Saturday, October 07, 2006

அப்சலை தூக்கில போடுங்கடா

அப்சல் மரண தண்டனை பற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தது மிக மிக கவனமாக எழுதப்பட்டது என்பது என் கருத்து. கவனமாக நண்பர்கள் தவிர்த்த ஒரு விஷயத்தை பற்றி நானும் மிக கவனமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் செல்வன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (அல் கொய்தா ) படங்களை போட்டு நம்மை அசிங்கப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது:)).இந்த கட்டுரை ரோசா, பிரபு, செல்வன், குழலி ஆகியோர் போட்ட பதிவுகளுடன் சம்பந்தப்பட்டது. வேறு ஒரு கோணத்தில் அணுகியிருக்கிறேன்.

நாகரீக சமுதாயத்தில் ஒரு மனிதனை சமூகமே(அரசாங்கமே) கொல்வது சரியா என்று கேட்பது ஒரு நிலைப்பாடு. இதை பற்றி பேசுபவர்களுக்கு குற்றவாளிகளின் குற்றம் என்பது ஒரு பொருட்டே அல்ல. குற்றத்திற்கு தண்டனை மரணம் என்பதை இவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். தண்டனை பற்றிய பயமே குற்றத்தை குறைக்கும் என்பது தவறு என்றும் அது சரி என்றால் இன்றைய சமுதாயத்தில் குற்றமே நடைபெறுவதில்லையா? என்பதும் இவர்கள் கேள்விகள்.நாகரீகத்தில் முன்னேறியதாக சொல்லப்படுகிற ஐரோப்பிய சமுதாயத்தை இவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள். உஷா பதிவு உதாரணம்.

இன்னொரு நிலைப்பாடு வஜ்ரா கூறியுள்ளது. பாதிரியார் கொலையில் தாராசிங்குக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ஆதரித்தவர்கள் இதை எதிர்ப்பது ஏன் என்பது. இதிலும் வெறுமனே அரசியலை மட்டும் கூறி எதிர்க்காமல் மரண தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று கூறி எதிர்ப்பதை அவர் கேள்வி கேட்டுள்ளார். இவர்களுக்கு மரண தண்டனை என்பதின் மேல் என்ன நிலைப்பாடு என்பது முக்கியமல்ல. ஒரு சார்பு இருக்கக்கூடாது என்பது தான் இவர்களின் நிலை.இதில் நியாயம் உள்ளது.

மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். மக்களை திருப்திப்படுத்த இது அவசியம் என்றால் எதிர்தரப்பில் நரேந்திர மோடி போன்றவர்களை தூக்கில் போட்டால் பலர் திருப்தியடைவார்கள். இதை செய்யமுடியுமா என்ற வாதத்தை ஒரு இஸ்லாமிய பதிவாளர் எழுதியிருக்கிறார்.இந்த வாதம் எதற்கு வருகிறது என்றால் இது வெறும் கிரிமினல் வழக்கு மட்டும் அல்ல.பொலிடிக்கல் வழக்கும் கூட என்ற எண்ணம் ஒரு சாரார் மத்தியில் நிலவுகிறது.இன்றும் பிரேமதாசாவை கொன்ற விடுதலை புலிகளுடன் இலங்கை அரசாங்கம் எப்படி பேச்சு வார்த்தை நடத்துகிறது என்பது போன்ற கேள்விகளை இங்கு போட்டு பார்க்கலாம். ரொம்பவும் நுட்பமான பகுதிக்கு வருகிறேன்.

இனி ரோசா, செல்வன் மற்றும் குழலி ஆகியோர் பதிவுகளைப் பார்ப்போம்.தீவிரவாதியை தூக்கில் போட வேண்டும் என்று முழக்கங்கள் ஒலிக்கின்றன. நாகரீக சமுதாயத்தில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் பிரதிநிதிகளை கொல்ல முயற்சிப்பது என்பது கொடிய குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை.அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது சரிதான்.நாமும் முழங்குகிறோம்.நியாயமான முழக்கம்தான்.

