Tuesday, December 13, 2005

சொக்க தங்கம் சோ பாகம் -3(இறுதி)

மற்ற இரண்டு பதிவுகளையும் இங்கே படிங்க....

பதிவு -1

பதிவு -2


அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?

கலைஞரும் அன்பழகனும் அல்லது கலைஞரும் துரைமுருகனும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு படத்தை போட்டு..."இந்த பி.ஜே.பி எம்.பிக்கள் நம்ம கிட்டே வந்திருந்தா எப்படி மாட்டிக்காம விஞ்ஞான ரீதியாக லஞ்ச ஊழல் செய்யறதுன்னு சொல்லி கொடுத்திருப்போம்" என்று கலைஞர் சொல்வதுபோல கார்ட்டூன் போடுவார்.

இப்ப என்ன ஆச்சு? ஒரே கல்லுல பல மாங்காய். லஞ்சத்தை எதிர்த்துவிட்டாராம்.(நேர்மையானவரில்லையா). பிஜே.பியை தாக்கிட்டாராம்.(அப்படி நேர்மையா இருக்கும்போது யாரை வேணாலும் எதிர்ப்பாராம்)அப்படியே தனக்கும் மற்ற பலருக்கும் தடவிக்கொடுத்த(சரியான வார்த்தையான்னு தெரியலை) மாதிரியும் ஆச்சு இல்லையா...

சரி.எல்லாத்தையும் விடுங்க ...செத்துப்போன சங்கரராமனை பிளாக்மெயிலர் என்றார் இவர். பிளாக்மெயில் செய்து சங்கரராமன் சேர்த்த கோடி ரூபாய் சொத்து எங்கே என்று சொல்வாரா?

இனி திரு.சோ ராமசாமி யாரும் புகழ்ந்து எழுதவோ பேசவோ வருவதற்கு முன்பு இதை மற்றும் இதன் பின்னூட்டங்கள் ஆகியவற்றை படித்துவிட்டு பிறகு எழுதலாமா என்ற மனசாட்சியை தொட்டு கேட்டுவிட்டு அப்படியே எழுதினாலும் இதற்கெல்லாம் இந்த குற்றசாட்டுக்கெல்லாம் பதில் சொல்ல முயற்சி செய்யலாமே...(இது சிந்தனை தளத்தை உயர்த்திக்கொள்ளவும் பயன்படும்)


இதுப்போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்.மூத்தவர் என்ற வகையில் அவர் மீது நம் அனைவருக்கும் மரியாதை உண்டு. நானும் சிறுவயதி்ல் துக்ளக் பத்திரிக்கையை ரெகுலராக படித்து வந்தவன் தான். ஆனால் என் தந்தை அடிக்கடி சொல்வார்.உனக்கு எப்படா சொந்த புத்தி வரும் என்று. சொந்த புத்தி வந்தது. துக்ளக் ரெகுலராக படிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.


திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பிராமணர் , பிராமணீயம் இந்த இரண்டை பற்றியும் கருணாநிதியும் சோவும் நிறைய விவாதித்திருக்கிறார்கள். "சோ" த்தனம் என்றால் என்ன என்ற குழப்பத்தில் இருப்பவர்கள் இதுப்பற்றி சோ கூறிய கருத்துக்களை ஊன்றி படிக்கவேண்டும்.

மேலும் கைபர் , போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்ற கருத்தே பொய் என்று உரத்து கூறும் சிலர் மனதிற்குள் உண்மையிலேயே தாங்கள் அப்படித்தான் வந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமானது. யார் தமிழர்கள் என்று BAPTISE செய்யும் தகுதி இங்கு யாருக்கும் கிடையாது. அப்படி BAPTISE செய்யும் தகுதி தனக்கு இருப்பதாக கூறுபவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல.வடிகட்டின அயோக்கியர்களும் கூட.இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.தம்மை தமிழராக உணர யாருக்கும் உரிமை உண்டு. யாரோ லைசென்ஸ் கொடுக்கவேண்டும் என்று யாரும் நினைக்க தேவையில்லை.

தமிழ் சமுதாயத்திற்கு பிராமண சமூகத்தின் பங்கு கணிசமானது. அப்படி இருக்கும்போது யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு அதை மறைப்பதற்காகவே "தேசியம்" பேசுவது தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ஆகவே நண்பர்களே, திரு.சோ அவர்கள் நிஜமாகவே போற்றுதலுக்குரிய பல்கலை வித்தகர் என்பது உங்களுக்கு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நினைவில் நின்றவைகளை மட்டும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதலாம் நிறைய அவரைப்பற்றி.தேவைபட்டால் எழுதுவேன்.

பொறுமையாக படித்ததற்கு நன்றி.

முற்றும்

66 comments:

Anonymous said...

//மேலும் கைபர் , போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்ற கருத்தே பொய் என்று உரத்து கூறும் சிலர் மனதிற்குள் உண்மையிலேயே தாங்கள் அப்படித்தான் வந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமானது. யார் தமிழர்கள் என்று BAPTISE செய்யும் தகுதி இங்கு யாருக்கும் கிடையாது. அப்படி BAPTISE செய்யும் தகுதி தனக்கு இருப்பதாக கூறுபவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல.வடிகட்டின அயோக்கியர்களும் கூட.இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.தம்மை தமிழராக உணர யாருக்கும் உரிமை உண்டு. யாரோ லைசென்ஸ் கொடுக்கவேண்டும் என்று யாரும் நினைக்க தேவையில்லை.

தமிழ் சமுதாயத்திற்கு பிராமண சமூகத்தின் பங்கு கணிசமானது. அப்படி இருக்கும்போது யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு அதை மறைப்பதற்காகவே "தேசியம்" பேசுவது தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.//

Anonymous said...

இதை (மேலே சொன்ன உங்களுடைய மேற்கோளை) மிகச் சரியான, பொருத்தமான கருத்தாகப் பார்க்கிறேன். நீங்கள் 'சோ' பிஜேபியைக் கண்டிக்க (கிண்டலடிக்க) பயன்படுத்திய உதாரணத்தை கொடுத்து அதன் மூலம் அவரது 'சோ' உத்தியை விளங்க வைத்தமைக்கு நன்றி.

பினாத்தல் சுரேஷ் said...

கருத்துக்களில் முழுமையாக ஒத்துப்போகாவிட்டாலும், நீங்கள் கூறிய விதம் சிந்திக்கத் தூண்டுவதாய் அமைந்தது. குறிப்பாக, உங்கள் உதாரணம் (கார்ட்டூன்) அடுத்த வார அட்டைப்படமாக வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாப் பிரபலங்களையும் (ஏன் வலைப்பதிவர்களையும் கூடத்தான்) ஜாதியோடே அடையாளப்படுத்தும் வழக்கம் ஒழிந்தால்தான் சோவிற்குக் கிடைக்கும் அளவு மீறிய அங்கீகாரமும் சரி, அளவு மீறிய எதிர்ப்பும் அடங்கும்.

Muthu said...

மிக்க நன்றி சுரேஷ் மிக்க நன்றி...

கருத்துக்களில் வேறுபாடு இருப்பது சகஜம். . . என் சாதி என்பதால் எதை வேண்டுமானாலும் நான் நியாயப்படுத்த முடியுமா? சாதியை எதற்கெடுத்தாலும் இழுப்பது சிலருக்கு வீக்னெஸ். உண்மைதான். சிலர் அதையே தன் பாஸிடிவ் பாயிண்டாக முன்னிலைபடுத்தும் போது அதையும் எதிர்க்கவேண்டி இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. என்னுடைய மூன்றாவது சிறுகதையை பற்றி நீங்கள் இன்னும் கருத்து சொல்லவில்லை....

Muthu said...

thanks thangamani...

sorry anony...i cannot agree with all your comments...

Mookku Sundar said...

முத்து,

அருமையாக எழுதி உள்ளீர்கள். நன்றி. இந்த அக்கப்போர் விதண்டாவாதங்களில் எல்லாம் சிக்க யோசித்துக் கொண்டுதான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய நறுக்குத் தெறித்தாற்போன்ற, சகல பக்கங்களின் நன்மை தீமைகளையும் அலசுகிற பாங்கு ஜோர்.

ஜாக்கிரதையாக இரும். உங்கள் கம்யூனிட்டி சர்டிஃபிகேட்டையும் நோண்டி, உனக்கென்ன தகுதி என்று கேள்வி கேட்க, முக்காடு கூட்டங்கள் பாய்ந்து வரும். இந்தக் கூட்டங்களுக்கு தெரியாது, தன் சாதியை மறுத்தவன்தான், சாதி தாண்டியும் யோசிக்க முடியும் என்பதை.

Anonymous said...

//மேலும் கைபர் , போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்ற கருத்தே பொய் என்று உரத்து கூறும் சிலர் மனதிற்குள் உண்மையிலேயே தாங்கள் அப்படித்தான் வந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமானது. யார் தமிழர்கள் என்று BAPTISE செய்யும் தகுதி இங்கு யாருக்கும் கிடையாது. அப்படி BAPTISE செய்யும் தகுதி தனக்கு இருப்பதாக கூறுபவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல.வடிகட்டின அயோக்கியர்களும் கூட.இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.தம்மை தமிழராக உணர யாருக்கும் உரிமை உண்டு. யாரோ லைசென்ஸ் கொடுக்கவேண்டும் என்று யாரும் நினைக்க தேவையில்லை.

