Friday, December 30, 2005

ஜீவராசிகள் - 2005

இந்த 2005 பல புதிய ஜீவராசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவர்களை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. உரலரசன்:

இவர் இணையம் நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இல்லையென்றால் கூகுள் கம்பெனி பல நாட்களுக்கு முன்பே இழுத்து மூடப்பட்டிருக்கவேண்டும்.இது சம்பந்தமாக கூகிள் இவருக்கு கொடுத்த சான்றிதழை இவர் ஃபிரேம் பண்ணி வைத்துள்ளார்.இவர் தன்னோடு கருத்துரீதியாக மோதுபவர்களை எதிர்கொள்ள பல உரல்களை (URL)அனுப்பி அதிர வைப்பார் என்பதால் இந்த பெயர் இவருக்கு ஒட்டிக்கொண்டது.

2.கற்பு வெட்டியான்

இவர் கட்டுடை தலைவி குஷ்பு நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவரிடம் இளைஞர்களும் இளைஞிகளும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.இவர் சிம்பு போல பப்(pub), ஐந்து நட்சத்திர ஹோட்டல்,பீட்ஸா கார்னர் போன்ற இடங்களில் சுற்றி திரிவார்.பார்ப்பதற்கு மிகவும் பேஷனாக இருப்பார். ஆனால் இளவட்டங்கள் யாராவது பீர்,பிராந்தி போன்றவைகளை குடிக்காமலோ அல்லது ஜோடி இல்லாமல் தனியாகவோ இருந்தால் அவர்களை போட்டு தள்ளி விடுவார். இளைஞர்களும் இளைஞிகளும் கல்யாணத்திற்கு முன்பே கண்டிப்பாக தவறு செய்யவேண்டும் என்பது இவர் கொள்கை.இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பது வெளிப்படை.


3.தமிழ்மண போலி்+ஆபாச பின்னூட்ட அனானி

இவர்(கள்) ஒரு விசித்திர பிராணி. ஆனால் ஒரு மிகப்பெரிய கணிணி வல்லுனர்(கள்) ஆக இருக்கக்கூடும். ஒரு சமுதாயமே( இது தமிழ்மண சமுதாயம்தான்) கூடி விரட்டி விரட்டி தாக்கினாலும் அசராமலும் மாட்டிக்கொள்ளாமலும் திருப்பி தாக்குகிறார்(கள்).
பல பேர் வலைப்பதிவை விட்டே வெளியேற காரணம் என்று கூறப்படும் இந்த அனானி(கள்) இவ்வருடத்திய சிறந்த வில்லன் பரிசை போட்டி இல்லாமல் தட்டி செல்கிறார்.இந்த அனானி(கள்) தாமே முன்வந்து 2006 முதல் விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் தமிழ்வலைப்பதிவு உலகை அழியாமல் ரட்சிக்க வேண்டுகிறோம்.

4.சேப்பல்

இவரை இந்திய தேர்தல்கமிஷனுக்கு தலைவராக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் மன்மோகன்சிங்குக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இரக்கமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து ஓடமுடியாத நடக்கமுடியாத பலபேரை கதற கதற வெளியே எறியும் சேப்பல் தேர்தல் கமிஷனுக்கு தலைவரானால் பல தலைவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் இதை எதிர்த்துள்ளனர்.

5.குரங்கு குப்புசாமி

வந்தேறிகள் யார் என்று கண்டுபிடிக்க வேர்களை தேடி அலைந்த ஆராய்ச்சியாளர் குப்புசாமி இப்போது மனித குரங்குகளை பிடித்து DNA ஆராய்ச்சி செய்து உள்ளார்.அதன்மூலம் அனைவருமே வந்தேறிகள் தான் என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஆராய்ச்சியை டுனீசியாவில் கிக்காயோ மாகாணத்தில் ஏற்றுக்கொண்டவி்ட்டபடியால் இங்கேயும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இவருக்கு பெயர் காரண்ம் விளக்கப்பட வேண்டியதில்லை.


(தொடரும்)

11 comments:

டிபிஆர்.ஜோசப் said...

முத்து,
நீங்க சொன்னதுல குரங்கு குப்புசாமியத்தவிர மத்த எல்லாரையும் அடையாளம் தெரியுது! அது சரி அதென்ன வந்தேறி? Immigrantஆ அல்லது Refugeeஆ.

Muthu said...

சார் வம்பை கிளப்பி விடாதீங்க..இது தனிப்பட்ட யாரையும் குறிப்பன அல்ல..
சேப்பலையும் அனானியும் தவிர மற்றதெல்லாம் பொதுவானவை..நீங்கள் யாரை வேணாலும் போட்டு பார்த்துக்கலாம்.

Muthu said...

வந்தேறி மேட்டர் தெரியாதா? ரொம்ப அப்பாவியா இருக்கீங்க..பேங்கை விட்டு வெளியே வந்து பாருங்க சார்....அப்படியும் தெரியவில்லையெனில் நான் உரலரசனா மாற வேண்டியிருக்கும்..பரவாயில்லையா?

பூங்குழலி said...

ஐயா உரலரசர் முத்து அவர்களே..

குழப்பவாதிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீரே...

என்ன, நான் சொல்வது சரிதானே?
:)

பூங்குழலி.

Muthu said...

//குழப்பவாதிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீரே...//


இது எனக்கு புரியவில்லையே...


சிலர் நாளை வருகை தர உள்ளார்கள் அது நன்றாக தெரியும்...

சந்திப்பு said...

முத்து!

அரசியலுக்கு வருபவர்களுக்கு பால°தீன பிரச்சினையோ, ஈராக் பிரச்சினையோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், கட்சியை பதிவு செய்வது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டாமா?

எல்லா அதிகாரமும் அவருக்கேவாம்! பாவம் ஜனநாயகம்?

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சந்திப்பு said...

முத்து தங்களுடைய வங்கி குறித்த பதிவிலும், விஜயகாந்த் குறித்த பதிவிலும் கமண்ட் எழுதுவும் எழுத முடியவில்லையே! என்ன பிரச்சினை!
மீண்டும் தங்களுடைய வங்கி குறித்த பதிவை எப்போது பதிவீர்கள்!
நல்ல பல தகவல்கள் இருந்தன.

மதுமிதா said...

2006 லும் தெரியாத ஜீவராசிகளை தெரியப்படுத்துங்கள்.

இன்னும் யாரையும் தெரியலைங்க.

புத்தாண்டு வாழ்த்துகள்.

ஞானவெட்டியான் said...

தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

கருப்பு வெட்டியான்.

Pot"tea" kadai said...

குரங்கு குப்புசாமிக்கு நான் கொஞ்சம் இஞ்சி பானம் சாப்பிடுமாறு அறிவுரை செய்தேன். அதனால் அவர் இஞ்சி தோட்டத்தைத் தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார்.:-)

Muthu said...

thanks madhumita, gnanavettiyan and pottea kadai