ஒரு சமுதாயத்தின் ஒலிபெருக்கியாக இருப்பது தான் அவரின் ஒரே சாதனை. அதை சொன்னால் அய்யோ அம்மா என்று ஒப்பாரி ஏன்? இதையெல்லாம் சொல்வதற்கு ஒருவர் பிராமணர்களை எதிர்ப்பவராக தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.தலையில் இருக்கும் அரைக்கிலோ சமாச்சாரத்தை உபயோகப்படுத்தினால் போதும்.
மூப்பனாருடன் தி.மு.க கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு ஏன் சென்றார்?..
96 ல் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு யாருக்கும் காரணம் தேவையில்லை.அ.தி.மு.க ஆடிய ஆட்டம் அப்படி. அ.தி.மு.க வின் தோல்வி நிச்சயமாகிவிட்ட ஒன்று. ரஜினிகாந்த கூட மக்கள் எல்லாம் நினைத்த ஒரு விஷயத்தை சொல்லப்போய் தான் பிரபலமானாரே தவிர ரஜினி சொல்லித்தான் ஜெயலலிதா தோற்றார் என்று கூறுபவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்றே கூறலாம்.ஆகவே தான் சோவும் வேறு வழியின்றி மூப்பனாரையும் தி.மு.க வையும் ஆதரிக்க நேர்ந்தது. பாவம் சோ...அவரின் ஒரே லட்சியம் தி.மு.க வை ஒழிப்பது தான். அது அவர் வாழ்நாள் முடியும் வரை நடக்கபோவதில்லை. அதற்காகத்தான் ரஜினியை எல்லாம் மகாபுருஷன் என்றெல்லாம் பேசி திரிந்தவர் தான் இந்த சோ.
.அவருக்கு வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பாண்டித்யம் உண்டு என்று புளகாங்கிதம் அடைகிறீர்கள். எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. அதை பார்த்து எழுதுவது ஒன்றும் சாதனை இல்லை. இன்றைய வாழ்க்கைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை வாந்தி எடுப்பதில் என்ன ஐயா சாதனை உள்ளது?அவர் ஒரு உள்நோக்கத்தோடு (சில்லறைத்தனம்) தான் இதுப்போன்று எழுதி வருகிறார். துக்ளக்கில் சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஒரு விஷயம் ரொம்ப பிரபலம். அவரவர் அவரவர் கடமையை மட்டும் செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார் அவர்.இது சோவின் பார்வையை மீறி துக்ளக்கில் வெளிவந்து விட்டது என்று எந்த முட்டாளும் நினைக்கமாட்டான்.( அவரவர் கடமை என்பது வர்ணாஸ்ரமத்தை பற்றிய கேள்விக்கான பதில்தான்.)
மூடநம்பிக்கைகளை பரப்பி திரிவதும் அவர் பத்திரிக்கை தான். சோதிடம், சாமியார்கள் பற்றி அவர் பத்திரிக்கைகளில் வருவதில்லையா? ஒருவன் இதையெல்லாம் நம்ப தொடங்கி விட்டால் பிறகு இந்த தத்துவங்களின்படி பிராமணர்களை கும்பிடவேண்டும். இதுவெல்லாம் நுணுக்கமான விஷயங்கள். நுனிப்புல் மேய்பவர்களுக்கு புரிவது கடினம்.
தமிழ் பற்று உள்ளவர்களை அவர் எதிர்க்கிறார் என்பதில் என்ன ஐயா சந்தோஷம்?
சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை பண்ணினால் தான் கடவுளுக்கு புரியும். தமிழில் செய்தால் கடவுளுக்கு புரியாது என்ற அரிய கருத்தை வாந்தி எடுத்தவர் தான் அவர். பிற்போக்கு என்பது இதுதான் ஐயா.......
தெரியாமல் தான் கேட்கிறோம்.தமிழ்பற்று என்றால் ஏனய்யா ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிண்டலாகவே தெரிகிறது. வ.வே.சு அப்படி நினைக்கவில்லை.பாரதியார் அப்படி நினைக்கவில்லை.சுந்தர ராமசாமி அப்படி நினைக்கவில்லை. மத்த சில்வண்டுகளுக்கு ஏன் இந்த எண்ணம்.(இங்கு மொழிப்பற்று பத்தி மட்டும்தான் பேசப்படுகிறது. தாய்மொழியை அழித்துவிட்டு அடுத்த மொழி வரும்போது போராட்டம் தேவையாகத்தான் இருக்கிறது.)
