Saturday, November 19, 2005

என்னதான் நடக்கிறது இலங்கையில்?

நேற்று நடந்த தேர்தலில் மகிந்தா வெற்றி பெற்றார். இங்கே இந்தியாவில் எங்களுக்கு தெரிந்ததெல்லாம் விக்கரமசிங்கே வெற்றி பெற்றிருந்தால் அமைதி பேச்சுவார்த்தைக்கு
புத்துயிர் கொடுத்திருப்பார். இப்போது விடுதலைபுலிகளும் தமிழர்களும் தேர்தலை புறக்கணித்திருப்பதன் காரணமாக மகிந்தா வெற்றி பெற்றிருக்கிறார். மகிந்தா விடுதலைபுலிகளை எதிர்ப்பவர்.

ஏன் விடுதலைபுலிகள் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள்? இதை அவர்கள எதிர்பார்க்கவில்லையா? அவர்கள் பக்க நியாயம் என்ன?

இங்கே தமிழ் மணத்தில் பல இலங்கையை சேர்ந்த நண்பர்கள் பதிவிடுகின்றனர்.பல விஷயங்களை எழுதுகிறார்கள். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதிவை யாராவது இடுவார்களா?

20 comments:

Anonymous said...

Tamil Tiger boycott helps PM to victory PRINT FRIENDLY EMAIL STORY
AM - Saturday, 19 November , 2005 08:23:25
Reporter: Geoff Thompson
ELIZABETH JACKSON: A Tamil Tiger election boycott has helped Sri Lanka's Prime Minister narrowly win the country's presidential poll.

It appears to be an ironic move for the Tiger rebels as the winner, Mahinda Rajapakse, is allied to hardline Marxists and nationalists who detest the Tigers.

Opposition leader Ranil Wickremesinghe, who had brokered the 2002 ceasefire with the Tigers, is now calling for fresh voting in the northern rebel territories.

Sri Lanka's stockmarket, which was expecting the free-market proponent Wickremesinghe to win, plunged more than six per cent on the news.

I spoke to our South Asia Correspondent Geoff Thompson a short time ago and asked him why the Tamil Tigers boycotted the election.

GEOFF THOMPSON: Most observers agree that the reason they boycotted the election is because they were frustrated with Ranil Wickremesinghe during his time as Prime Minister. Okay, he entered into a ceasefire and progressed with peace talks with the Tigers, but in the end nothing was achieved.

And I think the Tamil Tigers feel that given that they've got sort of inter-faction fighting going on at the moment, they're quite weak on the international stage, they've been more or less condemned by the European Union after the assassination of Lakshman Kadirgamar, the Foreign Minister of Sri Lanka.

They're not on a strong footing, so this buys them time to sort out their own mess, first of all, and also it gives an opportunity for the hardline Mahinda Rajapakse – who won the presidential election – to be perceived perhaps as the bad man, the man that will not come to the peace table, and that may give them the moral high ground yet again.

ELIZABETH JACKSON: What are the implications, Geoff, for the peace process now, given this result?

GEOFF THOMPSON: Well the peace process has now been long-stalled.

Ranil Wickremesinghe, who lost, was talking about returning to the peace talks, about kick-starting a process which is just essentially non-existent, and in fact it's been quite a violent time.

Since 2002 we've seen killing, violent killings in the country, almost doubled each year, up until now. And Mahinda Rajapakse, now the President, says that he wants to review the peace process and the ceasefire arrangement.

We're not exactly sure that that means, but he talks about things such as meeting with Velupillai Prabhakaran, the leader of the Tigers, face to face. But it's easy to say that, but this has never happened before. He's never met with any political leader in Sri Lanka in the past, so there's no reason it will happen now.

ELIZABETH JACKSON: Now why did the stockmarket take a tumble?

GEOFF THOMPSON: Well essentially because the stockmarket was banking on a Ranil Wickremesinghe win. You've got to remember that essentially he was the right-wing candidate, in the sense that he was certainly in favour of market reform, he was in favour of direct investment, foreign direct investment. He managed to slash inflation quite significantly in his time in the prime ministership, up until just a few years ago.

So there was a feeling and a hope that he would return to some prominence in the country and turn the situation around. But that hasn't happened, and now you have Mahinda Rajapakse, he was quite a left-leaning socialist-nationalist candidate who is anti-foreign investment, and that is not good news to the stock market in Sri Lanka.

ELIZABETH JACKSON: Our South Asia Correspondent Geoff Thompson speaking a short time ago from Sri Lanka.

Anonymous said...

'பிரபாகரன் உரையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிறிலங்கா': சி.என்.என்.

இலங்கைத் தீவில் சிறிலங்கா அரச தலைவர் பொறுப்பேற்பவருக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கனத்த செய்தி காத்திருக்கிறது என்று சி.என்.என். ஊடகம் தெரிவித்துள்ளது.


சிறிலங்கா அரச தலைவர் தொடர்பாக சி.என்.என். வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை மகிந்த ராஜபக்ச எதிர்க்கிறார். முன்னைய யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்த போது நோர்வேயை அனுசரணையாளராக அழைத்து அமைதிப் பேச்சுகளை ரணில் விக்கிரமசிங்க தொடங்கினார்.

இருப்பினும் 2003 ஆம் ஆண்டில் அமைதிப் பேச்சுகளில் விடுதலைப் புலிகள் விலகிக் கொண்டனர். அதன் பின்னர் இருதரப்பினரும் யுத்த நிறுத்த மீறல் தொடர்பாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தாம் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் அமைதிப் பேச்சுகளை மீளத் தொடங்குவதாகவும் அமைதியை கொண்டுவருவதாகவும் சந்திரிகா குமாரதுங்கவின் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரச கொண்டு வருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் எவரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று நவம்பர் 10 ஆம் நாளன்று விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு வெளியானதில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

தென்னிலங்கையில் அமைகிற அரசுகள் எதுவும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர்.

சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச இருந்தபோதும் அவரது பல தேர்தல் நிலைப்பாடுகளால் அவரது சொந்தக் கட்சியின் அரச தலைவரான சந்திரிகா குமாரதுங்கவுடன் முறுகல் நிலை ஏற்பட்டது.

ஜே.வி.பி.இ மற்றும் பெளத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவுடன் மகிந்த ராஜபக்ச தேர்தல் உடன்பாடு ஏற்பாடு செய்து கொண்டதும் அந்த முறுகலுக்கான காரணங்களில் ஒன்றாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆழிப்பேரலைக்கான பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்த முனைந்தமைக்காக சந்திரிகா குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலிருந்து ஜே.வி.பி. வெளியேறியது. அதன் பின்னர் நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது சிறுபான்மை அரசாக இயங்குகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக எந்த ஒரு நிவாரணமும் சென்றடைகின்ற வகையிலான கட்டமைப்பும் கைவிடப்படும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

அதேபோல் விடுதலைப் புலிகளுடான அதிகாரப் பகிர்வு விடயத்திலும் மகிந்தவுக்கும் சந்திரிகாவுக்குமான முறுகல் ஏற்பட்டது. மக்களின் ஒப்புதலைப் பெற்றே எந்த ஒரு அதிகாரப் பகிர்வையும் தாம் நடைமுறைப்படுத்துவேன் என்று மகிந்த ராஜபக்ச கூறி வருகிறார். இது கூட்டாட்சி அதிகார முறை குறித்து பேசுகிற ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டுக்கு எதிரானதாகும்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டை சந்திரிகா குமாரதுங்க கடுமையாக பொதுமேடைகளில் விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வெற்றி பெறுகிறவருக்கு ஒரு கனத்த செய்தி காத்திருக்கிறது.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் எதிர்காலச் செயற்பாடுகளை அறிவிப்பார்.

