Monday, November 14, 2005

என் வரலாற்று கடமை

குஷ்பு விவகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய முற்போக்குத்தனத்தை எல்லோரும் காட்டிவிட்டனர்(சிலர் தங்கள் பிற்போக்குதனத்தையும்).இதை பற்றி நான் பேசி என்ன ஆகப்போகுது என்றுதான் இத்தனை நாள் நினைத்து இருந்தேன்.நான் என்னுடைய வரலாற்று கடமையை ஆற்றவில்லையென்றால் வருங்கால சமுதாயம் என்னை தூற்றும் என்பதால் நானும் என்னுடைய பிற்போக்குத்தனத்தை காட்டிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

பல புரட்சிகர கருத்துக்களையும்(உண்மையில் அந்த கருத்துக்களிலெல்லாம் தவறு இல்லை..சில ஆலோசனைகளும் உண்டு அதில்) சொன்ன குஷ்பு பின்னர் ஒரு நிருபரின் கேள்விக்கு "இங்கே எத்தனை பேர் கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ் வைச்சுக்கலை என்று எனக்கு தெரிந்தாகணும்" என்றாராம்.அதற்கு அர்த்தம் தமிழகத்தில் பெரும்பாலானோர் கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ் அனுபவம் பெற்றுள்ளார்கள் என்பதுதான்.

ஆண்களுக்கு எப்படியோ பெண்களுக்கு இது கண்டிப்பாக அவமானம் தரும் பேச்சுத்தான். சராசரி தமிழ் பெண் (தமிழ் பெண் மட்டும் அல்ல..சராசரி இந்திய பெண் என்றும் சொல்லலாம்.ஏன் உலக பெண்களை சொல்லவில்லை என்று ஒரு அறிவுஜீவி பின்னூட்டம் இடக்கூடும் அதையும் சேர்த்துக்கலாம்.) இதனால் வருத்தப்படுவதற்குரிய நியாயம் உள்ளது.அது தான் கொஞ்சம் ஓவரான பேச்சு என்று நான் நினைக்கிறேன்.தன் சொந்த வாழ்க்கையை நியாயப்படுத்த அடுத்தவரையும் அசிங்கப்படுத்துவது என்பது பல மனிதர்களின் இயல்பு.குஷ்பு அதில் விதிவிலக்கு அல்ல.

சுகாசினி ஏற்கனவே அறிவுஜீவி என்று பெயர் எடுத்தவர். தன் அறிவை காட்ட தமிழர் கொம்பு என்றெல்லாம் பேசிவிட்டார். தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது என்ற வார்த்தை ரொம்ப ஓவர்.எந்த ஒரு இனத்திற்கும் தங்களை உயர்வாக நினைக்க,பேச உரிமை உண்டு.

அடுத்தவரை கிண்டல் பண்ணியே டைம் பாஸ் பண்ணி பழக்கப்பட்ட தமிழன் கிண்டல் பண்ண ஆள் கிடைக்காமல் தன்னையே யாராவது கேவலமாக நக்கல் செய்தாலும் பல்லை இளித்து ஏற்றுக்கொள்ள பழகி விட்டான்.(அடுத்த கவுண்டமணி படத்தில் கவுண்டமணி செந்திலை போடா தமிழ் தலையா என்று திட்டுவார். தமிழன் அதற்கும் வெடிச்சிரிப்பு சிரிப்பான்)

தமிழர் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னும் கேவலம். தமிழர்களின் ஏகபோக பிரதிநிதியா இவர்? ஆனானப்பட்ட ஜெயலலிதாவே இவ்விவகாரத்தில் பொறுப்பாக கருத்து சொல்லி இருக்கும்போது இவர் ஏன் இப்படி பேசுகிறார்?

3 comments:

tbr.joseph said...

குஷ்பு விஷயமே அனையாத தணலா இருக்கும்போது இந்த சுகாசினி வேற.


இருந்தாலும் யாரு எப்ப என்ன சொல்வாங்களோன்னு காத்துக்கிட்டிருக்காமாதிரி உடனே வாரியல், கொடும்பாவின்னு தூக்கிக்கிட்டு டி.வி. காமிரா முன்னால போஸ் குடுக்கறதுக்குன்னே ஒரு கும்பல் அலையறதத்தான் சகிச்சிக்க முடியல..

பெண்கள்ல அதென்ன தமிழ் பெண், தெலுங்கு பெண்ணுன்னு?

எல்லாருக்குமே கற்புங்கறதும் மானம் மரியாதைங்கறதும் தேவைதானே..

முத்து(தமிழினி) said...

கரெக்ட் சார் அதேதான் நானும் சொல்றேன். எந்த இந்திய பொண்ணுக்குமே அது அவமானம்தான். யாருமே வார்த்தையை விடும்போது பார்த்து விடவேண்டுமல்லவா?
இதெல்லாம் விட்டுற முடியாது சார்.

போராட்டம் யார் பண்றான்னு பாக்காதீங்க... ஏன் பண்றான்னு பாருங்க.குஷ்பு வந்து சொல்ற அளவுக்கு இருக்கா நம்ப நிலைமை. இப்படியே எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா என்ன ஆகும்? இதை போய் வேற ஸ்டேட்ல சொல்லமுடியுமா?

மூர்த்தி said...

நியாயமான ஆதங்கம் முத்து அவர்களே.

தமிழ்வெளியை பார்த்தீங்களா?