பி.ஜே.பியை ஆதரிப்பதற்கு எல்லாம் காரணம் நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. விமரிசித்தால் கூட ஒரு பரிவோடு தான் அவர்களை விமரிசிப்பார்.அய்யோ இப்படி பண்ணீ்ட்டீங்களே? ஏன் ராசா என்பது போலத்தான் அவர் விமரிசனம் இருக்கும்.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை எதிர்ப்பதையே முழு மூச்சாய் கொண்டு வாழ்கிறார். அவர் எழுத வேண்டியது. அவருக்கு வேண்டியவர்கள் மட்டும் படித்து சிரித்துக்கொள்ளவேண்டியது. என்ன காமெடி அது?
(தொடரும்)
Monday, December 12, 2005
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
இது தயானந்த சரஸ்வதியின் கட்டுரை துக்ளக்கில் வந்த போது ஜெயமோகன் திண்ணையில் எழுதிய கட்டுரையின் சுட்டி.
http://thinnai.com/pl0415042.html
இது அது தொடர்பான என்னுடைய பதிவின் ஒரு பகுதி:
1. இந்த கார்பரேட் சாமியார்கள் (நன்றி பாரா!) வெறும் சாமியார் தொழில் மட்டும் செய்வதில்லை, ஒருவனது தன்மானம், விடுதலை இவைகளை கடுமையாக நசுக்கி அவனை ஒரு கொத்தடிமையாகச் செய்து காலங்காலமாக மனிதனைச் சுரண்ட ஏற்படுத்தப்பட்டதான சாதி அமைப்பை (இந்தியா உலகிற்கு வழங்கிய அதி உன்னதமான பங்களிப்பாக நான் கருதுவது ஒரு புலையனுக்கு பின்னே ஒரு துடைப்பத்தைக் கட்டி தொங்க விடுகிற அற்புதமான முறையைத்தான். எவ்வளவு எளிய நுட்பமான வழி? அவனால் ஏற்பட்ட தீட்டை அவனே சுத்தம் செய்யமுடிகிறமாதிரியான இந்த கண்டுபிடிப்புக்கு நிகரான ஒன்றை இந்தியா இன்னும் வழங்கவில்லை; அதற்காக நான் அதை வணங்குகிறேன்.) எவ்வாறு நவீன கருத்தாக்கங்களுக்கு பலியாகிவிடாமல், புதிய வார்ப்புகளில் அதை வளர்த்து, பாதுகாப்பாக எடுத்துச் செல்வது என்பதையும் செய்கிறார்கள். அதுவும் பெரியார் (எனும் இழிமனிதன்!) மனிதனுக்கு இழைக்கப்படும் இழிவுகளைப் பற்றி பேசியதால் இக்கருத்தாக்கங்களை நுட்பமான வடிவங்களிலும், எளிதில் இனங்கண்டு கொள்ளமுடியாத வகைகளிலும் பிரசவிக்கவேண்டிய, வளர்த்தெடுக்க வேண்டிய கடும் பணியை இந்த சாமிமார்கள் செய்யவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட தியாகத்தைத்தான் இந்து மத நிறுவனங்கள் அனைத்து காலகட்டத்திலும் செய்து வந்தன. ஆனால் இப்போது இன்னும் உழைக்கவேண்டியுள்ளது. என்ன செய்வது கலிகாலம்!
இப்படிப்பட்ட சாமிமார்களின் புரவலர்கள், ஆதரவாளர்கள், பல்லக்குத்தூக்கிகள், ஒலிப்பான்களாக (துக்ளக் மாதிரி) செயல் பட்டுவரும் நபர்கள், அரசுகள், அமைப்புகள் இவைகளிடம் இருந்து மனித விடுதலை, சமத்துவம், உரிமைகளைக் கோருதல் போன்ற கலிகால நடவடிக்கைகளுக்கு யாரவது இடம் தேட முடியுமா? வன்முறையின் மேல் சற்றும் நம்பிக்கையற்ற இவர்கள் (2000 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதனை பரம்பரை பரம்பரையாகச் சுரண்டுவதை யாரும் வன்முறை எனச் சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்) அமைதியாக பத்திரிக்கைகளில் சத்ரு சம்கார யாகம் செய்து கொண்டிருக்கிறார்கள்; அரசுகளுக்கு வசியம் செய்து கொண்டிருக்கிறார்கள். நல்லது.
(http://bhaarathi.net/ntmani/?p=43)
பதிவிற்கு நன்றி முத்து...
பெண்களைப் பற்றிய "சோ"வின் இழிவுத்தனமான கருத்துக்களையும் சற்று வெளியுலகுக்கு எடுத்துக்கூறுங்கள்.
நன்றி,
பூங்குழலி.
http://kuzhappam.blogspot.com
நன்றி தங்கமணி,
நீங்கள் கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லமாட்டார்கள் இவர்கள். இவர்கள் வழி தனிவழி. வெய்ட் பண்ணுங்க.பதில் வரும் வேற மாதிரி.
நன்றி பூங்குழலி,
நல்ல பெயர்.மொழி வெறி கொண்டவர்களா நீங்கள்?(????)
