Thursday, October 05, 2006

மங்களூரில் இந்து முஸ்லீம் கலவரம்

நேற்றுத்தான் ஒரு முழு அடைப்பு நடந்து முடிந்தது இந்த பந்த்தினால் நான் எப்போதும் சாப்பிடும் உணவகம் நேற்றைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் நான் சொந்தமாக சமைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு ஆளானேன்.MTRல் மசால் தோசையை கூட பார்சலாக செய்து விற்கிறார்களாம். நண்பர்கள் சொன்னார்கள். அது சரியாக வராது என்பதால் MTR உடனடி கலக்கல்(மிக்ஸ்) தோசை மாவை வாங்கி தோசை முயற்சி செய்திருந்தேன். அதுவும் சரியாக வரவில்லை. சோர்ந்து போயிருந்த நான் இன்று காலையில் முதல் வேலையாக ஓட்டலுக்கு ஓடினேன். இந்து முஸ்லீம் பிரச்சினையினால் இன்றும் பந்த் என்றார்கள்.

"அவுதா" என்றேன்.இப்போது சொல்ப சொல்ப கன்னட வார்த்தைகளை அங்கங்கே பொருத்தமான தருணங்களில் வீச பழகியிருந்தேன். நான் குடியிருக்கும் பகுதி இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி.அனைவரும் நட்புடன் பழகுவார்கள். பஜ்ரங் தள் செய்த கலாட்டாதான் காரணம் என்றார் ஒரு பெரியவர்.இஸ்லாமிய மக்களும் பயத்தில் தான் இருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது.

சரி அலுவலகத்திற்கு சென்று விடுவோம். கேன்டீன் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றேன்.ஏதோ சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு இணையத்தை திறந்து கலவரத்தைப்பற்றிய செய்தியை தேடினேன்.

நேற்று நடந்த முழு அடைப்பே மராட்டியர் பெருவாரியாக வாழும் பெலகாம் பகுதியை மகராஷ்ட்ராவுடன் சேர்க்கக்கூறி அந்த பகுதி மக்களில் ஒரு பிரிவினர் (இவர்களில் மக்கள் பிரதிநிதிகளும் உண்டு)போராட்டங்கள் நடத்துவது பற்றித்தான். ஆனால் பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தது கன்னட அமைப்புகள். இந்த அமைப்புகள் இந்த விஷயத்தில் மத்திய அரசின் போக்கை கண்டிக்கின்றனவாம்.இந்திய தேசியத்தில் என்ன பிரச்சினையை கண்டார்கள் இந்த பெலகாம் மக்கள் என்று தெரியவில்லை.எங்கு இருந்தால் என்ன? எல்லாம் இந்தியாதானே? சர்வம் இந்தி மயம் தானே என்று அவர்களுக்கு கிளாஸ் எடுக்க நம் வலைப்பூ தேசியவாதிகள் அங்கு இல்லை போலிருக்கிறது.

சரி இன்றைய சமாச்சாரத்தை பார்ப்போம்.மங்களூரில் சிறுபான்மை ஜனதொகையும் அதிகம் தான். நிறைய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அடங்கிய ஊர் இது. ஏற்கனவே cow slaughter எனப்படும் மாட்டுக்கறி சமாச்சாரத்தில் இங்கு பிரச்சினை புகைந்துக்கொண்டு தான் இருக்கிறது.

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செய்தி படித்தேன்.மிகவும் சுவாரசியமானது மாட்டை வெட்டி கறி போடக்கூடாது என்பதற்காக slaughter house எனப்படும் கறி வெட்டப்படும் இடத்தை நகராட்சி ஏலத்தில் பி.ஜே.பி, பஜ்ரங் தள் ஆட்கள் எடுத்துவிட்டார்களாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டம்..எப்படி? புத்திசாலித்தனமாக அக்கிரமம் செய்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் நாம் படிக்கவேண்டும்.

