இந்த கட்டுரையின் முதல் பாகம் இங்கே
கட்டுடைப்பது, தகர்ப்பது என்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அப்படியே எடுத்து நான் பேசமுடியாது. ஒரு நண்பர் கூறியது போல் எய்ட்ஸ்க்கு மருந்து என்னிடம் உள்ளது என்று ஒரு ஆள் ஏமாற்றுகிறான் என்று வைத்துக் கொள்வோம் . நான் இவனிடம் மருந்து இல்லை.இவன் ஃபிராடு என்று கூறுகிறேன் .உடனே நீங்கள் அப்படி என்றால் நீ மருந்து தா என்று கூறுவது போல்தான் இந்த மாற்று என்ன என்ற கேள்வி உள்ளது. ஆனாலும் மாற்று என்ன என்ற கேள்வியை நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்பதையும் நான் ஏற்றுககொள்கிறேன் .
மேற்கண்ட சாயிபாபா பற்றிய கட்டுரையில் நான் நம்மை இயற்கையின் ஒரு பகுதி என்று கூறி வாழும் வகையை பற்றி பேசும் ரவிசங்கர், ஜக்கி ஆகியோரை பற்றியும் கூறிஉள்ளேன். சில நடைமறை பிரச்சினைகள் இருந்தாலும் எந்த விதமான மூடநம்பிக்கைகளையும் இவர்கள் பரப்புவதில்லை. நான் ஃபிராடை ஃபிராடு என்று நான் கூறுகிறேன். மற்ற ஆபத்தில்லாத கருத்துக்களை கூறும் சாமியார்களைப்பற்றி கோடி காண்பித்துள்ளேன். அவரவர் மெய்ஞானதேடல் என்பதைப்பற்றி நான் கூறியதை இதனுடன் இணைத்து பார்க்கவேண்டும். இதனுடன் சேர்த்துத்தான் இந்த மாற்று என்ன என்ற கேள்விக்கு பதிலை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
அபத்தங்களை சுட்டிகாட்டும் போது ஏற்படும் கடுமையான எதிர்வினைகளே நமக்கு கடுமையான மன உளைச்சல்களை ஏற்படுத்த வல்லன . இதில் மாற்று சொன்னோம் என்றால் நீ யார் சொல்வதற்கு என்ற கேள்வி முதற்கொண்டு அனைத்தும் வரும் .ஆகவே அவரவர் அவரவர் மெய்ஞானத்தேடலை செய்வதே நல்லது.ஆனால் இது (சாயிபாபா , தினகரன் பாணி) கேவலமானது என்பதை நான் கடுமையாக கூறுகிறேன்.காரண காரியங்களுடன் கூறுகிறேன் என்பது மிகவும் முக்கியம் . இதிலிருந்து முன்னெடுத்து செல்வது அவரவர் கையில். நீயாக சிந்தி என்று கூறிய கிருஷ்ணமூர்த்தி முதற்கொண்டு பல முன்னோடிகள் உள்ளனர் . கடவுளின் நண்பர்கள் ரெடிமெட் சொல்யூசன்களுடன் சுற்றுவதும் அதை விமர்சிப்பதையே தடுப்பதும் வரலாற்றில் பலகாலமாக நடைபெற்றுத்தான் வருகிறது.ஆனால் இவ்விதமான மதங்களும் கடவுளின் நண்பர்களும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் மனிதனுக்கு எந்த ஒரு தீர்வையும் கொடுக்கமுடியவில்லை .
நாத்திகம் பேசுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக அவன் எல்லாரையும் எல்லாவற்றையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவன் என்றெல்லாம் புறந்தள்ளி விடக்கூடாது. சாயிபாபா ஆகட்டும்.தினகரன் ஆகட்டும். இயற்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை சாதாரணமாக நடத்தி காட்டுவதாக சொல்கிறார்கள்.மக்களை நம்ப வைக்கிறார்கள்.இது மிகவும் கண்டிக்கத்தக்க போக்கு.இவர்களை மனம் புண்படும் விதம் திட்டக்கூடாது என்பது மிகமிக கண்டிக்கத்தக்க போக்கு .
