Friday, October 27, 2006

மதுரை சந்திப்பு விவாதங்கள் 3

சில பேர்(மொக்கையன்) கேட்டது போல் மதுரை வலைப்பதிவாளர் சந்திப்பில் கவிதைகள் எதுவும் படிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.லிவிங் ஸ்மைலின் காட்டமான கேள்விகள் ஜுவியில் வந்ததைப்பற்றி விசாரித்தேன். அதைப்பற்றி இங்கு உஷா பதிவில் ஒரு விவாதமே நடந்தது எனக்கு அப்போது தெரியாது.அந்த ஜுவி கட்டுரை பொது மக்களிடையே எந்த விதமாக பாதிப்பை ஏற்படுத்தியது? எதிர்வினைகள் என்ன? என்றெல்லாம் கேட்டேன்.அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றார். பத்திரிக்கைகள் இதை வெறுமனே ஒரு வியாபார விஷயமாகத்தான் பார்க்கின்றன என்று அவர் நினைப்பதாக எனக்கு தோன்றியது.

அப்சல் விஷயத்தை பற்றி பேசும்போது பேராசிரியர் தருமியின் நண்பர் பேராசிரியர் சைலேஸ்(முனைவர்) ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார். தேசதுரோகிகளை சுட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆவேசப்பட்ட போது எனக்கே உடல் நடுங்கியது.சட்ட நுணுக்கங்கள் சம்பந்தமாக அட்வகேட் பிரபுவும் கவிஞர் சுகுணா திவாகரும் சில கேள்விகளை வைத்தப்போது முனைவர் சைலேஸ் தடுமாறினார்.

பேராசிரியர் தருமியும் அப்சல் தூக்கு விஷயத்தில் ஒரு தீவிரமான நிலைப்பாடு வைத்துள்ளார்.அவர் பதிவுடனோ வி த பீப்பிள் பதிவுடனோ அல்லது பினாத்தலாரின் பதிவுடனோ எனக்கு முரண்பட ஒன்றுமில்லை.ஒரு பிரச்சினையை பாதியில் இருந்து அவர்கள் அணுகுவதாக எனக்கு படுகிறது. ஆகவே அந்த விவாதத்தில் நான் பங்கு கொள்ளவில்லை. அரசியல் நோக்கில் இதை அணுகுவதில் உள்ள சிக்கல்களைப்பற்றி நான் எழுதியுள்ள ஒரு பதிவு இங்கே.

அப்சல் பற்றிய விவாதங்கள் வலைப்பதிவில் மிக நன்றாக நடந்தன என்று தான் எனக்கு தோன்றுகிறது.முதலில் தேசபக்தி ஆறாக ஓடியது.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த பிரச்சினையில் மற்ற பரிமாணங்களும் விவாதத்திற்கு வந்துள்ளது நல்ல முன்னேற்றமாகவே படுகிறது.இஸ்லாமிய எதிர்ப்பு கண்மூடித்தனமாக நம் மனதில் நிறைந்துள்ளது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.இது பி.ஜே.பி ஆட்சியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட விஷம பிரச்சாரமா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மேல் உள்ள கோபத்தினால் வந்ததா என்று தெரியவில்லை.இதன் இரண்டின் கூட்டு கலவை தான் இது என்று நினைக்கிறேன்.அதே போல் காஷ்மீர் பிரச்சினையை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பலர் இருப்பதை உணர முடிகிறது.வெகுஜன மீடியா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும்.

சரி மீட்டிங்குக்கு வருவோம்.அட்வகேட் பிரபு ராஜதுரையும் ராமும் பல காலமாகவே தமிழ் இணையத்தில் பங்கு பெற்று வருகிறவர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ராம் சீரியஸாக எதுவும் எழுதுவதில்லை என்றார். சே குவாராவை பற்றி உணர்ச்சி வசப்பட்டு அவர் சில வார்த்தைகள் பேசினார்.

ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இடதுசாரி கருத்தாக்கங்களை பற்றி பொதுவில் பேச தயங்கும் பலரும் தனிப்பட்ட முறையில் பேசும் போது அதைப்பற்றி பேசுவதும் தெரிந்து வைத்திருப்பதும்தான்.

அட்வகேட் பிரபு அதிகம் வலையுலகில் எழுதுவது இல்லை என்றாலும் தொடர்ந்து வலையுலகை படித்து வருவது அவர் பேச்சில் இருந்து புரிந்துக்கொள்ள முடிந்தது.மரத்தடி காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ் இணையத்தில் இயங்கி வரும் சிலரில் அவர் முக்கியமானவர் என்று தோன்றியது.மரத்தடி காலம் என்று தருமி சிலாகித்தது கொஞ்சம் ஓவரானது என்பது என் கருத்து.அப்போதும் பிரச்சினைகள் இருந்தன என்பதுதான் என் புரிதல்.பங்கு பெற்றோர் எண்ணிக்கை, பேசப்பட்ட விஷயங்களை பொறுத்து கூடக்குறைய இருக்கலாமே தவிர கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்தன.

வலைப்பதிவுகளினால் சமூகத்திற்கு பயன் என்ன என்ற தருமியின் கேள்வி முக்கியமானது. இது ஒரு சுதந்திரமான வெளி. எந்த விதமான தடங்கலும் இன்றி உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உங்களுக்கு இருக்கும் சுதந்திரம் தான் இங்கு முக்கியம். யார்,எதை எழுதவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இங்கு நொறுக்கப்படுகின்றன என்பதை வைத்துத்தான் இதை புரிந்துக்கொள்ளமுடியும்.


(தொடரும்)

9 comments:

லக்கிலுக் said...

//வெகுஜன மீடியா என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இதன்மூலம் நம்மால் புரிந்துக்கொள்ளமுடியும்.//

உண்மை... உண்மை... நூறு சதம் உண்மை....

சிலகாலம் முன்பு நானும் தேசிய ஜல்லியாக இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம்....

வலைப்பதிவுகளையும், சிறு பத்திரிகைகளையும் படிக்க ஆரம்பித்த பின்னரே பிரச்சினைகளின் இன்னொரு பக்க பரிமாணம் எனக்கு புரிபட ஆரம்பித்தது.....

ரவி said...

சைட் டிஷ் என்ன ? அதை முதலில் சொல்லுங்க..

( பின்ன !!! நீங்க பின்நவீனத்துவம் / தேசியவாதம் / அப்ஸல் / காஷ்மீர் / மரத்தடி / இரும்பு தடி என்று எல்லாம் பதிவு போட்ட அதை பற்றி மட்டும் தான் மொக்கையாக பின்னூட்டம் போடவேண்டுமா என்ன ?! )

ஆமாம், இரும்படிக்கற எடத்துல 'ஈ'க்கு என்ன வேலை !!!

Muthu said...

தங்கவேல்,

இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?

Anonymous said...

வேற ஒன்னும் இல்லை முத்து. ரொம்ப நாள் கழித்து உங்க பதிவைப் பார்த்த மகிழ்ச்சிதான்.

thiru said...

முத்து நல்ல அலசல்! :)

Sivabalan said...

முத்து

நல்ல அலசல்.

Muthu said...

லக்கி,

வருத்தப்படாதீங்க...தேசிய ஜல்லி என்பது வளர்ச்சிக்கான முதல் படி...
:))))))))

Muthu said...

ரவி,

பொவன்டோன்னு சொன்னோமில்ல..எங்க ஊரு பக்கம் லவ்ஓ லிவ்ஓ என்ற பெயரில் இருக்கும்...

வித்தியாசமான சுவை.அப்புறம் மகேசு முறுக்கும் அதிரசமும் தந்தார்.நான் இரவு தங்கியிருந்தால் விஷயம் வேறு மாதிரி முடிந்திருக்கும்.

Muthu said...

நன்றி தங்கவேல்,திரு,சிவபாலன்