Saturday, June 17, 2006

அன்புமணியும் வேணுகோபாலும் - 1

டாக்டர் அன்புமணி ராம்தாசுக்கு எதிராக மீடியாவின் ஒரு பிரிவினர் சமீப காலமாக வம்பு வளர்த்து வருவதை நீங்களும் பார்த்திருக்கலாம். அன்பு மணியும் சரி அவருடைய தந்தையாரும் சரி.புனித பிம்பங்களல்ல. (நம்முடைய லோக்கல் புனித பிம்பங்களை இங்கே குழப்பி கொள்ளாதீர்கள்). அன்புமணியும் சரி. டாக்டர் ராமதாசும் சரி.இருவரும் சராசரி அரசியல்வாதிகள்தான் என்று சொல்லவந்தேன்:)

ஆனால் இப்போது டெல்லி எ.ஐ.ஐ.எம்.எஸ் இயக்குநர் வேணுகோபால் என்பவருக்கும் அன்புமணி ராமதாசுக்கும் நடக்கும் பனிபோரில் ஆங்கில மீடியாக்கள் அன்பு மணியை தாக்கி வருகின்றன.மருத்துவமனை இயக்குநரின் குற்றச்சாட்டு என்னவென்றால் அன்புமணி இந்த மருத்துவமனையின் தன்னாட்சி உரிமையில் தலையிடுகிறார் என்பதாகும்.

ஆனால் அமைச்சரோ தான் தலையிட்டது இரண்டு வகைகளில்தான் என்கிறார்.ஐநூறு கோடி பணம் அரசிடம் இருந்து மருத்துவமனைக்கு பெற்றுக்கொடுத்ததும் பலகாலமாக முடியாமல் இருந்த சில பிராஜக்ட்டுகளை
முடித்ததும் தான் தன் தலையீடு என்கிறார்.

வெளியே தெரியும் பிரச்சினை என்னவென்றால் முக்கிய பதவிகளில் நான்கு பேரை இயக்குநரை கலந்தாலே சிக்காமல் அன்புமணி பணியில் அமர்த்தியது மற்றும் இடஒதுக்கீடு பிரச்சினைக்காக வேலை நிறுத்தம் செய்த டாக்டர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அன்புமணி சொன்னதும் ஆகும்.வேலை நிறுத்தம் செய்த டாக்டர்களுக்கு சம்பளம் தர இயக்குநர் முடிவு செய்திருந்தாராம்.அதை அமைச்சர் தடுத்துவிட்டார் என்கிறார்கள்.

ஒரு ஆதிக்க மனோபாவத்தோடு செய்யப்பட்ட இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு அமைச்சர் என்ன ஆரத்தி எடுத்து வாழ்த்திபேசுவாரா? எங்களுக்கு எல்லாம் வங்கிகளில் உருப்படியான விஷயத்திற்கு வேலைநிறுத்தம் செய்தாலே அன்றைய சம்பளம் கட்.இதற்கு பயந்து வேலைநிறுத்த நாட்களில் விடுமுறையில் போகும் ஆட்களும் உண்டு.ஆனால் இந்த புனிதபிம்பங்கள் மட்டும் வேலைநிறுததமும் செய்வார்களாம்.சம்பளமும் வாங்குவார்களாம். இதை எதிர்த்த மந்திரி கெட்டவராம்.

இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் கட்சி என்ற அடிப்படையில் ஏற்கனவே பா.ம.க மேல் வெறுப்பில் இருக்கும் ஆங்கில மீடியா (இந்த இடஒதுக்கீடு ட்ராமாவில் அருவெறுக்கத் தக்க முறையில் நடந்துகொண்டவை இந்த ஆங்கில மீடியாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது) இதுதான் சாக்கு என்று அன்புமணியை போட்டு பார்க்க முயற்சி செய்கிறது.இயக்குநர் வேணுகோபாலை சேஷன் ரேஞ்சுக்கு உயர்த்தி பில்ட் அப் கொடுக்கப்பட்டு அவரும் ராஜினாமா மிரட்டல் எல்லாம் விட்டார்.

ஆனால் அன்புமணி ஜித்தன். இயக்குநர் ராஜினாமா செய்கிறார் என்றால் செய்ய வேண்டியதுதானே.என்ன வெங்காயத்திற்கு மிரட்டல் லாபி செய்து திரிகிறார்?என்று கடுமையாக சொல்லிவிட்டார். வேணுகோபாலை எதிர்த்து ஒரு குழு மருத்துவமனைக்கு உள்ளேயே உருவாகிவிட்டது. வேணுகோபால் அப்பாயிண்மெண்ட் கொடுப்பதில் காசு பார்த்துவிட்டதாக குற்றச்சாட்டு வந்து சந்தி சிரிக்கிறது.

சரி.இப்போது நம்முடைய பிரச்சினைக்கு வருவோம்.யார் ஆட்சிக்கு வந்தாலும் காசு பார்க்கும் அதிகாரிகள் தங்கள் ஆதிக்கம் பறிபோகும்போது இந்த மாதிரி பிரச்சினையை திசை திருப்புவது வழக்கமாகிவிட்டது.(இந்த சம்பவத்தில் தன்னாட்சி உரிமையி்ல் ராமதாஸ் கைவைத்துவிட்டார் என்கிறார்). யார் செத்தால் எனக்கென்ன என்று இவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது அன்புமணி கடுமையாக கண்டித்ததும் இப்போது சம்பளத்தில் கைவைத்ததும் தான் இதற்கு காரணம் என்றாலும் அதை சமாளிக்க இந்த குற்றச்சாட்டு. வழக்கம்போல் ஆங்கில மீடியாவின் ஜால்ரா.

இந்த நாட்டை இப்போது உண்மையில் ஆள்வது யார்? ஒரு பக்கம் வியாபாரிகள் எல்லா விஷயத்திற்கும் கருத்து சொல்கிறார்கள்.அந்த பொன்மொழிகளை அரிய கருத்துக்களை போல் பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்கின்றன்.இடஒதுக்கீடு விஷயத்தில் மேதாவிகளான பிரேம்ஜீ, நாராயணமூர்த்தி, பஜாஜ் ஆகியோர் கருத்துக்களை ஆங்கில மீடியா தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை பார்த்திருப்பீர்கள்.இவர்கள் கருத்துக்களின் காரணமும் அதற்கான மீடியா ஆதரவின் காரணமும் வெளிப்படை.

இது அரசியல்வாதிகளுக்கு சப்பைக்கட்டு கட்டும் பதிவு அல்ல.ஆனால் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்களான வியாபாரிகளின் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் மோசமான போக்கை அலச முயலும் பதிவு.அடுத்த பாகத்தில் அரசியலில் வியாபாரிகளின் பங்கைப்பற்றி பார்ப்போம்.

90 comments:

மாயவரத்தான் said...

//யார் செத்தால் எனக்கென்ன என்று இவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது அன்புமணி கடுமையாக கண்டித்ததும் //

யாரு கண்டிச்சதுங்கண்ணா.. ஓ.. மரத்தை வெட்டி நடு ரோட்டிலே போட்டு பல நாள் போராட்டம் நடத்தினாங்களே.. அந்த அன்புமணி அண்ணாத்தேவா? ஓ.. அந்தப் போராட்டம் நடந்தப்ப யார் செத்தால் எனக்கென்னன்னு அவங்க நடந்துக்கலன்னு நாலஞ்சு சப்பக்கட்டு இப்ப கட்டுவீங்களே?!

Muthu said...

so mayavarathan,

you mean to say doctors who are supposed to save life are free to strike ...becos somebody else has done that

good..great

மாயவரத்தான் said...

இதுக்கு பேரு தான் சப்பக்கட்டுன்றது.

