Saturday, March 11, 2006

அந்த காலத்தில....

தருமியின் இந்த பதிவையும் இதற்கு முந்தைய பதிவையும் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை இங்கே பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எல்லாம் இந்த கடவுள் சோதிடம் சம்பந்தப்பட்ட விசயங்கள்தான்.

தன்னால் விளக்கமுடியாத விஷயங்களை கடவுள் மேல் போட்டு பார்த்து மனித குலம் திருப்திப்பட்டு வந்த காலம் மலையேறிவிட்டது என்று நினைக்கிறேன்

.இதைப்பற்றி விளக்கமாக எழுதும்முன் நான் ஒரு காலத்தில் திண்ணையில் ஒரு எதிர்வினை கொடுத்திருந்தேன்.அதைப்பற்றி இங்கு எழுதலாம் என்று நினைக்கிறேன்

.

சுட்டியை ஃபாலோ செய்தீர்கள் என்றால் கடவுளை பற்றி திருமதி.ஜோதிர்லதா கிரிஜா என்பவரின் கருத்தை சொல்லும்

.

சுட்டியை படித்தீர்கள் என்றால் அது ஹமீது என்பவரின் கருத்தை சொல்லும்.

நான் எழுதியது கிழ்கண்டவாறு (சுட்டி கொடுக்கப்படவில்லை )

-----------------------------------------------------------------------------

கடந்த இரு வாரங்களாக கடவுள் பற்றி இரு நண்பர்கள் எழுதிய கட்டுரையை படித்தேன்.எனக்கு தோன்றிய சில விசயங்கள்.

முதலில் நண்பர் ஜாபரின் கருத்துக்களை பார்ப்போம். எனக்கு நினைவு தொரிந்த காலம் முதல் கடவுள் விசயத்தில் இந்த வாதத்தை கேட்டு வருகிறேன். முதலில் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பார்கள்.பிறகு மெல்ல மெல்ல நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பார்கள். இங்குதான் உள்ளது விசயம். அந்த சக்தி என்ன? அதன் பண்புகள் என்ன?
தெளிவான விளக்கம் கிடைக்காது. இயற்கை என்ற விசயத்திற்கும கடவுள் என்ற விசயத்திற்கும வித்தியாசம் உண்டு. இயற்கைக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன? கடவுளுக்கு இவர்கள் தரும் விளக்கம் என்ன? இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்? இரண்டின் பண்புகளும் ஒன்று என்கிறாரா நண்பர்?

மேலும் இயற்கையின் படைப்பில் மனிதனுக்கு புரியாமல் இருக்கும் சில விசயங்களைப் பற்றி கூறினார். என் கேள்வி என்னவென்றால் இயற்கையின் படைப்பில் நூறு வருடங்களுக்கு முன்பு மனிதனுக்கு தெரியாத
விசயம் என்ன? இப்போது தெரியாத விசயம் என்ன? சிந்திக்க வேண்டும். வித்தியாசம் உண்டா இல்லையா?

தோழி கிரிஜாவின் கடிதத்தை பொருத்தவரை ஒன்றுதான் நாம் கூறமுடியும். திரு. சுப்ரமணியத்தின் அனுபவத்தை நம்பும் மக்களுக்கு உங்கள் அனுபவத்தை நம்புவதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது. உங்கள் அனுபவத்தையும் நீங்கள் கூற வேண்டும். நாங்கள் படிக்க வேண்டும். பிள்ளையாரும் பால் குடித்து ரொம்ப நாள் ஆகிறது.

திரு. சுப்ரமணியத்தின் மேல் அக்கறை உள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கு கும்பகோணம் குழந்தைகள் மேல் ஏன் அக்கறை இல்லை என்று கேட்பது வறட்டு வாதம் என்றால் அந்த வறட்டு வாதத்தை சிந்திக்க தெரிந்த மனிதன் செய்துக்கொண்டே இருப்பான்.

16 comments:

சந்திப்பு said...