தமிழ் சமுதாயத்திற்கு பிராமண சமூகத்தின் பங்கு கணிசமானது. அப்படி இருக்கும்போது யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு அதை மறைப்பதற்காகவே "தேசியம்" பேசுவது தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.//

yes you are right. I strongly beleive bhramin contribution is more important for us.

But unfortunatley some still againt 'tamil' identity. i beleive only reason they hate 'dravidan movement'. so they insult the word 'tamil'.

it makes others to hate them

Out side tamil nadu bharmins are the identity of 'tamils' than others. really i have seen many bhramins. they are like others.(only in tamil nadu few are doing these silly things)

குழலி / Kuzhali said...

//கலைஞரும் அன்பழகனும் அல்லது கலைஞரும் துரைமுருகனும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு படத்தை போட்டு..."இந்த பி.ஜே.பி எம்.பிக்கள் நம்ம கிட்டே வந்திருந்தா எப்படி மாட்டிக்காம விஞ்ஞான ரீதியாக லஞ்ச ஊழல் செய்யறதுன்னு சொல்லி கொடுத்திருப்போம்" என்று கலைஞர் சொல்வதுபோல கார்ட்டூன் போடுவார்.
//
ம்... இதைவிட அருமையாக 'சோ' உத்தியை சொல்வது கடினம்...

டிபிஆர்.ஜோசப் said...

முத்து! நீங்க நம்மாளுங்கறதுனால இந்த பதிவ படிச்சேன்.

ஆனா நோ கமெண்ட்ஸ்!!

dondu(#11168674346665545885) said...

"இதுப்போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்."
என்ன உளறல் ஐயா? நான் அவ்வாறு கூறியதை நிரூபிக்க முடியுமா? அவரைப் பற்றி மூன்று பதிவுகள் போட்டுள்ளேன். பல பதிவுகளிலும் பின்னூட்டமும் இட்டுள்ளேன். நான் கூறாத ஒன்றை கூறியதாகக் கூறுவது உங்களுக்கு அழகில்லை.

"திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."
அதாவது நீங்கள் சோவை எதிர்ப்பதால் உங்களை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று கூறக்கூடாது அப்படித்தானே? ஆனால் என்னைப் போன்றவர்கள் சோவை ஆதரிப்பது மட்டும் எங்கள் பார்ப்பன ஆதரவைக் குறிப்பிடும் என்று நீங்கள் கூறுவதை என்னவென்று கூறுவது? அதற்கு மற்றவர்கள் போடும் பின்னூட்ட ஜிஞ்சாக்கள் காதைத் துளைக்கின்றன.

"அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?"
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் லஞ்சம் வாங்குவதை விஞ்ஞான பூர்வமாகச் செய்தவர்கள் திமுகவினரே. அந்த நிகழ்ச்சிகள் நடக்கும்போது அவற்றைப் பற்றிப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்தவன் நான்.

அதே சோ 1975-ஜூன் மாதத்தில் எழுதியதைப் பற்றி நான் என் பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளேன். "வருடம் 1975. நெருக்கடி நிலை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது தமிழக அரசை எதிர்த்து எழுதுவது ஊக்குவிக்கப்பட்டது. தன்னுடையப் பதவிக்காக நாட்டின் எதிர்க்காலத்தையே அடகு வைக்கத் துணிந்த ஒரு சர்வாதிகார மனப்பான்மை கொண்ட பிரதம மந்திரி அப்போது கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். தமிழகப் பத்திரிகைகள் சகட்டுமேனிக்கு தி.மு.க. அரசை எதிர்த்து எழுதி வந்தன.

கௌரவர் சபையில் அனைத்துப் பெரியவர்களும் பயத்தாலோ அல்லது வேறு எந்தக் காரணத்தாலோ வாய்ப் பொத்தி அமர்ந்திருக்க, வீறு கொண்டெழுந்தான் விகர்ணன். அது மஹபாரதத்தில் ஒரு அருமையான இடம். அதற்குச் சற்றும் குறைந்திராத அளவில் வீறு கொண்டு எழுந்தது துக்ளக்.

ஜூன் 25, 1975 தேதிக்கு முன்னால் வந்த துக்ளக்கில் அதன் ஆசிரியர் சோ ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி எப்போது மத்திய அரசை எதிர்த்து எழுதச் சுதந்திரம் இல்லையோ தான் மானில அரசையும் எதிர்த்து ஒன்றும் எழுதப் போவதில்லை என்றுத் திட்டவட்டமாக அறிவித்தார் அவர். இத்தனைக்கும் அவருக்கு எதிராக தி.மு.க. அரசு பல அடாவடி நடவடிக்கை எடுத்து வந்திருந்தது. ஆனாலும் கீழே வீழ்த்தப்பட்டவரை அவர் எப்போதுமே மேலே தாக்கியதில்லை. அதற்கும் மேல் 1976-ல் தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டப் போது அவர் நேரடியாகக் கருணாநிதி அவர்கள் இல்லத்திற்குச் சென்று அவரிடம் தன் தார்மிக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது யாருமே கருணாநிதி அவர்கள் அருகில் செல்லத் துணியவில்லை."
பார்க்க: http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html
இந்த ஆண்மை எந்த வேறு எவ்வளவு பத்திரிகையாளருக்கு இருக்கிறது?

துக்ளக்கை அதன் முதல் இதழிலிருந்துப் படித்து வருபவன் என்னும் முறையில் திட்டவட்டமாகக் கூறுவேன். அவர் ஒருபோதும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசனம் செய்தது இல்லை. பாராளுமன்ற உறுப்பினராக இருந்துக் கொண்டுத் தனக்களிக்கப்பட்ட ஃப்ண்ட்ஸ்களை பலப் பொதுக்காரியங்களுக்காக நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் செலவழித்து வருகிறார். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் எல்லா தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டுதான் தன் கட்டுரைகளை எழுதுகிறார்.

ஒவ்வொரு பத்திரிகையும் தங்கள் விற்பனையை பெருக்கிக் கொள்ள இலவச பற்பொடி தரும் இக்காலத்தில், கவர்ச்சி, திரை செய்திகள், கிசு கிசுக்கள் இல்லாது இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை போட்டு வருகிறார். அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் பாதியாவது நெர்மையுடன் நடந்து கொண்டாலே பத்திரிகை உலகம் உருப்பட்டுவிடும்.

மற்றப்படி என்னை தமிழன் என்று நிலை நிறுத்திக்கொள்ள எந்த இணையத் தாசில்தாரர்களின் சான்றிதழும் எனக்கு தேவை இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

லஞ்சத்தை விஞ்ஞான பூர்வமாக திமுகவினர் செய்தார்கள் என்று டோண்டு எனும் பார்ப்பன கிழம் சொல்கிறது! சரி உங்கள் வழிக்கே வருகிறேன். அப்போ அதிமுக லஞ்சம் வாங்கவே இல்லைங்களா? திமுகவும் அதிமுகவும் லஞ்சக் குளத்தில் ஊறிய மட்டைகள் என்றல்லவா அது கூறி இருக்க வேண்டும்? இப்போது பாராளு மன்றத்தில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப் பட்டவர்களில் நிறைய பேர் பிராமின்கள் என்பதனை டோண்டு மறுக்கிறாரா? திமுகவினரா பிடிபட்டார்கள்? அதற்கும் விஞ்ஞான பூர்வமாக வாங்கினார்கள் என்று சொன்னாலும் சொல்லும்!!!

Muthu said...

Mr.Dondu

""சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை."
அதாவது நீங்கள் சோவை எதிர்ப்பதால் உங்களை பிராமணர்களுக்கு எதிரானவர் என்று கூறக்கூடாது அப்படித்தானே? ""

இது என்னமாதிரி ஆர்க்யூமெண்ட் என்று எனக்கு புரியவில்லை..தெரிந்தவர்கள் விளக்குங்கள்....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிறீர்களே அண்ணா?
(இது போலி டோண்டுவா இல்லை ஒரிஜினலா?)

dondu(#11168674346665545885) said...

"இது என்னமாதிரி ஆர்க்யூமெண்ட் என்று எனக்கு புரியவில்லை.."
இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது?
"அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்"
என்று நீங்கள் நான் கூறாததைக் கூறியதைத்தான் குறிப்பிட்டேன்.
அதை நிரூபிக்கச் சொல்லியும் கேட்டேன். அதை ஒதுக்கி விட்டீர்கள். ஏனெனில் அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

"(இது போலி டோண்டுவா இல்லை ஒரிஜினலா?)"
அதற்குத்தான் எலிக்குட்டி சோதனையெல்லாம் இருக்கிறதே. பார்த்துக் கொள்ளுங்கள். என தனிப்பட்டப் பதிவையும் பாருங்கள். இப்பின்னூட்டமும் அதில் நகலிடப்படும் அதையும் பார்த்துக்கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

dondu அண்ணா, உங்களுக்கு புரிவது கடினம்..படிக்கிற மத்த ஆளுங்க புரிஞ்சுக்குவாங்க...உங்க பதிவுகளோட திரண்ட கருத்து அதுதான்...போதுமா...

மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க..

சந்திப்பு said...

சார், நான் துக்ளக்யை தொடுவதே இல்லை.

மிகப் பெரிய பதிவு. சோவின் (மனக் கண்ணை) அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.

மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

Muthu said...

நன்றி டி.ராஜ்.. நீங்கள் கேக்கற கேள்விக்கெல்லாம் அவர் பதில் நேரடியாக சொல்லாம ஏதாவது சுத்தி சொல்வார்..அதுதான் அவரின் உத்தி......


