Wednesday, March 29, 2006

இலக்கியவாதியின் அரசியல்

கன்னட எழுத்தாளர் உடுப்பி.ஆர்.அனந்தமூர்த்தி ராஜ்யசபாவிற்கு எம்.பி ஆக முயற்சிசெய்து தோல்வி கண்டுள்ளார்.இலக்கியவாதிகளின் அல்லது எழுத்தாளர்களின் அரசியல் ஆசைகள் தோல்வி காண்பது இது புதிதல்ல.

அனந்தமூர்த்தி பி.ஜே.பியின் கொள்கைகளை எதிர்ப்பவர்.காங்கிரஸ் மற்றும் ஜனதாதளத்தை கடந்ததேர்தலில் ஆதரித்ததாக தெரிகிறது.ஆயினும் ஜனதாதளம் சப்போர்ட் கிடைக்கவில்லை.காங்கிரஸ் ஆதரவு அவருக்கு போதுமானதாக இல்லை.கடைசியில் அரசியலில் பணம் விளையாடுவதை எக்ஸ்போஸ் செய்யத்தான் நான் போட்டியிட்டேன்.இது எனக்கு மாரல் வெற்றிதான் என்று கூறிவிட்டார்.

ஆனால் அனந்தமூர்த்தி தான் தேர்தலில் போட்டியிட கூறிய காரணம் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.கன்னட மொழியை காக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறிய அவர் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை கேள்விக்குட்படுததியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் குமுதம் தீராநதியில் இயல் விருது பெற்ற தமிழ் அறிஞர் பேரா.ஜார்ஜ் எல்.ஹார்ட் இதைப்பற்றி கேள்விக்கு கூறிய பதில் பின்வருமாறு:

ஹார்ட்: அரசியல்வாதிகள் மட்டும்தான் தமிழை செம்மொழி என்கிறார்கள். அறிஞர்களல்ல என்று அனந்தமூர்த்தி கூறியதாக படித்தேன்.அது உண்மைக்கு புறம்பானது.

என்றாவது ஒரு நாள் நான் (ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கன்னட மொழியின் முதல் இலக்கியமான) கவிராஜமார்க்கத்தைப் படித்து,அது உண்மையில் ஒரு தனிமரபை காட்டுகிறதா என்று பார்க்கப் போகிறேன். கவிராஜமார்க்கம் சமஸ்கிருத இலக்கிய மரபை அடியொற்றிஇயற்றப்பட்டது என்று படித்திருக்கிறேன்.அது உண்மை என்றால் கன்னடம் தமிழைப் போன்ற செவ்வியல் மொழியே அல்ல.தமிழ் முற்றிலும் மாறுபட்ட மரபு கொண்டது.தமிழ் இலக்கியங்கள் சம்ஸ்கிருத மரபிலிருந்து பெரிதாக ஏதும் இரவல் வாங்கியதில்லை.மேலும் யு.ஆர்.அனந்தமூர்த்தி பெரிதும் போற்றும் கன்னடரான பேரா.ராமானுஜன் தான் தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கிய மரபை பற்றி முதல் குரலை கொடுத்தவர்.அவர் கன்னடத்தின் செவ்வியல் தன்மையை பற்றி ஒரு போதும் சொன்னதில்லை.

இவ்வாறு கூறிச்செல்கிறார் பேரா.ஜே.எல்.ஹார்ட்

கன்னட செம்மொழி ஆவதை பற்றி நாம் வருந்தவில்லை.ஆனால் நம்முடைய மொழியின் செவ்வியல் தன்மையை ஒருவர் குறுகிய நோக்கத்துடன் கேள்விக்குட்படுத்துவதே நமக்கு வருத்தம் அளிக்கிறது.