இயற்கையின் ரகசியம் குறித்த கேள்வி மிக அடிப்படையானது. சம்பந்தப்பட்டவர்களின் பதிலை நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அத்துடன் என்னுடைய கருத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

---நம் சிறு வயது முதலே ஒரு பொருள் என்று இருந்தால் அதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என்ற சிந்தனையே ஊட்டப்படுகிறது. இந்த சிந்தனை நம் வாழ்வியலோடும் பெரும் பகுதி ஒத்திருப்பதால் நாமும் அதனுடன் இணைந்து விடுகிறோம். இங்கே தான் பிரச்சினையின் மூலவேரே அடங்கியிருக்கிறது.

இங்கே நாம் இயற்கை என்று பொதுவாக பேசும் போது அது பூமியையோ, கோள்களையோ, விலங்கினங்களையோ... அவரவர் பார்வையில் நீண்டுக் கொண்டே போகும். இதை முழுமையாக பிரபஞ்சம் என்று கூறி விடலாம். இந்த பிரபஞ்சம் என்பது நாம் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏன் இன்று அல்ல இன்னும் பல கோடி ஆண்டுகள் ஆனாலும் இந்த பிரபஞ்சம் என்பது இருந்துக் கொண்டேதான் இருக்கும். ஏற்கனவே அது இருந்து வருகிறது. இதை யாராலும் உருவாக்கவும் முடியாது. உருவாக்கவும் இல்லை. நம் சிந்தனையில் இந்த பிரபஞ்சம் ஏற்கனவே இருந்து வருகிறது - இயங்கிக் கொண்டே இருக்கிறது - அதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது என்று நச்சுன்னு பதிந்து விட்டால் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்து விடும்.
தொடர்வோம் முத்து... விவாதத்தை

டிபிஆர்.ஜோசப் said...

அன்புள்ள முத்து,

உங்களுடைய பதிவுகளில் நீங்கள் இட்டிருந்த ஜோ.கிரிஜா (அவர் ஒரு பழம்பெரும் எழுத்தாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் ஆண்களைக் குறைசொல்லுவதாகவே இருக்கும் என்பது வேறு விஷயம்!)

அவர் திண்ணையில் எழுதியுள்ளதைப் படித்தேன். அதற்கு கருத்து சொல்வதை விட நான் என்ன நினைக்கிறேன் என்பதை இங்கு எழுதுவது நல்லது என்று நினைக்கிறேன்.

இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் எனக்கு பலமான, ஆழமான நம்பிக்கை உண்டு..

ஆனால் அவருடைய செயல்களுக்கு, அதாவது சுப்பிரமணியத்தைக் காப்பாற்றிய இறைவன் ஏன் கும்பகோணம் சிறார்களை ஏன் காப்பாற்றவில்லை அல்லது ஏன் சுனாமியை தடுத்து நிறுத்தவில்லை என்றால் அதற்கு என்னால் மட்டுமல்ல யாராலும் விடையளிக்க முடியாது.

இறைவனுடைய அல்லது நாத்திகனின் பார்வையில் இயற்கையின் செயல்களுக்கு மனித மூளையால் காரணம் கற்பிக்க நிச்சயம் முடியாது.

இறைவனுடைய செயல்களுக்கு ஒவ்வொன்றிற்கும் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறதென்பதை நம்புவன் நான். ஆனால் இறைவன் என் கண்முன் வந்து இதை செய் என்று சொன்னார் அதை செய் என்று சொன்னார் என்று சொல்வதை நான் நம்புவதில்லை. அதைத்தான் ஆய்வாளர்கள் intuition என்று கூறுகிறார்கள். அது எப்படி நமக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுகிறது என்பதை எந்த ஆய்வாளர்களாலும் ஆய்ந்து கூற முடியாது. It happens. That's it. அதற்கு யார் காரணம்? இக்கேள்விக்கு நிச்சயமான விடை இல்லை. It simply depends on who you are, I mean, do you believe in God or not.

Anonymous said...