விமானப் படை உள்ளிட்ட இராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்கும் பிரபாகரன், சிறிலங்காவின் புதிய அரச தலைவருக்குச் சொல்லப் போகிற செய்தி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டுக்குள் தீர்வா அல்லது கூட்டாட்சி முறையிலான தீர்வா அல்லது வேறு ஒரு கோரிக்கையா என்று பிரபாகரன் அந்த உரையில் தெரிவிக்கக் கூடும் என்று சி.என்.என். செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நற்கீரன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

முத்து.. உண்மைதான்.. அதாவது தமிழ்மக்கள் வாக்களித்திருந்தால்.. ஒப்பீட்டளவில் ஆதரவாக ரணிலுக்கு வாக்களித்திருப்பார்கள். மகிந்தவின் வெற்றிக்கு காரணம் தமிழ்மக்களின் வாக்குகள் தான்.

ஆனால் தமிழ் மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்தி தமக்கும் சிறிலங்கா அரச தேர்தலுக்கும் சம்பந்தமேதும் இல்ல என காட்டியிருக்கிறார்கள்.

புலிகளை பொறுத்த வரை.. இனவாதியான மகிந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என விரும்பியதன் ஊடாக சிங்கள இனவாத முகத்தை உலகின் முன் நிறுத்த முயன்றிருக்கிறார். வரும் 27 திகதி அவரின் உரையை கேட்டால் தான் மிகுதி புரியும்..

Anonymous said...

Rajapakse will need to moderate if he seeks peace
By M.R. Narayan Swamy

A deeply divided Sri Lanka has chosen a known Sinhalese hardliner as its new president - but by the narrowest margin in the country's history. This itself is the first clear pointer that Mahinda Rajapakse, the current prime minister, will urgently need to shed some of his ethno-religious rhetoric and moderate himself if he wants lasting peace in his country.

The just over 50 percent of the votes Rajapakse got to grab the presidency against great odds is primarily due to the tactical mind of Velupillai Prabhakaran. The LTTE chief decided it would be easier to deal with a brazenly Sinhalese foe than someone like Ranil Wickremesinghe, who is more acceptable to the Tamils and a Western world intent on restarting the stalled peace process.


In contrast to Wickremesinghe, who as prime minister signed a path breaking, even if flawed, peace pact in 2002, Rajapakse feels the peace process has ended up cementing the LTTE. He is also ranged against Norway, the mediator. His fervent backers are JVP, a Sinhalese-Marxist party, and JHU, a party of Buddhist monks. Both JVP and JHU articulate the views of the Sinhalese majority in a country where Tamils, the minority, have traditionally complained of discrimination.


All this puts him in the firing line of LTTE, which declared its opposition to Tamils taking part in Thursday's presidential election saying both Rajapakse and Wickremesinghe were two sides of the Sinhalese coin. The LTTE stand effectively killed the prospects of a Wickremesinghe victory because it ensured that Tamils in the country's north and east who may have supported him never dared to vote.


Amid a virtual boycott by most Tamils, Rajapakse sneaked past Wickremesinghe by a wafer thin margin.


Prabhakaran would have ensured this with only one thing in mind: a Rajapakse victory is bound to strengthen the hands of Sinhalese hardliners and in the process give oxygen to the struggle for an independent Tamil Eelam state.


Prabhakaran, who will give his annual address Nov 27 as part of 'Heroes' Week', is unlikely to make peace with a Sinhalese-Buddhist hardliner. It is an ideology and mindset he has fought for over three decades. To push Rajapakse into an embarrassing corner, the LTTE chief will demand major concessions - if Colombo wants to restart peace talks stalled since April 2003. Wicremesinghe may have conceded Prabhakran's demands. Rajapakse will not - or cannot, at least easily - because of the JVP-JHU crutch. In the process, the LTTE will tell the world that it is Rajapakse, or the Sinhalese state, that is intransigent, not the Tigers.


If Rajapakse, like some of his predecessors earlier, decides to backtrack, he will be dubbed a 'betrayer' by Sinhalese hardliners, now his friends. At the same time, the new president will find that with his slender majority, it will not be easy to run the country - or even win any fresh parliamentary election.


'I am not a candidate for war, but it has to be an honourable peace,' Rajapakse said as the election results came in. That is easier said that done. If he wants to arrest the current dangerous levels of violence and bring lasting peace, the president will have to stop acting like a Sinhalese-Buddhist hardliner. If he does not, Sri Lanka will be in for troubled times.


At a time when Prabhakaran is fuming over the European Union curbs on his group following foreign minister Lakshamn Kadirgamar's assassination, intransigence on the part of Colombo will only mean more violence and more killings - even if there is no outright war. It is going to be tough for Rajapakse.


(The author is a Sri Lanka watcher and the author of two books on the Tamil Tigers.)

Anonymous said...

அமைதிப் பேச்சுக்கள் என்ற பெயரில் ரணில் செய்த சதிகளின் பட்டியல்: மிலிந்த மொறகொட ஒப்புதல் வாக்குமூலம்!!

அமைதிப் பேச்சுக்கள் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு உருவாக்கியதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்ததும், அமைதிப் பேச்சுக்களினூடே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழித்ததும் நாம்தான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவும், கடந்த காலங்களில் அமைதிப் பேச்சுக்களில் சிறிலங்கா அரச பிரதிநிதியாகவும் பங்கேற்ற மிலிந்த மொறகொட அளித்துள்ள நேர்காணலில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த மொறகொட அளித்துள்ள நேர்காணல் விவரம்:

சிங்களத் தீவிரவாதிகள் சொல்வது போல் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் நாட்டினது பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படவில்லை. மாறாக எமது ஆட்சிக்காலத்தில் வலுவாக இருந்தது. அமைதிப் பேச்சுக்களை நாம் நடத்திக் கொண்டிருந்த போதும் விடுதலைப் புலிகளின் இரு வர்த்தகக் கப்பல்களை கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அழித்தோம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் நாம் முழுவீச்சில் செயற்பட்டோம். விடுதலைப் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை நமது கடற்படை இடைமறித்தது.

ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினது செயற்பாடுகளில் குறுக்கீடுகள் இருந்ததாக கேள்விப்பட்டோம்.

இராணுவத்தினது எண்ணிக்கையை நாம் குறைக்கப் போவதில்லை. உண்மையில் நமது இராணுவத்துக்கு கூடுதலான படையினர் தேவை. நாம் அரசு அமைத்தால் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவ ஆய்வாளர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே நமது இராணுவ வலிமை அதிகரிக்கப்படும். ஆனால் இந்த விடயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்க, இந்தியப் படைகளை நாம் களம் இறக்க உள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச பாதுகாப்பு வலையத்துடன் சிக்க வைத்துள்ளோம். அதன் மூலமாக அவர்கள் மீண்டும் ஒரு யுத்தத்துக்குத் திரும்புவது தடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக அமைதி ஒப்பந்தம் நீடிப்பது என்பதும் சர்வதேச பாதுகாப்பு வலையத்தில் இப்போது நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அப்படி இல்லாது இருந்தால் நாம் மீண்டும் யுத்தத்துக்குத் திரும்பியிருப்போம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை ஒவ்வொருவரும் குறை சொல்கிறார்கள். ஆனால் அது தொடர்பில் எதுவும் செய்ய எவரும் முன்வரவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தால் யுத்தம்தான்.

அமைதி முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்களுக்கமைய நாம் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வோம். அதில் எதுவித சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யுத்த காலத்தில் பிளவை ஏற்படுத்தியிருக்க முடியாது. அதற்கான சரியான சூழலை உருவாக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே கருணாவை ஆதரித்து வலை விரித்திருந்தோம். துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்து, வீதிகளைத் திறப்பது, வீதித் தடைகளை நீக்குவது போன்ற செயற்பாடுகள் மூலம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் கொடூரத்துக்கு மாற்றுச் சூழலை நாம் உருவாக்கி கொடுத்துள்ளோம்.

