Monday, November 28, 2005

ஜெயமோகன், சுந்தர ராமசாமி மற்றும் நான்

நேற்று சென்னையில் ஜெயமோகனின் புத்தக வெளீயிட்டு விழா நடந்தது. சுந்தர ராமசாமி இறந்து இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்த நூல் வெளியிடப்படுவது சுந்தர ராமசாமியை விற்பதற்கான முயற்சிதான் என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.திரு.ரவி சீனிவாஸ் கூட இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.திண்ணையில் கூட திரு.பாரதி என்பவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இந்த சர்ச்சையை பற்றி எழுதுவது இந்த பதிவின் நோக்கம் இல்லை.அந்த சர்ச்சையையும் அந்த நூலைப்பற்றியும் இன்னும் பல காலத்திற்கு பலரும் எழுதுவார்கள் பேசுவார்கள் என்பது உறுதி.

அறிமுக இலக்கிய வாசகனான என் பார்வையில் ஜெயமோகனின் உயிர்மை கட்டுரையின் அடிப்படையில் எனக்கு தோன்றிய சில சிந்தனை கீற்றுக்களை பதிவிடலாம் என்பது தான் என் நோக்கம்.

எனது நோக்கில் ஜெயமோகன் சுந்தர ராமசாமி பற்றி ஒரு நூல் எழுத தகுதியானவர்தான். கட்டுரை நெடுக ஜெயமோகன் தன்னை சுந்தர ராமசாமியுடன் ஒப்பிட்டு தன்னை ஒரு சிறந்த படிப்பாளியாக, படைப்பாளியாக மற்றும் இன்னபிறவாக முன்னிலைப்படுத்துகிறார்.அது அவர் எப்போதும் செய்வதுதான். ஏற்கனவே தன்னுடைய விஷ்ணுபுரமும் பின்தொடரும் நிழலின் குரலும் தான் தமிழில் வந்ததிலேயே சிறந்த நாவல்கள் என்று தன்னம்பிக்கையுடன் கூறியவர்.ஆகவே அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஜெயமோகன் தொடர்பாக திண்ணையில் தொடர்ந்து வெளிவந்துக்கொண்டிருந்த கட்டுரைத்தொடர்களை பார்த்து பரவசம் அடைந்து பின்தொடரும் நிழலின் குரலை வாங்கினேன்.கதையின் களத்தை ஒரளவு நன்றாகவே அமைத்த கதாசிரியர் கதையின் நடுப்பகுதியில் நீதிபதியின் சீட்டிலும் தானே வந்து அமர்கிறார்.அங்கேதான் அந்த கதையின் விழ்ச்சி ஆரம்பமாகின்றது.

விஷ்ணுபுரம் நாவலைப்படிக்க நான் துணியவில்லை.அவரே கூறியபடி இந்திய மரபு தெரியாதவர்களுக்கு இந்த நாவல் உவக்காது என்பதால்.இந்திய மரபை கற்கும முயற்சியில் இருக்கிறேன்.ஆனால் பொதுவாக விவாதங்களில் தெரியும் ஜெயமோகனின் அறிவு பரிமாணங்களை அவரது படைப்புகளில் என்னால் காண முடியவில்லை. விவாதங்களுக்கும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களின் பார்வையை நிராகரிக்கிறார்.

ஆனால் இது போல ஒரு நூலை எழுதுவதின் மூலம் தன்னை திரு.சுந்தர ராமசாமியின் இலக்கியவாரிசாக முன்னிறுத்துகிறார் என்று கூறிவிடமுடியாது. சுந்தர ராமசாமியின் பாணியும் ஜெயமோகனின் பாணியும் வேறுவேறுதான்.அவரே கூறியுள்ளபடி உள்ளுணர்வு * தர்க்கமனம்.சுந்தர ராமசாமியின் பாணியை தர்க்கமணம் என்று வரையறுக்கும ஜெயமோகன் தன் பாணியை உள்ளுணர்வு என்று வரையறுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இங்கேதான் இந்த நூல் என்னை பொறுத்தவரை முக்கியத்துவம் பெறுகிறது.

இருவரும் நேர்மாறான கொள்கைகளை உடையவர்கள். ஜெயமோகனே கூறியுள்ளபடி இருவரும் ஒருவரையொருவர் மாற்றவும் முயன்றுள்ளனர்.நேர்பழக்கம் நிறைய கொண்டவர்கள்.சுந்தர ராமசாமியின் கருத்துலகை அவரை அவர் கருத்துக்களை கொண்டாடும் ஒருவர் சொல்வதை விட அவரை நிராகரிக்கும் ஒருவர் பார்வையில் இருந்து சொல்வது பல புதிய பார்வைகளை வாசகர்களுக்கு தரலாம்.ஆயிரம் காரணங்களை சொல்லி ஜெயமோகன் சுந்தர ராமசாமியின் பார்வைகளை நிராகரிக்கலாம். அதற்கு அவர் சொல்லும் காரணங்களை மார்க்சிய பார்வை உள்ள ஒருவர் அலசிப்பார்க்கலாம்.