திரு.சோவின் மற்ற கூத்துக்களையும் எழுதுகிறேன்.
//இதையெல்லாம் சொல்வதற்கு ஒருவர் பிராமணர்களை எதிர்ப்பவராக தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.தலையில் இருக்கும் அரைக்கிலோ சமாச்சாரத்தை உபயோகப்படுத்தினால் போதும்.
//
மிகவும் சரி. நன்றி இந்தப்பதிவுக்கு.
இது சோ பற்றிய என்னுடைய பழைய பதிவு. இதன் பின்னூட்டங்களும், அருணின் பதிவில் சுந்தரமூர்த்தி, ரவி ஸ்ரினிவாசின் பின்னூட்டங்களும் குறிப்பிடத்தகுந்தவை. இதை மேலதிக தகவலுக்காக இங்கு குறிப்பிடுகிறேன்.
http://bhaarathi.net/ntmani/?p=91
முத்து
இப்பொழுது தான் அருண்வைத்தியநாதன் பதிவிற்கு பின்னூட்டமிட்டு வந்தால் - இங்கு நீங்கள் தனியாகவே ஒரு பதிவு வைத்து விட்டீர்கள்.
நன்றி.
கொஞ்சம் காட்டமாகத் தான் எழுதிவிட்டீர்கள். என்றாலும் உண்மையைத் தான். எழுதியிருக்கிறீர்கள் என்பதில் திருப்தி தான்...
முத்து., திடீர்னு என்னமோ 'சோ'வத் தூக்கி மனையில உக்கார வைக்கிற வேலை நடக்குது. துணிவாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
நன்றி மகாலிங்கம் , கார்த்திக்ராமாஸ்
கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்ப்பவர்கள் தான் சோவை எதிர்ப்பார்கள் என்று நினைப்பது தவறு என்றுதான் நானும் கூறுகிறேன். பிராமணர்களில் எவ்வளவோ பேர் தமிழுக்கு, தமிழர்களுக்கு, தமிழ்மொழிக்கு தொண்டாற்றி உள்ளனர். அவர்கள் தாம் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறவர்கள்.ஆனால் இவர்?
நன்றி திரு.தங்கமணி, நண்பன், அப்படிபோடு(இதென்னங்க பெயர்...female(??) )
இதில ஒண்ணும் காட்டமா இல்லை என்றே நினைக்கிறேன். (ரோசா, குழலி, முகமூடி போன்ற நண்பர்கள் பதிவுகளை ஒப்பிட்டால் இது ஒண்ணுமே இல்லை)
சொக்க தங்கத்தை சிறிது உரசி பார்த்தால் என்ன என்று தோன்றியது அதுதான்.
மனசில் இருப்பதை சொன்னால் பொல்லாப்பு வரும் என்று பயந்து சொல்லாமல் விட்டுவிட்டு எனக்கு பிடித்த பாட்டு , எனக்கு பிடித்த சினிமா என்றெல்லாம் பதிவு எழுத
எனக்கு மனசு வரவில்லை.
புத்திசாலித்தனமாக சிந்திப்பது போல நினைக்க வைத்து தமிழனை எப்படி சிலர் ஆண்டியாக்குகிறார்கள் என்று அவனுக்கு எளிமையான முறையில் சொல்லவேண்டும் என்பது தான் என் நோக்கம்.
அன்பின் முத்து,
நிறைய எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப பய இப்பெல்லாம் புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பி நாலு புத்தகத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் புடிங்கிப் போட்டு தனிப் புத்தகம் ஆக்குகின்றனர். இன்னும் சிலரோ ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள கருத்துகளை எடுத்து தமிழாக்கி புத்தகமாக அச்சடித்து விற்றும்(?) விடுகின்றனர்!
முத்து ஒரு காலத்தில் நானும் சோ ரசிகனாயிருந்தேன். அதாவது அவர் ரெண்டு முட்டைக் கண்களை வச்சிக்கிட்டு சினிமாவுல காமடி பண்ணுவாரே அப்போ. அதுக்கப்புறம் திமுக-மூப்பனார் பின்னால ஜென்னு இங்கயும் அங்கயுமா தாவினப்போ சீன்னு ஆயிருச்சி.
ஆனாலும் நீங்க கொஞ்சம் தூக்கலாவே கோபப்பட்டிருக்கீங்க. இள ரத்தம் இல்லையா. இன்னைக்கி கொஞ்சம் காட்டமான பதிவாவே இருக்கு. வீரவன்னியன், மூர்த்தி அப்புறம் நீங்க... அனல் பறக்குது
நன்றி ஜோசப் சார்,
என்ன சார் இது எல்லாமே காட்டம் காட்டம்கீறிங்க...சாதாரணம் தான் சார் இது.காட்டம் என்றால் வேற...