தற்கொடைதாரியாக செயற்படக் கூடியவர் கூடிய இந்த சூழ்நிலைகளை அவதானிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை தனது மரணம் குறித்து யோசிக்க நேரிடும். மற்ற பிரஜைகள் போல் நாமும் உரிய வாய்ப்புகளை வாழ வேண்டும் என்றுதான் கண்டிப்பாக சிந்திக்கத் தூண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தாக்குதல் நடத்தும் ஆயுதக் குழுக்கள், கருணா குழுவுக்கு சிறிலங்கா புலனாய்வுத் துறையினரது ஆதரவு இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுவது உண்மைதான். ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஆயுதக் குழுக்களை களையவில்லை என்பதை மறுக்கிறோம். கிழக்கு மாகாணத்தில் அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவே அதை பார்த்தோம்.

"கருணா" என்பது அமைதி முயற்சிகளினால் உருவாக்கப்பட்டது. எமது வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கருணா குழுவுடன் நாம் செய்ய வேண்டிய சிலவற்றை கண்டிப்பாக செய்வோம் என்றார் மிலிந்த மொறகொட.

வசந்தன்(Vasanthan) said...

மகிந்த ஒருபுறமிருக்க, ரணில் வருவதை விரும்பவில்லை.
தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணித்தால் மகிந்ததான் வருவார் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனாலும் அதிகவித்தியாசமில்லாமல் கடும்போட்டிக்கு மத்தியில்தான் மகிந்தவால் வெல்ல முடிந்திருக்கிறது. பத்ரியும் ரணிலுக்கான சந்தர்ப்பம் அதிகமாக இருப்பதாகச் சொல்லியபோதே அதை மறுத்துக் கருத்துச் சொல்லப்பட்டது.
ஒப்பீட்டளவில் மகிந்த தன் பிரச்சாரத்தில் தெளிவாகவே இருந்தார். எந்த வாக்குகளைக் குறிவைப்பதென்று அவர் தீர்மானமாகவேயிருந்தார். நீண்ட நாட்களுக்குமுன்பேயே சிறுபான்மையினரின் வாக்குகள் தனக்குக் கிடைக்காதென்பைப் புரிந்துகொண்டார். ஆனால் ரணில் இருபக்கமும் ஊசலாடிக்கொண்டிருந்தார். சிங்களவரைத் திருப்திப்படுத்த கடைசிநேரத்தில் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் விசனம் தரத்தக்க உரைகளை அவரும் அவரது கட்சியினரும் நிகழ்த்தினர். புலிகளை அழித்தது, கப்பல்களை அழித்தது, கருணா பிளவு என்பவற்றைத் தாமே செய்தது என்று இறுதிநேரத்தில் சொல்லத் தொடங்கினர்.
இருந்தும் மிகப்பலமான போட்டியை மகிந்தவுக்குக் கொடுக்க அவரால் முடிந்திருக்கிறதென்பது என்னைப்பொறுத்தவரை ஆச்சரியம்தான். வடகிழக்குத் தமிழர்கள் முழுமையாக வாக்களிப்பிற் கலந்துகொண்டிருந்தால் ரணிலின் வெற்றி நிச்சயம். வடகிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களின் வாக்குகள் ரணிலுக்குத்தான் போயிருக்குமென்பதிலும் ஐயமில்லை.

ஆனால் ரணில் வந்திருந்தால் சமாதானம் வந்துவிடுமென்று நம்பிக்கொண்டிருப்பது தான் வேடிக்கையும் வேதனையும்.

Muthu said...

அப்போ பேச்சுவார்த்தையில எந்த தீர்வும் வராது என்பது எல்லா தரப்புக்கும் தெரிந்துதான் இருக்கிறது இல்லையா?

புலிகள் தலைவர் மீண்டும் துப்பாக்கி தூக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெறும் ஆயுத புரட்சி மூலமே மட்டும் தாங்கள் நினைப்பதை அடைந்துவிட முடியுமா புலிகள்? அதுவும் வன்முறை எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்ற இன்றைய சூழ்நிலையில்.

ஐரோப்பிய யூனியனையையும் பகைத்து கொண்டாயிற்று.என்னவோ போங்கள். நாங்கள்
எல்லோரும் மிகவும் வருத்தப்படுகிறோம்.

Muthu said...

நன்றி மக்களே! முத்து உங்களுக்கும்தான்.
இந்த தேர்தலைப் பற்றி யாரேனும் விரிவாக எழுதுவார்கள் என்று நினைத்து இதைப்பற்றிய விரிவான பதிவுக்காக 3 நாளாய் தமிழ்மணத்தில் தேடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் இது குறித்தான தமிழீழத்தவரின் மௌனம் விளங்காது குழம்பியிருந்தேன். இப்போது சிறிது விளக்கம் கிடைக்கிறது.

தமிழீழத்தவர் என்று சொல்லக்காரணம் இந்திய தேர்தலின் போது வந்த பதிவுகளை ஒப்பிடுகையில் அவர்கள் இலங்கையையும், இத்தேர்தலையும் தங்களுடையதாகவே நினைக்கவில்லை போல் தோன்றுகிறது. ஆனாலும் பதிவர்களின் இந்த முழுமையான பாராமுகம் (அ) முழுமையான புறந்தல்லல் மிகுந்த வியப்பளிக்கிறது. ஜனநாயகம் ஒரு பதிவை போட்டிருந்தாலும் அது வேறு விவரங்களை சொல்கிறது. மேலும் ஏதோ ஒருபக்கம் முழுமையாக சாய்ந்திருப்பது போலிருக்கிறது.

முத்து மீண்டும் போர், மீண்டும் பல இழப்புகள் என்பது வருத்தம் தான். நண்பர்களே இதுகுறித்தான மேலும் விவரங்களை பதிவிடுங்களேன். எங்களுக்கு இன்னும் சிறிது புரிதல்கள் கிடைக்ககூடும். [இலங்கை தொடர்பாக இணையப் பக்கங்களில் படிக்கலாமென்றால் பெறும்பாலும் அவை ஒரு பக்கத்தை மட்டுமே சொல்கின்றன:-( ]

Muthu said...

THANK YOU CHOLANAADAN..I TOO EXPECT MORE VIEWS FROM SRILANKAN TAMILS

Anonymous said...

முத்து.. இந்த தேர்தல் தொடர்பாக புலிகள் தமது அக்கறையின்மையை வெளிக்காட்டியிருக்காவிடில், தமிழ் மக்களின் அனைத்து ஓட்டும் ரணிலுக்கு தான் விழுந்திருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழினமுமே.. ரணில் வந்திருந்தாரானால் யுத்தம் நடைபெறாது இருக்க கூடும். ஆனால் தமிழர்களுக்கான நிரந்தர சமாதானமும் கெளரவமான அமைதியும் கிடைத்திருக்காது. மகிந்த வெற்றி பெறுவதன் மூலம் சிங்கள இனவாத மையத்தை ஆட்சியிலல் இருத்தி அதன் தமிழர் இனவிரோத முகத்தை வெளிச்சப் படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழருக்கான கெளரவ வாழ்வை மீட்டெடுக்க வேண்டும் என்று புலிகள் முடிவெடுத்து விட்டார்கள் போல படுகிறது.

உண்மையில் மக்கள் இத்தேர்தலில் ரணிலுக்கு வாக்களித்திருப்பின் நிரந்தர சமாதானமற்ற, கெளரவமான அமைதியற்ற நீண்ட இழுபடுகின்ற பேச்வார்த்தைகளுடனான அதே நேரம் சண்டையற்ற ஒரு சூழ் நிலையை தக்க வைத்திருக்க முடியும்.