நான் கடந்த கட்டுரையில் கூறிஉள்ள திருப்புகழ் கோஷ்டி உதாரணத்தை இங்கு எடுக்கிறேன்.என்னுடைய முதல் பதிவுக்கு இவ்விதமான எதிர்வினை ஒன்று வந்தது.இங்கு நம் சூழலில் இந்த வழியான விமர்சனங்கங்கள் ஒழுக்கத்துடன் இணைத்து பார்க்கப் படுகின்றன . அது மிகவும் தவறு.கடவுள் நம்பிக்கை உள்ளவன் = நல்லவன் என்றும் கடவுள் நமபிக்கை இல்லாதவன் = கெட்டவன் என்றெல்லாம் சிறுவயதில் இருந்து நாம் ஊட்டி வளர்க்கப்படுகிறோம். மனம் புண்படும் என்பதற்காக இதை விமர்சிக்காமல் விடுவதுதான் இவர்களின் பலம்.இவர்களையும் கடுமையாக விமாசிக்கலாம் என்ற விஷயமே பலபேருக்கு சில திறப்புகளை கொடுக்கும் . மாய்மாலம்(மாயமந்திரம்) செய்யும் சாமியாரை பரட்டையன் என்று திட்டலாமா? அவர் சாபம் கொடுக்கமாட்டாரா? அவரால் சாபம் கொடுக்கமுடியுமா என்பதுபோல.
ஒரு குறிப்பிட்ட வகை அரசியலை முன்னெடுக்கும் ஆட்கள் சந்திக்க வேண்டிய முதல் பிரச்சினை இதுதான்.கொச்சைப்படுத்தப்படல்.அதாவது பக்திமானாக தம்மை காட்டிக்கொள்ளும் நபருக்கு அளவிள்ளாத உரிமைகள்.
நம்பிக்கை உள்ளவருக்கு மனம் புண்படுகிறது என்றால் கணககில்லாத உணவு பொருட்கள் அபிஷேகம் என்ற பெயரில் வீண் செய்யப்படுவதை பார்த்து எங்கள் மனம் புண்படாதா?மனிதன் துன்பப்பட முற்பிறவி பாவம்தான் காரணம் என்று வெட்டிச்சாக்கு சொல்லப்பட்டு சாகவிடும் செய்கை எங்கள் மனத்தை புண்படுத்தாதா? இந்த மனம் புண்படுகிறது என்பதே ஒரு பம்மாத்து.
முக்கியமான விஷயமாக நான் முன்வைத்தது சாய்பாபாவின் மற்றும் தினகரனின் தகிடுதத்தங்கள்.இதை புரிந்துகொள்ள முதலில் நாம் இதை நம்புகிறோமா என்ற கேள்வியை போட்டுக் கொள்ளவேண்டும். அதனடிப்படையில்தான் இதை புரிந்துகொள்ளமுடியும். புட்டபர்த்திக்கு வருபவர்களிடம் நண்பர்களாக பழகி அவர்கள் பிரச்சினையை கேட்டு பின் அதை சாயிபாபாவிடம் ஒருவர் கூறுவார். பின்னர் சாயிபாபா சரியாக உங்கள் பெயரைக்கூறி கூப்பிடுவார் . இது அற்புதமாம். நான் கூறிய அந்த குறிப்பிட்ட தளத்தில் காட்டப்படும் வீடீயோ காட்சிகள் அதிர்ச்சி கொள்ள வைப்பவை . அதாவது அறிந்தே ஏமாற்றுவேலை செய்யும் நபரை மனம் புண்படாமல் விமர்சிப்பது எப்படி?
இவர்களின் அற்புதங்களும் பிரசங்கங்களும் மக்கள் மனதில் ஏற்படுத்தும் உணர்வுகள் பாஸிடிவ்வானது என்று நீங்கள் நினைத்தால் அதையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.