நம் தமிழ்நாட்டில் பிறந்து வயிறு வளர்க்கும் சோதா பசங்களான டபுள் மீனிங் புகழ் "எஸ்.வி.சேகர்" முதலானவர்களே தமிழ் செம்மொழி என்பதை கிண்டல் அடித்து பிழைக்கும்போது மற்றவர்களை என்ன சொல்வது?(ஏதோ ஒரு திரைப்பட விழாவில் இவர் தமிழை கிண்டல் அடித்து அருவெருப்பு ஊட்டியதை மறக்கமுடியாது)

எழுத்தாளர்கள் புத்திசாலிகள்.இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் குறுகிய நோக்கங்களுக்காக சமூக மதிப்பீடுகளை அவர்கள் மாற்ற முயலும்போது அவர்கள் எழுத்து மேல் நமக்கு உள்ள மரியாதை குறைகிறது.இதற்கு தமிழ் சூழலிலும் பல உதாரணங்கள் காண கிடைக்கின்றன.


" செத்த மொழிகளான லத்தீன்,கிரேக்கமும் தான் கிளாசிக்கல் என்று சொல்லப்படவேண்டும். இப்போது உள்ள மொழிகளில் பெரும்பாலானவை ஐந்து நூற்றாண்டு கால பழமையை உடையவைதான்.தமிழும் கன்னடமும் தான் ஆயிரம் ஆண்டு கால பழமையை உடையவை.ஆகவே புராதன வாழும் மொழிகள் என்று தமிழையும் கன்னடத்தையும் வகைப்படுத்துவதே சிறந்தது.செவ்வியல் என்று கூறினோம் என்றால் எது பழமையானது என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது.என் பாணியில் வகைப்படுத்தினால் தமிழ் கன்னடத்தைவிட சற்று பழமையானதான இருந்தாலும் பிரச்சினை இல்லை.உலகமயமாக்கல் யுகத்தில் பல மொழிகளின் இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் போது சகோதர மொழியுடன் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை"

இதையும் யு.ஆர்.அனந்தமூர்த்திதான் 24 மார்ச் அன்று எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார்.(hope good sense prevail)

23 comments:

Anonymous said...

Muthu,
UR Anantha moorthy is supposed to be a Tamilian, you know? He still speaks Tamil at home.

Muthu said...

dear anony,

this is news to me..i will ask somebody...still question remains...

why come as anony?

Unknown said...

செம்மொழின்னா 2000 வருடம்னு அறிவிச்சுருக்கணும்.1000 வருடம் பழமையான மொழி எல்லாம் செம்மொழின்னு அறிவிச்சு தமிழை அந்த வகையில சேத்திருக்காங்க.அதை முதல்ல மாத்த கலைஞர் நடவடிக்கை எடுக்கணும்.அப்போ அனந்தமூர்த்தி மாதிரி ஆளுங்க பேசாம இருப்பாங்க

பட்டணத்து ராசா said...

"தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி" ங்கற பெரியாரின் கருத்தை பத்தி என்ன நினைக்கிறிங்க முத்து

Muthu said...

அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை..ரொம்ப சிம்பிள் ராசா..அதே பெரியாரே சொல்லியிருக்காரு..

"ராமசாமி சொல்லியிருக்கானேன்னு மட்டும் எதையும் நம்பாதே..சொந்த புத்தியையும் பயன்படுத்து"

இது தான் இதற்கு பதில்...சோத்தனவாதிகளுக்கு பதில் சொல்லும்படியான கேள்வியை கேட்ட என் நண்பர் பட்டணத்து ராசா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

பட்டணத்து ராசா said...

//இது தான் இதற்கு பதில்...சோத்தனவாதிகளுக்கு பதில் சொல்லும்படியான கேள்வியை கேட்ட என் நண்பர் பட்டணத்து ராசா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... //

there you are man.. :-) :-)

சந்திப்பு said...

நம் மொழி செம்மொழி என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது! அதே சமயம் தன் மொழியும் அந்த பட்டியலில் சேர வேண்டும் என்று யு.ஆர். அனந்தமூர்த்தி எண்ணியிருந்தால் பாராட்டலாம். அவரது நோக்கம் வேறாக இருக்கும் போது, அதுவும் ஒரு இலக்கியவாதிக்கு இத்தகைய குறுகிய நோக்கம் நிச்சயம் கூடவே கூடாது! இலக்கியவாதிகள் எதார்த்தவாதிகளாக இருக்க வேண்டும் - கற்பனைவாதிகளாக இருந்தால் இப்படிப்பட்ட அபத்தங்கள் நிச்சயம் தோன்றும்.
சரி முத்து! தமிழ் செம்மொழி என்பதற்காக பெருமைப்படலாம். ஆனால் இன்னும் அது அறிவியல் மொழியாக மாறவில்லையே! இதுதானே இன்றைத் தேவை - உயர் கல்வியில் கூட தமிழின் இடம் மறுக்கப்படுகிறதே. அது ஆட்சி மொழியாக என்று மாறும்.