ஆனால் மக்கள் சண்டையற்ற ஒரு சூழ்நிலையிலும் பார்க்க நிரந்தர சுயமரியாதையுள்ள தம்மை தாமே ஆளக்கூடிய ஒரு தீர்வையே விரும்புகிறார்கள் என்பது தெளிவு..

வன்னியன் said...

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பகைத்தது, அமெரிக்காவைப் பகைத்தது, இந்தியாவைப் பகைத்தது என்று நிறைய அடுக்கிக் கொண்டு போகலாம். ஆனால் ஈழப்பிரச்சினை தொடர்பான அவர்களின் பார்வையென்ன?
சமாதானம், தீர்வு என்பதெல்லாம் வெறும் பசப்பு வார்த்தையென்று கடந்த 4 வருடங்களில் கண்டாயிற்று. ஒரேயொரு உதாரணம். சர்வதேசத்தின் அங்கீகாரத்துடன் இருதரப்புக்குமிடையில் அமைக்கப்பட்ட சுனாமிப் பொதுக்கட்டமைப்புக்கு என்ன நடந்தது?
6 மாதங்கள் கூடிப்பேசி இழுபட்டு ஒரு வழியாக நிறுப்பட்ட அமைப்பை வெறும் 2 நாட்களில் சிங்களத்தரப்பால் தூக்கியெறிய முடிகிறது. சர்வதேசமும் இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு நிறுவப்பட்ட பின்னர் உலகநாடுகள் பல நடந்துகொண்ட விதமும் (சட்டத்தைக்காட்டி) தெளிவாக ஒரு சேதியைச் சொன்னது. நேரடியாக அக்கட்டமைப்புக்கு தங்களது நிதியுதவிகள் எதுவும் வழங்கப்படமாட்டாதென அவை அறிவித்தன. அரசிடம் மட்டும்தான் வழங்குவார்களாம். அரசின் மீது நம்பிக்கையில்லாமலும், பெரும்பகுதி அரசகட்டுப்பாட்டில் இல்லையென்பதாலும் விரைவாக புனரமைப்புக்களைச் செய்ய வேண்டியதென்பதாலும்தான் இக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பின்னும் அரசிடம் மட்டும்தான் உதவி வழங்குவோம் என்று அவ்வமைப்புக்கள் சொன்னதன்மூலம் ஆறுமாதகால பேச்சுவார்த்தையைக் கேலி செய்தார்கள். ஈழத்தமிழர்கள் எவ்வளவு மடையர்கள்?

இப்போதுள்ள பிரச்சினை சிறிலங்கா அரசமைப்புச் சட்டம்தான். அச்சட்ட அமைப்புக்கு எதிராகத்தான் தமிழ்மக்களின் போராட்டம். அப்படியிருக்க அச்சட்டத்தை வைத்துக்கொண்டு அதன் வரையறைகளுக்குள் தீர்வு காண்போமென்று அரசு சொல்வதும் மற்றவர்கள் அதை ஆமோதிப்பதும் கேலிக்கூத்து. இது தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பது. இப்போதுள்ள சட்ட அமைப்பை வைத்து பொதுக்கட்டமைப்பையும் இடைக்கால நிர்வாக சபையையும் சட்ட ரீதியாக இல்லாமற் செய்ய முடிகிறது. பிறகென்ன பேச்சுவார்த்தை?
அவர்களுக்குத் தேவையானதென்றால் அரசமைப்புச் சட்டத்தை மீறி காரியங்கள் ஆற்றலாம். ஆனால் தமிழர்களுக்கு ஆதாயமேதும் வந்தால் அதை நிறுத்தலாம். இன்றைய யுத்த நிறுத்த உடன்படிக்கை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டதே. தங்கள் பொருளாதாரம் செழிக்க, தங்கள் படைத்தரப்புத் தோல்விகளை நிறுத்த உடனடியாக சிங்களத்தரப்புக்குத் தேவைப்பட்டது யுத்தநிறுத்தம். இன்றுவரை அது தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதனால் சட்டத்தை மீறியாயினும் ஒரு யுத்தநிறுத்தம் சிங்களத்தரப்புக்குத் தேவையாயிருக்கிறது.

சண்டை தொடங்கப்படுமா இல்லையா என்பதல்ல பிரச்சினை. எந்தச் சிங்களத்தலைவர் மீதும் நம்பிக்கை அறவேயில்லாத நிலைதான் இது. ரணில் ஏதோ சமாதானப் பாதுகாவலன், அவர் தமிழர்கள் மேல் அன்புகொண்டிருக்கிறார், அவரால் தீர்வு பெற்றுத்தர முடியும் என்றெல்லாம் யாரும் நம்பினால், கருத்துச் சொன்னால் எம்மால் சிரிக்கவே முடியும்.
------------------------------------------------------
ரணில் ஒற்றையாட்சியை விட்டு சமஸ்டி பற்றிப் பேசலாமென்றார்.
ஆனால் ராஜபக்ஷ, தெளிவாகவே தனது பரப்புரையில் சமஷ்டியை ஏற்றுக்கொள்ள முடியாது, ஒற்றையாட்சி முறைக்குள்தான் தீர்வு என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

அதே ராஜபக்ஷ இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கும் நிலையில், நீங்கள் சொல்லும் அதே ஐரோப்பிய யுனியன் உள்ளிட்ட சர்வதேச சக்திகள் என்ன சொல்லப்போகிறார்கள்?
ராஜபக்ஷவின் நிபந்தனைக்குட்பட்டு அவரோடு பேசி ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வைக்காணுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை சொல்லப்போகிறார்களா? அவர்களின் கருத்தையறிய ஆவலாயிருக்கிறேன். கூடவே இந்தியாவின் கருத்து இவ்விடயத்தில் எப்பிடியிருக்கப்போகிறதென்றும்.

எவனும் தமிழர்களுக்கு ஆதரவாக எதுவும் சொல்லப்போவதில்லை. தாங்கள் நினைத்ததை எங்கள் மீது திணிப்பதற்குத்தான் இருக்கிறார்கள்.
-----------------------------------
மேலும் சோழநாடன், சொல்வதிலும் ஓரளவு உண்மையிருக்கிறது. "இது சிறிலங்காவின் தேர்தல் தானேயன்றி, எங்களதன்று" என்ற நிலைப்பாடும் உணர்வும் எங்களிடமுண்டு.

Anonymous said...

வணக்கம் முத்து. இந்த தேர்தலின் மூலம் தமிழ்ர்களுக்கு எந்த தீர்வும் கிடைத்துவிடாது என்பது கடந்த கால தேர்தல்கள், ஜனாதிபதிகள் மூலம் கிடைத்த படிப்பினை. ரணிலுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் சமாதானம் நிலைத்திருக்குமே என நம்புவது , இறுதியில் ஏமாற்றத்தையே தரும் என்பது எமது நாட்டு கடந்த காலத்தை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு புரியும். ரணில் பிரதமராக இருந்து அமைதிமுயற்சியில் ஈடுபட்ட காலத்தில் உறுதியாக எந்த தீர்மானத்தையும் நடைமுறைபடுத்தாது இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடித்து எப்படியாவது போராட்டத்தை மழுங்கடிக்க செய்வதில் குறியாக இருந்தார். ஜனாதிபதியாக வந்திருந்தாலும் சண்டை இருந்திருக்காதே தவிர அவர் எந்த தீர்வையும் தராது காலத்தை இழுத்தடித்து இன்னும் எமது நிலையை பாதகமாக்குவதிலே குறியாக இருந்திருப்பார். ஆனால் மகிந்தவெற்றி பெற்றால் அவர்களது சுயரூபம், தமிழ்ர்களுக்கு எதையுமே கொடுக்ககூடாதெனும் எண்ணப்பாடு வெளிப்படையாகவே தெரியகூடியதாக இருக்கும். ரணிலின் இறுதிகுறிக்கோளும் அதுவாக இருந்தாலும் அதை அவர் வெளிப்படையாக வெளியிட்டாது மறைமுக காய் நகர்த்தலில் இறங்கி இருந்தார்.
மகிந்த வின் பாணி தமிழர்களுக்கு எதிர் என்பதில் ஓரளவு வெளிப்படையாக இருந்தது. ஆனால் பதவிக்கு வந்த பின் அவரால் (மகிந்த) அதே வகையான வெளிப்படைக புலிகளுடனான உடன்பாட்டை விரும்பாதவர் ஆக காட்ட முடியுமா என்பது கேள்விக்குரியது?

