இந்த பதிவை பார்த்திருப்பீர்கள்.மதுரையில் வலைப்பதிவாளர் சந்திப்பு என்ற எண்ணத்தை செயலாக்க உதவிய பேராசிரியர் தருமி அவர்களுக்கு நன்றி கூறி இந்த சந்திப்பை பற்றிய என் கட்டுரையை தருகிறேன்.
முன்கூட்டி திட்டமிடப்படாத சில பயணங்களால் இந்த சந்திப்பில் நான் கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவானது.(அதைக்கூட கிசுகிசுவா எழுதினாங்களாமே? ஏண்டாப்பா அம்பிகளா இது நியாயமா?)கலந்துக் கொண்டவர்கள் லிஸ்ட் தருமி கொடுத்துள்ளார்.பத்து நாட்களாக பேருந்து,மற்றும் ரயிலிலேயே வாழ்ந்துவந்த நான் சரியான நேரத்தில் மதுரையில் இருப்பது போல் பார்த்து கலந்துக்கொண்டேன்.
வலைப்பதிவில் புதியதாக அறிமுகமாகி சிறப்பாக எழுதிவரும் ராஜ்வனஜ் கோவையிலிருந்து இதற்காகவே வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோஷத்தை கொடுத்தது.அவர் அதிகம் பேசவில்லை.எழுத்துதான் என் ஆயுதம் என்று மென்மையாக கூறுகிறார் மனிதர்.
மதுரை மாப்பிள்ளைகள்(ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்) லிஸ்ட்டில் கடைசியாக சேர்ந்திருக்கும் மகேஷ் என்னை தூரத்தில் பார்த்தே அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்.எனக்கு அவர் என்று ஊகிக்க முடியாததால் மையமாக தலையாட்டி சிரித்துக்கொண்டிருந்தேன். அவராக தன் பெயரை சொல்லுவார் என்று ஐந்து நிமிடம் காத்திருந்தும், பேசியும் மனிதர் வாயை திறக்காததால் நானே கேட்க வேண்டியதாயிற்று(எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கறதுன்னு வடிவேலு சொல்லுறது ஞாபகம் வருதா).
மீட்டிங் துவக்கத்திலேயே எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது.நான் பாதியில் கிளம்பி விடுவேன் என்றார் மகேஷ்.என்னங்க அப்படி ஒரு வேலை? மீட்டிங் முடிஞ்சு பார்க்கக்கூடாதா என்றேன்.இல்லை ரொம்ப நேரம் பிடிக்கும் என்றார்.போகவில்லை என்றால் ஆட்கள் இங்கேயே வந்துவிடுவார்கள் என்று சீரியஸாக கூறினார்.அப்போது தான் எனக்கு மென்பொருள் தொழிலின் மகத்துவமும் முக்கியத்துவமும் புரிய மெளனமானேன்.
கடைசியாக அவர் கூறிய ஆட்கள் வந்தார்கள்.மாமா ஓடி வாங்க படத்தை போட்டிருவான் என்றார் ஒருவர்.விசாரித்ததில் தொடர்ந்து இரண்டு ஷோ (வரலாறு மற்றும் தர்மபுரி) பார்க்க அவர் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.என் பார்வையை புரிந்துக்கொண்ட அவர் அவரை அழைக்க வந்தவர்கள் ஏற்கனவே இரண்டு காட்சியை பார்த்துவிட்டு அடுத்த இரண்டு காட்சிகளையும் பார்க்க காத்திருப்பவர்கள் என்றும் தானெல்லாம் சும்மா என்றும் விளக்கினார்.ஆகா மக்களே,குப்பனுக்கும் பூவாயிக்கும் கண்ணாலம் அதுவும் அஜீத் நல்லாசியுடன் என்று மதுரையில் வீதிக்கு வீதி ஏன் போஸ்டர் அடிக்கிறானுங்கன்னு இப்ப புரியுதா?
