Thursday, March 30, 2006

சீட் வாங்கலையோ சீட்

இதன் முதல் பாகம் இங்கே...

திண்டிவனம்: விடுங்க போறாங்க சின்ன பசங்க இப்ப நாம என்ன பண்றதுன்னு சொல்லுங்க.பேசாம கலைஞர் காலில் விழுந்துருவமா?

கார்த்திக்: உங்க ரெண்டு பேருக்குமே பதவி வெறி தலைக்கேறிடிச்சு.. கலைஞரை எதிர்த்து தானே ரெண்டு பேரும் வெளியே வந்தீங்க?

ராஜேந்தர்: நீங்க மட்டும் என்ன ரெண்டு தலைவரையும் மாத்தி மாத்தி மீட் பண்ணலை?

திண்டிவனம்:உங்க வம்பே வேணாம்பா, நான் நாளைக்கே டெல்லி போய் சோனியா கால்ல விழுந்து ஒரு சீட் வாங்கிக்கறேன்.

ராஜேந்தர்: நான் நாளைக்கே என் கட்சி பொதுக்குழுவை கூட்டி கூட்டணி பத்தி முடிவெடுக்கணும்..

கார்த்திக்: என்ன பிரதர் உஷா, சிம்பு, இலக்கியா, குறளரசன் இதுதானே உங்கள் பொதுக்குழு....அதுவும் சிம்பு இப்பல்லாம் தனியா டீல் பண்றாறாமே?

ராஜேந்தர் நெற்றில் விழும் முடியை சரிசெய்துக்கொண்டே டென்சனுடன் நழுவுகிறார்.

திண்டிவனமும் வேகமாக ஏர்போர்ட் நோக்கி செல்கிறார்.ஃபிளைட் கிடைக்காததால் சத்தியமூர்த்தி பவனை நோக்கி விரைகிறார்.சத்தியமூர்த்தி பவன் வாசலில் வேட்டி,துண்டு ஆகியவை விற்கும் கடையை பார்த்ததும் திண்டிவனம் அதிர்ச்சியடைகிறார்.

திண்டிவனம்:(மனதிற்குள்)அய்யய்யோ..வீரப்ப மொய்லியுடன் உட்கட்சி கலந்தாய்வு கூட்டம் ஆரம்பிச்சிருச்சு போலிருக்கே...(அவசரமாக உள்ளே ஓடுகிறார்)

சில கட்சிகாரர்கள் வெறும் அண்டர்வேருடன் ஓடிவந்து கடையில் வேட்டி வாங்கி கட்டிக்கொண்டு போகிறார்கள்.அருகிலேயே மண்ணெண்ணெய்,கட்சி கொடிகள்,தலைவர்கள் உருவபொம்மை எல்லாம் ரெடிமேடாக விற்பனையாகின்றன.பேச்சுவார்த்தை நிலவரப்படி உருவபொம்மைகள் எரிக்கப்படுகின்றன.

இதற்கிடையே விஜயகாந்த் பேசும் கூட்டங்களில் பெருங்கூட்டம் கூடுவதை பார்த்து முதலமைச்சருக்கு தகவல் போகிறது.உளவுத்துறை முடுக்கி விடப்படுகிறது. உளவுத்துறை அறிக்கையின்படி விஜயகாந்த் கூட்டங்களில் சேரும் கூட்டம் பொதுமக்கள் இல்லை என்றும் அவர்கள் எல்லாம் அரசின் புள்ளியியல் துறையை சேர்ந்த ஊழியர்கள்தான் என்றும் முதலமைச்சருக்கு ரிப்போர்ட் செய்கிறது உளவுத்துறை.

பல்வேறு இடங்களில் அரசாங்க புள்ளிவிவரங்களை அரசு துறைகளுக்கே தெரியாத அளவில் விஜயகாந்த் கூறுவதால் அதை நோட்ஸ் எடுக்கவே அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 comments:

ஜோ / Joe said...

பல்வேறு இடங்களில் அரசாங்க புள்ளிவிவரங்களை அரசு துறைகளுக்கே தெரியாத அளவில் விஜயகாந்த் கூறுவதால் அதை நோட்ஸ் எடுக்கவே அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.//

KuRumpu...ha ha

tbr.joseph said...

ஜோ,

விஜயகாந்த் ஏதோ ஒரு படத்துல (ரமணாவா?) வெறும் ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் முன்னால உக்காந்துக்கிட்டு அரசாங்க அதிகாரிகளோட பட்டியலையெல்லாம் ஜெனரேட் பண்ணி புடிச்சிக்கிட்டு போவாரே அதுமாதிரி இப்பவும் பண்ணா நல்லாருக்குமில்லே..

அந்த மாதிரி ஏதாச்சும் புதுசா ஒரு கம்யூட்டர் கண்டுபிடிச்சிருக்காரோ என்னவோ.. யார் கண்டா?

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,

கேப்டனோட ஸ்டைலே புள்ளி விவரம் தானே..அதுதான் மேட்டர்....விருத்தாசலத்தில் போட்டியாமே....

தயா said...

If captain was inspired by "Ramana" script and tried it in real life what's harm in there?

Pulli Vivaram than Pulli vaikka sariyana vazhi!

பொன்ஸ்~~Poorna said...

//பல்வேறு இடங்களில் அரசாங்க புள்ளிவிவரங்களை அரசு துறைகளுக்கே தெரியாத அளவில் விஜயகாந்த் கூறுவதால் அதை நோட்ஸ் எடுக்கவே அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.//

நான் கூட புள்ளியியல் ஊழியர்களை எதுக்கு இழுக்கறீங்கன்னு யோசிச்சேன். இது நல்லா இருக்கு :)))

தமிழ்வெளியை பார்த்தீங்களா?