வன்னியன் said...

குறிப்பு:
"தேர்தலில் யார் வென்றாலும் பரவாயில்லை, எமக்கு அது தேவையில்லாதது" என்ற நிலைதான் தமிழர்தரப்பின் நிலையென்று நான் சொல்ல மாட்டேன். தனிப்பட்ட ரீதியில் மகிந்த வெல்வதை மிகவும் விரும்பியவன், அதே விருப்பத்தைத்தான் தமிழர் தலைமையும் கொண்டிருந்திருக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் அதைத் தெளிவாக் காட்டின.

கடைசிநாளிற்கூட இரண்டுதடவை அவசரஅவசரமாக ரணிலின் தூதுவருடன் நடந்த சந்திப்பின் பின்னரும், தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. புலிகள் மாறிவிட்டார்கள், ரணிலுக்கு ஆதரவளித்தார்களென்ற செய்திக்குக் காட்டமான மறுப்பையும் அளித்திருந்தார்கள். அதைவிட மகிந்த பற்றி எதுவுமே கூறாமல் ஆனா ரணிலைக் கடுமையாக விமர்சித்துப் பரப்புரையொன்றைப் புலிகள் மேற்கொண்டிருந்தார்கள்.
-----------------------
இன்னொரு விசயம்.
இத்தேர்தலில் பெரும்பான்மைச் சிங்களவரின் நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிட்டது. ரணிலுக்கு வடக்குக் கிழக்கைத் தவிந்த சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைத்தன.(முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள், கொழும்புத்தமிழர்கள்).
மிகிந்தவுக்கு விழுந்த வாக்குகள் சிங்களவர்களதே.

Muthu said...

பேச்சுவார்த்தையெல்லாம் கூட ரணில் மூன்றாம் நாட்டை (நார்வே) வைத்துத்தானே நடத்தினார்.இந்த மாதிரி சென்சிட்டிவ் விஷயத்தை ராஜீவ்காந்தி மாதிரி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று டீல் செய்ய முடியுமா? அதனால் நிலைமையை உணர்ந்து மெல்ல நடத்தியிருக்கலாம இல்லையா?

ஓட்டு வித்தியாசம் கொஞ்சம்தானே.இதை வைத்து பெரும்பான்மை சிங்களவரின்
நிலைப்பாடு தெரிந்துவிட்டதென கூறுவது சரியா என்ன?

வன்னியன் said...

வாக்கு வித்தியாசம் கொஞ்சம்தான். ஆனால் ரணிலுக்குக் கிடைத்த ஓட்டுக்களில் கணிசமானவை சிங்களவர்களல்லாதவரின் வாக்குகள். மலையகத் தமிழர்கள், தென்னிலங்கைத்தமிழர்கள், முஸ்லீம்கள் என்று ஏராளமான வாக்குகள் ரணிலுக்கு விழுந்தன. ஆனால் ராஜபக்ஷ முழுவதும் சிங்களவர்களின் வாக்குகளை வைத்தே வென்றார். ரணிலுக்குக் கிடைத்த சிறுபான்மையினரின் வாக்குகளை விட்டுப்பார்த்தால், சிங்களவரிடமிருந்து அவர் பெற்ற வாக்குகள் மகிந்தவுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவாகும்.
சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றுக்கூட ரணிலால் வெல்ல முடியவில்லையென்றால் என்ன கருத்து? தேர்தலைப் புறக்கணித்தது வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் பெரும்பகுதி மட்டுமே. (அதிலும் 20000 வாக்குகள் மன்னாரில் மட்டும் ரணிலுக்கு விழுந்திருந்தன)

மூன்றாம்தரப்பு இருந்ததுதான். பேச்சுவார்த்தைக்கான இடத்தை ஒழுங்குசெய்வதைத்தாண்டி அவர்களுக்கு அங்கே பங்களிப்பு ஏதுமிருந்ததாய்த் தெரியவில்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசபடையல்லாத ஆயுதக்குழு இயங்குகிறது, அவர்கள்தான் புலிகளைக் கொல்கிறார்களென்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு அறிவித்தபின்னும் மூன்றாந்தரப்போ மற்ற சக்திகளோ என்ன செய்தன?
நடக்கும் கொலைகள் மட்டில் எதுவும் அவர்களால் செய்யமுடியாது. அதுதான் நிலமை.
பொறுமையாக் கையாள வேண்டியதென்பது, ஆதிக்கவாதிகளின் விருப்பம். 4 வருடமாக எதையும் தராது இழுத்தடித்துவிட்டது யாரின் வெற்றி? இதில் யாருக்குப் பாதகம்? யாருக்குச் சாதகம் என்று பார்த்தால் பொறுமையான அணுகுமுறையின் அபத்தம் புரியும்.

P.V.Sri Rangan said...

2005 இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்
'தமிழர்களை கடவுள் வந்தாலும் இனிமேல் காப்பாற்ற முடியாது'


1970ம் ஆண்டில் தமிழர்களின் தேசிய தந்தை என வர்ணிக்கப்பட்ட எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் அன்று உதிர்த்த பொன்னான கூற்று மீண்டும் இன்று ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? அவர் இதைச் சொல்லி 35 வருடங்களின் பின்னர் அந்தக் கூற்றை சிறு திருத்தத்துடன் இன்று நாம் இப்படித்தான் எழுதியாக வேண்டும். ஏனெனில் நாம் இன்று இருக்கும் உண்மையான நிலைமை இதுதான்.


இந்த அரசியல் தவறானது அடுத்து வந்த 17 வருட (1977-1994) ஆட்சியில் சிறுபான்மைத் தமிழர்களுக்கும். மலையகத் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக சிங்களப் பேரினவாத அடிப்படையில் யூ.என்.பீ அரசாங்கம் திட்டமிட்டு அவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயற்படும் பலத்தை தமிழரின் அரசியல் தரப்பிடம் இல்லாமல் செய்து விட்டது. சிறுபான்மை மக்களுக்கு பிரைச்சினை ஏற்படும் போதெல்லாம் இந்தியாவிடமும் மேற்கத்தேய நாடுகளிடமும் ஓடிப்போய் முறையிட்டு ஒப்பாரி வைப்பதைத் தவிர இவர்களால் வேறெதுவும் செய்யக்கூடியதாக இருக்கவில்லை.

இறுதியாக வேறெந்த வழியுமின்றி தமிழ் சமூகம் ஆயுதங்களைக் கையிலெடுக்க துணிந்ததனால் அடுத்துவந்த 1987வரையான பத்து ஆண்டுகால ஒடுக்கு முறைக்கு அது ஓரளவு எதிர்த்து முகம் கொடுத்தது. ஆனால் தமிழ் சமூகத்திற்குள் பின்னர் நடந்தவை முன்னையதைவிட சோகம் நிறைந்ததாகியது. அதுபற்றி புதிதாக எழுத இப்போது ஏதுமில்லை. அதன் பிரதிபலனாக ஏற்பட்டுள்ள நிலைமை எமக்கு இன்று நன்றாகத் தெரிகிறது. ஆகவேதான் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பானது எதுவுமே இதில் செய்ய முடியாது ஒதுங்கி நின்று நடப்பது நடக்கட்டும் என்று பார்வையாளர்களாக நிற்க வேண்டும் என்ற முடிவை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. அது அந்த முடிவை தமிழ்மக்கள் மீதும் பலவந்தமாகத் திணித்துள்ளது.

