இளவஞ்சிக்கு ஆதரவாக ஒரு பதிவு போட்டால் பின்பு எதிராக ஒரு பதிவு போட்டு நடுநிலைமையை நிலை நாட்டுவதுதானே தமிழ் மரபு.அந்த அடிப்படையில் இந்த பதிவு. என்னுடைய நட்சத்திர வார இறுதிப்பதிவில் இளவஞ்சி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.அதற்கு விளக்கமாக பதில் தனிப்பதிவாக பிறகு சொல்கிறேன் என் கூறியிருந்தேன்.
சமீப காலமாக வலைப்பதிவுகளில் அதிக நேரம் செலவிட முடியாததாலும் வலைபதிவுகளில் புழங்குவதை குறைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாலும் பதில்கூற தாமதம் ஆகிவிட்டது.
சரி.விஷயத்திற்கு வருவோம். சில குட்டுக்கள், இடித்துரைப்புகள் அடங்கிய அந்த பின்னூட்டத்தில் இளவஞ்சி கூறிய மிக முக்கியமான கருத்து என்று நான் நினைக்கும் பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
// நம்பிக்கைகளை கட்டுடைப்பவனும் தகர்ப்பவனும் ஒன்றல்ல! தகர்ப்பவனுக்கு மற்றவர்களுடைய நம்பிக்கைகளை பற்றி எந்தவித கவலைகளுமில்லை! தனது கருத்தினை திணித்தால் போதும்! கட்டுடைப்பவன் அப்படியல்ல! மற்றவர் ஒரு கருத்தினை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என தன் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு நம்புகிறானெனில் முதலில் அவர்களுடைய நம்பிக்கைகளின் மீதான தவறான புரிதலை அவர்களுக்கு விளக்கவேண்டும்! அந்த தவறான நம்பிக்கைகளில் இருந்து அவர்களை அவர்களது சுயமும் இந்த மாறுதலின் மீதான நம்பிக்கைகளும் சிதைக்காவண்ணம் வெளிக்கொணர வேண்டும்! கட்டுடைக்கும் வேலையைச் செய்பவனுக்கு கட்டமைக்கும் பொறுப்பும் உண்டு! நீ செய்வது எல்லாம் அபத்தம் என அடித்து நிரூபிப்பது மட்டுமே அவனது வேலையல்ல! அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருப்பின் நம் நல்ல நம்பிக்கைகளை அவர்களுடையதாக மாற்றும் பொறுப்பையும் செய்யவேண்டுமல்லவா!//
//சாயிபாபாவின் மீதான் நம்பிக்கைகளை "பரட்டையன்" என தகர்த்தெறிய முயலும் உங்கள் முயற்சியின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை! அவரை திட்டுவதால் மட்டுமே தீர்வு கிடைத்துவிடுமா? அவர் பொய்யராக இருப்பினும் அவர்மீது வைத்த நம்பிக்கையின் மூலம் பலன் பெற்றவர்களை மாற்ற இந்த கட்டுடைப்பு போதுமா? மனரீதியாக ஆதவரற்றவர்களுக்கு ஒரு வேடதாரி தினகரனின் மூலம் "இயேசு உங்கள் துயரங்களை ஏற்றுக்கொள்வார்" என மனமுருகிப் பிராத்திப்பாதாக சொல்லும்போது அதனை உண்மையென நம்பி அதன் மூலம் மன உறுதியை பெறுபவர்களுக்கு "தினகரன் ஒரு பொய்யர்" என கட்டுடைப்பதின் மூலம் அவர்களுக்கு இந்த போலி பிரசங்கங்களின் மூலம் கிடைக்கும் மனநிம்மதிக்கு என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்? //
//என்னைக்கேட்டால் நாத்திகம் தோல்வியடைந்ததே இங்குதான் என்பேன்! மதநம்பிக்கைகளின் மூலம் ஒரு வித பலனை பெற்றுவந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் அத்தனையும் மூடநம்பிக்கைகள் என்பதோடு நின்றுவிட்டது நாத்திகம்! அதன்பிறகு வாழ்க்கைக்கும் உறவுகளுக்கும் உள்ள பிடிப்புகளுக்கும் பிணைப்புகளுக்கும் ஒரு மாற்று சொல்லாமல் நிற்க... மக்கள் "எத்தை தின்றால் பித்தம் தெளியுமெனெ" ஆசாமிகள் பின்னே இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்!//
இனி என் கருத்துக்கள்:
எந்நேரமும் திருப்புகழையும் பகவத்கீதையும் (குரானையும் பைபிளையும் இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்) பற்றி மட்டுமே பேசி பெரிய பக்திமானாக வேடம் கட்டுபவர்களில் பலர் உள்மனதில் எவ்வளவு அழுக்கானவர்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை என்னால் காட்டமுடியும்.ஆனால் இவர்களை இவர்கள் மற்றவர்களை விமர்சிக்கும பாணியில் கூட நாம் விமர்சித்துவிடமுடியாது. காரணம் என்ன தெரியுமா?கடவுள் நம்பிக்கையை, சமய நம்பிக்கையை உரக்க அறிவிப்பவன் நல்லவன் என்றும் சமய நம்பிக்கை இல்லாத கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் கொடியவன் என்றும் நம் பாமர மனதில் பதிந்து போனதுதான்.