நாட்டை இந்துமயப்படுத்தும் இவர்கள் போராட்டத்தின் ஒரு அத்தியாயம் தான் நேற்றைய கலவரமும். இப்போது கூறப்பட்டுள்ள செய்தி என்னவெனில் நேற்று இரவு இது போன்ற மாடுகளை வெட்ட போய்க்கொண்டிருந்த ஒரு வேனை பஜ்ரங் தள் ஆட்கள் வழிமறித்தார்களாம்.அதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் நகரின் பல பகுதிகளுக்கும் பரவியது.உயிர்சேதம் பற்றி தகவல் இல்லை.

பிரச்சினைக்குரிய அந்த வேன் ஒரு குவாலிஸ் கார்மீதும் ஒரு பெண்மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் அதனால் தான் பிரச்சினை என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.ஆனால் பஜ்ரங்தள் ஆட்கள் பங்கை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

முஸ்லீம்களோ, யாரோ மாட்டுக்கறி சாப்பிடுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை. இப்படி எல்லாவற்றையும் புனிதப்படுத்தி புனிதப்படுத்தி எதை சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்? என் அலுவலகத்தில் ஒரு நண்பர் அவர்கள் மாட்டை வெட்டும் முறையை தான் பஜ்ரங் தள் காரர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டினார்.

இதுபோன்ற முட்டாள்தனமான புனிதப்படுத்துதல்கள் கலவரங்களில்தான் வந்து முடிகின்றன.இந்த கலவரங்களிலும் உயிரிழப்பது அப்பாவி மக்கள்தான். இவர்கள் கிளப்பும் புனித வெறியில் மயங்கி உயிரை விடுவது பிற்படுத்தப்பட்ட மக்கள்தான் என்பது கொடுமையான செய்தி. கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலோனோர் முன்னேறிய வகுப்பினர் இல்லை என்ற செய்தியை இத்துட்ன் சேர்த்து பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட விஷம பிரச்சாரங்களுக்கு நடுவிலும் புனிதங்களை உடைக்க ஒரு சாரார் இருப்பது ஆசுவாசம் தருகிறது. அனைத்து தலைமுறைகளிலும் மக்களை உள்ளடக்கிய இந்த வகையான மக்களுக்கு தமிழகத்தில் பரவலான ஆதரவும் இருப்பது தமிழகத்தின் கடந்த நாற்பதாண்டு கால அரசியலின் சாதக விளைவுகளில் ஒன்று.

கடைசியாக, இன்று இரவு சாப்பாட்டுக்கு என்ன செய்வது? இன்றும் MTR தோசை தான். ஆன்லைன்ல சாப்பாடு கிடைக்காதாமே?

38 comments:

Muthu said...

கருத்து கந்தசாமியா எதுவும் பேசி திரியாம வீட்டுக்கு உடனே கிளம்பு என்று
மேலிடத்திலிருந்த ஆர்டர் வந்துவிட்டது..வுடு ஜுட்

Sivabalan said...

முத்து,

//இப்படி எல்லாவற்றையும் புனிதப்படுத்தி புனிதப்படுத்தி எதை சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்? //



நல்லா கேட்டீங்க... ம்ம்ம்ம்...

வஜ்ரா said...

As usual, politically active இந்துக்களை உங்கள் பிரஷ் கொண்டு வில்லனாக பெயிண்டடித்து விட்டீர்கள்...

பஜ்ரங் தள் முட்டாள்கள்...அவிங்க மாட்டெ வெட்டுனாங்கன்னா, இவிங்களுக்கு என்ன வந்தது...பன்னி வெட்டி பிரியாணி போட்டுட்டுப் போங்கடான்னு சொல்றேன்.. அப்ப இதே மாதிரி நீங்க பேசுவீங்களான்னு பார்ப்போம்..

Unknown said...

