Monday, March 06, 2006

குட்மார்னிங் ஆபிசர்....

செந்தில் டிவி பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.புஷ் வருகை பற்றிய செய்திகள் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றன.அதில் வரும் தகவல்களை சுட்டு அப்படியே தன் கருத்தாக மறுநாள் வலைப்பதிவு
போடும் எண்ணத்துடன் செந்தில் உட்கார்ந்திருக்க கவுண்டமணி உள்ளே வருகிறார்.

கவுண்டமணி: குட்மார்னிங் ஆபிசர்...

செந்தில்: அண்ணே என்னன்னே இது? என்னைய போய் ஆபிஸர்னு கூப்டுக்கிட்டு...

கவுண்டமணி:டேய் ஜார்ஜ் புஷ் தலையா..உன்னைய இனிமேல் நான் ஆபிசர்னுதான்டா கூப்பிட போறேன்..

செந்தில்: அண்ணே எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குண்ணே...டீ சாப்பிடுங்கண்ணே...

கவுண்டமணி: ஏய்..ஸ்டாப்..எதுக்குன்னு ஒரு வார்த்தை கேக்கமாட்டயா?
செந்தில்:சொல்லுங்கண்ணே..

கவுண்டமணி: இந்தியாவுக்கு வந்த புஷ் காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த போனாராம்....

செந்தில்: என்னன்னே..பின்ன அங்க இட்லி தின்னவா போவாங்க..

கவுண்டமணி: சொல்றத கேள்ரா பேர்டு ஃப்ளூ தலையா புஷ் வர்றதுக்கு முன்னாடி வெள்ளைகாரனுக காந்தி சமாதியை மோப்ப நாயை விட்டு வெடிகுண்டு சோதனை பண்ணியிருக்காங்க...நம்ம அதிகாரிகள் ஏன் நாய்களை எல்லாம் காந்தி சமாதியில் விடுகிறீர்கள் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த செயலுக்கு வெளக்கம் கேட்டாங்களாம்...

செந்தில்: அப்படி போடுங்கண்ணே...

கவுண்டமணி: குறுக்கே பேசாதடா...நாங்க எங்க நாய்களை விட்டோம்னு வெள்ளைகாரனுவ கேட்டிருக்கானுங்க. நம்ம ஆட்களுக்கு குழப்பம்.என்னடா இது பட்டபகல்ல இந்த அநியாயத்தை நாலு பேர் கண்ணு முன்னாடி செய்துட்டு இல்லைன்றாங்கன்னு...கடைசில தான் தெரிஞ்சது.அமெரிக்க பாதுகாப்பு படையில் இருக்கிற அந்த நாய்கள் எல்லாம் ஆபிசரு கேடர் அதிகாரிகளாம்... அதுகள நாய்ங்கன்னு சொல்லக்கூடாதாம். ஆபிசர் என்றுதான் குறிப்பிடவேண்டுமாம்...இப்ப புரியுதாடா நான் ஏன் உன்னை ஆபிசர்னு கூப்பி்ட்டேன்ட்டு.....

செந்தில்: அண்ணே..கிண்டல் பண்ணாதீங்கண்ணே..இது நிஜமாண்ணே?

கவுண்டமணி:ஆமாண்டா..நம்மகிட்டே இதுதான் பிரச்சினை, காந்தி தாத்தா என்ன சொன்னாருங்கறதை மறந்துர்றோம்..ஆனால் காந்தி சமாதிக்கு நாய்ங்க(ஸாரி ஆபிசருங்க) வந்தா அதை புடிச்சி்ட்டு தொங்கறோம்...


பின்குறிப்பு:
அமெரிக்க அதிபர் புஷ் இந்தியா வந்திருந்தபோது காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் அமெரிக்க அதிகாரிகள் தங்கள் அழைத்து வந்திருந்த 65(ஆமாங்க அப்படித்தான் படித்தேன்) மோப்ப நாய்களில் சிலவற்றை விட்டு காந்தி சமாதியை சுற்றி வந்து வெடிகுண்டு சோதனை செய்தார்கள்.இது சர்ச்சையாகி பாராளுமன்றம் வரை சென்றது. அதை தொடர்ந்து எழுதப்பட்ட நகைச்சுவை பதிவுதான்
.யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

11 comments:

Unknown said...

//சொல்றத கேள்ரா பேர்டு ஃப்ளூ தலையா //

சிரிப்பே நிற்கவில்லை.:-))))

4 பற்றிய பதிவு நாளை இடுகிறேன் முத்து அவர்களே.போன வாரம் நிலா அவர்கள் நடத்திய தேர்தலொ கலாட்டாவில் போட முடியாமல் போய் விட்டது

Thangamani said...