சாய்பாபாவை பரட்டையன் என்று கூறியதை சொல்லி உள்ளீர்கள். மிகவும் லேசான தாக்குதல் அது. மிகவும் தெளிவாக அதற்கான காரணங்களை அந்த பதிவில் கூறி உள்ளேன். பலகோடி பேர் கூடி இருக்கும் ஒரு மேடையில் தன்னிடம் ஏதோ மந்திர சக்தி உள்ளதுபோல் நடித்து அத்தனை பேரையும் ஒட்டுமொத்தமாக முட்டாள் ஆக்கும் செயலை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இது நொண்டிகள் நடக்கிறார்கள், ஊமைகள் பேசுகிறார்கள் என்ற கோஷம் போடும் வெளிநாட்டு கூலிப் பட்டாளத்திற்கும் பொருந்தும்.
கண்டிப்பாக மதத்தால் ஒருசில நன்மைகள் இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அதே சமயம் மதங்களுக்கு இடையே ஆன சண்டை களினால்தான் இந்த பூமி நிறைய உயிர்பலிகளை கண்டுள்ளது என்பது கவனிக்கவேண்டிய ஒரு தகவல்.
ஆனால் மெய்ஞானம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை தேடிபோனோம் என்றால் நமக்கு தெரிய வரும் பதில்கள் வியப்பை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் மெய்ஞானத்தேடல் மாறுபடும்.
இந்த பத்திகளில் உங்களுக்கான பதில் ஒளிந்து கொண்டுள்ளது. விளக்கமாக இரண்டாம் பாகத்தில் தருகிறேன்.
Thursday, June 08, 2006
Subscribe to:
Post Comments (Atom)
53 comments:
//எந்நேரமும் திருப்புகழையும் பகவத்கீதையும் (குரானையும் பைபிளையும் இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்) பற்றி மட்டுமே பேசி பெரிய பக்திமானாக வேடம் கட்டுபவர்களில் பலர் உள்மனதில் எவ்வளவு அழுக்கானவர்கள் என்பதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை என்னால் காட்டமுடியும்.//
அதே போல பலர் எப்படி உண்மையிலேயே பக்திமானாக இருக்கிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பார்க்க என்றைக்கவது முயன்றிருக்கிறீர்களா?! அல்லது 100 சதவிகிதம் அயோக்கியர்கள் தான் என்று முடிவுக்கு உங்கள் உதாரணங்கள் உங்களை இட்டுச் சென்று விட்டனவா?!
அதெல்லாம் இருக்கட்டும், முதலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் நட்சத்திரவாரத்தின் இறுதிப் பதிவுக்கான சுட்டியை ஹைப்பர் லிங்காகாகத் தரவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மாயு,
எல்லாம் ஃபிராடு பசங்க என்று என்றுமே நான் கூறியதில்லை. பலர் உண்மையான பக்திமானாகவும் இருக்கிறார்கள்.
பலர் என்றுதான் கூறிஉள்ளேன். அனைவரும் என்று கூறவில்லையே?
டோண்டு கேட்டுகொண்டதற்கிணங்க சுட்டி
http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_07.html
பதிவில் சேர்த்துவிடுகிறேன் சார்.
ம்ம்ம்...மீண்டும் ஒரு போர்! :-)
முத்து, இளவஞ்சி சொன்னதன் சாரம்சத்தையும் உங்கள் கருத்தையும் வைத்துப் பார்க்கும் பொழுது எனக்கு இப்படித் தோன்றுகிறது.
ஒருவரை கருத்தியல் ரீதியாக எதிர்ப்பது என்பதற்கும் தனிமனித ரீதியாக எதிர்ப்பதற்கும் வேறுபாடு உண்டு.
அங்குதான் நீங்கள் இருவருமே வேறுபடுகிறீர்கள்.
சாய்பாபாவையே எடுத்துக் கொள்வோம். அவர் ஏமாற்றுகிறார். பொய் சொல்கிறார். இது உங்கள் கருத்து. ஆக, அவர் இப்படிப் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். இப்படிப் பொய் சொல்கிறார் என்று நீங்கள் கருத்தியல் தாக்குதல் நடத்தினால் அது மிகவும் ஏற்றுக் கொள்ளக் கூடியது. நிச்சயமாக. உறுதியாக.
ஆனால்...பரட்டையன் என்ற சொல் அவரது தோற்றத்தைக் கிண்டலடிப்பது. அது தனிப்பட்ட தாக்குதல். அது தவறு என்றே எனக்குப் படுகிறது.
சாய்பாபா என்ன...எந்தச் சித்தாந்தமும் விளக்கத்திற்கும் தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் கருத்துத் தாக்குதல் என்பதன் நாகரீக எல்லையை நாம் மீறுதல் நன்றன்று.
வலைப்பூக்களில் இப்பொழுது பெரும்பாலும் நாம் காணக்கிடைப்பது தனிமனிதத் தாக்குதல்களே. ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால் அவருடைய பெயரைக் கொஞ்சம் அப்படி இப்பிடி மாற்றி....அவரது பதிவின் பெயரை அப்படி இப்பிடி மாற்றி அசிங்கம் செய்வது. இது பகுத்தறிவும் அல்ல. உண்மையான பக்தியும் நம்பிக்கையும் உள்ளவன் செய்வதுவும் அல்ல.
கருத்து வேறுபாடு என்பதை தனிப்பட்ட எதிரித்தனம் என்று கொள்வதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம். அரசியலிலும் இதுதான் நடக்கிறது. அட...அவங்கதான் அரசியல்வாதிங்க...நமக்கென்ன?