செல்வன்: தமிழ் செம்மொழியானதற்கு கருணாநிதி மட்டும் காரணமல்ல; அது காலத்தின் கட்டாயம்! இங்கே தமிழ் இலக்கியவாதிகளின் விடாப்பிடியான போராட்டம் - அதன் தேவைக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பியது போன்ற சூழல்களே! அதே சமயம் தமிழ் என்றாலே அது திராவிட இயக்கத்திற்கு தான் சொந்தம் என்பது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று 63 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் காங்கிரசு காரர், அவர் எழுதி வைத்தது என்ன தெரியுமா? என்னுடைய உடலை பொதுவுடைமைக்காரர்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று! இதிலிருந்து தமிழ்நாடு கோரிக்கையில் திராவிட இயக்கத்தின் உறுதித்தன்மை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்! அதே போல் தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த பி. ராமமூர்த்திதான். இதில் திராவிட இயக்கத்திற்கு எந்த பங்கும் இல்லை. தமிழில் தந்தியைக் கொண்டு வந்தவர் பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த நல்லசிவன் அவர்கள்தான். இந்தியை எதிர்த்த ஒரே காரணத்தால் தமிழ் பாதுகாப்பு வீரராகி விட்டனர் திராவிட இயக்கத்தினர்! 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் தமிழை உயர் கல்வியில் ஏன் கொண்டு வரமுடியவில்லை என்பதற்கு கருணாநிதி - ஜெயலலிதா - வைகோவிடம் விடை கிடைக்குமா?

Muthu said...

ராசா,

நன்றி...குன்ஸாவா சொல்ல முயற்சி பண்றேன்...ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க..

நம்ப அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி கிராமத்தில் வளர்ந்ததாலும் கடும் உழைப்பினாலும் காய்ந்து கருத்து இருப்பார்கள்.டவுனில் பக்கத்து வீ்ட்டு ஆண்ட்டி நச்சென்று இருக்கும்.அதுக்காக நம் பெற்றோர்களை கைவிட முடியுமா?

இதை அப்படியே எடுத்துக்கொள்ளமுடியவிட்டாலும் சில உணர்வுபூர்வமான திறப்புகளை இது கொடுக்கலாம்.

Unknown said...

பொதுவுடமை கட்சிக்காரர்களின் தமிழ் பணி பற்றி நல்ல தகவல்களை தந்ததற்கு நன்றி சந்திப்பு.இதெல்லாம் இன்று வரை பெரும்பாலானோருக்கு தெரியாது.ஆனால் என்னை பொறுத்தவரை திராவிட கட்சியினர் குறிப்பாக கலைஞரும் அண்ணாவும் தமிழுக்கு மற்ற கட்சியினரை விட அரும்பணி ஆற்றியுள்ளனர் என்று தான் சொல்வேன்.

தமிழில் உயர்கல்வி வராமல் போனதற்கு பொருளாதாரம் சார்ந்த வலுவான காரணிகள் உண்டு.ஆங்கிலத்தோடு போட்டி போட்டு ஓட தமிழால் முடியவில்லை.உலக பொருளாதாரம் ஆங்கிலம் பேசும் நாடுகளால் நடத்தப்படுகிறது.இதை மாற்ற கலைஞரும் அம்மாவும் என்ன செய்திருக்க முடியும் என்கிறீர்கள்?மக்களின் சுயவிருப்பத் தேர்வு ஆங்கிலமாக இருக்கும்போது அரசும் கட்சிகளும் என்ன செய்ய முடியும்?