ஆனால் காஷ்மீர் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்.அங்குள்ள அனைத்து அமைப்புகளும் இதை எதிர்க்கின்றன.இங்கு நானும் மிக ஜாக்கிரதையாக வாக்கியங்களை அமைக்க வேண்டி இருக்கிறது.நாம் இங்கு இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பார்க்கும் பார்வைக்கும் அங்கு வாழும் மக்களின் பார்வைக்கும் இருக்கும் வேறுபாடுகளை நான் கவனிக்க முயற்சிக்கிறேன். காஷ்மீர் மக்களின் பார்வை என்ன என்பதை நாம் சொல்லமுடியுமா? நாம் இதை காதில் கேட்க விரும்பாமல் இருக்கலாம். இது சரியா தவறா, உண்மையா என்று எல்லாம் என்னால் கூற முடியவில்லை. முதன் முதலில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்த ஒரு காஷ்மீர் நபரை தூக்கில் போட்டதே அந்த பகுதி மக்களுக்கு இன்னமும் ஆறாத ரணமாக இருப்பதாக கூறுகிறார்கள். அப்சலை குழலி பகத்சிங்காக ஆக்குகிறார் என்று செல்வன் கூறுகிறார். குழலியினுடைய கருத்து கடுமையாக இருந்தாலும் செல்வனுடையதும் மட்டையடி தான்.

குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை.வெறும் மரண தண்டனை பற்றிய விவாதம் மட்டும் இல்லை இது.உதாரணமாக வீரப்பன் கூட்டாளிகளை தூக்கில் போடுவதை பற்றிய விவாதம் வந்தால் அதை நாம் அரசியல்ரீதியாக அணுக முடியாது.(தமிழ் தீவிரவாதிகளுடன் வீரப்பன் கூட்டணி சேர்ந்து காமெடி செய்த துன்பியல் நிகழ்வுகள் வேறு).

சென்சிட்டிவ்வான புள்ளிகளை தொட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். அப்சல் என்பவனின் பங்கு இந்த குற்றத்தில் என்ன என்பதைப் பற்றி யாரும் எழுதவில்லை. உடந்தையாக இருந்தவன் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கின் நுட்பமாக பகுதிக்குள் செல்ல விரும்பவில்லை. தெரியவில்லை என்பது ஒரு காரணம். இந்த கட்டுரையின் பேசுபொருளுக்கு அவசியமில்லை என்பது மற்றொரு காரணம்.ரோசாவசந்த் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்களின் வழக்கை மேற்கோள் காட்டியதும் இந்த இடத்தில் யோசிக்கத்தக்கது.

கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்கப்பட்டால் அப்சல் தூக்கில் தொங்க வேண்டியதுதான்.இதுவரை எந்த தூக்கு தண்டனை குற்றவாளியையும் அப்துல் கலாம் சந்தித்ததில்லையாம்.ஆனால் அப்சலின் உறவினர்கள் சந்தித்தாராம்.ஒரு அரசியல் முடிவாக இந்த மரண தண்டனை நிறுத்தப்படலாம் என்ற ஆங்கில மீடியாக்கள் கூறுகின்றன.அந்த அரசியல் முடிவு சரியா தவறா என்று கூறமுடியாது.இந்த விவாதங்களுக்கு முடிவு என்பதே இல்லை.எங்கிருந்து பார்க்கிறோம் என்பதுதான் விஷயம்.

உன் கருத்து என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....

அப்சலை தூக்கில் போடுங்கடா

( Although i have not supported or opposed any section, given the sensitiveness of the subject moderation will be strictly enforced)

49 comments:

Anonymous said...

muthu,

you can read kashmiri media reports to know more about this issue.

Muthu said...

செல்வனுக்கும் பொதுபுத்திக்கும் பயந்துகிட்டு எவ்வளவு முறை இதை திருத்தி எழுதினேன்னு எனக்கு
தான்யா தெரியும்ஃகாஷ்மீர் மீடியாவா? அய்யா ஆளை விடுங்க..

(செல்வன் காஷ்மீர் பிரச்சினை பற்றி ஒரு பதிவு விளக்கமாக எழுதுகிறேன் என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்.அதுக்காக வெயிட்டிங்)

Anonymous said...

மட்டையடி என்றால் என்னங்க அர்த்தம்?

குழலி / Kuzhali said...

//குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை
//
அதே அதே, நான் கூட என்பதிவில் சரி தவறு என்று எதுவுமே சொல்லவில்லை...

//ஏனெனில் செல்வன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் (அல் கொய்தா ) படங்களை போட்டு நம்மை அசிங்கப்படுத்திவிட வாய்ப்பு உள்ளது:)).//
ஹி ஹி அதெல்லாம் கருத்து சுதந்திரம் கண்டுக்காதிங்க, அதுக்கு ஒரு கருத்து சுதந்திர காவலாளியும் ஒத்து ஊதுவார்

குழலி / Kuzhali said...

//உன் கருத்து என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....
//
அது....