திருப்புகழை நூறுமுறை சொல்வது பெருமையன்று. அந்தத் திருப்புகழில் சொல்லியிருக்கும் நல்லவைகளைச் செய்கிறோமா இல்லையா என்பதுதான் பெரிது. அவ்வளவுதான். நம்பிக்கையை உரக்கச் சொல்வது மட்டும் நம்பிக்கை ஆகாது. அதற்காக உரக்கச் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலையும் கிடையாது. எங்கும் விதிவிலக்குகள் உண்டு. அவ்வளவுதான் விஷயம்.
இதையெல்லாம் சொல்வதால் நான் புனிதப் பசுவாவேனோ...பிம்பமாவேனோ...தெரியாது. ஆனால் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சொல்லி விட்டேன்.
ராகவன்,
தனிமனித மற்றும் கருத்தியல் என்ற அளவில் இளவஞ்சி இதை அணுகவில்லை.சாயிபாபாவை தாக்கியதின் மூலம் நான் நம்பிக்கை யையே தாக்குகிறேன் என்ற அடிப்படையில்தான் கூறி உள்ளார்.மற்றபடி பரட்டையன் என்ற வார்த்தைக்கு மட்டும் அவர் எதிர்வினையாற்றவில்லை.
2.//நம்பிக்கையை உரக்கச் சொல்வது மட்டும் நம்பிக்கை ஆகாது. அதற்காக உரக்கச் சொல்வதெல்லாம் ஏமாற்று வேலையும் கிடையாது.//
நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன். உரக்க சொல்ல மட்டுமே செய்வதுதான் ஏமாற்று
வேலை என்றுதான் நானும் கூறுகிறேன்.உரக்க சொல்வதன் மூலம் தான் மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று பறைசாற்றுவது இன்னும் ஏமாற்றுவேலை என்பேன்.
பின்குறிப்பு:
உங்கள் கருத்துக்களை பெரும்பான்மையோரை சந்தோஷப்படுத்தி நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டும் நீங்கள் சொல்வதில்லை.உங்கள் மனதிற்கு பட்டதை கூறுகிறீர்கள்.ஆகவே என்னை பொறுத்தவரை நீங்கள் புனிதபசுவோ புனிதபிம்பமோ கிடையாது. :))
புனித பிம்பம் எனப்படுவோர் யார் என்று இரண்டு பதிவுகள் தனியாக போட்டுள்ளேன்.:))))
முத்து....
வழக்கம் போல நான் உங்கள் பக்கம் தான்....
சாய் பாபாவின் பிராடுத்தனங்களை அறிய இந்த வலைப்பக்கத்தைப் பார்க்கவும் : www.exbaba.com
முத்ஸ்..
சாய்பாபாவை நம்புகிறவர்கள் தான் அவரிடம் செல்கிறார்கள். நம்பாதவர்களை அவர் எதுவும் தொந்தரவு செய்கிறாரா என்ன? உண்மையில் எனக்கு சாய்பாபா மேல் துளியளவும் நம்பிக்கை கிடையாது என்பது வேறு விஷயம். ஆனாலும், இப்படி அவர் பிராடு என்று எடுத்துக் கூறுவதில் என்ன விஷயம் இருக்கிறது?!
அடுத்து, கடவுள் மறுப்பு கொள்கை என்று சொல்பவர்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அப்படி ஒரு கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் பின்பற்றித் தொலைக்கட்டுமே. சிலை உடைப்பு அது இது என்று அடுத்தவரின் நம்பிக்கையில் புகுவது எந்த விதத்தில் நியயயம் என்கிறீர்கள்? (இதெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாதது தானே?! ஏன் கேட்கிறேன் என்றால் இப்போதெல்லாம் பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்கள் தான் பேஷனாமே?!)
லக்கி,
நன்றி. அந்த தளத்தைத்தான் என்னுடைய அந்த குறிப்பிட்ட பதிவில் லிங்க்காக கொடுத்துள்ளேன்.
முத்து,
பல சமயங்களில் உங்கள் கருத்தே என் கருத்தும் என்று ஆகிவிடுகிறது.
ஆனால் சாய்பாபாவினால் புட்டபருத்தி மேம்பாடு அடைந்தை யாரும் மறுக்கமுடியாது.
இளவஞ்சி கேட்ட கேள்விக்கு பதில் வந்த மாதிரி தெரியலை (அட்லீஸ்ட் எனக்குப் புரியலை)..சரியான பதில் இருக்கான்னே தெரியலை..
//அதன்பிறகு வாழ்க்கைக்கும் உறவுகளுக்கும் உள்ள பிடிப்புகளுக்கும் பிணைப்புகளுக்கும் ஒரு மாற்று சொல்லாமல் நிற்க//
மாற்று இருந்தாத் தானே? சாமியார்களும், ஜோசியர்களும் நல்லதாக நடக்கும் என்று சொல்லிவிட்டால் ஏற்படும் மன அமைதி, நாத்திகத்தில் எந்த பக்கத்தில் இருக்கு? நம்ம எதையும் தன் உழைப்பால் வரும்னோ, இல்லை, எல்லாம் அது பாட்டுக்கு தானா நடக்கும்னோ நம்ப நாம என்னிக்கு தயாரா இருந்திருக்கோம்?
இதுக்கு ஏதாவது மாற்று சொல்லுங்க.. மெய்ஞானத் தேடலுக்கு முந்தய நிலையில் இருப்பவர்களுக்கும், பயன்படுகிற மாதிரி ஒரு மாற்று சொல்லுங்க..