Muthu said...

சந்திப்பு,

அதிமுக மீண்டும் ஜெயித்து வந்தால் தமிழ் வளரும் என்று அதிமுகவின் தேர்தல் அறிக்கை சொல்கிறது.:))))))

இலக்கியவாதிகள் கற்பனைவாதிகளாக இருப்பது பற்றிய உங்கள் வாதம் ஆழமானது.அதை தனியாக வைத்துக்கொள்வோம்.உதாரணங்கள் கொடுங்கள்.
தமிழ் என்றாலே திராவிட இயக்கத்திற்குத்தான் சொந்தம் என்பது போல் கட்டமைக்கப்பட்டு வருவது பற்றிய உங்கள்அங்கலாய்ப்பு அர்த்தமுள்ளது.பார்பனர்களில் ஒரு தரப்பினர் (அப்பாடா தனிப்பட்ட தாக்குதல் என்ற பிரச்சினையை தவிர்த்தாயிற்று) தமிழை கறித்து கொட்டுவதற்கும் இது காரணமாகிவிட்டது.
செம்மொழி ஆனதற்கு பல தரப்பினரின் முயற்சி இருந்தாலும் அரசியல் தளத்தில் அதை எடுத்த கருணாநிதிக்கும் அதற்குரிய மதிப்பை நாம் கொடுக்க வெண்டும்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்ற விடாமல் காங்கிரசார் சட்டசபையில் ஓட்டு போட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

Muthu said...

santhipu,

i also agree with selvan on his views expressed in the above comment..

மக்களின் சுயவிருப்பம் என்ற விஷயத்தில் மட்டும் நமது அறிவுஜீவிக்களின் மற்றும் மீடியாக்களின் தவறான அணுகுமுறையை நான் குற்றம் சொல்வேன்

Unknown said...

தமிழ்நாடு என்று பெயர் மாற்ற விடாமல் காங்கிரசார் சட்டசபையில் ஓட்டு போட்டார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். /

I remember reading that resolution was unanimously passed in the assembly.Am not sure,though

பட்டணத்து ராசா said...

சந்திப்பு

//இலக்கியவாதிகள் எதார்த்தவாதிகளாக இருக்க வேண்டும் - கற்பனைவாதிகளாக இருந்தால்//

அவங்க இலக்கியத்துல கற்பனை கூடாதுன்னு நிங்க சொல்லல நினைக்குறேன்.

அப்புறம் தமிழ் அறிவியல் ஆகுறதுல என்ன கடினம்முன்னு என்ககு புரியல, சொல் வளம் இல்லன்னு சொல்றிங்களா. அந்த சொற்களை அப்ப்டியே பயன்ப்படுத்தினா என்ன?? ஆங்கிலத்துல "பாதயாத்திரா" சேத்துகிட்ட மாதிரி.

முத்து

//நம்ப அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி கிராமத்தில் வளர்ந்ததாலும் கடும் உழைப்பினாலும் காய்ந்து கருத்து இருப்பார்கள்.டவுனில் பக்கத்து வீ்ட்டு ஆண்ட்டி நச்சென்று இருக்கும்.அதுக்காக நம் பெற்றோர்களை கைவிட முடியுமா?

இதை அப்படியே எடுத்துக்கொள்ளமுடியவிட்டாலும் சில உணர்வுபூர்வமான திறப்புகளை இது கொடுக்கலாம்//

எனக்கா சொல்றிங்க புரியல

Muthu said...

ராசா,

மொழிப்பற்று, இனப்பற்று ஏன் என்பதற்கு ஒரு குன்ஸா விளக்கம் அது...அல்டிமேட்டாக மனிதநேயம் முக்கியம் என்பேன் நான்....

நம்முடைய மொழிப்பற்று முரட்டுதனமானது என்று கூறிய மற்ற மொழிகாரர்கள் தங்கள் மொழிகளை இந்தியிடம் அடகு வைத்தாயிற்று...

மற்றபடி அறிவியல் சமாச்சாரத்தில் நீங்கள் சொல்லுவது போல் அப்படியே எடுக்கலாம்.யார் முடிவு எடுப்பது?