Eraivan endru oruvan uruvamaga engum kidaiyathu.avan aroopamanavan, aroopana ondrai eppadi innondrai katti oppittu solla mdiyum? ethaithan namathu nattu (tamil nadu) sidharkal Vallalar, Thayumanavar, Thiruvalluvar ellam avan 'ARIVU MAYAMANAVAN" endru sonnarkal. Arivu enpathai verum sollal vilakki matravarkalukku puriyavaikka mudiyathu. atharku manathai unarchi nilaiyilirunthu arivu nilaikku oru payirchi tharavendum. mana vegam 14-40 c/s unarchiyaga seyalpadum. antha manathai arivu nilaikku etta athai 8-13 c/s nilaiyil thodarnthu payirchi vendum. athu uyir mael manam vaikkum oru payirchi. athan pinnar sinthanaikal ellam vidai
udan kidaikkum. ithai payindrathal than avarkal ellam therinthu kondarkal. ethan innoru peyar 'THAVAM'. Thiruvalluvarum Thirukkuralil 27vathu adhikarathil ithaithan solkirar. EYARKAI endral Prapanchamum ulladakkiyathu than. intha pirapanchathil ennenna planets, stars, nebula, milky way, galaxy, valnatchathiram innum anega porutkal ellam ozhungaka iyangikkikondirukkirathu allava? manithan mattum yane ozhungu thavari nadakkavendum? ithu mathiri kelvikalai enni vidai thedungal, payirchi thodarnthu seyyumpothu. ungal arivae itharku vidai sollum. ithu madhiri thedal than 'Great Sacratis' sonnathu, ethaiym etharkaga aen endu kale endru. vazhga valamudan-thangam

G.Ragavan said...

இறைநம்பிக்கை குறித்து நான் சொல்ல நினைத்ததை ஜோசப் சார் அழகாகச் சொல்லி விட்டார். அதுதான் என்னுடைய கருத்தும்.

அனைத்தும் அறிந்த நிலை என்று ஒன்று இல்லை. தொலைக்காட்சியின் ஒவ்வொரு பாகத்தின் செயலுக்கும் விளக்கம் சொல்கிறவன்...அதை முழுதும் அறிந்தவன். அறியாதவன் படம் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறான். அவனுக்குத் தெரியாததால் அவனுக்கு தொலைக்காட்சிப் படம் தெரியாமல் போவதில்லை.

அது போல இறைவனை நம்புகிறவர்களுக்கு அவனை முழுதுணர்ந்தவனாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆகையால் உங்கள் கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியவில்லை என்பதால் தொலைக்காட்சிப் படம் தெரியாமல் போவதில்லை.

சந்திப்பு said...

ஜோசப் - இராகவன் இருவருக்கும் : உங்களது மனதையோ - நம்பிக்கைகளையோ புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன். இது விவாதம் - அதில் நானும் பங்கேற்கிறேன். என்பதை கருத்தையும் விளக்க முற்படுகிறேன் அவ்வளவுதான்...

---இறைவன் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் எனக்கு பலமான, ஆழமான நம்பிக்கை உண்டு---

ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை என்பது அவசியமானதுதான். அதே சமயம் நம்பிக்கையே உண்மையாகி விடாது. நம்பிக்கை என்று கூறும் போதே அதில் நிரூபிக்க கூடிய உண்மையில்லை என்பதும் அடங்கியிருக்கிறது! நம்பிக்கை - விஞ்ஞானப்பூர்வமானது அல்ல.

இதை ஒரு நிகழ்வின் மூலம் பார்க்கலாம் : நம் முன்னோர்கள் 200 வருடங்களுக்கு முன்பு பூமியை தட்டையானது என்று நம்பினர். அது மட்டுமின்றி பூமியை மையமானது என்றும் இதைச் சுற்றித்தான் மற்ற கோள்கள் இயங்கி வருகின்றன என்று நம்பினர்! ஆனால் உண்மை என்ன பின்னர் மனிதனின் விஞ்ஞான அறிவின் மூலம் (நியூட்டன், கலிலியோ...) இவை பொய் என்று நிரூபிக்கப்பட்டது. இன்றைக்கு நாம் இதைத்தான் விஞ்ஞானமாக படித்தும் வருகிறோம். (அன்றைக்கு மத நம்பிக்கையாளர்களால் உலகம் உருண்டையானது என்று கூறியதற்காக நியூட்டனும், கலிலியோவம் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்)

இப்போது சொல்லுங்கள் நம்பிக்கை சரியானதா! விஞ்ஞானபூர்வ உண்மை சரியானதா! எனவே நாம் உண்மையை அறிய முயல வேண்டும். அதற்காக விஞ்ஞானத்தைத்தான் நாட வேண்டுமே ஒழிய நம்பிக்கை மூலமோ - கற்பனைகள் மூலமோ அதை அறிய முயலக்கூடாது.

