என்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும முடிச்சு போடறாங்களேன்னு பாக்கறீங்களா? மேலே படிங்க..
நேற்று சென்னையில் தி.மு.க வை சேர்ந்த கிளை செயலாளர் தனசேகரன்(இவர் கவுன்சிலராகவும் இருக்கிறார்) என்பவரை தமிழக அரசு கைது செய்தது. இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது ஆனவர். மேலும் பல குற்றச்சாட்டுக்கள் இவர் மேல் உள்ளதாக போலீஸ் தெரிவித்தனர். குற்றச்சாட்டு என்னவென்றால் வெள்ள நிவாரண வாங்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 42 பலியாக காரணமாக இருந்தது.இவர் பரப்பிய வதந்தி காரணமாகத்தான் மக்கள் அந்த அதிகாலை நேரத்தில் அங்கு கூடினார்களாம்.
பிரச்சனை நடந்து இரண்டு நாட்களுக்கு அப்புறம் அரசு சுதாரித்துக்கொண்டு இப்படி ஒரு பாயிண்டை (கவுண்ட்டர்) வீசினாலும் கேள்விகள் தொடர்கின்றன.
அரசு அறிவிக்காமல் அத்தனை பேர் கூடியதை அரசு ஏன் அனுமதித்தது?
அங்கே சில காவலர்களும் இருந்ததாக தகவல்.அவர்களும் வதந்தியை நம்பி வந்தவர்கள்தானா?
முன்பு நடந்த சம்பவமும் அதிகாலையில் தான் நடந்தது.அதுவும் அப்படித்தானா?
தி.மு.க தரப்பு இன்னும் பல கேள்விகளை எழுப்பி இதை திசை திருப்பும் செயல் என்று கூறுகிறது. யார் சொல்வது சரி..யார் சொல்வது தவறு என்பதை பிறகு பார்ப்போம்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம்.ஆனால் 42 பேர் இறந்ததிற்கு இவர்தான் காரணம் என்று ஒருவர் மீது பழி போடுவது சம்மந்தப்பட்டவருக்கு மிகவும் மனஉளைச்சலாகத்தான் இருக்கும்.
இப்போது இன்னொரு சம்பவத்தை பார்ப்போம். சவுரவ் கங்குலி அணியில் நீக்கப்பட்ட உடன் பலரும் அவருக்கு ஆதரவாக திரண்டதை நாம் அறிவோம்.அப்போது வாரியத்தலைவர் திரு.சரத்பவார் விட்ட பஞ்ச் குறிப்பிடத்தக்கது.
எனக்கு தெரியாமல் இது நடந்துவிட்டது..தேர்வுக்குழு தலைவரிடம் நான் இதுப்பற்றி பேச இருக்கிறேன் என்றார் பவார்.எல்லோருக்கும் தெரியும் இவருக்கு தெரியாமல் கங்குலிக்கு கல்தா கொடுத்திருக்க முடியாது என்று. இவரை கேட்காமல் தேர்வாளர்கள் அணியை முடிவு செய்வார்களா?.அதுவும் கங்குலி விஷயம் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும்போது..அப்படியிருக்க அவர் ஏன் அவ்வாறு கூறினார்?
இங்குதான் சரத்பவார் தான் எப்படிப்பட்ட ராஜதந்திரி என்பதை காண்பிக்கிறார். கங்குலிக்கு ஆதரவாக எழுந்தவர்களை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றம் காண்பித்து அவர்கள் எதிர்ப்பை பிசுபிசுக்க வைத்தார் அவர்.எதிர்தரப்பு நிலைகுலைந்து போனது.அதற்குள் அடுத்த ஆட்டம் ஆரம்பித்து விட்டது.
இந்த மாதிரியான திறமைகளை எதையும் காட்டாமல் சம்பவம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு படுவீக்கான கவுண்ட்டர் அட்டாக்கை தமிழக அரசு செய்துள்ளது..
இது வேலை செய்யுமா என்பதை போக போகத்தான் பார்க்கவேண்டும்.
Wednesday, December 21, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நியாயமான ஆதங்கம் முத்து.
என்னமோ போங்க.
போன உசுருக போயிருச்சு. ஆயிரம் காரணம் சொன்னாலும் ஆளுங்கட்சிதானே இதுக்குப் பொறுப்பேற்கணும்? ஜெ. ஆறுதல் சொல்லப் போனப்ப யாரையோ பாத்து "ஏம்மா கலெக்டருதான் நாளைக்கு வரச் சொன்னாராமே... ஏன் முன்னாடியே போனீங்க" ன்னு ஆதங்கத்தோட கேட்டாராம். நல்லவேளை அவங்க காதுல இது தெளிவா விழலை
இதே ஜெ. எதிர்க்கட்சித் தலைவியா (சட்டமன்றத்தில் இல்லாத?!) இருந்தப்ப, தமிழ்நாட்டில எங்கயாச்சும் சும்மாங்காட்டியும் மழை பேஞ்சாலும் பேயாட்டியும் தார்மீகப் பொறுப்பேத்து கருணாநிதியை ராஜினாமா செய்யச் சொல்லுவாங்க.
இப்ப காலங்கடந்த கூத்து. என்னமோ போங்க...
நன்றி மூர்த்தி , பிரதீப், சதயம்
பிரதீப், இந்த விஷயத்தில் சன் டிவியையோ தி.மு.க வையோ விமர்சிப்பதும் தவறு. எதிர்கட்சிக்காரன் அப்படித்தான்யா சொல்வான்.நிவாரணப்பணி நடக்கவே இல்லை என்பான். நம்பத்தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுக்கணும். ஏற்கனவே ஆறு பேர் செத்தும் உஷாராகாமல் எதிர்கட்சியை சொல்வது கொஞ்சம் ஓவர்தான்.
சதயம்,
தேர்தலை முன்னிட்டு எல்லாருக்கும் நிவாரணம் தருகிறோம்னு அரசு சொல்வதும் நியாயமா? எல்லோருக்கும் கொடுப்பது பிராக்டிக்கலா கஷ்டம்..கவர்மெண்ட் மற்றும் லோக்கல் அத்தாரிட்டிஸ் கண்க்கெடுத்து யார் யார் பாதிக்கப்பட்டார்களோ யார் யார் நிஜமாகவே டிஸர்விங்கோ அவங்களுக்கு மட்டும் கொடுத்திருக்கலாம். அந்த நாலாயிரம் பேர் ஆயிரம் பேர் கதை பொய் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
Post a Comment