Monday, October 09, 2006

Poetic (in)Justice

Michael Schumacher, Alonso, Formula One Car Racing

நேற்று நடந்த ஐப்பான் கிராண்ட்ப்ரீயி்ல் நடப்பு சாம்பியன் அலான்சோ வெற்றி பெற்றார். ஆக இதன்மூலம் அடுத்து நடக்கவிருக்கும் பந்தயத்தில் ஒரு புள்ளி பெற்றாலே (ஒரு வேளை சுமேக்கர் வென்றாலும்) அலான்சோ சாம்பியன் பட்டத்தை வெல்லமுடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

என்னை போன்ற சுமேக்கர் ரசிகர்களுக்கு இது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும் அலான்சோவையும் பாராட்டவேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வருட சீசன் ஆரம்பத்தில் அலான்சோ முன்னணியில் இருந்தார். சுமேக்கருக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை தான் இருந்தது.

ஆனால் தீடிரென்று சுமேக்கர் தொடர்ந்து சில போட்டிகளில் வென்றார். பார்முலா ஒன் அமைப்பாளர்களே பெராரிக்கு ஆதரவாக சில வேலைகளை செய்வதாக முணுமுணுப்புகள் எழுந்தன.டேம்பனர்(Dampener)என்ற ஒரு பொருளை வண்டியில் இருந்து விலக்கச்சொல்லி ரெனால்ட் கம்பெனிக்கு போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டது விமர்சிக்கப்பட்டது.

அதன்பிறகு நடந்த சில போட்டிகளில் சுமேக்கர் வெற்றிபெற்றார். நேற்றைய போட்டியிலும் சுமேக்கர் இன்சின் புகைவது வரை அவர் போட்டியில் முன்னணியிலேயே இருந்திருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இன்சின் அவரை கைவிட்டுவிட்டது. 2000 ம் ஆண்டுக்கு பின் அவர் இன்சின் பெயிலியர் ஆனது இப்போது தான்.பார்முலா ஒன் காரில் எத்தனையோ ஆயிரம் பாகங்கள் இருக்கிறதாம்.அத்தனையும் சரியாக வேலை செய்தால்தான் கார் முழு போட்டியையும் தாங்குமாம்.எப்படியும் மூன்று சதவீதம் பாகங்களில் பிரச்சினை வந்தே தீருமாம்.சுமேக்கருக்கு விதி விளையாடி விட்டது.

யார் கண்டது? அடுத்த போட்டியில்(பிரேசில் கிராண்ட்ப்ரி) மீண்டும் எதிர்பாராரது எதாவது நடக்கலாம்.சுமேக்கர் ரசிகனாக இருந்தாலும் நான் அலான்சோ ஜெயிக்க வேண்டும் என்றே இப்போது விரும்புகிறேன்.

7 comments:

அருண்மொழி said...

நான் Schumacher ரசிகன் இல்லை. அவர் தொடர்ந்து வெற்றி பெற்றதால் F1 போட்டிகள் விருவிறுப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை Schumacher ஜெயிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். காரணம் Alonsoவின் அழுகை. F1 சரியில்லை, Renault Team சரியில்லை. நான் ஜெயிக்க கூடாது என்று பலர் ஆசைபடுகின்றனர் என திருவிளையாடல் நாகேஷ் மாதிரி புலம்பி தள்ளிவிட்டார்.

Anonymous said...

//சுமேக்கர் ரசிகனாக இருந்தாலும் நான் அலான்சோ ஜெயிக்க வேண்டும் என்றே இப்போது விரும்புகிறேன்.//
ஷுமேக்கர் ரசிகராக இருந்து கொண்டு அலான்சோ ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவதை வன்மையாக கண்டிக்கிறேன். :-)

Muthu said...

நன'றி அருண்மொழி,

அலான்சோ ஃப்லீங்சை புரிஞ்சிக்க முடியலையா?

பரணி,

:))

one wicket down...
iam waiting for potteakadai's comment

Muthu said...

vaisa,

iam following formula one for the past 3 seasons only..

wht is the story u mentioned in your last comment?

i could make that schumacher is like australian cricketers (in the sense that they can go to any extreme to win)

Muthu said...

வீல்னேவ் தாத்தா என்று தெரியும்.நேரம் கிடைக்கும்போது எலலாம் சுமேக்கரை அவர் திட்டுவதும் போட்டு பார்ப்பதும்இதனால் தானா?

நன்றி வைசா தகவல்களுக்கு

பெத்தராயுடு said...

//Schumacher இன்னும் கிட்டவாக நின்றிருக்கலாம். ஆனால், ஏழுமுறை வென்றாகிவிட்டது. இனியும் எதற்கு?
//

ஏங்க, இனிமேலும் சச்சின் எதுக்கு சதமடிக்கணும்னு கேக்கறாப்ல இருக்கு.

தல, எட்டு தடவ சாம்பியன்ஷிப் ஜெயிச்சு அழுத்தமா முத்திரை பதிக்க நெனச்சாரு...

ஒரு ப்ராட்மேன்!...
ஒரு ஜோர்டான்!...
ஒரு ஷூமேக்கர்!...

அவ்வளவுதான்.

ஆனா, post-suzukaa பேட்டியில தத்துவார்த்தமா பேசினாப்புல இருக்கு.

Anonymous said...

//1993: முதலிரு பந்தயங்களிலும் அதுவரை பெரிய அளவுக்குப் பெயர் தெரியாத ஷூமக்கர் (ரெனோ காரில்) வெற்றி பெற்றார்.//

அது நடந்தது 1994, 1993 -ல் அல்ல, காரும் Ranault அல்ல Benetton ( Engine - Ford ) - From 1995 only Benetton started using Renault Engines.
அப்புறம் ஷுமேக்கர் பேரு எல்லருக்கும் அப்பவே நல்ல தெரியும், அவர் பந்தயத்தில் கலந்து கொள்ள ஆரம்பித்தது 1991 ல், He was 3rd in the 1992 Season ahead of Senna (4h Place) and 4th in 1993 season / Senna finished at 2nd Place.

In the year 2000 Benetton was purchased by Renault but Ranault maintained the Benetton name for the 2000 season and the 2001 season before renaming the team Renault F1 for the 2002 season.

//1999: ஷூமக்கர் ஃபராரிக்கு மாறியிருந்தார் (1994ல் இருந்து). வில்லியம்ஸுக்கு ஜாக் வீல்னேவ் என்ற கனடியர். கடைசி பந்தயம். //
Schumi went to Ferrari in the your of 1996 / and this incident happened during 1997 Season .