உடம்பு சரியில்லாத ஒருவரை வெறும் ஜெபம் செய்து காப்பாற்றிவிடலாம் என்றுக்கூறி மருத்துவமனைக்குக்கூட அழைத்து செல்லாமல் வைத்து சாகடித்துள்ள கிறிஸ்தவ குடும்ப கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். அற்புதங்கள் செய்யும் சாயிபாபா இன்னொரு புறம் மருத்துவமனை வைத்திருப்பது எதற்கு ? அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்தலாமே?
கடைசியாக இன்று நாத்திகம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் என் கருத்து. இன்று நாகரீக சமுதாயத்தில் மாய்மைக்கு எந்தவித மதிப்பும் இல்லை . சட்டத்திற்கு முன் மாயமந்திரமோ அற்புதமோ நிற்க முடியாது. பகுத்தறிவுதான் கோலேச்சுகிறது மதத்திலும் மதசடங்குகளிலும் நம்பிக்கை குறைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே வருகிறது. நீங்கள் கூறிய சமுதாய பிணைப்புகளுக்கும் பிடிப்புகளுக்கும் மதம் தான் காரணம் என்பதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று நினைக்கிறேன். அறிவியலின் எல்லை என்ன? மாய்மையின் எல்லை என்ன ? என்பதைப்பற்றி தெளிவாக கோடு போட்டு வாழ தெரிந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டுத்தான் உள்ளது.
(நாத்திகம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதையும் தெளிவாக வரையறுப்பது முக்கியம்)
மாய்மையை தூக்கி பிடி்ப்பவர்கள் கூட சொந்த வாழ்க்கை என்று வரும்போது பகுத்தறிவோடு முடிவு எடுப்பதை நாம் நிறைய பார்க்கமுடிகிறது. அப்படி யானால் இன்று பொதுவாழ்வில் பக்தி என்பது
1.பொழுதுபோக்கு
2.நல்லவன் என்று தம்மை காட்டிக்கொள்ள எளிய வழி
ஆகியவை மட்டுமே என்று மிகவும் சுருங்கிப்போய்த்தான் உள்ளது.
ஆன்மீகத்தின் அர்த்தம் இங்கு கேவலப்பட்டு போய் இருக்கிறது.
(இதில் சொல்லப்பட்டது போல் அல்லாமல் ஒரு சிறுபான்மை யானவர்கள் ஆன்மிகத்தை ஆழமாக முன்னெடுத்துசெல்ல முயற்சி செய்கிறார்கள் என்பதையும் நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் நாம் பெரும்பான்மையை கணக்கில் எடுத்துத்தான் எதையும் செய்யவேண்டி உள்ளது:)
related posts:
http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_07.html
http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_114671990230043082.html
Sunday, June 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
நூறு கண்டு நாளாயிற்றோ??!!
அனைவரையும் நேசி! அனைவருக்கும் உதவு!
[Love all; Serve all!]
சாயிராம்!
நல்ல கட்டுரை.
இன்றும் விரிவாக பேசலாம்.
பிறகு வருகிறேன்.
பி.சி. சர்க்கார் என்றுதான் நினைக்கிறேன். அவர் புட்டபர்த்தி சாயிபாபாவைப் பார்த்த அனுபவத்தை எழுதியுள்ளார்.
அவர் சாதாரணமாக தன்னை அறிமுகம் செய்யாது சாயிபாபாவுடன் பேசியிருக்கிறார். அவரும் இவருக்கு சீரியஸாக உபதேச தோரணையில் அறிவுரை கூறுகிறார். அப்போது சர்க்கார் ஓரக் கண்ணால் பார்க்கிறார். பாபாவின் சீடர் ஒருவர் ஒரு பிரசாதத் தட்டை பாவிடம் மெதுவாக நகர்த்துகிறார். பாபா அதிலிருந்து ஸ்டைலாக எடுத்து, என்னமோ தான் மத்திர சக்தியால் அதை வரவழைத்தது போன்ற தோற்றம் கொடுத்து சர்க்காரிடம் லட்டு ஒன்றைத் தர, சர்க்கார் அதை வாங்கிக் கொண்டு அதே மாதிரி எதிர் மரியாதையாக பாபாவுக்கு அதே முறையில் லட்டை எடுத்துத் தருகிறார்.