நான் சைவன்.உயிர்கொலையை விரும்பாதவன்.ஆனால் அசைவம் சாப்பிட மக்களுக்கு உரிமை இருக்கும்போது மாட்டை மட்டும் சாப்பிடாதே என்பது தவறு.அதுவும் தலித்துகளுக்கு புரத சத்து குறைவாக இருக்கும்போது அவர்கள் அதை விலைகுறைவாக கிடைக்கும் மாட்டுகறி மூலம் தான் பெறுகின்றனர்.அதை எல்லாம் மதத்தின் பெயரால் தடை செய்யும் பஜ்ரங்தள்(வானர சேனை) தன் பெயருக்கேற்ற வேலையை தான் செய்து கொண்டிருக்கிறது:-)சில வருடங்களுக்கு முன் ஹரியானாவில் மாட்டுத்தோலை உரித்த ஒரு தலித்தை இந்த வானரசேனையினர் அடித்தே கொன்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியாவில் சுகாதாரக்கேடான முறையில் மிருகங்கள் கொல்லப்படுவது உண்மைதான்.கோவை உக்கடத்தில் கொலைக்கூடம் இருக்கும்.மிகவும் நாற்றமெடுத்து அந்த ஏரியா முழுக்க ஈக்கள் நிரம்பி இருக்கும்.அதை கொஞ்சம் சரி செய்தார்கள் என்றால் மக்களுக்கு வியாதி வராமல் இருக்கும்.

அப்புறம் இன்னொரு கொசுறுத்தகவல்.உலகில் பீஃப் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு எது தெரியுமா?

இந்தியா.

Anonymous said...

இப்படி எல்லாவற்றையும் புனிதப்படுத்தி புனிதப்படுத்தி எதை சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்?

If Bajrang Dal is creating tension by this, in Tamil Nadu PMK and Tamil zealots are creating tension
in their own way (Kushboo controversy, film title in Tamil etc).All sectarian politics done
in whatever name should be condemned.

Muthu said...

vajra,

பன்றியை திங்கறதை முஸ்லீம் எதிர்த்தா அதுவும் தப்புதான்....இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும்
எதிர்க்கத்தான் வேண்டும்.....(நாய், குரங்கு போன்றவற்றை தின்பவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்
என்ன செய்வது? யார் எதை திங்கறதுன்னு கூடவா நாம சொல்லணும்?

selvan,

//உலகில் பீஃப் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு எது தெரியுமா?

இந்தியா. //

கேள்விப்பட்டுள்ளேன்..

ஆனா இதைத்தான் தவறு என்று ஒரு குரூப் புனித இலவச அட்வைஸ் கொடுக்குது...
கேட்டா மாட்டுதோலை மாடு உயிரோட இருக்கும்போதே உரிச்சாங்கன்னு ஒரு புருடா..
அப்புறம் இந்த சுகாதார கேடு சமாச்சாரமும் பாதி கதைதான்...கொஞ்சம் உண்மை இருக்கலாம்
ஆனால் இதற்காகத்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள் என்பது கடைந்தெடுத்த சப்பைக்கட்டு

anony,

According to me,kushboo can said anything abt herself..but "யார் இங்க ஒழுங்கு" என'று கேட்டது ஓவர்தான்.

சிறில் அலெக்ஸ் said...

இந்து மதம் தனிமனித சுதந்திரத்தை தருகிறது என்று சொல்லிட்டு அடுத்த நிமிஷமே மாடு திங்கக்கூடாதுங்க்குறது நியாயமாப் படல.மதம் தவிர்த்த சமூகப் பார்வை மதம் சர்ந்த 'Politically active' இந்தியர்களுக்கு இல்லை என்பதை பல விதங்களில் பார்க்கலாம்.

செல்வன் சொல்வதைப் போல யார் என்ன சாப்பிடலாம் என்பதையும் நாம்தான் தீர்மானிக்கவேண்டுமா?

சில நேரங்களில் மனிதனைவிட விலங்குகளுக்கு மதிப்பதிகமாயுள்ளது.

ஜயராமன் said...