தமிழ்நாட்டிலே இட ஒதுக்கீடுக்கு ஆதரவா போராட்டம் நடத்தினா அப்போ ஓ.கே. ஆதரவா அவங்க நடத்தினா உங்களுக்கு ஏன் பொத்துகிட்டு வருது கோபம்?!

நான் இட ஒதுக்கீடு ப்ரச்னைக்கெல்லாம் போக விரும்பலை.

யார் செத்தால் எனக்கென்ன.... மேட்டரிலே அவர்களை கண்டிக்க அன்புமணி & கோவுக்கு எந்த யோக்கியதையும் கிடையாதுன்றேன். மறுப்பு எதுவும் உண்டா?!

வவ்வால் said...

பத்திரிக்கைகளில் படித்தேன் ஆனால் வேணுகோபால் போன்ற அரசு ஊழியரால் பொதுவில் இப்படி ஒரு மத்திய அமைச்சரை சவாலுக்கு இழுக்க முடிகிறது என்றால் அவருக்கு பின்னால் வேறு சில சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அல்லது பா,ம.க போன்ற கட்சி சேர்ந்த அமைச்சர் நடவடிக்கை எடுத்தால் அதனை காங்கிரஸ் ஆதரிக்காது என்று அன்புமணியை குறைத்து எடைப் போடுகிறார்களா? அல்லது ஒரு தமிழக அமைச்சரின் வட இந்தியருக்கு எதிரான செயல் என திரித்து வட இந்திய பொதுமக்கள் ஆதரவையும் .அங்கேயுள்ள கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என நம்பிகையா?

தருமி said...

'உங்களில் தவறு செய்யாதவன் எவனோ அவன் முதல் கல்லை எறியட்டும்' என்ற பைபிள் தத்துவம் அல்லது 'முதலில் அவனை நிறுத்தச் சொல்; பிறகு நான் நிறுத்துகிறேன்' என்ற நாயகன் தத்துவம் இங்கே தேவையா? இப்படியே போனால் யாரும் யாரையுமே கை நீட்டிக் குற்றம் சொல்ல முடியுமா என்ன?

இந்தப் பதிவில், இந்தப் பிரச்சனையில் யார் செய்தது சரி; யார் செய்தது தவறு என்பதைப் பார்ப்பதை விட்டு விட்டு ....சரி, உங்களுக்கு அன்புமணி வேண்டிய ஆள்; அதுபோல் சிலருக்கு வேணுகோபால் வேண்டிய ஆளாக இருக்கக் கூடாதா என்ன? எல்லாமே எரிந்த கட்சி, எரியாத கட்சி போன்ற கதைதான்.

enRenRum-anbudan.BALA said...

I think Mayavarathaan is not telling that what the doctors at AIIMS was morally correct.

But, the minister condemning the doctors, makes this matter really hilarious, considering his past ;-)

Santhosh said...

//ஒரு ஆதிக்க மனோபாவத்தோடு செய்யப்பட்ட இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு அமைச்சர் என்ன ஆரத்தி எடுத்து வாழ்த்திபேசுவாரா?//
ஓ அப்ப தமிழ்நாட்டுல நம்ம கவர்மெண்டு ஆபீஸருங்க வேலை நிறுத்தம் செஞ்சி அதுக்கு சம்பளமும் வாங்குனாங்களே அப்ப என்ன பண்ணாரு நம்ம மினிஸ்டரு..

Santhosh said...

//you mean to say doctors who are supposed to save life are free to strike//
அப்பொழுது அவங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எப்படி சொல்வாங்களாம். சும்மா போராட்டம் நடத்துனா கேட்டுகுவாங்களா?

Anonymous said...

ungalukku ellam ella nonsense le yum brahmin -non brahmin,
reservation , anti reservation
mix pannanum
nalla madness

Muthu said...

friends,

i referred the doctor(director) action of exaggeration of personal enmity as a big issue .

i donot mind if you all criticize anbumani(that can also be discussed..after all i donot have pmk membership card :))

my main thrust is the action of doctor venugobal and the background reasons..and also the role of media etc...


as a minister who is looking the health ministry he has all rights to condemn it...that is what i feel..

Pot"tea" kadai said...

//யார் செத்தால் எனக்கென்ன.... மேட்டரிலே அவர்களை கண்டிக்க அன்புமணி & கோவுக்கு எந்த யோக்கியதையும் கிடையாதுன்றேன். மறுப்பு எதுவும் உண்டா?!//

ஆகா...ஆகா...
கரீக்பிட்டா பாயின்ட்ட புடிச்சிட்டார்ங்க...

அன்புமணி மரம்வெட்டி கட்சியின் தலைவரா இத செஞ்சிருந்தா "மாயவரத்தான்" சொல்றத ஒரு வாதமா கூட பாக்கலாம்.
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களுக்கு சம்மந்தமில்லாத ஒரு அரசாணைக்காக வேலை நிறுத்தம் செய்வானுங்களாம்...அதை அந்நிறுவனத்தை "கன்ட்ரோல்" செய்யக் கூடிய அமைச்சர் கண்டிக்கக் கூடாதாம். அதைக் கூட செய்ய முடியலன்னா அன்புமணி அமைச்சரா இருக்க எந்த யோக்கியதையும் இல்லன்னு நா சொல்றேன்.

என்ன எழவுடா இது. என்ன பன்றது "சாதி" கண்ணை மறச்சா பரவாயில்லை, மூளையை இல்ல மழுங்க செய்யுது. நா அன்புமணிய சொன்னேங்க, மாயவரத்தான் பொருத்தருள!:-))

இட ஒதுக்கீட்டால் பாதிக்கப் படுவோம் என்று அச்சப்படுகின்ற மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்தால் கூட ஓரளவு ஒத்துக் கொள்ளலாம்.(சனநாய்ங்க நாட்டில் எல்லா நாய்ங்களுக்கும் சம உரிமை...நன்றி:முகமூடி) கேவலம் சம்பளத்துக்கு வேலை செய்யற டாபருங்க வாங்கற சம்பளத்துக்காகவாவது வேலை செய்யக்கூடாதா என்ன...(சேவை, மயிறு, மன்னாங்கட்டி அடுத்த விஷயம்)வேலைக்கு வரலன்னா சம்பளம் கட்ன்னு சொன்ன ஒடனே ...ங்கொக்காமக்கா....அன்புமணி மேல பலநூறு குற்றச்சாட்டுகள். அரசு ஊழியர் பிரச்சினையில் "ஆத்தா"வை தூக்கியாடிய கூட்டத்திற்கு அன்புமணியின் அதிரடிகள் வலிக்கத்தான் செய்யும். தரகு வம்சத்தில் வளர்கின்ற "மீடியா"க்களும் வேறு வழியின்றி அன்புமணியைத் தாக்க வேண்டியது தான்.

இவ்ளோ பேசறாரே இந்த வேணு...மருத்துவர்கள் செய்த வேலை நிறுத்தத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஆகையால் அன்புமணியின் "சம்பளம் கொடுக்க இயலாது" என்ற உத்தரவிற்கு தடை வழங்க வேண்டும் என்று சுப்றீம் கோர்ட்ல கேஸ் போட வேண்டியது தானே. அதை உட்டுபுட்டு "விடுமுறையில" ஓடிபூட்டாறே...என்ன பன்றது ...அரசாங்க சம்பளம் வேணுமில்ல.

"வவ்வால்" கருத்துக்கள் ஏற்புடையதாய் இருக்கின்றது.

எல்லாஞ்சரி! "உருப்படாத கோயில்ல உண்ட சோறு வாங்கி தின்ன பயலுவ"ன்னு சொல்றாங்களெ அப்டின்ன என்ன?

Pot"tea" kadai said...