இராகவன் டி.வி. தத்துவத்தை முன்வைத்துள்ளார். டி.வி. ஒரு விஞ்ஞான சாதனம் - அது ஒரு காட்சிப் பெட்டி அவ்வளவுத்தான் அதை பார்ப்பவருக்கு அதன் பாகங்கள் தெரியவேண்டிய அவசியமில்லை. அதே சமயம் அதன் பாகங்கள் இல்லாமல் படத்தையும் பார்க்க முடியாது! இது உங்களுக்கும் - எல்லோருக்கும் தெரிந்த உண்மை! இதிலிருந்து எதை விளக்க முற்படுகிறீர்கள் என்பதுதான் இங்கு கேள்வி!

இங்கே இரண்டு உண்மைகள் உள்ளன. 1. டி.வி செயல்படுவதற்கான பாகங்கள் என்பது முற்றிலும் உண்மையானது. அதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
2. டி.வி. காட்சியாக தெரியக்கூடியது!

நீங்கள் இங்கே கூறவருவது ஒரு மாயாவாத தத்துவம். டி.வி.க்குள் உள்ள பாகத்தை படம் பார்ப்பவன் எவ்வாறு உணருவதில்லையோ அதுபோல கடவுள் அனைவருக்கும் தெரியாமல் காட்சியளிப்பர் என்பதா? இங்கே டி.வி.யின் பாகங்கள் நிஜமானது - தொட்டி - உணர்ந்து பார்க்க கூடியது! நீங்கள் கூறுவது?

Sam said...

மாயை

எது உண்மை? எது பொய்? கனவிலும் சுகப்படுகிறோம், சோகப்படுகிறோம். விழித்திருக்கும் போது
வரும் உணர்வுகள் அனைத்தும் கனவிலும் வருகிறது. கனவிலிருந்து விழிக்கும் போது நம் நிலை
வேறாக இருக்கிறது. இறப்பு என்பது இழப்பு என்று எண்ணும் போது துக்கம் வருகிறது. தூக்கத்திலிருந்து விழிப்பது போல் தான் இறப்பிலிருந்து இன்னொரு நிலைக்குப் போவது. உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது, கனவா அல்லது நிசமா? நிசம் என்ற நிலை எதுவுமே இல்லை.

சொந்தம்

எது யாருக்குச் சொந்தம். 'காதருந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று சுட்டிக் காட்டுகிறார் ஒரு துறவி. மதம், மனிதர்கள், நம்பிக்கைகள், எதுவுமே நாம் எடுத்துப் போகப் போவதில்லை. நமக்கு, அன்னையாக, தந்தையாக, குழந்தையாக, நட்பாக, எதிரியாக இருப்பவர் யாருமே நம்மை தொடரப் போவதில்லை. நான் உங்கள் வீட்டிலும் பிறந்திருக்கலாம், நீங்கள் என் வீட்டிலும் பிறந்திருக்கலாம். இதை யார் முடிவு செய்தது?

