மதிப்பிற்குரிய ஐயா ஜோசப் அவர்களின் இந்த பதிவையும் அன்பு நண்பர் சாமின் சில கருத்துக்களையும் பார்த்தப்பின் நான் என் புரிதல்களை எழுதினால் என்ன என்று தோன்றுகிறது.
பல நல்லவர்கள் மிகவும் துன்பப்படுவதை பார்க்கிறோம்.பல கொடியவர்கள் ஏன் நன்றாக வாழ்கிறார்கள் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. இதில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை சரியாக வரையறுக்கவேண்டியது அவசியம்.இது ஒவ்வொருவரின் வரையறையை பொறுத்து மாறும். என்னளவில் நல்லவன் என்பதை "சக மனிதனுக்கு அறிந்தே தீங்கு செய்யாதவன் " என்ற அளவில் தான் வரையறுக்கிறேன்.இது ஒரு அடிப்படையான கட்டமைப்பு.
இதையெல்லாம் விளக்கமுடியாது என்று சொல்லுவது சரியாக இருக்காது என்று கருதுகிறேன். கும்பகோணம் சிறார்களுக்கு நடந்த கொடுமை, சுனாமி சோகம் ஆகியவை எல்லாம் இறைவனையோ அல்லது மதத்தையோ வைத்து நாம் அணுக முடியாது என்றே எனக்கு தோன்றுகிறது. உதாரணத்திற்கு முற்பிறவி பலாபலன்களை பொறுத்து இந்த விஷயங்களை நாம் அணுகினால் அந்த குழந்தைகள் அனைத்தும் முற்பிறவியில் பாவம் செய்தன என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டி இருக்கும்.அல்லது சுனாமியில் இறந்த அனைவரும் முற்பிறவியில் பாவம் செய்தவர்களா? இது சரியான முடிவா?சுனாமியில் கிராமம் கிராமமாக இறந்தவர்களைப்பற்றி சோதிடம் , ஜாதகம் ஆகியவை ஏதாவது கூறியுள்ளனவா? அனைவருக்கும் ஜாதகம் ஒன்றுதானா?
சரி.இதை எப்படி அணுகவேண்டும்?. என்னளவில் நான் புரிந்துவைத்திருப்பது இது ஒரு நிகழ்வு என்பதுதான்.தற்செயலான நிகழ்வு என்பதுதான் உண்மை. சிறிது எச்சரிக்கையுடன் நாம் இருந்திருந்தால் சேதங்களை முழுவதுமாக அல்லது பெருமளவு தவிர்த்திருக்கலாம் என்பதுதான் உண்மை.சில சம்பவங்களை நாம் எவ்வளவு முயன்றாலும் தவிர்க்கமுடியாது.ஏனென்றால் அது நமக்கு எட்டாத தளத்தில் நடைபெறுகிறது.எட்டாத தளம் என்பதையும் கடவுள் சமாச்சாரம் என்ற அர்த்தத்தில் நான் உபயோகப்படுத்தவில்லை.
சம்பவங்களின் கூட்டுத்தொகைதான் நம் வாழ்க்கை. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையை நேரடியாகவே மறைமுகமாகவோ பாதிக்கிறது. நிகழ்தகவு என்ற வார்த்தை இங்குதான் வருகிறது. உதாரணமாக ஜோசப் சாரின் மகளுடைய கல்லூரி தோழனின் சாவு.அன்று அவன் கவனகுறைவாக இருந்திருக்கலாம். அல்லது அந்த பஸ் டிரைவர் கவனகுறைவாக இருந்திருக்கலாம்.அல்லது இருவருமே கவனகுறைவாக இருந்திருக்கலாம்.இன்னொன்று கேன்ஸர் வந்த சிறுபெண்.கேன்ஸர் வர இரண்டாயிரம் காரணங்கள் உண்டு என்று ஒரு மருத்துவர் கூற கேட்டிருக்கிறேன்.