Amar said...

//அங்குள்ள அனைத்து அமைப்புகளும் இதை எதிர்க்கின்றன//

எதைவைத்து அப்படி முடிவு செய்தீர்கள்? மீடியாவில் வரும் ரிப்போர்டுகளை வைத்தா?

ஸ்ரீநகரிலும், பள்ளதாக்கு பகுதிகளையும் தவிர காஷ்மீரில் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லையே.

லே,லடாக், ஜம்மு என்று ஏகபட்ட குழுக்கள், மதங்கள் அடங்கியது தான் கஷ்மீர் மாநிலம். இஸ்லாமியர்கள் மட்டும் கஷ்மீரில் வாழவில்லை. அதிலும் இரண்டு பிரிவினர் உண்டு. ஷியா-சன்னி சண்டைகளால ஒரு பிரிவு இந்தியாவையும் மற்றொரு பிரிவு அவர்களையும் ஆதரிக்கிறது.

பொதுபுத்தி?

Anonymous said...

அய்யா,
உள்குத்துல உங்கள மிஞ்சவே முடியாதா?

Anonymous said...

I mean your comment (#2)

தருமி said...

எவ்வளவு முறை இதை திருத்தி எழுதினேன்னு எனக்கு
தான்யா தெரியும//
ஆனால் திருத்தமாக எழுதவில்லைபோல் தெரிகிறதே!

Muthu said...

dharumi,

true..some of the vital issues i dont want to write....we can discuss in our meeting at madurai...

when you are going to post?

Muthu said...

//மட்டையடி என்றால் என்னங்க அர்த்தம்?//

:)))

சொல்றன்.தனிமடல் அனுப்பவும்:))

Vaa.Manikandan said...

//உன் கருத்து என்ன என்பதை கடைசிவரை சொல்லவே இல்லையே என்கிறீர்களா? என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....

அப்சலை தூக்கில் போடுங்கடா//


யோவ்...கொஞ்ச நஞ்ச அலம்பலா யா பண்ணுறீர்?

Muthu said...

மணி,

//யோவ்...கொஞ்ச நஞ்ச அலம்பலா யா பண்ணுறீர்//

கும்பலில் கோவிந்தா போடறதுக்கு எனக்கு மட்டும் உரிமையில்லையா?:)))

நாம் பார்க்க விரும்பவில்லை என்பதால் சில விஷயங்கள் இல்லை என்று ஆகிவிடாது.

வஜ்ரா said...

//
என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....
//

அடுத்தவன் சொல்லித்தான் தெரியணும்னா அது பொது புத்தியா அல்லது பொதுவாக புத்தியின்மையா?

Anonymous said...

திராவிட தமிழர் தலைவர்,வட்ட தோசை புகழ் மானமிகு முத்து அவர்களே,

உங்களுக்கு என்று ஒரு கருத்து இருந்தால் அதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.அதை சொல்ல விரும்பாத போது இப்படி ஒரு பதிவு போடுவது வெட்டி வேலை.தைரியமாக நான் அப்சலை தூக்கில் போடுவதை எதிர்க்கிறேன் என்று எழுத வேண்டியதுதானே.எதற்கு இப்படி சுற்றி வளைத்து எழுத வேண்டும்.

Anonymous said...

அடுத்தவன் சொல்லித்தான் தெரியணும்னா அது பொது புத்தியா அல்லது பொதுவாக புத்தியின்மையா?

நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை

Muthu said...

vajra,

நீங்க சொல்றது புரியுது..ஆனால் என்னுடைய அந்த ஸ்டேட்மெண்ட் விரிவானது.விளக்கமானது.
யோசியுங்க.

நீங்க சொல்றது நான் சொல்ல வந்ததை புரூவ் பண்ணுது.:))

Muthu said...

//திராவிட தமிழர் தலைவர்,வட்ட தோசை புகழ் மானமிகு முத்து அவர்களே, //

i appreciate this gesture..do u want any paisa for this?



//உங்களுக்கு என்று ஒரு கருத்து இருந்தால் அதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.அதை சொல்ல விரும்பாத போது இப்படி ஒரு பதிவு போடுவது வெட்டி வேலை.தைரியமாக நான் அப்சலை தூக்கில் போடுவதை எதிர்க்கிறேன் என்று எழுத வேண்டியதுதானே.எதற்கு இப்படி சுற்றி வளைத்து எழுத வேண்டும். //

somebody asked the meaning of mattaiadi..i refer them to read this comment :))thanks anony for rescue..