நன்றி மூக்கு சுந்தர்,

ரொம்ப புகழ்றீங்க....

நானும் ஒதுங்கித்தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.என்ன பண்றது? விதி...

யாரையாவது DEFEND பண்ணாதான சங்கடம்.தப்பை தப்புன்னு சொல்றதுக்கு என்ன பயம்?

சாதி பற்றி பேசினால் ......
பதிவு போடும்போது நான் அப்படி நினைக்கவில்லை..ஆனால் சிலர் ஆவேசமாக பாய்ந்து வரும்போது பயமாகத்தான் இருக்கிறது...பாய்ந்து வந்தாலும் பரவாயில்லை...காலி கிரவுண்ட்ல வாளை சுழற்றாங்க..

பேசாம நானும் பிராமணர்தான்னு ஒரு போடு போடட்டுமா...அது பொய்யாகிவிடும்.

தமிழ் தாத்தா வ.வே.சு எனக்கு பிடிக்கும். முண்டாசு கவி பாரதி எனக்கு பிடிக்கும். என் ஆதர்ஷ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி (அவர் பாதிப்பு என்னிடத்தில் நிறைய உண்டு) இவர்களெல்லாம் யார்?

விஸ்வநாதன் ஆனந்த, எம்.எஸ்.சுப்புலெட்சுமி, எத்தனையோ கடமை தவறாத நீதிபதிகள் மற்றும் பலர் எனக்கு பிடித்தவர்களே..இந்த எந்த சாதிக்கும் எதிரானது என்று யாராவது சொன்னால் அது திரிக்கும் வேலை. சொல்பவர்களுக்கும் அது தெரியும்.


நான் அதை பற்றி கவலைப்படபோவதில்லை..கவலைபடற மாதிரி இருந்தால் வலைப்பதிவுக்கே வந்திருக்க மாட்டேன்...இன்னொரு அட்வான்டேஜ் என்னன்னா
பொதுவுல இருந்து படிக்கிறவங்க சிந்திக்க இது உதவும்.

Muthu said...

Mr.Anto

i fully agree with your views...



Thank You Kuzhali

People were desperately looking for the definition for "choism" or "chothanam". so i helped them out
nothing more. Thank you for visit kuzhali.

டிபிஆர்.ஜோசப் said...

முத்து இந்த மாதிரி பதிவுகள் உங்களுக்கு வேணாம்னு நினைக்கிறேன்.

இத மாதிரி எழுதறதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க எழுதட்டும். உங்களுக்கு இது வேணாம். ப்ளீஸ்.


உங்களுக்கு கதை எழுதறதுக்கு ரொம்ப நல்லா வருது. அதையே செய்ங்க.

இரண்டாவது பதிவும், இந்த பதிவும் அதுல நீங்க டோண்டுவ பத்தி எழுதறதும் அதுக்கு அவர் பதில் சொல்றதும் நீங்க மறுபடியும் அவரை பத்தி எழுதறதும்.. நல்லால்லை முத்து.

Please do not demean yourself. Your earlier writings and short stories had a class of its own. Don't bring down the standards.

Anonymous said...

முத்து,

நீங்க அடிச்சு ஆடுங்க. அவங்க மனசுல நினைப்பதை அவங்க எழுதறாங்க. நீங்க நினைப்பதை நீங்க எழுதறீங்க. இதுல ஒரு தப்பும் இருக்குறதா எனக்கு தெரியலை... பின்னுங்க நீங்க.

Anonymous said...

எம்.எஸ்.சுப்புலெட்சுமி ??

Muthu said...

அண்ணன் டோண்டுவுக்கு,

உங்க பதிவுல இருந்து கட் காபி பேஸ்ட் பண்ணி ஒரு பெரிய பத்தியை போட்டுள்ளீர்கள். சக்காரியா கமிஷனிலேயே கலைஞர் கோவணம் உருவனதுக்கு சாட்சி இருக்குன்னு நான்தான் ஒத்துகிட்டனே....கலைஞரை defend செய்ய வேண்டியது என் வேலை இல்லை....நான் சொன்னது "சோ"த்தனம் பற்றித்தான்.

உடனே பின்னூட்டம் இடறேன்னு சொல்லிட்டு ஏதாவது சொல்லாதீங்க...நாளைக்கு கூட சொல்லலாம்.


"மற்றப்படி என்னை தமிழன் என்று நிலை நிறுத்திக்கொள்ள எந்த இணையத் தாசில்தாரர்களின் சான்றிதழும் எனக்கு தேவை இல்லை."

நாம் இதி்ல் ஒத்துப்போனது குறித்து எனக்கு மிகுந்த சந்தோஷம்.

Muthu said...

ஜோசப் சார்,

உங்களை வருத்தப்பட வைத்ததற்காக என்னை மன்னியுங்கள். சோவை பற்றி பதிவு மட்டுமல்ல..வலைப்பதிவையே ஒரு வாரத்திற்கு விட்டுவிடலாம் என்று இருக்கிறேன்.

நடுராத்திரி கனவில சோ வந்து தலையை தடவிட்டு சிரிக்கிறார் போல கனா சார்...பொண்டாட்டி பிள்ளை எல்லாம் கிண்டல் பண்ணுதுங்க....

அவரை பல்கலை வித்தகர் என்று பார்த்துவுடன் சற்று உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.அதான்.

ஒரு குறிப்பிட்ட பத்தியையும் எடுத்துவிட்டேன்.நன்றி.

ramachandranusha(உஷா) said...

முத்து, நம்ப ஆளுங்க பிரச்சனை ஒண்ணே ஒன்ணுதான். தலைவர்களை, தலைமைகளை, குருக்களை, குருபீடங்களை ஓஹோ வென்று பொதுவில் புகழ்ந்தால் பிரச்சனை வரத்தான் செய்யும். தலைவரோ குருவோ உண்மையில் அவர்கள் மேல் பக்தியும் பிரேமையும் இருந்தால் மனதில் வைத்து ஆராதியுங்கள். பொதுவில் புளங்கித்து மெய்சிலிர்த்தால் சிலர் கூட்டு சேருவார்கள்
பலர் தூற்றுவார்கள், சிலர் நடுவில் நியாயம் பேசுவார்கள். சிலர் படித்துவிட்டு சிரித்துவிட்டு போவார்கள், எதற்கு வம்பென்று :-)

முத்துகுமரன் said...

நல்ல பதிவு.

வாழ்த்துகள் உங்களுக்கு, நன்றிகள் அருணுக்கு.....

நானும் துக்ளக் வாசிச்சிருக்கேன். உங்களுக்கு வந்த மாதிரி சுயபுத்தி வந்த பிறகு விட்டுட்டேன்.

ஒரு விசயம் மட்டும் புரியலை...

சோ வகையறாக்கள் செஞ்சா அது சாணக்கியத்தனம். புத்திசாலித்தானம் இன்னும் நிறைய தனங்கள்
அதை மத்தவங்க செஞ்சா அது சந்தர்ப்ப வாதம்

வாழ்க தமிழ்
வாழ்க தமிழ்நாடு......

Anonymous said...

Joesph sir

what happend to you? why you are asking him to stop. he is not writing erotic stories.

Every one has a social resposibility. you have to kill a poisonas snake if it comes to bite you /others.

let them do / some others will do is selfishness.

Plese do some thing for the society.(not only writing stories).

Your have to tell a truth if it help soceity.

Dear Muthu go ahead. very nice.

Please don't mind.

ஈழநாதன்(Eelanathan) said...

நன்றாகச் சொன்னீர்கள் டோண்டு
அதென்னது மற்றவர்களும் ஜிஞ்சா அடிக்கிறார்களா.உங்களுக்குச் சார்பான பதிவுகளில் போய் நீங்கள் அடிக்கும் ஜால்ராக்களை விடவா இந்த ஜிஞ்சாக்கள் பெரிது?

SnackDragon said...

தங்கமணியின் பதிவிலிருந்து இந்த இணைப்பு கிடைத்து. உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் இது.
http://thatstamil.indiainfo.com/specials/art-culture/essays/mahadevan.html
நீங்கள் எழுத நினைப்பதை எழுதவேண்டும் என்பது தாழ்மையான கருத்து. இது எல்லோருக்கும் பொருந்தும்.

சோ வைப்பற்றி , தங்கமணி, நீங்கள் , மன்னை மாதேவன் என ஏற்கனவே நிறைய எழுதப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஏதாவது எழுதலாம் எனறால் இதற்கு மேலும் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவசியம் இருந்தால் மட்டும் எதாவது எழுதுகிறேன். பதிவுகளுக்கு நன்றி.

Anonymous said...

//முத்து இந்த மாதிரி பதிவுகள் உங்களுக்கு வேணாம்னு நினைக்கிறேன்.//


I would like the tell the famous words during nazi regime 'when they targeted jews i kept quite, because i am not jew..........'

Either novelist or else every one should social aware one. (Angels won't come to serve/save you).

another one comment i have seen about 'dravindan parties'/'caste'& 'religious' parties spoiling TN.(I don't know who removed that comment now???)

So only congress can save ??????(because communist is also a வர்க்க party!!!!!)

This is 'Chothanam'

Dear Muthu i like your article and social resposibilites. you are a versitile person like 'Tamil sasi'..

keep writing all.(this is your duty too)

இளங்கோ-டிசே said...