ஆகா...குரைப்பு சத்தம் அதிகமாகுதே! பாஸ்ட்ட பாக்கறாங்களாம்...அப்டி பாத்தா ரெக்கார்ட் டான்ஸ் ஆடுனவங்க(மைசூர் மன்னர் முன்னாடி ஆடனா என்ன பேரு) எல்லாம் நாட்டையே ஆண்டாங்களே! என்னாங்க பன்றது அன்புமணி டாபர்மேனா பொறக்கலியே...தெருநாயா இல்ல பொறந்துட்டாரு.

ஒரே நகைச்சுவையப்பா உங்களோடு!!!

நாய் என்பதை திருவாளர் எனவும், குரைப்பு என்பதை பேச்சு எனவும் படிக்க்.

அருண்மொழி said...

முத்து,

கருணாநிதி மற்றும் ராமதாஸ் பற்றி அரிப்பு எடுத்தோர் எழுதினால் அது சரியான செயல். அதற்கு மற்றவர் ஜெ வை compare செய்து எழுதினால் உடனே "இங்கு கருணாநிதி பற்றிதான் பேசுகிறோம் - ஜெ வை இழுக்கவேண்டாம்" என்பர். அதாவது மற்றவர்களின் செயலை சுட்டிக்காட்டி கருணாநிதி செய்வது சரி என்று சொல்லக்கூடாது.

ஆனால் இவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் யாரை பற்றியும் எது வேண்டுமானாலும் பேசலாம்.

எங்கோ படித்த வரிகள் - "தண்ட சோறு உண்ணும் ...... ஒரு நீதி. ....... ஒரு நீதி".

Refer this link in today's Hindu - http://www.hindu.com/2006/06/18/stories/
2006061817331200.htm

- "Remove Venugopal as AIIMS chief"

Anonymous said...

Did anyone notice that the Same Media 'Group' supported Jeyalalitha "dismissing" striking employees.

Atleast Anbumani didn't dismiss these doctors.

If the striking employees are high caste doctors then they should be paid for 'not working'.

நன்மனம் said...

Muthu,

You try to create a picture by this blog that what ever the English Media is saying is just out of enymity and no justification, I feel Anbumani does not deserve to be supported just because he is a minister, his political jimickness should also be seen when his actions are judged and I feel that is what the media are saying.

Can Anbumani come out in the open and say that there is transperancy in what he is doing and all his ministry files are open for scrutiny and no corruption is taking place at any level? You may ask why Anbumani, because he is the topic of discussion in this blog. If as a minister he has the right to interfere in the Hospital operations then he also has the right to interfere over the operations of the staff in his department and set it right.

Again i feel that it is only a political jimmick that he is creating.

Muthu said...

மாயு,

சப்பைக்கட்டு இதுதானா? நல்லதுதான்.அதாவது இங்கு பேசப்பட்டது வேணுகோபால் என்பவரின் திரித்தல் டெக்னிக்குகள் பற்றி.பலமுறை பேசி முனை மழுங்கிய சமாச்சாரங்களை மீண்டும் மீண்டும் போட்டு எதிர்கால புனித பிம்பங்களை வளர்க்கும் பணியை செவ்வனெ செய்வதற்கு பாராட்டுக்கள்.
ராமதாஸ், அன்புமணி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் தான் என்று நான் கூறிஉள்ளேன்.ஆனால் இந்த சம்பவத்தை மட்டும் வைத்து பார்த்தால் அந்த துறையின் மந்திரி என்ற உரிமையில் அவர்களை கண்டிக்க அன்புமணிக்கு உரிமை உண்டு.

Muthu said...

வவ்வால்,
பத்திரிக்கைகளின் எதிர்ப்பிற்கு காரணம் அந்த இடஒதுக்கீடு விஷயத்தில் அன்புமணியின் அறிக்கைகளும் நடவடிக்கைகளும் மற்றும் பா.ம.கவின் இடஒதுக்கீடு கொள்கைகளும்தான்.

வேணுகோபால் தன்னுடைய பவரை அதிகமாக எடை போட்டுவிட்டார்:)புனித பிம்பங்கள் வழக்கமாக செய்யும்தவறுதான் இது.:)

Muthu said...

தருமி சார்,
யார் யாரை சொல்வது என்பதெல்லாம் இங்கு செல்லாது என்பது சரி.நீங்கள் கூறியதுடன் ஒத்துப்போகிறேன்.
ஜெயா சங்கரரை கைது செய்ததை நாம் கொலை கேசுக்காக என்று நினைத்து பாராட்டுவோம்.ஏதோ மெடிக்கல் காலேஜ் விஷயம் என்றா நினைப்போம்?
வழக்கம்போல் நச்சென்று சொன்னீர்கள்.நன்றி.

Muthu said...

அன்புடன் பாலா,
இதற்கு பதில் சொல்லப்பட்டுவிட்டது பாலா. நீங்கள் விரும்பாவிட்டாலும் அவர் அந்த துறையின் மந்திரி.அவர் சொல்லத்தான் செய்வார்.:))

Muthu said...

சந்தோஷ்,
தமிழ்நாட்டு ஆபிஸருங்க செய்தாலும் தப்புதானய்யா.தமிழ்நாட்டு மினிஸ்டருங்கள நீங்களே கேளுங்க..இல்லாட்டி எப்பன்னு சொல்லுங்க.நானே கேட்கிறேன்.:))

டாக்டர் தொழிலுக்கும் மற்ற தொழிலுக்கும் வித்தியாசம் இல்லையா சந்தோஷ்? உங்க கருத்து இதுதான் என்றால் ஆல் தி பெஸ்ட்.

Muthu said...

//ungalukku ellam ella nonsense le yum brahmin -non brahmin,
reservation , anti reservation
mix pannanum
nalla madness
//



அனானி,
இங்க எங்கயாவது பிராமின் என்ற வார்த்தை வந்ததா? அட போங்கய்யா......(உங்கள் ஆலோசனையை ஏற்று ஒரு பின்னூட்டத்தில் லேசாக டச் செய்துள்ளேன்)

anyway i suggest you to read newspapers daily

Muthu said...

பொட்டீக்கடை,
தனி பதிவா போட்டு நான் எழுத நினைச்சத பின்னூட்டமா போட்டு கெடுத்துட்டயேய்யா..இதை கண்டிக்கிறேன்.

உங்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் யாராவது தருவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Muthu said...

அருள்,
அந்த இந்த நாளிதழ் லிங்க்கை படிச்சேன். வேணுகோபாலின் சர்வாதிகார ஸ்டைலை கண்டித்து அவரை தூக்க சொல்லி மற்ற பல டாக்டர்கள் போர்க்கொடி. சுட்டிக்கு நன்றி.
நான் முதலிலேயே சொன்னதுதான். வேணுகோபால் தன்னுடைய பவரை அதிகமாக எடை போட்டுட்டார்.பு.பி ஸ்டைல் அது.

அனானி,
நீங்கள் சொன்னது மிகவும் வாஸ்தவம்.நன்றி.ஆங்கில மீடியாவின் சில்லறைத்தனம் தான் சந்தி சிரிக்கிறதே...

Muthu said...

நன்மனம்,

என்ன பிரச்சினை என்றே தெரியாமல் பொதுவாக போட்டு பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.இதே பாணியில் ஒரு கட்டுரை நேற்றைய எக்ஸ்பிரசில் உள்ளது.

"இப்படிப்பட்ட தென்னைமரத்தில் பசுமாடு கட்டப்பட்டுள்ளது" என்பதுபோன்றது அது. உங்களின் பின்னூட்டத்தில் அன்புமணி என்ற பெயரை எடுத்துவிட்டு யார் பெயரை போட்டாலும் அது பொருந்தும் என்பதை கவனியுங்கள்:))
கண்டிப்பாக இது அரசியல் நாடகம் இல்லை.
1. ராஜினாமா மிரட்டல் விட்டது வேணுகோபால்.அன்புமணி இல்லை
2. வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் தரமாட்டோம் என்று சொன்னது அரசியல் நாடகமா உங்களை பொறுத்தவரை?
மேட்டரை கூர்ந்து கவனியுங்கள்.சில காரணங்கள்.சம்பவங்கள் சொல்லி உள்ளென்.மற்றபடி பா.ம.க மேலும் ராமதாஸ், அன்புமணி மேலும் வேறு விஷயங்களில் எனக்கும் விமர்சனங்கள் உண்டு.