சில நாட்களுக்கு முன் ஒரு இணைய(த்தனமான) விவாதத்தின் போது சுனாமியின் போது அதிர்ஷ்டவசமாக தப்பி பிழைத்த ஒருவர் தன்னை கடவுள்தான் காப்பாற்றினார் என்று உளறியதையும் மற்றவர்கள் அவருக்கு தர்ம அடி கொடுத்த பதிவுகளையும் படிக்க நேர்ந்தது.அங்கு நடந்தது என்ன? சம்பவங்களின் நிகழ்தகவுதான்.அந்த நேரத்தில் பீச்சிற்கு சென்றவர்கள் சிக்கினார்கள்.மற்றவர்கள் தப்பினார்கள்.இதை ஏதோ அவர் மட்டும்தான் உத்தமன் போலவும் மற்றவர்கள் எல்லாம் பாவிகள் போலவும் நம்மை புரிந்துக்கொள்ளத்தான் மதம் தூண்டுகிறது.
பத்து நாணயங்களை பத்து முறை சுண்டினால் ஒரு நாணயத்தில் மட்டும் பூ விழ நிகழ்தகவு என்ன? என்பது போன்ற கேள்விகளை நாம் பள்ளியில் படித்திருப்போம்.இதே சமாச்சாரம்தர்ன வேறுதளத்தில் வேறுமாதிரி நடைபெறுகிறது.
தெளிவாக சொல்கிறேன்.தவறை கூட புத்திசாலித்தனமாக செய்பவன் கண்டிப்பாக பாதிக்கப்பட மாட்டான் என்பதுதான் என் கருத்து. ஏகப்பட்ட உதாரணங்களை நான் காட்ட முடியும்.அவ்வகையாக ஆட்கள் சிக்குவதற்கு காரணம் தவறை தவறாக செய்வதாலேயே.இதை ஓபனாக கூறினால் என்னை தவறாக ஆள் என்று கூற ஒரு கூட்டம் காத்திருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
இதில் நமக்கு கெட்டது நடைபெற வேண்டாம் என்றால் நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று அடுத்தவருக்கு தீங்கு விழைவிக்காமல் இருப்பதுதான்.மனித பிறவி எடுத்து வந்தாயிற்று.இந்த வாழ்வை சந்தோஷமாக அனுபவிப்பது என்பது தான் அனைத்து மனிதர்களின் ஆசை.நாம் இந்த உலகை அனுபவிக்க என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை நாளை பிறக்கபோகும் நம் சந்ததியினருக்கும் உண்டு. நம்முடன் வாழ்ந்துவரும் சக மனிதனுக்கும் உண்டு.ஆகவே நம் வாழும் சூழ்நிலையை சுமூகமாகவும் நன்றாகவும் வைத்திருப்பதுதான் மனிதர்கள் செய்யக்கூடிய காரியமாக இருக்க முடியும்.இன்னும் தெளிவாக சொல்லபோனால் நீங்கள் வாழும் உங்களுடைய வாழ்க்கை அடுத்தவருக்கு தொந்தரவு தருவதாகவே அடுத்தவர் இருப்பையோ கேள்விக்குள்ளாக்குவதாகவோ இருக்கக்கூடாது.
இந்த அடுத்தவரை இம்சை பண்ணாத வாழ்வின் அடுத்த பரிமாணம் அடுத்தவருக்கு உதவும் செயல். எந்த விதமான உதவியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அடுத்தவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி எந்த அங்கீகாரத்தை எதிர்பார்க்காமலும் ஆத்மார்த்தமாகவும் இருந்தால் அந்த உதவி உங்களுக்கு கொடுக்கும் நிம்மதியும் சந்தோஷத்தையும் எந்த கடவுளும் உங்களுக்கு கொடுக்கமுடியாது.இந்த இடத்தில் அன்பே சிவம் படத்தின் மூலம் சொல்லப்படும் தத்துவத்தையும் இணைத்து பார்ககலாம்.
மற்றபடி கடவுள், மதம் என்று கருத்துக்களினால் மனிதகுலம் கண்டது சர்வநாசம் தான்.இதை நாம் கண்கூடாக பார்த்துவருகிறோம்.கடவுள், மதம் என்ற கருத்தாக்கம் உருவானது எல்லாம் எப்போது? ஏன் ? என்பதையெல்லாம் சிந்தித்து பார்ப்பது இன்னும் தெளிவை கொடுக்கும்.