இப்போது பார்க்க வேண்டுமே, பாவின் அருள் வாக்குகளாக தெலுங்கில் வசவுகள் விழுகின்றன!!
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்து,
பதிலளித்தமைக்கு நன்றிகள்.
எனக்கும் சொல்வதற்கு கொஞ்சம் இருக்கிறது. வெளியூர் பயணம். எனவே, திரும்ப வந்தவுடன் எழுதுகிறேன். :)
ஆரம்பிச்சாச்சா :-), சொல்லிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்ன பலன்? போன வாரம் என் டிவில ஸ்ரீ ஸ்ரீ
வாழும் கலையை போதித்துக் கொண்டிருந்தார். அதே சமயம், ஜெயாவின் ஜக்கி, என்ன சொல்கிறார் என்று அவருக்கே புரிகிற்தா என்று தெரியவில்லை, ஆனால் வழக்கப்படி, லஷ்மி அவரையும் பேச விடாமல், தன் சிந்தனைகளை, யோசிக்க சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாம் கூட்டு கொள்ளை, புரியாத ஜனங்கள், வீழுவதைப் பார்க்க வருத்தமாய்தான் இருக்கு. திரும்ப, வாரேன் :-)
எஸ்கே,
ஹிஹி...
நன்றி
பிரபுராஜா,
வாங்க பேசுவோம்...
டோண்டு,
இந்த சம்பவம் நான் கேள்விபடாதது.நல்ல காமெடியாக இருக்கிறதே.
ஆனால் பல விஞ்ஞானிகளும் அவரை சோதனை செய்ய கேட்டபோது
( தலையை கலைத்து இல்லீங்க :))
அவர் மறுத்துவிட்டதாக கேள்வி.
இளவஞ்சி,
வெளியூரா? ம்..எப்பல்லாம் வெளியூரில இருக்கீங்களொ அப்பல்லாம் அணுகுண்டு வீசுவீங்க:))
பார்த்து பண்ணுங்க..நான் அப்பாவி (அப்பாவிகளுக்கு மட்டும்)
உஷா,
// ஆரம்பிச்சாச்சா :-), //
சிங்கத்தை தட்டி எழுப்பறாங்களே..
மற்றபடி கதை அதேதான்.
முத்து,
எல்லா நாடுகளிலும், இந்தமாதிரி ஏமாற்றுப் பேர்வழிகள் இருக்கலாம்; அவர்களை நம்பும் மக்களும் இருக்கலாம். ஆனால் நம்மூரில் சற்று அதிகம். அதிலும் குறிப்பாக நம்மூர் சாமியார்கள், அவர்களது அணுக்கத் தொண்டர்கள் வெளிநாடுகளில் செய்யும் பித்தலாட்டங்கள் தோலுரிக்கப்பட்டாலும் அவர்களை நம்பும் வெளி நாட்டினரும், இந்தியரும் இருக்கத்தான் செய்கிறார்கள். (உ.ம். மகேஷ் யோகி மற்றும் தீபக் சோப்ரா). வெளிநாட்டு இந்தியச் சாமியார்கள் கொஞ்சம் குவாண்டம் இயற்பியலையும் தனது மாய்மாலங்களுக்கு துணைக்கழைத்துக் கொள்வர். இத்தகைய சாமியார்களின் மாய்மாலங்களின் அறிவியல் விளக்கம் குறித்து (அதாவது நாமும் அவற்றை செய்து பிறரை ஏமாற்றலாம் - பிறகு சாமியாராகவும் ஆகலாம்!) ஒருபுத்தகம் வெளிவந்துள்ளது. இது குறித்து வேறு கோணங்களில் எழுதலாமென இருக்கிறேன். (நீங்கள் சிரிப்பது புரிகிறது) மீரா நந்தா கட்டுரைகளைப் படிக்கவும். தீபக் சோப்ராவின் மாய்மாலங்கள் பற்றி அறிய www.quackwatch.org செல்லவும்.