Muthu said...

raasa,

இலக்கியத்தில் கற்பனை வேண்டும்..ஆனால் கற்பனாவாதம் இருக்கக்கூடாது.படியுங்கள் ஜெயமோகனின் "பின்தொடரும் நிழலின் குரல்".

சந்திப்பு said...

செல்வன்: ஆரோக்கியமான விவாதத்திற்கு வாழ்த்துக்கள்!
சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள் - அங்கு அனைத்து துறைகளிலும் சீன மொழிதான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. கணிணிதுறை உட்பட. சீனா மட்டுமல்ல தென்கொரியா, வடகொரியா, ஜெர்மன், பிரான்சு என பல நாடுகளில் தங்கள் மொழிகளே தொழில்நுட்பத் துறைகளில் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமின்றி நாம் ஆங்கிலயர்களுக்கு அடிமையாக இருந்ததால், அந்த ஆங்கில மொழியின் மீதான தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. நமக்கு பக்கத்தில் உள்ள இலங்கையில் கூட தமிழ் மருத்துவம், பொறியியல் உட்பட உயர் கல்வித்துறையில் பயன்படுத்துகின்றனர். சொந்த மொழியில் படிக்கும்போதுதான் உண்மையான அறிவு வளம் மேலும் பன்மடங்கு பெருகும் என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதே போல் மக்களின் சுயவிருப்பம் ஆங்கிலம் சார்ந்த இருக்கிறது என்பதுகூட சரியானவாதமல்ல; மாறாக ஆங்கில மொழியை நம் மீது திணிக்கிறார்கள். நமக்கும் வேறு வழியில்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதற்காக நான் ஆங்கில மொழி எதிரி என்று கருதிவிடாதிர்கள். உலகில் உள்ள அனைத்து மொழிகளும் சிறப்பானதே. இங்கே என்னுடைய விவாதம் நம்முடைய தமிழ் செம்மொழி என்றெல்லாம் பெருமையடிக்கப்பட்டாலும், அது கல்வித்துறையில் பிரதான பாத்திரம் வகிக்கும் மொழியாக மாறவில்லையென்பதே! இதற்கு திராவிட இயக்கங்கள்தான் முழுமையான பொறுப்பு ஏற்க வேண்டும். அது மட்டுமல்ல; இந்திய நாட்டில் அனேகமாக தமிழகத்தில் மட்டும்தான் ஆங்கில மோகம் இந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது.
பட்டினத்து ராசா : நம்முடைய தமிழ் மொழிக்கு அனைத்து வளங்களும் உள்ளன. ஆனால் ஆட்சியாளர்கள்தான் தமிழை கைகழுவுகிறார்கள்.

பட்டணத்து ராசா said...

சந்திப்பு

I just won't say that the obession of english is forced on people. may be what you say is true to some extend.But the obession is just because of our own people's attitude.Here we are the people still admire the english is knowledge instead it is a mere communal language.

just typing this in english to BOLD my stand :-)

Unknown said...

அன்பின் சந்திப்பு,

தமிழக மக்கள் தமிழை கல்வி கற்கும் மொழியாக ஏற்கவில்லை.திராவிட கட்சிகள் ஓரளவு இதற்கு பொறுப்பு தான்.ஏனெனில் அவை ஆளும்கட்சியாக பல வருடங்கள் இருந்துள்ளன.மக்கள் மீது ஆங்கிலம் திணிக்கப்பட்டது என்பதை விட பொருளாதார,அரசியல் காரணிகள் ஆங்கில வழி கல்வியை அவசியமாக்கின என நான் கருதுவேன்.

தமிழில் புத்தகங்கள்,ஜர்னல்கள்,கட்டுரைகள் வளர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் ஒரு அளவுக்கு மேல் அரசு இதில் செய்ய ஏதுமில்லை.புத்தகத்தை,ஜர்னலை அச்சடிக்கலாம்.மக்களை படிக்க வைப்பது அவ்வளவு எளிதா என்ன?

தமிழை இனி எம்முறையில் வளர்ப்பது என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

கருப்பு said...