Anonymous said...

செல்வனுக்கும் பொதுபுத்திக்கும் பயந்துகிட்டு எவ்வளவு முறை இதை திருத்தி எழுதினேன்னு எனக்கு
தான்யா தெரியும்.

உங்கபாடு ஐயோ பாவம்தான்.குழலி,ரோசா வசந்த எழுதினதுக்கு எதிர்ப்பாவும் எழுத முடியாது, சொல்வனை ஆதரிச்சும் எழுத முடியாது.எழுதாம தோசை வட்டமாக சுடுவது எப்படின்னு செஞ்சு பாத்திருக்க்லாம்.என்ன பண்றது, எழுதினாலும் கெட்ட பேர், எழுதாட்டியும் கெட்ட பேர்ன்னு ஆய்டுச்சு.குழலி கருத்துதான் நம்ம கருத்துன்னு ஒரு சவுண்ட விட்டுட்டு பதுங்கிட வேண்டியதுதானே

Anonymous said...

do u want any paisa
Paisa no only dollars :)
Dosa - a BIG NO :)

Muthu said...

//உங்கபாடு ஐயோ பாவம்தான்.குழலி,ரோசா வசந்த எழுதினதுக்கு எதிர்ப்பாவும் எழுத முடியாது, சொல்வனை ஆதரிச்சும் எழுத முடியாது.எழுதாம தோசை வட்டமாக சுடுவது எப்படின்னு செஞ்சு பாத்திருக்க்லாம்.//

யொவ்..மேட்டா தெரிஞ்சு தான் பேசறியா...ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குய்யா..
தோசை மாவு தீந்துருச்சு...மேகி நூடுல்ஸ்ல ஒப்பேத்திட்டிருக்கேன்..

Muthu said...

anony,

dollars venduma? :)) சும்மா பேர் போட்டே எழுதுமையா..:))

Anonymous said...

you dont have BACK BONE. Say what do you think. Why Abdul Kalam met
Murderer's Family. Why did not Abdul Kalam meet
other muderer's Family in India?

Muthu said...

//you dont have BACK BONE. Say what do you think. Why Abdul Kalam met
Murderer's Family.//


பேர் போடாம எழுதற சோதா பேக்போனை பத்தி பேசுதுன்னு நான் சுலபமா சொல்லிறலாம்.
வேண்டாம்.உனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.:))

அப்துல் கலாமை புனித பிம்பமாக என்னிக்குமே நான் சொன்னது கிடையாது.சொல்றவர்களை கேளுங்கள்.

வஜ்ரா said...

//
நீங்க சொல்றது புரியுது..ஆனால் என்னுடைய அந்த ஸ்டேட்மெண்ட் விரிவானது.விளக்கமானது.
யோசியுங்க.

நீங்க சொல்றது நான் சொல்ல வந்ததை புரூவ் பண்ணுது.:))
//

யோசித்துத் தான் எழுதினேன்...

இப்ப உங்களை தேசதுரோகின்னு சொல்லும் ஒரு கூட்டம் அதுக்கு பயந்துகிட்டு தூக்கில் போடும்பீங்க...

அடுத்து, வேறு ஏதாவது சொல்லி மிரட்டும் ஒரு கூட்டம், அதுக்கு பயந்துகிட்டு இல்ல போடாதேம்பீங்களா?

அதைத்தான் பொது புத்தியா புத்தியின்மையா என்று கேட்டேன்.?

இப்ப நீங்க என்ன சொல்ல வந்தீங்க? அத நான் எனக்குத் தெரியாமலே prove பண்றதுக்கு?

என் நிலைப்பாடு,
1966 ல் எகிப்தில் Sayyid Qutb ஐ தூக்கில் போட்டார்கள், குற்றம் என்ன வென்றால் "plotting to overthrow the state".

யாரும் இதற்கு Friends of Sayyid என்று அமைப்பு நிறுவி போராடவில்லை.

இப்ப தூக்கில் போடாதே, காட்டுமிராண்டி சட்டம், என்றெல்லாம் பேசுபவர்கள் எப்பவும் இதே மன் நிலையில் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதுமில்லை.

பின்னே இவர்கள் பேச்சை ஏன் இவ்வளவு சீரியஸா எடுதுகிட்டு எல்லோரும் பதிவு மேல் பதிவு போட்டு தமிழ்மணத்தை நிரப்புகின்றீர்கள்?

Afzal guru should be hanged FULL STOP.

Muthu said...

vajra,

that is what i said.you will not understand what i mean in that sentence.