தமிழர்கள் மீது திணிக்கப்படும் இந்த முடிவானது தமிழர் தரப்பானது மிகவும் பலவீனமான நிலையில் இருந்து எடுக்கப்பட்ட முடிவென்பதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயமாகும்.
இந்த வகையான தார்மீக அரசியல் பலமில்லாத கீழ்த்தரமான தேர்தல் பேரம் பேசல்களில் ஈடுபட்டதன் மூலம் இந்த சிறுபான்மை அரசியல் தரப்பினர்கள் தாம் பிரதி நிதித்துவப்படுத்திய மக்களையே கேவலப்படுத்தியது மட்டுமன்றி அவர்களை மிகவும் பலவீனமான நிலைமைக்குள் கொண்டு போய் விட்டுள்ளனர்.

தமக்குள்ளேயே துண்டு துண்டாகக் கிடக்கும் இந்த 27வீத சிறுபான்மைத் தரப்பினரின் இந்தப் பேரம் பேசல் சித்து விளையாட்டிற்கு முடிவு வைத்தாக வேண்டும் என்னும் கருத்து கடந்த ஐந்து ஆறு வருடங்களாக 73 வீத பெரும்பாலான சிங்கள மக்களின் அரசியல் தரப்பில் பரவலாக விவாதத்திற்கு உட்பட்டிருந்ததை சிறுபான்மை அரசியல் தரப்பு கவனிக்கத் தவறிவிட்டது. அது மட்டுமன்றி பெரும்பான்மை சிங்கள மக்களைப் பாதுகாக்கக் கூடியதான, தமிழர்களுக்கு வளைந்து கொடுக்காத சக்தியொன்று உருவாக வேண்டும் என்னும் ஆதங்கம் அங்கு உருப்பெற்றதையும் கவனிக்கத் தவறி விட்டது. அதனால்தான் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கலைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேர்தலில் பிரதான சிறுபான்மைத் தரப்பினரின் (தமிழர் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.கா. ம.ம.மு) எந்தவித ஆதரவுமின்றி சிங்கள மக்களின் அரசியல் தரப்பானது மீண்டும் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஜே.வீ.பீ தலைமையிலான தமக்கான ஆட்சியை அமைத்துக் கொண்டது.

இதற்கு பொதுவான சிங்கள மக்களின் ஆதரவும் ஆசியும் இருந்தது. அத்தோடு சிங்கள சமூகத்தில் அடங்கிக் கிடந்த சிங்கள பௌத்த தீவிரவாதத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புதிய அரிசியல் தரப்பையும் (சிஹல உருமய கட்சி) பலமான ஒன்றாக உருவாக்கி விட்டது. இதில் தமிழர் தரப்பு சார்பிலும் முஸ்லிம் தரப்பு சார்பிலும் (ஈ.பீ.டீபி. ,பேரியல் அஷ்ரப்) கிடைத்த மிச்சிறிய ஆதரவு அவர்களின் வெற்றியின் பிரதான காரணிகளாக இருக்கவில்லை.
தமது சமூகத்தின் பாதுகாப்புத் தொடர்பான பெரும்பான்மையான சிங்கள சமூகத்தின் சிந்தனைப் போக்கும், அதனை கணக்கில் எடுத்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தமும் ஸ்ரீ.ல.சு.க. , யூ.என்.பீ. ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இருந்த படியினால்தான் கடந்த ஆறுமாத காலமாக ஜே.வீ.பீ. அந்தக் கூட்டாட்சியில் இருந்து விலகியுமகூட அந்த அரசாங்கம் வீழ்ந்து விடாமல் இருக்கக் கூடியதாக இருந்தது. சிறுபான்மை அரசியல் தரப்புக்கள் கூட்டாகச் சேர்ந்து ரணிலின் அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவர முனைந்தால், ஜே.வீ.பீ. யும் சிஹல உருமயவும் சேர்ந்து மீண்டும் இந்த அரசிற்கு ஆதரவு கொடுத்து அதை சிங்கள மக்கள் சார்பில் இந்த முயற்சியைத் தோற்கடிப்போம் என அவ்விரு கட்சிகளும் அச்சுறுத்தியன. எனவே 1994இற்குப் பின்னர் இரு பிரதான கட்சிகளும் ஆட்சிக்கு வருவதற்கு சிறுபான்மையினரின் வாக்குகளை தேடிவர வேண்டும் என்ற மாயை சிங்களத் தரப்பினரால் கடந்த பொதுத் தேர்தலில் உடைக்கப்பட்டுவிட்டது.
FPRIVATE "TYPE=PICT;ALT="

கடந்த பொதுத் தேர்தலிலும் இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பேரம்பேசல் தளத்தில் சிறுபான்மை அரசியல் தரப்பினரின் கொம்பு முறிக்கப்பட்டு விட்டது. உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் தாங்களே அதை முறித்துக் கொண்டுவிட்டார்கள். அல்லது மற்றவர்கள் அதை முறிப்பதற்கு வகை செய்து கொடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த முறை தேர்தலில் ஜே.வீ.பி. சிஹல உருமய ஆகியோருடனான பேரம் பேசலே பிரதானமாக கருதப்படுகிறது.; சிறுபான்மை மக்கள் பிரிவினர் அதிலும் குறிப்பாக தமிழர்கள் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்க நிர்பந்திக்கப்பட்ட 'சமாதானக் காவலன்' ரணில் விக்கிரமசிங்க கையில் சிங்கக் கொடியுடன் தேர்தல் பிரச்சாரம் செய்ய நிர்ப்பந்திகக்கப் பட்டுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில்தான் புலிளுக்கு அதிக பாதிப்பு எனக்கூறி வாக்கு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தனது மேடைகளில் புத்த பிக்குமாரை ஏற்றி தானே பௌத்த வாசகங்களை வாசித்து தன்னை சிங்கள பௌத்தராக காண்பிக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ தனக்கு மிக இலகுவானதும் வாய்ப்பானதுமான பேரம் பேசலைத் தேர்ந்து எடுத்துக் கொண்டுள்ளார். அவரின் பிரதான ஒப்பந்தம் ஏனைய சிங்கள அரசியல் தரப்பினருடன்தான் இருக்கிறது. அந்த மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்தாலே அவை தான் வெற்றி பெறுவதற்கு போதுமானவை என்பது தான் அவரின் தேர்தல் எண்கணிதக் கணிப்பாகும்.

