போயஸ் தோட்டம் வாசலில் கேட்டுக்கு வெளியே விஜய டி.ராஜேந்தரும் திண்டிவனம் ராமமூர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர்.சட்டென்று கேட் திறக்கப்படும் சத்தம் கேட்கிறது. வாயெல்லாம் பல்லாக நெல்லை கண்ணன் கையில் ஒரு பெரிய சூட்கேசுடன் வெளியே வருகிறார்.
திண்டிவனம்: யோவ், அட்ரஸே இல்லாம இருந்த நீ இன்னைக்கு அம்மாவுக்கு நெருக்கமா ஆயிட்ட..நல்ல வெயிட்டா வசூலும் உண்டு போலிருக்கு.எப்படிய்யா?
நெல்லை: (மேலே பார்த்தப்படி) கான மூப்பனாராட கண்டிருந்த திண்டிவனம் தானும் அதுவாக பாவித்து தன் பொல்லாச்.....
திண்டி:(ஜெர்க்காகிறார்)யோவ் நீ பெரிய தமிழ் பருப்புன்னு எனக்கும் தெரியும்..இப்ப என்னய்யா பண்றது? அத சொல்லு..
நெல்லை: சரி விடுங்க...அது யாரு அங்க ஓரமா படுத்திருக்கறது?
திண்டி: அது நம்ம விஜய டி.ராஜேந்தர்தான்.ஏங்க இங்க எந்திரிச்சி வாங்க...(ராஜேந்தரை கூப்பிடுகிறார்)
நெல்லை: என்ன ராஜேந்தர் இப்படி பாதியா இளைச்சீட்டிங்க...மூஞ்சில முடி மட்டும்தான் இருக்கு....
திண்டி: (முணுமுணுக்கிறார்) எப்பவும் அப்படித்தான் இருக்கு...
ராஜேந்தர்: டாய், நான் எம்.ஜி.ஆரையே எதிர்த்து அரசியல் செஞ்சவன்..(தொடர்ந்து ஏதேதோ பேசி வூடு கட்டுகிறார்)
நெல்லை: இதுக்குத்தான் உனக்கு ஆப்பு அடிச்சது..ஏன்யா நீ அடங்கவே மாட்டியா?ஏம்பா திண்டிவனம்..சிம்புக்கு போன் போட்டு இவரை கூட்டிக்கிட்டு போக சொல்லுப்பா..
அப்போது அந்த பக்கமாக ஒருவர் முகத்தில் துண்டு போர்த்தி பதுங்கி பதுங்கி வருகிறார்.பாய்ந்து அமுக்கிறார்கள் மூவரும்.துண்டை விலக்கி பார்த்தால் நடிகர் கார்த்திக்.
கார்த்திக்: ஊய், ஏய்.கையை எடு..
ராஜேந்தர்: என்னய்யா துண்டு போர்த்திகிட்டு...
கார்த்திக்: என்னால் என் தொண்டர்கள் உதவியுடன் தனித்து ஆட்சியமைக்க முடியும் ஆனால் பாவம் ஜெயலலிதாவுக்கு துணை முதல்வர் பதிவியாவது தரலாம் என்றுதான் பார்க்க வந்தேன்...
திண்டிவனம் துண்டினால் வாயை பொத்தியவாறு சிரிக்கிறார்.திடீரென்று அங்கு ஒரு கூட்டம் கூச்சல் இட்டவாறு நுழைகிறது.சட்டை போட்டவன்,டவுசர் போட்டவன், டவுசரே போடாதவன், தலை சீவாதவன்,குளிச்சு பல நாள் ஆனவன் என்று பலரும் அடங்கிய குழு.
திண்டி: யாருய்யா இவங்க...
கார்த்திக்: இவங்கள்ளாம் அந்த ஆளோட ரசிகனுங்களாம்..இங்க வந்தா ஏதாவது கிடைக்கும்..அங்க போஸ்டர் ஒட்டுனது, பால் அபிஷேகம் பண்ணுனதுல கொஞ்சம் காசையாவது திரும்ப எடுக்கலாம்னு வந்திருக்காங்க...
(நாளை தொடரும்)
Tuesday, March 28, 2006
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஆஹா... தல திரும்பிடுச்சுன்னு நெனைக்கிறேன். வாங்கையா.. வாங்க...
வந்த வுடனேயே... நக்கலா...
//கொஞ்சம் காசையாவது திரும்ப எடுக்கலாம்னு //
இத நம்பிதான் பலபேரு "voice"க்கு செவிமடத்தாங்க.எதோ உட்டதப் புடிச்சா சரி
என்ன முத்து ஆளையே காணோமேன்னு பாத்தேன்! இப்பத்தான் தெரியுது போயசு தோட்ட நடப்பையெல்லாம் லுக்விட்டுக் கிட்டு இருந்தீங்கன்னு!
;-)
//இவங்கள்ளாம் அந்த ஆளோட ரசிகனுங்களாம்..இங்க வந்தா ஏதாவது கிடைக்கும்..அங்க போஸ்டர் ஒட்டுனது, பால் அபிஷேகம் பண்ணுனதுல கொஞ்சம் காசையாவது திரும்ப எடுக்கலாம்னு வந்திருக்காங்க...
//
ஆஹா கெளம்பிட்டாங்கயா கெளம்பிட்டாங்க....
அப்படி போடுங்க!
டி ராஜேந்தரை இன்னும் கொஞ்சம் கலாய்ச்சிருக்கலாமே. அவர் கிண்டலுக்கென்றே பிறந்த செல்லக்கலைஞராயிற்றே!
கார்த்திக்தான் ஆண்டிபட்டியில் எதிர்த்துப் போட்டியிடத் தயாராகிவிட்டாரே.. கொஞ்சம் லேட்டோ?
ooyi aaayi aaaaeiei
naan yaarnu theriyuma ???? (unakke maranthu pochaanu kekkatheenga)
MANITHAN ah ah ah ah
appaaala, marakkaama sivaji padathukku valakkam pola black la ticket vaangidunga.
see you aaayi oooyiii aeaauyyyi abcd sssssssssssss
முத்து சும்மா பொளந்து கட்றீங்க. நடுநிலையாக நின்று எல்லோரையும் கலாய்க்கும் உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
ஐ லவ் யூஊஊஊஊஊஊஊஉ!
ஹி...ஹி...
படம் நல்லாக்கீது பா...
கருத்து சொன்ன நண்பர்கள் பாலபாரதி, பட்டணத்து ராசா, சந்திப்பு, குழலி, பெனாத்தலார், சுதர்சன், பொட்டிக்கடை,நெருப்பு சிவா, வெங்காயம் அனைவருக்கும் நன்றி......
//வெங்காயம் said...
ஐ லவ் யூஊஊஊஊஊஊஊஉ!//
கலி முத்திப்போச்சு :-))
dear anony,
to be frank i too fear this comment..what to do?
press freedom
பழ. கருப்பையா மிஸ்சிங்...????
இவங்கள்ளாம் அந்த ஆளோட ரசிகனுங்களாம்....//
யாருங்க அது? வெற்றி மாக்னெட்டா (புனைப் பெயர் எப்படி?)
ம்ம்.... போயஸ் தோட்டம்ன்னா சும்மாவா? இன்னும் யாரெல்லாம் கதவத்தட்டாறங்கனு எடுத்து விடுங்க பிரதர்
Post a Comment