கடவுள்

'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி' என்று தன் அனுபவத்தை சொல்கிறார் ஒரு துறவி. 'அங்கிங்கெனாதபடி எங்கும்' என்பதோடு நான் நிறுத்திக் கொள்கிறேன். கடவுள் என்ற தமிழ்ச் சொல்லுக்கு உள்ளத்தைக் கடந்தவர் என்று பொருள் சொல்கிறார் ஒரு நல்லறிஞர். உள்ளத்தைக் கடந்தவருக்கு எதற்குக் கோவில், வழிபாடு? தொடர்ந்து வரும் பிறவி என்னும் பிணி நீக்க தொடர்பு கொள்ள வேண்டிய இடம் கோயில். கோயிலுக்குப் போகும் மக்களுக்கு மட்டும் தான் பிறவிப் பிணி தீருமா? இல்லை என்கிறது கீதை. தன் கடமையைச் செய்பவர்களுக்கும் பிறவிப் பிணி தீருகிறது ஆனால், பற்றில்லாமல் ஒன்றைச் செய்யச் சொல்கிறது. ஒன்றில் பற்று வைக்கும் போது அதற்குப் பலன் என்ற ஒன்றையும் எதிர்பார்க்கிறோம். இது பிறப்பு, இறப்பு என்ற சுழர்ச்சியில்
சிக்க வைத்து விடுகிறது. இறை வழிபாடு என்பது பிறவிப் பிணி தீர மட்டும் தானா? இல்லை. கேட்பது எல்லவற்றையுமே கொடுப்பவன் இறைவன். இறைவன் என்ற வெளியைத் தொடத்தான் தியானம், வழிபாடு. தொலைபேசியில் பேசுபவர்க்கு, தொலைபேசி எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இவ்வுலக இன்பங்களைக் கேட்கும் போது பிறப்பு, இறப்பு என்ற சுழற்ச்சி தொடர்கிறது.


வாழ்க்கையில் ஏழு சொந்தங்களை இதுவரை இழந்த எனக்குப் புரிந்த ஒன்று, நான் இல்லாவிட்டாலும் நாளை சூரியன் வரப் போகிறது.


அன்புடன்
சாம்

தருமி said...

அதைத்தான் ஆய்வாளர்கள் intuition என்று கூறுகிறார்கள்." - ஜோசஃப்

ஆனால் நீங்கள் சொல்லும் இந்த intuition கடவுள் நம்பிக்கை இல்லா என் மாதிரி ஆட்களுக்கும் வருகிறதே. நீங்கள் சொல்லும் இந்த intuition நம்து உள்மனத்தின் வெளிப்பாடு என்றே நான் கருதுகிறேன்.

Amar said...

பொதுவாக அறிவாளிகளுக்கே ஒரு புதிய விசயத்தை கண்டுபிடித்து அதை தெளிவாக புரிந்துகொள்ள சில பல வருடங்கள் பிடிக்கும்.

பலருக்கு ஆயுள் முழுவதும் ஒரு விசயத்தை கண்டுபிடிக்க முயற்ச்சி செய்தும், இறக்கும் வரை அவர்களுக்கு அது முடியாமல் போகும்.

சாதாரன உலகத்தில் உள்ள ஒரு விசயத்தை புரிந்துகொள்ளவே இத்தனை கஷ்டம் இருக்கும் போது சுத்தமாக தேடி பார்க்காமல் கடவுள் இல்லை,அப்படி இருக்கிறது என்று சொல்பவர்கள் முட்டாள்கள், மூடநம்பிக்கை கொண்டவர்கள்,etc etc என்று கூறுபவர்களை எனக்கு சோம்பேரிகள் என்று
சொல்லாமா என்றூ தோன்றும்.

தேடி பார்த்தால் கடவுள் கிடைப்பாரா என்று தெரியவில்லை, அனால் முழுசாக தேடிபார்க்காமல் நான் முடிவாக சொல்ல முடியாது.

முழுசாக time,space போன்ற constraintsகளை தாண்டி தேடுவது என்பது இன்றைய நிலையில் இயலாத காரியம்.

அதுவரை கடவுள்,இருக்கா இல்லையா போன்ற கேள்விகள் arbitary.

என்ன முக்கினாலும் பதில் கண்டுபிடிப்பது கஷ்டம்.

பூங்குழலி said...

முதலில் ஒன்று சொல்லிவிடுகிறேன்.
தமிழில் கடவுள் என்ற சொல்லாடலுக்கு, நாம் நினைக்கும் தெய்வம், சாமி போன்றவற்றில் இருந்து நிறையவே வேறுபாடு இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

நம் சித்தர்கள் போன்றோர், உள்ளத்தைக் கடத்தல் என்ற வகையில் வருகிறார்கள்.
தெய்வ வழிபாட்டையே குறைசொல்லிய சித்தர்கள் வாழ்ந்தார்கள்.