மற்றபடி கட்டுரையில் சாய்பாபா, பக்திமான் இவர்களை இழுத்தது எதற்கு என்று புரியவில்லை.
பொன்ஸ், சாமியாரோ ஜோசியரோ நல்லது நடக்கும் என்று சொன்னாலும் 100 % நல்லது மட்டுமே நடக்கப்போவதில்லை. வாழ்க்கை
என்றால் நல்லது, தீயது, நன்மை தீமை , சுகம் துக்கம் இரண்டும் சேர்ந்ததுதான். செய்யும் முயற்சிகளை செய்துவிட்டு, தவறாய் போனாலும், எங்கு எப்படி தவறு நடந்தது, அதில் நம்ப பங்கு என்ன என்று நினைப்பது நாத்திகமா?
நம்முடைய எத்தனம் எதுவும் இல்லாத இடத்தில் ஒரு வேலை தோல்வி அடைந்தால், அதுதான் வாழ்க்கை , சென்றதை நினைத்து வருந்தாமல் இருப்பதும் நாத்திகமா? ஆம் என்றால் நான் நாத்திவாதி. இதற்கு இன்னொரு பெயர், கர்ம யோகம்.
உஷா,
உங்களுக்குக் கேட்கலியே... :
//மெய்ஞானத் தேடலுக்கு முந்தய நிலையில் இருப்பவர்களுக்கும், பயன்படுகிற மாதிரி ஒரு மாற்று சொல்லுங்க..
//
சாதா மக்களுக்கும் சொல்லும் போது தான் கடவுள் தேவையில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்,
பொன்ஸ்,
இளவஞ்சியின் கேள்விக்கு பதில் இருக்கு. கொஞ்சம் கடின உழைப்பு தேவைப்படும்.தனி பதிவு வரும்.ஆனால் இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் பல அதற்கும் பொருந்தும்.
விமர்சனத்தையே ஏற்காத ஒரு உருவாக்கத்தை எதிர்ப்பதில் உள்ள பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
பிடிப்புக்களும் பிணைப்புகளும் மதத்தினால்தான் இருக்கின்றன என்று சொல்வது சரியா என்று யோசியுங்கள் முதலில்.
மதம் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் பிடிப்பு,பிணைப்பு அற்றா இருக்கிறார்கள்? ஆனால் மதத்தில் ஆழ்ந்தவர்கள் பிடிப்பு, பிணைப்பு இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம்.:))
//இதுக்கு ஏதாவது மாற்று சொல்லுங்க.. மெய்ஞானத் தேடலுக்கு முந்தய நிலையில் இருப்பவர்களுக்கும், பயன்படுகிற மாதிரி ஒரு மாற்று சொல்லுங்க.. //
நல்ல ஜோக் இது...இதுதான் என் வேலையா? சொந்தமா சிந்திக்க சொல்லித்தான் கேட்கமுடியும்... இல்லாட்டி மனிதனை மனிதனாக மதி முதலில்..பிறகு சாமி கும்பிடலாம் எனலாம் சுருக்கமாக....
//மற்றபடி கட்டுரையில் சாய்பாபா, பக்திமான் இவர்களை இழுத்தது எதற்கு என்று புரியவில்லை.//
கட்டுரையை தனியாக படித்தால் அப்படித்தான் இருக்கும். Referring to the context என்று ஒன்று உள்ளது.
சிவபாலன் நன்றி.
ஒரு விஷயம்.சாயிபாபாவால் புட்டபர்த்தி, பங்காருவால் மேல்மருவத்தூர், ஜெயலலிதாவால் ஆண்டிப்பட்டி, சோனியாவால் அமேதி.இங்கு அதுவல்ல பிரச்சினை.சாயிபாபா செலவு செய்யும் பணம் எல்லாம் மக்களிடம் இருந்து வந்ததுதானே.
உஷாவின் கருத்து எனக்கு ஏற்புடையது.நன்றி உஷா.
// நம்பிக்கைகளை கட்டுடைப்பவனும் தகர்ப்பவனும் ஒன்றல்ல! //
இளவஞ்சி கேட்பது ஒரே கேள்வி. நீங்கள் நம்பிக்கைகளை கட்டுடைப்பவரா இல்லை தகர்ப்பவரா?
நீங்கள் கட்டுடைப்பவர் எனில்,
//இதுக்கு ஏதாவது மாற்று சொல்லுங்க.. மெய்ஞானத் தேடலுக்கு முந்தய நிலையில் இருப்பவர்களுக்கும், பயன்படுகிற மாதிரி ஒரு மாற்று சொல்லுங்க.. //
இதற்கு பதில் சொல்லியாகி வேண்டும்.
//நல்ல ஜோக் இது...இதுதான் என் வேலையா? //
என்று கேட்டால் இளவஞ்சியின் சொல்படி நீங்கள் நம்பிக்கைகளை தகர்ப்பவர்.
பிரபு,
வருகைக்கு நன்றி.
நீங்கள் என்னை கட்டுடைப்பவனாக பார்க்க நினைத்தால் மனிதம் தான் முதலில் மற்றதெல்லாம் பிறகு என்று நான் கூறுவதுதான் மாற்று என்று கொள்க.
தகர்ப்பவனாக பார்க்க நினைத்தாலும் எனக்கு சந்தோஷம்தான்.பழைய உலுத்து போன கட்டிடத்தை தகர்த்தால்தான் புதிதாக எழுப்பமுடியும்.ஒருவன் தகர்ப்பான்.அவனே எழுப்பவேண்டிய அவசியம் இல்லை என்றும் கொள்ளலாம்.