முத்து அவர்களே,

நல்ல பதிவு. சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இருக்கும் சகிப்புத்தன்மையற்ற நிலை இந்தியாவில் எங்குமே இல்லை. இதை நினைத்து "ஆசுவாசப்"படுகிறீரகளா? நல்ல கூத்து!!!

ஏதோ பஜரங்கதள் புண்ணியத்தில் ஒருநாள் அரைகுறையாகவாவது உபவாசம் இருந்தீர்களே, அதுவரைக்கும் நல்லது. மனம் ஒரு நிலைப்பட்டு உடம்பு லேசாகும்.
:-)))
நன்றி

கால்கரி சிவா said...

செல்வன்,

தவறு உலகின் அதிகமாக Dairy ப்ராடெக்ட்களை உற்பத்தி செய்வதுதான் இந்தியா.

உலகின் அதிக அளவு பீப் ஏற்றுமதி செயவது ப்ரசில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து.

உலகின் நெ.1 தரமான பீப் கிடைப்பது அடியேன் வசிக்கும் ஆல்பர்ட்டா மாநிலம்.

இந்தியாவிலிருந்து பீப் வாங்க யாருமில்லை மாட் கௌ டிசீஸ் எனபடும் மாட்டுக்கோமாறி நோய் இந்தியாவில் மிக அதிகம்.

இங்கே பீப் சாப்பிடும் போது அரைகுறையாக சமைத்து சாப்பிடுகிறார்கள். அதனால் பீப் மிக சுத்தமாக இருக்கவேண்டும்.

நான் பீப் சமையல் குறிப்பு ஒன்றை பதிகிறேன். அதுதான் மிக அசைவ உணவு.
நாம் இந்தியாவில் சாப்பிடவது மாமிசத்தை கறிகாய் போல் சமைத்து. அது கதைக்கு ஆவாது

Anonymous said...

I am sure that First anonymous could be none other than our beloved "vari prinivas" :)

==
If what PMK does is similar to what bajrang does, let PMK continue to fight for tamil language and bajrang continue to discriminate and even kill muslims, and you will not have any problem with that..

How clever? kudos!!

ஓகை said...

பயம் கொஞ்சம் தெளிந்திருக்கிறது.

இந்தியாவில் பசு வதை செய்யக்கூடாது என்று சொல்லுவது தவறுதான். அவ்வளவுதான்.

ஓகை said...

//பீஃப் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு எது தெரியுமா?

இந்தியா. //

இதற்குக் காரணம் உலகில் அதிகமான கால்நடைநடைகளைக் கொண்டது நமது நாடுதான் என்று படித்திருக்கிறேன்.

Anonymous said...

//As usual, politically active

இந்துக்களை உங்கள் பிரஷ் கொண்டு வில்லனாக பெயிண்டடித்து விட்டீர்கள்//

வஜ்ரா யார் பிரஷ் அடிச்சா என்ன?

இந்த மாதிரி பிரச்சனைக்கேல்லாம் வேப்பிலைதான் அடிக்கனும்.

இப்படி பொலிடிக்கலா ஆக்டிவா இருக்கறதுக்கு சும்மா இருக்கலாம்.

சாப்பிடறதில கூடவா அரசியல் பண்ணனும்?

இதெல்லாம் வெட்டி வேலை. நான்வெஜ் பிடிக்கலேனா, சாப்பிடாதீங்க.
அதுக்கு நாங்க சாப்பிடறதிலே ஏனப்பா கை வைக்கிறிங்க.

ஜோ/Joe said...

//தமிழகத்தில் இருக்கும் சகிப்புத்தன்மையற்ற நிலை இந்தியாவில் எங்குமே இல்லை. //

நல்ல ஜோக்!

Amar said...

ஒரு ஆறு மாசம் கழிச்சு பாருங்க ஹிந்துக்களை கோபபடுத்தவேண்டும் என்றே மாடு வேட்டுவார்கள்.