நன்மனம் said...

முத்து, அன்புமணி என்ற தனி நபரை ஆங்கில மீடியா தாக்குவது போல் இந்த பதிவு காண்பிக்கிறது. அன்புமணி ஒரு மந்திரியாக இருந்தால் அவர் என்ன செய்யலாம் செய்ய கூடாது என்று யாரும் சொல்லக்கூடாது என்பது போல் சித்தரிக்கிரீர்கள் அதை தான் சரி அல்ல என்று கூறுகிறேன்.

//வெளியே தெரியும் பிரச்சினை என்னவென்றால் முக்கிய பதவிகளில் நான்கு பேரை இயக்குநரை கலந்தாலே சிக்காமல் அன்புமணி பணியில் அமர்த்தியது //

இதில் மட்டும் அவர் மீறலாம், இது அரசியல் நாடகம் இல்லையா?

//2. வேலை செய்யவில்லை என்றால் சம்பளம் தரமாட்டோம் என்று சொன்னது அரசியல் நாடகமா உங்களை பொறுத்தவரை?//

நிச்சயமாக. சங்கங்களுக்கும் ஆதரவு, போராடும் போது தனது துறைக்கு மட்டும் (தன்) பேர் கெட கூடாது என்பதற்க்காக இப்படி பட்ட அறிவிப்பு, இது நாடகம் இல்லை என்று சொன்னால் என்னால் நம்ப முடியாது. நான் யாரையும் நம்பக்கூடாது என்று சொல்லவில்லை:-)

Muthu said...

நன்மனம்,

என் பதிவில் நீங்கள் கூறியதற்கு பதில் உள்ளது.

மனம் தான் வேண்டும் சில விஷயங்கள் புரிவதற்கு.

Muthu said...

nanmanam,

1.the reason for english media targetting anbumani is obvious.i have given also.

2. Even staff in Aiims are criticizing director for dictatorship.so minister decision to overlook director is valid.

3.anbumani(anyone) can support unions.that does not mean he supporting unions unconditionally for whatever reason they strike.(r u supporting doctors strike on reservation issue?)

4.only becos of anbumani and pmk he should not be targetted.one has to see the reasons.kindly refer potteakadai's comments.

வவ்வால் said...

நன்மனம்,

டெல்லியில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட போது முதல் அறிவிப்பாக அன்புமணி சொன்னது போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது டெஸ்மா,எஸ்மா போன்ற சட்டங்கள் பாய்ச்சப்பட மாட்டாது என்பது தான் இதற்குகெல்லாம் என்னால் சுட்டி தர முடியாது செய்தி தாள் படிக்கும் பழக்கம் இருக்கும் என நினைக்கிறேன்!
(அன்புமணிக்கு இதை வக்காலத்து வாங்குவதாக நினைக்க கூடாது இது எந்த அமைச்சருக்கும் பொருந்தும் ,நிர்வாகம் செய்ய தானே அமைச்சர் அதை தானே செய்தார் என இதை கூறவருகிறேன்.)

ஆனால் இங்கே தமிழ் நாட்டில் அரசு ஊழியர் வேலை நிறுத்ததின் போது என்ன நடந்தது,நள்ளிரவு கைது, டெஸ்மா ,எஸ்மா சட்டங்கள் பாய்ச்சப்பட்டு ஒரே நாளில் அனைவருக்கும் கல்தா கொடுத்தார் அம்மையார். அப்பொழுது நீங்கள் அம்மையாரின் தகுதி ,அரசியல் நேர்மை குறித்து கிஞ்சித்தும் கவலைப்பட்டீர்களா எனத்தெரியவில்லை. அம்மையாரின் அரசியல் ஒளிவு மறைவு அற்ற ஆட்சி என்று நினைக்கும் நல்ல மனம் கொண்டவர் போலும் நீங்கள் :-))

நிறைய பேர் தமிழ் நாட்டில் வேலை நிறுத்தம் செய்து விட்டு எல்லாம் உடனே சம்பளம் வாங்கி விட்டதாக நினைக்கிறார்கள், மீண்டும் வேலை நிறுத்தம் செய்து விட்டு வேலையில் சேரும் போது சம்பளம் கிடையாது என்றே சொன்னார் அம்மையார்,ஊழியர்கள் தங்கள் பரிதாப நிலையை சொல்லவே தயாள குணம் !!?? கொண்ட அம்மையார் உங்களுக்கு ஊதியம் தரப்படும் அது உங்கள் ஓய்வு ஊதிய வைப்பீட்டில் பிடித்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார் ,அதற்குப்பெயர் ஊதியமா,அது ஊழியர்களின் பணம் சாமி!

நாடாளுமன்ற தேர்தலில் பெரிய "40 இன்ச்" ஆப்பாக அம்மையாருக்கு அடிக்கவே அரண்டு போய் அவர் அடித்த பல்டிகளில் ஒன்றாக அரசு ஊழியர்களின் ஓய்வுகால நிதியில் பிடிக்கப்பட்ட பணம் மீண்டும் தரப்பெற்றது.இது போன்ற பல அதிகார துஷ்பிரயோகங்கள் அப்போது நடைபெற்றது சொல்லதான் இடம் இருக்காது இங்கே! நாட்டில் என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாமல் கருத்து சொல்ல வரும் இந்த எத்தால அடிக்கலாம்!

அரசியல்வாதிகள் அயோக்கிய பயல்கள் தான் அவனுக்குலாம் இத கேட்க என்ன தகுதி ம்ம் ,ஆன அவர்களை விட ஒரு அயோக்கிய பய கூட்டம் இருக்கு அது யாருனா இந்த அரசு மருத்துவர்கள் தான். அராசங்க மருத்துவர்கள் தனியா மருத்துவமனை நடத்தக் கூடாதுனு சட்டம் இருக்கு அதுவாச்சும் தெரியுங்களா தெய்வமே! இவங்க வேலைக்கே வர மாட்டங்க வந்தாலும் கெவர்மெண்ட் சம்பளத்த வாங்கிட்டு இதுக்குலாம் இங்கே வைத்தியம் பார்க்க முடியாது என்னோட கிளினிக் வானு ஆள்பிடிக்கிற வேலை தான் செய்றாங்க. அங்கேயே வைத்தியம் பார்த்தாலும் அதுக்கும் காசு புடுங்குவாங்க.

அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தனும் ஸ்கேன் ,எக்ஸ் ரே எல்லாம் இல்லை வாங்கி தாங்க கேட்பாங்க ஆன 10 நாளிலே அதை மூடிட்டு பழுதாகிடுச்சு ,பக்கத்து தெருவிலே இருக்க லேப் லா போய் இந்த சீட்ட காட்டி எடுத்து வாங்கணு சொல்வார் ,அது அவரது ஸ்கேன் சென்டர் ஆக இருக்கும் இல்லைனா கமிஷன் தரவங்களாக இருப்பாங்க. இப்படி பட்ட பணம் பிடுங்க்கி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் பண்ணா சம்பளம் இல்லை சொல்ல கூடாது ,ஏனெனில் அவங்க எல்லாம் புனிதர்கள் பாருங்க. அய்யா நன்மனம் போன்றோரே நீங்க நல்லா இருப்பிங்க தயவு செய்து உண்மாஇ நிலவரம் என்னவென்று தெரிஞ்சுகிட்டு அப்புறமா உங்க புறணி பாடுறத பாடுங்க மகா ஜனங்களே!