முத்து, இப்போதுதான் இதை வாசிக்கமுடிந்தது. தங்கமணி முதல் பின்னூட்டதில் கோடிட்ட உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளன என்பதையே நானும் குறிப்பிடவிரும்புகின்றேன். நீங்கள் சுயபுத்தி வந்தவுடன் துக்ளக் வாசிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான், பெரியாரின் தேவை இன்னும் ஆழமாய் எப்படி தமிழ்ச் சமூகத்திற்கு தேவை என்பதற்காய் துக்ளக் இதழ்கள் கிடைக்கும்போது வாசித்து 'தெளிந்துகொள்வேன்' :-).

Anonymous said...

//அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்.
//
Muthu Sir,
Is this not applicable for persons who blindly support Dr. Aiya ?

b said...

அன்பின் முத்து,

சொல்ல வந்ததை மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். 'அந்த' ஜாதி வெறிக் கூட்டத்திற்கு நல்லதொரு பதிலாகத் தந்தீர்கள் எனலாம். உங்களுக்குப் பதில் அளித்தால் ஜிஞ்சா என்பனர். ஆனால் அங்கே அருணின் பதிவுக்கு பதில் அளித்தவர்களில் 99.999%சதம் பேர் அவாக்கள்! அதற்குப் பெயர் என்னவாம்?

இடையிடையே நகைச்சுவையை புகுத்திய உங்களின் பாங்கு அருமை. ஜோசப் சார் சொல்வது போல பதிவுகளை நிறுத்த வேண்டாம். அவர் ஏன் அந்த ஜாதிவெறி பிடித்த மிருகத்திற்கு பயப்படுகிறார் என்பது புரியவில்லை.

Muthu said...

"முத்து, நம்ப ஆளுங்க பிரச்சனை ஒண்ணே ஒன்ணுதான். தலைவர்களை, தலைமைகளை, குருக்களை, குருபீடங்களை ஓஹோ வென்று பொதுவில் புகழ்ந்தால் பிரச்சனை வரத்தான் செய்யும். தலைவரோ குருவோ உண்மையில் அவர்கள் மேல் பக்தியும் பிரேமையும் இருந்தால் மனதில் வைத்து ஆராதியுங்கள். பொதுவில் புளங்கித்து மெய்சிலிர்த்தால் சிலர் கூட்டு சேருவார்கள்
பலர் தூற்றுவார்கள், சிலர் நடுவில் நியாயம் பேசுவார்கள். சிலர் படித்துவிட்டு சிரித்துவிட்டு போவார்கள், எதற்கு வம்பென்று :-) "

உஷா நன்றி,

(உள்குத்து ஒண்ணும் இல்லையே...)

குருபீடங்களை பற்றிய உங்கள் கருத்து சரிதான். சுந்தர ராமசாமி சொன்ன மாதிரி சொக்க தங்கங்களை லேசாக சுரண்டி பார்த்தால் என்ன கோபம் வருகிறது?எனக்கு இது எக்ஸ்பீரியன்ஸ்..

நன்றி முத்துக்குமரன்,

தமிழ் , தமிழ்நாடு சொல்றது எல்லாம் இப்ப கெட்ட வார்த்தை மாதிரி ஆயிடுச்சு. ஜெய்ஹிந்த சொல்லுங்க...

Muthu said...

"Joesph sir
what happend to you? why you are asking him to stop. he is not writing erotic stories. "



நன்றி ஜார்ஜ் ,

ஜோசப் சார் என் மேல் அக்கறை உள்ளவர். என்னுடைய மற்ற பதிவுகளில் இல்லாத ஒரு காட்டம் இதில் உள்ளது என்று அவர் கூறுவதாகவே நான் எடுத்துக்கொள்கிறேன்.
மற்றபடி யாருக்கும் அவர் பயப்படுபவர் கிடையாது.

சில நேரங்களில் சொல்ல வருகிற கருத்தை பொறுத்து காட்டம் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் குறைக்க முயற்சிக்கிறேன். பாராட்டிற்கு நன்றி ஜார்ஜ். அனைவருக்கும் சமுதாய கடமை உள்ளது.இது உண்மை.

Muthu said...

"முத்து, இப்போதுதான் இதை வாசிக்கமுடிந்தது. தங்கமணி முதல் பின்னூட்டதில் கோடிட்ட உங்கள் கருத்துக்கள் சிறப்பாக உள்ளன என்பதையே நானும் குறிப்பிடவிரும்புகின்றேன். நீங்கள் சுயபுத்தி வந்தவுடன் துக்ளக் வாசிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நான், பெரியாரின் தேவை இன்னும் ஆழமாய் எப்படி தமிழ்ச் சமூகத்திற்கு தேவை என்பதற்காய் துக்ளக் இதழ்கள் கிடைக்கும்போது வாசித்து 'தெளிந்துகொள்வேன்' :-). "

நன்றி டி.செ.தமிழன்

நானும் நீங்க சொன்ன காரணத்திற்காக அப்பப்ப துக்ளக் வாசிப்பதுண்டு.உங்கள் ஆதரவு எனக்கு உற்சாகமூட்டுகிறது.

Muthu said...

"//அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்.
//
Muthu Sir,
Is this not applicable for persons who blindly support Dr. Aiya ? "

அனானி sir,

கண்டிப்பாக இது பா.ம.க விற்கும் பொருந்தும்.இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.

""But I strongly oppose to bracket Bharathi in a cast circle. He is beyond castism.""

நன்றி நம்பி,


நான் யாரையும் சாதி வட்டத்துள் அடைக்கவில்லை...பல திறமையானவர்கள், நல்லவர்களை பிராமண சமூகம் கொடுத்துள்ளது என்றுதான் நானும் கூறியுள்ளேன்.

Muthu said...

நன்றி மூர்த்தி மற்றும் ஈழநாதன்,

ஜிஞ்சா பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை....அருண் பதிவு மிகவும் டீஸண்ட்டாகவே இருந்தது. அதிலும் பிரசன்னா என்று ஒருவர் மிகவும் டீஸண்ட்டாக எழுதி இருந்தார். அனைவரும் கண்டிப்பாக படித்து தெரிந்துக்கொள்ளவும்.

Muthu said...

"சோ வைப்பற்றி , தங்கமணி, நீங்கள் , மன்னை மாதேவன் என ஏற்கனவே நிறைய எழுதப்பட்டிருப்பதாக அறிகிறேன். ஏதாவது எழுதலாம் எனறால் இதற்கு மேலும் ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. அவசியம் இருந்தால் மட்டும் எதாவது எழுதுகிறேன்."


நன்றி கார்த்திக்ராமஸ்,

நான் ஒன்றும் புதிதாக எழுதவில்லை என்பதுதான் உண்மை.நீங்க சொன்ன சுட்டியை படிக்கிறேன்.(font problem).

பல்கலை வித்தகர் அல்லவா? நிறைய எழுதலாம்.ரவி சீனிவாஸ் எழுதுவதாக கூறியிருக்கிறார்.

b said...

//தமிழ் , தமிழ்நாடு சொல்றது எல்லாம் இப்ப கெட்ட வார்த்தை மாதிரி ஆயிடுச்சு. ஜெய்ஹிந்த சொல்லுங்க...//

அய்யா ராசா.. சும்மா துக்ளக் கணக்கா பின்னி பெடல் எடுக்குறீங்க...!!! தமிழ், தமிழர் என்பதெல்லாம் கெட்ட வார்த்தை என்று அவா முன்பே சொல்லிடுத்து. ஜெய்ஹிந்த் சொன்னாதான் தமிழர் என்றும் அவா சொல்லிடுத்து.

பெர்சன்னா என்ற ஜோக்கர் எழுதியதை கண்டிப்பாகப் படிக்கிறேன்.

b said...

பெர்சன்னா எய்துனதை காணும் முத்து. அழிச்சுட்டாய்ங்கெ!

Muthu said...

Dear Moorthi<

it is not in the latest posting of Mr.Arun..see the previous posting...

முத்துகுமரன் said...

கெட்ட வார்த்தையின்னு யார் முடிவு பண்றது? நான் எப்போதும் இதையேதான் சொல்வேன்.? பழமொழி ஒன்னு உண்டு. யோக்கியர் வர்றாரு. செம்ப எடுத்து உள்ள வை....

நான் தமிழன் என்று சொல்வதாலும் தமிழ்நாடு என்று சொல்வதால் என் தேசபக்தி குறித்து எவரேனும் ஐயம் கொள்வார்களானால் அவர் கொடுக்கும் உறுதிப் பத்திரங்கள் எதுவும் எனக்குத் தேவையில்லை என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன்

வானம்பாடி said...

'சோ' பற்றிய முந்தைய இரண்டு பதிவுகளை விட இந்தப் பதிவு 'நச்'.
அவர் 'நல்லவர், வல்லவர், தங்கமானவர்' என்றெல்லாம் 1940களில் சொல்லியிருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள். :)

ஜெ. ராம்கி said...

//முத்து, நம்ப ஆளுங்க பிரச்சனை ஒண்ணே ஒன்ணுதான். தலைவர்களை, தலைமைகளை, குருக்களை, குருபீடங்களை ஓஹோ வென்று பொதுவில் புகழ்ந்தால் பிரச்சனை வரத்தான் செய்யும். தலைவரோ குருவோ உண்மையில் அவர்கள் மேல் பக்தியும் பிரேமையும் இருந்தால் மனதில் வைத்து ஆராதியுங்கள். பொதுவில் புளங்கித்து மெய்சிலிர்த்தால் சிலர் கூட்டு சேருவார்கள்
பலர் தூற்றுவார்கள், சிலர் நடுவில் நியாயம் பேசுவார்கள். சிலர் படித்துவிட்டு சிரித்துவிட்டு போவார்கள், எதற்கு வம்பென்று :-) "

உஷா நன்றி,

I second Usha & Muthu! :-)

Muthu said...