அப்புறம் அதுக்கு பதிலடியா திரும்பவும் வானர சேனை எதாவது செய்யும். பழைய modus operandiகள் தான். புதிதாக எதை கண்டுபுடித்தீர்கள் என்று தெரியவில்லை.

கலவரம் செய்வோர் எல்லா மதங்களிலும் உண்டு. ஒரு ஊரில் வானர சேனை activeஆக இருந்தால் இன்னொரு ஊரில் உம்மா இயக்கம் எதாவது இருக்கும்.

காவல் துறைகளை சுதந்திரமாக செயல்படவிட்டால் போதும்...பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் பொழுது இந்த அடிதடி வேலைகளுக்கு யாரும் அதிகம் போக மாட்டார்கள்.

ஜயராமன் said...

ஜோ,

ஜோக்கில்லை. வாஸ்தவத்தைத்தான் சொன்னேன். இங்கு அரசியல்வாதிகள் ஒருத்தரை ஒருத்தர் தீராப்பகையாக பாராட்டுவதும், ஒரு சாதாரண மனித பண்பு கூட இன்றி ஒருவொருக்கொருவர் பொதுவாழ்வில் சந்திக்க மறுப்பதும், பலப்பல அணிகள் எதிரணி ஆட்களுடன் தீண்டாமை பாராட்டுவதும், அவ்வாறு சக மனித நேயத்துடன் பழகினால் அவர்கள் அரசியல் வாழ்வு பாழாவதும், சகிப்புத்தன்மையா?

நன்றி

Muthu said...

//தமிழகத்தில் இருக்கும் சகிப்புத்தன்மையற்ற நிலை இந்தியாவில் எங்குமே இல்லை.//


அரசியல்வாதிகளுக்கு இடையேயான உறவு மட்டுமே இதை நிர்ணயிக்காது ஜெயராமன் சார்.

இந்து மதத்தை காக்க போர்கொடி தூக்கிய அம்மாவும் அவர்தம் கட்சியும்தான் அரசியல்வாதிகளுக் கிடையேயான உறவு கெட காரணம்.

//ஏதோ பஜரங்கதள் புண்ணியத்தில் ஒருநாள் அரைகுறையாகவாவது உபவாசம் இருந்தீர்களே, அதுவரைக்கும் நல்லது. மனம் ஒரு நிலைப்பட்டு உடம்பு லேசாகும்.//

:))

நேற்று இரவு தோசை வெற்றிகரமாக சரியான வட்ட வடிவில வந்துவிட்டது என்பதை ஒரு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

Muthu said...

கால்கரி,

நீங்க பிஃப் சாப்பிடுவீங்களா?

i think india is big exporter can u give figures? i agree there may be decline in figures due to diseases..but still...

Muthu said...

//இதற்குக் காரணம் உலகில் அதிகமான கால்நடைநடைகளைக் கொண்டது நமது நாடுதான் என்று படித்திருக்கிறேன்//

சரி..அதனால் என்ன? what is the point here on the broader context?


samudra,

//பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் பொழுது இந்த அடிதடி வேலைகளுக்கு யாரும் அதிகம் போக மாட்டார்கள். //

தவறு சமுத்ரா.மங்களூர் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நகரம் தான்.
இன்றும் சகஜ நிலை திரும்பவில்லை.

Anonymous said...

//நேற்று இரவு தோசை வெற்றிகரமாக சரியான வட்ட வடிவில வந்துவிட்டது என்பதை ஒரு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்.//

தோசையை வட்டமாக போட்டதால் இனிமேல் நமது முத்து அவர்கள் "வட்ட தோசை கொண்டான்" என் அழைக்கப்ப்டுவார்.

அருண்மொழி said...

முதன் முதலில் மங்களுரில் வட்ட தோசை சுட்ட தலைக்கு "மங்களூர் தோசை கொண்டான்" என்ற பட்ட பெயர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரவனையான், தலைக்கு வேற பட்டம் ஏதாவது கொடுக்கலாமா என்று யோசித்து சொல்லுங்கள்.