எதையாவது நமபியாகவேண்டும் என்பதற்காக மதத்தை நம்புவது சரியா என்பதையும் இதனுடன் சேர்த்து யோசிக்கவேண்டும்.
அவர் கூறிய பிடிப்பு, பிணைப்பு எல்லாம் மதத்தினால்தான் சாத்தியம் என்பதே என்னால ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
//மனிதம் தான் முதலில் மற்றதெல்லாம் பிறகு//
என்று வந்துவிட்ட பிறகு யாரையும் பரட்டையன் என்று திட்டுவது சரியாகுமா?
பிரபுராசா,
கண்டிப்பாக சரியாகும். பலகோடி பேரை மேடையில் உட்கார்ந்து ஏமாற்றும் ஆசாமிக்கு பரட்டையன் என்று சொல்வது மிகவும் கம்மி.
மனிதம் என்றால் அவனும் மற்றவர்களை மதிக்கணும் இல்லையா?
தமிழினி ஐயா!
//மனிதம் தான் முதலில் மற்றதெல்லாம் பிறகு//
என்று சொன்னது நீங்கள். சாயிபாபா அல்ல.
//மனிதம் என்றால் அவனும் மற்றவர்களை மதிக்கணும் இல்லையா?//
மனிதத்தை பின்பற்றச் சொல்லும் நீங்கள் முதலில் மதியுங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்களும் மனிதத்தை பின்பற்றும்போது அவர்களையும் உங்களைப் போல் இருக்கச்சொல்லலாம்.
//பலகோடி பேரை மேடையில் உட்கார்ந்து ஏமாற்றும் ஆசாமிக்கு பரட்டையன் என்று சொல்வது மிகவும் கம்மி.//
இங்கே நீங்கள் ஒருவரை மட்டும் பரட்டையன் எனத் திட்டவில்லை. கூடவே அந்த பலகோடி பேரை ஏமாளி என்கிறீர்.
பிரபு ஐயா,
//மனிதம் தான் முதலில் மற்றதெல்லாம் பிறகு
என்று சொன்னது நீங்கள். சாயிபாபா அல்ல.//
ஆமா..என் கருத்தைத்தான் நான் சொல்லமுடியும்...
//மனிதத்தை பின்பற்றச் சொல்லும் நீங்கள் முதலில் மதியுங்கள். உங்களைப் பார்த்து மற்றவர்களும் மனிதத்தை பின்பற்றும்போது அவர்களையும் உங்களைப் போல் இருக்கச்சொல்லலாம். //
ரொம்ப சந்தோஷம்...திரும்ப திரும்ப அதையே சொன்னால் நான் என்ன சொல்லமுடியும்? அந்த மாதிரி ஃபிராடுக்கு அதுவே கம்மி என்பது தான் பதில். விவாதம் செய்யவேண்டுமே என்பதற்காக என்னால் செய்யமுடியாது...மனிதம் ம்யூச்சலாக இருப்பதும் இல்லாமல் கட்டாயமாகவும் இருக்கவேண்டும் .ஏனென்றால்
சமுதாயமாக வாழ்கிறோம் நாம்.
//இங்கே நீங்கள் ஒருவரை மட்டும் பரட்டையன் எனத் திட்டவில்லை. கூடவே அந்த பலகோடி பேரை ஏமாளி என்கிறீர். //
நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்றால் உங்கள் இஷ்டம்.நான் என்ன சொல்வது? அதற்குத்தான் இந்த விஷயத்தில் நாத்திகவாதிகளின் பிரச்சினை பெரிது என்று முதலிலேயெ சொன்னேன்.:))
//விவாதம் செய்யவேண்டுமே என்பதற்காக என்னால் செய்யமுடியாது...//
என்னாலும் முடியாது. ஆனால் தாங்கள் சொல்ல வந்த கருத்துக்களை தெளிவாக்கிக்கொள்ளவே மறுபடியும் இந்த கேள்வி.
எனது கடைசி பின்னூட்டத்தில் இருந்ததை நீங்கள் முழுவதும் புரிந்து கொள்ளவில்லை.
//மனிதம் தான் முதலில் மற்றதெல்லாம் பிறகு//
என்று சொன்னது நீங்கள். சாயிபாபா அல்ல. அதனால் முதலில் தெரிவது நீங்கள் மனிதத்தை பின்பற்றுபவர் என்று. இரண்டாவது சாயிபாபா பின்பற்றுவது மனிதத்தை அல்ல. மதத்தை என்று. சரியா.
//மனிதம் என்றால் அவனும் மற்றவர்களை மதிக்கணும் இல்லையா?//
சாயிபாபா மனிதத்தை பின்பற்றவில்லை. அதனால் அவர் யாரையும் மதிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நீங்கள் அவரைப்போல் அல்ல. மனிதத்தை பின்பற்றுபவர். இல்லையா?
நான் கேட்க வந்தது இதுதான்.
மனிதத்தை பின்பற்றும் நீங்கள் இன்னொரு மனிதனுக்கு மரியாதை கொடுக்காமல் ஃப்ராடு, பரட்டையன் என்று கூறுவது எதற்காக?
தவறு செய்திருந்தால் தண்டனை கிடைக்கும்.
மனிதத்தை வலியுறுத்தும் நீங்கள், தவறே செய்தவனாக இருந்தாலும் மற்றொரு மனிதனை திட்டுவது ஏன்?