Dear Ramki,

is it right handed or left handed(?)...

this issue apart i like your sportive behaviour(Remember yesterday's exchange between us)

I would like to meet u in chennai if possible..

Unknown said...

சோவிடம் நாம் தமிழுணர்வையோ, முற்போக்கு சிந்தனைகளையோ, பெண் முன்னேற்றக் கருத்துக்களையோ எதிர் பார்க்க முடியாது!
அவாள் அப்படித்தான்!
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியுமா?

குழலி / Kuzhali said...

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் படிச்சி பாருங்க நம்ம 'சோ' நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் வாங்கிபிடிபட்டதற்கு,

அமெரிக்காவிலும் இப்படி இலஞ்சம் வாங்கிபிடிபட்டிருக்கின்றார்கள் ஏன் சொல்றாருனா இது ஏதோ நம்ம நாட்டில மட்டும் தான் இருக்குனு யாரும் நெனக்க கூடாதாம், ஏதோ இப்போதான் நடக்குதுனு யாரும் கவலைப்படவேண்டாம் இதெல்லாம் 30-40 வருடமா நடக்குதாம்


வீடியோ பதிவை பற்றி சொல்லவேண்டுமெனில் யாருவேணுமினாலும் எங்க வேணுமினாலும் போய் கண்காணித்து வீடியோ எடுக்கலாம் என்பதை நிரூபித்துள்ளனர், ஆனால் பொது சனத்தொடர்பாளர்கள் அப்படின்றதால ஆட்சேபத்துக்குறியதல்ல.

இதுதான் அல்ட்டிமேட்

"சமீபகாலமாக பிஜேபி பிரமுகர்கள் ரகசியமாகவோ, நேரடியாகவோ கேமராவை வைத்தால் உச்சகட்ட ஆர்வத்தில் எதையாவது செய்து எசகுபிசகில் சிக்கிவிடுகிறார்கள்"

முத்து நீங்க சொன்ன கேலிச்சித்திரம் அனேகமாக அடுத்த வார துக்ளக்ல வந்துடும் போல இருக்கு.

பிரதீப் said...

இப்போதாங்க ஒரே மூச்சா உங்க மூணு பாகங்களையும் ஒரு தடவை படிச்சு முடிச்சேன். அருமையா எழுதீருக்கீங்க சார்.

எனக்கு சோ மீது மிகுந்த நல்லபிப்பிராயம் இருந்தது. ஆனால் காலப் போக்கில் அது சரிந்து காணாமலே போனது.

இப்போ கட்டக் கடைசியா வந்த துக்ளக்கைத் தெரியாம வாங்க நேர்ந்தது. அதிலயும் அவரு அதிமுக ஆட்சிக்கு நல்லாவே வக்காலத்து வாங்குறாரு. அவரு மட்டும்தான் எம்பி நிதியை நல்லாச் செலவழிக்கிறாரா? எனக்கு திமுக சார்பு இல்லை. கொஞ்ச நாள் முன்பு வரை அதிமுக எதிர்ப்பு இருந்தது. அதுகூட இப்ப இல்லை. எல்லாரும் ஒரே குட்டை மட்டைதாங்கறதுல எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.

எல்லாக் கேள்வி பதிலிலுமே ஒரு உள்ளார்ந்த திமுக எதிர்ப்பு இருக்குது. பாஜக செஞ்ச தப்புக்கெல்லாம் "ஏண்டா செல்லம் இப்படிப் பண்ணின? இனிமே பண்ணப்படாது, சரியா?" அப்படின்னு தட்டிக் குடுக்குறாரு. கட்சி வளர பலப்பல யோசனைகளை அவுத்து வுடுறாரு. இயல்பாவே அதிமுக ஆதரவு தெரியுது. சரி அதெல்லாம் அவரு சொந்த சமாச்சாரம். அதுக்கெல்லாம் ஏன் நடுநிலைமைன்னு பேரு குடுக்குறாங்கன்னுதான் புரியலை.

காசைப் போட்டு வாங்கிக் கேள்வி பதில் படிச்சு முடிச்சு உள்ள வச்சிட்டேன்.

Muthu said...

குழலி,

சோ, அடுத்த வார துக்ளக்கில் இந்த தமாஷ் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்
சோ இந்த பதிவை பார்க்காமல் இருக்கவேண்டும் என்பது தான் என் விருப்பம்.பார்த்தால் உஷாராகி விடுவார்.


நன்றி சுதர்சன் மற்றும் அருட்பெருங்கோ


நன்றி பிரதீப்
"எல்லாக் கேள்வி பதிலிலுமே ஒரு உள்ளார்ந்த திமுக எதிர்ப்பு இருக்குது."

ஆமாம்..அதைத்தான் நான் சொல்ல முயற்சி பண்ணினேன்.

dondu(#11168674346665545885) said...

"dondu அண்ணா, உங்களுக்கு புரிவது கடினம்..படிக்கிற மத்த ஆளுங்க புரிஞ்சுக்குவாங்க...உங்க பதிவுகளோட திரண்ட கருத்து அதுதான்...போதுமா..."
இது சுத்த நழுவல். Dishonest reply. உங்களைச் சேலஞ்ச் செய்கிறேன். சோ பார்ப்பனர் என்பதால்தான் நான் அவரை ஆதரித்தேன் என்பதை என் எழுத்துக்களிலிருந்து காட்டுங்கள் பார்க்கலாம். இப்படித்தான் உங்கள் பேங்க் வேலைகளிலும் இன்ஃபர் செய்வீர்களா?

"மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.."
எவ்வளவு நாளைக்கு? நான் கூறிய மத்ததுகளை மறுபடியும் இங்கே திருப்பிக் கூறுவேன்.
1. நெருக்கடி நிலை வந்தப் போது (சமீபத்தில் 1975-ல்) அவர் தைரியமாக கருணாநிதிக்கு ஆதரவாகப் பேசியது. மற்ற பத்திரிகையாளர்கள் மாநில திமுக அரசுக்கு தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்தப்போது மத்திய அரசை விமசரிக்க உரிமை இல்லாத நிலையில் மாநில அரசையும் விமசரிக்க மாட்டேன் என்று கூறியது.
2. கருணாநிதியின் அரசை சமீபத்தில் 1976-ல் கலைத்தப் போது தைரியமாக அவர் வீட்டுக்குச் சென்று தன் ஆதரவை அவருக்குத் தெரிவித்த ஆண்மையானச் செயல். வேறு எந்தப் பத்திரிகைக்காரரும் அக்காலத்தில் அதை செய்யத் துணியவில்லை. திமுகவினர் பலரே கருணாநிதியை தவிர்த்தனர். அந்த ஆண்மையைப் பற்றிக் கேட்டேன். அதுவும் நீங்கள் பதில் கூறவேண்டிய மற்றதுதான்.
3. மற்றப் பத்திரிகைகள் எல்லாம் கிசு கிசுவெல்லாம் எழுதி அதில் ஜீவிதம் நடத்தும்போது துக்ளக் மட்டுமே தன் தரத்தைக் காப்பாறிக் கொண்டுள்ளது. அது இன்றைக்கும் தொடர்கிறது. இதுவும் நீங்கள் பதில் கூற வேண்டிய "மத்ததைச்" சேர்ந்ததுதான். இதற்கும் உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.
4. கேள்வி கேட்கவே பணம் வாங்கும் எம்.பி.க்களுக்கிடையில் தனக்களிக்கப்பாட்ட நிதியை இவர் நல்லக் காரியங்களுக்கு செலவழித்து பைசா விடாமல் கணக்கு காட்டுவது. எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்கிறார்கள் என்பதையும் கூறுங்கள்.
5. சமீபத்தில் 1975 என்று நான் எழுதும்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும், எல்லாவற்றையும் நானே அக்காலக் கட்டத்திலேயே நேரில் படித்து அறிந்தவன் என்று.
6. என்னமோ பார்ப்பனர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு என்று கூறுகிறீர்களே. வரும் பொங்கலன்று சென்னையில் இருந்தால் துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வாருங்கள், வந்து பாருங்கள். ஒவ்வொரு அரசியல் வியாதியும் லாரி ஏற்பாடு செய்து பிரியாணிப் பொட்டலங்கள் கொடுத்து தங்கள் கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் இக்காலத்தில் அது ஒன்றும் இல்லாமலேயே அவர் கூட்டத்துக்குத் திரளும் ஆட்களைப் பாருங்கள். அதில் எல்லா ஜாதியினரும், மதத்தவரும் இருப்பதைப் பார்க்கலாம். அது வரைக்கும் நான் போட்ட இப்பதிவையும் பார்க்கவும். பார்த்துவிட்டு அதையும் அந்த மத்ததில் சேர்த்து பதில் கூறவும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/01/thuglak-35th-anniversary-meeting-on.html
"சமீபகாலமாக பிஜேபி பிரமுகர்கள் ரகசியமாகவோ, நேரடியாகவோ கேமராவை வைத்தால் உச்சகட்ட ஆர்வத்தில் எதையாவது செய்து எசகுபிசகில் சிக்கிவிடுகிறார்கள்"
இதில் என்ன கேலியோ தெரியவில்லை. தான் சேர்ந்த கட்சியானாலும் அவர் கிண்டல் செய்யாமல் விடுவதில்லை என்பதைத்தான் அது காட்டுகிறது. ஆனால் தன் கட்சித் தலைவரோ, அவர் மகனோ விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்று ஒப்புக்கு கூறிக் கொண்டே அவர்கள் செய்வது எல்லாவற்றையும் சப்பைகட்டும் கொ.ப.செ.க்கள் அதைப் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

சோ தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வதையும் சிலர் விமரிசனம் செய்தனர். நான் கேட்கிறேன் எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தால் ஒருவரால் இவ்வாறு செய்ய முடியும் என்று?