ரவி said...

நூடுல்ஸ் முயற்ச்சி செய்யலாமே ? மால் போங்க, தக்காளி சூப் கூட பாக்கெட்ல கிடைக்குது...

பசுமார்க் அரைச்ச மாவு இருந்தாகூட வாங்கி அப்படியே ஊத்திக்கலாமே :))

Anonymous said...

முத்து,

உங்களது எழுத்துக்களில் ஒரு தேர்ந்த இலக்கியவாதியாவதற்கான நடை கூடி வருகிறது. வாழ்த்துக்கள்

Muthu said...

//உங்களது எழுத்துக்களில் ஒரு தேர்ந்த இலக்கியவாதியாவதற்கான நடை கூடி வருகிறது. வாழ்த்துக்கள் //

thangavel,

என்னை வெச்சி காமெடி கீமடி எதுவும் பண்ணலையே? :))

(யாருய்யா இந்த வசனத்த கண்டுபிடிச்சது..எப்ப நெனைச்சாலும் சிரிப்பா வருது)

Muthu said...

ravi,

now situation under control..i got lunch..(fish etc).

அருள்மொழி,

//"வட்ட தோசை கொண்டான்" என் அழைக்கப்ப்டுவார். //

:)))ஹிஹி என்னங்க இது? வரவணையான் கிட்ட போட்டு தர்றீங்க? மனுசன் ஓட்டி தள்ளிருவாரே..

டிபிஆர்.ஜோசப் said...

முத்து,

கேரளாதான் பந்துக்கு பேர்போன ஊர்ங்கற பேர் இருந்தது. அதையும் மிஞ்சிரும்போலருக்கு ஒங்க ஊரு.

அடிக்கடி வர்ற இந்த பந்தாலதான் நான் சமையலையே படிச்சிக்கிட்டேன். அஞ்சு வருசத்துல குறைஞ்ச பட்சம் 100 நாளாவது பந்துலயே போயிருக்கும்.

வட்டமோ சதுரமோ தோசை வந்தா சரிதான்..

அப்புறம் இந்த இ.மு கலவரம்..

அப்படியொன்னு அடிக்கடி வந்தாத்தானே ரெண்டு மதவாதிகளுக்கும் வேலையே இருக்கும்..

இதுல இடையில ஜயராமனோட அப்சர்வேஷனும் ஜோவோட கேள்வியும்.. வேடிக்கைதான்..

சகிப்புத்தன்மைய பத்தி பேச நமக்கெல்லாம் யோக்யதை இருக்கா என்ன?

Anonymous said...

//என்னை வெச்சி காமெடி கீமடி எதுவும் பண்ணலையே? :))//

முத்து, நெசமாத்தான் சொல்றேன், உங்க எழுத்து வர வர மிகவும் நன்றாகயிருக்கிறது. (முன்னாடி நல்லாயில்லையா எனக்கேட்டு என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடாதீர்கள்)

ரவி said...

என் பின்னூட்டத்துல இருந்த உள்குத்தை நீங்க கண்டுபிடிக்கல்லியா ?

Muthu said...

//சகிப்புத்தன்மைய பத்தி பேச நமக்கெல்லாம் யோக்யதை இருக்கா என்ன? //

joseph sir,

முன்னேர்றீங்க!! உள்குத்தெல்லாம் பலமா இருக்கு!!

நமக்கு கண்டிப்பா இருக்கு சார்...நம்மள மாதிரி இருக்கறவங்க பேசித்தான் பொதுகருத்தை உருவாக்கணும்.எதையும் பேசாம இருக்கறது பிரச்சினை தீர்க்காது.தள்ளித்தான் போடும்.இல்லாட்டி மக்களை மந்தமாக்கிடும்.அதை வேற யாராவது உபயொகப்படுதிடுவாங்க

Muthu said...