நீங்கள், நான், தங்கமணி, சிவனடியார் எல்லோரும் ஒரே ஆட்களாம். பரம்ஸ் என்பவர் சொல்லி இருக்கார் என் பதிவில்!

ROSAVASANTH said...

அனந்தமூர்த்தியின் பல பேச்சுக்கள் அப்பட்டமான கன்னட தேசிய அரசியலுக்கு ஆதரவானது. காவேரி பிரச்சனையில், தமிழ்நாட்டில் மக்கள் எலி தின்று கொண்டிருக்கும் நேரத்தில், உச்ச நீதிமன்றம் கர்நாடகாவை நேரடியாக கண்டித்த பின்னும், பிடிவாதமாய் தண்ணீர் தர மறுத்து, கிருஷ்ணா தலமையில் நடந்த பாதயாத்திரையில், மற்ற கன்னட தேசிய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து இவரும் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல், ஒரு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய, அடுத்தவர் பிர்ச்சனை குறித்த குறைந்த பட்ச கரிசனம் கூட இல்லாமல் பேட்டியும் அளித்தவர்.

இவருடய தமிழை முன்வைத்த அவதூறு கருத்துக்களை அதன் பிண்ணணியை வைத்து புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மற்றும் இந்திய இலக்கிய சூழலிலும் அளவுக்கு மீறிய ஒரு முக்கியத்துவம் இவரது எழுத்துக்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. சில மங்களூர் பார்பனர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதை தாண்டி, எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இவரது சம்ஸ்காரா என்ற மிக சாதாரணமான, நாவல் இன்றுவரையிலும் தமிழ்/இந்திய இலக்கிய சூழலில் அளவுக்கு மீறி கொண்டாடப்படுகிறது. அமைப்பியலை தான்தான் கண்டு பிடித்தது போல பாவனை செய்யும் நகைச்சுவை மிகுந்த தமிழவன் போன்றவர்கள், இவர் சம்ஸ்காரா எழுதியதை, பெரியாரின் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு, ஜல்லியடித்திருப்பதை 'அவஸ்தை' நாவலின் முன்னுரையில் பார்க்கலாம். (அதாவது சம்ஸ்காரா ஏதோ கர்நாடகா சமூகத்தில் பூகம்பத்தையே உருவாக்கியது போலவும், பெரியாரால் ஏன் அப்படி செய்ய முடியவில்லை என்று). தமிழவன் போன்றவர்கள் அனந்தமூர்த்தியின் நெருங்கிய நண்பர்கள். தனது அசட்டு நம்பிக்கைகள் ஏமாந்ததால் ஏற்பட்ட, திராவிட இயக்கத்தின் மீதுள்ள கோபத்தால் (தமிழ்நாட்டில் தனக்கு வேலை கிடைக்காத அரசியல் கூட அதற்கு இன்னொரு காரணமாய் இருக்கலாம்), திராவிட அரசியல் மீது (முட்டாள்தனமான)தீரா வெறுப்பு கொண்டிருக்கும் தமிழவனின் தொடர்பினாலாயே, தனக்கு சரியாய் தெரியாத தமிழ் சார்ந்த பிரச்சனைகள் பற்றியெல்லாம் அனந்தமூர்த்தியை கருத்து கூற வைக்கிறது.

கன்னடம் செம்மொழி என்பதை போல இந்த நூற்றாண்டின் மிக பெரிய கேனத்தனமான ஜோக் இருக்க ஒன்று முடியாது. பத்ரி கூட அப்படி எதோ அப்படி ஒரு ஒப்பீடு செய்து ஒளரிகொண்டிருந்தார். தமிழ் வேர் சார்ந்த சொற்கள், மற்றும் சமஸ்கிருதம் இவற்றை நீக்கினால் கன்னடத்தில் ஒரு வாக்கியம் கூட அமைக்க முடியாது. ஆனால் தமிழ் சமாச்சாரம் அப்படி அல்ல. இதை நன்கு அறிந்த தமிழவன் போன்றவர்கள், இந்த விஷயத்தில் அனந்த மூர்த்திக்கு அறிவுரை சொல்ல மாட்டார்கள். அல்லது அனந்த மூர்த்திக்கு அது நினைவில் இருக்காது.