மொத்தமாகக் கூறுகிறேன், அவர் பத்திரிகையை நாகரிகமான முறையில் தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாமல் செய்கிறார் என்பதை உங்களால் மறுக்க இயலுமா?

அதுதானே முக்கியம். மற்றப்படி அவர் கருத்துக்களை ஒப்புக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவுப்படித்தான் நடக்கும்.

வழக்கம்போல இப்பின்னூட்டமும் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

டோண்டு அண்ணா,

நீங்கள் எது முக்கியம் என்று நினைப்பதைவிட நான் கூறிய சில விஷயங்கள் முக்கியம் என்று எனக்கு படுகிறது.

எது நழுவல் என்பது உங்களது எல்லா பதிவுகளையும் கூட்டி கழித்து (இஸ்ரேல் ஆதரவு உள்பட) பார்த்தால் தானாக தெரியும்.

"இப்படித்தான் உங்கள் பேங்க் வேலைகளிலும் இன்ஃபர் செய்வீர்களா? "

இப்படித்தான் பேங்கில் பண்ணியாகவேண்டும். லோன் வாங்க வருபவர் எல்லாம் தான் நல்லவர், வல்லவர் என்பார். ஆனால் விசாரித்தால் தெரிந்துவிடும். ஆனால் அவரிடம் நான் கூறமுடியுமா ...இன்ன காரணத்தால்தான் நான் உனக்கு லோன் தரவில்லை என்று?
(இப்படி இன்ஃபர் செய்யும் உத்தி நன்றாகவே பலனளித்து உள்ளது.குறுகிய காலத்தில் மானேஜர் ஆனேன்.

dondu(#11168674346665545885) said...

"எது நழுவல் என்பது உங்களது எல்லா பதிவுகளையும் கூட்டி கழித்து (இஸ்ரேல் ஆதரவு உள்பட) பார்த்தால் தானாக தெரியும்."
அண்ணாமலையில் வரும் ராதாரவியைப் போலப் பேசுவதால் தப்பிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

இஸ்ரேல் ஆதரவுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? அதுவும் என்னுடைய இஸ்ரேலிய ஆதரவு எனக்கு பூர்வஜன்மத் தொடர்பு போன்றது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன்.

நீங்கள் என்னைப் பற்றிக் கூறியது உங்களது prejudice அவ்வளவுதான். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள் அது பற்றி எனக்குக் கவலையில்லை. அதே போல சோ பார்ப்பனர் என்பதாலேயே நீங்களும் உங்கள் ஆதரவாளர்கள் பலரும் அவரை எதிர்க்கிறீர்கள் என்ற என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.

சோவைப் பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கான பதில் பிறகு வரும் என்று நீங்கள் கூறியதாலேயே ஒரு நாளுக்கு மேல் காத்திருந்து கேட்டேன். இப்போது பார்த்தால் நான் கேட்ட ஒரு பாயிண்டுக்கும் உங்களிடம் பதில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அருண் பதிவில் சோ பல்கலை வித்தகர் என்று எழுதியதை உங்களுக்கு உறுத்தியிருக்கிறது போல. ஒரு பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர், சிறந்த எழுத்தாளர், ஒரு பத்திரிகையை உயர்தரத்திலேயே வெற்றிகரமாக நடத்தி வருபவர், நியமன உறுப்பினராகி தன் பாராளுமன்ற பதவியின் கடமையை ஒழுங்காக நிறைவேற்றுபவர், தன் சுயகாரியத்துக்காக எந்த அரசியல் வியாதியிடமும் கையேந்தாதவர், வக்கீலாகவும் நன்றாக வேலை செய்தவர் என்று இப்படிப் பல திறமைகள் உள்ளவர் பல்கலை வித்தகர் இல்லையென்றால் வேறு யார் அந்தப் பட்டத்துக்குத் தகுதியானவர் என்பதைக் கூற இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

நீங்களே கூட அந்த பட்டத்திற்கு தகுதியானவர்தான் அண்ணா...உங்களுக்கு சந்தேகமா?


அடிப்படையை நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள் முதலில்.நீங்களும் சோ மாதிரியே ஆர்க்யூ செய்தால் எப்படி?

உதாரணம்:மேலே உள்ள குழலி பதிவு....(அமெரிக்காவில உண்டு லஞ்சம் எட்செட்ரா)

சோ வோட பிளஸ்ஸை பற்றி எழுதறததுக்கு நான் எதற்கு தனிப்பதிவு போடறேன்?. நான் சொன்னது அவரோட மைனஸ்.....

பிளஸ்ஸை பத்தி எனக்கு தெரியாது ..நான் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையில தங்கமா இருந்து சமுதாயத்துக்கு நச்சு கலந்தா என்ன பண்ணறது?....

கொலைகாரன் கூட பக்திமான் வேடத்தில் ஏன் சாமியார் வேடத்தில் கூட வரும் காலம் இது.... நேர்மையில்லாத புத்திசாலித்தனம் ஆட்சி செய்யும் நேரம் இது......

நீங்க இப்படித்தான் உங்கள் தொழிலில் ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்வீங்களா?
(உதா) காப்பி கிடைக்குமா என்று ஜெர்மன்காரன் கேட்டால் "பக்கத்தில் இட்லி நல்லா இருக்கும்.இட்லி சாப்பிடு.இட்லி நல்லா இல்லைன்னு சொல்ல உனக்கு என்ன தைரியம்..i challenge you " என்று சொல்வீர்களா?

Muthu said...

"அண்ணன் டோண்டுவுக்கு,

உங்க பதிவுல இருந்து கட் காபி பேஸ்ட் பண்ணி ஒரு பெரிய பத்தியை போட்டுள்ளீர்கள். சக்காரியா கமிஷனிலேயே கலைஞர் கோவணம் உருவனதுக்கு சாட்சி இருக்குன்னு நான்தான் ஒத்துகிட்டனே....கலைஞரை defend செய்ய வேண்டியது என் வேலை இல்லை....நான் சொன்னது "சோ"த்தனம் பற்றித்தான்"


This i have posted yesterday itself..it seems you have not read this yet...please underline last line...
கீறல் விழுந்த ரிகார்டு மாதிரி எனக்கு பதிலு...சேலன்ஜ் என்றெல்லாம் எதுக்கு?

Let us put in readers judgement

Muthu said...

சோ உத்தி பற்றி உங்கள் அரிய பெரிய கருத்தையும் சொல்றது......சின்ன பசங்க தெரிஞ்சுக்குவாங்கள்ள

dondu(#11168674346665545885) said...

அப்படியானால் "மத்ததுக்கும் பதில் உண்டு..வெயிட் பண்ணுங்க.." என்று நீங்கள் கூறியதற்கு என்ன அர்த்தமாம்? நான் கூறிய பாயிண்டுகளில் ஒன்றுக்கு மட்டும் பதில் போட்ட நிலையில் நீங்கள் கூறியது. ஆகவே நான் சோ பற்றி பாஸிடிவாகப் போட்டக் கருத்துகளுக்கு பாயிண்ட் பை பாயிண்ட் பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதைத்தான் நான் எதிர்ப்பார்த்தேன். மொழியறிவு உள்ள எவரும் அவ்வாறுதான் எதிர்ப்பார்ப்பார்கள். அது சரி விடுங்கள். உங்களிடம் பதில் இல்லை என்பதை புரிந்து கொள்கிறேன். உங்களிடம் இல்லாத ஒன்றை கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை.

"நீங்க இப்படித்தான் உங்கள் தொழிலில் ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்வீங்களா?
(உதா) காப்பி கிடைக்குமா என்று ஜெர்மன்காரன் கேட்டால் "பக்கத்தில் இட்லி நல்லா இருக்கும்.இட்லி சாப்பிடு.இட்லி நல்லா இல்லைன்னு சொல்ல உனக்கு என்ன தைரியம்..i challenge you " என்று சொல்வீர்களா?"
நல்ல கேள்வி. இதற்கு பதில் கூறவேண்டும் என்பதற்காகவே நான் சென்ற ஞாயிறன்று இரண்டு பிரெஞ்சுக்காரர்களை காஞ்சீபுரம் அழித்து சென்றதைக் கூறுவேன். நாங்கள் போன கோயில்களிலெல்லாம் செருப்பு விற்றார்கள். ஜோடி 150 ரூபாய் என்று கேட்டார்கள். ஒரு பிரெஞ்சுக்காரர் வாங்குவதற்கு இருந்தார். அவரிடம் வேகமாக நான் பிரெஞ்சில் ஜோடி 40 ரூபாய் கூடப் பெறாது என்று கூற அவரும் ஒத்துக் கொண்டார். பேரம் பேசி அதே விலைக்கு வாங்கிக் கொடுத்தேன். அதேபோல எனக்குத் தெரிந்த ஒரு ஹோட்டலில் அவர்களை அழைத்துச் சென்றபோது அவர்கள் சப்பாத்தி ஆர்டர் செய்ய நினைத்தப் போது அந்த ஹோட்டலில் தோசை நன்றாக இருக்கும், சப்பாத்தி சுமார் என்று கூறி அவர்களை தோசை சாப்பிடச் சொன்னேன். அவர்களும் சந்தோஷமாக நான் கூறியதை ஏற்றுக் கொண்டார்கள். ஆக இதுதான் ஒரு துபாஷியின் வேலை. விருந்தினரின் நலனை மறக்கக் கூடாது.