( one word edited)

Anonymous said...

Dr.Venugopal is a well known surgeon and can survive without
working in AIIMS. He could easily
become a director in any of the
medical institutions in USA
or Europe.About Anbumani, his
only qualification is he is
son of Ramadoss.Anbumani is against him as Venugopal supported
the doctors who opposed reservation.Anbumani also appointed
some persons overlooking seniority
and views of selection committees.
Viduthalai wrote that Venugopal is an Andhra Brahmin and was instigating the students.So this
is nothing but a mean step by
Anbumani.The govt. agreed that
no punitive action would be taken
against the doctors.Now Anbumani
has ordered a cut in their salary.
It is clear that Anbumani could
not tolerate anyone opposing his
stand on reservations.Muthus will
only support such third rate
politicians.

Anonymous said...

மேதாவிகளான பிரேம்ஜீ, நாராயணமூர்த்தி,
Yes, they have built world class
companies and have made india proud.They are beacons of hope.
What has Anbumani or Ramadoss
done. They have created a cadre of thugs and goons and have used caste
to justify that.Premji and Narayanamurthy have generated wealth by fair means.Can the same
be said of whom Muthu supports.

Muthu said...

அனானி,

//மேதாவிகளான பிரேம்ஜீ, நாராயணமூர்த்தி,
Yes, they have built world class
companies and have made india proud.They are beacons of hope.//

ஆம்..ஆனால் புத்திசாலிகள் நல்லவர்களாகவும் இருக்கவேண்டும் என்று இல்லையே? என்ன செய்வது?

வஜ்ரா said...

முத்து அவர்களே...

இந்த Alternate viewpoint கூட உங்களுக்குத் தேவை.

Muthu said...

vajra sankar,

same type of article i saw in express also.( i mentioned here also)..it clearly shows that this is due to reservation row only

thanks for the link

Muthu said...

anony,

if venugopal is competent enough he can very well resign.he need not lobby and threaten to resign:).

he is andhra brahmin.this is news to me.thanks for that.

today i saw in a report that he instigated students and faculties to strike in reservation issue also.

Anonymous said...

ஆம்..ஆனால் புத்திசாலிகள் நல்லவர்களாகவும் இருக்கவேண்டும் என்று இல்லையே? என்ன செய்வது?

If Premjee and Narayanamurthy are not good persons i dont know what is your standard.Perhaps you think
a person is not good if (s)he
opposes reservation.

அருண்மொழி said...

Alternative Viewpoint ?? சூப்பர் காமெடி லிங்க்.

If you fight against reservation you are "Dedicated Young Doctors".

If you are a pro-reservationist you are "Munnabhai" & "Hordes of ruffians"

"Rajnikanth is a popular Vanniyar" ஆஹா அவரு எப்ப வன்னியர் ஆனாரு?

Muthu said...

அனானி,

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதை சுயநலத்தோடு தடுப்பவர் எல்லாருமே என்னை பொறுத்தவரை அப்படித்தான்.
அவர்கள் வியாபாரிகள்.

Anonymous said...

வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதை சுயநலத்தோடு தடுப்பவர் எல்லாருமே என்னை பொறுத்தவரை அப்படித்தான்.
அவர்கள் வியாபாரிகள்
Neither WIPRO nor infosys refuses
anyone a job on the basis of caste.
There are SCs and OBCs in both.They are there not because
of caste but because of merit.
Both employ thousands of men and
women and generate billions of dollars as revenue.Caste has no
place here.Caste has a place in
the stupid public sector run
by govt.
Who prevents you from starting an
industry and employing OBCs.Why the hell your leader MK visits
Infy's campus and wants them to invest more in TN.All the founders
of Infy are non OBCs.You need non OBCs and MNCs to invest in your state but you want to have quota also.Dont they have freedom to
choose whom they want.

Muthu said...

stupid,hell என்ற வார்த்தைகளை தாராளமாக பெரிய மெத்த படித்த மேதாவிகளை போல் பேசி மற்றவரை திட்டினால் மட்டும் சில விஷயங்கள் புரிந்துவிடாது.இதனால்தான் சிலர் தரந்தாழ்ந்து சில சாதிகளை பேசுவது நடக்கிறது:)நாவை அடக்கலாமே அனானி.

மற்றபடி மேதாவிகளின் கருத்துத்தான் இங்கு பிரச்சினை. அவர்களின் கம்பெனி அல்ல.

வஜ்ரா said...

அருண்மொழி,

ரஜினி காந்திற்கு வன்னியர் பெரும்பான்மைப்பகுதிகளில் ரசிகர் மன்றம் அதிகம். விஜய் காந்திற்கும் தான். ரஜினி, விஜய் காந்த் ஜாதியை மீறி அரசியல் செய்வதை அன்புமணியும் அவரது மரம் வெட்டி கட்சியும் எதிர்க்கும்.

infosys, wipro வை சப்போர்ட் செய்யும் அனானி, நாவை அடக்கிவாசியுங்கள்...

இவர்களை எல்லாம் சப்போர்ட் செய்தால் கார்ப்ரேட் முதலாளித்துவவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்.. குத்துபவர்கள் முற்போக்குவாதிகள் என்று பட்டம் சூட்டிக் கொண்டவர்கள் என்பதையும் நினைவில் கொள்க.

//
மேதாவிகளின் கருத்துத்தான் இங்கு பிரச்சினை. அவர்களின் கம்பெனி அல்ல.
//

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை....:))

அன்புமணி என்கிற மேதாவி டாக்டர், சினிமாவில் சிகிரட் பிடிப்பதை நிறுத்தினால் மக்கள் புகைப்பதை விட்டுவிடுவார்கள் என்பார்.

அர்ஜுன் சிங் என்கிற மேதாவி 500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஜாதிச்சான்றிதழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இட ஒதுக்கீடு அறிவிப்பார்.

இதெல்லாம் எந்தப் பிரச்சனையுமில்லை...ஆனால் Infosys நராயணமூர்த்தி சொல்லும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்வதில் பிரச்சனை...

ஆதிக்க வர்க்கம்-அடக்கப்பட்ட வர்க்கம் என்கிற கண்ணாடியை கழற்றிவிட்டுத்தான் பாருங்களேன்...ஒரு மாறுதலுக்காக...

Muthu said...

சங்கர்,

பிரச்சினை திசை திரும்புகிறது. நம்முடைய சாரி பிரச்சினையை தனியாக பேசுவோம்:)

மாயவரத்தான் said...

நான் சொல்ல வந்ததை ஆரம்பம் முதலே புரியாமல் ஆளாளுக்கு திசை திருப்புகிறீர்கள்.

'யார் செத்தால் எனக்கென்ன' என்று போராட்டம் நடத்தியதையா அன்புமணி தடுத்தார்? அவருக்கென்ற personal agendaவை எதிர்த்து போராட்டம் நடைபெற்றதை தடுக்க முயன்றார்.

மத்தபடி பொதுமக்கள் சாகப் போகிறார்கள் அதனால் அதை தடுக்கவே போராட்டத்தை தடுக்க முயன்றார் என்கிற ரீதியில் நீங்கள் எழுதியிருந்ததை தான் நான் பொய் என்று சுட்டிக் காட்டியிருந்தேன்.

'இந்தப் பிரச்னைக்கென்ற போராட்டம் என்றால் பொதுமக்கள் சாகலாம்', 'இதற்கென்றால் சாகக் கூடாது' என்றெல்லாம் இருக்கிறதா என்ன?

அரிப்பு எடுத்தது போன்ற வாசகங்களைக் கொண்ட பின்னூட்டங்களை அனுமதித்து உங்கள் பதிவின் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ள வேண்டுமா?!