ஞானவெட்டியான் அய்யா, அட்வகேட் பிரபு, ராகவன், வித்யா,பேராசிரியர் தருமி,ராம்,வரவணையான்,கவிஞர் சுகுணா திவாகர் என்று வந்திருந்த எல்லாருமே வி.ஐ.பிகள் தான்.
ராகவனின் வருகை தருமி பதிவில் கூறியிருந்தது போல் எங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ் தான்.சீக்கிரமே கிளம்பிவிட்டார்.
(அப்சலை பற்றிய சூடு பறந்த விவாதம் உள்பட மற்றவை அடுத்த பதிவில்)
10 comments:
அதெல்லாம் உங்களுக்கு புரியாது சாரே. வீட்ல, காலையில தீபாவளி பலகாரத்த ஒரு பிடி பிடிச்சுட்டு, காலைக்காட்சி. காலைக்காட்சி முடிஞ்சதும் மட்டன் பிரியாணி, கோழிவறுவல், மேட்னி முடிஞ்சதும், சூடா பஜ்ஜி, போண்டாவோட டீ (காபி கூடாது, புரட்டிடும், டீதான் சரி), அப்புறம் பர்ஸ்ட் ஷோ முடிஞ்சதும், ஆட்டுக்கால் பாயாவோட இடியாப்பம், மீன் குழம்போட தோச,ரண்டாம் ஆட்டம் முடிஞ்சதும், ஒரு கொத்து பரோட்டா... (மறுநாள்ல இருந்து ஒரு வாரத்துக்கு சஷ்டி விரதம்லா..). அதுதான்யா தீபாவளி. அதெல்லாம் உங்க மாதிரி பட்டணத்து ஆளுங்களுக்கு எங்க புரிய போகுது.
மெயின் பிக்சர அந்த தியேட்டர்லயும் போடல, இங்கயும் இல்ல. எப்பத்தான் போடப்போறான்ங்களோ??
முத்து,
ஒரு இன்டரஸ்டிங்கனா கமன்டரி...
அடுத்த பதிவைப் போடுங்க..படிப்போம்..
நன்றி
//மொக்கையான சந்திப்புக்கு இந்த பீடி(சிகரெட்) கையா?//
அடப்பாவி மொக்கையா,
நீங்க புதிய ஆளு மாதிரி தெரியலையேண்ணா:))
இழு....இழு....இழு....
அடுத்த சந்திப்பு வரை இழு...
அவங்கவங்க மெயின் பிக்சரை போடுங்க சாமி
ட்ரெய்லர் முடியரதுக்குள்ளே
பொங்கல் வந்துடும் போல..........
தமிழனின் பார்வையும் தருமியின் கோர்வையும் சேர்ந்து படித்தால் சந்திப்பில் உடன் இருந்த உணர்வு வந்து விடும் போலிருக்கே! தொடருங்க!
சென்னை பதிவர் சந்திப்பு மாதிரி தான் இதையும் எழுதப் போறீங்களா? (அதாங்க, ஒரு பெங்களூர் சந்திப்பு வந்தா இதை அப்படியே அனாதையா.. )
வாங்கம்மா வாங்க,
//சென்னை பதிவர் சந்திப்பு மாதிரி தான் இதையும் எழுதப் போறீங்களா?//
அதை வரவணையான் வெளக்கமா எழுதினாரு.லக்கிலுக் எழுதினாரு.நான் என்னத்த எழுதறது? (இருட்டுல உட்கார்ந்து இருந்ததை)
//(அதாங்க, ஒரு பெங்களூர் சந்திப்பு வந்தா இதை அப்படியே அனாதையா.. ) //
:))
எப்படி தெரியும் பெங்களூர் சந்திப்பு?
வரும்போலத்தான் இருக்கிறது... பார்ப்போம்...50 சதவீத சான்ஸ் இருக்கு...
வீடியோ இன்னைக்கு வரவணையான் பதிவேற்றுவார்...
ஏனுங்க முத்து , நெருப்பு நரியில் தெரியுமாறு செய்யுங்களேன் ?
bharani,
எப்படிங்க நெருப்பு நரில தெரியற மாதிரி பண்றது?
Post a Comment