மனித நேயத்துடன், தவறை சுட்டிக் காட்டி, கூடவே தண்டனையையும் சுட்டிக் காட்டி இருக்கலாமே!
//பலகோடி பேரை மேடையில் உட்கார்ந்து ஏமாற்றும் ஆசாமிக்கு பரட்டையன் என்று சொல்வது மிகவும் கம்மி.//
யார் என்ன சொன்னாலும் இருவேறு கருத்துக்கள் தோன்றும். சாயிபாபா நல்லவர் என்று சொல்பவர்கள் பலகோடி பேர் (நீங்கள் குறிப்பிட்ட படி). கெட்டவர் என்று சொல்பவர்களும் நிறைய பேர் இருக்கலாம்.
பலகோடி பேரை மேடையில் உட்கார்ந்து ஏமாற்றுகிறார் என்று நீங்கள் முடிவாக சொல்லிவிட்டால், அந்த பலகோடி பேர் இன்னமும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றுதானே பொருள்? இல்லை வேறு ஏதாவது பொருள் உள்ளதா?
பலமுறை ஏமாந்து கொண்டிருப்பவன் ஏமாளிதானே? இல்லை வேறு ஏதாவது பொருள் உள்ளதா?
//நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்றால் உங்கள் இஷ்டம்.நான் என்ன சொல்வது?//
இதை தவிர வேறு என்ன முடிவு நான் எடுப்பது?
நான் உளறுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் இதற்கு பதில் கூற வேண்டாம்.
:))))))))))))))))))))))
//மனிதத்தை பின்பற்றும் நீங்கள் இன்னொரு மனிதனுக்கு மரியாதை கொடுக்காமல் ஃப்ராடு, பரட்டையன் என்று கூறுவது எதற்காக?//
//மனிதத்தை வலியுறுத்தும் நீங்கள், தவறே செய்தவனாக இருந்தாலும் மற்றொரு மனிதனை திட்டுவது ஏன்?//
சாயிபாபா தவறே செய்யாதவர் என்று நீங்கள் கூறியது எனக்கு ஏற்புடையதன்று.
மனிதத்தை போற்றுபவர் புரட்டுகாரர்களையும் அரவணைத்து செல்லவேண்டும் என்று நீங்கள் நினைப்பதாக தெரிகிறது. நான் அப்படி நினைக்கவில்லை.
தவறு செய்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் கற்பனைதான் நண்பரே.
இரண்டாவது கேள்விக்கு அதே பதில். நாத்திகவாதிக்கு பிரச்சினைக்குரிய பிரச்சினை இதுதான்.
பெரும்பான்மையை எதிர்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
அவசரப்படாதீர்கள் முத்து.
//சாயிபாபா தவறே செய்யாதவர் என்று நீங்கள் கூறியது எனக்கு ஏற்புடையதன்று.//
நான் இதுவரை சொல்லாத ஒன்று இது.
//நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்றால் உங்கள் இஷ்டம்.நான் என்ன சொல்வது?//
//இரண்டாவது கேள்விக்கு //
நானாக ஒரு முடிவுக்கு வரவில்லை என ஒத்துக்கொண்டால் சரிதான்.
//மனிதத்தை போற்றுபவர் புரட்டுகாரர்களையும் அரவணைத்து செல்லவேண்டும் என்று நீங்கள் நினைப்பதாக தெரிகிறது. நான் அப்படி நினைக்கவில்லை.//
தெளிவு படுத்தியதற்க்கு நன்றி.
//தவறு செய்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்பதெல்லாம் கற்பனைதான் நண்பரே.//
நான் ஆன்மீகத்தின் படி சொல்லவில்லை அன்பரே!
உலகில் இப்போது சில உல்டா சாமியார்கள் அனுபவிக்கும் தண்டனையைதான் சொன்னேன்.
ஆன்மீகத்தை நாங்கள் நம்பிக் கொள்கிறோம். உங்கள் மனிதத்தின் முறைப்படி என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நீங்கள் சொல்லலாமே!
அதை விட்டு விட்டு கன்னா பின்னாவென்று திட்டுதல் எப்படி சரியாகும்?
//மனித நேயத்துடன், தவறை சுட்டிக் காட்டி, கூடவே தண்டனையையும் சுட்டிக் காட்டி இருக்கலாமே!//
என்றுதான் நானும் கேட்டேன். இளவஞ்சியும் கேட்டிருக்கிறார்.
//ஃஃ//நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்றால் உங்கள் இஷ்டம்.நான் என்ன சொல்வது?//
//இரண்டாவது கேள்விக்கு //
நானாக ஒரு முடிவுக்கு வரவில்லை என ஒத்துக்கொண்டால் சரிதான்.ஃஃ//
எனக்கு புரியவில்லை அய்யா..தெளிவாக சொல்லுங்கள்
//அவசரப்படாதீர்கள் முத்து.
//சாயிபாபா தவறே செய்யாதவர் என்று நீங்கள் கூறியது எனக்கு ஏற்புடையதன்று.//
நான் இதுவரை சொல்லாத ஒன்று இது.//
தெளிவுபடுத்தியதற்கு நன்றி.
தவறு செய்தால் திட்டத்தான் செய்யவேண்டும்.அதிகாரம் இருந்தால் உதைக்கலாம் என்றும் உள்ளென்.கோடிக்கணக்கான பேரை மாங்கா மடையன் என்று நினைப்பவனை என்ன செய்ய?