வஜ்ரா said...

//
that is what i said.you will not understand what i mean in that sentence.
//

I accept that i do not have that kind of intellectual capacity to understand that complicated sentence.

I will be grateful if you could elaborate on that.

Basically, You are now tight lipped because, your பெரிசுகள், are taking a stand contradictory to your conscience. Now you do not know what to do. So, you equivocate.

bala said...

முத்து அவர்களே,

ந்ல்ல பதிவு,

ஆனால் காஷ்மிர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்,மும்பையில் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதெல்லாம் சுப்ரீம் கோர்ட் கணக்கில் எடுக்க ஆரம்பித்தால் மிக மோசமான முன்னுதாரணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதல்லவா?

சுப்ரீம் கோர்ட் என்ற அமைப்பில்/constitution என்ற அமைப்பில்,Law of the Land என்ற கொள்கையில் மரியாதை உடையவர்கள் சட்டத்தின் தீர்ப்பை ஏற்றே ஆக வேண்டும்.

தீவிர வாதிகள் செய்கின்ற குற்றங்கள் சாதரண குற்றங்கள் அல்ல கருணையோடு அணுகுவதற்கு.

பாலா

Muthu said...

என் கருத்தை நீங்கள் நியாயமான முறையில் உருவாக்குகிறீர்களா என்பதை பற்றிய வாக்கியம் அது.

புரிகிறதா?

நல்லடியார் said...

நகைச்சுவையா எழுதி இருக்கீங்களா சீரியஷா எழுதி இருக்கீங்களான்னு முடிவுக்கு வர கஷ்டமாக இருக்கிறது :-(

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஸ்பாட்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்கள். அப்ஷல் நேரடியாக தாக்குதலில் ஈடுபடவில்லை என்றே அவனின் வழக்குக் குறிப்புகள் (Case History) சொல்கின்றன. இவ்வழவு பெரிய கொடுந்தாக்குதலுக்கு அப்ஷல் மட்டும் பின்னனியில் இருந்திருப்பார் நம்ப முடியவில்லை. அப்ஷலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியதில்லை; பின்னனியில் இருந்த மற்றவர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வரும்வரையாவது மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

இன்னொரு பக்கம், ஒரு குற்றவாளிக்காக காஷ்மீரிகள் ஒன்றுபட்டிருப்பது அவன் முஸ்லிம் என்பதற்காக என்றால் எத்தனையோ காஷ்மீர் முஸ்லிம்கள் விசாரனைக்கு அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்ட போதும் கொதிந்தெழுந்திருக்க வேண்டும். காஷ்மீரிகளின் ஒற்றுமையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்றபடி வழக்கம் போல் விவாதத்தை திசை திருப்ப வாய்ப்புள்ளதால்,ஜூட்!

என் பதிவில் சொன்னவற்றில் மாற்றுக் கருத்திருந்தால் குறிப்பிடவும்.

அன்புடன்,

Muthu said...

//your பெரிசுகள், are taking a stand contradictory to your conscience.//

தல, நீங்க யாரை சொல்றீங்க?

Muthu said...

friends,

what i mean is things being viewed by different perspective from kashmiri people angle. my view and your view may be different.that does not stop them to tell their view.

that is what arundhati and company are doing.

மனதின் ஓசை said...

முத்து.. வித்தியாசமான கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள். அப்சல் பிரச்சினையை கலக்காமல் பொதுவாக யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

//அப்சல் என்பவனின் பங்கு இந்த குற்றத்தில் என்ன என்பதைப் பற்றி யாரும் எழுதவில்லை. //

இது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

வஜ்ரா said...

//
what i mean is things being viewed by different perspective from kashmiri people angle. my view and your view may be different.that does not stop them to tell their view.
//

As you have rightly understood my stand. I have nothing more to say.

As a parting comment, i say, I have no qualms in claiming that arundhathi's stand in this is laughable. She is a publicity addicted neo-celebrity.

What she represents is a minority of opinion and not majority of Kashmir.


//
தல, நீங்க யாரை சொல்றீங்க?
//

உங்களுக்குத் தெரியாதாக்கும்?

Muthu said...

//What she represents is a minority of opinion and not majority of Kashmir//

debatable...

//உங்களுக்குத் தெரியாதாக்கும்?
//

என் தல யாருங்கறதை மத்தவங்க தான் முடிவு செய்யறாங்க..நீங்களெ சொல்லிடுங்க..:))

Muthu said...

friends,

nalladiyar briefly explained afsal's involvement theory..