நான் புட்டபர்த்தி சென்று சாயிபாபாவை சந்தித்த அனுபவம் உள்ளது...பணிச்சுமை...பிறகு எழுதுகிறேன் இதே இடத்தில்....
"இன்று நாத்திகம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் என் கருத்து. ........மதத்திலும் மதசடங்குகளிலும் நம்பிக்கை குறைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே வருகிறது."
அப்படியா சொல்றீங்க? very religous மக்களே அதிகமாகவும், அதற்கு ஏற்ற்து மாதிரி areligious என்ற agnostic மக்களும் அதிகமாகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஒரு நாத்திகன் என்ற முறையில் உங்கள் பதிவு என்னை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது.... நாத்திகம் என்பது வேறு ஒன்றும் அல்ல.... எது உண்மை என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ்வதே....
பதிவுக்கு நன்றி முத்து!
ஆத்திகவாதிகளுக்கு இணையாக நாத்திகவாதியான வீரமணிவகையராக்கள் போலித்தனமாக நடந்துக்கொள்வதால் ,நாத்திகம் பேசினாலும் மரியாதைகிடைப்பதில்லை.
சிலர் ஆத்திகவாதிகளையும் பின்பற்ற மாட்டார்கள் ,தற்போதுள்ள நாத்திகவாதிகளையும் பின்பற்ற மாட்டார்கள் ஆனால் மூடத்தனமான கொள்கைகளை வன்மையாக கண்டிப்பார்கள் ,ஆனால் அவர்களுக்கும் வீரமணி போன்ற காரியவாதி என்ற முத்திரை தான் கிடைக்கும்.வீரமணி போன்றோரின் போலித்தனத்தால் உண்மையான நாத்திகவாதிகள் வெளிப்படையாக தலைக்காட்ட முடிவதில்லை. புரட்சிகரமாக நாத்திகம் ,மூட நம்பிக்கை பேசினால் தி.க காரன் அவன பத்தி தெரியாத என சாடுவார்கள். சுயமாக அப்படி யாரும் இருக்க மாட்டார்கள் என்பது இவர்களது கருத்து!
கண்கட்டு வித்தைகாரர்களின் வெற்றிக்கு காரணம் மக்களுக்கு இருக்க கூடிய தீர்க்க முடியாத பிரச்சனைகள்,அவர்களுக்கு ஏற்படும் நம்பிக்கைகுறைவே , இதற்கெல்லாம் சரியான மனோதத்துவ ஆலோசனை வழங்கினால் போதும், ஆனால் நம் நாட்டில் இதிலும் ஒரு குறைபாடு பைத்தியகார டாக்டர் என அவரையே பைத்தியம் ஆக்குவார்கள். பைத்தியம் பிடித்தோர் மட்டும் தான் அங்கே போக வேண்டும் என்ற கருத்தாக்கம் உள்ளவர்கள்.
இந்தியாவில் கோயில்களும் , சாமியார்களும் மானோதத்துவ மருத்துவமனைகளின் வேலையை செய்கிறார்கள் , நம்பிக்கை இழந்து வருவோர்க்கு நல்ல நம்பிக்கை ஊட்டுவது சிலர்.பெரும்பாலும் சாய்பாப போல மோசடி பேர்வழிகள் தான். இன்னும் சொல்ல போனால் இவர்களை போன்றோர் மெஸ்மரிசம் போன்ற கலையை கற்றுவைத்துள்ளார்கள் ,எனவே பலரையும் பேசி மூளைசலவை செய்தே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள்.மேலும் இது போன்ற இடங்களில் தரக்கூடிய பிரசாதங்களில் லாகிரி வஸ்துகள் அதாவது போதைப்பொருள்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு எனவே அதை சாப்பிட்டதும் "பரவச நிலை" வரக்கூடும் உடனே இறைவன் அருள்,சாய்பாபாவின் சக்தி என அப்பாவிகள் பூரிப்படைவார்கள்.விஞ்ஞானத்தின் துணைக்கொண்டே ஏமாற்றுகிறார்கள்.
Here are my 2 cents...