எல்லாரும் நான் சொன்ன ஐடியாவுக்கு அப்புறம் உங்க புத்தகத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணிட்டாங்க போல..எனக்குத்தான் முத காப்பி.ஐடியா கொடுத்தது போக..iam deserving canditate u know...
புத்திசாலித்தனமாக சிந்திப்பது போல நினைக்க வைத்து தமிழனை எப்படி சிலர் ஆண்டியாக்குகிறார்கள் என்று அவனுக்கு எளிமையான முறையில் சொல்லவேண்டும் என்பது தான் என் நோக்கம்.
:-)
அன்பின் ராம்கி,
தானை தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல விஜய் டிவியில் கையெழுத்து வாங்குகிறார்கள். போகலையா நீங்கள்? ஓடுங்க ஓடுங்க.
Thank you. Anyway i'm running, after seeing ur advices! :-)
DEAR RAMKI
THAT'S good தானை தலைவர் பாணியில் சொல்லவேண்டும் என்றால் "அது"
DEAR SATHEESH THANK YOU FOR VISITING...YOU TOO IN BANKING?
சொக்கதங்கம் மாநகராfசி விதிகளை மீறி கட்டப்பட்ட இடத்தை வாங்கி இருக்காராம். அதை வணிக உபயோகத்திற்காகவும் வாடைகைக்கு விட்டு இருக்கிறார். ரமணியம் எனும் அபார்ட்மெண்ட்.
ஊர் வழக்குகளுக்கெல்லாம் முந்திரிக்கொட்டைத்தனமாக சட்டக வியாக்கணக் கருத்து சொல்லும் சொக்கதங்கம் இப்போது மட்டும் கோர்ட்டில் இருப்பதால் பேச மாட்டேன் என்றிருக்கிறார்.
இது குறீத்து மேல் விபரங்கள் ஏதும் தெரியுமா??
இந்த அநியாயம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலோ அல்லது உலகில் வேறு எந்த நாட்டிலுமோ நடக்க முடியாதது.ஒருவன் தமிழிலே பத்திரிக்கைப் பிழைப்பு நடத்துகிறான்.அதிலே தமிழை மிகவும் தரக்குறைவாக,தமிழினத்தலைவர்களைத் தரக்குறைவாக எழுதுகிறான்.பார்ப்பனக் குற்றவாளிகளை அயோக்கியர்களைப் புகழ்ந்து எழுதுகிறான்.இதையெல்லாம் கொஞ்சங்கூடச் சூடோ சொரனையோ இல்லாமல் தமிழர்கள் காசுகொடுத்து வாங்கிப் படித்து அவனை ஆதரிக்கிறார்கள்.கேட்டால் நகைச்சுவையாம்.வெட்கக்கேடு.ஒரு பார்ப்பனப்பொடியன் உங்கள் எதிரிலேயே உங்கள் அப்பாவையுந்தாத்தாவையும் வாடா போடா என்று பேசினானே அத்ற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
தமிழ் தமிழ் என்று வீரம் பேசி வாழ்வு நடத்தும் வீரத்தமிழர்களே உங்களுக்கு மானமும் ரோசமும் இருந்தால் இந்த சோமாறியின் கதையை ஆதரிக்கலாமா>
மரியாதையில்லாமல் எழுதுகிறேன் என்று அவனுக்கு வக்காலத்து வாங்க நினைக்கும் தமிழர்களே அவன் நமது தலைவர்கள் யாரையாவது மரியாதையுடன் நடத்துகிறானா?இந்த நக்கலை காஞ்சி சுப்புனி ,அவருடைய வண்டவாள்த்தைத் தலைக்காவேரியிலேயே அறிந்துகொண்டபின்னும் நாட்டை ஏமாற்றிய,இந்துக்களை ஏமாற்றிய பல ப்ங்களாக்கள் வெங்கடராமனை மற்ற பார்ப்பனர்களைப் பற்றி எழுதிக் காண்பிக்க வேண்டியதுதானே.
மும்மூர்த்திகள் சோமாரி,நரசிம்மன்,குருமூர்த்தி சேர்ந்து தமிழனின் ஆட்சி வரக்கூடாது என்று திட்டம் போட்டதும்,இப்போது எப்படியாவது தொந்தரவு தரவேண்டும் என்றும் நூலைப்பிடித்துக் கொண்டு குதிக்கிறீர்களே உங்களைக் குறை சொல்லக்கூடாது.உங்களுக்கு வால் பிடிக்கும் எங்கள் எட்டப்பர்களைத்தான்
குறை சொல்லவேண்டும்.தமிழ் தமிழன் என்றாலே எட்டிக்காயாக இருக்கும் உங்களுக்குச் சவுண்டிக்கு வேறு இடம் மொழி பார்த்துக் கொண்டு தொலையுங்களேன்.
Post a Comment