சரி, விவாதப்பொருளுக்கு வருவோம்.
நான் தெய்வம் உண்டு, இல்லை என்ற வாதத்திற்கு வரவில்லை.
தெய்வம் இருக்கிறது என்றால் அப்படி ஓரமாய் இருந்துவிட்டுப் போகட்டும்.
பெண்களை தாழ்த்திவைப்பதும்,
பாவிகளை உருவாக்கி அவர்களை ரட்சிப்பதும்தான் அவன் வேலையென்றால்,
சூத்திரர்களை உருவாக்கி மற்றவர்களுக்கு பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்ய வைப்பதும் அவன் வேலையென்றல்
இந்த பொது இடத்தில் நான் ஒன்றும் சொல்வதிற்கில்லை.

கண்ணுக்குத் தெரியாத தெய்வத்தைப்பற்றி கவலைப்படுவதைவிட, கண்முன் நடக்கும் அட்டூழியங்களை பற்றி சிந்திப்பவரையே மனிதன் என்பேன்.

தெய்வம் ஒரு நல்ல இலட்சிய தந்தையென்றால்,
வாழ்வியல் கடமையை செய்யாமல், அப்பாவுக்கு அடிவருடும் மகனைவிட,
உழைப்பைக் கொடுக்கும் மகனையே அவர் விரும்புவார், அவர் நல்ல தந்தையாய் இருக்கும் பட்சத்தில்.....

பி.கு..
இப்பதிவில் நீங்கள் கொடுத்த சுட்டிகளை இன்னும் படிக்கவில்லை,
கடவுள் என்ற வகையிலே என்னுடைய எண்ணங்களை சொல்லிவிட்டேன்.
நன்றி,

Sam said...

// திரு. சுப்ரமணியத்தின் மேல் அக்கறை உள்ள எல்லாம் வல்ல கடவுளுக்கு கும்பகோணம் குழந்தைகள் மேல் ஏன் அக்கறை இல்லை என்று கேட்பது வறட்டு வாதம் என்றால் அந்த வறட்டு வாதத்தை சிந்திக்க தெரிந்த மனிதன் செய்துக்கொண்டே இருப்பான் //


இதற்கு விளக்கம் சொல்ல முடியும். படைப்பில் விதிகள் இருக்கிறது. ஒழுங்கு இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் காரணம் இருக்கிறது. இதை நான் என்ற நிலையிலிருந்து விலகிப் பார்ப்போமா? நான் என்ற நிலை மாயை. எனக்குள்ள
அடையாளங்கள் இந்த பூமியில் தான் என்க்கு கொடுக்கப்பட்டது. 'உலகம் ஒரு நாடக மேடை, அதில் நடிப்பவர்கள் மனிதர்கள்' என்கிறார் சேக்ஷ்பியர். தத்துவுங்கள் உலகமெங்கும் உணரப்பட்டது என்பதால் இவரை இங்கே அழைத்தேன். இப்போது ராசா வேடம் கட்டியவர், அடுத்த பிறவியில் ராசாவாக இருக்க முடியுமா என்பது, அவர் செய்கிற நல் வினை, தீ வினையை பொறுத்தது
என்கிறது இந்து மதம்.'முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதில் இங்கு கால வரையறை இல்லை. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. நல்வினை, தீவினை எல்லாம் சுமந்து கொண்டு பிறவி பிறவியாக அலைகிறோம். இந்தத் தொல்லை வேண்டாமென்று
ஒரு துறவி சிவனிடம் இப்படி இறைன்ஞ்சுகிறார். ' புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி வழுவதிருக்க வரம் தர வேண்டுகிறேன்' அவனடியைப் பற்றி வேண்டினால், பிறவிப் பிணி அகலும் இது சைவத்தில். நாம் வாழ்க்கையில் சந்திக்கிற வெற்றிகள், தோல்விகள், சுகங்கள், சோகங்களெல்லாமே இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். சில வேளை என்ன முயற்சி செய்தாலும் காரியம் கை கூடாது. ஒன்றும் தெரியாதவர்கள், புரியாதவர்கள், எல்லாம் உயர் நிலையில்
பார்த்திருப்போம். பொறுமையைத் தவிர வேறு வழி இல்லை.