மதம் என்கிற விஷயம் மனிதனை நெறிப்படுத்துகின்ற உயரிய காரணத்திற்காக உருவாக்கப்பட்டது. அதன் சாராம்சங்களை இழந்து அதனோடு தன்னை ஒரேயடியாக இணைத்துக் கண் மூடித்தனமாக பிற மதத்தைத் தாக்கும் பட்சத்தில் அதன் உண்மையான இலக்கு எட்டப்படுவதே இல்லை. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
ஒரு செய்தியை சும்மா சொல்லாமல் பாக்யராஜ் பாணியில் கதை வடிவில் சொல்வது தான் மதம். அதன் கருவை விடுத்து விட்டு, 'என் கதை சிறந்தது, உன் கதை குறைந்த்து' என எண்ணுவது தான் பிரச்சினைகளின் பிண்ணனி. அதே மாதிரி கதை சொல்லாமல் மேட்டரைத் தானாவே உணர்ந்து கொள்ளும் ஆற்றல் சிலருக்கு இருக்கும். தனக்குக் கதை தேவையில்லை என்பதற்காக வேறு அவரும் கதையே கேட்கக் கூடாது எஅ இவர்கள் ஒரேயடியாகக் கட்டாயப்படுத்துவதும் நல்லதல்ல.
என்ன முத்து? மோசமான உதாரணமா?
//ஆனாலும் மாற்று என்ன என்ற கேள்வியை நாம் புறந்தள்ளிவிடமுடியாது என்பதையும் நான் ஏற்றுககொள்கிறேன்
என்று சொல்லுகிற நீங்களே,
//ஆனால் இவ்விதமான மதங்களும் கடவுளின் நண்பர்களும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் மனிதனுக்கு எந்த ஒரு தீர்வையும் கொடுக்கமுடியவில்லை
என்றும் சொல்லுகிறீர்கள்.
மாற்று என்ன என்ற தீராத கேள்விக்காக மனிதர்களே "கண்டுபிடித்த" விடை தான் ஒவ்வொரு மதமும். எது சரி, யாருக்கு தெரியும்?
//வீரமணி போன்றோரின் போலித்தனத்தால் உண்மையான நாத்திகவாதிகள் வெளிப்படையாக தலைக்காட்ட முடிவதில்லை.
அதே போல தான் ஆத்திகவாதிகளும்:-)
//கடைசியாக இன்று நாத்திகம் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது என்பதுதான் என் கருத்து
நாத்திகம் வெற்றி பெறுகிறது என்று எனக்கு தோன்றவில்லை. மூட நம்பிக்கைகள், "சம்பிரதாயங்கள்" அழிந்து வருகின்றன். இதனால் "தத்வம் அஸி" என்று "புதிய" மதம் (ந்)ஆத்திகமாக (agnostic?) தோன்றலாம்:-))
கெக்கே பிக்கே,
உங்களின் ஒரு கருத்து உண்மை.
"வீரமணி போன்றோரால் உண்மையான நாத்திகவாதிகளுக்கு பிரச்சினை என்பது போல் பிரச்சினை உண்மையான ஆத்திகவாதிகளுக்கும் இருக்கு"
இது எனக்கு பிடிச்சது.மீண்டும் இங்கயும் நான் பெரும்பான்மையை போட்டு பார்த்தேன்:))
மாற்று பற்றி நான் சொன்னதில் எந்த முரணும் இல்லை என்றெ நினைக்கிறேன்.
சதயம்
பதில் சொல்லக்கூடிய அளவு டீசண்ட்டாக உங்கள் பின்னூட்டம் அமையவில்லை.
வருகைக்கு நன்றி.
குப்பு,
மோசமான கதையை மோசமான கதை என்று கூறியுள்ளேன்.நல்ல கதையை தேடிப்படிங்க.
உதாரணம் எல்லாம் நல்ல உதாரணம்தான் குப்பு:)
வவ்வால்,
நன்றி. நீங்கள் கூறுவது சரிதான்.