சிங்கள மக்கள் 73வீதம் வாழும் நாட்டில் இது சாத்தியமும்கூட. எனவே அவரும் அவரது கூட்டும் அதில் உறுதியாக இருக்கின்றன. எனவே அவர் பதவிக்கு வந்ததன் பின்னரும்கூட சிறுபான்மை அரசியல் தரப்பாரின் அழுத்தத்திற்கு உட்படாத சிங்களத் தலைவராக இருக்க முடியும். அவரைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்களில் ஒருபகுதியினர் அவருக்கு வாக்குகளைப் போட்டால் அது மேலதிக வாக்குகள் மட்டுமே. புலிகளின் அரசியலுக்கும் அது சார்ந்த அரசியலுக்கும் எதிரான தமிழர் தரப்பினர் அவரக்கு ஆதரவு அளித்தால் அதுவும் அவருக்கு ஒரு போணஸ்தான்.
பிரதான பெரும்பான்மை இனத்தவரான சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை நிராகரித்துவிட்டு, தனியாக சிறுபான்மை அரசியல் தரப்பினருடனான பேரம்பேசல் சித்து விiளாட்டின் மூலம் மட்டும் பதவிக்கு வரமுடியாது என்னும் அழுத்தம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சிக்கு உள்ளேயிருந்தும் வெளியே சிங்கள சமுகத்திடையே இருந்தும் மிகப்பலமாகப் போடப்பட்டுள்ளது. எனவேதான் இம்முறையும் தான் தோற்கப் போகிறேன் என்னும் பயம் அவரைத் தொற்றிக் கொண்டிருக்கிறது. இம்முறை நிகழும் தோல்வியோடு அவரின் அரசியல் அஸ்தமனமாகிறது. எனவேதான் யூ.என்.பீ. கட்சிக்குள் அடுத்த தலைமுறையானது ரணில் இல்லாத யூ.என்.பீ. ஜப்பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் என்று வந்தால் ரணில் எம்மிடம் வந்துதான் ஆகவேண்டும் என இறுமாப்புடன் இருந்த 'ஏக தமிழர் தரப்பு' இப்போது புது முகாரிபாட ஆரம்பித்துள்ளது. தமிழாகள் இத்தேர்தலில் அக்கறைப்படத் தேவையில்லை என்கிறது. ரணில் தமிழர்களின் முதுகில் குத்திவிட்டார் என்னும் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் தரப்போடு சோந்து தமிழரின் தாயகத்தை ரணில் கூறுபோட்டு விற்கப்போகிறார் எனக் கூக்குரல் இடுகிறது. இதெல்லாம் தமிழ் மக்களுக்கு காலம் கடந்த ஞானங்கள் மாத்திரமே.

வடக்கு கிழக்கில் நாமே இராசாக்கள் என்ற 'ஏக தமிழ் தரப்பு' இன்று மட்டக்களப்பை விட்டு ஓடி தமது பாதுகாப்பிற்கே பதவியில் இருக்கும் அரசாங்கத்திடம் கெஞ்ச வேண்டிய நிலை. இந்த பலவீனத்தினாலும் வேறுபல வெளியே சொல்ல முடியாத காரணங்களினாலும் ரணிலிடம் இம்முறை இரகசிய பேரம் பேசலுக்கு அவர்களால் போக முடியவில்லை. அல்லது ரணில் அவர்களின் பேரத்தை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. ஏக தமிழர் தரப்பு மட்டுமல்ல இந்த அவல நிலை. மலையக சக்கரவாத்தி தொண்டமான் சிற்றரசன் சந்திரசேகரன் முஸ்லீம் காங்கிரஸ் முடிசூடா மன்னன் ஹக்கீம் எல்லோரது நிலைமையும் அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை என்பார்களே அதுபோலத்தான். கடந்த தேர்தலின் பின்பு தொண்டமான் மண்டியிட்டுப் போய்தான் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி எடுக்க நேர்ந்தது தெரியுமல்லவா. அமைச்சுப் பதவிகள் இல்லாமல் ஹக்கீமும், சந்திரசேகரனும் அவர்களின் கட்சிகளும் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாதவை.

'ஏக தமிழ் தரப்பு' தன்னால் இனிமேலும் இந்த ஜனாதிபதித் தோதலின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்ததால், தமிழர் கூட்டமைப்பையும் தன் துணைக்கு அழைத்துக்கொண்டு நடத்தும் 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை' என்னும் நகைச்சுவை அரசியல் நாடகமே தேர்தல் தினத்தன்று நடத்தப்போகும் கரிநாள் அனுஷ்டிப்பும் பகிஷ்கரிப்பும். அதிலும் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியே உள்ள தமிழர்கள் தாம் விரும்பியபடி செய்யலாம் என்று அறிக்கை விட்டிருப்பது இந்த நாடகத்தின் மிக உச்சக்கட்ட நகைச்சுவை. எது எப்படியோ தமிழ் சமூகம் தனது அடிப்படை அரசியல் உரிமையை மீண்டும் ஒருமுறை இந்தக் கோமாளிகளிடம் அடகு வைத்துவிட்டு ஏமாந்து நிற்கப் போகிறது.
இனி என்ன இருவரில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் நவம்பர் 18ம் திகதிக்குப் பின்னர் சிறுபான்மைச் சமூகத்தினர் மீண்டும் சர்வதேசத்தைப் பார்த்து ஐயோ...ஐயோ.. என்று குளறி அழ வேண்டியதுதான். அந்த அழுகை ஒலியால் தம்மீதிருக்கும் தடைகளும் குற்றச் சாட்டுக்களும் நீங்கிவிடும் என்று 'ஏக தமிழ் பிரதிநிதித்துவம்' கனவு காண வேண்டியதுதான். சர்வதேச சமூகமோ இது உங்கள் உள்நாட்டுப் பிரைச்சினை நீங்களே பார்த்து ஏதாவது பண்ணிக்கொள்ளுங்கள் என்று கூறவேண்டியதுதான். அப்படியே இன்னும் ஐந்து வருடங்கள் ஓடிவிடும். மீண்டும் ஒரு தேர்தல் கட்டாயம் வரத்தானே போகிறது. இந்தப் போக்கில் போனால் அப்போது சிறுபான்மை அரசியல் தரப்புக்கள் இன்னும் சீரழிந்து போயிருக்கும். ஏனெனில் சிறுபான்மை அரசியல் சக்திகளின் அரசியல் செயற்பாடு அப்படி. எப்போதுமே தாம் செய்யும் அரசியலை ஆக்கபூர்வமானதாக வளர்க்க முயலாமல் மற்றவர்களின் பிழைகளைச் சுட்டிக்காட்டி தமது கீழ்த்தர அரசியலை நடத்தும் இவர்களால் சீரழிவை நோக்கித்தான் போகமுடியும்

முடிவாக:
இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அதிலும் குறிப்பாக பிரதான சிறுபான்மைச் சமூகமான வடக்கு கிழக்கு தமிழ் சமூகம் தமது எதிர்கால அரசியல் பற்றி மிகத்தீர்க்கமாக புதியவடிவில் சிந்திக்க வேண்டிய நிலைமைக்குள் காலடிவைக்க நிர்பந்திக்கப் படப்போகிறது. அதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு படிப்பினையாக இருக்கும். புத்தியிருந்தால் தமிழ் சமூகம் பிழைத்துக்கொள்ள இன்னும் வழி இருக்கினறது. இதைத் தவிர இப்போது சொல்வதற்கு ஏதுமில்லை. மற்றவை தேர்தலின் பின்னர் பேசப்பட வேண்டியவை.


- எஸ். மனோரஞ்சன்

Muthu said...

Thank you friends..i got the answers which i wanted..if there are any other views on this welcome...also donot forget to recommend others to read and respond..thank you

ஈழபாரதி said...

ரணில் வென்றிருந்தால் இன்னமும் ஒரு ஜந்துவருடம் பேச்சுவார்த்தை என்று இழுத்திருப்பார், மகிந்தர் நினைத்தாலும்,கூட்டுகட்சிகள் விடா. இது பிரபாகரனின் தூரநோக்கு எதிர்வரும் மாவீரர் உரை இதற்க்கான விடைபகரும்.
இந்த விழக்கத்தையும் பாருங்கள்.

பிரபாகரன் அவர்களின் தந்திரோபாயமான சிந்தனையால் வெற்றிபெற்ற மகிந்தர். சொல்கிறார் எம். ஆர். நாராயண் சுவாமி.