நான் இருக்கும் ஊரில், லஞ்சம் கொடுத்து வாகன ஓட்டுனர் அடையாள அட்டை வாங்கிய ஒருவன் ஒரு வாகன விபத்திற்குக் காரணமாயிருந்தான். அந்த குடும்பத்தில் பெற்றோரைத் தவிர பயணம் செய்த ஐந்து பிள்ளைகளும் இறந்து போனர். தந்தை ஒரு மத போதகர். இது என்ன கொடுமை? தவறுக்குக் காரணமாயிருந்த
எல்லார் தலையையும் இப்போது உருட்டுகிறார்கள். மனசிலும், உடம்பிலும், பலத்த காயம் பெற்ற பெற்றோருக்கு இப்போது வயதாகி விட்டது. இந்த வழக்கு இப்போது கடை நிலையில் இருக்கிறது. தாங்க முடியாத ஒரு இழப்பு வரும் போது சிலர் சொல்வதும் இதே ' போன பிறவியில என்ன பாவம்
பண்ணினேனோ?

நாமெல்லாம் ஒரு வகையில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நண்பர்கள் என்று நம் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தல் சந்திப்பவர்கள் புதிதாய்ப் பிறந்து வருபவர்கள் இல்லையே?
உலகிலுள்ள அத்தனை பேரையுமா சந்திக்கப் போகிறோம். சந்திப்பவர்களையும், உறவுகளையும் நான், என்ற நிலையிலிருந்து விடுபட்டுப் பார்க்கும் போது, உலகின் இயக்க விதிகள் புரிகிற்து.

நான் என்ற நிலை ஒரு மாயை. இந்த மாயை உலக வாழ்க்கைக்கு வேண்டும். இந்த மாயையில் தானே சுகமும் இருக்கிறது. மனிதன் துன்பப் பட வேண்டும் என்பது கடவுளின் நிலை இல்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் நாமே இன்றோ என்றோ அனுபவிக்கிறோம்.

அன்புடன்
சாம்

Muthu said...

சாம்,
நீங்கள் முறபிறவி என்று ஒரு கருத்தை சொல்கிறீர்கள்.அது ஒரு சமாதானம்தான். அறிவுதளத்தில் நிற்காது.

Muthu said...

வாங்க ஜோசப் சார்,

கிரிஜா அம்மையார் என்னுடைய எதிர்வினைக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.ஒன்று அவர் என்னுடைய எதிர்வினையை படிக்காமல் இருந்திருக்கவேண்டும். இரண்டு கத்துக்குட்டிக்கெல்லாம் தான் எதற்கு பதில் தரவேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

உங்களுக்கு நம்பிக்கை இருக்கலாம்.ஆனால் நான் இருப்பை கேள்விக்குட்படுத்துகிறேன்.உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்க்கிறேன்.கும்பகோணம் குழந்தைகள் கேள்வி என்னை பொருத்தவரையில் மிகவும் முக்கியமான கேள்வி.இறைவன் என்ற கருத்தாக்கத்தையும் மனித மூளைகள்தான் கொண்டு வந்தன.மனித மூளைளை சாதாரணமாக எடை போட முடியாது.

அனானி,

தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதவும்..தங்கிலிஷ் படிக்க கடினமாக உள்ளது.


ராகவன் ,
உங்கள் கேள்விக்கு சந்திப்பு நல்ல பதிலை சொல்லியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

தருமி,

வருக..இன்ட்யூசன் ..கூடவே நிகழ்தகவுகள் என்றும் ஒன்றை போட்டுக்கொள்ளுங்கள்....

சமுத்ரா,

நாங்களெல்லாம் முட்டாள்களாகவே இருந்துவிட்டு போகிறோம்.நீங்கள் அறிவுபூர்வமாக எழுதுங்கள்.