(ஓரளவு சொல்ல முயன்றதை கூறி உள்ளதாகவே நினைக்கிறேன். பின்னூட்டத்தில் மேலும் ஏதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்)
Monday, March 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//நாம் இந்த உலகை அனுபவிக்க என்ன உரிமை உள்ளதோ அதே உரிமை நாளை பிறக்கபோகும் நம் சந்ததியினருக்கும் உண்டு. நம்முடன் வாழ்ந்துவரும் சக மனிதனுக்கும் உண்டு.ஆகவே நம் வாழும் சூழ்நிலையை சுமூகமாகவும் நன்றாகவும் வைத்திருப்பதுதான் மனிதர்கள் செய்யக்கூடிய காரியமாக இருக்க முடியும்.இன்னும் தெளிவாக சொல்லபோனால் நீங்கள் வாழும் உங்களுடைய வாழ்க்கை அடுத்தவருக்கு தொந்தரவு தருவதாகவே அடுத்தவர் இருப்பையோ கேள்விக்குள்ளாக்குவதாகவோ இருக்கக்கூடாது.//
Intha sinthanai nam munnorgaluku irundhadhanal thaan naam inthanai sugam anubavikirom, naam adutha thalaimuraiku kuduka povathu sugama / sumaiya enbathai naam thaan thirmanikirom, indha sindhanai irundhadhanaal thaan Indiavai anaithu ulagathinarum viyapodu parkindranar, indha sindhanai maarathirukum varai Indiavin pugazhum maarathu. Namathu santhathiyinarum indha pughazhai petrida naam sirudhu thiyagangal seivomaga.(enna thiyagam enbathai avaravar thirmanika vendum endru ninaikiren)
உங்க தங்கிலிஸ் எனக்கு படிக்க கடினமாக இருக்கிறது. மற்றபடி உலகம் முழுக்க சீர்கெட்டு இருப்பது போலவும் இங்கு தேனாறும் பாலாறும் ஓடுவது போலவும் நீங்கள் நினைப்பதையும் எழுதுவதையும் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது...மற்றபடி ஓ.கே.
ஆனால் நீங்கள் சொன்ன தியாகத்தை நான் கடமை என்பேன்.
இதைப் பற்றி எழுத நினைத்தேன். தவறாகப் புரிந்து கொள்ளப் படலாமென நினைத்து, எழுதப்பட்ட விஷயங்களோ தனிமனிதர்களின் சோகங்கள் இதில் நாம் சொல்லுவத்ஹு தத்துவம்போல் தோன்றிவிடக்கூடுமோ என்ற தயக்கத்திலும் பேசாதிருந்து விட்டேன்."இதை ஓபனாக கூறினால் என்னை தவறாக ஆள் என்று கூற ஒரு கூட்டம் காத்திருக்கலாம்"
ஆனால் நீங்கள் எழுதியுள்ளது மிக நன்றாக இருக்கிறது."சம்பவங்களின் கூட்டுத்தொகைதான் நம் வாழ்க்கை." நிகழ்தகவுகள் (probability..? என்பது சரியா?) அச்சம்பவங்களை தீர்மானிக்கின்றன.
தருமி,
மிக்க நன்றி....
நீங்களும் இதைப்பற்றி உங்கள் பதிவிலோ அல்லது இங்கோ விளக்கமாக எழுத அழைக்கிறேன்.
உங்களின் பல பதிவுகளையும் கருத்துக்களையும் பார்க்கும்போது நீங்களும் என்னைப்போல் ஒரு "SPOILT CHILD" ஆக இருப்பீர்கள் என்று எனக்கு ஏற்கனவே தோன்றியுள்ளது.
நாம் ஏப்ரலில் மதுரையில் சந்திக்கிறோம்.
Dear Muthu,
In today's view, I personally feel INDIA is much better than the rest of the countries. You have initiated a good discussion and we can tell only our people and for that we have to be proud of what we are / have. i posted my comment thinking that it may add a small stick to your stem to make it strong.
