Monday, December 05, 2005

பதிலைத்தான் சொல்லிடுங்களேன் சார்

நேர்மையானவன்(நல்லவன்) * நேர்மையில்லாதவன்(கெட்டவன்)

புத்திசாலி * முட்டாள்



மேற்கண்டவை இரண்டுவிதமான முரண்பாடான குணச்சித்திரங்கள். மனிதர்களை எளிமையாக வகைப்படுத்தினோம் என்றால் இந்த இரண்டு விதமாக காம்பினேஷன்களில் அடக்கலாம்.ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நேர்மையான புத்திசாலி

நேர்மையான முட்டாள்

நேர்மையில்லாத முட்டாள்

நேர்மையில்லாத புத்திசாலி


இதில் முதல் இரண்டு வகையும் பெரிய ஆபத்தை கொடுத்துவிடாது.நேர்மையில்லாத முட்டாள்கூட எதாவது முட்டாள்தனமாக செய்து மாட்டிக்கொண்டுவிடுவான்.நான்காவது பகுப்பாடான நேர்மையில்லாத புத்திசாலி தான் நமக்கு பிரச்சினை.இந்த வகையான மனிதர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.இந்த வகையினரை எப்படி எதிர்கொள்வது என்பது இன்று சமுதாயத்தை எதிர்நோக்கிஇருக்கும் பிரச்சனைகளில் ஒன்று.மேற்படி சிந்தனை கீற்று(?) நான் அடிக்கடி நண்பர்கள் வட்டாரத்தில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களில் ஒன்றாகும்.சிலர் பாராட்டிய அதே வேளையில் என் தத்துவ கீற்றுக்களை தாங்க முடியாமல் நட்பை முறித்துக்கொண்டு சென்றவர்களும் உண்டு.

சரி.சரி.விஷயத்திற்கு வருவோம்.சமீபத்தில் அ.தி.மு.க எம்பிக்கள் குழு ஒன்று பிரதமரை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் திரு.சிதம்பரத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது.திடுக்கிட வைக்கும் பல புகார்களை அடக்கியுள்ள அந்த குற்றச்சாட்டை பற்றி நிதி அமைச்சர் எந்த பதிலும் கூறாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.இதைவிட கொடுமை நம் மீடியாக்களின் செயல்பாடு. ஜெயா டிவி தவிர வேறு எந்த டிவியிலும் இதை பற்றி கேட்க முடியவில்லை.திரு.சிதம்பரம் ஆங்கில மட்டும் வடஇந்திய மீடியாவின் செல்லப்பிள்ளை என்பது உண்மைதான் என்றாலும் இது கொஞ்சம் ஓவர்.

திரு.சிதம்பரம் கிளீன் இமேஜ் உள்ள ஒரு அரசியல்வாதி. ஒரு வேளை சூரியன் மேற்கில் உதித்து காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் முதல்வர் பதிவியில் அமர தகுதியானவர் என்றெல்லாம் மக்களிடம் அவர்மேல் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.குற்றம் சாட்டியிருப்பது அ.தி.மு.க என்பதாலேயே இவை பதில் கூற தேவையில்லாதது என்பதான நிலைப்பாடு தவறானது.ஊழலில் உலகச்சாதனை பண்ணியவர்கள் அ.தி.மு.க வினராக இருக்கலாம்.அதற்காக அவர்களுக்கு அடுத்தவர் ஊழலைப்பற்றி புகார் சொல்ல தகுதியில்லையா என்ன?.இன்றைய இந்தியாவில் அடுத்தவர் மீது குற்றம் சாட்டும் ஒருவர் அப்பழுக்கில்லாமல் இருக்கவேண்டும் என்றால் யாரும் யார் மீதும் குற்றம் சாட்ட முடியாது ( மகாத்மா காந்தி உட்பட).

சிறிது காலம் முன்புவரை பாமரர்களின் கட்சியாக மட்டுமே இருந்த அ.தி.மு.க பல விதங்களிலும் வளர்ந்து வருகிறது.அங்கங்கே சில அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவதும் தெரிகிறது.தி.மு.க வை ஒப்பிடும்போது இந்த மாதிரி விஷயங்களில் பின்தங்கி இருந்த அ.தி.மு.க இப்பொது நன்றாகவே முன்னேறியிருப்பது தெரிகிறது.இப்போது அவர்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகளான செபி விதிமுறை மீறல்,ரேபோ வங்கியிடம் கடன் வாங்கியுள்ள விவகாரம், ஐ.டி.பி.ஐ செக்யூரிட்டி விதியை தளர்த்திய விவகாரம் ஆகியவை மிகவும் தீவிரமானவை. நிதி அமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.

திரு.சிதம்பரம் புத்திசாலி என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மை.ஆனால் நேர்மையானவரா என்பதற்காக பதிலை ஒரு சாதாரண குடிமகன் எதிர்பார்க்கிறான்.(அப்பாடா, எப்படியோ என் தத்துவத்திற்கும் இந்த விஷயத்திற்கும் முடிச்சு போட்டாச்சு)

8 comments:

துளசி கோபால் said...