Muthu said...

mayu,

உங்கள் குழப்பங்கள் எனக்கு புரியவில்லை. வேணுகோபால் ஏன் அன்புமணியை எதிர்த்தார்? ஆங்கில மீடியா ஏன் அன்புமணிக்கு எதிராக உள்ளன என்பதைப்பற்றி எழுதியுள்ளேன.உங்கள் குழப்பம் என்னை குழப்புகிறது.

குழலி / Kuzhali said...

இடஒதுக்கீட்டிற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் ஓலக்குரலுக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் நடந்த, நடக்கும் போராட்டங்களுக்கும் ஒடுக்குபவர்களின் ஊளைக்குரலுக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சமூகநீதிக்கெதிரான போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு, அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் நடத்திய இடஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டம் எந்த வர்க்கத்தில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், அந்த வித்தியாசம் தெரியவில்லையென்றால் அவர்களுக்காக என்னால் பரிதாபம் மட்டுமே படமுடியும்.

இந்த வரிசையில் முதலில் மாயவரத்தானுக்கு என் பரிதாபங்கள்...

இது தொடர்பான என் பதிவின் சுட்டி இதோ

http://kuzhali.blogspot.com/2006/06/blog-post_19.html

வஜ்ரா said...

சரி,

//
வேணுகோபால் என்பவருக்கும் அன்புமணி ராமதாசுக்கும் நடக்கும் பனிபோரில் ஆங்கில மீடியாக்கள் அன்பு மணியை தாக்கி வருகின்றன.
//

பொத்தம் பொதுவாக ஆங்கில மீடியாக்கள் என்கிறீர்களே...மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணுவின் தி ஹிண்டு வெளியிட்ட செய்தி..

//
ேவணுகோபாலை எதிர்த்து ஒரு குழு மருத்துவமனைக்கு உள்ளேயே உருவாகிவிட்டது.
//

உருவாக்கிவிடப்பட்டது.....!!

//
ேமதாவிகளான பிரேம்ஜீ, நாராயணமூர்த்தி, பஜாஜ் ஆகியோர் கருத்துக்களை ஆங்கில மீடியா தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியதை பார்த்திருப்பீர்கள்.இவர்கள் கருத்துக்களின் காரணமும் அதற்கான மீடியா ஆதரவின் காரணமும் வெளிப்படை.
//

என்னங்க வளிப்படையான காரணம்...?

குழலி / Kuzhali said...

//
ேவணுகோபாலை எதிர்த்து ஒரு குழு மருத்துவமனைக்கு உள்ளேயே உருவாகிவிட்டது.
//

உருவாக்கிவிடப்பட்டது.....!!

அன்புமணிக்கு எதிராக என்றால் அது உருவாக குழு, வேணுகோபாலுக்கு எதிராக என்றால் அது உருவாக்கிவிடப்பட்டது ஹா ஹா:-)

அருண்மொழி said...

ஷங்கர்,

தயவுசெய்து அந்த Alternate Viewஐ ஒரு முறை மீண்டும் படியுங்கள். கட்டுரையாளர் எந்த அளவு உண்மையை எழுதி உள்ளார் என்பது தெரியும்.

//That Rajnikanth is a popular Vanniyar leader with political ambitions and, thus, capable of challenging the PMK supremo who is the Health Minister's father, was said to have played a major role in formulating the absurd directive.//

இது சரியா?

இங்கு விவாதப் பொருள் மரம்வெட்டிகளின் அரசியல் நிலைப்பாடு பற்றியது அல்ல. அவர்கள் மரம் வெட்டியதால் எதை பற்றியும் பேசக்கூடாது என்பது சரியானதா?.

Syam said...

அன்புமனியுடைய செய்கை சரின்னு சொன்னா இங்க அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததை ஆதரித்தவர் தானே...அப்போ இவங்க ஆளும் கட்சியா இருந்தா வேலை நிறுத்தம் தப்பு எதிர் கட்சியா இருந்தா வேலை நிறுத்தம் சரியா...அண்னே எனக்கு தோணுனத சொன்னேன் நீ ஜெ ஜெ ஆளானு கேட்காதீங்க :-)

Doctor Bruno said...

How can we claim pay when we have not worked


If so then we need not have various kinds of leave such as Casual leave, Compensatory Leave, Permission Leave, Earned Leave, Unearned Leave, Maternity Leave, Study Leave, Leave on Medical Grounds etc

If I want to take leave, then I can go on a strike demanding that there should be no seperate hostel for Ladies (in the name of equality) and hence go for my personal work When the work is over, I can come back and join…

Wonderful !!!

Doctor Bruno said...

What caught my attention in the following words

dignity of the institute being eroded.
Now if you look back

The dignity of institute was not eroded because of institute quotas

The dignity of institute was not eroded when the question papers were leaked in 2002

The dignity of institute was not eroded when the guys could not give a question paper with 300 proper questions (with 30 to 35 questions missing in fwe question papers) in 2004

The dignity of institute was not eroded when patients were refused treatment for 2 weeks

The dignity of institute was not eroded when AIIMS posted an irresponsible notice (http://www.nellaimedicos.com/blog/bruno/2006/
02/irresponsibleagain.html )
In all those occasions this director did not feel that he should resign. Not that I am suggesting that he should be a Lal Bahadur Shastri to take moral responsibility, but what I am saying is that the present scenario does not in anyway erode the dignity of the institute

But now the gentleman (who did not come to press at anytime in the past) says that the dignity is eroded !!!

Strange !!!

Does it mean that if an institute is to remain "elite" (or dignified), pay should be given for no work !!! (or absenting from work)

If so then we need not have various kinds of leave such as Casual leave, Compensatory Leave, Permission Leave, Earned Leave, Unearned Leave, Maternity Leave, Study Leave, Leave on Medical Grounds etc

If I want to take leave, then I can go on a strike demanding that there should be no seperate hostel for Ladies (in the name of equality) and hence go for my personal work

When the work is over, I can come back and join...

Wonderful !!!

Doctor Bruno said...

//கேவலம் சம்பளத்துக்கு வேலை செய்யற டாபருங்க வாங்கற சம்பளத்துக்காகவாவது வேலை செய்யக்கூடாதா என்ன...(சேவை, மயிறு, மன்னாங்கட்டி அடுத்த விஷயம்)வேலைக்கு வரலன்னா சம்பளம் கட்ன்னு சொன்ன ஒடனே ...ங்கொக்காமக்கா....அன்புமணி மேல பலநூறு குற்றச்சாட்டுகள்//

Well said

// அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தனும் ஸ்கேன் ,எக்ஸ் ரே எல்லாம் இல்லை வாங்கி தாங்க கேட்பாங்க ஆன 10 நாளிலே அதை மூடிட்டு பழுதாகிடுச்சு ,பக்கத்து தெருவிலே இருக்க லேப் லா போய் இந்த சீட்ட காட்டி எடுத்து வாங்கணு சொல்வார் ,அது அவரது ஸ்கேன் சென்டர் ஆக இருக்கும் இல்லைனா கமிஷன் தரவங்களாக இருப்பாங்க. இப்படி பட்ட பணம் பிடுங்க்கி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் பண்ணா சம்பளம் இல்லை சொல்ல கூடாது ,ஏனெனில் அவங்க எல்லாம் புனிதர்கள் பாருங்க.//

WHile not going into the first line(that needs a seperate post), I am not loss to find why the same media did not support us when we (medicos of Tamil Nadu) went on a Strike in 2003 and lost one month of our pay ????

ஜோ/Joe said...

முத்து ,குழலி,
மாயவரத்தான் சொல்வது உங்களுக்கு ஏன் புரியவில்லை ? அவர் சொல்லாமல் விட்ட ஒன்றை சொல்கிறேன் .அப்போதாவது உங்கள் மரமண்டைகளுக்கு ஏறுகிறதா பார்க்கிறேன்.