//உலகில் இப்போது சில உல்டா சாமியார்கள் அனுபவிக்கும் தண்டனையைதான் சொன்னேன்.//
நான் தண்டனை அனுபவிக்காத உல்டா சாமியார்களை சொல்கிறென்.
என்ன தண்டனை கொடுப்பது என்று சொல்வதற்கு நான் என்ன கோர்ட்டா நடத்துகிறேன்?
படிப்பவர்களுக்கு அவர் ஃபிராடு என்று உணர வைப்பதுதான் என் நோக்கம்.
மற்றபடி நாத்திகத்தின் தோல்வியை பற்றியும் ஆத்திகத்திற்கு மாற்று என்ன என்பதை பற்றியும் இளவஞ்சியின் கேள்விக்கு இன்னொரு பதிவில் என் கருத்தை எழுதுவேன் என்றும் கூறியுள்ளென்.
ராமர் பிள்ளை கண்டுபிடித்தது பெட்ரோல் இல்லை என்றும் அவர் ஃபிராடு என்றும் நான் கூறினால் அப்போது நீயாவது பெட்ரோல் தரலாமே என்பதுபோல் இருக்கிறது உங்கள் கருத்து.
நான்: //இங்கே நீங்கள் ஒருவரை மட்டும் பரட்டையன் எனத் திட்டவில்லை. கூடவே அந்த பலகோடி பேரை ஏமாளி என்கிறீர். //
நீங்கள்://நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்றால் உங்கள் இஷ்டம்.நான் என்ன சொல்வது?//
நான்: //இதை தவிர வேறு என்ன முடிவு நான் எடுப்பது?//
நீங்கள்://இரண்டாவது கேள்விக்கு அதே பதில். நாத்திகவாதிக்கு பிரச்சினைக்குரிய பிரச்சினை இதுதான்.
பெரும்பான்மையை எதிர்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. //
நான்: //நானாக ஒரு முடிவுக்கு வரவில்லை என ஒத்துக்கொண்டால் சரிதான்.//
புரிகிறதா?
//தவறு செய்தால் திட்டத்தான் செய்யவேண்டும்.அதிகாரம் இருந்தால் உதைக்கலாம் என்றும் உள்ளென்.//
ஓஹோ! அப்ப திட்டுவது :) , உதைப்பது இதுதான் உங்களின் தண்டனைகளா?
வேறு ஏதாவது கிண்டல் அடிக்கும் தண்டனையையும் சேர்த்துக் கொடுங்கள். அவர் நிறைய தவறு செய்திருக்கிறார். ;)
அதாவது சாயிபாபாவின் அற்புதங்களை நம்புபவர்களை நான் முட்டாள்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஓ.கே என்று நினைக்கிறேன். :))
சரியா
//வேறு ஏதாவது கிண்டல் அடிக்கும் தண்டனையையும் சேர்த்துக் கொடுங்கள். அவர் நிறைய தவறு செய்திருக்கிறார். ;) //
செய்து விடுவோம் நண்பரே.அதற்கென்ன?
//இளவஞ்சியின் கேள்விக்கு இன்னொரு பதிவில் என் கருத்தை எழுதுவேன் என்றும் கூறியுள்ளென்.//
படித்தேன். ஆவலுடன் எதிபார்க்கிறேன்.
//ராமர் பிள்ளை கண்டுபிடித்தது பெட்ரோல் இல்லை என்றும் அவர் ஃபிராடு என்றும் நான் கூறினால் அப்போது நீயாவது பெட்ரோல் தரலாமே என்பதுபோல் இருக்கிறது உங்கள் கருத்து.//
அப்படி இல்லை. ராமர் பிள்ளையை பல கோடி பேர் ஏற்றுக்கொள்ளவில்லை (சாயிபாபாவைப் போல)
உங்களைப் போலவே நானும் ஒரு உதாரணம் தருகிறேன்.
நான் உங்களை திட்டினால் வலை பதிவில் பத்து பேர் என்னை எதிர்ப்பர். அவ்வளவுதான். இதுவே தெருவில் போய் கலைஞரை திட்டினால் தரும அடி கிடைக்கும். ஏனெனில் அவரை பின்பற்றுபவர்கள் ஏராளம். அவரை திட்டுவது இவர்கள் மனதை புண்படுத்தும்.
இதுதான் வேறுபாடு.
இந்த விஷயத்தில் விவாதித்தது போதும் என்று நீங்களும் நினைத்தால் நீங்கள் மேலே சொன்ன அடுத்த பதிவில் தொடரலாம்.
//அதாவது சாயிபாபாவின் அற்புதங்களை நம்புபவர்களை நான் முட்டாள்கள் என்று சொன்னால் உங்களுக்கு ஓ.கே என்று நினைக்கிறேன். :))//
நீங்கள் அப்படிதான் அன்பரே ஏற்கனவே சொல்லி உள்ளீர். சுட்டிக் காட்டியதற்கு, என் புரிதலில் தவறு என்றீர்.
எனக்கு OK என்று எப்போது சொன்னேன்?
நீங்கள் சொன்னீர்களா இல்லையா என்பதுதான் இங்கு விவாதித்தோம் இது வரை.
:)
ஆம்..ராமர்பிள்ளையை பலர் ஏற்கவில்லை .சாய்பாபாவை போல்.அதைத்தான் நானும் சொல்கிறேன்.