ஆழமாகப் பிளவுபட்ட சிறிலங்காவானது தனது வரலாற்றிலேயே ஆகக் குறைந்தளவு பெரும்பான்மையுடன் சிங்களக் கடும்போக்காளராக அறியப்பட்ட ஒருவரைச் சனாதிபதியாகத் தெரிவுசெய்துள்ளது. இந்த ஒன்றே -'ராஜபக்ச சமாதானத்தை விரும்புவாராயின்- தனது இன- மதவாதப் பேச்சுகளைச் சற்றுக் குறைத்து ஒரு மிதவாதியாகத் தம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்' என்பதற்கான முதன்மையான, தெளிவான அறிகுறியாக உள்ளது.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்திரோபாயமான சிந்தனையால்தான் (Tactical mind), சிறிய பெரும்பான்மையான 50 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்று சனாதிபதிப் பதவியை ராஜபக்ச பெற்றுக்கொண்டிருக்கிறார். தடைப்பட்டுள்ள சமாதானப் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள மேற்குலகினாலும், தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ரணில் விக்கிரமசிங்கவைக் கையாள்வதைக்காட்டிலும், 'வெட்கங்கெட்ட சிங்கள எதிரியை'க் (Brazenly Sinhalese foe) கையாள்வது இலகுவானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தீர்மானித்துவிட்டார்.

குறைபாடுகள் உள்ளபோதிலும் தடைகளைத் தகர்த்த -2002 ஆம் ஆண்டின் சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்ட- முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கருத்திற்கு நேரெதிராக, இந்தச் சமாதான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளைப் பலப்படுத்துவதிலேயே வந்து முடிந்திருப்பதாக ராஜபக்ச உணருகிறார். அதேவேளை அவர் அனுசரணையாளரான நோர்வேக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார்.

ஜே.வி.பி எனப்படும் சிங்கள- மாக்ஸியக் கட்சியினரும், ஜாதிக ஹெல உறுமய எனப்படும் பௌத்த பிக்குகளின் கட்சியினருமே ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள். இந்த ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய இரண்டுமே, சிங்களப் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கின்றன. சிறிலங்காவின் சிறுபான்மைத் தமிழர்கள் பாரம்பரியமாகவே பாரபட்சத்திற்குத் தாம் உள்ளாகிவருவதாக முறையிட்டு வருகின்றனர்.

இவை அனைத்தும் ராஜபக்ச, விக்கிரமசிங்க இருவருமே சிங்கள நாணயத்தின் இரண்டு பக்கங்கள். எனவே 'சனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை' என்று பிரகடனம் செய்த விடுதலைப் புலிகளது இலக்கிற்குள் ராஜபக்சவைத் தள்ளியுள்ளன.

வாக்களித்தால் ரணிலுக்கே ஆதரவளிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிறிலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதை உறுதிப்படுத்திய விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதியாகக் கொன்றொழித்துவிட்டது.

அனேக தமிழர்களின் உண்மையான -காரணகாரியத்துடன் கூடிய- புறக்கணிப்பிற்கு மத்தியில், ராஜபக்ச மிகவும் குறைவான வித்தியாசத்தில் ரணிலை முந்தியிருக்கிறார்.

பிரபாகரன் ஒன்றே ஒன்றை மட்டும் தமது மனதில் கொண்டே இந்த நிலையை உறுதிப்படுத்தியிருக்கக்கூடும்: அதாவது ராஜபக்சவின் வெற்றியானது சிங்களக் கடும்போக்காளரின் கரங்களைப் பலப்படுத்தும் அதேவேளை இந்த நடைமுறை யாதார்த்தமானது சுதந்திர தமிழீழ தேசத்திற்கான போராட்டத்திற்கு உரமளிக்கும்.

கார்த்திகை 27ம் திகதி மாவீரர் வாரத்தின் ஒரு அங்கமாக அமையும் தமது வருடாந்த மாவீரர் தின உரையை ஆற்றவுள்ள பிரபாகரனால், சிங்கள-பௌத்த கடும்போக்காளருடன் சேர்ந்து சமாதானத்தைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை. இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவர் போராடிவருகிறார்.

ஏப்ரல் 2003 இலிருந்து தடைப்பட்டுப்போயுள்ள சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக் கொழும்பு விரும்புமாயின் முக்கிய உரிமைகளைத் தமக்குத் தருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வலியுறுத்துவார். இது ராஜபக்சவைத் தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டிற்குள் தள்ளிவிடும்.

விக்கிரமசிங்க பிரபாகரனின் கோரிக்கைகளுக்கு இணங்கக்கூடும். ஆனால் ராஜபக்ச அவ்வாறு இணங்க மாட்டார் அல்லது இணங்க முடியாது. ஏனெனில் ஜே.வி.பி-ஹெல உறுமயவின் கிடுக்கிப்பிடி அதனைச் செய்ய அவரை அனுமதிக்காது. இவ்வாறு நடந்துவரும்போது 'சமாதானத்திற்கு இணங்காதிருப்பது ராஜபக்சவோ அல்லது சிங்கள தேசமோ அன்றி விடுதலைப் புலிகள் அல்ல' என்று புலிகள் உலகத்திற்குச் சொல்வார்கள்.

ராஜபக்ச தமக்கு முன் ஆட்சியிலிருந்த சிலரைப்போலத் தனது கடும்போக்கிலிருந்து பின்வாங்க முற்பட்டால், தற்போது நண்பர்களாக உள்ள சிங்களக் கடும்போக்காளர்களால் 'துரோகியாகக்' கருதப்படுவார். அதேவேளை, புதிய சனாதிபதி தனது மிகச் சிறிய பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நாட்டை நிருவாகம் செய்வதோ அல்லது புதிதாக நடக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தல்களில் வெல்வதோ இலகுவானதல்ல என்பதையும் புரிந்துகொள்வார்.

'நான் போருக்கான வேட்பாளர் அல்ல, ஆனால் சமாதானம் என்பது கௌரவமான சமாதானமாக இருக்கவேண்டும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியானதும் குறிப்பிட்டார் ராஜபக்ச.

அப்படிச் சொல்வது அதனைச் செய்வதைக் காட்டிலும் இலகுவானது.

தற்போதைய -அபாய கட்டத்தை அடைந்துள்ள -மோதல்களைத் தடுக்கவும், நிலைத்துநிற்கக்கூடிய சமாதானத்தைக் கொண்டுவரவும் சனாதிபதி விரும்பினால், சிங்கள -பௌத்த கடும்போக்காளராகச் செயற்படுவதை அவர் நிறுத்தவேண்டும். அவரால் அது முடியாதெனில் சிறிலங்கா ஒரு குழப்பகரமான நிலமைகளை எதிர்கொள்ளவேண்டியதுதான்.

வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் கொலையினை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமது அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை குறித்துப் பிரபாகரன் கடும் சினமடைந்திருக்கும் இந்த வேளையில், சமாதானத்திற்கு இணங்காத கொழும்பின் நிலைப்பாடானது -ஒரு உடனடியான யுத்தத்தைக் கொண்டுவராவிடினும்- மேலும் குழப்பங்களையும் உயிர்ப்பலிகளையுமே விளைவிக்கும்.

(இந்தக் கட்டுரையாளர் சிறிலங்காவின் நிலமைகளை அவதானித்து வருபவர். தமிழ்ப் புலிகள் குறித்த இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்)

நன்றி: Rajapakse will need to moderate if he seeks peace By M.R. Narayan Swamy

தமிழில்: திருமகள் (ரஷ்யா)

Anonymous said...

Hi everybody!

For sure you didn’t here about me yet,
my name is Peter.
Generally I’m a venturesome gambler. recently I take a great interest in online-casino and poker.
Not long time ago I started my own blog, where I describe my virtual adventures.
Probably, it will be interesting for you to find out my particular opinion on famous gambling projects.
Please visit my blog. http://allbestcasino.com I’ll be interested on your opinion..