முத்து,

நேர்மையில்லாத புத்திசாலி தான் ரொம்பவே ஆபத்தானவர்.

நல்ல பதிவு. எல்லாரும் இன்னும் பதிலைச் சொல்லலபோல.

Muthu said...

Thank You Thulasi.

சந்திப்பு said...

மத்திய அமைச்சர் சிதம்பரம் குடும்பத்தினர் ஹர்சத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் குற்றச்சாட்டின் போதே, பேர் குரோத் பங்கு விவகாரத்தில் இவர்களது பெயர் அடிபட்டது. அப்போது இத்தகைய பங்குகள் தனது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டதாக கூறி சமாளித்தார் சிதம்பரம். இவரைப் பொருத்தவரை ஒரு அரசியல் வியாபாரி - இவரது குடும்பம் பணத்திற்காக எதையும் செய்வார்கள். சிதம்பரத்தின் மனைவி தமிழுக்காக எப்படி வாதாடினார் என்பது பற்றியெல்லாம் சந்தி சிரித்ததே! இவர்கள் தேசத்தை (பொதுத்துறைகளை விற்பது...) அடமானம் வைத்துக்கூட தன்னுடைய மந்திரி பதவியையும், தனது ஏகாதிபத்திய விசுவாசத்தையும் வெளிக்காட்டுவதில் சிதம்பரத்திற்கு வல்லவர் சிதம்பரமே!

Muthu said...

//இன்னும் கொஞ்ச நாள்ல கார்த்திக் அதிகம் பேசபடுவான்னு வாத்தியார் பெருமையா(!) சொன்னாரே, அது இதுவாத்தான் இருக்குமோ? :lol: :))//

எனக்கு புரியலையே....யார் கார்த்திக் ...யார் வாத்தியார்? விளக்கமாக சொல்லுங்களேன்.

//ஆனாலும் இதுபத்தி யாருமே (இந்தப் பதிவு நீங்கலாக வலைப்பதிவாளர்கள் உள்பட) வாயைத் திறக்காம இருக்கறது ஏன்னு புரியலை//

சர்த்தான்பா

பூனைக்குட்டி said...

முத்து புரியலையா, கார்த்திக் ப.சிதம்பரத்தின் மகன், இந்த சிக்கலுக்குச் சொந்தக்காரர். இது தெரியவில்லையென்றால் பரவாயில்லை.

வாத்தியார் யாருன்னு கேட்டீங்க பாருங்க. அது பெரிய தப்பு. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இது அடுக்காது. தமிழ் வலைப்பதிவுகளில் வாத்தியார் என்ற சொல் சுஜாதாவைக்குறிப்பது.

என்னவோப்போங்க??? இனியாவது தெரிந்து கொள்ளுங்கள்.

Muthu said...

பாருங்க மோகன்தாஸ் மாதிரி சில பேர் இருக்கறதனால தான் நானல்லாம் பல விஷயங்கள் தெரிந்துக்கொள்ளமுடிகிறது.

நான் வலைப்பதிவுக்கு புதிசு பாருங்க(ஒண்ணரை மாதங்கள்)....அதான் வாத்தியார் என்ற கான்செப்ட் எல்லாம் தெரியலை....

பட்..கார்த்திக் சிதம்பரம் தெரியும்...அவரை வாத்தியார் ஏன் பாராட்டினார்? என்ன கான்டெக்ஸ்ட்? அந்த வெப்சைட் துவக்கவிழாவில ஏதாவது ஜல்லியடித்தாரா?

டிபிஆர்.ஜோசப் said...

எல்லா அரசியல்வாதிகளுக்கும் தாட்சர் உட்பட அவர்களுடைய வாரிசுகள்தான் முதல் வில்லன்கள்.ஏன் கோஃபி அன்னனுக்கே அவருடைய மகன் சவாலாக அமைந்திருகிறார். அப்புறம் நம்ம ந.ராவிலிருந்து லேட்டஸ்ட காஷுவாலிட்டி நட்வர் வரைக்கும் அதான நடக்குது. இதுல ப.சி மட்டும் விதிவிலக்கா என்ன? ப.சி மாதிரி இல்லைங்க கார்த்திக். அவர் பயங்கரமான ஆளு. அம்மா கட்சி சொல்ற அளவுக்கு இல்லன்னாலும் ஏதோ இருக்கு. பத்துல ஒன்னிலாவது ப.சி மாட்டிப்பாருன்னுதான் தோனுது.

Muthu said...

ஜோசப் சார், நீங்க சொல்றது சரிதான்...ஆனா யாருமே இதை பத்தி பேசறதில்லை சார்...இந்தியன் எக்ஸ்பிரஸ் சேகர் குப்தால்லாம் கூட அமைதியா இருக்கிறகு நமக்கு நெருடலா இருக்கு