"Kadamai" this is a word not many people will accept saying who is he to say what is my "Kadamai" that is why i used the word "Thiyagam".
p.s: Thamizh thattachu katrukollum varai indha thanglish comment thaan. If i wait till i learn this to post my comment then it might lose the value, that is the reason i commented in Thanglish knowing fully well i am putting the reader's in hardship.
ungall unarvugalai nanraga purinthu kolkiren.Athe samayam ithai than matravarkal kadavul nambikkai enru solvarkal.ulloora neengalum antha nambikkai vaithu iruppathaga therikirathu.Keduthal ninaithalo seithalo namakku kedu varum enru neengal solvathu than nam periavarkal "MURPAGAL SEITHAL PIRPAGAL VILAIYUM" enru sonnarkal.
dear nanmanam,
i understand your problems about tamil typing..go ahead in english.....
i want you to clarify in which way india is better than the rest of the countries...in what way we should be proud of ourselves....it should relate this post's subject..ok...
regarding "kadamai" one should not confuse EGO with this..subject itself requires that one should not approach it egoistically
கீதா மேடம்,
ரொம்ப நன்றி..ஆனால் விஷயம் நீங்களும் நானும் நினைப்பதை விட சிக்கலானது.உதாரணத்திற்கு தவறையே சரியாக செய்பவன் தப்பி விடுவான் என்கிறேன் நான்.கடவுள் அவனை தண்டிக்க மாட்டார் என்கிறேன் நான்.
மற்றபடி கடவுளையும் நல்லபழக்கங்கள் அல்லது ஒழுக்கம் என்பதையும் நான் குழப்பி கொள்வதில்லை.
thavaru seithavanai kettal theriyum avan entha vidathil pathikka pattirukiran enbathu. namakku vendumanal theriyamal irukkum. anal kadavulin kanakku nerkanakku.yarum thappa mudiyathu.
தமிழினி முத்து,
ரொம்ப சந்தோஷமா இருக்கு..நீங்க மதுரைக்கு வர்ரது. வாங்க .. வாங்க.அதென்ன நீங்க 'பெருசு'களையா சந்திச்சிக்கிட்டு (புத்தகக் கண்காட்சியில டோண்டு?) இருக்கீங்க.. நீங்க வேற அவர மார்க்கண்டேயன் என்க, அவர் நீங்கள் ரொம்ப ஸ்மார்ட் என்க...ம்ம்..,ம்
நான் ஒண்ணும் உங்கள மாதிரி spoilt child இல்ல..ஏன்னா உங்க வயசில 'ஒழுங்காதான்' இருந்தேன். ஒரு நாப்பத்தி அஞ்சிலதான் 'கெட்டுப்' போயிட்டேன்!
sorry to butt in Geetha.."தவறையே சரியாக செய்பவன் தப்பி விடுவான் என்கிறேன் நான்" - முத்து சொன்னது நூத்துக்கு நூறு சரி.
"thavaru seithavanai kettal theriyum avan entha vidathil pathikka pattirukiran enbathu. " - யாரையோ ஏங்க கேட்கணும்..என்னையே நான் கேட்டுக்கிறேன்; நீங்க உங்களையே கேட்டுக்குங்களேன் - நாம் என்ன தவறே செய்யாதவர்களா என்ன!
"kadavulin kanakku nerkanakku.yarum thappa mudiyathu" - இதெல்லாம் நம்ம பயமுறுத்தி, நம்மள நல்வழிப்படுத்துறதுக்கு பெரியவங்க சொன்னதுங்க. இந்தத் தத்துவம், சத்தியமே ஜெயதே - அப்டிங்கிறதெல்லாம் எனக்கு உண்மையா தெரியலைங்க...
ராஜ்,
உங்க கேள்வி சரிதான்.நான் சொன்னதும் சரிதான். நீங்க என்னதான் நல்லவனா இருந்தாலும் விவரமா இருந்தாலும் உங்களுக்கு சில நேரம் யாராவது கெடுதல் செய்றாங்க இல்லையா? இதைத்தான் சொன்னேன்.
//அதன்படி, நான் என்னதான் நல்லது செஞ்சாலும், கெட்டிக்காரத்தனமா தப்பு பண்ணும் ஒருத்தர் எனக்கு கேடு விளைவிக்க முடியும். இது சரியா? //
இது சரிதான். 100 சதவீதம் உண்மை. நீங்கள் நேர்மையாகவோ நல்லவராகவோ இருப்பது பாதிப்பை குறைக்கலாம். முழுமையான தீர்வு இல்லை.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று ஒரேயடியாக சொல்லிவிடமுடியாது.ஓரளவு நாம் கட்டுப்படுத்தலாம் என்பதுதான் நான் சொல்வது.
(குற்றம் கண்டுபிடிப்பது என்பதெல்லாம் பெரிய வார்த்தை...ஒரு தெளிவுக்குத்தான் வாதமெல்லாம்)
அன்புள்ள முத்து,
உங்க பதிவையும் அதிலுள்ள பின்னூட்டங்களையும் படித்தேன்.
