனத்தையும் அதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறோம்.
//
இதை எழுதி 6 மாசமாச்சா?!! இன்றைக்கும் அச்சு அசலாகப் பொருந்துகிறது.. இன்னும் பல வருடம் ஆனாலும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்!!:(

தமிழ்வெளியை பார்த்தீங்களா?