**********


i agree with bala in judiciary's part..what iam telling is political part of the issue..

thanks bala

ரவி ஸ்ரீநிவாஸ் said...

See the most recent posts in
http://ravisrinivas.blogspot.com

மட்டையடிக்க சில மகாவாக்கியங்கள்

வலைப்பதிவர்கள் சிலர் மட்டையடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவும் பொருட்டு சில மகா வாக்கியங்கள் கீழே.

1,இன்றைய சரி நாளை தவறாக இருக்கலாம்.நாளைய தவறு நேற்று சரியாகவும், இன்று சரியில்லாமலும் இருக்கலாம்.எது சரி என்று யார் சொல்ல முடியும்.எனவே அப்சலுக்கு
மரண தண்டனை கூடாது.
2, நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும், அற நோக்கில்
அநீதியாக இருக்கலாம். எதையும் வெறும் சட்டக் கண்ணோட்டத்திற்கு அப்பால் புரிந்து
கொள்ள வேண்டும். அறக்கணோட்டம் திராவிட அறக் கண்ணோட்டம் என்று பொருள் கொள்க.
திராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.
எனவே அப்சலை தூக்கில் போடுவது தவறு.
3,மரண தண்டனை சட்டத்தின் தீர்ப்புதான், சமூகத்தின் தீர்ப்பல்ல.சமூகம் சட்டத்தினை விட
உயர்ந்தது.சமூகத்திற்காக சட்டமே, அன்றி சட்டத்திற்காக சமூகம் இல்லை
4,வரலாறுதான் எது சரி, தவறு என்று தீர்மானிக்கும். எனவே அப்சல் குறித்து வரலாறு தீர்மானிக்கட்டும். சட்டமோ,நீதிமன்றமோ தீர்மானிக்க வேண்டாம்
5,தேசத்துரோகம் என்று கூறுவது தவறு, இந்தியா ஒரு தேசமாக உருவாகவே இல்லை,
இது சாதிய சமூகமாக இருக்கிறது, அப்படி இருக்கும் போது தேசத்துரோகம் எப்படி
சாத்தியமாகும்.
6,பாரளுமன்றம் ஒரு கட்டிடம்தான்.காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட காலனியத்தின்
குறியீடான பாராளுமன்றத்தினை தகர்ப்பதா தவறு.
7,கொல்லாமையே திராவிடர் அறம், மரண தண்டனையை புகுத்தியது ஆர்ய வந்தேறிகள்.
மரண தண்டனை திராவிட,தமிழர் நாகரித்திற்கு முரணானது.எனவே அப்சலை தூக்கிலடக்கூடாது.

தேவைப்பட்டால் இன்னும் வரும்....

Muthu said...

ravi,

super...நீங்க இதை வெச்சித்தான் மட்டையடிக்கிறீஙகளா?

anyway will read ur post.

Muthu said...

ரவி சார் கனவில் கூட திராவிடர்களை நெனைச்சிட்டு தான் இருக்கீங்களா? வேண்டாங்கய்யா..விட்டுடுங்கய்யா..

ரவி ஸ்ரீநிவாஸ் said...

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஸ்பாட்டிலேயே கொல்லப்பட்டு விட்டார்கள். அப்ஷல் நேரடியாக தாக்குதலில் ஈடுபடவில்லை என்றே அவனின் வழக்குக் குறிப்புகள் (Case History) சொல்கின்றன. இவ்வழவு பெரிய கொடுந்தாக்குதலுக்கு அப்ஷல் மட்டும் பின்னனியில் இருந்திருப்பார் நம்ப முடியவில்லை. அப்ஷலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியதில்லை; பின்னனியில் இருந்த மற்றவர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வரும்வரையாவது மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

The terrorists who attacked had been killed.It is alleged that
masterminds are in Pakistan.Even
if the Indian govt. gives the names
Pakistan wont hand over them.
He has helped the terrorists in the
plot.There is enough circumstantial
evidence against him.So why
should his hanging be postponed.

வஜ்ரா said...

//
Even
if the Indian govt. gives the names
Pakistan wont hand over them.

//


ஒரு பத்தியம் எப்படி தன்னை பைத்தியம் என்று ஒத்துக் கொள்ளாதோ, ஒரு தீவிர கொலைகாரன் எப்படி தான் கொலை செய்ததாக ஒத்துக் கொள்ள மாட்டானோ, அதே போல் பாகிஸ்தானும் எந்த நடவடிக்கிஅயும் எடுக்காது.

