Monday, March 20, 2006

யார் இந்த கருப்பரசன்?

பட்டையை கிளப்புவது என்றால் இதுதானோ? சமீப காலமாக திண்ணை இணையதளத்தில் மலர்மன்னன் செய்கிற கலாட்டாக்கள் ஓவர் என்று எல்லோரும் நினைத்திருக்கிற சூழ்நிலையில் (நம்ப டோண்டுவும் உள்ள புகுந்து லைட்டா அலசினார்) கருப்பரசன் என்று ஒருவர் திண்ணைக்கு எழுதியுள்ள கடிதத்தின் சுட்டி இதோ..

http://www.thinnai.com/le0317064.html

1.தமிழ்மணத்தில் தங்கமணியின் பதிவில் நடக்கும் சில விவாதங்களுக்கு இந்த கட்டுரையுடன் தொடர்பு இருப்பதாலும்

2.திண்ணை இந்த கடிதத்தை பிரசுரித்ததை பாராட்டியுமே இந்த விழிப்புணர்வு பதிவு.

16 comments:

முத்துகுமரன் said...

நிச்சயம் இது விழிப்புணர்வு பதிவுதான்:-))))

ம.மவின் மூலம் தங்கள் வரலாறுகள் அறிந்த வாசகர்களின் கடிதங்களை பிரசுரித்த திண்ணைக்கு கருப்பரசனின் கடிதத்தை பிரசுரிப்பதை தவிர வேறு வழி இருந்திருக்காது என்று நினைக்கிறேன்:-((((..( இல்லை என்றால் நடுநிலை, ஆரோக்கியமமான விவாதத்தளம் என்ற ஜிகினாக்கள் கிழிந்துவிடும் அல்லவா?). அப்படியா என்று கேட்டுக் கொண்டு என்னோடு சண்டைக்கு வரக்கூடாது ஆமா:-)))))

ஜோ/Joe said...

முத்து,
இந்த இணைப்புக்கு கோடி நன்றிகள் .மலர் மன்னன் மற்றும் அரவிந்தன் அவர்களின் மண்டைக்காடு கலவரம் பற்றிய கோயபல்ஸ் விளக்கங்களை நானறிவேன் .என் 10 வயதில் R.S.S காரர்களால் எங்கள் முழுக்கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டு ,உயிருக்கு பயந்து கடல் வழியே சோறு தண்ணியின்றி அகதிகளாக தப்பிச்செல்லும் போது கடலிருந்து நான் எங்கள் ஊர் பற்றி எரிவதை பார்த்த காட்சி இப்போதும் கண்முன் நிற்கிறது .

இவர்களைப் போல பக்கம் பக்கமாக எழுத எனக்கு நேரமும் ,திறமையும் ,அறிவுஜீவி முத்திரையும் இல்லை..பார்ப்போம் .காலம் ஒரு நாள் கனியும்.

b said...

திண்ணைக்கு நானே காரசாரமாகக் கடிதம் எழுதலாம் என்றிருந்தேன். கடிதம் எழுதிய கருப்பரசன் அவர்களின் அலசல் நன்று.

Anonymous said...

திண்ணையில் எழுதும் மலர்மன்னன், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கிறது இக்கட்டுரை. கட் அண்டு பேஸ்ட் செய்யும் ஆட்களுக்கு அவசியம் படிக்கச் சொல்லி மயில் அனுப்புங்கள் முத்து. (திருத்தங்கள் உண்டு)

நியோ / neo said...

சும்மா "சூப்பர்"னு மட்டும் சொல்ல மனசில்லாமே தெகச்சு நிக்கிறேன்..சைடில இருந்து கொஞ்சம் கையத் தட்டி என் பாராட்ட தெரிவிச்சுக்கிறேன் முத்து! ;)

பி.கு:

கருப்பரசனுக்கு சைடில இருந்து கை தட்டறேன்! ;)

Anonymous said...

முத்து மிக்க நன்றி!!. கட்டுரையை இங்கு காட்டியதற்கு.

Anonymous said...

இதுபோல நிறைய கருப்பரசன்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் பார்ப்பன ஆதிக்க வெறிச்சக்திகள் திருந்தும். குட்டகுட்ட குனியும்போதுதான் மேலும் ஏறுகிறார்கள். திருப்பி அடித்தால் பம்மி ஓடி ஒழிவார்கள். எனது அன்பும் அரவணைப்பும் என்றும் கருப்பரசர்களுக்கு உண்டு.

VSK said...

இது கோவில், இது பள்ளிவாசல், இது பள்ளிக்கூடம், இது மருத்துவமனை என்று எழுதுவதும் தப்புத்தானோ?.... திரு. கருப்பரசனின் கண்ணோட்டத்தில்?