பூங்குழலி,

வாங்க...இப்ப எங்க சென்னை வந்தாச்சா?

Sam said...

அன்புள்ள முத்து
உலகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு, கொடுமைகளுக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்கிறேன். துயரம், கொடுமை, அநீதி எல்லாம் ஒரு தனி நபருக்கு ஏற்படுவதை குறைத்து
ம்திப்பிட முடியாதே?
அன்புடன்
சாம்

Muthu said...

அன்பு சாம்,

நியாயமான கேள்விகள். இதில் வலுகட்டாயமாக மதங்களை இணைக்காமல் நான்
நீங்கள சொல்லுவதையே திருப்பி போடுகிறேன்.அவ்வளவுதான். கற்பனையான சில கருத்துக்களை அதற்கு காரணமாக நாம் யோசிக்க ஆரம்பித்தோம் என்றால் குறி சொல்வது, ஆவி அமுதா ஆகியோரை நம்புவதில் போய் முடியும்.

நல்லவனுக்கு ஏன் துன்பம், கொடியவன் ஏன் சந்தோஷமாக இருக்கிறான் போன்ற கேள்விகளுக்கு என் பதிலை சிம்பிளாக கொடுத்துவிட முடியாது.என் புரிதலை தனிபதிவாக போடுகிறேன்.

பட்டணத்து ராசா said...
This comment has been removed by a blog administrator.
ஜோ/Joe said...

//பொதுவாக அறிவாளிகளுக்கே ஒரு புதிய விசயத்தை கண்டுபிடித்து அதை தெளிவாக புரிந்துகொள்ள சில பல வருடங்கள் பிடிக்கும்.//
அதுபோல அறிவில்லாதவர்களுக்கு பிரமிப்பு குறைவாக இருக்கும் .உதாரணத்திற்கு தொலைக்காட்சியை பார்க்கும் போது படித்தவர்கள் "எங்கேயோ ஓரிடத்தில் இருந்து வானுக்கு அனுப்பபடும் இந்த ஒளிஒலி இந்த பெட்டியின் மூலம் நம் கண் முன் விரிகிறதே" என்று நினைத்து ஆச்ஸ்ரீஇயப்படலாம் .ஆனால் ஒன்றுமே தெரியாத பாமரனுக்கு இதில் பெரிய ஆச்சரியம் இருக்காது .அவனைப் பொறுத்தவரை "சுவிச்சைப் போட்டால் இதில் படல் தெரியும்"..அவ்வளவு தான்.

//சாதாரன உலகத்தில் உள்ள ஒரு விசயத்தை புரிந்துகொள்ளவே இத்தனை கஷ்டம் இருக்கும் போது சுத்தமாக தேடி பார்க்காமல் கடவுள் இல்லை,அப்படி இருக்கிறது என்று சொல்பவர்கள் முட்டாள்கள், மூடநம்பிக்கை கொண்டவர்கள்,etc etc என்று கூறுபவர்களை எனக்கு சோம்பேரிகள் என்று சொல்லாமா என்றூ தோன்றும்.//

நீங்கள் பெரியாரைத் தான் சொல்லுவதாக நினைக்கிறேன் .அவரிடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி" கடவுள் இல்லையென்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே..ஒரு நாள் திடீரென்று உங்கள் முன் கடவுள் தோன்றினால் என்ன சொல்லுவீர்கள்" ,அதற்கு அவரின் உடனடி பதில் "கடவுள் இருக்கிறார் என்ரு சொல்லிவிட்டு போகிறேன்" ..ஆக பெரியாரைப் பொறுத்தவரை கடவுள் இருக்கிறாரா என்று தேடித் தேடி நேரத்தை வீணாக்க அவர் விரும்பவில்லை என்பது தான் சரியாக இருக்குமென நினைக்கிறேன்.

//தேடி பார்த்தால் கடவுள் கிடைப்பாரா என்று தெரியவில்லை, அனால் முழுசாக தேடிபார்க்காமல் நான் முடிவாக சொல்ல முடியாது.//
பெரியார் அதைத் தான் வெட்டி வேலைன்னு சொல்லுறார் போல.