நானும் இந்தச் செய்தியைப்படித்தெ போது இதைத்தான் நினைத்தேன். "I am war president" அப்படீன்னு சொன்ன, இராக்குல WMD இருக்கிறதா தெரிஞ்சே பொய்சொல்லி ஒரு சண்டைய உண்டாக்கி அதில் இலாபம் பார்த்த புஷ் போனதை காட்டிலும் எந்த விதத்தில் நாய்கள் அந்த சமாதியின் மரியாதைக்கு (அப்படி ஒன்று இருப்பதாக நாம் கருத்துவதே காந்தியின் கருத்துகளின் அடிப்படையில் தானே) குறைவேற்படுத்தி விட்டன என்பது எனக்க்குப் புரியவில்லை. அந்த நாய்களுக்கு அது இந்தியா என்ற புண்ணிய பூமி என்றோ, போனது காந்தி என்ற அகிம்சையை போதித்தவருடைய நினைவிடம் என்பதோ எப்படித் தெரிந்திருக்கும். ஆனால் புஷ்க்கு தெரிந்திருக்குமே! பாவம் நாய்கள் (ஆபிசருங்க)!

சந்திப்பு said...

முத்து பெரியண்ணன் வாஜ்பாய் ஆட்சி காலத்துல, இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்கா போனப்ப டவுசர கழட்டி சோதனைப் போட்டாங்களாம்... அவுங்க நம்ம மத்திய அமைச்சரையே ஏதோ தீவிரவாதிகளைப் போல் சோதனைப் போட்டனர்.

ஆனால், இங்கே வந்து - நாள்களுக்கு நம்ம மந்திரிகளை சல்யூட் அடிக்கச் சொல்கிறார்கள்.... இந்த நாய்களை உள்ளே விட்டதற்கு இதுவும் தேவை! இதுக்கு மேலும் தேவைதான்!முத்து பெரியண்ணன் வாஜ்பாய் ஆட்சி காலத்துல, இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசு அமெரிக்கா போனப்ப டவுசர கழட்டி சோதனைப் போட்டாங்களாம்... அவுங்க நம்ம மத்திய அமைச்சரையே ஏதோ தீவிரவாதிகளைப் போல் சோதனைப் போட்டனர்.

ஆனால், இங்கே வந்து - நாள்களுக்கு நம்ம மந்திரிகளை சல்யூட் அடிக்கச் சொல்கிறார்கள்.... இந்த நாய்களை உள்ளே விட்டதற்கு இதுவும் தேவை! இதுக்கு மேலும் தேவைதான்!

Muthu said...

செல்வன்,

நம்ப குருவே நீங்கதான்.(பஞ்சு மிட்டாய் தலையை மறக்கவே மாட்டேன்).
உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன்.


நன்றி சில்வியா,

நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. ஏதாவது பிரச்சினை ஆயிருந்தா லபோ திபோன்னு கத்துவாங்க..(ராஜீவ்காந்தி மேட்டர் ஞாபகம் வருது)

நம் மீடியாக்கள் மகாத்மாக்கள் இல்லை. அரசியல்வாதிகள் சரி இல்லை...என்னவோ போங்க...

தங்கமணி,

அது....சரியாக பிடித்தீர்கள் புள்ளியை...நன்றி


நன்றி கார்த்திக்

உங்கள் பதிவை பார்க்கவும்..

சந்திப்பு,

அந்த டவுசர் மேட்டர் பதவி போனப்புறம்தான் வெளியே வந்தது என்பது பெரிய தமாஷ் இல்லையா...(ஆனால் எனக்கு பெர்ணாண்டஸ் பிடிக்கும்).

Unknown said...

அன்பின் முத்து

4 பதிவு போட்டாச்சு.எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்

www.holyox.blogspot.com

- யெஸ்.பாலபாரதி said...

நீங்க போட்டீங்களான்னு தெரியாது. ஆனா.. போடனும்னு விருபுறேன். அட.. சங்கிலித் தொடர் தாங்க..

Muthu said...

THANK YOU FOR REQUEST BALABHARATHI..THIS IS THE URL FOR MY POST...


http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_24.html

Vaa.Manikandan said...

good morning manager

பட்டணத்து ராசா said...

//இப்ப புரியுதாடா நான் ஏன் உன்னை ஆபிசர்னு கூப்பி்ட்டேன்ட்டு.....
//
;-)

Muthu said...

raasa,


thanks..i like your profile picture..it is nice

Muthu said...

mani,

vambu panreenga patheegala? ithukku naan inooru pathivu poda mudiyuma?:)))