இதில் தருமி அவர்களின் கருத்தையும் படித்தேன்.
மதம், நம்பிக்கை என்பது ஒருவருக்கு மிக மிக அந்தரங்கமானது. அது சரியா, தவறா என்று எடைபோட்டு பார்ப்பது..
காற்றை சுவாசிக்கிறோம்.. ஆனால் அதை கண்ணால் காண்பதில்லை.. மனசு கிடந்து அடித்துக் கொள்கிறது என்கிறோம்.. ஆனால் அது எங்கிருக்கிறதென்பதை விஞ்ஞானம் சொல்வதில்லை..
அதே போல்தான் இறைவனும் அவன் மேல் மனிதனுக்கிருக்கிற நம்பிக்கையும்.
அது என்னுடைய உள்ளத்திற்கு மட்டுமே சொந்தமானது. நான் ஆத்திகனாயிருந்தால் என் உள்ளம் இறைவனைத் தேடுகிறது. சிறிது காலம் கழித்து நாத்திக சிந்தனைகளைப் படித்து தெளிவு பெற்றுவிட்டதாய் நினைக்கும்போது என்னுள் அதுவரை இருந்த இறைவன் மறைந்து போகிறார்.
நாம் நம்முடைய குழந்தைப் பருவம், மாணவப் பருவம் ஆகியவற்றைக் கடந்து வரும்போது இறைவன் என்றொருவர் இருக்கிறார் அவர்தான் நம்மை வழிநடத்துகிறவர் என்று நம்முடைய பெற்றோரும், ஆசிரியர்களும் கூறும்போது அதை அப்படியே நம்புகிறோம். அதன் பிறகு அறிவும், அனுபவமும் வளர்ந்த பிறகு எதையும் நம்முடைய அறிவுத்திறனுக்கேற்றார்போல் ஆராய்ந்து இந்த உலகின் ஒவ்வொரு அசைவுக்கும், நிகழ்வுக்கும் அர்த்தம் தெரிந்துவிட்ட நினைப்பில் நம்முடைய கடந்த கால நம்பிக்கையைத் திரும்பிப் பார்த்து.. சே எத்தனை சிறுபிள்ளையாய் இருந்திருக்கிறேன்.. கடவுளாவது, மண்ணாவது..
இதற்கு என்ன விடை என்று எல்லா கேள்விகளுக்குமே கேட்க ஆரம்பித்தால் குழப்பம்தான் மிஞ்சும்.. சில விஷயங்களை வெறும் நம்பிக்கையோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.. உள்ளே புகுந்து ஆராய்ந்து பார்க்கக்கூடாது என்பார்கள்.
மதம், கடவுள் நம்பிக்கையும் அப்படித்தான்..
தருமி அண்ணாவுக்கு ஒரு கேள்வி,
நீங்கள் என்னுடைய 'என்பைபிள்' பதிவில் நான் ஒரு கிறிஸ்துவ கீதத்தைப் பற்றி எழுதியபோது 'நேயர் விருப்பம்' என்று மிக நேர்த்தியான கீதத்தின் சில வரிகளை எழுதியிருந்தீர்கள்.. அன்றைய தருமி தானா இன்று இப்படி எழுதுவது?
//இதைப் பற்றி எழுத நினைத்தேன். தவறாகப் புரிந்து கொள்ளப் படலாமென நினைத்து, எழுதப்பட்ட விஷயங்களோ தனிமனிதர்களின் சோகங்கள் இதில் நாம் சொல்லுவத்ஹு தத்துவம்போல் தோன்றிவிடக்கூடுமோ என்ற தயக்கத்திலும் பேசாதிருந்து விட்டேன்."இதை ஓபனாக கூறினால் என்னை தவறாக ஆள் என்று கூற ஒரு கூட்டம் காத்திருக்கலாம்"//
நீங்கள் யாரை கூட்டம் என்று சொல்கிறீர்கள் தருமி..?
தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள்..
என் வாழ்க்கையில் இதுவரை எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றிகளும், ஒவ்வொரு அனுபவங்களும், ஒவ்வொரு தோல்விகளும் என்னுடைய இறை நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது என்று ஆணித்தரமாகக் கூறுவேன்.
Post a Comment