//(முன்னாடி நல்லாயில்லையா எனக்கேட்டு என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடாதீர்கள்)//

thangavel,

புரியுது..தனியா பேசிக்கலாம்... வலிக்குது..ஆவ்வ்வ்

ரவி,

இது நியாயமா? உள்குத்து குறைந்தபட்சம் குத்தப்பட்டவருக்காவது புரியவேண்டாமா? :))லைட்டா கோடு போடுங்க..புரிஞ்சிக்கறன்..

ஓகை said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

http://www.ndtv.com/topstories/showtopstory.asp?category=National&slug=Curfew+continues+in+Mangalore&id=20440

still situation is not improved.now curfew imposed:(

Anonymous said...

தல,

ஏன் சதுர தோசையோ, முக்கோண தோசையோ சுட்டு 'புரட்சி தோசை கொண்டான்' என பெயரெடுக்கக்கூடாது?

ஓகை said...

//இதற்குக் காரணம் உலகில் அதிகமான கால்நடைநடைகளைக் கொண்டது நமது நாடுதான் என்று படித்திருக்கிறேன்//

சரி..அதனால் என்ன? what is the point here on the broader context?

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நமது நாடு முன்னனியில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மாட்டிறச்சி உற்பத்தியில் நமது நாடு முன்னிற்குமானால் அதற்குக் காரணம் இந்தியா உலகில் அதிகமாகக் கால்நடைகளைக் கொண்டது என்பதனால் இருக்கும் என்று குறிப்பிட்டேன்.

அருண்மொழி said...

Looks like the situation has not improved at all. Take care.

Anonymous said...

//அலுவலகத்தில் ஒரு நண்பர் அவர்கள் மாட்டை வெட்டும் முறையை தான் பஜ்ரங் தள் காரர்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறி கிச்சுகிச்சு மூட்டினார்.
இதுபோன்ற முட்டாள்தனமான புனிதப்படுத்துதல்கள் கலவரங்களில்தான் வந்து முடிகின்றன//

இஸ்லாமியர்கள் 'ஹலால்' என்று சொல்கிறார்களே, அது குறித்து சொல்லுங்களேன்.

ஜோ/Joe said...

//இதுல இடையில ஜயராமனோட அப்சர்வேஷனும் ஜோவோட கேள்வியும்.. வேடிக்கைதான்..

சகிப்புத்தன்மைய பத்தி பேச நமக்கெல்லாம் யோக்யதை இருக்கா என்ன?//

ஜோசப் சார்,
இப்பல்லாம் ஜோ-வை அடிக்கடி வாருறீங்க ..ஏதாவது கோபமா? சொல்லுங்க..திருத்திக்குறேன் .உங்களுக்கு கண்டிப்பா எந்த உரிமை உண்டு.

தமிழகம் சகிப்புத்தன்மையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கியிருப்பதாக ஜெயராமன் சொல்கிறார் .அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நாடே பற்றி எரிந்த போது அமைதி காத்த மாநிலம் தமிழகம் .தமிழர்கள் வேறு மாநிலங்களில் தாக்கப்பட்ட போது பதிலுக்கு அவ்வாறு கீழ்தரமாக நடக்காத மாநிலம் தமிழகம் .மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அமைதியை விரும்பும் மக்களை அதிகமாக கொண்ட மாநிலம் தமிழகம் .சில அரசியல் ,சாதி ,கருத்து மோதல்,வலைப்பதிவு சண்டை குறித்த சகிப்புத் தன்மையை வைத்து ஒட்டு மொத்தமாக தமிழகத்தை அவ்வாறு சொல்லிவிட முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.

Anonymous said...

//தமிழகத்தில் இருக்கும் சகிப்புத்தன்மையற்ற நிலை இந்தியாவில் எங்குமே இல்லை.//

உளறலுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

சரியான காமடி தான். கிச்சு கிச்சு மூட்டுவதில் ஜெயராமனுக்கு நிகர் ஜெயராமனே.