அந்த ஜெனரலை நம்பச் சொல்பவர்கள் நட்டு களண்ட கேசுகள். அதை நம் அரசும் செய்யும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

வலைப்பதிவு பற்றி சுஜாதா..
all for the sake of 15 minutes of fame...

இந்த பாகிஸ்தானை நம்பச் சொல்லும் அறிவுசீவிகள் பற்றி என் கணிப்பு...
All for the sake of 15% of vote.

சிறில் அலெக்ஸ் said...

//குற்றத்தை நாம் எப்படி பார்க்கிறோம்,எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து வழக்கின் தன்மைகள் மாறுகின்றன என்பது ஒரு பார்வை
//

உண்மையில் நீதிமன்றமும் - நீதிபதிகளும்- இதுபோல ஒரு முன் தீர்மானத்தோட நீதி வழங்கியிருந்தா? அது எவ்வளவு கொடுமையான விஷயமா இருக்கும். அவர்களும் மனிதர்கள்தானே.

சும்ம சும்மா மைனாரிட்டு துரப்ப பயன்படுத்துவது எனக்கு கொஞ்சமும் பிடிக்காத செயல் ஆனா இதுபோன்ற சில நேரங்களில் கொஞ்சம் யோசிக்கவே வேண்டியுள்ளது.

Sivabalan said...

முத்து,

//இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....//

இதை நான் வழிமொழிகிறேன்.

பதிவுக்கு நன்றி.

குழலி / Kuzhali said...

//என் தல யாருங்கறதை மத்தவங்க தான் முடிவு செய்யறாங்க..நீங்களெ சொல்லிடுங்க..:))
//
இது இன்னும் கலக்கல் தல

enRenRum-anbudan.BALA said...

Muthu,

Balanced views, what happened ;-)

Glad to hear that you are safe at Mangalore.


http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

ஓகை said...

அப்சலை தூக்குல போடுங்க "டா!"

'...தூக்குல போடுங்கடா' என்றொரு பதிவு முத்து-தமிழினி எழுதியிருக்கிறார். அங்கு இட்ட பின்னூட்டம் இது.

இதை என் வலைப்பூவில் ஒரு பதிவாக போட்டிருக்கிறேன்.

அதிர வைக்கும் தலைப்புகள் வைப்பது இப்போது வலையுலகின் போக்கு. அதன்படியும் மற்றபடிக்கு நுனுக்கமாயும் வைக்கப்பட்ட தலைப்பு. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, விசாரனை முடித்து, தீர்ப்பளித்து, அதை நடைமுறைப் படுத்தப் போகும் அரசு ஊழியர்களைத்தான் அப்படி டா போட்டு அழைக்கிறார் என்று முதலில் தோன்றினாலும் இங்கே ஒரு இக்கு வைத்திருகிறார். அதாவது 'என்னத்த சொல்றது? எல்லாரும் அவனை தூக்கில் போடுன்னு சொல்லு.. இல்லாட்டி உன்னிய தேசதுரோகின்னு சொல்லுவோம்னு சொன்னீங்கன்னா அவன தூக்கில் போடுங்கன்னு சொல்ற மொத ஆள் நான்தான்....' . முத்துவை தேசத் துரோகி என்று அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தூக்கில் போடுங்க என்கிறார். இல்லை, போடுங்க 'டா' என்கிறார். பின்னூட்டங்களில் அவர் மையமாக எழுதிவிட்டதாக பலரும், மேலும் அவருமே பதிவில் ஐயப் பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான பதிலைத் தான் அந்த டா வில் சூசகமாகச் சொல்லியிருக்கிறாரோ? தேசத் துரோகி என்று தன்னை யாரும் அழைக்கவில்லை என்றால் தூக்கில் போட வேண்டாம் என்கிற மறை பொருளையும் சொல்லுகிறாரோ என்கிற ஐயத்தை ஒதுக்கிவிட்டு பார்த்தால் அவர் தான் தேசத்துரோகி என்று அழைக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறை வியக்க வைக்கிறது. இந்த வியப்பு முத்துவின் முந்தைய பதிவுகளைப் படித்ததனால் வருகிறது.

' மரண் தண்டனைக்கான காரணங்களாக சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பதை ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் பிரபு ராஜதுரை எடுத்துக்கூறிய புள்ளிகளை நாம் கணக்கில் எடுக்க வேண்டும். ' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது ஒரு கனக்கு. எப்படி கணக்கில் எடுக்கவேண்டும் என்றும் முத்து தன் பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கூடவே பிரபு ராஜதுரை எழுதிய இதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ""ஷரியா" - சரியா?: ஓர் எதிர்வினை " என்கிற கட்டுரையை அவர் மரத்தடி குழுமத்திற்காக எழுதியிருக்கிறார்.