வர்ணாசிரமத்தை, பலவந்தமாக நிகழ்ப்படுத்தியது, பார்ப்பனர்கள் அல்ல, மற்றவர்கள்தான்!

இது தெரிந்தும், இங்கே போனால், குடல் உருவப்பட்டுவிடும் என்பதனை நன்கு உணர்ந்து, இயலாவதரைத் திட்டித் தீர்த்தே காலத்தினை ஓட்டும் உங்களிடம் என்ன பேச முடியும்?

காலம் எல்லார்க்கும் நல்லதொரு பதிலை விரவில் சொல்லும்!

நன்றி!

Muthu said...

S.K,

கருத்துக்கு நன்றி,

எது எடுத்தாலும் இங்க குத்தறாங்க..அங்க அடிக்கிறாங்கன்னு புலம்பறதை தயவு செய்து நிறுத்துங்க..எவன் ஆதிக்கம் செய்தாலும் குத்தத்தான் செய்வாங்க...ஆதிக்கம் செய்யாதவனுக்கு வலிக்காது.....நீங்க சுத்தம்னா நீங்க வருத்தப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை...தப்பானவனுக்கு வலிச்சா அது அவன் பாடு...நாம ஏன் கவரைப்படணும்?

Muthu said...

in the previous comment last word can be read as "கவலைப்படணும்?"

thanks

Muthu said...

படித்த மற்றும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு முத்துகுமரன், மூர்த்தி, அப்டிபோடு நியோ ஆகியோருக்கு நன்றிகள்.

தி்ண்ணை பொதுவாக இந்துத்வா ஆட்களால் கைப்பற்றபட்டுள்ளதாக ஒரு பொதுவான கருத்து இருப்பதால்(இதற்கு என்னுடன் யாரும் வாதம் செய்யவேண்டாம்.இதற்கு ஆதாரம் கிடையாது.கடவுள் கான்செப்ட் மாதிரிதான்) நிறைய பேர் அதை படிப்பது இல்லை.ஆகவே இதை இங்கு வெளியிட நினைத்தேன்.அவ்வளவுதான்.

ஜோ,

உங்கள் அனுபவம் நெஞ்சை உறைய செய்வதாக இருந்தது.சிறு வயதில் இதுபோன்ற விஷயங்கள் மனதை எவ்வளவு பாதிக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.இதைப்பற்றி நீங்கள் விளக்கமாக எழுத வேண்டும்.
(எல்லா மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்)

நன்றி மஞ்சமாக்கான் மற்றும் வெங்காயம் (நீங்கள்ளாம் யாருய்யா)

Muthu said...

சில்வியா,

கருத்துக்கு நன்றி...நீங்க திண்ணையில் நடந்த முழு பிரச்சினைகளையும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். பார்ப்பனர் - மற்றவர் என்பதை மற்றும் பார்க்காமல் மற்ற விஷயங்களையும் பாருங்கள்....

யாரும் யாரையும் ஒழிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். நான் யாரையும் ஜெனரலைஸ் செய்து பேசுவதில்லை. அப்படி உங்களுக்கு தோன்றினால் அது உங்கள் பார்வையின் குற்றம் என்று நினைக்கிறேன்.

(என் சோ சம்பந்தமாக பதிவின் மூன்றாவது பகுதியை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்)

Muthu said...

திண்ணையில் வெளியாகி உள்ள ஒரு கடிதத்தின் சுட்டிதான் இது. அந்த கருத்துக்களில் மாற்று கருத்து இருக்கக்கூடாது என்பது என் நிலைபாடல்ல.

படித்து சிந்திப்பவர்கள் சிந்திக்கலாம். கருத்து மாறுபாடு உள்ளவர்கள் தங்கள மேலான கருத்துக்களை தி்ண்ணைக்கு எழுதலாம்.கண்டிப்பாக பிரசுரிக்கப்படும்.

புகழேந்தி said...

//நான் யாரையும் ஜெனரலைஸ் செய்து பேசுவதில்லை//

அருமையான வார்த்தைகள். இதனை அனைவரும் புரிந்து கொண்டால் சரி.

Anonymous said...

thinnai enna font ubyogikirargal. Padika mudyavillai, Dayavusaidu therivikkavum

சிறில் அலெக்ஸ் said...

இதற்கும் ம.ம அவர் பாணியில் ஒரு பதில் தருவார்.

அடிப்படைவாதம் என்றால் என்னவென்று என்னை யாரோ கேட்டிருந்தார்கள். ம.ம நல்ல உதாரணம் என்றே நினைக்கிறேன்.