எழுத்தாளர்களுக்கென்றே தவிர்க்க முடியாமல் வரும் வியாதியின் கூறுகளின்படி அடுத்தவரை சிறுமைப்படுத்தி( அவருக்கு படிப்பு பத்தாது போன்ற விஷயங்கள்) தன்னை முன்னிலைப்படுத்தி சில வாக்கியங்கள் இருக்கின்றன். அது தவிர்க்கமுடியாதது.அடிப்படை சிந்தனைத்திறன் இல்லாமல் ஒருவர் தமிழ் இலக்கிய உலகில் வாசகராக இருக்க முடியாது. அப்படி திறன் உள்ள ஒருவர் இதுப்போன்ற வாக்கியங்களின் முழு அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ளமுடியும்.வேண்டுமென்றால் தவிர்க்கவும் முடியும்.

இனி ஜெயமோகன் கட்டுரையில் என்னை கவர்ந்த ஒரு பகுதியை பற்றி சொல்லி முடிக்கிறேன்.மேற்படி உயிர்மை கட்டுரையில் ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கிவின் கரம்சேவ் நாவலி்ல் வரும் இவான் என்ற கதாபாத்திரத்தை பற்றி எழுதுகிறார்.

"இவான் சுந்தர ராமசாமிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.ஒரு பக்கம் அல்யோஷாவின் களங்கமின்மையின் வசீகரம்,மறுபக்கம் திமித்ரியின் இச்சையின் மூர்க்கம்,இரண்டுக்கும் நடுவே கட்டிய சரடு மீது தன் தர்க்கபுத்தியின்,சிந்தனையின் கைக்கோல் கொண்டு சமன்செய்து நடந்துபோகும் இவான் சுந்தர ராமசாமியின் ஆளுமையேதான்."

சுந்தர ராமசாமியின் பற்றி பலருக்கும் தெரியாத இது போன்ற பல பரிமாணங்களை என்னை போன்ற சு.ரா வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஜெயமோகன் சரியானவர்தான்.


இனி என்னைப்பற்றி கொஞ்சம். தலைப்புக்கு நியாயம் பண்ணணும்ல.தஸ்தயேவ்ஸ்கி பற்றி அதே உயிர்மை இதழில் திரு.எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில் ஓரிடத்தில் அவர் எழுதுகிறார்.

"கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் தனது சகோதரன் அல்யோஷாவிடம் தான் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும், அது சற்றே உரைநடைத்தன்மை கொண்டது என்றும் விவரிக்கிறான்.இவான் எழுதிய கவிதை The Grand Inquisitor கிறிஸ்துவை பற்றியது.கடவுள் பூமிக்கு வருவதை பற்றியது இந்த கவிதை".

இதை படித்த நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் எழுதி இங்கே என்னுடைய பிளாக்கில் வலையேற்றியுள்ள "தேவி தோன்றியபோது" என்ற சிறுகதை இதுப்போல ஒரு கருவை கொண்டதுதான்.ஒரு நண்பர் கூட இதை படிக்கும்போது புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் மற்றும் ஆதவனின் கடவுள் வந்தார் ஆகிய கதைகள் நினைவுக்கு வருகின்றன் என்று பின்னூட்டம் இட்டிருந்தார்.எனக்கு தோன்றியது என்னவெனில் பக்தி மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தோன்றும் ஆசைதான் கடவுள் நேரில் வருவது.அதுதான் தஸ்தயேவ்ஸ்கிக்கு தோன்றியிருக்கிறது.புதுமைபித்தனுக்கு தோன்றியிருக்கிறது.ஆதவனுக்கு தோன்றியிருக்கிறது.எனக்கும்(?) தோன்றியிருக்கிறது.

நான் அடுத்து படிக்கவேண்டியது தஸ்தயேவ்ஸ்கிதான் என்று முடிவு செய்துவிட்டேன். கரமசேவ் சகோதரர்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்த நண்பர்கள் கூறலாம்.அல்லது புத்தகம் வைத்திருக்கும் நண்பர்கள் தந்து உதவலாம்.

நேற்றைய விழா பற்றி எந்த வலைப்பதிவரும் பதிவேற்றவில்லை.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

13 comments:

Anonymous said...

ஆங்கிலத்தில் இணையத்திலேயே கிடைக்கும். குண்டன்பர்க், பார்ட்டில்பை என்பனவறிலே தேடுங்கள்
ராமகிருஷ்ணனுக்கும் ஜெயமோகனுக்கும் தஸ்தயேவ்ஸ்கியிற்கு அப்பால் உலகம் கடந்த பத்துப்பதினைந்து ஆண்டுகளாக நகரவில்லையோ என்று தோன்றவில்லையா?