குழலிக்கு பிடிக்கிற மாதிரி எழுதியிருக்கிறார் முத்து. குழலி முதல் பின்னூட்டத்தில் 'அதே அதே' என்கிறார். அடுத்த பின்னூட்டத்தில் 'அது....' என்று சொல்கிறார். ஆகவே குழலியின் பதிவுடன் சேர்த்தே இந்தப் பதிவுக்கும் பொருள் கொள்ளலாம் என்பதும் ஒரு விருப்பத் தேர்வாக(choice) இருக்கிறது.

இந்தப் பதிவின் திரண்ட கருத்து அந்த 'டா' வில் இருக்கிறது என்பதே நான் புரிந்து கொண்டது.

'ஆமாண்டா' என்றும் அதற்கு மேலும் பின்னூட்டங்கள் வரக்கூடும். நல்ல விளக்கங்களுடன் கூடிய பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.

Muthu said...

அடா புடா என்று ஏதாவது பின்னூட்டம் வந்ததா?:))

அந்த வாக்கியத்தில் ஒளிந்துள்ள அரசியலை நீங்கள் எளிமைப்படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது.

அந்த வாக்கியத்தை பற்றி வஜ்ராவுக்கு நான் ஒரு விளக்கம் கொடுத்துக்ளென்.தை படிக்கலாம்.

மற்றபடி பிரபு அவர்களின் மரத்தடி சமாச்சாரங்களை படிக்கிறேன்.ஒரு புதிய பதிவு எழுதலாம் என்று தோன்றுகிறது.


It is unfortunate that nobody replied to my point :(

manasu said...

தூக்கில் போட வேண்டாம், அப்ப தான் எதாவது மினிஸ்டர் மகளோ இல்லை ஃப்ளைட்டோ கடத்தப்படும் போது விடுவிக்க வசதியாய் இருக்கும்.

(இவ்வளவுக்கு அப்புறமும் நீங்க ஒண்ணுமே செய்யலயா...?

இல்லம, ஏன்னா என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்கய்ய்ய்.....)

இதான் இப்ப ஞாபகம் வருது, என்ன பண்ண.

Anonymous said...

//Samudra said...

//அங்குள்ள அனைத்து அமைப்புகளும் இதை எதிர்க்கின்றன//

எதைவைத்து அப்படி முடிவு செய்தீர்கள்? மீடியாவில் வரும் ரிப்போர்டுகளை வைத்தா?

ஸ்ரீநகரிலும், பள்ளதாக்கு பகுதிகளையும் தவிர காஷ்மீரில் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லையே.

லே,லடாக், ஜம்மு என்று ஏகபட்ட குழுக்கள், மதங்கள் அடங்கியது தான் கஷ்மீர் மாநிலம். இஸ்லாமியர்கள் மட்டும் கஷ்மீரில் வாழவில்லை. அதிலும் இரண்டு பிரிவினர் உண்டு. ஷியா-சன்னி சண்டைகளால ஒரு பிரிவு இந்தியாவையும் மற்றொரு பிரிவு அவர்களையும் ஆதரிக்கிறது.

பொதுபுத்தி?//

என்ன இது? பச்சப்புள்ள தனமா இல்ல இருக்கு.

இந்தியா ஆக்கிரமித்துள்ள கஷ்மீர் என்பது கஷ்மீர் பள்ளத்தாக்கு தானே (ஸ்ரீநகர் & சுற்றியுள்ள பகுதிகள்)
பள்ளத்தாக்குப் பகுதியில் அறுதிப் பெரும்பான்மையினர் இசுலாமியர் தான். அவர்களில் எத்தனை பிரிவு இருந்தாலும், அனைவருமே அப்சலின் தூக்கு தண்டனையை எதிர்க்கின்றனர்.

இன்று வரையிலும் ஜம்மு & கஷ்மீர் என்று தானே அழைக்கிறார்கள். கஷ்மீர் மாநிலம் என்று அழைப்பதில்லையே? ஒருவேளை அமுத்ராவுக்கு அளவுக்கு மிஞ்சிய தேச பக்தி பொது புத்தியையே மழுங்கடிச்சிடுச்சோ?

பொது புத்தி = ஜெனெரல் நாலெட்ஜ்?