"சோ உத்தி பற்றி உங்கள் அரிய பெரிய கருத்தையும் சொல்றது......சின்ன பசங்க தெரிஞ்சுக்குவாங்கள்ள"

சோ உத்திதானே, கூறி விட்டால் போகிறது. மாட்டிக் கொண்டீர்களா?

ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்து ஆராய்ந்து தன் கருத்தைக் கூறுவது. அது எவ்வளவு எதிர்ப்பைப் பெற்றாலும் அதைத் தைரியமாகக் கூறுவது. உதாரணம்: எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு நாள் பாராளுமன்றத்தில் இந்திரா அவர்களும் ராஜீவ் அவர்களும் ஆதரவு தந்த நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஸ்டீஃபன் மிகக் கீழ்த்தரமான கை சமிக்ஞை செய்தார். திமுக உறுப்பினர் அப்போது உதவி சபாநாயகர். அவர்தான் அன்று சபாநாயகர் நாற்காலியில் இருந்தார். அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை. அதைப் பற்றி எழுத பத்திரிகைகள் பயந்த போது, சோ மட்டும் தைரியமாகத் தன் பத்திரிகையில் அந்த நிகழ்ச்சியைப் போட்டார்.

அதே போல ஒரு ஜோக்குக்காக ஆனந்த விகடன் ஆசிரியர் தமிழகச் சட்டசபையால் தண்டிக்கப்பட்ட போது தன் பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்திலும் அந்த ஜோக்கை படத்துடன் போட்டார். அவர் உத்தி என்ன? உண்மையான பத்திரிகையாளனாக நடந்து கொள்வது. மேலும் தெரிந்து கொள்ள அவர் பத்திரிகை ஆண்டுவிழாவுக்கு வாருங்கள். தர்மானப் பத்திரிகை நடத்துவது. அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சோ நகைச்சுவை நடிகர். அழகான முட்டைக் கண்கள் உடையவர்.
டோ ண்டு போன்றவர்களை impress செய்ய அதிக மூளை தேவை இல்லை.
மியூசிக் அகாடமியில் உளறியது போல உளரினாலே சிம்மக் குரலில்
கர்ஜித்தார் என்று துதி பாடுவார்கள். சங்கராச்சாரிகள் புத்திசாலிகள்.
நல்ல வக்கீலாக வைத்திருக்கிறார்கள். இவரை வக்கீலாக வைத்திருந்தால்
நிச்சயம் மரண தண்டனைதான். காஞ்சி மட தயவில் பத்திரிகை நடத்த காசும்,
பிரச்சினையில்லை. லூசுத்தனமான கட்டுரைகள் எழுதுவதற்கு
நிறைய அறிவு தேவை இல்லை. இந்த புத்தகத்தை வாங்க பல அறைகுறைகள்
ரெடியாக இருக்கிறார்கள். சொந்த புத்தி வரும் வரை.

Anonymous said...

appa,
last comment varaikkum padichi mudichaa, chennai-la mazha oanja maari irukku :)

Muthu said...

"உங்களைச் சேலஞ்ச் செய்கிறேன். சோ பார்ப்பனர் என்பதால்தான் நான் அவரை ஆதரித்தேன் என்பதை என் எழுத்துக்களிலிருந்து காட்டுங்கள் "

அண்ணா விட மாட்டீங்க போல...உங்கள் எழுத்துக்களில் இருந்து நீங்கள் நடுநிலையாளர் என்று தெரிகிறது. உங்கள் சாதி மட்டுமல்ல நீங்கள் ஆணா பெண்ணா என்றே கண்டுக்கொள்ளமுடியவில்லை.. போட்டோவை வைத்துத்தான் கண்டுபிடித்தேன்.அந்தளவிற்கு நீங்கள்
ஜெண்டிலாக எழுதியிருக்கிறீர்கள். பலரும் இங்கே அதே கருத்து கொண்டு இருக்கிறார்கள். இதை படிப்பவர் ஜட்ஜ்மெண்டுக்குத்தான் விடவேண்டும்.நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நீங்கள் மேலும் ஊடுகட்டிக்கொண்டே இருப்பதால் மற்றதையும் பார்க்கிறேன்.


ஒரு சின்ன கதை கூறுகிறேன்.
ஒருவர் (அருண்) கூறுகிறார் சோ சுத்தமானவர் என்று.

நான் கூறுகிறேன் இல்லை அவர் பல் கூட துலக்குவதில்லை, குளிப்பதில்லை என்று.

நீங்கள், நான் கூறிய
பல் துலக்குவதில்லை குளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள் அவர் ரொம்ப காலமாக செண்ட் உபயோகபடுத்துகிறார்( 1975 முதல்). எனக்கு அது நன்றாக தெரியும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்.
ஊடு கட்டுகிறீர்கள்.

இதை படிக்கிறவர்கள் எல்லாமே கோயிஞ்சாமிகளாக இருந்தால் உங்கள் வாதத்திற்கு கை தட்டுவார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்மணத்தில் கோயிஞ்சாமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
(பி.கு)
அவர் செண்ட் போடுவதை பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.ஏன் குளிப்பதில்லை.பல் துலக்குவதில்லை என்பதுதான் என் கேள்வி.உடனே இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் உபயோகப்படுத்தும் பேஸ்ட், சோப் எல்லாம் போட்டோ பிடித்து காட்டி ஏதாவது சொல்லவேண்டாம்.(இது உங்களுடைய பிரஞ்சு டூரிஸ்ட் ஸ்டோரிக்கும் பொருந்தும்)


அண்ணா, அவரை அவரே விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு டெம்பிளேட்டை விலக்கிவிட்டு யாரும் அவரை விமரிசித்துவிட முடியாது. ராவணன் கூட சிறந்த சிவபக்தனாம்.அதுக்காக ராமன் சீதையை அவன்கிட்டேயா விட்டுட்டான்.எல்லார்கிட்டயும் சில நல்ல குணங்கள் இருக்கும்.அதை பத்தி நான் எதுவும் சொல்லவில்லை.விஷ விதைகளை தூவுகிறாரே அதைப்பற்றி தான் சொல்கிறேன்.
என் பதிவுகளை படிக்கவே இல்லையா?

சோ என்ற வார்த்தையை பார்த்துவுடன் வரிந்துக்கட்டி வீட்டீர்களா?

75 மற்றும 76 எல்லாம் நான் பிறக்கவேயில்லை என்பது ஒருபுறமிறுக்க அவர் ஏதாவது உருப்படியாக செய்திருந்தாலும் அதையும் எதிர்த்து ஆகவேண்டும் என்பது என் தலையெழுத்து இல்லை.எல்லாம் ஆரம்பத்தில் நல்லாதான் இருப்பாங்க..அப்புறம் தான் வரவர மாமியார் கதை ஆயிடுது.......

கிசுகிசு பற்றி: நீங்களே தினமலரை பற்றி இவ்வளவு கேவலமாக எழுதினால் எங்களை மாதிரி ஆட்கள் எல்லாத்துக்கும் வாய்ப்பு ஆகிவிடாதா? நிற்க...
துக்ளக் காப்பாற்றி வரும் தரம் என்ன என்பதே யாருக்கும் தெரியாது.என் பதிவுகளில் நான் கூறி உள்ள தயானந்த சரஸ்வதி கட்டுரை போன்றவை தான் தரம் என்றால் ஸாரி இதற்கு என்னிடம் பதில் இல்லை...

எம்பிக்கள் நிதி விஷயத்தை பற்றி ஒரு விமர்சனமும் இல்லை.பாராட்டுக்கள்.(கடமையை சரியாக செய்வதே சாதனை ஆயிடுச்சு என்பது துரதிஷ்டவசமானது சார்)

ஏதோ அவர் கூட்டம் நடத்துகிறார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். திண்டுக்கல் லியோனியும் கூட்டம் நடத்துகிறார். கூட்டம் பிய்த்துக்கொண்டு போகிறது. (எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் தான்.இதில் என்ன சந்தேகம்?) அவரும் பிரியாணி பொட்டலம் தருவதில்லை.

இதெல்லாம் ஒரு பொழுதுப்போக்கு சார். எல்லோரும் வருவாங்க. சிரிப்பாங்க. சீரியஸா யாரும் எடுத்துக்கறதில்லை.நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அது உங்க தப்பு. அங்க என்ன நீங்க உலகத்தை மாத்தி அமைக்கிறீங்களா?
(அவரை கடுமையா விமரிசிக்கறவங்களும் துக்ளக் படிப்பதை இங்கே நினைவுபடுத்தி கொள்ளவும்.)

அதே மாதிரி அவர் கூட்டத்தில எப்படி சார் பிரியாணி போடமுடியும்? தயிர்சாதம், புளிசாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவை தான்.எனிவே உங்கள் ஆதங்கத்தை அவருக்கு சொல்கிறேன்.அடுத்த முறை ஆவன செய்வார்.

பி.ஜெ.பி பற்றிய அவர் விமர்சனங்கள் பற்றி எல்லாம் என் பதிவில் பதில் இருக்கிறது.(முதல் பதிவு).