முத்து இப்படி மீண்டும் சொல்வதை பற்றி கிண்டலாய் நினைத்து கொண்டால் அதில் தப்பில்லை. எழுத நினைத்தவற்றை எல்லாம் எழுதும் காலம் வரும்போது, 'சம்ஸ்காரா' பற்றி விரிவாய் எழுதும் நோக்கம் உள்ளது.

Muthu said...

ரோசா,

நீங்கள் பின்னால் எழுத நினைப்பதைப் பற்றிய என் கிண்டலுக்கு பின்னால் ஆதங்கமே நிறைந்துள்ளது.
விஷயத்திற்கு வந்தோம் என்றால்,சம்ஸ்காராவை நான் படிக்கவில்லை.பிறப்பு என்ற அவருடைய இன்னொரு நாவலை படித்துள்ளேன்.அவ்வளவாக கவரவில்லை.சில சிறுகதைகளை படித்துள்ளேன்.சிறுகதைகள் அளவிற்கு நாவல் இல்லை.ஆனால் இன்னும் படிக்கவேண்டும்.
இலக்கிய உலகில் அளவிற்கு மீறிய முக்கியத்துவம் என்பதை அவர் பெயருக்கு கீழே எப்போதும் "ஞானபீட விருது பெற்ற" என்று மீடியா போடும் அடைமொழியுடன் தொடர்புப்படுத்தியே புரிந்துக்கொள்கிறேன்.

மங்களூர் பார்பனர் என்று நீங்கள் கூறியது நேட்டிவ் பார்பனர்களா இல்லை கொங்கணி பார்ப்பனர்களா?
திராவிட அரசியல் மேல் உள்ள கோபத்தால் பலபேர் நிலைதடுமாறி இருப்பதே திராவிட அரசியலை எனக்கு மிகவும் விரும்ப வைக்கிறது.

கன்னடர்கள் மனதளவிலும் சம்ஸ்கிருதத்திற்கு அடிமையாகி கிடப்பதையே நான் இங்கு கர்நாடகத்தில் மங்களூரில் அமர்ந்து பார்க்கிறேன்.ஆகவே கன்னடத்தின் செம்மொழி தகுதிப்பற்றி நீங்கள் கூறி இருப்பதும் சரியே...

தருமி said...

"தமிழ் என்றாலே திராவிட இயக்கத்திற்குத்தான் சொந்தம் என்பது போல் கட்டமைக்கப்பட்டு வருவது ..." - இதற்குத் திராவிடக்கட்சியினரை விடவும்
ஏனையோரே காரணம் என்றே நான் நினைக்கிறேன். தமிழை திராவிடக் கட்சிகளுக்குத் தாரை வார்த்து கொடுத்ததே மற்ற கட்சிகளும், மற்ற 'பெரும் படிப்பு'அடித்தவர்களுமே.

Nalliah said...

உடுப்பி ராகவாச்சார் அனந்தமூர்த்தி உடுப்பி அருகே மாத்வாச்சாரிய குருபரம்பரையில் வைதீக வைணவ மரபில் பிறந்து ஆங்கிலப் பட்டமேற்படிப்பு படித்து மேற்குநாடுகளில் பணியாற்றியவர். அவர் அமெரிக்காவில் இருக்கும்போது எழுதிய நாவல் இது. பல இந்தியமொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவல் தமிழில் இருமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலில் தி.சு. சதாசிவம் அவர்கள் மொழிபெயர்த்து காவ்யா வெளியீடாக வந்தது. பிறகு ஓரியன்ட் லாங்மேனின் பிழைமலிந்த மொழிபெயர்ப்பு வந்தது. சம்ஸ்காரா நாவலைத் திரைப்படமாக இயக்கித் தயாரித்தவர் பட்டாபி ராம ரெட்டி. ஜனாதிபதியின் தங்கத் தாமரை விருது பெற்ற முதல் கன்னடத் திரைப்படம் சம்ஸ்காரா தான்.