"அன்புமணி இப்போது மத்திய சுகாதார அமைச்சர் என்ற திமிரில் அனைத்துக் குழந்தைகளும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டுமென்று அறிவுரை சொல்லுகிறார் .இதே அன்புமணி ஆறு மாத குழந்தையாய் இருந்த போது போலியோ சொட்டு மருந்து வாயில் வாங்கமாட்டேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியவர்.மருந்து கொடுக்கப்போன நர்ஸை முகத்தில் குத்து விட்டவர் .பக்கத்தில் இருந்த மரம்வெட்டி ராமதாஸ் இதை கண்டிக்கக் கூட இல்லை. இப்போது மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது இந்த கும்பலுக்கு."

Anonymous said...

ஷங்கர்,

//அர்ஜுன் சிங் என்கிற மேதாவி 500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஜாதிச்சான்றிதழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இட ஒதுக்கீடு அறிவிப்பார். //

500 ரூபாதானே, அது ஒரு பிரச்சினையா? யாரு வேணும்னாலும் 500 ரூபாய் கொடுத்து இட ஒதுக்கீடு பெற்றுக்கொள்ளலாமே?

Anonymous said...

WHile not going into the first line(that needs a seperate post), I am not loss to find why the same media did not support us when we (medicos of Tamil Nadu) went on a Strike in 2003 and lost one month of our pay ????

Why did you on strike and in whose
interest.Did DK support you.Did the opposition parties support you.
Did the govt. give an undertaking that no punitive action would be taken.

Anonymous said...

யாரு கண்டிச்சதுங்கண்ணா.. ஓ.. மரத்தை வெட்டி நடு ரோட்டிலே போட்டு பல நாள் போராட்டம் நடத்தினாங்களே.. அந்த அன்புமணி அண்ணாத்தேவா? ஓ.. அந்தப் போராட்டம் நடந்தப்ப யார் செத்தால் எனக்கென்னன்னு அவங்க நடந்துக்கலன்னு நாலஞ்சு சப்பக்கட்டு இப்ப கட்டுவீங்களே?!

Mayavarathan, that was done in the name of social justice (read selfish interests of vanniyars).
Anything done in the name of social justice by OBCs is always right.Dont OBCs have the right to destroy public property and attack
police in defending social justice.
Cant the public suffer for this great cause of social justice.
That is the view of dravida tamils.
They wont state it openly.

Muthu said...

//That is the view of dravida tamils.They wont state it openly. //



anony,

இவ்ளொ அறிவா உங்களுக்கு? யப்பாடி...

Muthu said...

ஜோ,

இப்ப புரிஞ்சது அண்ணாச்சி...இது மாதிரி முதல்லயே மாயவரத்தான் உடைச்சி சொல்லியிருந்தார்னா இந்த மரமண்டையில் ஏறியிருக்கும் :))

Anonymous said...

//500 ரூபாதானே, அது ஒரு பிரச்சினையா? யாரு வேணும்னாலும் 500 ரூபாய் கொடுத்து இட ஒதுக்கீடு பெற்றுக்கொள்ளலாமே? //

அனானி,

500 ரூபாய் குடுக்க வசதி இல்லாமல் நவீன இந்தியாவின் தலித்துகள் இருக்காங்க என்று நினைக்க வேண்டாம். ஒரு பைசாவிற்கும் பயன்படாத நூல் எல்லாத்தையும் விட மேலானது. புரிஞ்சுதோ நோக்கு?

இன்னொரு அனானி.

Muthu said...

//பொத்தம் பொதுவாக ஆங்கில மீடியாக்கள் என்கிறீர்களே...மவுண்ட் ரோட் மஹாவிஷ்ணுவின் தி ஹிண்டு வெளியிட்ட செய்தி//

பெரும்பான்மை என்று கொள்க சங்கர்.எக்ஸ்பிரஸ் உள்பட நாளேடுகள் மற்றும் என்.டி.டி.வி நியூஸ் டுடே மற்றும் பல

//என்னங்க வளிப்படையான காரணம்...? //

விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சதும்.....

Muthu said...

சயாம்,

நீங்க ஜெ ஜெ ஆளான்னு கேட்கலை.ஆனால் நீங்க ஒரு
"புனித பிம்பமா" என்று கேட்கிறேன்:)

வஜ்ரா said...

//

/என்னங்க வளிப்படையான காரணம்...? //

விடிய விடிய ராமாயணம் கேட்டு விடிஞ்சதும்.....

//

மன்னித்துக் கொள்ளுங்கள்...உண்மையாகவே எனக்கு என்ன வெளிப்படைக் காரணம் என்று விளங்கவில்லை...(நான் தான் மரமண்டையோ!! :) )

Muthu said...

shankar,

ஆங்கில மீடியாக்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆபாசமாக நடந்துகொண்டன.இவர்களும் அதை எதிர்த்து கருத்து சொன்னவுடன் அவை அவர்களை தாங்கியும் தூக்கியும் பிடிக்கின்றன.அதுதான் சங்கதி.

Anonymous said...

ஆங்கில மீடியாக்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து ஆபாசமாக நடந்துகொண்டன.இவர்களும் அதை எதிர்த்து கருத்து சொன்னவுடன்
if you still dont understand here is the equation
எதிர்த்து = ஆபாசமாக

மிதக்கும்வெளி said...

ஒரு தொழிலாளர் பிரச்சினைக்கு ஊர்வலம் போனால் போக்குவரத்து பாதிப்ப்பு,ஆம்புலன்ஸ் அவதி என்று ஷங்கர் முதல் பார்ப்பன தினமலர் வரை ஓலமிடும்.ஆனால் இடஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் என்ரால் மட்டும் கண்மூடிக்கொள்வர்.மேலும்,பா.ம.கவை மரம் வெட்டிக்கட்சி என்றே பலரும் குறிப்பிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அப்படியென்றால் அ.தி.மு.க.வை பாவாடை தூக்கும் கட்சி என்றும்,பா.ஜ.க.வைக் கடப்பாரைக் கட்சியென்றும் சொல்லலாமா?

Anonymous said...

ஷங்கர்
He is an OBC.Veeramani supported
Jayalalitha when govt. employees
went on strike.

முத்துகுமரன் said...

//அர்ஜுன் சிங் என்கிற மேதாவி 500 ரூபாய்க்குக் கிடைக்கும் ஜாதிச்சான்றிதழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இட ஒதுக்கீடு அறிவிப்பார்.//

500 ரூபாயில் மலரும் சமூக மறுமலர்ச்ச்சியை ஏன் தடுப்பானேன். அந்த மறுமலர்ச்சிக்கு வித்திடும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்தான் மேதாவியோ????

Muthu said...

அனானி,

எதிர்த்து = ஆபாசமாக

என்று எடுத்த பாங்கு எனக்கு பிடித்தது.ஏன் ஆபாசம் என்ற வார்த்தையை நான் உபயோகப்படுத்தினேன் என்று நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

செய்தியை மட்டும் சொன்னால் அது செய்தி சேனல்

இல்லை ஏதாவது கருத்தோ என்ன சனியனோ ஏதாவது சொன்னால் அது விமர்சனம்..

ஆனால் கருத்தை உள்நொக்கத்தோடு உருவாக்க முனைந்தால் அது ஆபாசம்.ஏதோ நாடோ பற்றி எரிவது போலும் இளைஞர்கள் எல்லாரும் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது போலும் பில்ட் அப் கொடுத்ததைத்தான் ஆபாசம் என்றேன்.

Muthu said...

anony,

வீரமணி வீட்டு புழக்கடையிலும் கருணாநிதி துண்டிலும் தேடினால் பகுத்தறிவு கிடைக்காது:)

Muthu said...

மிதக்கும் வெளி,

இப்படி மடக்கி கேட்டால் பதில் வருமா? தட்டிகொடுத்து கேளுங்கள்.