தன்னைத்தானே கிண்டல் செய்வது எல்லாம் ஒரு சாதனையா? வலிக்கிற எடத்துல அடிக்கிறதுன்னு ஒண்ணு இருக்குதுங்க.அது எல்லோருக்கும் புரியாது. அடி வாங்கினாதான் புரியும்.அடிமட்டத்து ஆளுங்களுக்குதான் அது.மேட்டுகுடிக்கு புரியாது.... குழந்தைங்களுக்கு விளையாட்டு காட்டறதுக்காக நாம நம்மளை அடிச்சிக்குவம்ல.. அதெல்லாம் இதுல வராது அய்யா.....

மற்றபடி தனிமனித தாக்குதல் என்பதெல்லாம் பற்றி பலர் கூறிவி்ட்டார்கள்.தனிமனித தாக்குதல் விஷயத்தை நீங்கள் எப்படி விளங்கி வைத்துள்ளீர்கள் என்று விளக்க முடியுமா?

நான் சோ உத்தி என்றால் என்ன என்று என் சோ மூன்றாம் பாகத்தில் எழுதியுள்ளேன். அதை படித்து அப்டேட் ஆகவும்.

மெல்ல பதிவுகளை போடவும் நான் ஆன்லைன்லயே உங்களுக்காக வெயிட் பண்ணலை. முடிந்தவரை உடனே எழுத முயற்சி செய்கிறேன்.கவுண்ட் டவுன் எல்லாம் எண்ணிட்டு இருக்க வேண்டாம்.

அன்புடன்

முத்து

b said...

அன்பின் முத்து,

மிகவும் அழகாக தெளிவான விளக்கங்களோடு பேசி இருக்கிறீர்கள். இன்னமும் உங்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை என்றுதான் சொல்வார்கள்! அந்தக் குழு உங்களை இந்நேரம் கட்டம் கட்டி வைத்திருக்கும்!

அனைத்தையும் தாங்கும் தடித்த தோல் விரைவில் உங்களுக்கு கிடைக்க எல்லாம் வல்ல எம்பெருமான் உதவி செய்வார் என நான் நம்புகிறேன்!

அங்கே முத்துக்குமரன் என்பவரும் நண்பன் என்பவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கும் காம ஆசை வரும் என்று சொல்லிவிட்டு தாத்தா இங்கு ஓடி வந்து விட்டார்!

எனக்கெல்லாம் குழந்தையில் அப்படி ஒரு ஆசை வரவில்லை என்பதுதான் உண்மை!!!

தினமலரை ஆதரித்து எழுதுங்கள். காமகோடியைப் புகழுங்கள். சோவினைப் போற்றுங்கள். உலகிலேயே மிகச்சிறந்த நடிகர் கமல்தான் என்று கட்டியம் கூறுங்கள்! கக்கனை, காமராஜரை, பெரியாரை, அண்ணாவை, எம்ஜிஆரை, கருணாநிதியை, திருமாவை, ராமதாசினை பிடிக்காதென்று சொல்லுங்கள். ராஜாஜியை, ஜெயலலிதாவை, பாஜகவை, சிவசேனா, பால்தாக்கரே பிடிக்கும் என எழுதுங்கள். நிச்சயம் உங்களுக்கு பொன்னாடைகள் போற்றப்படும்! விரைவில் உங்களுக்கு கெளரவ பட்டங்கள்கூட வலிய வந்து கொடுப்பார்கள்!

மறந்தும் எதிர்த்து விடாதீர்கள். அவ்வாறு படிக்க நேர்ந்தால், விரோதம், குரோதம், ஜல்லியடிப்பு, மட்டையடிப்பு, பின்நவீனத்துவம், அச்சு ஊடகம், வலைவாசல், உரல், உடுக்கை என்று புரியாத மொழிகளில் எல்லாம் உங்களைத் திட்டுவார்கள்!

கமல் என்ற அசாத்திய நடிகர் பற்றி நான் அங்கே முன்னர் செய்த விவாதத்தினை படித்துப் பாருங்கள். தெளிவு பெறுங்கள். கமலுக்குப் பின் தமிழக சினிமாத்துறையே அழிந்துவிடுமாம். அதற்குப்பின் நடிக்க ஆட்களே இல்லையாம்! ஐயகோ!!!

http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1

Muthu said...

மூர்த்தி,

கமலை எனக்கும் பிடிக்கும்(பார்க்க எனது புரொபைல்).கமலும் சாதியை எல்லாம் கடந்தவராகத்தான் எனக்கு தெரிகிறார். ஆனால் அவர் தான் அல்டிமேட் ஸ்டார் என்று யாராவது கூறினால் அது தவறு....(அந்த குறிப்பிட்ட பதிவை இன்னும் முழுதாக படிக்கவில்லை)


தமிழ்மணத்தில் உள்ள புகழ்பெற்ற பழைய பதிவுகளை யாராவது சுட்டி வைத்து காட்டினால் இங்கு நிலவும் பூசலைப்பற்றி முழுதாக தெரிந்துக்கொள்வேன்.


டோண்டு சாரின் தர்க்க முறையே அலாதி தான். ஆனால் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குவதை பாராட்டவேண்டும்.

தினமலர், சோ மட்டுமல்ல யாரை பற்றி வேண்டுமானாலும் நம் கருத்தை எழுத நமக்கு உரிமை உள்ளது...என்ன சொல்றீங்க? தப்பு என்றால் தாக்கித்தான் ஆகவேண்டி உள்ளது.

இன்று வரை யாரும் கேவலமாக என்னை திட்டவில்லை...யாரும் அப்படி திட்டகூடியவர்கள் மாதிரியும் தெரியவில்லை..அப்படி கட்டம் கட்டினா நான் என்ன பண்ணபோறேன்..கட்டத்தின் மேல ஒரு ரவுண்ட் போட போறேன்..அவ்ளோதான்..
மத்தபடி இந்த சண்டையை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு டென்ஷன் ஆயிகிட்டு ஆயுளை குறைச்சுக்க முடியுமா என்ன?

ஏதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்..ஒரு பஞ்சாயத்து மாதிரி பண்ணி சமாதானமா போனா பரவாயில்லைன்னு நினைக்கிறேன்.

இழிபிறவியை பிறகு பார்த்துக்கொள்வோம்.(தானாக மாட்டிக்கொள்வான்).நானும் ஐ.பி செக் வைக்கிறேன்....

Anonymous said...

Very good and interesting post. can you update/repost it today(including all comments).those missed could read.

குழலி / Kuzhali said...

//டோண்டு சாரின் தர்க்க முறையே அலாதி தான்
//
முத்து, ஒரு கட்டத்திற்கு மேல் எல்லோரும் உணர்ச்சிவயப்பட்டு விடுவார்கள் அல்லது ஆளை விடுப்பா என்று ஓடிவிடுவார்கள் நீங்கள் எப்படி என்று இன்னும் கொஞ்சம் பார்க்கலாம், ஆனால் இது வரை நான் டோண்டு அய்யா அவர்களிடம் விவாதம் செய்ததிலேயே சிறந்ததாக இதைப் பார்க்கின்றேன்.

Muthu said...

திரு.ஜார்ஜ்

i donot think repost is necessary...people who are interested will always read...let us see


நன்றி திரு.குழலி,

ஒடறதுக்கு என்ன இருக்கு? என்னுடைய பிரைமரி லட்சியம் இது அல்ல.
சேறு வாரி இறைத்தாலும் வேறு நுண்ணிய இம்சை** கொடுத்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படப்போவது இல்லை..

தர்க்க முறை லாஜிக்கலாக இல்லை என்றால் நிறுத்திவிட்டு போவேன்.அவ்வளவுதான்.

b said...

அன்பின் முத்து,

குழலி சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். இதுநாள்வரை வந்த பதிவுகளிலேயே உங்கள் பதிவினை நான் வாழ்த்துகிறேன்.

கமல் என்ற நடிகரை எனக்குப் பிடிக்கும். ஆனால் கடவுள் அளவுக்குப் புகழ்ந்ததால் வந்த விவாதம் அன்று.

"அது சம்மந்தமான" எனது பதிவினை நீங்கள் லிங்காக வைத்திருக்கிறீர்களாம். டோண்டு தன் பதிவில் பிதற்றி இருக்கிறது. நான் எனது பதிவில் விளக்கம் அளித்தும் இருக்கிறேன்.

வாழ்க ஜனநாயகம்!

Muthu said...

அன்பின் மூர்த்தி,

நன்றி, எதை நான் லிங்க்காக வைத்துள்ளேன்? எதற்கு வைத்துள்ளென்?

அவர் ஏதாவது சொல்லுவார்.நீங்க கண்டுக்காதீங்க...

நான் சொன்னது எனக்கும் கமல் பிடிக்கும் என்று என் புரெபைலிலேயே கூறி உள்ளேன் என்பது தான்.மேலும் அந்த கமல் பதிவை நான் இன்னும் முழுதாக படிக்கவில்லை என்றுதான் கூறினேன். மேலும் மற்ற புகழ்பெற்ற பழைய பதிவுகளை இப்போது தான்
படிக்க ஆரம்பித்து உள்ளேன்.

திரு.ரோசா வசந்த என்பவருடையது நன்றாக உள்ளது.அதைத்தான் இப்போது படித்து வருகிறேன்.

Anonymous said...

‘Cho’ telling about law abiding is most important than anything (poverty, human rights, what ever else).

But he himself not followed the amendments of ‘Tamil script’ in 1978 by Tamil Nadu Govt. He adamantly followed the old style of writing. (I don’t know still he is following that. But I am sure until 1993 he didn’t changed).

I believe only reason is the new amendment is calling ’Periyar script review’. Am I right??