//கண்கட்டு வித்தைகாரர்களின் வெற்றிக்கு காரணம் மக்களுக்கு இருக்க கூடிய தீர்க்க முடியாத பிரச்சனைகள்,அவர்களுக்கு ஏற்படும் நம்பிக்கைகுறைவே , இதற்கெல்லாம் சரியான மனோதத்துவ ஆலோசனை வழங்கினால் போதும், ஆனால் நம் நாட்டில் இதிலும் ஒரு குறைபாடு பைத்தியகார டாக்டர் என அவரையே பைத்தியம் ஆக்குவார்கள். பைத்தியம் பிடித்தோர் மட்டும் தான் அங்கே போக வேண்டும் என்ற கருத்தாக்கம் உள்ளவர்கள்.//
ம்..நல்ல கருத்துதான்.
பிரசாதத்தில் லாகிரி வஸ்தா!!!!
பத்த வெச்சிட்டயே பரட்டை
/
நன்றி லக்கிலுக்...
நாம் நிறைய ஒத்துப்போகிறோம் போல
தங்கவேல்,
கண்டிப்பாக இதைப்பற்றி நீங்கள் எழுதவேண்டும்.(ஸ்மைலி போடவில்லை என்பதை கவனிக்கவும்)
நீங்கள் கொடுத்த சுட்டிகள் பயனுள்ளவை.நன்றி
செந்தழல் ரவி,
உங்கள் அனுபவத்தையும் கண்டிப்பாக எழுதுங்கள்.நன்றி.
தருமி,
இதுக்கு தனிப்பதிவுதான் போடணும். பார்க்கிறேன்.
/நன்றி லக்கிலுக்...
நாம் நிறைய ஒத்துப்போகிறோம் போல
/
ரெண்டு பேருமே ஒரே ஆளு தானுங்களே. ஒத்து போகாட்டி எப்படி?
முத்து,
// விமர்சனம் செய்கிறேன், விளம்பரம் செய்கிறேன் என குப்பைகளை கிளறிக் கொண்டிருப்பது பன்றிகளின் வேலை
//
இது ஒன்று தவிர சதயம் சொல்வது டீசண்ட்டாகவே இருப்பதாக தோண்றுகிறது. நீங்கள் பதில் கூறலாமே !!! மற்றபடி, சாயிபாபா குறித்து எனக்கு எந்த ஓர் அபிப்பிராயமும் இல்லை !
//ரெண்டு பேருமே ஒரே ஆளு தானுங்களே. ஒத்து போகாட்டி எப்படி?//
ரெண்டு பேரும் ஒண்ணுதான்ற முடிவுக்கு ஒத்துப் போகாத மாயவரத்தானின் கமெண்ட்..
அப்படி எல்லாம் சொல்ல முடியாது அனானி. அம்பி, ரெமோ மாதிரி ஒரே கேரக்டர் ரெண்டு விதமா ஒரு பக்கம் தே மாங்கா, புளி மாங்கான்னும் இன்னொரு பக்கம் சிவபெருமான் படம் போட்டு எழுதறதும் இங்கே சகஜம்னு உங்களுக்கு தெரியாதா?!
மேற்குறிப்பிட்ட பின்னூட்டத்தில் தே மாங்கா, புளி மாங்கா வார்த்தை பிரயோகம் நன்றி : முகமூடியாரின் வலைப்பதிவு. (சொல்ல மறந்திட்டேன்)
bala,
that one line indicates all the story.
i have answers for his questions.but only if he removes that line.
//ரெண்டு பேருமே ஒரே ஆளு தானுங்களே. ஒத்து போகாட்டி எப்படி? //
எனக்கு உங்ககிட்ட புடிச்சதே இந்த நசைச்சுவை உணர்ச்சிதான்.உண்மையை கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள்.
சைபர் க்ரைம் பிரிவா நீங்?:))
மாயு,
:))
"குப்பையை எடுத்து வெளியே போடு என்றால், குப்பை இருந்த இடத்தில் எதை வைப்பது" என்பது போல உள்ளது மாற்று கேட்பது.
"மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது நமது தேசிய கடமை" என்று நமது அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
இந்த வேலையை சிறப்பாக செய்துவரும் முத்து அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Post a Comment