Muthu said...

டாக்டர் புரூனோ,

கலக்கிட்டீங்க என்று மட்டும் சொல்லிக்கொள்கிறென்.நல்ல கேள்விகளுக்கு நண்பர்கள் பதில் தந்ததே இல்லை.

ஏனென்றால் அன்புமணிக்கு தான் எதிர்ப்பு.அவர் செய்கைக்கு இல்லை

அருண்மொழி said...

//வீரமணி வீட்டு புழக்கடையிலும் கருணாநிதி துண்டிலும் தேடினால் பகுத்தறிவு கிடைக்காது:)//

முத்து,

இப்படி சொல்லிவிட்டீர்களே :)

அவர்களுக்கு திராவிடம் என்று சொன்னாலே பெரியார், கருணாநிதி, வீரமணிதான் தெரியும். அதை தாண்டி எதுவும் தெரியாது. அப்புறம் எதை பற்றி சொல்லி உங்களை நொங்குவது?

இப்பவே பாருங்கள் ஒரு அனானி திருப்பி திருப்பி Viduthalai, Veeramaniன்னு மந்திரம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

Anonymous said...

Dear Muthu,

I am seeing much difference in www.ibnlive than other indian english media.

NDTV is the worst one.

Anonymous said...

http://www.outlookindia.com/full.asp?fodname=20060626&fname=Col+Prem+Shankar+Jha+%28F%29&sid=1

இந்தியாவில வெளிநாட்டுக்காரங்களுக்கு வைத்தியம் பண்ண இந்திய
மக்கள் வரி பணத்தல படிப்பாங்களாம்.

அப்புறம் அரசாங்க செலவில் சகல வசதிகளும் உடைய மருத்துவமனையில்
வேலை செய்வார்கள்.

தங்களுக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத பிரச்சினைக்கு வேலை
நிறுத்தம் செய்வார்கள்.சம்பளமும் வாங்குவார்கள். எத்தனை பேர்
செத்து போனாலும் பிரச்சினை இல்லை.

மக்கள் பணத்தில் நடத்தப்படும் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு
யாருமே பொறுப்பில்லையா? அமைச்சரும் தலையிடக்கூடாதென்றால்
வேணுகோபால் பாராளுமன்றத்திற்கு போய் விளக்கம் கொடுப்பாரா?
மருத்துவமனையில் எத்தனை பேர் கவனிப்பிபன்றி செத்தார்கள்,என்ன மாற்று
ஏற்பாடு செய்தார்களென்று விளக்கம் கொடுப்பாரா?

IITக்களும் AIIMS காரர்களும் வானிலிருந்து குதித்தவர்களா?

அன்புமணி கேட்க வேண்டாம். வரி கட்டும் மக்கள் இந்த
மருத்துவமனையின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம் அல்லவா?
அவர்கள் சார்பாக எம்.பி.க்கள் கேட்கலாமே?

Anonymous said...

// Dr.Venugopal is a well known surgeon
and can survive without
working in AIIMS. He could easily
become a director in any of the
medical institutions in USA
or Europe.//

But he will have to behave differently there.
If a govt. agency head paid by the people
says he is not answerable to anyone, the
american press will tear him apart.

Pot"tea" kadai said...

தமிழினி,
நிறைய பேர் ஆர்வத்தோட பெயர் போட கூட நேரமில்லாமல் உமிழ்ந்து விட்டு செல்வதைப் பார்த்தால் இதிலேயும் ஒரு சதம் அடிப்பீர்கள் போல...கூடிய சீக்கிரம் வந்து இழுத்து விட்டு போகிறேன்.

மேலும், மிதக்கும்வெளியின் அந்த "பின்னூட்டம்" என்னை ரொம்பவே யோசிக்க செய்தது. அது தொடர்பாக ஒரு கதை எழுதப் போகிறேன் "ஸ்னோவி மவுன்டேய்ன்ஸ்"க்கு டிக்கட் ரிசர்வ் செய்தாயிற்று. :-))

Anonymous said...

இதையும் பாருங்கள், உங்கள் கண்டனங்களை எழுதுங்கள்
http://notesnowhere.blogspot.com

Muthu said...

அனானி,

notesnowhere ஒரு மேதாவி.அவர் கருத்தே எதிர்த்து எழுதும்அளவிற்கு நான் வளரவில்லை.

Muthu said...

//But he will have to behave differently there.
If a govt. agency head paid by the people
says he is not answerable to anyone, the
american press will tear him apart. //


நச்சென்று அடித்தீர்கள்.நன்றி.

Muthu said...

பொட்டீக்கடை,

நியாயமானதுதான் மிதக்கும்வெளி சொல்வது. தனிப்பதிவு போடலாம் அதைப்பற்றி.

//"ஸ்னோவி மவுன்டேய்ன்ஸ்"க்கு டிக்கட் ரிசர்வ் செய்தாயிற்று. :-))
//

கலக்குங்க சாமி..:))

அருண்மொழி said...

Muthu,

Please refer this
http://www.viduthalai.com/20060622/thalai.html

Muthu said...

//I am seeing much difference in www.ibnlive than other indian english media.//

anony,thanks...i will see this

Muthu said...

arul,

thanks for the link..

Muthu said...

அவுட்லுக் லிங்க் கொடுத்த அனானிக்கும் தஞ்சாவூருக்கும் மிகவும் நன்றி.

அருமையாக கருத்துக்கள்.

Anonymous said...

But he will have to behave differently there.
If a govt. agency head paid by the people
says he is not answerable to anyone, the
american press will tear him apart. //

First of all the U.S press will
tear apart such a minister (in this context the relevant head of the dept) who behaves irresponibily.
.Dr.Venugopal never said that
he was not accountable to anyone.
He protested the unwarranted interference by the minsiter.

Anonymous said...

One must remember that Anbumani is the boss. People like Venugopal do not seem to understand that. Instead they go crying to Dr. Kalam. It would have been better if Venugopal had resigned to show his protest. I repeat, Anbumani is the boss, and everyone below him should help him reach his goals. This is the hierarchy rule in any organization. Also, to bring about brahminism in this issue is unwarranted and bad taste. This type of matter could have happened in any Government organization.

Anonymous said...

I repeat, Anbumani is the boss, and everyone below him should help him reach his goals.

Bullshit, Anbumanis come and go.
Institutions outlive ministers.
Anbumani has to respect the
autonomy of the institution
and try not to interfere in
routine matters or day to day
issues unless the situation is
very bad.What are his credentials
as a doctor.

ENNAR said...

அனுபவமுள்ளவர்களை அமைச்சராக்கினால் அவர்கள் சுமுகமாக பொருமையாக பேசி செய்வார்கள்.
தொழிற்புறச்சியாளர் டாட்டாவை ஒருவர் மிரட்டுகிறார் இதெல்லாம் அவர்களது இளமை வேகத்தையும் அனுபவமின்மையையும் காட்டுகிறது

Muthu said...

ennar,

கருத்திற்கு நன்றி.ஆனால் இந்த ஆளும் பரவாயில்லை என்கிறார்கள்.

டாடடாவுடன் இரண்டு நாட்களுக்கு முன் பெசியதாகவம் ஏதோ தொழில் தமிழகத்தில டாட்டா துவங்கபோவதாகவும் சன்(?) டிவியில் சொன்னார்கள்

Anonymous said...

//
Anbumani has to respect the
autonomy of the institution//


Autonomous institutional heads should stay a-political. If they involve
themselves in politics, this is bound to happen. how can the govt
implement its policies if the autonomous institutional heads have
completely opposite agenda.

If you are the director of a company, and the company's CEO
starts a strike in your company, what would you do?

when the director could not run the organisation smoothly himself, what is the point in talking about the greatness of autonomy?

தமிழ் அகராதி said...

இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டுல் தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?