நானும் தெருவில் இறங்கி சாயிபாபாவை திட்டபோவதில்லை.:))
ஒரு கொடுமை என்னவென்றால் சாயிபாபாவை நீ எப்படி திட்டலாம் என்ற பாணியில்தான் நீங்கள் பேசுகிறீர்களே ஒழிய அவர்மூலம் பரவும் மூடநம்பிக்கை என்ற விஷவிதையை மறக்கிறீர்கள் என்பதுதான்.
//செய்து விடுவோம் நண்பரே.அதற்கென்ன?//
:) நன்று.
உங்கள் புரிதலில் தவறு என்று சொல்லவில்லை.நீங்கள் நினைத்துகொண்டால் நான் எதுவும் செய்யமுடியாது என்றேன்.
அதற்குத்தான் மீண்டும் சொல்கிறேன்.பெரும்பான்மையை எதிர்த்து பேசுவேண்டிய சூழ்நிலை.
////இளவஞ்சியின் கேள்விக்கு இன்னொரு பதிவில் என் கருத்தை எழுதுவேன் என்றும் கூறியுள்ளென்.//
படித்தேன். ஆவலுடன் எதிபார்க்கிறேன்//
மிகவும் நன்றி.
cheers
MUTHU
//ஒரு கொடுமை என்னவென்றால் சாயிபாபாவை நீ எப்படி திட்டலாம் என்ற பாணியில்தான் நீங்கள் பேசுகிறீர்களே //
ஆமாம். அப்படித்தான் பேசுகிறேன். திட்டுவது மட்டும்தான் தவறு என்றேன். இப்போதும் கூறுகிறேன்.
//ஒழிய அவர்மூலம் பரவும் மூடநம்பிக்கை என்ற விஷவிதையை மறக்கிறீர்கள் என்பதுதான்.//
மறக்கவில்லை, மறுக்கவும் இல்லை. இதை பொறுத்த வரை நானும் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று நினைத்துதான் முதலில் இருந்தே கூறி வருகிறேன்.
//மிகவும் நன்றி.
cheers
MUTHU//
Thanks for the Enjoyable coversation.
With love,
R. Prabu
விமர்சினத்தற்கு எட்டாமல் அமர்ந்துகொண்டு இருக்கும் ஆட்களை தரைக்கு கொண்டு வருவதற்கு திட்டுதல் என்னை பொருத்தவரை அவசியம்.
பரட்டையன் deserve that.
//தினகரன் ஒரு பொய்யர்" என கட்டுடைப்பதின் மூலம் அவர்களுக்கு இந்த போலி பிரசங்கங்களின் மூலம் கிடைக்கும் மனநிம்மதிக்கு என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்? //
ஒருவனை ஏமாற்றி அவனை மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்க சொல்வது. அப்படி செய்தால் அவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
மனநிம்மதிக்கு மாற்று இந்த மாதிரியான ஏமாற்றிலிருந்து வெளிப்பட்டு இயல்நிலை எதார்த்த உலகை அறிந்து அதன்படி நடப்பது தான் சரியே தவிற! அவன் நம்பிகின்ற போலியானவற்றை அனுமதிப்பது தவறு. ஏமாற்று வேலையை எதிர்ப்பதில் மறுப்பதில் தவறு இல்லை.
இளவஞ்சி அவர்களுக்கு
//தினகரன் ஒரு பொய்யர்" என கட்டுடைப்பதின் மூலம் அவர்களுக்கு இந்த போலி பிரசங்கங்களின் மூலம் கிடைக்கும் மனநிம்மதிக்கு என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்? //
ஒருவனை ஏமாற்றி அவனை மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்க சொல்வது. அப்படி செய்தால் அவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
மனநிம்மதிக்கு மாற்று இந்த மாதிரியான ஏமாற்றிலிருந்து வெளிப்பட்டு இயல்நிலை எதார்த்த உலகை அறிந்து அதன்படி நடப்பது தான் சரியே தவிற! அவன் நம்பிகின்ற போலியானவற்றை அனுமதிப்பது தவறு. ஏமாற்று வேலையை எதிர்ப்பதில் மறுப்பதில் தவறு இல்லை.
தமிழினி,
//கண்டிப்பாக மதத்தால் ஒருசில நன்மைகள் இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். //
தினகரன்களுக்கும், சாயி பாபாக்களுக்கும், பூசாரிகளுக்கும், மத நிர்வாகிகளுக்கும், பாதிரியார் களுக்கும், பல நன்மைகள் உள்ளது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
மாயவரத்தாரே
//அடுத்து, கடவுள் மறுப்பு கொள்கை என்று சொல்பவர்களை எடுத்துக் கொள்ளுங்களேன். அப்படி ஒரு கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் பின்பற்றித் தொலைக்கட்டுமே. சிலை உடைப்பு அது இது என்று அடுத்தவரின் நம்பிக்கையில் புகுவது எந்த விதத்தில் நியயயம் என்கிறீர்கள்?//
இதே பதில் எதிர் தரப்புக்கும் பொருந்தும் இல்லையா?.
சாய்பாபாவைக் குறிப்பிடும் போது என் மனைவி குரோட்டன்ஸ் தலையன் என்கிறாள். இது திட்டா இல்லை பாராட்டா எனத்தெரியவில்லை.
இவ்வாறு சொல்லும்போது அது ஒருவரது தோற்றத்தை விமர்சிப்பதாக நான் கருதவில்லை, கொள்கையை விமர்சிப்பதாகவே கொள்கிறேன்.
Post a Comment