டிபிஆர்.ஜோசப் said...

உங்க பதிவை படிக்கும்போது இலக்கிய உலகத்தை பத்தி தெரியாத ஞானசூன்யமா இருந்துட்டேனோன்னு தோனுது முத்து.


வேலை, வேலைன்னு இந்தியா முழுசும் அலைஞ்சதுதான் இதுக்கு காரணம்னு நினைக்கிறேன்.

இனிமே நிறைய படிக்கணும்.

Muthu said...

அன்புள்ள அனானி,

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. நல்லாதான் எழுதி இருக்கீங்க.அப்புறம் ஏன் அனானியா வறீங்க? அப்புறம நீங்க சொன்ன விசயங்களை கொஞசம் தெளிவா இந்த ஞானசூன்யத்திற்கு விளக்கமுடியுமா?

Muthu said...

ஜோசப் சார்,

அப்படியெல்லாம் நீங்க ஃபீல் பண்றதுக்கு ஒண்ணும் இல்லை. நானும் சில நாட்களாகத்தான் இலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்துள்ளேன்.அந்த கதையை என்னுடைய இரண்டாவது பதிவில் இட்டுள்ளேன்.(கள் சாராயம் மற்றும நவீன தமிழ் இலக்கியம்).

தேடல் இருந்தால் இலக்கியம் இனிக்கும் சார். அதுவும் உங்களை போல் நிறைய பக்குவமும் அனுபவமும் உள்ள ஆட்கள் இதில் அடிக்ட் ஆயிட்டீங்கன்னா விட மாட்டீங்க.

நானெல்லாம் ஸ்கேல் 2 போதும் என்று முடிவே செய்துவிட்டேன். நான் உங்களுக்கு சில புத்தகம் சஜஸ்ட் செய்யறேன்.படித்து பாருங்கள்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

Gurusamy Thangavel said...

நேற்றைய நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். நிறையக் கூட்டம். உட்கார இடம் கிடைக்கவில்லை. நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன், ஜெயமோகன், உரைகள் எனக்குப் பிடித்திருந்ததன. மற்றபடி, எனக்கு இன்னும் சுந்தர ராமசாமியின் மீதான ஈடுபாடு அதிகரித்தே வருகிறது, சு. ராவே என்னை அதிகம் கவரும் எழுத்தாளர் மற்றும் சிந்தனாவாதி, ஜெ.மோ, சு. ரா வைப்பற்றி எழுதிய புத்தகத்தைப் படித்தபின்பும். மேலும், இது பற்றி என் பதிவில் விரிவாக எழுதலாமென இருக்கிறேன். (சோம்பேறித்தனம் ஒழிக)

Muthu said...

திரு தங்கவேல்,

சோம்பேறித்தனம் ஒழிக....உடனே எழுதுங்க சார்....

மற்றபடி உங்கள் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.(அடப்பாவிகளா புக்கை படிச்சுட்டீங்களா அதுக்குள்ள)

Gurusamy Thangavel said...

விரைவில் எதிர்பாருங்கள். ஊக்கமூட்டுவதற்கு நன்றி.

Anonymous said...

அது கரம"சோவ்" சகோதரர்கள். Brothers Karamazov. தமிழில் வேண்டுமானால் அண்ணா சாலை NCBHல் தேடிப் பாருங்கள்.

Muthu said...

நன்றி திரு சன்னாசி..இணையத்திலேயே ஆங்கிலத்தில் கிடைத்துள்ளது...முயற்சி செய்கிறேன்.

balaji said...

The book is avaialble online at:
http://www.cliffsnotes.com/WileyCDA/LitNote/id-46.html

Anonymous said...

prefect in the play of all to look into this gratis [url=http://www.casinoapart.com]casino[/url] ancillary at the outwit [url=http://www.casinoapart.com]online casino[/url] big wheel with 10's of fond of [url=http://www.casinoapart.com]online casinos[/url]. pains [url=http://www.casinoapart.com/articles/play-roulette.html]roulette[/url], [url=http://www.casinoapart.com/articles/play-slots.html]slots[/url] and [url=http://www.casinoapart.com/articles/play-baccarat.html]baccarat[/url] at this [url=http://www.casinoapart.com/articles/no-deposit-casinos.html]no abandon casino[/url] , www.casinoapart.com
the finest [url=http://de.casinoapart.com]casino[/url] with a shape upon UK, german and all wonderful the world. so after the badge [url=http://es.casinoapart.com]casino en linea[/url] discontinuity us now.

Anonymous said...

You could easily be making money online in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat guide[/URL], Don’t feel silly if you haven’t heard of it before. Blackhat marketing uses little-known or little-understood avenues to generate an income online.

Anonymous said...

top [url=http://www.xgambling.org/]online casino[/url] hinder the latest [url=http://www.casinolasvegass.com/]free casino[/url] manumitted no consign reward at the leading [url=http://www.baywatchcasino.com/]casino games
[/url].